உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, July 28, 2012

குறுகிய காலத்தில் அடுத்த போட்டி ஹங்கேரியில்



நமது அடுத்த வேகம் ஐரோப்பாவின் மத்திய பகுதியிலுள்ள - ஹங்கேரிஅல்லது அங்கேரியா என்று அழைக்கப்படும்  நாட்டிலுள்ள - Eni Magyar Nagydij  களத்தில் நாளை 29 ஜூலை ஞாயிறு நடக்க இருக்கிறது .இதுவரை நடந்த பார்முலா போட்டியில் மிக குறுகிய இடைவெளியில் அதாவது போன வாரம் ஜெர்மனி இந்தவாரம் ஹங்கேரி என்பது இந்த வருட காலண்டரில் முதல் முறை .


இந்த களம் மொனாக்கோ நாட்டின் களத்திற்கு அடுத்த மிக குறுகிய அதே சமயம் நிறைய வளைவுகளை கொண்ட களம் .மொத்தம் பதினான்கு வளைவுக்களையும் ,எழுபது சுற்றுக்களையும் கொண்டது .ஒரு சுற்றின் நீளம் 4.381 கி.மீ ஆகும் .மொத்த போட்டி களத்தின் தூரம் 360.630 கி.மீ .இதன் வேக நாயகன் பெர்ரரியின்  - மைக்கேல் ஷூமேக்கருக்கு சொந்தமானது - 1:19.071 ஆண்டு 2004
.

சுமார் இரண்டு லட்சம் மக்களால் இங்கு ரசிக்கப்படும் இந்த போட்டி இந்திய நேரப்படி வழக்கம் போல மாலை 5:30 க்கு தொடங்குகிறது .

பயிற்சி போட்டி ..
வெள்ளிகிழமை நடந்த முதல் பயிற்சி போட்டியில் மெக்லரண் மெர்சிடிஷின் - லீவிஸ் ஹெமில்ட்டன்.
அதே நாளின் இரண்டாவது பயிற்சி போட்டியில் - மீண்டும் அவரே .
இன்று நடந்த மூன்றாவது பயற்சி போட்டியில் - ரெட்புல் ரெனால்ட்டின் - மார்க் வெப்பர் .


தகுதி சுற்று ..
இந்த தகுதி சுற்றில் அபாரமான திறமையை வெளிப்படுத்தியது Q1 - Q2 - Q3 ஆகிய மூன்றிலுமே  மெக்லரண் மெர்சிடிஷின் - லீவிஸ் ஹெமில்ட்டன்.அவரே முதலிடத்தில் போட்டியை தொடங்குகிறார் .இந்த முறை 107% நிர்ணயத்தை அவரே விதித்துள்ளார் என்பதுவும் கூடுதல் சாதனை .செம பார்மில் லீவிஸ்
இரண்டாம் இடத்தில் - லோட்டஸ் ரெனால்ட்டின் ரோமின் க்ரோஜியன்.
மூன்றாம் இடத்தில் -  ரெட்புல் ரெனால்ட்டின் - செபாஸ்டியன் வெட்டல் .நான்காம் இடத்தை பொதுவாக சொல்வதில்லை ஆனால் இன்று சொல்ல வேண்டும் அவர்  மெக்லரண் மெர்சிடிஷின் - ஜென்சன் பட்டன் .அதே ஜெர்மனி ரேஸின்  போராட்டத்தின் இரண்டாவது பகுதியா ? நடக்கட்டும் .


ஹங்கேரியின் கள அழகிகளின் படம் மிக பயமுறுத்துவதால் அவர்களை தவிர்த்து இங்கு ஒருபெராரி  ரசிகையின் உற்சாக முக அலங்காரத்தை ரசிப்போம் .

பெர்னாண்டோ அலோன்சா - ஜெர்மனின் நாயகன்




கடந்த ஞாயிறு ஜூலையில் 22  ஆம் நாள் ஜெர்மனின் - Hockenheimring களத்தில் அரங்கேற காத்திருந்தது .அணிகளின் நிலை ..
1. பெராரியின் - பெர்னாண்டோ அலோன்சா 2. ரெட்புல் ரெனால்ட்டின் - செபாஸ்டியன் வெட்டல் 3. மெர்சிடிஷின் - மைக்கேல் ஷூமேக்கர் 4. ஷஹாரா போர்ஸ் இந்தியாவின் - நிக்கோ ஹுல்கேன்பர்க் 5. வில்லியம்ஸ் ரெனால்ட்டின் - பாஷ்ட்டர் மால்டோனாண்டோ 6. மெக்லரண் மெர்சிடிஷின் - ஜென்சன் பட்டன் 7. லீவிஸ் ஹெமிட்டன் 8.மார்க் வெப்பர் 9. ஷஹாரா போர்ஸ் இந்தியாவின் - பால்டி ரேஷ்டா  10.லோட்டஸ் ரெனால்ட்டின் - கிமி ரைகொணன் .
முதல் சுற்று .

மிக அருமையான துவக்கத்தை அலோன்சா கார் கொடுத்தது .அவரை தொடர்ந்த செபாஸ்டியன் வெட்டலை மூன்றாம் நிலையில் இடத்திலிருந்த மைக்கேல் ஷூமேக்கர் இணையாக செல்ல ஒரு கட்டத்தில் வெட்டல் தன்னிலையை தக்கவைத்துக்கொண்டார் .
(இங்கு ஒரு தகவல் .தகுதி சுற்றில் மூன்றாம் நிலையில் வந்த ரெட்புல்லின் மார்க் வெப்பர் - கியர் பாக்ஸ் அனுமதி மீறி மாற்றியதால் அவர் மூன்றாம் நிலையிலிருந்து ஐந்து இடம் தள்ளி எட்டாம் இடத்தில் துவங்க பணிக்கப்பட்டார் இவர் மட்டுமல்ல மெர்ஷடீசின் - நிக்கோ ரோஷ்பெர்க் 15- 21,அடுத்து லோட்டஸ் ரெனால்டின் - ரோமின் க்ரோசியன் 14 - 19ஆகியோரும் இதில் அடங்குவார்கள் .)
பின்வரிசையில் மிக பெரிய குழப்பம்+ மோதல் ..பெர்ராரியின் பிலிப் மாசா கார் -  லோட்டஸ் ரெனால்டின் - ரோமின் க்ரோசியன் கார் மோதல் இவர்களுடன் வில்லியம்ஷின் - சென்னா கார் மோதி விளையாடியதில் மாசாவின் காரில் - Front Wing உடைந்தது .க்ரோசியன் கார்   Nose மாற்றப்பட்டது .வில்லியம்ஸ் - சென்னாவின் கார் பஞ்சர் .மூன்று காரும் பிட்லேனில் .
பொதுவாகவே உலகின் மிக பல களங்கள் இந்த களத்தை போல கார்களின் உச்ச வேகத்தை தொடும்போது ( முதல் சுற்றின் துவக்கத்தில் ) ஒரு வளைவு இருப்பது போட்டியின் வேறுபல காரணங்களுக்கு சரியாக இருந்தாலும் - விபத்துக்கு நிறைய வாய்பை தருகிறது .இதை அணி நிர்வாகங்கள் FIA விடம் சொல்லலாம் ! 
இரண்டாம் சுற்று ..
ஏற்கனவே தன்னுடைய எழாம் இடத்தை தவறவிட்ட ஹெமில்ட்டன் கார் இப்போது இடது பின்புற டயர் பஞ்சர் .டயர் மாற்றி திரும்பும்போது 22 இடத்தையே அவர் தொடர வேண்டியதாகிவிட்டது .ஹெமிட்டனின் மனம் துவண்டு விட்டது .அவரின ரேடியோ பேச்சு இதை உறுதி செய்தது .

