உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, February 25, 2012

பார்முலாவின் உற்சாக பானம் - ரெட்புல் ரெனால்ட்


 பார்முலா 1 உலகம் உற்று நோக்கும் அணிகளில் முக்கியமான அணியான ரெட்புல் ரெனால்ட் அணி தன்னுடைய RB8 கடந்த 06 - 02- 2012 அன்று உலகின் கண்ணுக்கு காட்டியது .அற்புதமான மாற்றங்கள் செய்துள்ளார்கள் .அதிலும் 2005 ஆம் ஆண்டு கிளம்பிய ரெட்புல் அணி இன்று எட்டு ஆண்டுகளில் மிக பெரிய உச்சத்தை தொட்டு இருக்கிறது .


வெற்றியின் விதி



எப்போதும் ஒரு அபத்தம் சகல வெற்றிக்கும் பின்னால் நிகழ்ந்து கொண்டிருக்கிறது .அதாவது வெற்றி பெற்றவனிடம் இருந்து கற்றுக்கொள்ள முயல்வது .எதை கற்று கொண்டு அவன் வெற்றிபெற்றான் என்பது மறந்து போகிறது .இங்கு ரெட்புல் அணி விசயத்திலும் அதுதான் நிகழ்ந்துள்ளது .

ரெட்புல்லின் வரலாறு 





பறக்கும் ஸ்காட்ஸ் மேன் ( The Flying Scotsman ) என செல்லமாக அழைக்கப்படும் -  Jackie Stewart அவரால் உருவாகப்பட்டது .அதன் பயண காலம் 1997 - 1999 வரைதான் அதன் பிறகு அந்த அணியை வாங்கிய போர்ட் மோட்டார் கம்பனி அதன் பெயரை ஜாகுவார் ரேசிங் என்று மாற்றி 2000 - 2004 ஆம் ஆண்டு வரை பயணத்தை தொடர்ந்தது .அதுவும் 2004 நவம்பர் 14 ஆம் தேதிவரை மட்டுமே நீடித்தது .அப்போது ஆஸ்டிரியன் நாட்டை சேர்ந்த ரெட்புல் -Red Bull GmbH, ஆற்றல் பானம் தயாரிக்கும் நிறுவனம் சப்பர் பார்முலா 1 அணியுடன் கைகோர்த்து இளம் ஓட்டுனர்களை உருவாக்கி வந்தது .அதன் உரிமையாளர் - Dietrich Mateschitz  க்கு அப்போது ரெட்புல் சேஷும் ( Chassis )+ காஷ்வோர்த் என்ஜினுடன் 2005 களம் இறங்கியது ஆனால் அடுத்த ஆண்டு அதே ரெட்புல் சேஷும் + பெர்ராரி என்ஜினை பயன்படுத்தினார்கள் .உண்மையில் ரெட்புல் ரெனால்ட் வெற்றி சுய சரிதம் துவங்கியது 2007 ல் தான் .ஆம்.அப்போது  இருந்துதான்.

ஓட்டுனர்கள்




ரெட்புல் அணி ரெனால்ட் என்ஜினுடன் கைகோர்த்தது .முதல் ஆண்டு 2007 ஆம் ஆண்டு 24 புள்ளிகளுடன் ஐந்தாம் இடமும் ,2008 ல் 29 புள்ளிகள் -ஏழாம் இடம் .அதுவரை

 மார்க் வெப்பரும் ,டேவிட் குல்தார்டும் டிரைவர்களாக இருந்தனர் .2009 ல் மார்க் வெப்பருடன் டோரோ ரோசோ -பெர்ரரியில் இருந்த செபாஸ்டியன் வெட்டல் இளம்ஜெர்மன் வீரர் களம் இறங்கினார் .பொதுவாகவே ஜெர்மன் டிரைவர்கள் சிறந்தவர்கள் என்ற பெருமையை ஷூமேக்கர் பதிவு செய்து இருந்தார் .அது வீணாகவில்லை .


