உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Friday, June 29, 2012

F1 in India: வேகம் எனும் மொழி: ஸ்பெயின் நாட்டு கோப்பை ஸ்பானிஷ் வீரர் பெர்னாண்டோ ஆலோன்சாவுக்கே

F1 in India: வேகம் எனும் மொழி: ஸ்பெயின் நாட்டு கோப்பை ஸ்பானிஷ் வீரர் பெர்னாண்டோ ஆலோன்சாவுக்கே

ஸ்பெயின் நாட்டு கோப்பை ஸ்பானிஷ் வீரர் பெர்னாண்டோ ஆலோன்சாவுக்கே


கடந்த 24 ,ஜூன் மாதம் ஞாயிற்று கிழமை ஸ்பெயின் நாட்டின் - Valencia Street Circuit ல் நடந்தது .இந்த போட்டி மிக விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் ரசிகர்களுக்கு மட்டுமல்ல பார்முலா 1 ஆர்வலர்களையுமே ஈர்த்திருக்கிறது .இதுவரை நடந்த பார்முலா1  சரித்திரங்களில் முதல் ஏழு போட்டிகளில் ஏழு விதமான டிரைவர்கள் வந்தது கிடையாது .


எனவே போட்டியில் விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சம் இருக்காது என சத்தியமே பண்ணலாம் .அதுமட்டுமல்ல யார் வெற்றிபெறுவார்கள் என்ற ஆர்வத்தை மீறி யாரெல்லாம் தகுதி சுற்று வருவார்கள் ,யார்  போட்டியை வெல்வது என்பதுவரை சூதாட்டம் கொடிகட்டி பறக்கிறது -  களத்திற்கு வெளியே .எனவே போட்டியின் மேல் உள்ள ஆர்வம் மேலும் உச்சம் தொடலாம் ..

போட்டியை பார்ப்போம். 


முதல் சுற்று ...
எந்த பிரச்சனையும் இல்லை ரெட்புல் -  வெட்டல் சிட்டாய் பறந்தார் அவரை தொடர்ந்து மெக்கலரனின் - லீவிஸ் ஹெமில்டனும் தொடர்ந்தார் .ஆனால் மூன்றாம் இடத்து பாஸ்டர் மல்டோனடோ பின்னுக்கு முந்தமுடியாமல் வேகம் குறைய ,அதை பயன்படுத்தி கொண்ட லோட்டஷின் - ரோமின் க்ரோஷ்ஜியன் அந்த இடத்தை பிடித்து தொடர்ந்தார் ..எந்த அசம்பாவிதமும் இல்லாத முதல் வளைவை 23 கார்களும் சந்தித்தன ..ஆனால் கார்களின் தொடங்கிய இடத்தில் நிறைய வித்தியாசங்கள்
ஆறாம் இடத்தில் தொடங்கிய இடத்தை நழுவவிட்ட, மேர்சடிசீன் நிக்கோ ரோஷ்பெர்க் பதினோராம் இடத்தில் தொடர ..
ஒன்பதாம் இடத்தில் தொடங்கிய மேக்லரனின் - ஜென்சன் பட்டன் பதிமூன்றாவது இடத்தை தொடர ..
பதினோராம் இடத்தில தொடங்கிய பெர்ரார்யின் - பெர்னாண்டோ அலோன்சா மின்னல் வேகத்தில் ஏழாம்  இடத்துக்கு முன்னேறிக்கொண்டு இருந்தார் முன்வரிசையில் பதட்டம் அதிகரித்தது

இரண்டாவது சுற்று ..
நான்காம் இடத்து ரோமின் க்ரோஷ்ஜியன் இப்போது மூன்றாம் இடத்தில .

எட்டாவது சுற்று ..
வெட்டல் தனக்கும் இரண்டாவது வந்துகொண்டு இருந்த ஹெமிலடனுக்கும் இடையேயுள்ள நேர வித்தியாசத்தை எட்டு வினாடிகளுக்கும் மேல் அதிகரித்தாலும் மேலும் அதிகரிக்கும் நோக்கில் செயல்படுவது தெரிந்தது .கனடாவில் நடந்த தவறை ஒருபோதும் மறக்க முடியாதல்லாவா ?
 இப்போதைய முதல் பத்து இடத்தின் வேக நாயகர்கள் பட்டியல் ..
1.வெட்டல் ,2.ஹெமிலடன் ,3.க்ரோஷ்ஜியன் ,4.கோபயாஷி .5.மல்டோனடோ ,6.  ரைகொணன்,7.ஹுல்கேன்பேர்க்,8.அலோன்சா ,9.டி ரேஷ்டா ,10.மாசா .

பத்தாவது சுற்று ..
மிக அதிக நேரம் இரண்டாம் இடத்து ஹெமில்டனை பின்னுக்கு தள்ளும் முயற்சியில் துரத்தி கொண்டு இருந்த க்ரோஷ்ஜியன் பனிரெண்டாவது வளைவில் போராடி பதிமூன்றாம் வளைவின் வேகம் குறைக்கும் இடத்தில் முந்திவிட்டார் .

பதினொன்றாவது சுற்று ...
ஜென்சன் பட்டன் டயர் மாற்ற பிட் லேன் வர அவரை தொடர்ந்து செர்ஜியோ பெரஸ் ..

பதினான்காவது சுற்று ..
க்ரோஷ்ஜியன் -வெட்டல் இடைவெளி 12 வினாடிகளையும் தாண்டியது .இந்த இடத்தில் ஏதாவது செய்யவேண்டும் என நினைத்த மூன்றாம் இடத்து ஹெமில்டன் இன்டெர் மீடியம் டயர் மாற்ற வந்தார்
அலோன்சா - ஹுல்கேன்பேர்க்,போராட்டம் முடிவுக்கு வந்தது ஏழாம் இடம் இப்போது அலோன்சாவுக்கு .
ரைகொணன் ஆறாம் இடத்தை விட்டு தாண்டி ஐந்தாம் இடத்து .மல்டோனடோவை பின்னுக்கு தள்ள ..

பதினாறாம் சுற்று ...
அலோன்சா இந்தமுறை சாப்ட் டயரை தேர்வு செய்ய அடுத்து ,வந்த வெட்டலும் சாப்ட் டயரை தேவு செய்ய மீண்டும் எதோ திட்டமிருந்தது இரண்டு அணிகளிடமும் ,ரெட்புல் தன்னுடைய இடத்தை தக்கவைத்துக்கொள்ள மற்ற அணிகளின் டயர் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து கொண்டு இருந்தது .தவறே இல்லாத இடத்தை நோக்கி ரெட்புல்லின் திட்டம் ..

பதினெட்டு ..
டயர் மாற்றிவந்த அலோன்சா பத்தாம் இடம் ஒன்பதாம் இடம் ,எட்டாம் இடம் என முன்னேறி ஏழாம் இடத்து சென்னாவை தாண்டி ஆறாம் இடத்து மைகேல் ஷுமேக்கரை நெருங்க ,நான்காவது வளைவுவரை தாக்கு பிடித்த ஷுமேக்கர் வேறுவழியில்லாமல் அலோன்சாவை மோதுவது போல பயமுறுத்தி வழி விடவைக்கப்பட்டார் .இப்போது ஆறாம் இடம் அலோன்சா - டயர் மாற்றம் வேலை செய்தது .இருபது ..
சென்னாவும் - கொபயாஷியும் உரசி கொள்ள சென்னா கார் ஒரு சுற்று சுற்ற முன்பக்க விங் முழுவதுமாக சேதம் .அதுவும் டயரும்  மாற்றப்பட்டது
இப்போது கார்களின் நிலை
1.வெட்டல், 2.க்ரோஷ்ஜியன் ,3. ஹெமில்டன் ,4. அலோன்சோ ,5. டி ரெஷ்ட ,6. ரைக்கோனென் ,7. மல்டோனடோ , 8.மாசா, 9.ஹுல்கேன்பேர்க் ,10. பட்டன் .

இருபத்தி நான்காவது ...
இப்போதுவரை ஒருமுக்கியமான விஷயம் போர்ஸ் இந்திய அணியின் டி  ரெஸ்டா இப்போதுதான் முதன்முறையாக டயர் மாற்றுகிறார் ஐந்தாம் இடத்தை இழக்க விரும்பவில்லையோ ?இருபத்தி எட்டு ..
இப்போது க்ரோஷ்ஜியன் -வெட்டல் இடைவெளி 20 வினாடிகள் .போட்டியில்லாமல் பறந்துகொண்டு இருந்தார் வெட்டல் .
ஹெயக்கி கோவலைனன் - டோரோ ரோஷோவின் வெர்ஜினுடன் மோதல் . கோவலைனன் காரின் முன்புற இடத்து டயரும் - வெர்ஜின் இடத்து பின்புற டயரும் பஞ்சர் .களத்தின் எல்லா பகுதியிலும் டயரின் பதிவுகள் மட்டுமே இருந்தது .ஆனால் இப்போது டயரின் துண்டுகள் சிதறி கிடக்க , நிலைமையை சரிசெய்ய Safty Car வந்தது இந்த மோதலில் டோரோ ரோஷோவின் கார் போட்டியிலிருந்து வெளியேறியது .29 ஆவது முதல் - 33 ஆவது சுற்று ...
இந்த ஐந்து சுற்றுக்களும் Safty Car காரின் தலைமையில் இயக்கம் பெற்றாலும் 19 ஆம் நிலையிலிருந்து 23 ஆம் நிலை வரை உள்ள கார்கள் Safty காரை முந்தி செல்லலாம் என நியதி இருந்ததால் மேலும் கள சுத்தம் நடக்கும் காலம் நீடிக்கும் என அறிந்த முதல் வரிசை கார்கள் டயர் மாற்றத்திற்கு பயனபடுத்திக்கொண்டன .

