உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, March 24, 2012

எதிர்பார்புகளை தரும் மலேஷ்யன் பார்முலா 1 போட்டி
நம் அடுத்த பார்முலா 1 போட்டியின் வெப்பம் ஆஸ்த்ரேலியாவின்    மெல்போர்னில் இருந்து 7430.89 கி .மீ தொலைவிலுள்ள மலேஷியா நாட்டின் செபாங் இன்டெர் நேசனல் சர்க்யுட்டில் மெல்ல பரவி விட்டது .

 பயிற்சி போட்டி 


கடந்த 23 மார்ச் வெள்ளிகிழமை காலை 7:30 - 9:00 மணிவரை  முதல் பயிற்சி போட்டி நடந்தது .முதல் மூன்று  இடத்தில் லீவிஸ் ஹேமில்டன் -


செபாஸ்டியன் வெட்டல் - நிகோ ரோஷ்பெர்க் வந்தார்கள் .அடுத்து 11:30 - 1:00 மணிவரை நடந்த போட்டியின் இறுதியில் லீவிஸ் ஹேமில்டன் - மைக்கேல் ஷூமேக்கர் - ஜென்சன் பட்டன் என இரண்டு ,மூன்றாம் நிலை மாறியது

.இன்று காலை 10:30 - 11: 30 வரை நடந்த இறுதி பயிற்சி போட்டியில் , நிகோ ரோச்பெர்க் - வெட்டல் - மார்க் - வெப்பர் என மாறிப்போனது .
சரி ,இதெல்லாம் விட முக்கியமான 1:30 - 2:30 நடந்த தலைவிதியை நிர்ணயிக்கும் தகுதி போட்டியினை  பார்ப்போம் .


 

Q1 - முதல் தகுதி சுற்றில் இருபத்தி நான்கு காரில் யார் அதிவேகத்தில் செபாங் சர்க்யுட்டின் 5.543 கி.மீ தூரத்தை கடந்து 107 % நிர்ணயம் செய்தது நம் ரெட்புல் ரெனால்டின் மார்க் வெப்பர் .அவர் எடுத்துக்கொண்ட நேரம் 1:37.172 .+ 107% = 1:43.974. நல்லவேளை கடைசி  இடம்  பிடித்த  நம் நாராயண் கார்த்திகேயனின் நேரம் 1:43.655 .
Q2 - இரண்டாவது தகுதி சுற்றில் மீதமுள்ள பதினேழு காரில் ,லோட்டஸ் ரெனால்டின் கிமி  Räikkö னேன் 1:36.715 முதலிடம் பிடித்தார் .

  எதிர்பார்த்த  மைக்கேல் ஷூமேக்கர்...


Q3 - மூன்றாவது சுற்றுதான் காரின் போட்டிகளத்தில் முதலிடத்தை நிர்ணயம் செய்வது இங்கு முதலிடம் வந்தது ,சென்ற போட்டியை போல லீவிஸ் ஹெமில்டன் பத்து காரில் அவரின ஒரு சுற்றுக்கான அதிக பட்ச நேரம் 1:36.219 .இரண்டாவது இடம் .அதே அணியின் ஜென்சன் பட்டன் .மூன்றாவது இடம் சென்ற ஆண்டு முழுவதும் எதிர்பார்த்த  மைக்கேல் ஷூமேக்கர்.ஆம் அவரே .

எனவே இந்த ஆண்டில் அணிகளின் மாற்றம் + முன்னேற்றம் பார்வையாளர்கள் ,ரசிகர்களை நிமிர்ந்து உட்க்கார வைத்திருக்கிறது.

அழகிய மலேசியா.


நாளை பிற்பகல் 1:30 க்கு (மின்சாரம் இருந்தால் ! ) போட்டியின் நேரடி காட்சியை தவறவிடாதீர்கள் .அதைவிடவும் போட்டிக்கு ஒரு மணிநேரம் முன்னர் நடக்கும்,அழகிய மலேசியாவையும்  ரசிக்க தவறாதீர்கள் .

Friday, March 23, 2012

ஜென்சன் பட்டன் முதலிடத்தை பிடித்தார்

ஆஸ்த்ரேலியாவின் மெல்போர்ன் கரண்ட் பிரிக்ஸ் சர்க்யுட்டில் கடந்த 18 மார்ச் 2012 ல் பார்முலா 1 போட்டியின் முதல் போட்டி நடந்தது .பொதுவாகவே விளையாட்டு போட்டிகளுக்கு முக்கியத்துவம் தரும் அந்நாட்டில் போட்டிகள் நடத்துவதில் ஒரு அபாரமான நேர்த்தி இருக்கும் .அதோடு மிக வித்தியாசமான முடிவுகளை தருமாறு அங்கு நடக்கும் கிரிகெட் போட்டியாகட்டும் ,ரேஸ் போட்டியாகட்டும் அது நடத்தப்படும் களம் உலகின் முதன்மையை தக்கவைதுகொள்ளும் முயற்சி அப்பட்டமாக தெரியும் .அது மட்டுமல்ல ஆஸ்த்ரேலிய மக்கள் விளையாட்டை மிகவும் நேசிப்பவர்கள் .