 முதல் போட்டியில் (ஆனால் அவருக்கு இரண்டாம் ஆண்டு ) அணியின் மொத்த புள்ளி 153.5 இரண்டாம் இடம் .அதில் வெட்டலின் புள்ளிகள்- 84 .கலந்து கொண்ட வீரர்களில் இரண்டாம் இடம் .அடுத்த 2010 - 2011 ரெட்புல் -ரெனால்டின் பொற்காலம் ,உருவாக்குனர் மற்றும் ஓட்டுனருக்கான முதல் இடம் .

அப்படிப்பட்ட அணியின் கார் இந்த ஆண்டுக்கான வெளியீடு முக்கியம்தான் .ஆனால் ரெட்புல் ரெனால்டின் முக்கிய வளர்ச்சி அதன் தொழில் நுட்ப விழிப்பில் உள்ளது என்பதை அதர்க்கு முந்திய பெர்ரரியால் கூட
Christian Horner 

புரிந்துகொள்ள முடியவில்லை .ஆனால் அந்த அணியின் பிரின்சிபல் - Christian Horner மற்றும் அதன் முதன்மை தொழில்நுட்ப தலைவர் - Adrian Newey ஆகியோர் நன்கு புரிந்து வைத்து இருந்தனர் .Federation Internationale de l'Automobile லின் புதிய விதிகளை நன்கு பயன் படுத்திக்கொண்டனர் .அதுவே பார்முலா அணிகள் ரெட்புல் ரெனால்ட் அணியிடம் மற்ற அணிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் .

இந்த காரின் புதிய வடிவங்கள் .

 தோற்றத்தில் மிக நுணுக்கமான பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது .ஆனால் வெற்றியை தக்க வைத்துகொள்ளும் பொருட்டு ,எந்த பெரிய மாற்றமும் இல்லை .ஆனால் புதிய நோஸ் கோன் விதி பின்பற்றல் படி நோஸ் கோன் மேல்பகுதியில் ஒரு துளையும் கீழ்பகுதியில் ஒரு துளையும் வித்தியாசமாக தெரிகிறது .  அதோடு முன் பகுதி விங்கிள் (  front wing ) மேல்பகுதியில் புதிய தகடு ( Plate ) சேர்க்கப்பட்டுள்ளது .அப்புறம் அதில் சிறு பகுதி நீக்கப்பட்டுள்ளது மேலும் Sidepods ,Roll hoop,Exhaust , Rear suspension மாற்றங்கள் தொடர்கிறது .
 மொத்தத்தில் பல அழகு செதுக்களுடனும் வெளிவந்து இருக்கிறது .



காரின் அழகு மட்டுமல்ல தொழில்நுட்ப மேன்மையும் வளர்ந்து இருப்பது இந்த சிரிப்பில் தெரிகிறது .இந்த ஆண்டும் ரெட்புல்லின் ரெனால்ட் கொடிதான் பறக்க போகிறதா அல்லது வேறு அணிகள் சவாலை சந்திக்கும் திட்டம் இருக்கிறதா பொறுத்திருப்போம் .












Saturday, February 18, 2012

இங்கிலாந்தின் இன்னொரு அவதாரம் - லோட்டஸ் அணி




இங்கிலாந்தின் மூன்று அணிகளில் இரண்டாம் அணியான லோட்டஸ் அணியை பற்றி நாம் பார்க்க போகிறோம் .இந்த அணியின் லோட்டஸ் E20 காரின் அறிமுகம் ,கடந்த 5 - 2 - 2012 அன்று ஆன்லைனில் நடந்தது .நாம் இதுவரை பார்த்த அணிகளில் இது ஒரு வித்தியாசமான அணி.

லோட்டஸ் அணியின் வரலாறு .