ஐந்தாவது சுற்று ..
முன்வரிசையில் வெட்டல் - அலோன்சாவுக்கு அழுத்தம் கொடுக்க ஒரு தகுதி சுற்றின் நிலையை போல எந்த தவறுக்கும் இடம் கொடுக்க கூடாது என்பதில் மிக கவனமான டிரைவிங் அலோன்சா .
எட்டாவது சுற்று ..
ஜென்சன் பட்டன் ஓட்டும் முறையில் ஒரு வெறித்தனம் தெரிந்தாலும் அது இழந்த தன நம்பிக்கையை திரும்பபெறும்  முயற்சியாக தெரிந்தது .இப்போது ஆறாம் இடத்திலிருந்த பட்டன்  -ஐந்தாம் இடத்து சஹாரா போர்ஸ் இந்தியா அணியின் - நிகோ ஹுல்க்கேன் பர்கை முந்தினார் .

பதினொன்று ..
பட்டனின் அடுத்த வேட்டை ஷூமேக்கரின் கார்தான் .இன்றுள்ள சூழ்நிலையில் DRS பகுதியில் அதிவேகத்தை எட்டுவது ரெட்புல் அடுத்து மெக்லரண் மெர்சடீஷ் என்பதால் ஷூமேக்கரின் கார் மிக எளிதாக பட்டனின் வேகத்துக்கு இரையானது .இப்போது பட்டன் மூன்றாம் இடம் .அற்புதம் .

பதினான்காம் சுற்று ..
ஷூமேக்கர் ஐந்தாம் இடத்திற்கு தள்ள பட்ட  கோபத்தில் டயர் மாற்ற வந்தார் .ஆனால் கிடைத்த நேரத்தில் எல்லோரும் Medium Compound டயருக்கு மாறிக்கொண்டு இருக்க விட்ட இடத்தை பிடிக்க ஷூமேக்கர் மீண்டும் தேர்வு செய்தது Soft Compound .மீண்டும் ஏழாம் இடத்தை தொடர .

பதினாறு ...
ஷூமேக்கர் நெருப்பு பரவுவதை போல ஒரே அழுத்து - அழுத்த பின்னோக்கி போனது நிக்கோ ஹுலேன்பெர்க் கார் இப்போது ஆறாம் இடத்தில் ஷூமேக்கர் .
பதினெட்டு ..
அலோன்சா தன்னுடைய நீண்ட ஓட்டத்திற்கு வலு சேர்க்க ,டயர் மாற்றி மீண்டும் மூன்றாம் இடத்திற்கு வர ,இதோ வந்தேன் என்பதாக ஜென்சன் பட்டன்  டயர் மாற்றம் .அதே  Medium Compound டயர் .மீண்டும் நான்காம் இடத்தில் ..

இருபத்தி ஒன்று ..
வெட்டலும் டயர் மாற்றம் அவரும்  Medium Compound .மீண்டும் மூன்றாம் இடம் .
அதற்குள் ரெய்கொணன் ஆறாம் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்து ஷூமேக்கரை பின்னுக்கு தள்ள ..

இருபத்தி ஐந்து ..
மூன்றாம்  இடத்து கோபயாஷி டயர் மாற்றம் போக அந்த இடத்தில் இப்போது ஜென்சன் பட்டன் .போட்டி களைகட்டியது .வெட்டலின் வேகம் அதிகரிக்க தொடங்கியது .ஒவ்வொரு சுற்றிலும் அலோன்சாவை பின்னுக்கு தள்ளும் வேகம் மட்டுமல்ல பின்னால் வரும் பட்டனுக்கும் தனக்கும் ஒரு வலுவான இடைவெளியை ஏற்படுத்த முயற்சி நடந்தது .

முப்பதாவது சுற்று ..
ஒவ்வொரு DRS பகுதியிலும் பெராரியை விட ரெட்புல் வேகம் ஒப்பிடும்போது ஐந்து கிலோ மீட்டர் அதிகமாக இருப்பது தெளிவாக காண முடிந்தது .ஆபத்தை ஆலோன்சாவும் உணர்வார் .ஜெர்மானியர்களின் துரத்தலில் தப்பித்தவர்கள் வெகு சிலரே என்பதை நன்கு உணர்வார் .

முப்பத்தி நானகாவது  சுற்று ..
வித்தியாசமான ஒரு சம்பவம் இப்போது நடந்து கொண்டு இருந்தது ..பதினேழாம் இடத்து லீவிஸ் ஹெமில்ட்டனை கடக்கும் நிலை முதல் இடத்து ஆலோன்சாவுக்கும் ,இரண்டாம் இடத்து வெட்டளுக்கும் ஏற்ப்பட்டது .அப்போது ஹெமில்ட்டன் கார் வேண்டுமென்றே வழிவிடாது முன்னோக்கி சென்று கொண்டு இருந்தது .இதை ஒருவாறு சமாளித்த அலோன்சா கடந்து விட்டார் .ஆனால் வெட்டல் கடக்க முடியவில்லை .முன்னணியில் இருக்கும் காருக்கு வழிவிட வேண்டுமென்பது நியதி .அதுமட்டுமல்ல பதினேழாம் இடத்திலிருக்கும் ஹெமில்டன் ,வெட்டலை தாமத படுத்த காரணம் என்ன ? இருக்கிறது சுமார் மூன்று வினாடிகள் வித்தியாசத்தில் வெட்டலை தொடர்வது ஹெமில்டன் கூட்டாளி பட்டன் அல்லவா ? வெட்டலை தாமத படுத்தினால் பட்டன்  சுலபமாக இரண்டாம் இடத்தை எட்டி பிடித்து விடலாம் என்பதாக கணக்கிட்டது அணி .விளைவு ..இந்த  தாமதம் பட்டனுக்கு உதவியது .
முந்தி செல்ல விடாது செல்லும் ஹெமில்ட்டனின் வியூகத்தை உணர்ந்த வெட்டல் இரண்டு முறை முயற்சி செய்துவிட்டு கைகளை உயர்த்தி சபிக்க தொடங்கினார் ..பின்னர் , The Motor Report பத்திரிக்கை பேட்டியில் வெட்டல் இதை பற்றி சொல்லும்போது "That was not nice of him," . "It's a bit stupid to disturb the leaders."

முப்பத்தி ஆறாவது சுற்று ..
இப்போது ஷூமேக்கர் டயர் மாற்றம் .ஆனால் எல்லோரும்போல Medium Compound .ஆச்சர்யம் .ஆனால் இன்னும் முப்பத்தி ஒரு சுற்றுக்களை எப்படி சமாளிப்பார் ?
நாற்பது ..
பட்டன் டயர் மற்றம் - மீண்டும் Medium Compound 
நாற்பத்தி இரண்டு ..
அலோன்சா டயர் மாற்ற வர அவரை தொடர்ந்து வெட்டல் இருவரும் Medium Compound .போட்டி பலமாக இருக்கிறது .அதுமட்டுமல்ல ரெட்புல்லின் நோக்கம் அடுத்தவர்கள் திட்டத்தை தொடர்ந்து செயல்பட்டு அவர்களை முறியடிப்பது .சகல நேரங்களிலும் இது சாதகமான விளைவை தருவதில்லை .இருந்தாலும் ...
இப்போது டயர் மாற்றி வர முதலிடத்தில் அலோன்சா அவரை தொடர்ந்து ஜென்சன் பட்டன் ,ஆனால் ஜென்சனை கடந்து விடலாம் என்று தொடர்ந்த வெட்டளுக்கு அதிர்ச்சி கார் களத்தை விட்டு விலகி ஓரத்திற்கு போக இந்த தவறை நன்கு பயன்படுத்திய பட்டன் அருமையான வேகத்தில் அடுத்த இலக்கான அலோன்சாவை நோக்கி போக அங்கு இடைவெளி 1.3 வினாடிகளானது. 

