உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Monday, January 30, 2012

பார்முலா 1ன் புதிய பறவைகள்


பார்முலா 1 அணிகளின் கார்கள் அறிமுகம் 


ஒவ்வொரு ஆண்டிலும் பார்முலா 1 அணிகளின் போட்டிக்கான கார்கள் அறிமுகம் நடத்தப்படும் .2012 க்கான பனிரெண்டு அணிகளில் முதன் முதலாக கேட்டர்ஹாம் (Caterham-Renault ) அணி தன்னுடைய CTO1 போட்டிக் காரை ஆன்லைனில் சென்ற 26.01.2012 அறிமுகப்படுத்தியது .சில அணிகளை தவிர இந்த அறிமுகம் பலவிதமான உள்ளடக்கிய எதிர்பார்ப்புகள் ஏற்படுத்த காரணம் இருக்கிறது .


எதிர்பார்ப்புகள் 

நம் இந்தியாவை பொறுத்த வரை அம்பாசிடர் கார் மிக பிரபலம் இந்தியாவில் அதன் செல்ல பெயர் The king of Indian roads.அந்த காரின் பின்புறம் பார்த்தோமானால் இரண்டு விஷயம் பார்க்கலாம்.
வலதுபுறம் Ambassador Mark I - Iv Or Nova Or 1800 ISZ Or Classic . இடதுபுறம் 2000DZX இந்த மாதிரி பார்க்கலாம் .ஆனால் இன்று வரும் ஹிந்திரா பின்புறம் Logan by mahindra மற்றும் Mahindra Renault என மாடல் ,தயாரிப்பு கம்பனி மற்றும் அதில் பயன்படுத்தும் எஞ்சின் தயாரிப்பாளார் வரை நிறைய பெயர்கள் தெரிவதை போல பார்முலா 1 கார்களின் மற்றைய கம்பனி தயாரிப்புகளுடனான ஒருகிணைப்பு முக்கியத்துவம் பெறுகிறது

வெளியே தெரியும் விவரங்கள் 


ஆனால் வெளியே தெரியும் பெயர் Constructor வைக்கும் பெயர் மட்டுமே தெரியும் ஆனால் உள்ளே ஒவ்வொரு பாகங்களும் மிக முக்கியத்துவம் பெறுகிறது .எஞ்சின் ,கியர் பாக்ஸ் ,காரின் வடிவமைப்பு ,ஸ்டீரிங் வீல்,ஏன்?- டிரைவர் சீட் கூட புதிதாய் வரும் கம்பனிகள் ஏற்கனவே சிறந்த கம்பனி தயாரிப்பு மட்டும் தொழில் நுட்பங்களை வாங்கி பயன் படுத்துவதே முக்கியத்துவம் பெறுகிறது .


அணியின் பெயர் மற்றும் பெயர் 

அதிலும் இந்த அணியின் பெயர் வருடத்திற்க்கு ஒன்றாய் மாறி வருகிறது .2010 ஆம் ஆண்டில் லோட்டஸ் ரேசிங் என்றும் 2011 ஆண்டில் டீம் லோட்டஸ் என்றும் இந்த ஆண்டு கேட்டர்ஹாம் என்ற பெயரில் கலந்துகொள்ள வருகிறது .அதுமட்டுமல்ல இங்கு நமது விஜய் மல்லையா மாதிரி அங்கு மலேஷியாவில் டோனி பெர்னாண்டஸ் இதன் உரிமையாளர் .
இந்த காரின் தொழில் நுட்ப பாகங்கள் எஞ்சின் - Renault V8 RS27-2012 ,கியர் பாக்ஸ் Red Bull Technology ,மற்ற படி கூலிங் சிஸ்டம் ,டிரைவர் சீட் ,ஸ்டீரிங் வீல் கேட்டர்ஹாம் தயாரிப்பு .