 Adrian Newey (Red Bull )
இப்போது காமிராவின் பார்வை ரெட்புல்லின் கள என்ஜீனியரின் கால் பகுதியை காட்டியது .அங்கு ஒருவித டென்சன் அணியின் தலைமை நுட்பவியாளர் Christian Horner அணிந்திருந்த கேன்வாஷில் தொற்றிக்கொண்டு இருந்தது .காரணம் 29 சுற்றுக்கள் வரை இந்த களத்தின் வெற்றி ரெட்புல் அணியிடம் இருந்தது .ஆனால் இப்போது மிக சில வினாடிகள் வித்தியாசத்தில் அனைத்து கார்களும் ஒன்றாக  அணி வகுத்துள்ளது .இது ஒரு விதத்தில் போட்டி ஆரம்பத்திலிருந்து தொடங்குவதற்கு சமம் .அது மட்டுமல்ல 19 ஆம் இடத்திலிருந்த மார்க் வெப்பர்11ல்  இடத்திலிருந்த அலோன்சா ,12 ஆம் இடத்து ஷூமேக்கர் ,என பலரும் முதல் பத்து இடத்திற்குள் முன்னணியில் இருக்கிறார்கள் .மேலும் அலோன்சா வெப்பர் ,ரைகொணன் மிகவும் மோசமான எழுச்சியில் இருப்பது கவலையை தரத்தானே செய்யும் .


முப்பத்தி நான்காவது சுற்று ..
இப்போது Safety கார் களத்தை விட்டு வெளியேற முன்னணிக்கு சகல கார்களும் பாய்ந்து செல்ல முயற்சிக்க ,அலோன்சா வெறித்தனமான ஒரு வேகம்.மூன்றாம் இடத்து ஹெமிலடன் இரண்டாம் இடத்து க்ரோஷ்ஜியன் முதல் இடத்து வெட்டல் ...ஆம் ஒரே பாய்ச்சல் இப்போது ரேஸ் லீடர் - பெர்ரரியின் அலோன்சா .பெர்ராரியின் ரசிகர்கள் மத்தியில் ஒரே கொண்டாட்டம் வெடித்தது ..
பின்வரிசையில் அதே ஆலோன்சாவின் சகா மாசாவும் - கோபயாஷியும் வீல் டு வீல் உரசி மாசாவின் கார் டயர் பஞ்சர் .


முப்பத்தி ஐந்து ..
என்ன நடந்தது என்று உணரும் முன் வேறு அதிர்ச்சி காத்திருந்தது ..முதலிடத்து வெட்டல் கார் முற்றிலுமாக களத்தின் ஓர பகுதிக்கு சென்றது ..( ஒருவேளை Christian Horner உள்ளுணர்வு இதைத்தான் சொல்லியிருக்குமோ ?) ரெனால்ட் எஞ்சினால் வழங்கப்பட்ட - ஆல்டர் நேட்டர் மிகவு வெப்பமாகி என்ஜினை செயலிழக்க செய்து விட்டது .


காரை விட்ட வெளியேறிய வெட்டலின் கையுறையை கழற்றி வீசினார் .வெற்றியை உள்ளங்கையில் வைத்திருந்து அதை தவறவிட்ட ஆதங்கம் .. அங்கு ஒரு இறுக்கம் அழுத்தியது

நான்காம்  இடத்திலிருந்த ஹெமிலடன் ,ரைகொணனை பின்னுக்கு தள்ளி முன்னேறினார் .
இப்போது வேக நாயகர்களின் அணிவரிசை ..
1.அலோன்சா ,2.க்ரோஷ்ஜியன் ,3.ஹேமில்டன் ,4.ரைகொணன் ,5.டிக்கார்டியோ,6.ஷூமேக்கர் ,7.வெப்பர் ,8.மல்டோனடோ ,9.ஹுல்கேன்பேர்க் ,10.டி ரேஷ்டா .

முப்பத்தி எட்டு ...
ஆலோன்சாவிர்க்கும் அவரை தொடரும் க்ரோஷ்ஜியன் இடைவெளி ஒரு வினாடி .அடுத்துள்ள ஹெமில்டனுக்கும் க்ரோஷ்ஜியன் உள்ள வித்தியாசம் இரண்டு வினாடி .இன்னும் 19 சுற்றுக்கள் இருப்பது மீதம் இருக்கும் நிலையில் வேறு நிகழ்வுக்கு வாய்ப்பு இருக்கலாம் .
கடந்த மூன்று வளைவுகளில் வெப்பர் நான்கு இடத்திற்கு பின்தங்கினார் .


நாற்பத்தி ஒன்று ..
க்ரோஷ்ஜியன் மிக அதிகமான நெருக்கத்துடன் அலோன்சாவை நெருங்க அதற்கு பதிலடியாக செயல்பட தொடங்கினார் அலோன்சா ..
ஆனால் என்ன ஆனது க்ரோஷ்ஜியன் காருக்கு ?
 மெல்ல களத்தின் ஓரத்தில் தஞ்சமடைந்தது .கைகளை வேகமாக அசைத்துக்கொண்டு காரை விட்டு இறங்கினார் .அதே ரெனால்ட் ஆல்டர் நேட்டர் பிரச்சனை .கொஞ்சம் வித்தியாசம் இங்கு எரிபொருள் அழுத்தம் இல்லாமல் போனது .ஆனால் இடம் ஒன்றுதான் - ஆல்டர் நேட்டர்.
இப்போது க்ரோஷ்ஜியன் 2 ஆம் இடம் - ஹெமில்டனுக்கு தானாக வந்தது .

நாற்ப்பத்தி எட்டு ..
கேட்டர்ஹாம் அணியின் - விதாலி பெட்ரோவும் - டோரோ ரோசொவின் ரிக்கர்டியோவும் மோதி கொண்டதில் பெட்ரோவின் காரில் முன்பகுதி Wing காணாமல் போனது .விபத்து FIA - Stewart விசாரணைக்கு போனது - நீதிபதி -Mika Salo தீர்ப்பை தயார் செய்துகொண்டு இருந்தார்
அலோன்சா இப்போது ஹெமில்ட்டனை விட நான்கு வினாடிகள் வித்தியாசத்தில் அவர் இடத்தை தக்கவைத்துக்கொண்டு இருந்தார் .

ஐம்பத்தி ஒன்றாவது சுற்று ..
அலோன்சாவை ஹேமில்டன் துரத்த ,ஹெமில்டனை மூன்றாம் இடத்து ரெய்கொணன் துரத்த ஐந்து வினாடிகள் வித்தியாசத்துக்குள் மூன்றுகாரின் வேக யுத்தம் வெப்பத்தை களத்தின் அதிகரித்தது .எட்டாம் இடத்தில் இருந்த மைக்கேல் ஷுமேக்கரின் டிரைவிங்கில் நிறைய பொறுமை மற்றும் வேகமும்  இருத்தது .(ஆமாம் மைக்கேல் நாங்கள் உங்களை போடியத்தில் பார்க்கவேண்டும் Go , go ).

ஐம்பத்தி மூன்று ..
 மைக்கேல் ஷுமேக்கர் - இப்போது ஒரு இடம் முன்னேறி ஏழாம் இடம் தொடர ..அவரை தொடரும் மார்க் வெப்பரும் , போர்ஸ் இந்திய டி -ரெஷ்டாவும் எப்போது பின் விளைவை ஏற்படுத்தி விடுவார்களோ என்ற பயம் .நம்மை கவ்வுகிறது (எல்லாம் சும்மா இருந்தாலும் ஷுமேக்கருக்கு எந்த பிரச்சனை எங்கிருந்து வருகிறது என்று நீதிபதி -Mika Salo வுக்கு கூட தெரியாது .)

ஐம்பத்தி நான்கு...
அலோன்சா - ஹேமில்டன் போக்கில் எந்த மாற்றமும் இல்லை ..ஆனால் ரெய்கொணன் போக்கில் இரண்டாம் இடம் குறிக்கோளாய் இருந்தது .ஒவ்வொரு வளைவிலும் அந்த முயற்சியை முறியடித்தார் ஹேமில்டன் .ஆனால் ஒரு வினாடி இடைவெளி எதையும் நடத்தும் .
போர்ஸ் இந்தியாவின் டி ரேஷ்டா ஒருமுறை டயர் மாற்றியது மட்டுமே .மிச்சம் பண்ணும் நோக்கமில்லை .இடம் பறிபோய்விடும் என்பதால் ! ( அவருக்கு தெரியும் இந்தியா ஏழை நாடுதான் ஆனால் இந்தியர்கள் பணக்காரர்கள் என்று )

ஐம்பத்தி ஐந்து ..
களத்தின் கடைசி வளைவு அதாவது இருபத்தி ஐந்தாவது குறுகிய வளைவு நினைத்ததை சாதிக்கரெய்கொணன் பயன்படுத்த முயற்சிக்க ,ஹேமில்டன் அதை விடாமல் தடுக்க வளைவின் முடிவில் தடுக்க வேறு வழியே இல்லாத-  ரெய்கொணன் , ஹேமில்ட்டன் காரின் பின்பக்க டயரில் மோதிவிட அதனால் களத்தின் பக்கசுவரில் மோதி விபத்துக்கு உட்பட்டது .ஹெமில்டனின் இரண்டாம் இடத்து ஆசை அல்லது போராட்டம் ரேசிளிருந்து வெளியேற்றிவிட்டது !