ஐம்பத்தி மூன்று ..
ஐந்தாம் இடத்திலிருந்த ஷூமேக்கர் இப்போது டயர் மாற்றம் ஆனால் Soft Compound .கடைசி பதினைந்து சுற்றில் ஏதோ தற்காப்பை கருதி இதை செய்யலாம் .ஆனால்இது இரண்டு முறை மட்டுமே முன்னணியில் மாற்றும்போது இவர் மூன்றாம் முறை டயர் மாற்றம் செய்துள்ளதால் கார் ஒத்துழைப்பை இழந்த நிலையில் ஷூமேக்கரின் முடிவில் ஒரு காரணம் இருக்கும் .
ஐம்பத்தி நான்கு ..
மீண்டும் வெட்டலின் கார் களத்தின் ஓரத்திற்கு சென்று திரும்பியது .அந்த பதஷ்டம் அணியை பயமுறுத்தியது .
ஐம்பத்தி எட்டு .
மூன்றாம் சுற்றில் போட்டியிலிருந்து விலக விரும்பிய ஹெமில்ட்டன் இப்போது நிறைவேறியது .டயர் பஞ்சர் .இனியும் தொடர்வதில் அர்த்தம் இல்லை என அணி முடிவுசெய்து அழைத்துவிட்டது .
அறுபது ..
கடந்த ஆறு போட்டிகளுக்கு பிறகு பட்டனின் காரின் உற்சாகம் மிக அருமையான வெற்றியை நோக்கி பயணித்து மன்னிக்கவும் பாய்ந்து கொண்டு இருந்தது ..ஒருபக்கம் ஹெமில்ட்டனின் வெளியேற்றம், மறுபுறம் பட்டனின் இரண்டாம் இடம் .
அறுபத்தி இரண்டு ..
பட்டனுக்கும் - ஆலோன்சாவுக்கும் இடையே 1.5 வினாடிகள் அவ்வப்போது குறைந்தும் கூடியும் கொண்டே இருக்க ஆனால் பட்டனை தொடரும் வெட்டல் நிச்சயம் இரண்டாம் இடத்தை டயரின் ஒத்துழைப்பை இழந்தாலும் பெறுவதில் தீவிரம் காட்டிகொண்டு இருப்பது மெக்லரண் அணிக்கு நல்லதல்ல .
63 - 64 - 65 - 66 சுற்றுக்கள் ..கேமிராவின் பார்வை வெட்டல் - ஜென்சன் மேல் இருந்தது .வினாடிகளில் இருந்த இருவருக்கும் இடைவெளி வினாடிகளுக்கு கீழே போய்கொண்டு இருந்தது .எந்த நேரமும் ஜெர்மனியன் பின்னுக்கு தள்ளலாம் .ஹெமில்டன் ஏற்கனவே பட்டனுக்கு உதவிய குறுக்கு வழி கோபம் இருந்ததால் வெட்டலின் காரில் வேகத்தை விட ஒருவித வெறி இருந்தது களத்தின் ஓரங்களில் டயர் கதறியது .வெட்டல் இலக்கு மேக்ளரனை வீழ்த்துவது மட்டுமே .

வெட்டலின் கார் ஒருசில சமயத்தில் மெக்ளரனை தொட்டுவிடுமோ என்ற நிலையில் முதல் வளைவில் வெட்டலின் கார் Off the Track என்ற நிலையில் முழு நான்கு சக்கரனகளும் களத்தை விட்டு வெளியேறி ஜென்சனை முந்தி சென்றது .இதனால் மிக கடைசி நேரத்தில் பின்னுக்கு தள்ளப்பட்ட ஜென்சன் ரேடியோவில் முறையிட்டார் .அதற்குள் போட்டி முடிவுக்கு வந்தது .இது விதி மீறலா என்பதை FIA வின் சட்டம் ஆய்விற்கு அனுப்பட்டது .
ரெட்புல்லின் தலைமை இந்த விசயத்தை மிக சாதரணமாக எடுத்துகொள்ள வாதிட்டது .ஆனால் இந்த ஆண்டில் இதே முறையில் ஒரு தவறை பஹரைன் ரேசில் நிக்கோ ரோஷ்பெர்க் செய்தார் அப்போது வழங்கப்பட்ட தீர்ப்பை சுட்டிகாட்டியது .ஆனால் இங்கு நடந்த விஷயம் வேறு .எப்போதும் தவறை அதற்க்கு முன் சம்பந்தப்பட்டவர் செய்து இருக்கிறரா அல்லது முதல் முறையா என ஆய்வு செய்வார்கள் .அப்படி பார்க்கும்போது வெட்டல் இந்த Off the Track பிசினசை பல முறை செய்துள்ளார் .அது மட்டுமல்ல அன்று ரோஷ்பெர்க்கின் இதே தவறுக்கு முக்கியமான காரணம் விபத்தை தவிர்க்க செய்தது .எனவே இங்கு தீர்ப்பு ஒரே முறையில் எதிர் பார்ப்பது தவறு .பிறகு பேசுவோம் .

முதல் இடம் ..
பெர்னாண்டோ அலோன்சா - பெர்ராரி .கடைசி வரை ஒரு அருமையான ட்ரைவிங்கை வெளிப்படுத்தி மொத்த 67 சுற்றுக்களையுமே ( Q3 )  கடைசி தகுதி சுற்றில் பாத்து கார்களை வெற்றி பெற எடுத்துகொள்ளும் வேகம் ஆலோன்சாவிடம் இருந்தது .இங்கு வெற்றிக்கு காரின் தொழில் நுட்பத்தை விடவும் ஆலோன்சாவின் பங்கு அதிகம் .

இரண்டாவது இடம் .
செபாஸ்டியன் வெட்டல் - ரெட்புல் ரெனால்ட் .இந்த வெற்றி பரிசீலனைக்கு உட்பட்டு இருக்கிறது .இருந்தாலும் பரிசு வாங்குவதற்கு முன் டிரைவர்கள் எடை பார்த்துவிட்டு ,முதல் மற்றும் இரண்டு ,மூன்று இடத்திற்கான எண்ணுள்ள தொப்பிகளை பெறும்போது ஜென்சன் பட்டனும் ,வெட்டலும் பேசி கொள்ளும்போது வெட்டல் முகத்தில் அடித்தாற்போல வெட்டல் பதில் இருந்தது .நீங்கள் தடுத்தீர்கள் நான் முன்னேறி செல்ல வேண்டியாகிதாகிவிட்டது என மிக சாதரணமாக சொன்னார் .இதே பதிலை பரிசு பெற்ற பிறகு மேடையிலும் பேட்டியின் போது ஒருவித முக இறுக்கத்துடன் பதில் பேசும் போதும் தவறில்லை என்றாகவே இருந்தது .
 மூன்றாவது இடம் ..
ஜென்சன் பட்டன் - மெக்லரண் மெர்சடிசீஷ் .முதல் போட்டியில் முதலிடம் மூன்றாவது போட்டியில் இரண்டாம் இடம் .இதுவரை நடந்த பத்து போட்டிகளில் இது மூன்றாவது வெற்றி .அதுவும் ஜெர்மன் களத்தில் .பட்டன் விரைவில் பார்ம் அடைவார் .