அணியின் டிரைவர்கள்

இதுவரை ஒரு புள்ளி கூட வாங்காத இந்த அணியின் இந்த ஆண்டு டிரைவர்கள் ஒருவர் பினிஷ் நாட்டின் Heikki Johannes Kovalainen- கடந்த இரண்டு ஆண்டும் இந்த அணியில் இருந்தாலும் ஒரு புள்ளிகூட வாங்கி தராதவர் .
அடுத்தவர் இத்தாலியின் - ,Jarno Trulli  இவரும் இந்த அணியில் இரண்டு ஆண்டு இருப்பவர் ஒரு புள்ளிகூட வாங்கி தராதவர் .சென்ற ஆண்டில் இந்த அணியின் டெஸ்ட் டிரைவராக நமது கருண் சந்தோக் இருந்தார் என்பது குறிப்பிட தகுந்ததுகடந்த ஆண்டில் பத்தாம் இடத்தில் ஒரு புள்ளிகூட வாங்காமல் இருந்த அணி இந்த ஆண்டு அதை சாதிக்கும் என டோனி பெர்னாண்டஸ் சொல்கிறார் .எதிர்பார்ப்போம் .மெக்லரண் மேஸ்ர்சீடிஷ் அணி தனது MP4 - 27 காரின் அறிமுகத்தை வரும் பிப்ரவரி 01 வெளியிடுகிறார்கள் .காலை பதினோரு மணியிலிருந்து ஆன்லைனில் அறிமுக படுத்த இருக்கிறார்கள் .அதனை சுடச் சுட காண விரும்பும் ரசிகர்கள் Mclaren.com அல்லது facebook.com/vodafonemclarenmercedes  காணலாம் .அதுவரை போர்த்தி இருக்கும் திரை விலக காத்திருப்போம் .
Saturday, January 21, 2012

World's fasted car ( Tamil )


வேகத்தின் காதலர்களுக்கு  சமர்ப்பணம் 


Blockbuster 350 cc Pulsar.cc


 நூறு அடிக்குள் பத்து வேகத்தடை

உலகத்தின் வேகத்தை விரும்பாதவர்கள எண்ணிகையை விட விரும்புவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் .அதிலும் இன்று பயணத்திற்கு மட்டும்தான் வாகனங்கள் என்ற நிலை மாறி நூறு அடிக்குள் பத்து வேகத்தடைகள் உள்ள சாலைகளை கொண்ட நம் ஊர்களில் கூட வரப்போகும் பல்சர் (Blockbuster 350 cc Pulsar.cc ) ஓட்ட ஆசை படும்போது , வேகத்தை மட்டும் விரும்பும் -வேக விரும்பிகளுக்கு, விலையும் ஒரு விஷயம் இல்லை , சாலையும் முக்கியம்  இல்லை!


வேக விரும்பிகளுக்கு புது விருந்து .இன்றைய தேதிக்கு மிக வேகமான - சாலையில் செல்லும் காரில் அங்கீகாரம் பெறப்பட்ட வேககார் எது என பார்க்கும்போது நம் முன்னே நிர்ப்பது - இருண்ட வேலையில் முறைத்து பார்க்கும் கரும் பாம்பின் கண்கள் போல முன் பக்க தோற்றமுடைய புகட்டி (Bugatti) கம்பெனியின் Bugatti Veyron 16.4 Super Sport கார் .எத்தனைதான் உலக அளவில் சொகுசு கார்களுக்கு மதிப்பு இருந்த போதும் இம்மாதிரியான SUV (Sport utility vehicle ) ரக கார்களின் மோகம் குறைய மாட்டேன்கிறது. 

 Bugatti Veyron 16.4 Super Sport  கார் .

இரண்டு பயமில்லாத நபர்கள் மட்டுமே இந்த காரின் மணிக்கு 267 மைல் வேகத்தை ( 427 கி .மீ ) அனுபவிக்க முடியும் (பார்முலா 1 காரின் வேகம் மணிக்கு 360 கி .மீ ) .ஜெர்மனியின் வோல்க்ஸ்வகேன் ( Volkswagen ) அறுபது மைல் நீளமுள்ள வேக சோதனை சாலையில் உலக வேக தர நிர்ணய சோதனையாளரான - German Technical Inspection Agency (TÜV) முன்னிலையில் நிரூபிக்கப்பட்டுள்ளது .