ஐம்பத்தி ஆறு ..
இந்த விபத்தின் அலை ஓய்வதற்குள் ,மல்டோனடோ கார் ஹேமில்டன் காரில் மோதி மேலும் ஓர சுவரில் தள்ள ,மேலும் வெறுப்பான ஹேமில்டன் கோபத்தில் உச்சத்தில் சுமார் $ 2000 மதிப்புள்ள ஸ்டீயரிங்கை கழற்றி சுவர் பக்கம் வீசினார் .
இப்போது நான்காம் இடத்து போர்ஸ் இந்தியாவின் -நிகோ ஹுல்கேன்பேர்க்கை, மைக்கேல் ஷுமேக்கரின் கார் சட்டென முந்தியது இந்த நிலையில் மஞ்சள் கொடியசைக்க ரெட்புல்லின் வெப்பர் பின்தங்க வேண்டியாதாக ...ஷூமேக்கர் மூன்றாம் இடத்தை பிடித்தார் .

ஐம்பத்தி ஏழாவது கடைசி சுற்று ...
முதல் இடம் ..

ரெட்புல்லின் பெர்னாண்டோ அலோன்சா.வெற்றிக்கோட்டை தொட்டார் .இதுவரை ஏழு போட்டிகளில் ஏழு வீரர்கள் என்ற புதிய சாதனைக்கு முற்றுபுள்ளி வாங்க வைத்தார் ,இந்த ஆண்டில் இரண்டாவது முதல் இடம் ஆலோன்சாவினுடயது ( 5-1-9-7-2-3-5-1).உற்சாகமிகுதியில் களத்தை விட்டு வெளியேறாத அலோன்சா.தன் நாட்டின் ஸ்பானிஷ் கோடியை களத்தில் விரித்துவைத்து ரசிகர்களை நோக்கி ஆராவாரித்து கொண்டாடினார்.கோப்பையை பெற்றுக்கொள்ள அவர் போகாததால் Medical Car அவரை போட்டி நடத்தும் இடத்திற்கு அழைத்து செல்லும் நிலை ஏற்பட்டது .கோப்பை பெரும்முன் தேசிய கீதம் ஒலிக்கும்போது கண்களில் நீர் வழிய ஆரம்பித்து விட்டது ( எதிர்பாராத வெற்றி என்பதை விட 11 ஆம் இடத்தில் தொடங்கி முதல் இடத்தில் முடித்த உற்சாகம் !)

இரண்டாவது இடம்
கிமி ரைகொணன் மூன்றாவது முறையாக போடியம் வருகிறார் கிமி ரைகொணனும் , க்ரோச்ஜீயனும் அணியை மூன்றாவது இடத்திற்கு கொண்டு வந்திருப்பது லோட்டஸ் அணிக்கு பெருமை .அது மட்டுமல்ல இன்னும் பனிரெண்டு போட்டிகள் மீதம் இருக்கிறது .


மீண்டும் வருவேன் ... .என்கிறாரோ ?  அல்லது மீண்டு வந்து விட்டேன் என்கிறாரா ?
மூன்றாவது இடம் .
மைக்கேல் ஷுமேக்கர் .எத்தனை நாட்கள் ஆகிவிட்டது ? அல்ல எத்தனை ஆண்டுகள் 2006 பார்த்தது .43 வயதிலும் சிங்கம் ,சிங்கம்தானே ! வாழ்த்துக்கள் சுமி .

படத்தில் வரும் எல்லோரை பற்றியும் உடனே பேசி விடுகிறோம் .ஆனால் இவரை பற்றி எல்லோரும் பேசிவருகிறார்கள் .இந்த ஆண்டின் பார்முலா 1 சாம்பியன் யாராக வருவார் என இப்போது பேசிக்கொண்டு இருகிறார்களோ அவரோடு இவர் இருப்பார் .தேடுவோமே ?Saturday, June 23, 2012

மரியாதைக்குரிய பெயர் - European Grand Prix
நம் பார்முலாவின் அடுத்த வேக யுத்தம் ஐரோப்பிய கண்டத்தின் ஸ்பெயின் நாட்டிலுள்ள - Valencia Street Circuit ல் வரும் ஞாயிறு மாலை இந்தியா நேரப்படி 5:30 க்கு நடக்க இருக்கிறது .பொதுவாக ஸ்பெயின் நாட்டில் ஒரு பார்முலா ரேஸ் நடந்தால் அதர்க்கு பெயர் ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ் என்று அழைப்பார்கள் .இந்தியாவில் நடந்தால் இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் ( களத்திற்கு ஒவ்வொரு நாட்டிலும் தனிப்பெயர் உண்டு அது வேறு விஷயம் ) ஆனால் நாளை இங்கு நடக்கும் இந்த ரேஸ் ஐரோப்பியன் கிராண்ட் பிரிக்ஸ்( European Grand Prix ) என மரியாதைக்குரிய தலைப்புடன் அழைப்பதன் காரணம்ஒரு வரலாற்று பின்னனி கொண்டது .
 ஐரோப்பிய கண்டத்தில் முதன்முதலாக கடந்த 1923 ஆம் ஆண்டில் மோன்சா நகரில் உள்ள Autodromo Nazionale Monza களத்தில் இப்போது FIA - Fédération Internationale de l'Automobile என்ற தன்னார்வ அமைப்பிற்கு முன்னோடியான Association Internationale des Automobile Clubs Reconnus (AIACR) அமைப்பு இங்கு முதல் போட்டியை நடத்தியது.


இவ்வாறு 1928 வரை நடந்தது .பிறகு இதுவே இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ் , மற்றும் அது பிரஞ்சு கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ் தொடர்ந்தது( இதற்க்கு 1929 ல் போட்டி நடக்கவில்லை ). மீண்டும் 1930 மீண்டும் பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ்.இந்த தொடரை இரண்டாம் உலகப்போர் ( 1939 - 1945 ) பாதிப்பு தொடர முடியாமல் துண்டித்தது .மீண்டும் இப்போது இருக்கும் பெயரே FIA மூலம் 1947 -  1977 வரை புத்துயிர் பெற்ற இந்த பெயர் பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ் ,பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் என்ற மரியாதைக்குரிய பெயருடன் அங்கும் போட்டிகள் நடந்தது அதர்க்கு இடையில் மேலும் பல ஐரோப்பிய நாடுகள் இந்த பெயரை பயன்படுத்திகொண்டது .இதில் இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ் அதிக பட்சமாக எழுமுறை நடத்தி இருக்கிறது .
அடுத்து மீண்டும் பல பெயருடன் 1983 லிருந்து 2011 ஆம் ஆண்டு வரை ,இந்த பெயர் ஐரோப்பிய நாடுகளான Brands Hatch (2),Nürburg  (12) Donington (1), Jerez  (2) Valencia  (4) இந்த பெயரில் 21 முறை நடந்துள்ளது .அதிலும் இந்த போட்டி அந்தந்த நாடுகளில் அதே ஆண்டில் தேசிய கிராண்ட் பிரிக்ஸ் வைத்திருக்கும் ஒரு நாட்டில் நடைபெறும்.எனவேதான் இந்த ஆண்டில் ஸ்பெயின் நாட்டில் -Circuit de Catalunya களத்தில் F1 ன் ஐந்தாவது சுற்று நடந்ததை நாம் அறிவோம் .
இதில் ஆசிய கண்டதில் எட்டு போட்டிகளும் ஐரோப்பிய கண்டத்தில் எட்டுபோட்டிகளும்( பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் சேர்த்து ) நடக்கிறது .கனடா ,அமெரிக்கா போன்ற வடக்கு அமெரிக்கா கண்டங்களில்  இரண்டு போட்டியும் தெற்கு அமெரிக்கா கண்டமான பிரேசிலில் ஒரு போட்டியும் நடக்கிறது .இதில் ஸ்பெயின் மக்கள் இரண்டு போட்டியை பார்க்கும் வாய்ப்பை பெற்றவர்கள் .(கதை முடிந்தது )
வலென்சியா சர்க்யூட் ஸ்பெயின் நாட்டில் ஜெர்மன் நாட்டின் களஅமைப்பாளர் - Hermann Tilke கைவண்ணத்தில் உருவானது .மொத்த களத்தின் நீளம்  5.419 கி மீ .இதில் 140 மீட்டர் நீள களம் ஊஞ்சல் பாலத்தில் ( swing bridge ) அமைந்திருப்பது வித்தியாசமான முயற்சி .பாதி களம் ஸ்பெயின் தெருவின் வெளிபுற பகுதியில் அமைந்திருகிறது.மீதி பகுதி பிரத்தியோகமாக போட்டிக்காக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது . களத்தின் 25 வளைவுகளில் 14 இடது புறம் திரும்புமாறும் 11 வலதுபுற திருப்பமுள்ள ( Mixed Turn ) அமைப்பாகும் .57 சுற்றுக்களை கொண்ட களத்தில் இரண்டு DRS ( Drag reduction system)  அமைப்பு இருப்பது சவாலானது .
பயிற்சி போட்டி 
கடந்த வெள்ளிகிழமை மதியம் இ.நே படி 1:30 முதல் 3 மணி வரை நடந்ததில் வில்லியம்ஸ் ரெனல்ட்டின் - பஸ்டர் மல்டோனடோ முதலாவதாக வந்து அசத்தினார் அடுத்து மாலை 5:30 முதல் 6:30 நடந்த இரண்டாவதில் ரெட்புல்லின் சிங்கம் செபாஸ்டியன் வெட்டல் .
இன்று 2:30 முதல் 3:30 வரை நடந்த கடைசி பயிற்சி போட்டியில் மெக்லரண் மேர்சடிசீன் - ஜென்சன் பட்டன் 