போட்டி நடந்த சில நாளுக்கு பிறகு ஜென்சன் பட்டனின் கோரிக்கைக்கு சாதகமான தீர்ப்பு - Breach of article 5.5.3 of the technical regulation சரத்துப்படி FIA வின் Stewards வழங்கினார் .அது மட்டுமல்ல அந்த தீர்ப்பு மிகவும் அழுத்தமானதும் வருங்காலத்தில் மற்ற டிரைவர்களுக்கு பாடமாக அமைந்தது .அது வெட்டல் காரின் முந்திசெல்லும் நடவடிக்கை முழுவதுமாக தவறான பாதையில் செல்கிறது .இதில் மோதலை தவிர்க்கும்  பிரயர்த்தனமோ அல்லது விதியை பின்பற்றி முந்தி செல்லும் நடவடிக்கையோ துளியும் இல்லை என்பதுவும் அதற்கக்காக வெட்டலின் வெற்றி பெற்ற நேரத்தில் 20 வினாடியை கூட்டும்போது வரும் இடமே அவர் வெற்றி பெற்ற இடமாக கொள்ளவேண்டும் என தீர்ப்பானது .அதன் படி வெட்டலின் இரண்டாவது இடத்தை பெற எடுத்துக்கொண்ட நேரத்தில் 20 வினாடி கூட்டும்போது  1:31.22.870 என்ற நேரம் ஆகிறது இது நான்காம் இடமான 1.807 வினாடிகள் அதிகம் இருப்பதால் ஐந்தாம் இடத்தை வெட்டல் அடைகிறார் இதன் மூலம் இரண்டாமிடத்தில் கிடைக்கும் 18 புள்ளியை இழந்து  10 புள்ளிகளை பெருகிறார் .

அந்தமூன்றாம்  இடத்தை லோட்டஸ் ரெனால்ட்டின் - கிமி ரைகொணன் பெற்றார்

ஆக மொத்தத்தில் ஜெர்மானியர்களுக்கு கோப்பை இல்லை .சவாலே சாபமாக போய்விட்டது .போன ஆண்டு கூட 2010 ஆண்டுக்கு பிறகு (அதுவும் வெட்டல் மூன்றாம் இடம் .) அந்த இடம் காலியாகவே உள்ளது .கடைசியாக அண்ணன் மைக்கேல் ஷூமேக்கர், கடந்த 2006 ல் - முதல் இடம் வந்து சிறப்பு செய்ததே இன்னும் (கடந்த கால )வரலாறாக இருக்கிறது .

கடந்த போட்டோ விசயத்தில் நாம் பார்த்தது Gabriella Tarkany Samantha ,நண்பர் வில்லியம்ஸ் ரெனால்ட்டின் - பாஷ்ட்டர் மால்டோனாடாவின் காதலி .
இந்த மனிதன் காரில் பறப்பதை விட காதலியுடன் பறப்பதை விரும்புவார்போல !


Saturday, July 21, 2012

ஜெர்மன் தேசத்து ஓட்டுனர்களுக்கு சவால் !



 நாளை நாம் பார்க்க இருப்பது பார்முலா 1 ன் பத்தாவது சுற்று போட்டி அது ஜெர்மனியின் - Hockenheimring circuit ல் இந்திய நேரப்படி மாலை 5: 30 க்கு நடக்க இருக்கிறது .பதினேழு வளைவுகளை கொண்ட இந்த களத்தின் ஒரு சுற்றின் நீளம் 4.574 கி.மீ .இந்த தூரத்தை ஒரு போட்டி கார் 67 சுற்றுக்கள் சுற்றி முடிக்கும்போது கடக்கும் தூரம் 306.458 கி.மீ கடந்து இருக்கும் .மிக கடுமையான வளைவுகள் காரின் முழு வேகத்தை பயன்படுத்த முடியாத களம்

இது அதனால் ஒருமுறை இந்தகளத்தை கடக்க சுமார் 46 முறை கியரை உயர்த்தி ,குறைக்க வேண்டும் .அதுமட்டுமல்ல இந்த களத்தின் ஓடுபாதை அகலம் சுமார் 50 அடிக்குள் இருப்பது , முந்தி செல்லும் கார்களுக்கு வாய்ப்பு அதிகம்  .கடந்த 2002 ஆம் ஆண்டில் - Herman Tilke எண்ணத்தில் உருவான களத்தின் மொத்த ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் அளவு ஒரு லட்சத்து இருபதாயிரம் .இந்த களத்தின் வேக நாயகன் 2004 ல் மெக்லரண் மெர்சடீசின் - கிமி ரைகொணன் .


இந்த தேசத்து கார்கள்
இந்தகளத்தில் சொந்த தேசத்து காரர்களான மெக்லரண் மெர்சடீசின் - மைக்கேல் ஷூமேக்கர் , நிக்கோ ரோஷ்பெர்க் அடுத்து ,சஹாரா போர்ஸ் இந்திய அணியின் - ஹுல்கேன் பெர்க் ,ரெட்புல்லின் சிங்கம் - செபாஸ்டியன் வெட்டல் , மருஷ்ய காஷ்வோர்தின் - திமோ கிலோக் என  ஐவர் பட்டாளம் வெகு முனைப்பாக வெற்றியை பதிவு செய்ய காத்து இருக்கிறது.கடந்த ரேசில் ( 2010 ) இங்கு வெற்றி பெற்றது ரெட்புல்லின் சிங்கம் - வெட்டல்  என்பது குறிப்பிடத்தக்கது .( போட்டோவில் போட்டி களம் என்று நினைத்து வெப்பர் குறுக்கே வந்துவிட்டார் )



சரி நாம் பயிற்சி போட்டி தகவலை சேகரிப்போம் ..
வெள்ளிகிழமை  நடந்த முதல் பயற்சி போட்டியில் மெக்லரண் மெர்சடீசின் - ஜென்சன் பட்டன் . நேரம் - 1:16.595
இரண்டாவது பயிற்சி  போட்டியில் வில்லியம்ஸ் ரெணால்ட்டின் - பாஸ்டர் மல்டோனடோ  - 1:27.476
சனிகிழமை நடந்த - மூன்றாவது பயிற்சி போட்டியில் , பெராரியின் - பெர்னாண்டோ அலோன்சா - 1:16.014

(Picture Old)
தகுதி போட்டி
Q1ல், இருபத்தி நான்கு கார்களில் மிக அதிவேகத்தை பதிவு செய்ததும் 107% நேரத்தை நிர்ணயம செய்தது .இந்த களத்தின்  r வேக நாயகன் கிமி ரைகொணன் - 1:15.693 + (107%) 0.5.298 =  1:20.991.இந்த நேரத்திற்குள்  எல்லோரும் கடந்து விட்டார்கள் .
Q2 ல், பதினேழு கார்களில்  மெக்லரண் மெர்சடீசின் - லீவிஸ் ஹெமில்ட்டன் 1:37.௩௬௫
Q3,ல் கடைசி பத்து கார்களில் முதலிடத்தை தக்கவைத்துகொண்டவர் - பெராரியின் - பெர்னாண்டோ அலோன்சா - 1:40.621
இரண்டாவது - ரெட்புல்லின் செபாஸ்டியன் வெட்டல் ,மூன்றாவது அதே அணியின் மார்க் வெப்பர்.
நம் கணக்கு படி முதல் பத்து  இடங்களில் மூன்று   இடம் ஜெர்மானியர்கள் .2 ல் வெட்டல், 4 ல்  ஷூமேக்கர் ,5 ல் ஹுல்கேன் பெர்க்  .இது மட்டும் போதாது .களத்தின் வெற்றியே இதை உறுதி  செய்யும் .


