உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, October 27, 2012

இந்திய ஃபார்முலா 1 திருவிழா .                               நாளை இந்தியாவில், இந்திய நேரப்படி  பிற்பகல் 3 மணிக்கு Airtel Indian Grand  Prix ஐ  உங்கள் வீட்டில் கால் மேல் கால் போட்டுகொண்டு ரசிக்க தயாராகிவிடுங்கள் .அருமையான போட்டியை இந்த  நேரில் சென்று பார்க்கும் வாய்பை இந்த முறையும் இழந்து விட்டேன் .என் பிரிய நண்பர் ஒருவர் புறப்படட்டு போகலாம் என அழைத்திருந்தார் .ஆனால் என்விருப்பம் வேறு .முன் அனுமதியும் ,சரியான வழிகாட்டுதலும் இல்லாமல் செல்ல மனமில்லை .( அலுவலகத்தில் போராடி விடுமுறை வாங்கி விடலாம் என்பது வேறு விஷயம் ) ஒன்று இந்திய வீரர்கள் இருவரின் மூலமாகவோ அல்லது முக்கிய அனுமதி மோட்டார் கிளப் வழியாகவோ பெற்று போக வேண்டும் .அல்லது ஃ பேஸ்புக் நண்பர் சுகுமாரின் நண்பர் சூனா மானா போன்றவர்களின் (இவர் இப்போது பெர்ராரி அணிக்காக பணிபுரிந்து கொண்டு இருக்கிறார் ) வெளிப்படையாக சொன்னால்  முக்கியத்துவம் இல்லாமால் போனால் யாரையும் நேரில்பார்த்து ஹலோ சொல்லகூட முடியாமல் போகலாம் .அடுத்த ஆண்டு நேரில் சென்று பார்த்து எழுத ஆசை .அதற்க்கு இன்னும் என் பதிவுகள் முக்கியத்துவம் பெற்றால் ( கடினமாக உழைத்து எழுதினால் ) வாய்ப்புகள் வரலாம் .( அல்லது எழுதுவதை நிறுத்தி எல்லோரையும் காப்பாற்றலாம் ).அடுத்த ஆண்டு இலக்கு-  நேரில் போய் எழுத வேண்டும் .சரி, இந்திய போட்டியில் பார்ப்போம் ..
பயிற்சி போட்டி .
                        எனக்கு வேலையே வைக்கவில்லை பயிற்சி போட்டி P1,P2,P3 தகுதி போட்டி Q1,Q2,Q3 எல்லாவற்றிலும் ரெட்புல் ரேனால்ட்டின் -செபாஸ்டியன் வெட்டல் முதலிடம் .அதே போட்டி வரிசையில் முதல் இரண்டு இடம் ரெட்புல் அணிக்கு அடுத்த இரண்டு இடம் மெக்லரண் மெர்சடீஷ் அணிக்கும் ,அதற்க்கு அடுத்த இரண்டு இடம் ஃபெர்ராரி அணிக்கும் மிக அபூர்வமாக அமைந்து இருக்கிறது .போட்டியும் அற்புதமாக இருக்கும் .சென்ற முறை செபாஸ்டியன் வெட்டல் இந்திய கிராண்ட் பிரிக்ஸ் நாயகன் .அது மட்டுமல்ல சென்ற ஆண்டு அவர் அந்த போட்டியில் சாம்பியன் பட்டத்திற்கு தகுதி பெற்றுவிட்டார் .ஆனால் இந்த ஆண்டு இன்னும் அது உறுதி பெறவில்லை .


 சரி இந்திய போட்டியின் ஏர்டெல் அழகிகளை பார்க்கலாமா ?

Sunday, October 14, 2012

செபாஸ்டியன் வெட்டலின் - "ஹாட்ரிக் வெற்றி"

                அருமையான பாரம்பரியம்மிக்க தென்கொரியாவில் - ஃபார்முலாவின் 16 ஆவது போட்டி அல்லது பல பரீட்சை நடை பெற போகிறது .