தகுதி சுற்று ..
இன்று மாலை 5:30 முதல் 6:30 வரை நடந்த தகுதி சுற்றிலும் வில்லியம்ஸ் ரெனல்ட்டின் - பஸ்டர் மல்டோனடோ முதலாவதாக வந்து அசத்தியதோடு கடந்த நேரம் 1:38.825 + (107% ) 6.917 வினாடிகள் .= 1:45.742 என நிர்ணயம் செய்தார் இதில் போட்டியில் கலந்துகொண்ட எந்த வீரரும் தகுதி நீக்கம் பெறவில்லை ஆனால் மருஷ்ய - காஷ்வோர்தின் திமோ கிலோக் வியாழகிழமை முதல் வயிற்று உபாதையால் அவதிப்பட்டு வந்தார் .ஆனால் பயிற்சி போட்டி அனைத்திலும் கலந்துகொண்டு இருந்தார் ஆனால் மீண்டும் அவரால் தகுதி சுற்றில் கலந்துகொள்ள முடியவில்லை எனவே இந்த போட்டியில் 23 வீரர்கள் மட்டுமே .


மூலம் போட்டிக்கான முதல் மூன்று இடத்திற்கு உரியவர்கள்
ரெட்புல்லின் - செபாஸ்டியன் வெட்டல் முதலிடத்தை பிடித்தார் இரண்டாவது இடத்தை பிடித்தவர் மெக்லரண் மேர்சீடிஷின் கடந்த போட்டியின் எதிபாராத  வெற்றியாளர் லீவிஸ் ஹேமில்டன் அடுத்தவர் வில்லியம்ஸ் ரெனல்ட்டின் - பஸ்டர் மல்டோனடோ


கெட்டதில் ஒரு நல்லது .
நல்லவற்றை நினைக்கலாம் கெட்டதை நினைக்க கூடாது என்பார்கள் .ஆனால் கடந்த 2010 ஆண்டில் இதே வலென்சியா சர்க்யூட்டில் ரெட்புல்லின் மார்க் வெப்பரின் தவறால் நடந்த விபத்தின் மூலம் மிக அதிசயமாக தப்பினார் .அவர் லோட்டஸ் காஷ்வோர்த்தின் - ஹெயக்கி கொவளைணனை முந்த முயற்சி செய்த வீடியோ காட்சியை முடிந்தால் பார்க்கலாம்  http://www.formula1onlive.com/2012/06/video-mark-webbers-terrifying-crash-in.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+2011La  இது கெட்டதில் ஒரு நல்லது .

குடைக்குள் வேகமா ?போட்டியை- ஸ்பெயின் அழகை ரசிக்க மாலை 4:30 க்கு தயாராகுங்கள்

Tuesday, June 19, 2012

கனடாவின் வெற்றி கோப்பையை பறித்தார் - லீவிஸ் ஹெமில்டன்கடந்த ஜூன் 10 ஆம் தேதி கனடாவின் - Circuit Gilles Villeneuve ல் பார்முலா 1 ன்  ஏழாவது சுற்று போட்டி நடந்து முடிந்து விட்டது


பயிற்சி மற்றும் தகுதி போட்டி ..
சனிக்கிழமை நடந்த கடைசி பயிற்சி போட்டி நம் இந்தியா நேரப்படி மாலை 7:30 க்கு நடந்தது .இதில் ரெட்புல்லின் செபாஸ்டியன் வெட்டல் முன்னிலை பெற்றார் .


அடுத்து, இரவு இந்தியா நேரப்படி11:30 க்கு நடந்த தகுதி சுற்றில் 107% நிர்ணயம் செய்தவர் வேறு யாருமல்ல சாட்சாத் நம் செபாஸ்டியன் வெட்டல் .அவர் நிர்ணனயித்த நேரம் 1:14.661 + 05.226 = 1:19.887 .நல்ல வேலை யாரும் இந்த தலையை வாங்கும் நேரத்தால் யாரும் பாதிக்கப்படவில்லை .

முதல் பத்து இடங்களுக்குள் போல நான்காம் இடத்து மார்க் வெப்பரும் , ஜென்சன் பட்டனும், Soft Tyre ஐ பயன்படுத்தி மொத்த சுற்றுக்கள் 70 ல் சுமார் 40 - 50 சுற்றுக்களில் முதல் ஐந்து இடங்களுள் வந்து பிறகு டயர் மாற்றம் செய்யலாம் என கணக்கிட்டார்கள் .ஆனால் Super Soft Tyre  ஐ பயன்படுத்தினால் நல்ல துவக்கம் கிடைக்கும் ஆனால் இன்றைய களத்தின் வெப்பநிலையை கவனித்தில் எடுத்து கொண்டால் விரைவில் டயர் மாற்றும் நிலை வரலாம் ,இதனால் ஏற்ப்படும் நேர இழப்பு தவிர்க்கப்படும் என யோசித்தார்கள் .விளைவு ?


அணி வீரர்களின் வரிசை ..
1 ,ரெட்புல் - செபாஸ்டியன் வெட்டல் 2.மெக்லரண் மெர்சீடிசின் - லீவிஸ் ஹெமில்டன் 3.பெர்ராரியின் - பெர்னாண்டோ அலோன்சா .4.ரெட்புல் - மார்க் வெப்பர் 5.     மெர்சீடிசின் - நிக்கோ ரோஷ்பெர்க் 6.பெர்ராரியின் - பிலிப் மாசா .7. ரோமின் க்ரோஜியன் 8.சகாரா போர்ஸ் இந்தியாவின் - பால்டி ரெஸ்டா 9. மெர்சீடிசின் - மைக்கேல் ஷூமேக்கர் .10.மெக்லரண் மெர்சீடிசின் -ஜென்சன்  பட்டன் .

முதல் சுற்று ...
முதல் காரிலிருந்து இருபத்திநான்கு கார்கள் வரை அனைத்துமே நல்ல துவக்கத்தை கொடுத்தார்கள் .

இரண்டாவது சுற்று ..
பெர்ராரயின் - பிலிப் மாசா ஆறாம் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்துக்கு முன்னேறி  அங்கிருந்த நிகோ ரோஷ்பெர்க்கை பின்னுக்கு தள்ள ,அவரை தொடர்ந்து பால்டி ரெஸ்டா மீண்டும் ரோஷ்பெர்க்கை ஏழாம்  இடத்துக்கு தள்ளினார் .ஊருக்கு இளைத்தவன் (வலிமையில் குறைந்தவன் ) பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல இந்த ஆண்டில் சீனா மற்றும் மொனாக்கோ ரேஸ் தவிர மற்றைய ஐந்து போட்டியிலுமே மெர்சடிஸ் அணி மிக பல பின்னடைவே சந்தித்துள்ளது என்பது சோகமான விஷயம் .

ஆறாவது சுற்று ..
ஐந்தாம் இடத்தில் சென்றுகொண்டு இருந்த பிலிப் மாசாவின் கார் ஒரு சுற்று சுற்றி களத்தை விட்டு வெளியேறி , மீண்டும் சுதாரித்து வருவதற்குள் பனிரெண்டாம் இடம்தான் காத்து இருந்தது ..

இருபதாவது சுற்று ...
அலோன்சா டயர் மாற்றி வரும்போது இரண்டாம் இடத்தை தொடர முயற்சிக்க அதற்குள் அந்த இடம் இப்போது ஹெமில்டன் காருக்கு கிடைத்தது

இருபத்தி இரண்டாவது சுற்று ..
பிரேக் ஷூ பிரச்சனையால் நம் நாராயண் கார்த்திகேயன் போட்டியை விட்டு வெளியேறினார் ..


இருபத்தி நான்காவது சுற்று ..
நமது நாராயண் கார்த்திகேயனின் HRT அணியை சேர்ந்த இன்னொரு டிரைவர் Pedro de la Rosa அதே ப்ரேக் பிரச்சனையால் வெளியேற அந்த அணி சோகத்தை சந்தித்ததுஇருபத்தி ஆறு ..
இப்பொழுது டயர் மாற்றி வந்த வெட்டல் மூன்றாம் இடத்து அலோன்சாவை மிக உக்கிரமான துரத்தல் மூலம் இரண்டாம் இடத்தை கைப்பற்ற பாய்ந்து கொண்டு இருந்தார் .

நாற்பத்தி ஆறு ...
மைக்கேல் ஷூமேக்கர் காரில் - Drag Reduction System செயல்பாட்டில் Airflow தகடுகள் முற்றிலுமாக செயல் படாததால் போட்டியை விட்டு வெளியேறினார் .இந்தவருடம் எனது வலைப்பூவின் நாயகன் மைக்கேல் ஷூமேக்கருக்கு என்னதான் கெட்ட வேலையோ ? இதுவரை நடந்த ஏழு போட்டியில் ஐந்தில் ரிட்டயர்ட்,இரண்டில் பத்தாவது இடம்.கடந்த 2006 ஆம் ஆண்டில் அவரின பிரசித்தம் பெற்ற போடியம் ஜம்பை பார்த்தது ..காத்திருகிறார்கள் பலகோடி ரசிகர்கள் .எப்போது அது மீண்டும் எப்போது பார்க்கப்போகிறோம் சுமி ?ஐம்பத்தி ஒன்று ..