முதன் முதலில் பெனட்டேன்( Benetton ) என்ற பெயரில் 1981 - 1985 வரையிலும் அதற்கடுத்து 1986 - 2001 வரை டோல்மான் ( Toleman Motorsport )என்ற பெயரிலும் போட்டியிட்டு இருக்கிறது .ஆனால் ரெனால்ட் என்ற பெயரில் இந்த அணி 1977 - 1985 வரையிலும் அடுத்து 2002 - 2011 வரையிலும் செயல் பட்டது .இந்த ஆண்டு போன ஆண்டில் இருந்த சிறு குழப்பம் மறைகிறது .அது லோட்டஸ் -ரெனால்ட் என்ற பெயருக்கும் ரெனால்ட் என்ற பெயரிலும் இருந்தது .இன்று கேட்டர்ஹாம் என்றும் ரெனால்ட் அணி இன்று லோட்டஸ் என்றும் மாறிவிட்டது .ஆனால் லோட்டஸ் அணி 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டில் உருவாக்குனர் மற்றும் ஓட்டுனருக்கான சாம்பியன் பட்டதை வென்று இருப்பது குறிப்பிட வேண்டியது முக்கியம் .கடந்த ஆண்டு 73 புள்ளிகளை பெற்று ஐந்தாம் இடத்தில் பெற்றது .

காரின் மாற்றங்கள் 




காரின் முன்பகுதி சஷ்பென்சன் பகுதிகள் காற்றியக்கவியல் திறனை மேம்படுத்தும் பொருட்டு மிக கணிசமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது .அடுத்து முந்தய R31 காரின் முன்னோக்கிய அமைப்பில் இருந்த எக்ஸ்சாஸ்ட் அமைப்பு முழுவதுமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது .அடுத்து நோஸ் கோன் பகுதி மாற்றம் .

ஓட்டுனர்கள் .

பின்னிஷ் தேசத்தின் - கிமி ரைக்கொணன் 2001 ஆண்டில் சப்பர் ( Sauber ) அணியில் பார்முலா 1 களத்தில் அடியெடுத்து வைத்தவர் .அடுத்து வாய்பளித்தது மெக்லரண் மேர்சீடிஸ் அணி 2002 - 2006 வரை இருந்தார். பெராரி அணியில் 2007 - 2009 வரை இருந்தார் .அப்போது 2007 ல் ஓட்டுனருக்கான  சாம்பியன் பட்டதை வென்றார் . இதில் ஒரு விசேசம் என்ன வென்றால் 2010 - 2011 ஆம் ஆண்டில் எவரும் கண்டுகொள்ளவில்லை .இப்போது அவருக்கு மறுவாய்ப்பு லோட்டஸ் E20 மூலம் கிடைத்திருக்கிறது .





அடுத்தவர் ,பிரென்ச் டிரைவர் - ரொமைன் கோர்ச்ஜியன் ( Romain Grosjean ) 2009 ல் Renault F1 அணிக்காக நான்கு சுற்றுகளில் கலந்து கொண்டு 23 புள்ளிகளை பெற்றார் .மற்றபடி 2010: GT1 & Auto GP (Champion) 2011: GP2 Asia (Champion) & GP2 (Champion) இந்த ஆண்டில் 2010 - 2011 ல் இவரும் இங்கு ஒதுக்கப்பட்டவர் .



அதர்க்கு அடுத்தவர் பெல்ஜிய நாட்டை சேர்ந்த ஜெரோமே அம்ப்ரோசியோ .இவர் கடந்த ஆண்டில் விர்ஜின் காஷ்வோர்த் அணிக்காக ஒரு புள்ளிகூட எடுக்காமல் ஆண்டை நிறைவு செய்தவர் .இங்கு ரிசர்வ்  டிரைவர் .






எதிர்பார்ப்போம் 



இதன் அணி தலைவர் Eric Boullier அதிக கடின உழைப்பை நாங்கள் முதலீடு செய்து இருப்பதாக தெரிவிக்கிறார் .மேலும் அதிக அனுபவ பதிவுகளை கொண்ட இந்த அணி மிக அமைதியாக இந்த ஆண்டும் சாதிக்கும் என எதிர்பார்ப்போம்


இந்த ஆண்டின் மிக சிறப்பான துவக்கம் ரெனால்ட் எஞ்சின் மூலம்தான் இருக்கும் என்பதர்க்கு மிக சிறந்த உதாரணம் இந்த ஆண்டில் இந்த என்ஜினை நான்கு அணிகள் பயன்படுத்துகின்றன என்பதுதான் .