 மெல்போர்ன் கரண்ட் பிரிக்ஸ் சர்க்யுட்டின் நீளம் 5.303 கி.மீ . இன்று நடக்கும் போட்டியில் இந்த தூரத்தை 58 முறை சுற்றும்போது ஒரு போட்டி ரேஸ் கார் 307.574 கி.மீ தூரத்தை கடக்கிறது .அதர்க்கு சுமார் 410 லி முதல் 450 லிட்டர் செலவு செய்ய வேண்டி இருக்கிறது .அது மட்டுமல்ல இந்த ஆண்டில்  மொத்தம் இருபது நாடுகளில் நடக்கும் போட்டிகளில் -போட்டி களத்தில் மட்டும் ஒரு கார் 1195 சுற்றுக்களை சுற்றுவதன் மூலம் 6099. 947 கி.மீ தூரத்தை கடக்க வேண்டும் .அடுத்து ஒவ்வொரு நாட்டில் நடக்கும் வெள்ளிகிழமை இரண்டு முறை சனி கிழமை ஒரு பயிற்சி போட்டி மட்டும் மூன்று தகுதி சுற்று போட்டி என கலந்து கொள்ளும்போது ஒரு அணி தன்னுடைய இரண்டு காருக்கும் சுமார் 2 லட்சம் லிட்டர் செலவு செய்து சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் கி.மீ தூரத்தை கடப்பதாக ( மிக விலையுர்ந்த! ) புள்ளி விவரங்கள் வருணிக்கிறது .எனவேதான் இந்த போட்டிகளில் அதிக செலவு என சொல்லும்படியாகிறது .சரி போட்டிக்கு 
போவோம் ...
2012 ஆண்டின் துவக்கமே கடந்த ஆண்டை நினைவு படுத்த கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக பட்டது .ஆம் கடந்த ஆண்டு முதல் போட்டி முதல் ரெட்புல் ரெனால்டின் ஆதிக்கமே தெளிவாக இருந்தது .ஆனால் இந்த ஆண்டு ஐந்து மட்டும் ஆறாம் இடத்திலே இருந்து தன்னுடைய போட்டியை ஆரம்பித்தது .முதல் இரண்டு இடத்தில் மெக்லரண் மேர்சீடிஸ் .அடுத்து லோட்டஸ் ரெனால்ட் என இருந்தது .


இந்தியநேரப்படி காலை 11:30 க்கு வ்ர்ரூம் சத்தம் தொடங்கியது ....
முதல் சுற்று..

 மெக்லரண் மேற்சீடிசீன் -லீவிஸ் ஹேமில்டன் முதலிடத்தினையும் இரண்டாம் இடத்தை ஜென்சன் பட்டனும் பாய்ந்து தக்கவைத்துக்கொண்டார்கள் .ஆனால் மூன்றாம் இடத்து லோட்டஸ் ரெனால்டின் ரோமின் க்ரோச்ஜியன் ஆறாம் இடத்துக்கு தள்ளப்பட்டு அந்த இடத்துக்கு ,அண்ணன் பார்முலாவின் திமிங்கலம் ஷூமேக்கர் வந்தார் .அருமையான போட்டி ...
ஆனால் பின்னால் மிக பல மோதல்கள் நடந்தது .அதில் ரெட்புல்லின் மார்க் வெப்பருக்கு நடந்தது .நல்ல வேலை கார் சிறு பதிப்புடன் தொடர்ந்தது .ஆனால் ரோமின் க்ரோச்ஜியன் மோதலினால் சஸ்பென்சன் பாதிப்படைந்து வெளியேற ,அவரை தொடர்ந்து ,சகாரா போர்ஸ் இந்தியாவின் நிகோ Hüல்கேன்பேர்க் - டோரோ ரோசொவின் டேனியல் ரிக்கார்டியோவுடன் மோதிய பாதிப்பில் வெளியேற ,
வெட்டலின் கார் இதெல்லாம் கவலை படாமல்ஆறாம் இடத்து ரோமின் க்ரோச்ஜீனை பின்னுக்கு தள்ளி ,அடுத்த சுற்றில் மெர்சீடிசின் நிகோ ரோபெர்க்கை ஐந்தாம் இடத்திற்கு அனுப்பிவிட்டு மூன்றாம் இடத்து  ஷூமேக்கரை துரத்த தொடங்கினார் .

மூன்றாம் சுற்றின் முடிவில், Drag Reduction System கட்டுப்பாடு நீக்கப்பட்டவுடன் போட்டி பலமாக தொடங்கியது .

ஆறாம் சுற்று ...

ஷூமேக்கரை துரத்தி கொண்டு இருந்த வெட்டலின் கார் முதல் வளைவில் திடீரென புல்வெளிக்குள் பாய்ந்தது .ஆனால் சுதாரித்து ட்ராக்கில் காரை கட்டுபடுத்தி கொண்டு வந்தார் .
பத்தாம் சுற்று ...

ஒரு அதிர்ச்சியான விஷயம் நடந்தது .ஷூமேக்கரின் கார் வளைவில் புல்வெளியில் பாய்ந்தது , ஒரு புல் வெட்டும் இயந்திரத்தை போல காரின் முன்பகுதியில் புற்கள் வெளியேற, வேகம் குறைந்து பிட்லேனுக்கு வந்தது ,ஆம் கியர் பாக்ஸ் பிரச்சனை . ஏழு முறை சாம்பியனின் இந்த சுற்றுக்கான தொடர்வு முடிந்தது.இந்த களத்தில் இதே ஷூமேக்கர் ஒட்டிய பெர்ராரி கார் 2004 ல் 1:24.125 வேகத்தில் கடந்து சாதித்ததை இன்று வரை யாரும் முறியடிக்கவில்லை என்பது நினைவு கூற வேண்டியது .