ஹெமில்டன் டயர் மாற்றம் செய்த உடன்அங்கே வலது பின்பக்க டயர் மாற்றத்தில் தாமதம் ஏற்பட்டதனால் சில மில்லி வினாடிகள் கார் தயங்கி கிளம்பியது .நல்லவேளை!  மீண்டும் களத்திற்குள் வந்த ஹெமிலடன் மூன்றாம் இடத்தை தக்கவைத்து கொள்ளவே முடிந்தது .

ஐம்பத்தி மூன்று ..
அதுவரை மூன்றாம் இடத்தை தக்கவைத்து கொண்டு இருந்த மார்க் வெப்பர் டயர் மாற்ற வர ,மிகப் பெரிய இடைவெளியாக மீண்டும் தொடர எட்டாம் இடமே கிடைத்தது வெப்பருக்கு.

ஐம்பத்தி ஆறு ..
இப்போது அலோன்சா - செபாஸ்டியன் வெட்டல் - ஹெமிலடன் -க்ரோஜியன் - மாசா - ரோஷ்பெர்க் என சின்ன சந்தேகம் வராத அளவுக்கு போட்டி போய்கொண்டு இருந்தது .ஆலோன்சாவின் இந்த வெற்றி ..என பார்முலா போட்டி அறிவிப்பாளர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள் .இந்த வரிசை மாறாது என பெர்ராரி ரசிகர்களின் உற்சாக கொடியசைவு ஒரு புதிய அலையை உற்பத்தி செய்துகொண்டு இருந்தது
ஐம்பத்தி எழு ..
இப்போது மாசாவை ,ரோச்பெர்க் தாண்டி அற்றம் இடத்தை தக்கவைதுகொண்டு அற்புதமான ட்ரைவின்கை வெளிபடுத்தினார் .

ஐம்பத்தி ஒன்பது ..
மாசா டயர் மாற்ற வந்த தன்னுடைய ஏழாம் இடத்திலிருந்து பத்தாம் இடத்தையே தொடர முடிந்தது ..

 அறுபத்தி இரண்டு ..
ஹெமிலடனின் காரின் வேகம் இப்போது ஆக்ரோசமாக இருதது ..மூன்றாம் இடத்திலருந்து இரண்டாம் இடத்து வெட்டலை மிக லாகவமாக பின்னுக்கு தள்ளினார் .அதுவரை முடிவு செய்து வைத்து இருந்த போட்டி முடிவுகளை ஏதோ ஹெமில்டன் செய்ய போகிறார் என எல்லோரும் மிக ஆர்வமாக கவனிக்க ..அங்கு பிரெல்லி டயரின் தர முக்கியத்துவ ஆதிக்கம் தெரிந்தது .


அறுபத்திநான்கு ..
இனியும் தாமதிக்க கூடாது என முடிவெடுத்த வெட்டல் டயர் மாற்ற வர மூன்றாம் இடத்திலிருந்து ஆறாம் இடம் பின் தங்க வேண்டியதாகிவிட்டது .
இப்போது இன்னொரு அற்புதம் .ஹெமில்டனின் காரின் வேக தாகம் இன்னும் அதிகரித்தது DRS பகுதியில் அலோன்சாவை பின்னுக்கு தள்ளி ..ஆமாம் முதலிடத்தில் இப்போது லீவிஸ் ஹெமில்ட்டன் .அவரின காதலி .Nicole Scherzinger மெக்லரண் அணியின் குழுக்களிடையே இருந்து துள்ளி குதித்தார் ..


அறுபத்தியாறு ...
இந்த அருமையான தருணத்திற்காக காத்திருந்தது போல லோட்டஸ் ரெனால்ட்டின்ரோமின் க்ரோச்ஜியன் அலோன்சாவை குறிவைத்து துரத்த எல்லோரும் ஆச்சர்யத்தில் நுனி சீட்டில் தொங்கிக்கொண்டு இருந்தார்கள் முடிவில் க்ரோச்ஜியன் அலோன்சாவை பின்னுக்கு தள்ளினார் .அபாரம் !.

அறுபத்தி ஏழு ..
இந்தாவருகிறேன் இழந்த இடத்தை பிடிக்க என்று அவசரபட்ட வெட்டல் களத்தின் சுவரில் உரச .. அணி பதட்டப்பட்டது .

அறுபத்தி எட்டு ..

சாபெர் பெர்ராரியின் - செர்கியோ பெரசுக்கு எங்கிருந்துதான் வேகம் வந்ததோ நான்காம் இடத்திலிருந்து பேயாக பறந்து மீண்டும் ஒரு இடம், நான்காம் இடத்திற்கு அலோன்சாவை தள்ளினார் ..அட பாவமே !

அறுபத்தி ஒன்பது ...
அட அட பாவமே இப்போது வெட்டலும் அலோன்சாவை பின்னுக்கு தள்ள ஐந்தாம் இடம் அலோன்சாவை ஏற்றுகொண்டது .நல்லவேளை இன்னும் நிக்கோ ரோஷ்பெர்க் விட்டுவிட்டார் .அவருக்கும் ஆலோன்சாவிர்க்கும் வெற்றிக்கு உள்ள இடைவெளி வெறும் 431 மில்லி வினாடிகளேயாகும்.

எழுபது ....இறுதி சுற்று ...


முதல் இடம் ..
லீவிஸ் ஹேமில்டன் வெற்றி பெற்றார் .வேட்டளிடம் இருத்த கனடாவின் பார்முலா கோப்பையை தட்டி அல்ல எட்டி பறித்தார் .மெக்லரண் மெர்சடிசின் அணிக்காக மூன்று முறை மூன்றாவதாகவும் இந்தமுறை முதலாவதாகவும் வந்து அசத்திவிட்டார் .

இரண்டாவது இடம் .லோட்டஸ் ரெனால்ட்டின்ரோமின் க்ரோச்ஜியன்.இரண்டாவது முறையாக போடியம் ஏறுகிறார் இவர் .கலந்து கொண்ட ஏழு போட்டிகளில் மூன்றில் ரிட்டயர்ட் .இப்போது சுதாரித்து கொண்டார் .தரமான வெற்றி .

மூன்றாவது இடம் .சாபெர் பெர்ராரியின் - செர்கியோ பெரேஸ்.இந்தமுறை யாருமே எதிபார்க்காத மெக்சிக்கன் டிரைவரின் வெற்றி சுவாரஷ்யமானது .


Pirelli-“It’s clear that the key for performance is the tyres.”

சாதரணமாக எல்லோருக்கும் தெரிந்த விஷயம் .பார்முலா 1 கார் அணி வெற்றிகரமாக செயல்பட1. நல்ல நிதியுதவி 2
சிறந்த அராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை (R & D ) 3அனுபவமுள்ள ஓட்டுனர்கள் , 4.தொழில்நுட்ப குழு .ஆனால் இத்தனையும் போக நல்ல டயர் தேர்வு என்பதுதான் இப்போதய பார்முலா 1 அணி நிர்வாகத்திற்கு முன் நிற்கும் பிரச்சனை .அதன் விளைவை கனடாவின் போட்டி முடிவுகள் பட்டவர்த்தனமாக சொல்லிவிட்டது .
Pirelli டயர் மட்டுமே பயன்படுத்தும் படி போட்டியை நடத்தும் FIA சொல்லியிருகிறது .அதுவும் பொதுவாக நான்கு வண்ணங்கள் ( super soft - red; soft - yellow; medium - white; hard - silver.) கொண்ட டயர்கள் பயன்படுத்தப்படும்போது பிரச்சனை எப்படி வருகிறது ? அங்குதான் களத்தின் வடிவ அடிப்படையும் முக்கியத்துவம் பெருகிறது கனடா போன்ற குறுகிய அகலத்தை கொண்ட களத்தில் 70% வெற்றியை DRS பயன்படுத்தும் பகுதி (DRS -Zone) தீர்மானிக்கிறது .

இந்த களத்தில் பெர்ரரியின் தொழில்நுட்ப குழு ஒரே ஒரு முறை One-Stop Strategy டயர் மாற்றினால் போதும் என்று முடிவு செய்து இருந்தது .ஆனால் மெக்லரண் மெர்சிடஸ் அணியோ இருமுறை டயர் மாற்றம் செய்ய திட்டம் வைத்து இருந்தது .ரெட்புல் அணியோ இந்த இரு அணிகளின் முடிவுகளையும் பொருத்து செயல்படலாம் என இருந்தது .
செபாஸ்டியன் வெட்டல் முதல் 16 சுற்றுக்கு Super Soft டயரை பயன்படுத்திய பிறகு அடுத்த 47 சுற்றுவரை Soft டயரை பயன்படுத்தியதை தவிர்த்து 35 சுற்றில் வெட்டல் மாற்றியிருக்க வேண்டும் அதை தவிர்த்து 63 ஆவது சுற்றில் டயர் மாற்றியது தவறு .அதுவும் கூட 62 ஆவது சுற்றில் ஹெமில்ட்டன் பின்னுக்கு தள்ளிய பிறகு யோசித்து இருக்ககூடாது இந்த மோசமான் முடிவுதான் ரெட்புல்லின் செபாஸ்டியன் வெட்டல் முதலில் தொடங்கி வெற்றிபெற முடியாமல் நான்காவதாக வரும் நிலை . நல்லவேளை அப்போதாவது டயர் மாற்றியதால்தான் அலோன்சாவை வெட்டளால் 69 ஆவது சுற்றிலாவது பின்னுக்கு தள்ளமுடிதது .