Korean rapper Psy teaches  - Gangnam Style dance to Mark Webber (left) and Sebastian Vettel

முதல்சுற்று ..
ரெட்புல்லின் மார்க் வெப்பரும் அவரை தொடர்ந்து செபஸ்டியன் வெட்டலின் காரும் சீறிப்பாய ,இவர்களை முந்தும் முயற்சியில் மூன்றாவதாக இருந்த மெக்ளரனின் - லீவிஸ் ஹேமில்டன் முயற்சிக்க ,அவரை வரமுன்னேற விடாமல் வெட்டல் வழிமறித்து முதல் வளைவு வரை செல்ல ,இந்த போட்டியை பயன்படுத்தி நான்காவதாக இருந்த பெர்ராரியின் பெர்னாண்டோ அலோன்சா மூன்றாம் இடத்தை கைப்பற்றினார் .

ஜப்பானின் வில்லன்


வழக்கம் போல பின் வரிசையில் மோதல்களுக்கும் பஞ்சமில்லை .சாபர் பெராரியின் - கமோய் கோபயாஷி முன்னேறி செல்லும் வேகத்தில்  மெக்ளரனின் -ஜென்சன் பட்டனின் காரின் வலது முன் பக்க டயரை தாக்கியதில் பஞ்சர் .அத்துடன் விடவில்லை மெர்சடிசின் - நிக்கோ ரோஷ்பெர்க்கின் காரிலும் மோதி இரட்னு காரையும் போட்டியிலிருந்து வெளியேற்றி புண்ணியம் செய்தார் .அவர் காரின் இடது பின்பக்க டயரையும் முன்பக்க WINGS  மாற்றிவிட்டு எதுவுமே நடைபெறாதது போல ரேசை தொடர்ந்தார் ..அடபாவிகளா ? ஜப்பானின் மண்ணின் கதாநாயகன்'கொரியா வந்தவுடன்  வில்லன் போல ஆகிவிட்டாரே !

பதினான்காவது சுற்று ..
வழக்கம் போல ஹெமில்டனை தொடர்ந்து வெப்பர் , வெட்டல் ,அலோன்சா என டயர் மாற்றம் வந்தார்கள் ..

பதினாறாவது சுற்று ..
கமோய் கோபயாஷி - மோதலின் பெனால்டியும் ,பாதிப்பும் தொடர முடியாமல் ரேசை விட்டு வெளியேற செய்துவிட்டது .
அவரை தொடர்ந்து HRT - அணியின் -      Pedro de la Rosa காரும் வேகத்தை கட்டுபடுத்தும் -Throttle பிரச்சனையால் வெளியேறினார் .இத்துடன் நான்கு  கார்கள் வெளியேறிவிட்டது .

இருபதாவது சுற்று ..
1.வெட்டல் 2.வெப்பர் 3.ஆலோனசா 4.ஹெமில்டன் 5.மாசா 6.ரைகொணன் 7.ஹுல்கேன்பரக் 8.மல்டோனடோ 9.க்ரோஜியன் 10.ஷூமேக்கர்

இருபத்தி ஒன்று ..
ஐந்தாவது மாசா - நான்காவது ஹெமிட்டனை துரத்த துவங்கினார் ,மிக பல போராட்டத்திற்கு பிறகு மூன்றாவது இடத்தை பிடித்தும் விட்டார் .
மூன்றாம் இடத்து அலோன்சா இப்போது இரண்டாம் இடது வெப்பரை முந்த  முயற்சிக்க தன்னுடைய 15 கி.மீ DRS வேக முன்னணியில் தன்னுடைய இடத்தை வெப்பர்  தக்கவைத்துக்கொண்டார் .