பனிரெண்டாம் சுற்று ..

பெர்ரரியின் பிலிப் மாசா தன் காரின் பின்பகுதி டயரில் டீம் ரேடியோவில் புகார் தெரிவித்து உடனே மாற்றவும் செய்தார் .

பதினாலாவது சுற்று..

அலோன்சா டயர் மாற்ற வந்தார் .

பதினைந்தாவது சுற்று ..

சப்பர் பெர்ரரியின் கமுய் கோபயாஷி அதே டயர் பிரச்சனையால் அவதி பட்டார் . லோட்டஸ் ரெனால்டின் - கிமி ரெய்க்கொனனுடன் போராடிக்கொண்டு இருந்தார் .

மேலும் மென்மையான டயர்களை இந்த ஆண்டு அறிமுகபடுத்தும் நிலையிலுள்ள இந்த ஆண்டின் ஒரு டயர் வழங்கும் நிறுவனம் பய்ரெல்லி ( Pirelli ) இந்த விசயங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் .இரண்டு வினாடிகளில் டயர் மாற்றி கொண்டு இருந்த நேரத்தை 0.08 வினாடிகளில் மாற்றும் அளவுக்கு முன்னேறிக்கொண்டு இருந்தாலும் இந்த அவஸ்த்தைகளை களைந்து முன்னேருவதுவும் முக்கியம் .
 
இருபத்தி ஒன்றாவது சுற்று ...

ஹேமில்டன் , சாபர் பெர்ரரியின் செர்கியோ Péரேழுடன் முந்தும் முயற்சியில் பாத்து வினாடிகள் வித்தியாசத்தில் பாய்ந்து கொண்டு இருக்க ,

இருபத்தி மூன்றாவது சுற்று ..

இப்போது செர்கியோ Péரேழுடன் முந்த போராடுவது பெர்ரரியின் அலோன்சா ..முதல் வளைவில் முந்தினார் .அடுத்து ரோபெர்க்கை மெர்சீடிசின் -ரோஷ்பெர்க்கை முந்தவிடாமல் செர்கியோ போராடினார் ...
 
முப்பத்தி ஒன்று ..

வில்லியம்சின் - மல்டோனா வெப்பருடனும், ரோஷ்பெர்க்குடனும் போராடி பறந்து முன்னேறி கொண்டு இருந்தார் ..

முப்பத்தி நாலு ...

கேட்டர்ஹாம் அணியின் - வித்தாலி பெற்றோவ் (  Vitaly Petrov ) காரின் கியர் பாக்ஸ் பகுதியிலிருந்து புகை கசிய அவரின ஓட்டமும் முற்றுபெற்றது .அதுவும் ரேஸ் ஆரம்பிக்கும் எல்லை கோட்டில் வந்து நிற்கவே தொடர்ந்து வரும் கார்களுக்கு பாதுகாப்பு கருதி பாதுகாப்பு கார் அழைக்கப்பட்டது ..


முப்பத்தி எட்டு ..

கேட்டர்ஹாம் அணியின் ஹெயக்கி கொவளைனே காரில் சஸ்பென்சன் பிரச்சனை ஏற்படவே அந்த காரும் அணியின் கேரேஜ் சென்று தஞ்சம் அடைந்தது .முழு அணியின் புள்ளி கனவு தகர்ந்தது .

நாற்ப்பத்தி மூன்று ..

ஒரு மிக பெரிய விநாடிகளை வெல்லும் சங்கிலி தொடர் போராட்டம் தொடங்கியது .ஆம் .ஜென்சன் பட்டனை 2.5 வினாடிகளின் இடைவெளியில் துரத்த அதர்க்கு அடுத்து ஒரு வினாடி வித்தியாசத்தில் வெட்டலை ஹேமில்டன் துரத்த அவருக்கு பின்னால் வெப்பர் ,அலோன்சா ,மால்டோனா ,பெரஸ் ,ரோபெர்க் ,கோபயாஷி ,ரேயகொணன் என முன்னணி வரியில் புயல் பரப்பி கொண்டு இருக்க ..

நாற்பத்தி ஐந்து ..

DRS - வாய்ப்பு தரவே வெட்டல்- பட்டனை 0.7 வினாடிகள் இடைவெளியை கொடுக்க பட்டன் சுதாரித்து தன்னுடைய மிக அதிவேக நேரம் 1:30.220 ஐ பதிவு செய்தார் .அதோடு 3.8 வினாடி இடைவெளியை வெட்டளுக்கு கொடுத்தார் .

நாற்பத்தி ஆறு ..

நான்காம் வளைவான Hellas (மொத்தம் பதினாறு வளைவு ) வளைவில் வில்லியம்ஸ் அணியின் ௦- புருனே சென்னாவும் -பெர்ரரியின் பிலிப் மாசாவும் மிக மோசமான தாகுக்குதலை ஏற்படுத்தினார்கள் .நிலை குலைந்த வில்லியம்ஸ் கார் பாதையோர சரளை பகுதிக்கு இழுத்து செல்ல அந்த காரின் பாகங்கள் சிதறி பறந்தன ..விசாரணைக்குரிய விபத்து .இதில் மாசாவின் கார் தொடரவில்லை . சென்னாவும் 52 ஆவது சுற்றுக்கு பின் அந்த காரும் தொடரவில்லை .