நாளை மாலை போட்டியை பார்க்குமுன் ஒரு ஆறுதலான செய்தி - மௌரிஷ்ய காஷ் வோத்தின்  -   பெண் டெஸ்ட் டிரைவர்  மரியா  டி வில்லோட தன்னுடைய சொந்த நாட்டிற்கு அனுப்பபடுகிறார் .அங்கு அவருக்கு முழு சிகிச்சை கண்காணிப்பில் இருப்பார் என சொல்லபடுகிறது .


நாளை நடக்கும் போட்டியில் இவர்கள் எந்த பக்கம் கை தட்ட போகிறார்கள் என்பது தெரியவில்லை .ஆனால் இவர்களை பார்த்து பலபேர் தட்டுவார்கள்
-

மார்க் வெப்பர் - சில்வர் ஸ்டோன் நாயகன்

பார்முலா 1 ன் ஒன்பதாவது சுற்று போட்டி 2012 British Grand Prix கடந்த ஞாயிறு ஜூலை 08 ஆம் தேதி Silver stone Circuit ல் நடந்தது .விறுவிறுப்பான கட்டத்தை போட்டிகள் முடிவுகள் எட்டியிருந்தாலும் ,பார்முலா போட்டிகளின் பழைய முடிவுகளை பற்றிய சூத்திரம் இப்போது செல்லுபடியாகாமல் போய் கொண்டு இருப்பது கவனிக்க வேண்டியதாகிவிட்டது .

முதல் மூன்று இடத்தில் தொடங்கிய போட்டியாளர்கள் எப்படியும் கடைசியில் முதலிடத்தை பிடிப்பார்கள் என்பதுவும் DRS மற்றும்  KERS தொழில் நுட்பத்தில் முன்னேறிய அணிகள் மட்டுமே ( சென்ற ஆண்டை போல ) முதலிடத்தை பிடிப்பார்கள் என்ற சமீபத்திய புள்ளி விவரங்கள்கூட கைகட்டிக்கொண்டு நிற்கிறது இப்போது உள்ள நேரத்திற்கு ஏற்றார்போல டயர் தேர்வு தொழில்நுட்பம் .ஆம் இங்கு -  Silver stone Circuit ல் நடந்தபோட்டியின் முடிவுகள் இதுதான் என்று முடிவு செய்து விட்டு பெராரியின் குதிரை சந்தோசமாக ஓடிக்கொண்டு இருந்தபோது இரண்டு முரட்டு காளைகள் அதை பின்னுக்கு தள்ளி அதிர்ச்சி கொடுத்த நிகழ்வை பற்றிதான் இங்கு பேச போகிறோம் .


போட்டிக்குள் பயணிப்போம் ..
இந்திய  நேரப்படி மாலை 5:30 க்கு போட்டி ஆரம்பித்தது .முதல் வரிசை இந்த முறை ஒரு அருமையான களத்திற்கு வெளியே போட்டியாக கருதப்படும் பெராரி - முதலிடத்திலும் , ரெட்புல் ரெனால்ட் - இரண்டாம்  இடத்திலும் ,மெர்சடீஷ் மூன்றாம் இடத்திலும் ( இங்கு இன்னொரு போட்டியாளர் மெக்லரண் மெர்சடீஷ்  மிஸ்ஸிங். ) இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே கேட்டார் ஹாமின் Vitaly Petrov கார்  எஞ்சின்  பிரச்னையால் கலந்து கொள்ளவேயில்லை என்பது முதல் சோகம்பார்முலா 1 ன் ஒன்பதாவது சுற்று போட்டி 2012 British Grand Prix கடந்த ஞாயிறு ஜூலை 08 ஆம் தேதி Silver stone Circuit ல் நடந்தது .விறுவிறுப்பான கட்டத்தை போட்டிகள் முடிவுகள் எட்டியிருந்தாலும் ,பார்முலா போட்டிகளின் பழைய முடிவுகளை பற்றிய சூத்திரம் இப்போது செல்லுபடியாகாமல் போய் கொண்டு இருப்பது கவனிக்க வேண்டியதாகிவிட்டது .
அணிவீரர்கள் வரிசை
1.பெர்னாண்டோ அலோன்சா ,2.மார்க் வெப்பர் ,3. மைக்கேல் ஷுமேக்கர் ,4.செபாஸ்டியன் வெட்டல் ,5.பிலிப் மாசா ,6.கிமி ரெய்கொணன் ,7.பாஸ்டர் மல்டோனடோ ,8.லீவிஸ் ஹேமில்டன் ,9.ரோமின் க்ரோஜியன் ,10.பௌல் டி ரெஸ்டா .
முதல் சுற்று ..
அலோன்சா மிக நம்பிக்கைக்குரிய துவக்கத்தை ஆரம்பிக்க ,அதை முறியடிக்க வெப்பர் ஒரே நேர்கோட்டில் முந்த முயன்று மெல்ல பெர்ராரியின் காரை தொட்டு விட்டு முதலிடத்தை பிடிக்கும் முயற்சியை திரும்ப பெற்றுக்கொண்டார் .பௌல் டி ரெஸ்டா டயர் பஞ்சர் .மெல்ல பிட் லேன் திரும்பிய அவரின கார்கேரேசுக்குள்  தஞ்சம் புகுந்தது 

எந்த வித குழப்பமும் இல்லாமல் அவரவர் இடத்தை முதல் ஐந்து வீரர்களும் தக்க வைத்துகொள்ள ,அடுத்த ஐந்து இடத்தில் ரோமின் க்ரோஜியன் சற்று ஒரு சுழற்சியில் ஒன்பதாம் இடத்தை இழந்து பின் தங்கினார் .


இரண்டாவது சுற்று ..
பதினாறாம்  இடத்தில் தொடங்கிய மெக்ளரனின்- ஜென்சன் பட்டன் ஒரே தாவலாக பதினான்கில் வந்து கொண்டு இருந்தவரை பின்தங்கிய க்ரோஜியன் போட்டிக்கு போட்டியாக முந்த முயற்சித்தார் முடியாது போகவே தன்னுடைய Soft Compound டயரை கழற்றி வீசிவிட்டு Hard Compound டயரை தேர்வு  செய்தார் .இது ஒரு நல்ல முடிவுதான் அடுத்து பத்து சுற்றுக்கு பிறகு தேர்வு செய்ய வேண்டியதை   இப்போது செய்துவிட்டார் .


மூன்றாவது சுற்று ..
வெட்டலின் நான்காம் இடத்தை வெகு முனைப்பாக கைப்பற்றும் முயற்சியில் ஐந்தாம் இடத்து மாசா முயற்சிக்க ,இரண்டு கார்களும் பல வளைவுகளில் ஒரே கோட்டில் Wheel to wheel போட்டியிட்டுகொண்டன ..இந்த பல பரிட்சையில் வெட்டலின் Front wing ன் ஒரு சிதைவு பறந்து போவது தெரிந்தது .மிகப்பெரிய சேதம் தவிர்த்து கொண்டார்கள் .