இருபத்தி மூன்றாம் சுற்று ..
இப்போது ஹெமில்டனை - ரைகொணன் பின்னுக்கு தள்ளும் முயற்சியில் இருந்தார் .ஆனால் இது ஒரு அருமையான தொழில்நுட்ப வேக விளையாட்டு என்பதிற்கு உதாரணமாக இருந்தது . .இந்த முயற்சியில் வழக்கமாக இடதுபுறமிருந்து வலது புறமாக சுற்றப்படும் களங்களில் வலது முன்பக்கத்து டயர் மிகவும் தேயும் அபாயம் அதிகம் .அந்த பலவீனத்தை ரைகொணன் - ஹெமில்டனுக்கு தந்தார் .அது மட்டுமல்ல DRS  தவிர KERS தொழில்நுட்பத்தை பயன்படுதத  ஹெமில்டனின்   தூண்டி பலவீனப்படுதினார் .எங்கெல்லாம் தொழில்நுட்பம் உதவுகிறதோ அங்கெல்லாம் அதை வீணடிக்கும்  முயற்சி இருந்து.

இருபத்தி எட்டு ..
இரண்டாம் இடத்து வெப்பரிடம் ஒரு பாதுகாப்பு முயற்சி இருந்தது .காரணம் அலோன்சாவை முந்தவிட கூடாது என்பது .அது மட்டுமல்ல ஏற்கனவே முதலிடத்தை வேட்டளுக்கு தாரை வார்துவிட்டானபின் இதுவும் விட அவரிடம் மிச்சமில்லை .

முப்பத்தி ஐந்தாவது சுற்று ..
இப்போது மீண்டும் வெப்பரை  தொடர்ந்து அலோன்சா ,வெட்டல் ,மாசா ,ரைகொணன் என டயர் மாற்றம் தொடர்ந்தது .

முப்பத்தி எழு ..
ஷூமேக்கரின் காரை  - 23 கி.மீ DRS வேக வித்தியாசத்தில் நமது ஷஹார போர்ஸ் இந்திய அணியின் டி ரேஷ்டா முந்தினார்  ( ஹேமில்டன் கவனிக்கவும் .உங்களின் அடுத்த இடம் மெர்சடீஷின் நிலை இப்படி இருக்கே ,மறுபரிசீலினை உண்டா ? )

நாற்பது ..
1.வெட்டல் 2.வெப்பர் 3.அலோன்சா 4.மாசா 5.ரைகொணன் 6.ஹுல்கேன்பர்க் 7.ஹேமில்டன் 8.ரிகார்டியோ 9.வெர்ஜின் .

லீவிஸ் ஹெமில்டனுக்கு எங்கிருந்துதான் வருகிறார்களோ தெரியவில்லை .இப்போது ஹுல்கேன்பர்க் முந்தினார் அடுத்து க்ரோஜியனும் நெருக்கடி தர துவங்கிவிட்டார் .

நாற்பத்தி ஒன்பது ..
இப்போது வெட்டல் பத்து வினாடிகள் வித்தியாசத்தில் வேப்பரிடம் இருந்து விலகி இருந்தார் .ஆனாலும் தனது முன்பக்க டயரில் பலவீனப்பட்டு இருந்ததால் எதற்கும் தயாராய்  இருந்தார் ..


இப்போது ஹெமில்டனுக்கு விதி வேறு ஒரு பிரச்சனையை தந்தது .அது களத்தின் ஓரத்தில் இடப்பட்டு இருந்த  செயற்கை புல் .அது சுமார் மூன்று அடி நீளத்திற்கு பெல்ட்போல காரின் வலது புறம் தொற்றிக்கொள்ள காரின் காற்றியக்க விசை தள்ளாட்டம் ஏற்பட்டது வளைவுகளில் காரின் நிலை தன்மை முற்றிலும் பாதிக்கப்பட்டது .இது வேறயா ?

ஐம்பத்தி மூன்று ..
ஹெமில்டனின் இந்த பிரச்சனையை புரிந்து கொண்ட STR - பெராரியின் வெர்ஜினும் , டேனியல் ரிகார்டோயோவும் மிக சாதரணமாக முந்தினர் .
இந்த பிரச்னை தீர்க்க ஏன் சேப்டி  கார் வரவில்லை ? அந்த சதியுமா  ஹெமிடனுக்கு எதிராக ?