ஐம்பத்தி இரண்டு ..
மீண்டும் நாற்பத்தி ஐந்தாவது சுற்றில் வெட்டல்- பட்டன் துரத்தல் அதே இடைவெளியில் நிகழ்ந்தது .ஆனால் இந்தமுறை ௦0.9 வினாடிகள் மட்டுமே நீடித்தது .

ஐம்பத்தி ஆறு ..
ஜென்சன் தன்னுடைய புதிய வேகத்தை 1:29.187  பதிவு செய்து அந்த அணியின் பெருமூச்சை நிதானமாகினார் .

ஐம்பத்தி ஏழு ..

7 ஆம் Marina வளைவில் ,வில்லியம்ஸ் அணியின் எஞ்சி இருந்த பாஸ்டர் மல்டோனடோ காரின் பின்பகுதி பாதுகாப்புக்கான தடைகளை தகர்த்து ,இன்னும் ஒரு சுற்று இருக்கும் நிலையில் போட்டியில் இருந்து வெளியேறியது .


ஐம்பத்தி எட்டு ,கடைசி சுற்று ... 

ஜென்சன் பட்டன் முதலிடத்தை பிடித்தார் . ஐம்பத்தி எட்டு சுற்றுக்களை கடக்க எடுத்து கொண்ட நேரம் .1 மணி :34 நிமிடம் :09 வினாடி மற்றும் 565 மில்லிவிநாடிகள் மட்டுமே .


இரண்டாம் இடம் .

மிகவும் எதிர்பார்க்க பட்ட முகம் .செபாஸ்டியன் வெட்டல் .பட்டனை விட 2 .1 வினாடிகளே அதிகம் எடுத்துகொண்டார் . ஆறாம் நிலையில் தொடங்கினாலும் நானும் என் காரும் நலமாக இருக்கிறோம் என்பதை வெட்டல் சொல்வதாக நாம் எடுத்துகொள்வோம் .மூன்றாம் இடம் .

போட்டியை முதலிடத்தில் தொடங்கிய லீவிஸ் ஹேமில்டன் மூன்றாம் இடத்தை தக்கவைதுகொண்டார் .இவரும் டயர் பிரச்சனையால் மார்க் வெப்பருடன்போராடி அவருக்கு ௦.0.5 வினாடி வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் .

4 ஐ ,மார்க் வெப்பரும் ,5 ஐ பெர்னாண்டோ ஆலோன்சாவும் 6 ஐ,  கமுய்  கொபயஷியும் ,7 ஐ கிமி Räikköனேன் 8 ஐ, செர்கியோ பெரஸ் 9 ஐ ,டேனியல்  ரிக்கியார்டோ 10 ஐ பால்டி ரேஷ்டாவும் கைப்பற்றினார்கள் .நல்லவேளை ,மார்க் வெப்பரும்(4),டேனியல் ரிக்கியார்டோ(9) -ஆஸ்திரேலியா நாட்டின் இரண்டு டிரைவர்களும் புல்லிபட்டியலை பிடித்தார்கள் .இது அந்த தேசத்தின் மக்களை சந்தோசப்படுத்தும் .
.இவ்வளவு உயரத்தில் கொடி அசைத்தால் ஓட்டும் ட்ரைவருக்கு தெரியாவிட்டாலும் பரவாயில்லை .உட்கார்ந்து படிக்கும் நமக்கு மிக அழகாக தெரிகிறது .நன்றி 

.Saturday, March 17, 2012

பார்முலாவின் முதல் வெப்பம்...பார்முலா 1 போட்டிகளின் வ்வர்ர்ர்ரூம் சத்தமும் ,கார்களின் டயர்களின் உராய்வின் வெப்பமும் ,பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்து கன்னத்தில் கை வைத்துகொண்டு டென்சனுடன் போட்டியை உற்று பார்த்துகொண்டு இருக்கும், அணி முதலீட்டார்களையும், நேரில் பார்க்க நுழைவு சீட்டுக்காக  காத்து இருக்கும் ரசிகர்களுக்கும்,நான்விரும்பும் டிரைவரின் போடியம் ஜம்பை பார்க்க காத்து இருக்கும் பிரியர்களுக்கும்  ,நான் ,நீ என போட்டி போட்டுகொண்டு பந்தய களத்திற்குள்  உலா வரும் ஒய்யார பதுமைகளின் உலாவல்களை ரசிக்கும் ஆர்வலர்களுக்கும் ,பெட்டிங் முறையில் அணிகளை ஏலம் விடும் ஏஜண்டுகளுக்கும்,  இந்த போட்டியில் என்ன நடக்கும் இதை எப்படி வழங்குவது என தீவிர காய்ச்சலை தேடிக்கொள்ளும் செய்தியாளர்களுக்கும் , தொலைக்காட்சி நிலையத்திற்கும் மற்றும் என் போன்ற வலைப்பூ பதிவர்களுக்கும் - இந்த மார்ச் பதினாறாம் நாள் முதல் ஒரு வித உற்சாகம் கலந்த டென்சன் தொற்றிக்கொள்ள தொடங்கிவிட்டது .... இதோ போட்டிகளுக்கான பயிற்சி போட்டி கடந்த வெள்ளிகிழமை 16 - 03- 2012 ல் துவங்கிவிட்டது .பயிற்சி  போட்டி ஞாயிறு நடக்கவிருக்கும் போட்டிக்கான வரிசையை நிர்ணயம் செய்வதால் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும் .
வெள்ளிகிழமையில் இரண்டு 1.30 மணிநேர பயிற்சி போட்டி நடக்கும் நாட்டின் காலை நேரத்திலும் ,பிற்பகல் நேரத்திலும் நடக்கும் ஆனால் இந்த பயிற்சி மொனாக்கோ நாட்டில் வியாழகிழமை நடத்தப்படும் .அதே போல சனி கிழமையில் ஒருமணி நேர பயிற்சி போட்டி காலை  நடக்கும் .இதில் கட்டாயம் போட்டியில் பங்கேற்கும் டிரைவர் கலந்து கொள்ள வேண்டியதில்லை .ஆனால் பிற்பகலில் நடக்கும் ஞாயிறு போட்டிக்கான முதல் மற்றும் இருபத்தி நான்கு இடத்திற்கான கார்களின் நிலை ( Grid position ) தீர்மானிக்க படுவதால் அதில் போட்டியில் பயிற்சி பெரும் டிரைவர் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் .பயிற்சி போட்டி 