ஏழாவது சுற்று ..
நான்காம்  இடத்து மாசா  ஏழாம் Luffield வளைவிலும் பதிமூன்றாம் Chapel முனையிலும் மிக நெருக்கமாக வந்து முந்த தீர்மானித்தார் .முடியவில்லை .ஆனால் மெர்சடிசீன் சூமேக்கர்  தடுப்பாட்டம் செய்தாரே தவிர இது நீடிக்காது என்பது புரிந்தது .மெர்சடிசீன் வேகம் பெர்ராரியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க தயங்குவது நல்லதல்ல .


பதினோராவது சுற்று ..
இப்போது வெட்டலின் கார் டயர் மாற்றத்திற்கு வந்தது .காரணம் சில திட்டங்கள் ரெட்புல் அணியிடம் இருக்கிறது .இப்போது வெட்டலின் டயர் தேர்வு Hard Compound .மீண்டும் வெட்டல் பதினைந்தாம் இடத்தில் தொடர ,,இந்த தருணத்தை பயன்படுத்த காத்திருந்த மாசா இப்போது மூன்றாம் இடத்து ஷூமேக்கரை முந்தினார் .
 பதிமூன்றாம் சுற்று ...
சாபர் பெர்ராரியின் - Sergio Pérez - வில்லியம்ஸ் அணியின் - Pastor Maldonado இருவரும் டயர் மாற்றி வெளியே வந்தவர்கள் ஒரே துரத்தலாக இருக்க அது விபத்தில் முடிந்தது .வளைவில் மிக மோசமாக செர்ஜியோ பெரஸ் கார் தாக்கப்பட்டது .ஸ்டூவர்ட் சட்டப்படி சுமார் எட்டாயிரம் ஈரோ அபராதத்தை சந்தித்துள்ளார் மல்டோனடோ ! அது மட்டுமல்ல இந்த விபத்தை பற்றி பாதிக்கப்பட்டு வெளியேறிய பெரஸ் ,மால்டோனடோ மிக ஆபத்தானவர் என வருணித்துள்ளார் . ஆஸ்ட்ரேலியா போட்டியில் இவர் புண்ணியத்தில் லோட்டஸ் அணியின் ரோமின் க்ரோஜீயன் வெளியேறினார் அடுத்து மொனாக்கோ ரேசில் இதே பெர்ஷுடன் அதர்க்கு அடுத்து ஐரோப்பிய போட்டியில்  ஹேமில்ட்டன் .. நீண்டு கொண்டே போகிறது இவரின் மோதி விளையாடும் பணி .அப்படியானால் பெரஸ் சொல்வது "He's a very dangerous driver and he can hurt someone," உண்மைதானோ ?


பதினைந்து ...
மூன்றாம் இடத்தை இழந்த ஷூமேக்கர் உடனடியாக டயர் மாற்றம் வர ,அவரும்  Hard Compound டயரை தேர்வு செய்து விட்டு பதிமூன்றாம் இடத்தில் தொடர ..


பதினான்காம் சுற்று ..
இப்போது மாசாவும்   Hard Compound டயரை தேர்வு செய்து பத்தாம் இடத்தில் தொடர


பதினைந்து ..
இரண்டாம் இடத்து வெப்பர் Hard Compound டயர்மாற்றி நான்காம்  இடத்தில் தொடர ..
ஆலோன்சாவும் டயர் மாற்றம் Hard Compound தேர்வு செய்து மீண்டும் இரண்டாம் இடத்தில் தொடர ..
இப்பொழுது எலாம் இடத்தில் தொடர்ந்து கொண்டு இருந்த வெட்டல் மிக சாதரணமாக ஆறாம் இடத்து ஜான்சன் பட்டனை முந்தினார் .


இப்போது வீரர்களின் வரிசை ..
1.ஹேமில்டன்2அலோன்சா.3.வெப்பர்4.வெட்டல்5.மாசா6.ஷுமேக்கர்7.ரெய்கொணன்8.க்ரோஜியன்9.கோபாயாசி10.ஹுல்பெர்க் முதல் எட்டு இடங்கள் பிய்த்து போட்டது போல சற்று இடம்  மாறியிருந்தார்கள் .


பத்தொன்பது ..
ஹெமில்டனின் முதலிடம் நிலைக்கவில்லை ..மாசா இப்போது முதலிடம் .காரணம் இந்த ஆண்டில் பெர்ராரி எஞ்சினின் பிரமாதமான முன்னேற்றம் மெக்ளரனில் இல்லை . ஹெமிடன் காரின் டயர் Hard Compound மாற்றபடாததால் , களத்தின்  31“°C”  வெப்ப மாற்றத்தோடு போராடிக்கொண்டு இருந்தது .


இருபத்தி ஒன்று
இனி என்னால் பொறுக்க முடியாது என்று கதறிய  ஏழாம் மாற்றிய அவருக்கு இப்போது Soft Compound டயரை தேர்வு செய்தார்கள் .ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடிக்கும் திட்டம் இப்போது மெக்லரண் அணியிடம் இருந்தது .எந்த இடம் ?


இருபத்திநான்கு ..
ரைகொணன் , ஹேமில்டன் இப்போது முறையே  ஆறாம் ஏழாம் இடத்து இருவரும் அந்த இடத்திலிருந்து ஷூமேக்கரை பின்னுக்கு தள்ளி ஐந்தாம் ஆறாம் இடத்தை அடைந்தார்கள் .


இருபத்தி ஒன்பது ..
 ஹேமில்டன் திடீரென டயர் மாற்றத்திற்கு வந்து மீண்டும் இப்போது  Hard Compound டயரே தேர்வு செய்து பனிரெண்டாம் இடத்தில் தொடர ..


முப்பத்தி ஒன்று ..
இப்போது வெட்டல் ,ஜென்சன் பட்டன் ,வெப்பர் மூவரும் ஒருவர் பின்னால் ஒருவராக டயர் மாற்றம் வந்தாலும் மூவருமே இம்முறை தேர்வு செய்தது  Hard Compound டயர் .ரெட்புல்லை பொறுத்தவரை எதோ முடிவு செய்து விட்டார்கள் .


முப்பத்தி நான்கு + ஐந்து .
கொபாயாஷி ஆறாம்  இடத்து ஷூமேக்கரை பின்னுக்கு தள்ள இனியும் தாமதம் வேண்டாம் என்று முடிவு செய்த ஷூமேக்கர் இந்த சுற்றின் முடிவில்Hard Compound  டயர் மாற்றம்  செய்ய பதினோராம் இடத்தில் தொடர ,அவருக்கு முன் ஐந்தாம் இடத்து ரைகொணன் Hard Compound ஐ மாற்றி பத்தாம் இடத்தில்  தொடர்ந்தார் .



முப்பத்தி எட்டு .-
ஒரு கேள்வி குறி ?
முதலிடத்து அலோன்சா இப்போது டயர் மாற்றம் .ஆனால் தேர்வு செய்தது  Soft Compound ஐ .இது என்ன குழப்பம் .நல்லாதானே போய்கொண்டு இருந்தது ? ஆனால் மீண்டும் முதலிடத்தில் தொடர்ந்தார் .ஒருவேளை எந்த நேரமும் மார்க் வெப்பரால் தனக்கு பிரச்சனை ஏற்படும்  என்று முன்னேற்பாடாக இருக்கலாம் .இருந்தாலும்    Soft Compound ஐ பொருத்தவரை - களத்திற்கும் காருக்கும் இடையே உள்ள பிடிப்பை ( Grip ) அதிகமாக்கும் , ஆனால் விரைவில் தேயும் , வெப்பத்தை தாங்கும் தன்மையுடையது .அதனால்தான் தகுதி சுற்றிலும் , ரேஸின் துவக்கத்திலும் வளைவுகளை - இதன் நெகிழ்வுதன்மைக்காகவும்   ( Flexible ) , வேகத்தை அதிகபடுத்த போன்ற காரணங்களுக்காக இது உபயோகப்படுத்தபடுகிறது .ஆனால்  Hard Compound  அப்படியல்ல.இது தேயும் தன்மை குறைவு ஆனால்  மேற்ப்படி சமாச்சாரங்கள் இல்லை எனவே இந்த தேர்வில் ஒரு கேள்வி குறி  இருக்கிறது ..