ஆம். முதல் நிலையில் இருக்கும் ரெட்புல் முதல் ,லோட்டஸ் ,வில்லியம்ஸ் கேட்டர்ஹாம் போன்ற அணிகள் பயன்படுத்த போகிறது .இந்த ஆண்டில் அதிகம் பயன்படுத்தும் என்ஜினில் ரெனால்ட் முதலிடத்தில் இருப்பதால் எனவே நம் இதயத்தில் ரெனால்ட் எஞ்சின் இந்த பெண்மணியின் இதயத்தில் இருப்பது போல !,எல்லோரின் இதயத்தில் இடம் பிடிக்கும் என நம்பலாம் .

Tuesday, February 14, 2012

இந்திய கனவை நனவாக்கும் அணி



பார்முலா 1 பந்தயத்தில் இன்று இருக்கும் போர்ஸ் இந்திய அணி,உலகிலேயே  மிக பெரிய மக்கள் விரும்பும் அல்லது கனவை நனவாக்கும் அணி .ஆம் நம் நாட்டின் ஜனத்தொகையின் நூறு சதத்தில் பத்து சதவிகிதம் மோட்டார் ரேஸ் ரசிகர்கள் என்றாலே கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்றைய சஹாரா போர்ஸ் இந்திய அணியின் பலமாக இருப்பார்கள் .



சஹாரா போர்ஸ் இந்திய அணி வரலாறு


Eddie Jordan

இன்று இருக்கும் சஹாரா போர்ஸ் இந்திய அணி யுனைடெட் கிங்டம் -சில்வர் ஸ்டோனில்,ஐரீஸ் நாட்டின் -  எடி ஜோர்டானால் ஜோர்டான் பார்முலா அணி என்ற பெயரில் களத்தில் கடந்த 1991 - 2005 இருந்தது இதன் முக்கியத்துவம் என்னவென்றால் 1991 மைகேல் சூமேக்கரையும் 2005 ல் நமது நாராயன் கார்த்திகேயனையும் அறிமுக படுத்தியது இந்த அணிதான் , அங்கிருந்து அந்த அணி என 2006 ஷ்பைகர் பார்முலா 1 என்றும் , 2007 ல் மிட் லேன்ட் என்றும் இருந்த அணிதான் 2008 ல் 88 மில்லியன் ஈரோவுக்கு கை மாறி போர்ஸ் இந்தியா என்றானது .ஷ்பைகர் சேஸ் + பெர்ராரி எஞ்சின்( Ferrari 056 V8 ) மூலம் -Force India VJM01 உருவானது அந்த ஆண்டில் ஒரு புள்ளி கூட எடுக்கவில்லை பத்தாம் இடத்தை பெற்றது .அடுத்து 2009 ல் VJM02 கார் மேர்சீடிஸ் பென்ஸ் எஞ்சின் ( Mercedes FO 108W V8 )மற்றும் கியர் பாக்ஸ் மூலம் உருவானது .இந்த அணி பதிமூன்று புள்ளிகளுடன் ஒன்பதாம் இடம் பெற்றது . 2010 ஆம் ஆண்டு நிலை மாறியது அதே மேர்சீடிஸ் பென்ஸ் கூட்டணியுடன் உருவான  VJM03 கார் அறுபது எட்டு புள்ளிகளை பெற்று ஏழாம் இடம் பெற்றது .அதை விட ஒரு புள்ளி அதிகம் எடுத்து 2011 ல் - VJM04 கார் ஆறாம் இடத்தை பெற்றது . இன்று உருவாக்கி இருக்கும் VJM05 கார் 2012 ல் ஒரு புது எழுச்சியுடன் களம் இறங்கியுள்ளது .ஆம் காற்றியக்கவியல்(aerodynamic) துறையில் மிக பெரிய முன்னேற்றம் அடைந்து  இருப்பதால் மிக நம்பிக்கை அளிக்கும்விதமாக களம் இறங்கியுள்ளது .

