உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, May 26, 2012

அழகிய ஆபத்து - மொனாகோ ரேஸ் !


சிறிய அழகான
உலகின் இரண்டாவது சிறிய அழகான மொனாகோ நாடு பல அபூர்வமான சரித்திர பின்னணி கொண்டது .பார்க்க ( http://f1inindia.blogspot.in/2011/06/bmw-sauber-segio-perez.html ) மொனாகோ நகர் பார்முலா 1 போட்டி மறக்க முடியாத அனுபவங்களை ஒவ்வொரு  டிரைவருக்கும் ஏற்படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் .உலகின் பழமை வாய்ந்த இத்தாலியின் மோன்சா (Autodromo Nazionale Monza) களத்திற்கு அடுத்தபடியாக பழமையான இந்த களம் முழுக்க முழுக்க மக்கள் பயன்படுத்தும் சாலையில் ( Street Circuit ) நடைபெறும் போட்டியாகும் .

 மறுபரிசீலினை 


இங்கு நடைபெறும் போட்டியை டிரைவர்கள் சவாலாக கருதினாலும் ரேஸ் ஆர்வலர்களுக்கு உற்சாகம் தந்தாலும் இங்கு நடைபெறும் போட்டி மிக ஆபத்தான பத்தொன்பது வளைவுகளை ( Turns) கொண்டு இருப்பதுவும் அதிலும்  மிக  குறுகிய 5,6,7,8,10,11,15,16 போன்ற அடுத்தடுத்த வளைவுகள் மிக ஆபத்தானதாகும் .பார்முலா 1 போட்டியின் டிரைவர்களை பற்றி எத்தனைதான் தனிப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும் இங்கு நடைபெறும் போட்டி அவர்களை பணயம் வைத்து நடைபெறுவதால் இங்கு நடைபெறும் போட்டிகளை பார்ப்பவர்கள் அந்த அபிமானத்தை மறுபரிசீலினை செய்வார்கள் !

பயிற்சி போட்டிகள் 
கடந்த வியாழனன்று நடந்த முதல் பயிற்சி போட்டியில் பெர்ரரியின் பெர்னாண்டோ அலோன்சா முதலிடம் முதலிடம் வந்தார் .
அதே நாளின் இரண்டாவது பயிற்சி போட்டியில் மெக்ளறேன் மெர்சடிஷின் ஜென்சன் பட்டன் வந்தார் .
சனிகிழமை மூன்றாவது பயிற்சி போட்டியில் மெர்சீடிஷின் நிக்கோ ரோஷ்பெர்க் .


தகுதி சுற்றில் ...
அதே சனிகிழமை நடந்த ( Q1 ) முதல் தகுதி தலைவிதியை நிர்ணயிக்கும் சுற்றில் மிக வித்தியாசமாக சகாரா போர்ஸ் இந்திய அணியின் நிகோ  ஹுல்கேன்பேர்க் ( Nico Hulkenberg ) மிக குறைந்த நேரமான 1:15.418 ல் கடந்து + (107%) 0:5.279 =  1:20.697 நிர்ணயித்தார் 
( Q 2) இரண்டாவது த.சுற்றில் வில்லியம்ஸ் ரெனால்ட்டின் - பாஸ்டர் மல்டோனடோ 1:15.026 ல் கடந்து அசத்த இறுதி ( Q 3 ) ல்  மெர்சீடிஷின் - மைகேல் ஷுமேக்கர் 1:14.301 ல் கடந்து அதை விடவும் அசத்தினார் .ஆனால் ஷூமேக்கரின் துரதிருஷ்டம் வழக்கம் போல தொடர்வதால் கடந்த போட்டியில் ஏற்படுத்திய விபத்து காரணமாக ஐந்து இடம் பின்னுக்கு தள்ளி ஆறாவது இடத்தில் போட்டியை எதிர்கொள்வார் .எனவே அந்த வாய்ப்பு அவருக்கு அடுத்து வந்தரெட்புல் ரெனால்ட்டின் - மார்க்க வெப்பருக்கு வழங்க பட்டு இருக்கிறது .
இரண்டாவது இடம்  மெர்சீடிஷின் நிக்கோ ரோஷ்பெர்க் .மூன்றில்  மெக்ளறேன் மெர்சடிஷின் - லீவிஸ் ஹேமில்டன்.

 அழகிகள் மிக பிரபலம் .