ஐம்பத்தி ஐந்து ..கடைசி சுற்று
ரெட்புல்லின் - செபாஸ்டியன் வெட்டல் .தன்னுடைய இருபத்தி ஐந்தாவது முதலிடத்து வெற்றி .சென்ற ஆண்டுபெல்ஜியம் ,இத்தாலி , சிங்கபூர் என மூன்று தொடர் வெற்றிகளை குவித்தது போல இந்த ஆண்டு சிங்கப்பூர் ,ஜப்பான்,தென்கொரியா என ஹாட்ரிக் வெற்றி . அதோடு ரெட்புல்லுக்கு இது 33 ஆவது முதலிடத்து வெற்றி ( மீதி எட்டு வெற்றி மார்க்க வெப்பரால் வந்தது )
.
இரண்டாம் இடம் ,,
அதே அணியின் மார்க் வெப்பர் .பரிசு பெரும் இடத்தில வெப்பர் வழக்கம் போல வெட்டலை ஒரு அந்நியன் போல பார்த்துகொண்டார் .என்ன இருந்தாலும் "ஜெனரேசன் கேப் " இருக்கத்தானே செய்கிறது .( வெட்டல் வயது 25 - வெப்பர் வயது 36 )

மூன்றாவது இடம் ..
பெராரியின் - பெர்னாண்டோ அலோன்சா .அடுத்து மாசாவுக்கு பதிலாக அந்த இடத்தில வெட்டல் வரும் வாய்ப்பு பெர்ராரியில் இருப்பது பலமாக இருப்பதால் வெப்பரை போல ஆலோன்சாவும் அவ்வளவாக வெட்டலை கண்டுகொள்ளவே இல்லை .இன்னும் சொல்ல போனால் வழக்கமாக சாம்பெயின்  அபிசேகம் கூட இவர்களுக்குள் இல்லை .அது மட்டுமல்ல வெகு நாளுக்கு பிறகு அலோன்சாவை விட வெட்டல் இந்த கொரிய வெற்றிக்குப்பிறகு 6 புள்ளிகள் அதிகம் .சபாஷ் பலமான போட்டி !                                  யார் ஜெயித்தால் என்ன ,எங்களின் தேசத்தில் உங்களுக்கான  வணக்கம் வேண்டுமா வேண்டாமா ? சொல்வது அழகிய தென்கொரிய கள - கலையான நங்கைகள் .

Saturday, October 13, 2012

நாளை தென்கொரியாவில் ஃ பார்முலா 1

 Hermann Tilke
நமது அடுத்த ஃபார்முலா 1 போட்டி தென் கொரியாவின்  (Yeongam ) களத்தில் இந்திய நேரப்படி காலை 11:30 க்கு தொடங்குகிறது .இந்த களமும் வடிவமமைப்பில் மிகவும் சவாலான முறையில் உலகின் 24 களத்தை வடிவமைத்தவரும் இன்னும் ஒரு  களம் வடிவமைப்பு செய்து கொண்டு இருக்கும் பல "களம் " கண்ட திரு .ஹெர்மன் டில்கே ( Hermann Tilke ) அவர்களின் கை வண்ணத்தில் உருவானது .


                                      Korean International Circuit - நடக்க இருபது இந்த ஆண்டோடு மூன்றாவது  போட்டியாகும் .உலகின் இந்த ஆண்டு பட்டியலில் நான்கு - Anti-clockwise ( வலப்புறம் இருந்து இடது புறம் ) களப் போட்டிகளில் இதுவும் ஒன்று .பொதுவாக இந்த மாதிரி களத்தின் போட்டிகள் கூடுதலாகவே கடினமாக இருக்கும் .அதிலும் 18 வளைவுகளை கொண்ட களத்தின் மொத்த நீளம் 308.630 கி.மீ .ஒரு சுற்றின் நீளம்  5.615 கி.மீ .மொத்தம் 55 சுற்றுக்களை சுற்றி முடித்த முந்தய வேக சாதனையாளர் செபாஸ்டியன் வேட்டல் இவர் எடுத்துக்கொண்ட நேரம் 1:39.605 நி/வி .அது போல களத்தில் 2 ஆம் வளைவிலிருந்து 3 ஆம் வளைவு வரை உச்சவேகம் 320 கி.மீ தொடலாம் .அதே சமயம் 4 ஆவது வளைவின் மிக குறைந்த நேரம் 103 கி.மீ .


