உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, December 17, 2011

மோட்டார் உலகத்தின் ஆஸ்கர்

மோட்டார் உலகத்தின் ஆஸ்கர் நாயகன் .



மோட்டார் உலகத்தின் ஆஸ்கர் எனப்படும் ஆட்டோ ஸ்போர்ட்ஸ்
 ( AUTOSPORT )  International Racing Driver of the Year விருதினை ஜெர்மனின் இளம் புயல் செபாஸ்டியன் வெட்டல் இந்த ஆண்டில் பெற்றார் .



உலகம் முழுவதும் உள்ள மோட்டார் ரசிகர்களால் அதிகம் படிக்கப்படும்  ஆட்டோ ஸ்போர்ட்ஸ் இதழின் மூலம் ரசிகர்கள் தேர்ந்து எடுத்து இந்த விருது வழங்க படுகிறது .



கடந்த டிசம்பர் 4 ஆம் நாள் லண்டன் நகரின் Grosvenor House ஹோட்டலில் காஸ்ட்ரால் எட்ஜ் நிறுவனத்தின் பங்களிப்புடன் நடந்த வண்ணமிகு கலைவிழாவில் இந்த விருதினை பெற்றார் .



இந்த விருது கடந்த 1982 ஆம் முதல் வழங்ப்பட்டு வருகிறது .இதன் மிக பெரிய சிறப்பு இது பார்முலா 1 போட்டிக்காக மட்டும் வழங்க படவில்லை .



பன்னிரண்டு பிரிவில் விருதுகள் வழங்க படுகிறது .இதில் எட்டு விருதுகள் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் இதழின் ரசிகர்கள் மற்றும் போதுவானவர்களாலும் மற்ற நான்கு விருதுகள் இந்த துறை சார்ந்த மற்றும் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் இதழ் குழுவில் தேர்ந்தெடுக்க படுகிறது .


நமது உலக வேக நாயகன் பல அற்புத வரலாறுகளை படைத்திருந்தாலும் இது மட்டும் என் இலக்கு அல்ல என்பதை தன் வார்த்தைகளில் இங்கு சொல்கிறார் .கவனியுங்கள் ...


வெட்டளுக்கு வெற்றிமாலைகள் தொடரட்டும் ...
வாழ்த்துவோம்


Saturday, December 10, 2011

இந்தியாவில் பார்முலா 1 போட்டி பரிசு வழங்கும் விழா .

இந்த ஆண்டின் பார்முலா 1 பரிசு வழங்கும் கலை விழா இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்காவுன் மாவட்டத்தில் நேற்று 
09 - 12 -2011 வெள்ளி கிழமையில் வெகு விமர்சையாக நடந்தது.




போட்டிக்கு முதல் நாள் உற்சாக வரவேற்ப்பு பாரம்பரியமாக இருக்கத்தானே செய்யும் ..



வெள்ளிகிழமை பரிசு வழங்கும் விழாவில் நடன மங்கையர்களின் உற்சாக வரவேற்பு கலை கட்டியது .



இங்கு நடந்த விழாவில் பரிசு வாங்குவது World Touring Car, World Rally Championship, World Karting, Asia Pacific Rally, Formula Two  போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் .விழாவில் பரிசு வாங்குபவர் யார் என்பது முன்கூட்டியே தெரிந்தாலும் அதை ஜொலி ஜொலிப்பான விழா மேடையில் ரசிப்பது ஒரு உற்சாகமான விசயமல்லவா ?


பார்முலா 1 போட்டிக்கான பரிசு பெரும் நம் முதல் இடத்தின் நாயகன் செபாஸ்டியன் வெட்டல் ரேஸ் உடையில் பார்த்து ,பார்த்து இங்கு பார்டி ட்ரஸில் வித்தியாசமாக இருந்தார் .வயதில் சின்னவர் என்பதால் அந்த கூச்சமும் தொற்றிக்கொண்டே இருந்தது .


FIA -தலைவர் Jean Todt அவர்களால் செபாஸ்டியன் வெட்டளுக்கு முதல் பரிசு வழங்க பட்டது .





வழக்கமாக போடியத்தில் ஒரு ஜம்ப் செய்வது வெற்றியாளர்களின் வழக்கம் .இது விழா மேடை என்பதாலும் இடம் மற்றும் அணிந்து இருக்கும் உடை நாகரிகத்தாலும் பரிசு பெற்ற பின் மிக அடக்கமாக நின்றுகொண்டு இருந்தார்கள் நம் வ்வ்வர்ரூம் வெற்றியாளர்கள் .


இந்த விழாவின் அருமையான பல வியங்கள் இன்னும் சில நாளில் உங்கள் முன் மலர இருக்கிறது .

உங்களுடன் நானும் காத்து இருக்கிறேன் ...