நாளை மாலை வழக்கம்போல 5:30 க்கு ரேஸ் நடக்க இருக்கிறது .மொத்தம் .07 சதுர மைல் அளவேயுள்ள மொனோகோ நகரின் அழகை ஒருமணிநேரத்திற்கு முன் காண முயற்சிப்போம் .அதை விட சூதாட்டத்திற்கு புகழ்பெற்ற மொனோகோ நகரின் பார்முலா 1களத்தின் அழகிகள் மிக பிரபலம் ! .

Saturday, May 12, 2012

முகாலே பயிற்சி கைகொடுக்குமா ?




கடந்த 28 ஏப்ரல் மாதம் சந்தித்தது .இப்போதுதான் மீண்டும் சந்திக்கிறோம் .நாளை ஸ்பெயின் நாட்டின் Circuit de Catalunya வில் பார்முலா 1 ன் இருபது போட்டிகளில் ஐந்தாவது போட்டி நடக்க இருக்கிறது .இந்த போட்டியில் பார்க்கும் ரசிகர்களுக்கு ஏற்படவிருக்கும் உற்சாகத்தை விடவும் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு அதிகம் இருக்கும் .




காரணம் ?
 கடந்த மே மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மூன்றாம் தேதிவரை இத்தாலியில் பெர்ராரி அணிக்கு சொந்தமான  Autodromo Internazionale del Mugello ட்ராக்கில் புதிய டிரைவர்களின் வளர்ச்சிக்காகவும்,சமீபத்திய தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கு மிகவும் பிரச்சனையாக உள்ள பைரெல்லி (Pirell) டயர் கம்பெனி தயாரிப்புகளுக்கு ஒரு சோதனை களமாக இன்னும்பல முக்கிய காரணங்களுக்காகவும் கட்டாயமில்லாத ஒரு அழைப்பு FIA மூலம் அறிவுறுத்தப்பட்டது .அதன்படி பனிரெண்டு அணிகளில் பதினோரு அணிகளும் கலந்துகொண்டு பல அனுபவங்களை பெற்றன .ஆனால் அதில் நம் நாராயன் கார்த்திகேயன் இருக்கும் Hispania Racing F1 Team (HRT) தன்னுடைய தலைமை அலுவலகத்தை இடம் மாற்றம் செய்வதனால் இந்த பயிற்சி போட்டியில் கலந்து கொள்ளவில்லை .



பயிற்சி போட்டி 
வெள்ளிகிழமை நடந்த பயிற்சி போட்டியில் பெர்ரரியின் பெர்னாண்டோ அலோன்சா முதலில் வந்தார் அன்று நடந்த அடுத்த போட்டியில் மெக்ளரனின் ஜென்சன் பட்டன் வந்தார் .சனிகிழமை முதல் மூன்றாம் பயிற்சி போட்டியில் ரெட்புல்லின் செபாஸ்டியன் வெட்டல் .


தகுதி போட்டி 
(Q 1 ) முதல் தகுதி சுற்றில் இந்தமுறை 107 % நிர்ணயம் செய்தவர் மெக்லரண் மெர்சிடிசின் ஜென்சன் பட்டன் .இவரின் நேரம் 1:22.583 +(107%) 0:5.780 = 1:28.363 .இந்த முறை இந்த நேர நிர்ணய சட்டத்தில் தகுதி  இழந்த ஒருவர் நம் நாராயண் கார்த்திகேயன் என்பது வருந்ததக்கது - அவரின நேரம் 1:31.122 
(Q 2 ) வில்லியம்ஸ் அணியின் - பாஸ்டர்  மல்டோனடோ 1:22.105 


(Q 3 ) இறுதியில் 1:21.707 நேரத்தில் மீண்டும் ஜென்சன் பட்டன்  முதலிடத்தை பிடித்து ,  மெக்லரண் மெர்சிடிசின் 150 ஆவது pole position சாதனையை செய்தார் அடுத்து இரண்டாம் இடம் வில்லியம்ஸ் அணியின் - பாஸ்டர்  மல்டோனடோ .மூன்றாம் இடம் முகாலே டெஸ்டில் விபத்தில் சிறு காயங்களுடன் தப்பிய பெராரியின் பெர்னாண்டோ அலோன்சா .



நாளை மாலை இந்தியா நேரப்படி 5:30 க்கு போட்டி ஆரம்பிக்கும் .ஆனால் வழக்கம்போல குளிரும் ஸ்பெயின் நாட்டின் அழகை ரசிக்க 4:30 க்கு ஆஜராகி விடுங்கள் .