ஓட்டுனர்கள் .


இங்கிலாந்தின் டிரைவர் - பால்டி ரெஸ்டா . போர்ஸ் இந்திய அணியால் பார்முலா 1 போட்டிக்குகடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டவர் .இருபத்தி ஏழு புள்ளிகளை பெற்று பத்தி மூன்றாவது இடத்தை பிடித்தவர் .




அடுத்தவர் ஜெர்மனியின் -  நிகோஹுல்கேன்பேர்க் கடந்த ஆண்டுக்கு முந்திய ஆண்டு வில்லியம்ஸ் காஷ்வோர்தில் இருபத்தி இரண்டு புள்ளிகளை எடுத்து - பதினாலாவது இடத்தை பெற்றவர் .






அதர்க்கும்அடுத்தவர், பிரெஞ்சு தேசத்தை சேர்ந்த ஜுலேஷ் பியஞ்சி .இவரும் புதியவர்தான் .கடந்த ஆண்டு பெர்ராரியின் டெஸ்ட் டிரைவர் .இங்கும் அதே நிலை







 சஹாரா போர்ஸ் இந்திய பார்முலா 1 அணி வெற்றிக்காக காத்திருப்போம் .



 காதலர் தினத்தை கடைசியில் பேசாமல் போக முடியாது .இன்றைய காதல் ஜோடிக்கு வேறு எங்கும் போக வேண்டியதில்லை நம் போர்ஸ் இந்தியா அணியின் பால்டி ரெஸ்டா -லார (Laura) அவர்களின் இனிய காதலுக்கு இங்கு வாழ்த்துவோம் .

Friday, February 10, 2012

ஃபெராரி - இத்தாலியின் பெருமை.




பார்முலா 1 வரலாற்றில் மிக முக்கியத்துவம் உள்ள தவிர்க்க முடியா த அணி பெராரி .அந்த அணியின் இந்த ஆண்டுக்கான பெராரி F2012  காரின் அறிமுகம்  கடந்த 03 - 02 - 2012 ல் அந்த அணியின் வடக்கு இத்தாலியின்

 இத்தாலியின் மரநெல்லோவில் ( Maranello )

தலைமையகமான மரநெல்லோவில் ( Maranello )  சொந்த பந்தய சாலையில் நடைபெற இருந்தது .ஆனால் மிக அதிக பனி பொழிவின் தடையால் ஆன்லைனில் வெளியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டது .



 இந்த ஆண்டின் பெராரி F2012  காரில் அனேகமாக அனைத்து பகுதிகளும் மாற்றத்தை சந்தித்துள்ளது என்றே சொல்லலாம் .ஆம் காரின் முன் பகுதி சேசிஸ் உயரம் மற்றும் எக்ஸ்சாஸ்ட் பைப்பிங் மற்றும் முக்கியமான மாற்றம் எஞ்சின் கட்டுப்பாட்டு அமைப்பில் ( Engine Control Unit (ECU) ) செய்துள்ளார்கள்



.முன் மற்றும் பின் பகுதி சஸ்பென்சன் புல் ராடு அமைப்பு மாற்றத்தினால் முக்கியமான காரின் வேகத்திற்கு தடையான ஈர்ப்பு விசையின் செயல்திறனை குறைக்கும் முயற்சி நடந்துள்ளது .முன்பகுதியின் சமீபத்திய FIA  வின் அறிவுறுத்தலினால் காரின் ௯ (நோஸ்) மூக்கு பகுதி இன்னும் சில மாற்றங்களை சந்திக்கும் என எதிர்பார்க்கலாம் .மேலும் முன்,பின் பகுதி ப்ரேக் காற்றின் உள்புகும் வடிவம் -  Brembo Braking Systems நிறுவன பரிந்துரைப்படி அமைக்கபட்டுள்ளது .இன்னும் சொல்லவேண்டுமென்றால் இந்த 58 ஆவது பெர்ராரி பார்முலாவின் அவதாரம் ஒரு புது எதிர்காலத்தை எதிர்கொள்ளும் Project 663 என சொல்வோம் .முழுக்க முழுக்க பெர்ரரியின் சொந்த மூலையில் உருவாகும் ஒவ்வொரு வருட பார்முலா 1 காரும் மிக  எதிர்பார்ப்புகுரியதுதான் என நிரூபித்திருக்கிறது ..