பயிற்சி போட்டி முடிவுகள் .
ஜப்பானை போல நமக்கும் கொரியாவுக்கும் நேர வித்தியாசம் + 3.30 மணி நரம் என்பதால் நாளைய போட்டிகளின் தகுதி சுற்று வரை இப்போதே நாம் அறிய முடிகிறது ஒரு சௌகர்யம்
நேற்று காலை நடந்த முதல் பயிற்சி போட்டியில் - மெக்லரண் மெர்சடீசின் - லீவிஸ் ஹேமில்ட்டன் .
நேற்று மதியம்  நடந்த மற்றொரு பயிற்சி போட்டியில் .ரெட் புல்லின் - செபாஸ்டியன் வெட்டல் .
இன்று நடந்த இறுதி , பயிற்சியில் - .ரெட் புல்லின் - செபாஸ்டியன் வெட்டல் .


தகுதி சுற்று ..
( Q 1 ) முதல் தகுதி சுற்றில் தலைவிதியை நிர்ணயம் செய்தது - ரெட் புல்லின் - செபாஸ்டியன் வெட்டல் .1:38.208 + (107% ) 0:6.874 = 1:45.082 .இந்த 107% சுழலில் சிக்கி தகுதி இழந்தது நமது நாராயண் கார்த்திகேயன்என்பது ஒரு சோகம் .
( Q 2 ) இரண்டாவது தகுதி  சுற்றில் மீண்டும் - செபாஸ்டியன் வெட்டல்.
( Q3 )ஆனால் ,மூன்றாவது இறுதி சுற்றில் ரெட் புல்லின் - மார்க் வெப்பர் .முதலிடம் .இரண்டாவது இடம் - செபாஸ்டியன் வெட்டல்,மூன்றாவது இடம் மெக்லரண் மெர்சடீசின் - லீவிஸ் ஹேமில்ட்டன் .


 தென் கொரியா கவிதையாளர் யாரோ ஒருவர் போட்டி களத்தில் உள்ள கொரிய அழகியை பார்த்து கொடி இடையால் என எழுத பொய் கொடி  + இடை என்று காரின் வேகத்தில் தவறி எழுத போய் இவர்கள் இடையில் கோடியை நட்டுவைத்து விட்டனர் .

Sunday, October 7, 2012

ஜப்பானின் கோப்பையும் - செபாஸ்டியன் வெட்டளுக்கே.


முதல் சுற்று ..
முதலிடத்தில் கிளம்பிய ரெட்புல்லின் வெட்டல் கார் மிக சுலபமாக பாய்ந்து செல்ல அதே அணியின் மார்க் வெப்பர் கார் மெல்ல தயங்கி கிளம்ப அந்த இடத்தை நோக்கி பாய்ந்து இரண்டு கார்கள் பாய்ந்தன. ஒன்று ஜப்பானின் மண்ணின் நாயகன் - சாபெர் பெராரியின் நாயகன் கமுய் கோபயாஷி அடுத்தவர் பிலிப் மாசா