மொத்தம் ஒருமணி நேரம் நடக்கும் .அது மூன்று பகுதிநேரமாக( Q1,Q2,Q3 ) பிரிக்கப்படுகிறது.(Q1)முதல் இருபதுநிமிடம் போட்டியில் கலந்துகொள்ளும் பனிரெண்டு அணிகளுக்குரிய இருபத்திநான்கு கார்களும் கலந்து கொள்கிறது .இருபது நிமிட முடிவில் கலந்து கொண்ட இருபத்தி நாலு காரில் கடைசி ஏழு கார்கள் ,போட்டியின் வரிசையில் 17 - 24 இடங்களுக்கு தேர்வு செய்யப்படுகிறது ,(Q2)அடுத்து  எழுநிமிட ஓய்வுக்கு பின் நடக்க இருக்கும் இரண்டாவது தகுதி சுற்றில் எஞ்சியுள்ள பதினேழு கார்கள் பதினெட்டு  கார்கள் பதினைந்து நிமிட பலபரீட்சை செய்யும் .   அதில் கடைசி ஏழு இடம் பிடிக்கும் கார்கள் 11 - 16 இடங்களுக்கு தேர்வு செய்யப்படும் .(Q3)அடுத்த மூன்றாவது கடைசி தகுதி சுற்று எட்டு நிமிட ஓய்வுக்கு பின்னால் பத்து நிமிட  நேரம் கொடுக்கப்பட்டு அதில் 1 - 10 இடங்களுக்கு உரிய கார்களின் இடம் தீர்மானிக்க படுகிறது.  107 % விதி

 அடுத்து மிக முக்கியமான விதி இந்த தகுதி சுற்றில் இருக்கிறது .அதர்க்கு பெயர் 107 % விதி . அதர்க்கு இன்னொரு பெயர்  knock-out qualifying .ஆம் முதல் தகுதி சுற்றில் கலந்து கொள்ளும் 24 கார்களில் எந்த கார் மிக குறைந்த நேரத்தில் எல்லை கோட்டை தொடுகிறதோ அதனை கணக்கில் எடுத்து கொண்டு அந்த நேரத்தில் +107% கூட்டினால் வரும் நேரத்தை கடந்து எல்லையை கடந்த கார்கள் தகுதி நீக்கம் பெற்று போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்க படுவதில்லை .உதாரணத்திற்கு முதல் தகுதி சுற்றில் சாபெர் பெர்ராரி (  Sauber-Ferrari ) அணியின்  கமுய்  கோபயாஷி ( Kamui Kobayashi ) 1 நிமிடம் 26 வினாடிகள் மற்றும் 181 மில்லி வினாடிகளில் கடந்தார் ( 1:26.181 ) .அந்த நேரத்தில் விதி 107 % கூட்ட( இங்கு இதற்க்கு என தனியாக உள்ள கால்குலேட்டரில் கூட்டவும் அல்லது இந்த தொடுப்பை -http://www.enterf1.com/f1/107-percent-Lap-Time-Checker-Work-out-the-F1-target-lap-times-in-2011.asp#last-comment பயன் படுத்துங்கள் ) 1:32.214  நேரமே வாய்ப்பு நேரமாக கொடுக்கப்பட்டது.இதனை தாண்டிய ஹிஸ்பானிய ரேசிங் டீம் -HRT-Cosworth ன் இரண்டு கார்களும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் தகுதி நீக்கம் பெறுகிறது .இதில் வேதனை என்னவென்றால் அந்த அணியின் - இருவரில் , நம் நாராயண் கார்த்திகேயனும் ஒருவர். சென்ற ஆண்டின் ஆரம்பமும் இப்படித்தான் அந்த அணிக்கு ஏற்பட்டது .


சரி .நம் இவ்வளவு கணக்கு தாண்டி முதல் மூன்று இடத்தை தக்கவைத்து கொண்டவர்களை பார்க்கலாம் .
முதல் இடத்தில் போட்டியை ஆரம்பிக்க போவது மெக்லரண் மெர்சீடிசின் லீவிஸ் ஹேமில்டன் ,இரண்டாம் இடமும் அதே அணியின் ஜென்சன் பட்டன் .ஆனால் மூன்றாம் இடத்தில் இருப்பவர் எப்போதும் பத்து இடம் தள்ளி தேடும் நிலையில் இருந்த லோட்டஸ் ரெனால்ட் அணியின் - ரோமின்  க்ரோச்ஜியன் ( Romain Grosjean ).