 இத்தாலியின் தலைமையகம்

பார்முலா 1 வரலாற்றில் பதினாறுமுறை உருவாகுனர்களுக்கான சாம்பியன் பட்டம் ( World Constructors' Championship ) பட்டம் இதுவரை தொடமுடியாத தூரமாக இருக்கிறது .அதிக ஓட்டுனர்களுக்கான சாம்பியன் பட்டம் ( Driver Championships ) பதினைந்து முறையும் பார்முலாவின் அதிக போட்டியில் (832 ) கலந்து கொண்ட பெருமை , என அதிக வரலாற்று பதிவுகளே பெர்ரரியின் அடையாளம் .



என்சோ பெர்ராரி 



அதுமட்டுமல்ல இந்த ஒரு லோகோவை உலகத்தின் எந்த ஒருமூலையில் பார்த்தாலும் அது வேகத்தின் அடையாளம் என தெரியும் படி செய்த என்சோ பெர்ராரி மிக பெரிய அற்புதமான லோகோவின் படைப்பு அதை விட வேகமாக் செல்லும் கார்கள் இன்று வந்த போது அதுதான் மனதில் நிற்கிறது . எனவே அது மேஜிக் பிராண்ட் ( Magic Brand ) 

ஓட்டுனர்கள் .



ஸ்பானிஷ் நாட்டின் பெர்னாண்டோ அலோன்சா கடந்த 2005 மற்றும் 2006 ன் உலக சாம்பியன் ( அணி ரெனால்ட் ) 2010 ஆண்டுமுதல் பெர்ரரியில் இருக்கிறார் .2010 ஆம் ஆண்டில் இரண்டாம் இடமும் 2011 ஆண்டில் நான்காம் இடமும் வந்த ஒரு முரட்டுத்தனமான வேகத்தை வெளிபடுத்தும் குணமுடையவர் .பத்து வருட அனுபவஸ்தர் 


அடுத்தவர் பிரேசிலை சேர்ந்த பிலிப் மாசா .இவர் கடந்த 2006 லிருந்து இந்த அணியில் இருக்கிறார் 2008 ல் இரண்டாம் இடம் வந்ததே இவரின் சாதனை .இவர் ஒன்பது வருட அனுபவஸ்தர் .



இந்த வருட பெர்ரரியின் மாற்றங்களை புரிந்து அதனை செயல் படுத்தும் திறனை அதிகபடுத்தலாம் .பார்ப்போம் . 
ஏனென்றால் கடந்த மூன்று வருடமாக 4 - 3 - 3 இடத்தில் மட்டுமே வந்து கொண்டு இருக்கும் பெர்ரரியின் பார்முலா 1 தொழில்நுட்ப அணிக்கு வெற்றி பெரும் தாகம் அதிகப்பட்டு இருக்கிறது .வெற்றிக்கு தங்களிடம் என்ன இல்லை என்ற ஆராய்ச்சியில் அந்த அணி தவிக்கிறது . 



Tuesday, February 7, 2012

மெக்லரன் அணி - இங்கிலாந்தின் கெளரவம்


 மேர்சிடிஷின் MP4-27


காலம் எப்போதும் யாருக்காகவும் காத்திருக்காது என்பதர்க்கு உதாரணம் - என் பதிவுகள் .இருந்தாலும் புதியதாய் அறிமுகமாகும் கார்கள் பற்றி தாமதமாக பேசினாலும் விட்டுவிட மனசில்லை . மேலும் உங்களோடு பேச நான் தேடும்போது ,நிறைய பெறுகிறேன்...