தடங்கலுக்கு வருந்துகிறோம் - இது விளம்பரநேரம் ) 


தற்போதைய ஜென்சன் பட்டனின் புள்ளிபட்டியலில் பின்னடைவை நம் Commercial Break குக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்




நாற்பத்தி ஐந்து ..
இது ஒரு முக்கியமான சுற்றாக வருணிக்க படுகிறது .ஆம் இந்த சுற்றில் ரெட்புல்லின் அணி தலைவர் Christian Horner டமிருந்து இரண்டாம் இடத்து மார்க் வெப்பருக்கு - "அது கமான் வெப்பர்" அலோன்சாவை இப்போது கடக்கும் தருணம்  என்பதுவே .


நாற்பத்தி ஆறு ..
அலோன்சாவுக்கு பின்னால் ஏழு காரும் Hard Compound - இப்போது ஆலோன்சாவுக்கும் வெப்பருக்கும் இடையே உள்ள தூரம் மூன்று வினாடிகளில் இருந்து மெல்ல குறைய தொடங்கியது ..


நாற்பத்தி எட்டு ..
ஆம் .ஆலோன்சாவின் தவறான டயர் தேர்வுக்கு பலன் கிடைத்தது .அலோன்சாவை இன்னும் நான்கு சுற்றுக்கள் மீதம் இருக்கும்போது ரெட்புல்லின் அணி கட்டளையை வெப்பர் நிறைவேற்றினார் .இரண்டாம் இடத்து அலோன்சாவை வெட்டல் விடுவாரா ?


ஐம்பது ..
வேட்டளிடம் இரண்டாம் இடத்தை தரகூடாது என்பதில் அலோன்சா மிக பாதுகாப்பாக இருக்க ..மாசாவின் நான்காம் இடத்தை குறிவைத்த ரைகொணனை காமிராக்கள்  உன்னிப்பாக கவனிக்க ..


ஐம்பத்தி ஒன்று..
Silver stone Circuit ல் நடந்தது .விறுவிறுப்பான கட்டத்தை போட்டிகள் முடிவுகள் எட்டியிருந்தாலும் ,பார்முலா போட்டிகளின் பழைய முடிவுகளை பற்றிய சூத்திரம் இப்போது செல்லுபடியாகாமல் போய் கொண்டு இருப்பது கவனிக்க வேண்டியதாகிவிட்டது .
ஐம்பத்தி இரண்டு கடைசி சுற்று ..


முதலிடம் .
ரெட்புல்லின் மார்க் வெப்பர்.கடந்த ஆண்டின் 19 போட்டிகளில் கடைசி பிரேசில் போட்டியில் மட்டுமே முதலிடம் பிடித்த வெப்பர் ,இந்த ஆண்டு ஒன்பது போட்டிகளில் இரண்டு முறை முதலிடம் வந்து இருக்கிறார் .இதுவரை 116 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் .35 வயதான மார்க் ஆலன் வெப்பரின் இந்த முதலிட வெற்றி ஒன்பதாவது முறையாகும் .கடந்த பதினோரு  வருட பார்முலா 1 வாழ்கையில் இந்த ஆண்டு அவருக்கு சிறந்த ஆண்டாக உள்ளது .
இரண்டாவது இடம் .
பெராரியின் - பெர்னாண்டோ அலோன்சா .மிக அருமையான தன்னுடைய நம்பிக்கையில் அலோன்சா இந்த ஆண்டில் ஓட்டுனர்களில் முதலிடத்தில் 129 புள்ளிகளுடன் இருக்கிறார் .
மூன்றாவது இடம் ...
ரெட்புல்லின் - செபாஸ்டியன் வெட்டல் ..இந்த ரேசில் பெற்ற 15 புள்ளிகள்மூலம் 100 புள்ளிகளை   F1 - ல்செஞ்சரி அடித்தார் .


வழக்கத்திற்கு மாறாக ***

 * பரிசுகள் பெறும் போடியத்தில் கேமிராக்கள் தயாராகும் முன்னரே வெப்பர் 'போடியம் ஜம்ப்' செய்ய ,அந்த ஜம்பை பலவிதத்தில் வம்பு செய்து போட்டுவிட்டார்கள் அதில் ஒன்று இங்குசர்கஸ் சாகசமாக  .ஆனால் வெப்பர் இந்தவெற்றி தன்னுடையது மட்டுமல்ல என்பதால், மிக சாதரணமாக இருந்தார் ,


* வழக்கத்திற்கு மாறாக , முன்னாள் மூன்றுமுறை F1 சாம்பியன் - Sir John Young 'Jackie' Stewart போடியத்தில் பேட்டிஎடுத்தார்.


* மாசாவும் - வெப்பரும் வெற்றியை பெற்று தந்த அணிக்கு சாம்பெயின் ஸ்ப்ரே செய்வதை விட்டு விட்டு வழக்கத்திற்கு மாறாக போடியத்தில் பரிசு எடுத்து வந்து விட்டு ஓரமாகா நின்று கொண்டு இருக்கும் அழகிகளை  சாம்பெயின் ஸ்ப்ரே மூலம் அபிஷேகம் செய்தார்கள் .





நாம்  முந்தய பதிவில் - Silver stone Circuit - ஏழு அணிகளுக்கு பயிற்சி இடம் என்று வருணித்து இருந்தது போல இந்த முறை  Silver stone க்கு சொந்தமான ஐந்து அணிகளின் எட்டு வீரர்கள் முதல் இடம் மற்றும் பத்து இடங்களை கைப்பற்றி இருக்கிறார்கள் - பெராரியை தவிர (மீதி இருவர்கள் ) 






சென்ற பதிவில் நாம் பிரார்த்திகொண்ட மௌரிஷ்ய காஷ் வோத்தின்  -   பெண் டெஸ்ட் டிரைவர்  மரியா  டி வில்லோட ஆபத்தான நிலைமைகளை கடந்து விட்டார் .சீரான கேம்ப்ரிட்ஜில் உள்ள Addenbrooke’s மருத்துவமனையில் தொடர்  சிகிச்சையில் இருக்கும் அவர் “a critical but stable condition” என்ற நிலையை தாண்ட வில்லை கடந்த புதன் கிழமை இரவு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது .அவரின வலது கண்ணை இழந்து விட்டார் ,முகத்தின் மற்றும் தலைப்பகுதிக்கான சிகிச்சை தொடர்கிறது .மீண்டும் பிரார்த்திப்போம்.