 அடுத்து நாம் பார்க்க இருப்பது பந்தய அட்டவனை .முதல் போட்டி ஆஸ்த்ரேலியாவின் ஆல்பெர்ட் பார்க்கில் பார்முலாவின் முதல் வெப்பம் பரவ தொடங்குகிறது .நாளை இந்திய நேரப்படி போட்டி பிற்பகல் 11.30  க்கு ( ஆஸ்த்ரேலிய நேரப்படி மாலை  5 மணி . )தொடங்குகிறது .
போட்டியை பார்க்க போவோம் வாருங்கள் ...


Wednesday, March 7, 2012

பெருமை பட வேண்டிய அணி - Mercedes AMG Petronasஇன்றைய தேதியில் பார்முலா 1 ஐ பொறுத்தவரை பனிரெண்டு அணிகளில் ஐந்து அணிதான் அதிகம் பேசபடுகிறது . மிக குறுகிய காலத்தில் முதலிடத்தில் உள்ள 1.ரெட்புல் ரெனால்ட் 2. மெக்லரண் மேர்சீடிஸ் 3. மிக அனுபவமுள்ள பெர்ராரி 4. மேர்சீடிஸ் 5.  ரெனால்ட் ஆகியனதான் .(ஆனால் இந்த ஆண்டில் 2012 ல் சில மாற்றங்கள் 4 ஆம் ,5 ஆம் இடங்களில் இருக்கும் ).

அந்த வரிசையில் இன்று நாம் நான்காவதாக இருக்கும் ஜெர்மனியின் -  Mercedes AMG Petronas அணியின் -  W03 கார் உலக அறிமுகம் கடந்த 21 பெப்ரவரி அன்று ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா Circuit de Catalunya ல் நடந்தது
.
பார்வையை திருப்பும் சக்தி.
 பொதுவாகவே ஒரு சமூக கௌரவம் அவர்கள் வைத்திருக்கும் வாகனங்களில் வெளிபடையாக தெரியும் .அதிலும் மேர்சடிஷ் பென்ஸ் காரில் வருபவர்களை தனியாக மதிப்பிட இன்றல்ல என்றுமே மக்கள் நினைக்கும் அளவுக்கு ஒரு சமூக அந்தஸ்தை அதன் விலையிலும் சொகுசிலும் நீண்ட இடம் தக்கவைதுகொண்ட பெருமை கொண்டது இன்றும் பத்து விதமான வகைகள் ( Class  ) ( C,CL,CLS,E,GL,M,R,S,SL,SLK )  மற்றும் உட்பிரிவுகளுடன் வெளிவந்துகொண்டு இருக்கிறது .சாலையின் எல்லோரின் பார்வை இந்த கார்கள் மேல் படர்வதை போல பார்முலா 1 போட்டி அணிகளின் பார்வையை திருப்பும் சக்தி இந்த அணிக்கு உண்டு .

வரலாறு .


இன்று செயல்படும் - Mercedes AMG Petronas Formula One Team இங்கிலாந்துக்கு முப்பத்தி ஒரு கிலோ மீட்டருக்கு அருகில் நார்தம்ப்டன்ஷையர் தெற்கு நகர பகுதியில் உள்ள ப்ரக்க்லே மற்றும் ப்ரிச்வோர்த் ( Brackley and Brixworth ) நகரங்களில் இருந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு காரணமாக செயல்படுகிறது .ஆனால் இதன் உரிமம் ஜெர்மனிக்கு சொந்தமானது . 1954 ஆம் ஆண்டு தனது பார்முலா 1 வரலாற்றை தொடங்கியது 1955 வரை வெற்றிகரமாக தொடர்ந்த அதன் பயணம் ,மீண்டும் 2010 , 2011, மற்றும் இந்த ஆண்டில் தொடர்கிறது .அதர்க்கு இடைப்பட்ட காலங்கள் கீழ்கண்ட பெயரில் பயணித்தது .
1. Brawn (2009)
2. Honda (2006–2008)
3. BAR (1999–2005)
4. Tyrrell (1968–1998)
வழக்கம்போல தொடர்ந்து மாறிவந்த தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சிறந்த ஓட்டுனர்களை பணியமர்த்த தேவையான நிதி ஆதாரங்கள் போதாமல் வேறு பல பெயர்களில் தொடர வேண்டியிருந்தது .