வேகமே இதன் மூலதனம் .
 2035 கிலோஎடையுள்ள பாயும்அழகிய இந்த எந்திர பறவையின் 1200 குதிரை திறன் சக்தி நகர் பகுதி சாலையில் 8 மைலுக்கு / 4 லிட் பிரத்தியோக நெடுஞ்சாலையில் 13 மைலுக்கு / 4 லிட் செலவாகும் ஆனால் வேகத்தை தொடும் விகிதம் 0-60 mph: 2.40 seconds .

விலையை பற்றி ?!விலை ஒன்றும் அதிகம் இல்லை2,400,000. (நம் இந்திய பணத்தில் கணக்கு போட வேண்டாம்.இந்த மாதிரி வலை செய்திகளை படிக்கும் ஆவல் விட்டு போய்விடும் அபாயம் நேரிடலாம் ) .

ஒரு ரவுண்டு ப்ளீஸ் ?


யாரவது வாங்கிவிட்டால் தயவு செய்து ஒரு ரவுண்டு அழைத்து செல்ல வேண்டுகிறேன்.


Friday, January 6, 2012

Check to the F1 Sport


MADE IN INDIA  கதை.


இந்தியர்களின் திறமையை பற்றி மிக அற்புதமான உதாரணங்கள் சொல்வார்கள் .

நன்றி சுகுமார் ( www.sugumarje.com )

சாதாரண கண்ணுக்கு தெரியாத ஊசி ஒன்றை கண்டறிந்த ஒரு வெளிநாட்டுக்காரர் கர்வத்துடன் வந்து நம் இந்தியரிடம் கேட்டாராம்  எங்களின் திறமை உங்கள் நாட்டுக்கு உண்டா என்பதாக .அதர்க்கு நம் இந்தியர் அந்த ஊசியை வாங்கிப் பார்த்து விட்டு கொஞ்ச நேரத்தில் தந்து விட்டாராம் .கர்வத்துடன் அதை பெற்றுக்கொண்ட அந்த வெளிநாட்டுக்கரர் இதே கதையை சொல்லி வேறு ஒரு நாட்டுக்காரருக்கு காட்டினாராம் .அதை நுண்ணோக்கியில் பார்த்த அவர் கேட்டராம் ஏன் இந்தியர்களின் கண்டுபிடிப்பை உங்களுடையது என சொல்லுகிறீர்கள் என்றாராம் .அதை கேட்ட நம் கர்வத்துக்கு சொந்தக்காரர் , தான் கண்டுபிடித்த  ஊசியை  நுண்ணோக்கியில் பார்த்தபோது அந்த ஊசியில் " MADE IN INDIA" என பொறிக்கப்பட்டு இருந்ததாம் .அப்படி ஒரு விஷயம் நம் ரேஸ் போட்டியில் நடந்தேறியுள்ளது .

அதர்க்கு பெயர் i1 Super Series .


ஆசிய கண்டத்தின் வளர்ந்து வரும் நாடுகளின் மையமாக இந்தியாவை கருதி இங்கு பார்முலா 1 ரேஸ் நடத்த மிக ஆர்வாமாக FIA கால் பதித்தது .மேலும் இந்திய கிரிகெட் மோகம் FIA மேலிடத்தை கவர்ந்தது காரணம் இந்திய உலக கிரிகெட் போட்டியின் இறுதி போட்டியை தொலைகாட்சி மூலம் ரசித்தவர்கள் மொத்தம் 67 மில்லியன்உலக மக்கள் .ஆனால் இன்று இந்திய மோட்டார் போட்டிகளின் கணக்கு அதே பார்முலா 1 போட்டியின் உலக ரசிகர்கள் 527 மில்லியன் மக்கள் மேல் பதிந்துள்ளது .எனவேதான் இந்த திட்டம்

அறிமுக இடம்  Trident Hotelபார்முலா 1  போட்டி இந்தியாவிற்கு வரும் முன் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் நாள் மும்பையின் - நாரிமன் பாயிண்டில் உள்ள Trident Hotel வளாகத்தில்


 Machdar Motorsports Pvt. Ltd. மூலம் இந்திய மோட்டார் உலகத்திற்கு ஒரு புதிய பரிமாணம் அறிமுகபடுத்தபட்டது

அதன் பெயர் ரேடிகல் SR3 ஸ்போர்ட்ஸ் கார் .