பெர்ராரியோ இதை விட .Super Soft தொடங்கி அதில் 19 சுற்றும் மீதி 51 சுற்றுக்கள் Soft - Yellow .எனவேதான் ஐம்பது சுற்றுக்கு பிறகு லீவிஸ் ஹெமில்டன் முதல் 17 சுற்றுக்கு Super Soft .அடுத்த 33 சுற்றுக்கு Soft .கடைசி 20 சுற்றுக்கும் அதே Soft .இந்த கணக்கில் டயர் மாற்றி வந்தவுடன் ஆலோன்சாவால் ஈடு கொடுக்கமுடியாமல் ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டார் .

ஏழாம் இடத்தில் தொடங்கி,லோட்டஸ் ரெனால்ட்டின் ரோமின் க்ரோச்ஜியன் முதல் 21 சுற்றை Super Soft டயரிலும் அடுத்த 49 சுற்றுக்களையும் Soft டயரையும் பயன்படுத்தி இரண்டாவதாகவும் ,அவரை தொடர்ந்து பதினைந்தாம் இடத்தில் தொடங்கிய சாபெர் பெர்ராரியின் - செர்கியோ பெரேஸ் முதல் 41 சுற்றை Soft டயரிலும் அடுத்த 29 சுற்றை Super Soft டயரையும் பயன்பத்தி மூன்றாவதாகவும் எபாடி வரமுடிந்தது சரி இந்த கணக்கு இவர்கள் கணக்கில் ஒத்துவரவில்லை .காரணம் ?
இவர்கள் இருவரும் அவர்கள் இருவரும் தங்களின் அணியின் சொல்படி டயரின் தன்மையை பாதுகாத்ததே இந்த வெற்றிக்கு அடிப்படை என பார்முலாவின் கருதுரையாளர் Jamesallen ரகசிய முடிச்சை அவிழ்க்கிறார் .


எனவே இந்த முடிவுகள் லோட்டஸ் அணியின் பாஸ் எரிக் புல்லர் “It’s clear that the key for performance is the tyres.”சொன்னது எவ்வளவு உண்மை என தெரிகிறது


இதில் இன்னொரு அருமையான வெற்றி பங்களிப்புக்கு உரியவர்கள் மெக்லரண் மெர்சிடஷின் தொழில்நுட்ப குழு .ஆமாம் .அவர்கள் மூன்றுமுறை ஹேமில்டன் காருக்கு டயர் மாற்ற எடுத்துக்கொண்ட நேரம் 21.115 வினாடிகள் மட்டுமே .எனவே கனடாவின் வெற்றிகோப்பை தானாக ஹெமிலடன் கைக்கு வரவில்லை .அத்தனையும் கணக்கு+ உழைப்பு = வெற்றி

 நடந்த ஏழு போட்டியில் ,முடிவுகள் மிக அற்புதமான ஏழு வித்தியாசமான போட்டியாளர்களை தேர்வு செய்து இருக்கிறது .அதிலும் மூன்று பேர் முன்னாள் உலக சாம்பியன் அல்லாதவர்கள் .


விறு விறுப்பான வெற்றியை சுமந்த கணம் தாங்காத லீவிஸ் அதனை காதலி Nicole Scherzinger ரிடம் பகிர்ந்துகொண்டார் அதற்காக, The Sun பத்திரிக்கை இப்படி சொல்லலமா Got your wet tyres on, Lew? 
இங்கு லீவிசின் காதலி நிகோலே ச்செர்ஜிங்கேர் பற்றி குறிப்பிடும் படி சொல்லவேண்டுமானால் இவர் ஒரு பாடலாசிரியர் ,பாடுபவர் ,நடிகர் ,நடனமணி, மாடல்,ரெகார்ட் தயாரிப்பாளர் ,டான்ஸ் மாஸ்டர் .அப்புறம் இன்று லீவிசின் காதலி


ஆனால் இவருக்கும் நமது எ.ஆர் ரகுமானுக்கும் இசை தொடர்பு Slumdog Millionaire - "Jai Ho! (You Are My Destiny)"ஆங்கில பாடல் வெளியீட்டில் தொடங்கி The Pussycat Dolls வரை தொடர்கிறது என்பது கூடுதல் தகவல் .
Saturday, June 9, 2012

கனடாவில் பார்முலாவின் 7 ஆவது வேக யுத்தம் .


  Night View of Niagara 

நமது பார்முலா 1 ன் ஏழாவது போட்டி , அழகிய நயகாரவின் பெரும்பகுதிக்கு சொந்தமான கனடாவின் இரண்டாவது மிகப்பெரிய மொண்ட்ரியால் (Montreal) நகரின் - Circuit Gilles Villeneuve ல் நாளை 10  ஆம் தேதி நடக்க இருக்கிறது . அழகிய இந்த நகரையும் போட்டியையும் ரசிக்க தமிழக மின்சாரம் இன்றைய நிலையில் வாய்ப்பளித்தாலும் போட்டி நடக்கும் நேரம் மிக அபாயமான இரவு 11:30 க்கு என்பது கொஞ்சம் அதிகம்தான் ! இருந்தாலும் வேக யுத்தத்தின் விறுவிறுப்பை தேடுபவர்கள் இதை எப்படி இழக்க முடியாதல்லவா ?

களத்தின் பெயர் நாயகன் .


 Gilles Villeneuve and his Family 

இந்தகளத்தின் பெயருக்கு சொந்தமான Joseph Gilles Henri Villeneuve என்ற Gilles Villeneuve  பெயரில் அழைக்கபடுகிறது .வில்நெவ் கனடாவின் சொந்தகாரர் .அந்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக 1977 - 1982 வரை இருந்திருக்கிறார் .1982 ஆம் ஆண்டில் பெர்ராரி அணிக்காக - பெல்ஜியம் நாட்டின் மே 8 ஆம் நாள் நடந்த கடைசி தகுதி சுற்றில் நடந்த Jochen Mass என்ற ஜேர்மன் டிரைவரின் காரில் மோதி விபத்துக்கு உட்பட்டு அன்று மாலை இறந்து போனார் அவரின பெயரில் இந்த களம் அமைந்து இருக்கிறது .


பயற்சி போட்டிகளை பார்ப்போம் .
கடந்த வெள்ளி கிழமை நடந்த பயிற்சி போட்டியில் இரண்டிலுமே லீவிஸ் ஹேமில்டன் வந்து இருக்கிறார் .நமக்கும் கனடாவிற்கும் உள்ள கால இடைவெளி 9:30 மணி நேரம் என்பதால் சனிகிழமை பயிற்சி போட்டி மற்றும் தகுதி சுற்றின் முடிவுகளை காண இயலவில்லை .நேராக போட்டிக்கு போய் தெரிந்து கொள்வோமா ?

Saturday, June 2, 2012

மொனாகோ வெற்றி கோப்பை - மார்க் வெப்பர் கையில்
.
எதிர்பார்த்தது போல இந்த வருடமும் மொனாகோ போட்டி பார்முலா 1 ரேஸ் காலண்டரில் தேவைதானா ?என்ற கேள்வியுடனே இந்த பதிவை தொடர்கிறேன் .விஷபரிட்சை என்பதை நேரில்பார்க்காதவர்கள் நேற்று பார்த்திருப்பார்கள் .அவ்வளவு விபத்துக்கள் .கலந்துகொண்டது இருபத்திநான்கு கார்கள் போட்டியை முழுமையாக முடித்து பதினைந்து கார்கள் .மெக்லரண் மெர்சீடிஷின் ஜென்சன் பட்டன் போட்டியின் மொத்த சுற்றுக்கள் 78 ல், 70 சுற்றுக்களை அதாவது 90% விகிதம் முடித்ததனால் அவர் பதினாறாம் இடம் .எனவே பதினாறு கார்கள் ரேசில் இருந்தது .போட்டி என்பதை உயிரோடு விளையாடும்போது ரசிக்க பழகிவிட்டால் பார்வையாளன் எனும் இடம் பறிபோய் ரேஸ் வெறிபிடித்தவன் அல்லது பையித்தியம் என சொல்லும் நிலையாகிவிடும் .
கண்ணாடி சுவருக்குள் இருந்து கொண்டு கல் எறிவது போல ரேசை பற்றி மட்டும் எழுதும் நான் மொனாகோ ரேஸ் போட்டியை வெறுப்பதற்கு காரணம் விளையாட்டு அல்லது போட்டிகள் திறமையோடு இருக்கலாம் உயிரோடு இருக்க கூடாது என்பது என் நம்பிக்கை 
அதனாலயே இங்கு நடக்கும் போட்டி வேண்டாம் என்பது என் கருத்து என்பதை பதிவு செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் .