காரின் மாற்றங்கள்காரில் மிகசிறந்த இரண்டு மாற்றங்களை செய்துள்ளது .
1. காரின் எடை குறைப்பு : இதன் முதல் பகுதி காரின் ஒரு பார்முலா 1 காரில் சுமார் 4500 பாகங்கள் இருக்கும் .அதில் சுமார் 200 மேற்பட்ட பாகங்களை குறைத்து எடை குறைப்பு நிகழ்ந்துள்ளது .மற்றும் Mercedes AMG  -  2.4-liter V-8 என்ஜின் உயர் செயல்பாடு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
2. காரின் வடிவமைப்பு மாற்றங்கள் : காற்றியக்கவியல் அடிப்படையில் stepped-nose  வடிவமைப்பு உயர்ந்த பட்ச காரின் உயர அமைப்பு புதிய வாயு வெளிப்பாட்டு (exhaust gases ) அமைப்பு போன ஆண்டில் ஏற்பட்ட DRS மற்றும் KERS தொழில் நுட்ப குறைகள் நீக்கப்பட்டுள்ளது .
அதுமட்டுமல்ல் இத்தனை மாற்றத்தினையும் 400 கி.மீ போட்டி களத்தில் சோதனை செய்யபட்டுள்ளது .அது மட்டுமல்ல Technical Shakedown Test சோதனை 100 கி.மீ அளவுக்கு நடந்துள்ளது.எனவே நிறைய சவாலை சந்திக்க தயாராக உள்ளது .

ஓட்டுனர்கள்.இரண்டாவது முறையாக பார்முலா 1 போட்டிக்கு வந்த மைக்கேல் ஷூமேக்கர் பெர்ராரி அணிக்கு திரும்புவார் என எதிர்பார்த்ததை மாற்றி
மேர்சீடிஸ் அணிக்கு வந்தார் இன்று உலகில் பார்முலா 1 போட்டிக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பதற்கு பத்து சதவிகித காரணம் மைக்கேல் ஷூமேக்கர் என்று சொன்னால் அது பொய்யாகவோ மிகை படுத்தலாகவோ இருக்காது .அந்த அளவுக்கு போட்டியில் ஒரு போர்குணத்தை வெளிபடுத்துபவர் . எழுமுறை சாம்பியன் பட்டம் பெற்றவர் கலந்து கொள்ளும் போட்டி என்பதால்  மிக சுவாரஷ்யமாக இருந்தது .அந்த போட்டியில் 72 புள்ளிகளை பெற்று ஒன்பதாம் இடமும் ,அடுத்த கடந்த ஆண்டில் ஒருபடி முன்னேறி எட்டாம் இடமும் 76 புள்ளிகளையும் பெற்றார் .இந்த ஆண்டில் அவர் போடியம் ஜம்ப் பார்க்க நிறைய ரசிகர்கள் காத்து இருக்கிறார்கள் .சிங்கம் வயதானாலும் சிங்கம்தான் என பார்க்க காத்திருப்போம் .

அடுத்தவர்,  நிக்கோ ரோஷ்பெர்க் .இவர் மிக பார்முலா 1 பாரம்பரியத்தை கொண்டவர் .இவரின் தந்தை Keke Rosberg பார்முலா 1 டிரைவர் .பின்னிஷ் நாட்டை சார்ந்தவர்.இவரின் மனைவி sina ஜெர்மனி நாட்டவர் .எனவே இரண்டு தேச குடியுரிமையை கொண்டவர் ரோஷ்பெர்க். இவரின் பார்முலா 1 பயணம், தந்தையின் அணியான வில்லியம்ஸ்காஷ்வோரத்தில் தொடங்கி 2006 - 2009 வரையும் பின்னர் 2010 ஆம் ஆண்டு மேர்சடிஷ் அணிக்கு வந்தவர் .இங்கு வந்தவர் 2010 ஆம் ஆண்டில் 142 புள்ளிகளுடன் ஏழாம் இடமும் ,2011 ல் 89 புள்ளிகளுடன் அதே ஏழாம் இடம் பெற்று சமமாக இருக்கிறார் .

பெருமை பட வேண்டிய அணி.


மெர்செடெஸ் AMG பெட்ரோனாஸ் அணியை பொறுத்தவரை ஒரு மிக பெருமை பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்த அணியின் தேச  பற்று .ஆம் அந்த அணியின் ஐந்து ஆண்டு பயணத்தில் எப்போதும் ஜெர்மானிய வீரர்களுக்கு இடம் கட்டாயம் இருக்கிறது என்பதுதான் .ஆம் 1954 ல்ஜெர்மனின்  Karl Kling ,Hans Herrmann அடுத்து 1955 ல் மீண்டும் Karl Kling இப்போது 2010 முதல் 2012 நிக்கோ ரோச்பெர்க் ,மைக்கேல் ஷூமேக்கர் .தன் நாட்டு வீரர்களை மதிக்கும் அணிக்கு என்றுமே ஒரு தனிமதிப்பு இந்த உலகில் காத்திருக்கும் .


நிக்கோ ரோஷ்பெர்க் பற்றி சிறு சுவையான விஷயம் .


அவர் அம்மா பிள்ளை போல அவரின காதலி Vivian Sibold  ஜெர்மானியர் . மேலும் அவர் interior designer .ஆனால் அவர் நம் ரோஷ்பெர்கையும் வடிவமைப்பாரா ?