அறிமுகமே அதிரவைத்தது. வண்ணமிகு ஒளி வெள்ளத்திற்கு மத்தியில் இந்திய ராஜாக்களின் ரதம் போல கம்பீரமாய் காட்சி தந்தது .

இந்தியா இங்கும் புறகணிக்கபடுமா ?இந்திய ரேஸ் வீரர்கள் ஒவ்வொருவராய் திறமை இருந்தும் புறகணிக்கப்படும் நிலை முற்றிலுமாய் நீக்கப்பட்டு மொத்தமுள்ள ஒன்பது அணிகளிலும் கட்டாயமாக ஒரு இந்திய குடிமகன் இருப்பார் .ஒன்பது அணிகளும் இந்தியர்களுக்கு சொந்தமானதாகவும் இருப்பது இன்னொரு அருமையான விஷயம் .பத்து போட்டிகளில் இந்தியாவில் இரண்டும் மற்றும் எட்டு போட்டிகள் மலேஷியா ,பக்ரைன் ,கத்தார் மற்றும் அரபு எமிரேகதிலும் நடக்க விருக்கிறது .

இன்னொரு IPL (Indian Premier League ) போட்டி போல அழகிய திட்டமிடப்பட்டு FIA Federation International de l'Automobile அங்கீகாரத்துடன் நடக்கிறது ..

           ஆனால் IPL அணியின் ஆயிரம் கோடி ,ஆயிரத்து ஐநூறு கோடிகள் என்ற குதிரை பேரம் இங்கு ( நல்லவேளை) இல்லை. ஆரம்பத்தில் 365 - 400 கோடிகள் ஒன்பது அணிகளின் மொத்த பங்காக இருக்க போகிறது .ஒவ்வொரு அணியும் சுமார் 40 கோடிகள் மதிப்பு பெரும் .

கிரிக்கெட் கடவுளின் புது அவதாரம் 


மட்டுமொரு அம்சம் இந்திய புத் இன்டர்நேஷனல் களத்தில் கோடி அசைத்து போட்டியை முடித்து வாய்த்த நம் சச்சின் இந்த போட்டியின் ‘Brand Ambassador மற்றும் ஆலோசகராகவும் இருப்பார் . IPL வாசனை இங்கும் இருக்கிறது அந்த அணிகளின் ஷாருக் ,மோஹித் பர்மன் (பஞ்சாப் அணி ) அணிகளுக்கு சொந்தக்காரகள் .எது எப்போடியோ இந்திய மோட்டார் போட்டியாளர்களின் திறமை தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக விசுவரூபம் எடுக்க இது பாதையாக அமையட்டும் .இன்று பிறந்தவர் .
பார்முலா 1 ன் 2008 ஆம் ஆண்டின் மெக்லரண் -மெர்சீடிசின் சாம்பியன் , லீவிஸ் ஹேமில்டன் தன்னுடைய 27 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் .நாம் சொல்லும் வாழ்த்து அவரை சென்று அடையட்டும் .

வாழ்த்துக்கள் லீவிஸ்


இந்த ஆண்டு இனிய ஆண்டு .


i1 Super Series  வலைத்தளத்திலிருந்து எனக்கு வந்த புத்தாண்டு வாழ்த்துக்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

இன்னும் பல விசயங்களை பகிர்ந்து கொள்ள ஆர்வம் இருக்கிறது .இது அறிமுகம் மட்டுமே !

 வேகம் தொடரும் ...