சரி போட்டிக்கு போகலாம் .
சொந்த இடத்தை பறிகொடுத்தவர்கள் .
தகுதி சுற்றில் முதலிடம் பிடித்தாலும் ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்ட மைகேல் ஷுமேக்கர் ஒரு வித்தியாசமான சூழ்நிலையை உருவாக்கினார் . அது மட்டுமல்ல வில்லியம்ஸ் ரேனால்ட்டின் - பாஸ்டர் மல்டோனடோ நிலைமை இன்னு மோசம் .அவர் தகுதி சுற்றில் ஒன்பதாம் இடம் .ஆனால் பயிற்சி போட்டியில் FP3 ல் நடந்த விபத்துக்கு 10 இடம் + அந்த விபத்தில் பழுதான கியர் பாக்சை மாற்றியதற்காக 5 இடம் என மொத்தம் 15 இடம் தள்ளி 24 நான்காம் இடத்தில் ஆரம்பிக்க பணிக்கப்பட்டார் ( நாள்வேளை மொத்தமே 24 இடம்தான் ) மேற்படி பாஸ்டர் மல்டோனடோவால் இடிபட்ட சாபெர் பெர்ரரியின் செர்ஜியோ பெரஸ் கியர் பாக்ஸ் மாற்றியதால் அவருக்கு 18 ஆம் இடத்திலிருந்து 23 ற்கு தள்ளப்பட்டார் ( போட்டியை நடத்தும் FIA அமைப்பின் விதிப்படி ( FIA regulations ) 5  போட்டிகளுக்கு ஒரு கியர் பாக்ஸ் பயன்படுத்த வேண்டும் )
 மார்க் வெப்பர் முதிடத்தில் தொடங்க இரண்டாவது இடத்தில் நிக்கோ ரோஷ்பெர்க் .மூன்றாம் இடம் லீவிஸ் ஹேமில்டன் .என தலைமை தாங்கி நிற்க ரேஸ் இந்த ஆண்டின் ஆறாவது போட்டி ஆரம்பித்தது .


முதல் சுற்றும்... விபத்துகளின் ஆரம்பமும் ...


மார்க் வெப்பர் புயலென கிளம்ப அவரை தொடர்ந்து நிக்கோ ரோச்பெர்க் அடுத்து ஹெமில்டன் ,அலோன்சா ,பிலிப் மாசா ஒன்பதாம் இடத்திலிருந்து பாய்ந்த ரெட் புல்லின் வெட்டல் அற்றம் இடம் இப்போது ,ஆறில் இருந்து தொடங்கிய மைக்கேல் ஷுமேக்கரை லோட்டஸ் ரேனால்ட்டின் -  ரோமின் க்ரோச்ஜியன் இடத்து பக்க சாலை தடுப்பு பகுதிக்கு தள்ள நல்ல வேளை ஷுமேக்கர் வீல் ஒருபக்கம் க்ரோச்ஜியன் காரில் உரச மறுபக்கம் சாலை தடுப்பில் உரசி சமாளித்து தப்பியதால் எட்டாம். இடம் குறுகிய இடத்தில முந்தி செல்வது அபாயம் என முதல் இரண்டு கார் டிரைவர்களை தவிர மற்றவர்கள் அறிவார்கள் க்ரோச்ஜியன் அந்த வகுப்புக்கு செல்லவில்லையோ ?ஆனால் இந்த உரசலில் இடது பின்புற வீல் முழுவதுமாக சேதமடைய 
லோட்டஸ் ரேனால்ட்டின் -  ரோமின் க்ரோச்ஜியனும் வெளியேறினார் .
அதற்குள் பின் வரிசையில் அத்தனை தண்டனைகளையும் தாங்கிக்கொண்டு வந்த பாஸ்டர் மல்டோனடோ கார் நம் நாராயண் கார்த்திகேயனின் ஹிஷ்பானிய ரேசிங் டீமின் இன்னொரு டிரைவர் ரோசா ( Pedro de la Rosa )காரில் மோதிரேசிளிருந்து வெளியேறியது . அடுத்து மஞ்சள் கோடி அசைத்து கார்களின் வேகத்தை குறைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது .மல்டோனடோ கார் மற்றும்.உடைந்த பாகங்கள் ட்ராக்கில் இருந்து அகற்றபடுவதற்கு சேப்டி கார் வந்தது .


 நான்காவது சுற்று ...
சேப்டி கார் களத்திலிருந்து வெளியேற காத்திருந்த ஹெமில்டனின் காரை தொடர்ந்து வந்த பெர்ராரியின் -ஆலோன்சாவும் .மாசாவும் நெருங்கி மார்க் வெப்பரின் இடத்தை குறிவைத்து துரத்த ..


நான்காவது சுற்று ...
சேப்டி கார் களத்திலிருந்து வெளியேற காத்திருந்த ஹெமில்டனின் காரை தொடர்ந்து வந்த பெர்ராரியின் -ஆலோன்சாவும் .மாசாவும் நெருங்கி மார்க் வெப்பரின் இடத்தை குறிவைத்து துரத்த ..


ஐந்தாம் சுற்று ..
பொதுவாகவே வேகமாக கடப்பதை பார்முலா போட்டிகளில் சகஜமாக சொல்லும் வார்த்தை Flaying Start அது உண்மையில் சாபர் பெர்ராரியின் கமுய்  கொபயஷிக்கு மிகவும் பொருந்தும் .காரணம் Flying Crash என பறந்து விழுந்தது கார் .நல்லவேளை வண்டியில் சஸ்பென்சன் உடைந்து போனதால் போட்டியில் தொடர முடியாமல் விலகினார் .


ஒன்பதாவது சுற்று ...
மார் வெப்பரின் கார் மிக நிதானமாக பயணித்து கொண்டு இருந்தது .அவரை தொடரும் நிக்கோ ரோஷ்பெர்க் எந்தவிதமான தவறுக்கும் இடம் கொடுக்காமல் இருந்தாலே போதும் என அவர் அணி தீர்மானித்து இருந்ததாக வழி நடத்துவது புரிந்தது .இப்போது வெப்பருக்கும் - ரோஷ்பெர்க் இடைவெளி 1:20.969 நிமிடமே .


பனிரெண்டாம் சுற்று ...
சரியான துவக்கத்தை இழந்த மைக்கேல் ஷூமேக்கர் எட்டாம் இடத்தில் கிமி ரைகொனனுடன் போற்றடி கொண்டு இருந்தார் ..


பதினைந்தாம் சுற்று ...
அருமையான துவக்கத்தை தந்த ரஷ்யாவின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் விட்டாலி பெட்றோவ் முதல் சுற்றில் ஏற்ப்பட்ட மோதல் குழப்பத்தில் காரின் எலெக்ட்ரிகல் பிரச்சனையால் தொடரமுடியாமல் வெளியேறியது .இந்த விபத்தில் சிறிய காயம் காரணமாக மருத்துவமனை சென்று வந்தார் .


இருபத்தி இரண்டு ...
ஜென்சன் பட்டன் நேரம் சரியில்லை போல ...கடந்த ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் பத்தாம் இடம் தொடங்கி ஒன்பதாம் இடத்தில் போராடி முடித்தார் .ஆனால் இன்றைய மொனாகோ ரேசில் பனிரெண்டாம் இடத்தில் துவங்கியவர் இப்போது பதினான்காம் இடத்தில் கேட்டர்ஹாமின் ஹெயக்கி கொவளைணனை துரத்திக்கொண்டு இருக்க அவரை பிடிக்க பின்புறத்தில் செர்ஜியோ பெரஸ் முயற்சி செய்துகொண்டு இருக்க ஜென்சன் பட்டன் ஏற்கனவே தன்னுடைய காரோடு போராடிக்கொண்டு இருந்தார் ..


இருபத்தி ஐந்து ...
இந்த ரேசுக்கு முன்னர் தகுதி சுற்று முடிந்த போது ரெட்புல்லின் செபாஸ்டியன் வெட்டல் அளித்த பேட்டியில் ரேசை எந்த இடத்தில் தொடங்குகிறோம் என்பது முக்கியமில்லை போட்டியின் முடிவில் எந்த இடத்தில் முடிக்கிறோம் என்பதே முக்கியம் என சொன்னதை மெய்ப்பிக்கும் வகையில் ஒன்பதாம் இடத்தில் துவங்கி இப்போது ஆறாம் இடத்தில் முன்னேறிக்கொண்டு இருந்தார் .இரண்டு முறை உலக சாம்பியன் சொல்வது சரியாகத்தான் இருக்கும் .
இன்றைய போட்டியில் முதல் பனிரெண்டு இடங்களில் Soft Tyre பொருத்தியிருந்தார்கள் . Super Soft Tyre நல்ல துவக்கத்தை கொடுத்தாலும்   அவர்களை பொறுத்த வரை விரைவில் Soft Tyre க்கு மாறவேண்டிவரும் அதை தவிர்த்து தொடர்ந்து போராடி முன்னேறினால் மட்டுமே முதல் ஐந்து இடத்திற்குள் வரமுடியும் என தீர்மானித்து இருந்தார்கள் .