இன்று நாம் பேச இருப்பது இன்றைய தேதியில் முதலிடத்தில் இருக்கும் ரெட் புல் அணிக்கு சவாலாகவும் ,நீ இல்லாவிட்டால் நான்தான் முதலிடம் என்பது போல இருக்கும் மெக்லரண் மேர்சிடிஷின் MP4-27 காரின் அறிமுகம் கடந்த 01 - 02 - 2012 ல் நடந்தது .



நாம் முன்னரே பேசியபடி சில கம்பெனிகளின் பெயரில் அதன் எஞ்சின் தயாரிப்பு செய்யும் பெயர் சேர்ந்து இருக்கும்.இங்கு மெக்லரன் கார் தயாரிக்கும் நிறுவனம் கடந்த 1966 ஆம் ஆண்டிலிருந்து பார்முலா போட்டியில் கலந்து கொண்டு வருகிறது



இதன் நிறுவனர் மெக்லரண் புருஷ் .

 இன்றுள்ள இதன் எஞ்சின் தயாரிப்பு நிறுவனமான மேசீடிஷ் கம்பனி 1995 ஆம் ஆண்டிலிருந்து கைகோர்த்து கொண்டது . கடந்த ஆண்டில் இந்த கம்பெனி எஞ்சின்கள் போர்ஸ் இந்திய அணி மற்றும் மேஸ்ர்ச்டிஷ் பெட்ரோன்ஸ் அணிக்கும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடதகுந்தது .இன்று வரை பதினேழு ஆண்டுகளாய் மெக்லரண் -மெர்சிடிஸ் நட்பு தொடர்கிறது .கடந்த 1998 ஆம் ஆண்டு முதலிடத்தை பிடித்தது .வெற்றிகரமான இந்தகூட்டனியின் குறிக்கோள் மீண்டும் முதலிடம் .இந்த ஆண்டு அது நிறைவேறுமா என தெரியவில்லை .



ஓட்டுனர்கள்

ஜென்சன் பட்டன் .கடந்த 2009 ன் சாம்பியன்

லீவிஸ் ஹேமில்ட்டன் இதே அணியின் 2008 ஆம் ஆண்டின் சாம்பிய

இதன் ஓட்டுனர்கள் இருவருமே மிக சிறந்தவர்கள் ஒருவர் ஜென்சன் பட்டன் .கடந்த 2009 ன் சாம்பியன் .(அணி- பிரான் மெசிடிஸ் ) அடுத்தவர் லீவிஸ் ஹேமில்ட்டன் இதே அணியின் 2008 ஆம் ஆண்டின் சாம்பியன் .எனவே இந்த ஆண்டு அதன் தொழில்நுட்ப முன்னேற்றம் மிகப்பெரிய சவாலை ஏற்ப்படுத்தும் .


இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கேமரூன்


புதிய MP4-12C supercar தொழிற்சாலை

இங்கிலாந்தின் மூன்று அணிகள் இந்த வருடம் பங்குகொள்கிறது .இதில் மேலரண் அணிக்கு மட்டும் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதர்க்கு உதாரணம் கடந்த நவம்பர் 17 ல் இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கேமரூன் அந்த கம்பனியின் ஐம்பது மில்லியன் யீரோ செலவில் தயாரான புதிய MP4-12C supercar தொழிற்சாலையை  துவங்கிவைத்தார் .மெக்லரன் அணி இங்கிலாந்தின் கௌரவமாக கருதப்படுகிறது என சொன்னால் கூட பொருந்தும் .

MP4-12C supercar 

காரில் மாற்றங்கள் 

இந்த MP4-27 காரில் மிக பெரிய வெளப்படையான மாற்றங்கள் ஒன்று காரின் பின்புற தோற்றத்திலும் ,இரண்டாவது என்ஜின் கூலிங் அமைப்பில் சில திருத்தங்கள் மற்றும் புதிய எக்ஸ்சாஷ்ட் இடஅமைப்பு (பார்முலா 1 ன் அறிவுறுத்தலின்படி )

நம்பிக்கை நட்சத்திரங்கள் .


இந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் இதன் திரையை அல்லது மேல் உறையை நீக்கி பளீரென உலகுக்கு அறிமுக படுத்துகிறார்கள்