ஸ்பெயின் வெற்றிபற்றிய பதிவில் ( http://f1inindia.blogspot.in/2012/06/blog-post_29.html ) நாம் ஒரு அழகிய போட்டோ பற்றி பேசவில்லை அவர் - Tschumitschewa Xenia ரஷ்ய தேசத்து கவர்ச்சி மாடல் அழகி ஆனால் அது முக்கியமில்லை இப்போது அவர் இப்பொது புள்ளி பட்டியலில் முதிலடத்தில் இருக்கும் பெர்னாண்டோ ஆலோன்சாவின் காதலி - என்பதுவே கூடுதல் தகவல் .கடந்த டிசம்பர் மாதம் பழைய மனைவி Raquel del Rosario வுடனான ஐந்து வருட மணவாழ்க்கையை முறித்துகொண்டவுடன் இப்போது Tschumitschewa Xenia .
இன்று மாலை நாம் சந்திக்கும் முன் இன்னொரு அறியாத முகத்தை பாருங்கள் .சமீபத்தில் நிறைய பார்முலா  வீரகளுக்கு ஓய்வு தரும் நல்ல வீரரின் ! காதலி .ஜெர்மன் கிராண்ட்  பிரிக்ஸ் போட்டியின் தகுதி சுற்றி பற்றி பேசும்முன் இவரை பற்றி யோசிப்போம் 

Saturday, July 7, 2012

F1 in India: வேகம் எனும் மொழி: Silver stone Circuit - ஏழு அணிகளுக்கு பயிற்சி இடம் .

F1 in India: வேகம் எனும் மொழி: Silver stone Circuit - ஏழு அணிகளுக்கு பயிற்சி இடம் .

Silver stone Circuit - ஏழு அணிகளுக்கு பயிற்சி இடம் .


Home  Circuit 


பார்முலா 1 போட்டியின் ஒன்பதாவது சுற்று United Kingdom ல் உள்ள Silver stone Circuit ல்2012 British Grand Prix என்ற பெயரில்  நடக்க  இருக்கிறது. சில்வர்ஸ்டோன்  சர்க்யூட்களம் மிக பழமையான கள பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறது .

Red Bull Headquater
அது மட்டுமல்ல இன்றுள்ள பனிரெண்டு அணிகளில் ஏழு அணிகளின் தலைமையகம் ( Base ) இங்குதான் அமைந்து இருக்கிறது  1.Caterham-Renault-Hingham 2.Lotus-Renault-Enstone 3.Marussia-Cosworth - Banbury 4.McLaren-Mercedes - Woking 5.Mercedes -Brackley 6.Red Bull-Renault - Milton keynes 7.Williams-Renault -  Grove .எனவே சொந்த களம்போல டிரைவர்கள் மிக பலமான சவாலை தருவார்கள் .போட்டி மிக கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம் .


களத்தின் மாற்றங்கள் 
18 வளைவுகளை கொண்ட இந்த களத்தின் ஒரு சுற்றின் நீளம்  5.891 கி.மீ . 52 சுற்றுக்களை நிறைவு செய்யும் ஒரு F1 கார் கடக்கும் தூரம்  306.198 கி.மீ இந்த களம்  மொத்த தூரத்தில் பல்வேறு   மாற்றங்களை சந்தித்துள்ளதால் இதன் வேக நாயகர்கள் கடைசியாக 2011 ல் பெர்ராரியின் - இன்றைய நம்பிக்கை  ம் நட்சத்திரம் ,111 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்குபெர்னாண்டோ அலோன்சா ,கடந்த 2011 ல் இவரின் அதிவேக பதிவு நேரம் 1:34.908 .

சோதனை மேல் சோதனை .


கடந்த போட்டியில் மௌரிஷ்ய காஷ் வோத்தின் திமோ கிளாக் வயிற்று உபாதையால் போட்டியில் கலந்து கொள்ளவில்லை .அவருக்கு பதிலாக அந்த அணியின் பெண் டெஸ்ட் டிரைவர்  மரியா  டி வில்லோட  (  Maria De Villota ) கலந்து கொள்வாரா என்று பேசப்பட்டது .ஆனால் ரிசர்வ் டிரைவர் மட்டுமே கலந்து கொள்ளமுடியும் என சொல்லப்பட்டதால் அது  கைவிடப்பட்டது .


 மரியா  டி வில்லோட கடந்த செவ்வாய் கிழமை இங்கிலாந்தில் உள்ள  Duxford Airfield circuit ல் ஏரோடைனமிக் சோதனை செய்துவிட்டு முடித்து களத்தை விட்டு வெளியேறும்போது அவரின காரில் எஞ்சின் வேகம் திடீரெனஉயர்ந்து களத்தின் ஓரத்தில் நிற்கும் அணியின் ட்ரான்ஸ் போர்ட் ட்ரக்கின் பின்புறம் மோதியது .அந்த மோதலில் அவரின தலைபகுதி மோசமாக தாக்கப்பட்டது .கோரவிபத்து .உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள Addenbrooke's Hospital லில் சேர்க்கப்பட்டார். அங்கு நள்ளிரவு வரையிலும் பலமுறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது .அவரின வலது கண்ணும் ,முகப்பகுதியும் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது இன்றும் அதற்க்கான அறுவை சிகிச்சை நடத்தப்படுகிறது .


விரைவில் குணமாக பிரார்த்திப்போம் .
இன்னொரு செய்தி இவரின் தந்தை Emilio de Villota பார்முலா 1 டிரைவர் .(1976 - 79 , 1981 - 82 ).


பயிற்சி  போட்டி .
நேற்று வெள்ளிகிழமை நடந்த முதல் பயிற்சி போட்டியில் லோட்டஸ் ரெனால்ட்  - ரோமின் க்ரோஜியன் முதலிடமும் அடுத்து அன்று மாலை நடந்த இரண்டாவது பயிற்சி போட்டியில் மெக்லரண் - லீவிஸ் ஹெமில்டனும் வந்தனர் .
இன்று சனிகிழமை நடந்த கடைசி பயிற்சி  போட்டியில் பெர்ராரியின் - நம்பிக்கை தூண் - பெர்னாண்டோ அலோன்சா .


தகுதி போட்டி .
Q1- முதல் தகுதி மற்றும் தலைவிதியை ( 107% ) நிர்ணயிக்கும் போட்டியில் இந்தமுறை இதழ் நிர்ணயம் செய்தவர் ரெட்புல் ரெனால்டின் -செபாஸ்டியன்  வெட்டல் அவர் எடுத்துக்கொண்ட நேரம் .1:46.279 + 0.7.439  =   1:53.718  நல்லவேளை யாரும் நீக்கம் பெறவில்லை .
Q2 - மெக்ளரனின் -லீவிஸ் ஹேமில்டன் -1:54.897 நேரத்தில் கடந்து அசத்தினார் .
Q3 - ஆனால்  கடைசி பத்து காரில்  பெர்ராரியின் தூண் - பெர்னாண்டோ அலோன்சா .1:51.746 முதல் இடம் .இரண்டாவது இடம் ரெட்புல்லின் மார்க் வெப்பர் ,மூன்றாம் இடம் அண்ணன் -மெர்சீடிஷின் -மைக்கேல் ஷூமேக்கர் .நல்ல போட்டி .

போட்டி நேரம் .

Paula Malai Ali and her fellow F1 commentators on ESPN Star Sports, Alex Yoong and Steve Dawson. 

நாளை மாலை 5:30 க்கு இந்திய நேரப்படி போட்டி தொடங்குகிறது .இப்போது போட்டிக்கு முன் வேறு ஏதும் முக்கிய போட்டிகள் இல்லாத பட்சத்தில் ESPN - Star T.V போட்டியை பற்றி விரிவாக பேசுகிறார்கள் .புதியவர்களுக்கு மிக முக்கியம் .பார்ப்போமா ?