முப்பத்தி ஒன்றாவது சுற்று .. 
கிமி ரேயகொணன் பிட் ஸ்டாப்பில் டயர் மாற்றி விட்டு வெளியேறும்போது,அருகில் டயர் மாட்டிகொண்டு இருந்த சாஹார போர்ஸ் இந்தியாவின் மெக்கானிக்கின் முதுகையும் ,டயரையும் உரசிக்கொண்டு வெளியேற அதிர்ந்துபோனார்கள் போர்ஸ் இந்திய அணியினர் ஏற்கனவே ஐந்து கார்கள் வெளியேறிய நிலையில் ஒரு மெக்கானிக்கையாவது வெளியேற்றலாம் என்று யோசித்திருப்பாரோ ? 
முப்பத்தி மூன்றாவது சுற்று ..
இப்போது நிலைமை மிகவும் மாறியிருக்கிறது .டயர் மாற்றம் செய்ய வந்த கார்களின் இடம் மாறியிருக்கிறது .முதல் இடத்தில் வெட்டல் .அடுத்து வெப்பர்,ரோஷ்பெர்க் ,அலோன்சா ,ஹேமில்டன், ஷூமேக்கர் ,மாசா போர்ஸ் இந்தியாவின் பால்டி ரெஷ்டா ,ரிக்கார்டியோ ,பத்தாவது இடத்தில் ஜென்சன் பட்டன் .
நாற்ப்பத்தி நான்கு ...
வெகு நேரத்திற்கு முன்னரே எதிர்ப்பார்க்கப்பட்ட மழை தன்னுடைய சில துளி முத்தங்களை பதித்தது .ஆனால் மிக பெரிய மழையின் மேகமூட்டம் தென்பட்டது .
நாற்ப்பத்தி ஆறு ..
டயரை மாற்றாமல் தன்னுடைய திட்டப்படி சரியான இடத்தை தேர்வு செய்யுவரை போராடிய வெட்டல் இப்போது முதலிடம் .எனவே இனியும் தாமதிக்க விரும்பாமல் பிட் லேன் திரும்பினார் .இதனால் மீண்டும் நான்காம் இடத்தில் தொடர வேண்டியாதாகி விட்டது ..


ஐம்பத்தி ஒன்று ..
மீண்டும் வெப்பர் தன்னுடைய முதலிடத்தில் .
மழை வர முற்றலுமாக மறுத்து விட்டது .அணிகளும் ,போட்டி நிர்வாகமும் மிகப்பெரிய நிம்மதி பெருமூச்சை விட்டார்கள் !
போட்டியின் முதல் ஆறு கார்களும் ஐந்து வினாடி இடைவெளிக்குள் துரத்திக்கொண்டு இருந்தன .


அறுபத்தி இரண்டு ..
மைக்கேல் ஷூமேக்கரின் காரில் எரிபொருள் அழுத்த (  Fuel Pressure ) பிரச்னையில் போராடிக்கொண்டு இருக்க ,ஒவ்வொரு சுற்றுக்களின் வேகத்தின் இடைவெளி அதிகரிக்க தொடங்கியது .அதனை அறிந்த அவரை தொடரும் டோரோ ரோசோவின் - ஜீன் எரிக் வேர்கின் மிக சாதாரணமாக் முன்னேறி சென்றார் .அவரை தொடர்ந்து கேட்டர் ஹாமின் ஹெயக்கியும் முந்த இனி போராடி பிரோயோஜனமில்லை என்ற முடிவுடன் பிட் லேன் திரும்பினார் ஷூமேக்கர் .இரண்டு புள்ளிகளுடன் பதினெட்டாம் இடத்தில் இருக்கிறார் இந்த ரேசுடன் .
அறுபத்தி நான்கு ...
மருஷ்ய - கோஷ்வோர்த் அணியின் சார்லஸ் பிக் தன்னுடைய காரின் எலெக்ட்ரிக்கல் பிரச்னை ஏற்படவே போட்டியிலிருந்து வெளியேறியது .


அறுபத்தி ஐந்து ..
அடுத்து STR பெர்ராரியின் டேனியல் ரிக்கியார்டோ ஸ்டீரிங் பழுதானதால் பிட்லேன் திரும்பினார் .அறுபத்தி ஆறாவது சுற்று ..
கொவளைணன் ஜென்சன் பட்டன் ,செர்ஜியோ பெரஸ் ,பின்வரிசையில் மோதி விளையாடி கொண்டார்கள். எழுபது ...
ஓடு தளத்தின் மேல் மழை தன்னுடைய கிளையை மெல்லப் பரப்ப அதனை முதல் ஐந்து கார்களுமே ஒடித்து எடுத்து கொண்டன .


ஜென்சன் பட்டன் ஏற்கனவே பட்ட விபத்தின் சுவடுகளின் பாதிப்பினால் போட்டியிலிருந்து வெளியேறினார் .


எழுபத்தி ஒன்று ..
அலோன்சா இன்னும் ஏழு சுற்றுக்களே மீதம் இருப்பதால் ரோஷ்பெர்க்கை பின்னுக்கு தள்ள முயற்சிக்க ,இந்த துரத்தலின் விளைவில் ஒன்று ரோஷ்பெர்க் ஏதேனும் தவறு செய்து பின்னுக்கு வரலாம் அல்லது வெப்பர் முதலிடத்தை இழக்கலாம் .இரண்டுமே பெர்ராரிக்கு லாபம்தான் .
அதற்குள் ஐந்தாம் இடத்தில வந்து கொண்டு இருந்த செபாஸ்டியன் வெட்டல் மிக அற்புதமாக ஒரு ஓட்டத்தினால் ஹெமில்ட்டனை பின்னுக்கு தள்ளினார் .எங்கும்  பரபரப்பு தொற்றிகொண்டது 
எழுபத்தி ஐந்து ...
இனி எந்த மாற்றமும் நிகழாது என்பது போல் முதலிடத்து ஆறு கார்களும் பின்தொடர்ந்து கொண்டு இருந்தன .
எழுபத்தி ஆறு 


ரோஷ்பெர்க்கின் வேகத்தில் சில மாற்றங்கள் தெரிந்தன .வெப்பரை பின்னுக்கு தள்ள நெருங்கி ,விலகி என திருபங்கள் மிகப்பெரிய தடையை விதைத்தன. பொதுவாகவே இரண்டு சக்கர வாகனத்திலும் சரி ,நான்கு சக்கர வாகனத்திலும் சரி இடது புறத்திலிருந்து வலது புறம் திரும்புவதை காட்டிலும் - வலது புறமிருந்து இடது புறம் திரும்புவது( Anti Clockwise ) மிகவும் கடினம் .அதிலும் மணிக்கு சுமார் 250 கி.மீ வேகத்தில் ..சொல்லவே வேண்டாம் .அப்படிப்பட்ட வேகத்தை நம்மால் கற்பனை செய்து கொள்ளமட்டுமே முடியும் !.காரில் பொருத்தப்பட்ட கேமிரா மூலம் பார்க்கும் நமக்கே இந்த சுத்து, சுத்துதே F1 டிரைவர் நிலைமை ?
எழுபத்தி எட்டாம் கடைசி சுற்று ..
எந்த மாற்றமும் இல்லை .ரெட்புல்லின் மார்க் வெப்பர் முதலிடம் .எழுபது எட்டு சுற்றுக்களை அவர் கடக்க எடுத்து கொண்ட நேரம் 1:46:06.557. இந்த ஆண்டில் முதல்- முதலிடத்து வெற்றி மார்க் வெப்பருடையது.அதுவும் மொனாக்கோ தேசத்தில் .அற்புதமான தவறே இல்லாத டிரைவிங் .அது மட்டுமல்ல தொடர்ந்து மூன்றிலிருந்து ,ஆறாம் ரேஸ் வரை ரெட்புல் அணி முதல் இடத்தில் இருப்பதர்க்கு வெப்பர்தான் முழுமுதல் காரணம் .அவரின இடங்கள் 4,4,4,4,11,1.


இரண்டாம் இடம் .
பொறுமையின் சின்னமாக விளங்கும் மெர்சீடிசின் - நிக்கோ ரோஷ்பெர்க் .பின்பக்கத்தில் தன்னுடைய சகா ஷூமேக்கர் சரிவையே சந்தித்தது கொண்டு இருந்தாலும் தன்னுடைய அணியை ஐந்தாம் இடத்திற்கு செல்ல இதுவரை ஐம்பத்தி ஒன்பது புள்ளிகளை சம்பாதித்து கொடுத்து இருக்கிறார் .பனிரெண்டு அணிகளில் ,இவர்மட்டுமே தனித்து தெரிகிறார் .மிக நல்ல எதிர்காலம் ரோஷ்பெர்கிர்க்கு  உண்டு .


மூன்றாம் இடம் ...
மிக பல விமர்சனத்திற்கு உட்பட்டாலும் தன்னுடைய அணியை பலமாக நிலை நிறுத்தி இருப்பது பெர்ராரியின் - பெர்னாண்டோ ஆலோன்சாதான் .இவரின் சகா பிலிப் மாசா மொத்தம் பத்து புள்ளிகளையே பெற்று தந்திருந்தாலும் அணியை மூன்றாம் இடத்திற்கு தூக்கி நிறுத்தி இருக்கிறார் அது மட்டுமல்ல டிரைவர்களுக்கான புள்ளிபட்டியலில் முதலிடத்தில் சவால் விட்டு கொண்டு இருக்கிறார் .


ஆறு போட்டிகள் ஆறுவிதமான வெற்றியாளர்கள் .போட்டியின் சுவாரஷ்யம் பிய்த்துகொண்டு போகிறது ..


பயத்துடன் ஆரம்பித்த மொனாகோ ரேஸ் ஒன்பது கார்களை வெளியே அனுப்பினாலும் பாதுகாப்பாக முடிந்தது ஆறுதலான விஷயம் .அதை பற்றி நாம் கவலை பட்டு விலகி போகும்போது அது யார் ? அட நம் ரோஷ்பெர்க் .

இந்த போட்டியில் மிக அற்புதமான வெற்றியை பதிவு செய்த நிக்கோ  ரோஷ்பெர்க் தன்னுடைய அழகான காதலி விவான் சிபோல்டுடன் அன்புடன் பதித்து மன்னிக்கவும் பகிர்ந்து கொண்டார் !