Thursday, March 1, 2012

சுவிட்சர்லாந்தின் அற்புதம் - Sauber F1 Teamஅழகிய சுவிஸ் நாட்டின் ஒரே அணியான சாபர் F1 அணி ( Sauber F1 Team ) அணியின் சாபெர் C31 - பெர்ராரி காரின் அறிமுகம் கடந்த பெப்ரவரி 6 ஆம் நாள் ஸ்பெயின் தேசத்தின் தெற்கு பகுதியில் உள்ள Jerez de la Frontera circuit ல் நடந்தது

சாபெர் அணியின் வரலாறு.சாபெர் அணி அணியின் உரிமையாளர் பீட்டர் சாபெர் கடந்த 1993 ஆம் ஆண்டில், Sauber C12 இல்மோர் - 2175 3.5 V10 என்ஜினுடன் தன்னுடைய பார்முலா 1 வரலாற்றை தொடங்கிய அந்த அணி இந்த 2012 ஆம் ஆண்டு வரை Mercedes , Ford , Petronas , BMW என பல கம்பனி என்ஜினுடன் கைகோர்த்து பயணத்தை தொடர்ந்து இருக்கிறது. கடைசியில் 2010 முதல் 2012 வரை பெர்ராரி என்ஜினுடன் தொடர்ந்து வருகிறது .

1 The Mercedes era (1993–1994)
2 The Ford era (1995–1996)
3 The Ferrari era (1997–2005)
4 The BMW era (BMW Sauber, 2006–2009)
5 Return to Sauber ownership and Ferrari engines (2010–2012)

சுருக்கமாக சொன்னால் பல ஆளுமையை கடந்து பயணித்து இருக்கிறது இந்த சாபெர் அணி .இதில் இந்த அணியின் சிறந்த காலம் என சொன்னால் அது சாபெர் அணியும் - BMW இணைந்து செயல்பட்ட( 2006–2009 ) ஆண்டுகளில் 2007 ஆம் ஆண்டில் இரண்டாம் இடமும் ,2008 ஆம் ஆண்டில் மூன்றாம் இடம் பெற்றதேயாகும் .இன்று வரை ஐந்தாம் இடத்தை மட்டுமே மற்ற இணைப்பில் தொடமுடிந்தது .

காரின் மாற்றங்கள்

.
சாபெர் அணியின் முதன்மை வடிவமைப்பாளர் -  Matt Morris இந்த ஆண்டின்  சாபெர் C31 புரட்சிகரமான யோசனையுடன் சென்ற ஆண்டின் சாபெர் C30 காரின் தவறுகள் நீக்கப்பட்ட வடிவமைப்பு என்கிறார் .


முக்கியமாக காரின் பின்புற அமைப்பு புதிய யோசனைகளின் விளைவு என்கிறார் .அதே போல புதிய விதியின் அடிப்படையில் வடிவமைக்க பட்ட நோஸ் பகுதி மிக சிறப்பாக உள்ளதாக கருதுகிறது அந்த அணியின் எஞ்சினியரிங் குழு .
முன்பகுதி சஷ்பென்சன் அமைப்பு பாரம்பரியமாகவும் அதே சமயம் சவாலாகவும் இருக்கும் .பின்பகுதி சஷ்பென்சன் புல் ராடு முன்பகுதியில் நீண்ட அமைப்பில் அதிர்சிகளை குறைக்கும்விதமாக வடிவமைக்கபட்டுள்ளதாக சொல்கிறார்கள் .அதுமட்டுமல்ல சைடு போட்ஸ் (  Sidepods ) அமைப்பில் உள்ள திருத்தங்கள் பின்புற அமைப்பையும் , காற்றியக்கவியலின் தன்மையையும் முனேற்றம் அடைய செய்துள்ளது .இந்தமுறை பெர்ரரியின் எஞ்சின் நீளவாக்கில் உருவாக்கப்பட்ட டிரான்ஸ் மிசன் மௌண்டடு கார்பன் போல்ட்கள் மிக நேர்த்தியான இறுக்கமான அமைப்பாக செயல்படும் என்கிறார்கள் .
இருந்தாலும் இன்னும் சில மாற்றங்கள் மார்ச் 18 ரேஸ் வரை எதிர்பார்க்க படுகிறது .


டிரைவர்கள் .

சாபெர் அணியும் நமது சஹாரா போர்ஸ் இந்திய அணிபோல தன் நாட்டு டிரைவர்களுக்கு வாய்ப்பே அளிக்காத அணி . சென்ற ஆண்டில் ஜப்பானின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் - Kamui Kobayashi .இவருக்கு அவரின தேசத்தில் தொடங்கிய டோயோட்டோ அணி (2002 முதல் 2009 வரை செயல் பட்டது ) அவருக்கு முதல் வாய்ப்பை 2009 ஆம் ஆண்டு கொடுத்தது .அடுத்து சாபர் அணியில் கடந்த இரண்டு ஆண்டுகள் இருக்கிறார் கடந்த ஆண்டு 30 புள்ளிகளை பெற்று தந்தார் ,


சென்ற ஆண்டில் அடியெடுத்து வைத்த -  மெக்சிகன் டிரைவர் Sergio Pérez Mendoza ,14 புள்ளிகளையும் பெற்று ஏழாம் இடத்தை பெற்று தந்தனர் .இந்தவருடமும் அவர்களே களம் இறங்குகிறார்கள .அவர்களுடன்இன்னொரு மெக்சிகன் டிரைவர் Esteban Gutiérrez ரிசர்வ் டிரைவராக இணைந்துள்ளார்
சுவிட்சர்லாந்து மக்கள் ஒரு நீண்ட அனுபவமுள்ள அணியிடம் மிகவும் எதிர்பார்கிறார்கள் என்பதை அவர்களின் வரவேற்ப்பு சொல்கிறது .
.

அந்த நம்பிக்கை , அந்த அணியின் மானசீக வெற்றிக்கு முன்னுரையாக அமைய வாழ்த்துவோமே !