                                       ஆனால் பின் வரிசையில் முதல் வளைவை நெருங்கும் முன் ,ரோமின் க்ரோஜியன் கார் வெப்பர் காரின் பின் பகுதியில் மோதி தள்ளி சென்று காலத்திற்கு வெளியே தள்ள ,அதற்குள் பெர்னாண்டோ ஆலோன்சாவின் காரில் டயர் முற்றிலும் இல்லாமல் களத்திற்கு வெளியேற அதை தொடர்ந்து மெர்சடீசின்- நிக்கோ ரோஷ்பெர்க் காரும் களத்தை விட்டு வெளியேறி நின்றது .
                                        அதற்க்குள் ,இந்த மோதலில் Front Wing  இழந்த ப்ருனே சென்னாவின் ,ரோமின் க்ரோஜியன் பிட் லேன் வந்தனர் .இந்த மோதல் குழப்பத்தை சரிசெய்ய சேப்டி கார் வந்தது .
ஆறாம் சுற்று ..
செர்ஜியோ பெரெஸ் ஏழாம் இடத்திலிருந்து ஹெமில்டனை பின்னுக்கு தள்ளி ஆறாம் இடத்தை பிடித்தார் .என்ன ஆச்சு லீவிஸ் ?
ஏழாம் சுற்று ..
ரோமின் க்ரோஜியன் போட்டி ஆரம்பத்தில் செய்த தவறுக்கு இப்போது  பத்து வினாடிகள் நிறுத்தி செல்லும் தண்டனை பெற்றார் .
பதினான்காம் சுற்று ..
மெல்ல ஒவ்வொரு கார்களும் Hard Compound டயர்களை மாற்ற தொடங்கின ..அதனால் வீரர்களின் வரிசையில் மாற்றங்கள் துவங்கின ..
பதினெட்டாம் சுற்று ..
வெட்டல் டயர் மாற்றம் .ஆனால் மீண்டும் அதே முதலிடம் ..
இருபதாம் சுற்று ..
1. வெட்டல்2.மாசா  3.கோபயாஷி  4. ஜென்சன் பட்டன் 5. ரைகொணன் 6. ஹெமில்ட்டன்7. ஹுல்கேன்பர்க் 8. மல்டோனடோ 9. வெப்பர் 10 ரிக்கர்டியோ
முப்பத்தி ஒன்றாம் சுற்று ..
வெட்டலின் காரில் கார் வளைவில் திரும்பும்போதெல்லாம் அதிர்ந்தன ..டயரின் பாதிப்பு .
முப்பத்தி இரண்டு
டயர் மாற்றம் செய்து விட்டு பிட் லேனை விட்டு வெளியேறி கொண்டு இருந்த ஹேமில்டன் கார் அப்போது களத்தில் சுமார் 300 கி.மீ வேகத்தில் ரைகொணன் கார்  மிக குறுகிய வளைவில் 160 கி.மீ குறைந்து திரும்ப வேண்டிய இடத்தில் போட்டியிட்டு கொண்டன .ஆனால் ஹெமில்டன் முன்னேறினார் .
இந்த ரேசிலும் துரதிருஷ்டம் தொடர்ந்தன .ஆம் நம் நாராயண் கார்த்திகேயன்  கார் கேரேசுக்குள் தஞ்சம் அடைந்தது .
முப்பத்தி ஏழு  ..
பிலிப் மாசா டயர் மாற்றம் .ஆனால் அதே இரண்டாவது இடத்தில் தொடர்ந்தது .
முப்பத்தி எட்டு ..
வெட்டல் டயர் மாற்றம் .அவரும் அதே முதல் இடம் தொடர ..
நாற்பதாவது சுற்று ..
இப்போது வெட்டளுக்கும்- பிலிப் மாசாவுக்கும் இடைவெளி 18.378 வினாடிகள் நீடித்தன .
மீண்டும் அணிவரிசையில் சில மாற்றங்கள் .
                       1.வெட்டல்  2.மாசா  3.கொபயாசி  4. பட்டன் 5. ஹெமில்ட்டன் 6. ரைகொணன் 7. ஹுல்குன்பர்க்  8.மல்டோனடோ  9. வெப்பர் 10 ரிக்கர்டியோ
ஐம்பத்தி ஒன்றாவது சுற்று ..
நான்காம் இடத்து ஜென்சன் பட்டன் மூன்றாவது இடத்தில் பறந்து  கொண்டு இருந்த சொந்த மண்ணின் நாயகன் கோபாயாஷியை குறி வைத்து துரத்த ..இருவருக்கும் இடையே ஒவ்வொரு  சுற்றுக்கும் வினாடிகள் குறைந்து கொண்டு இருந்தன .எந்த ஒரு DRS பகுதியிலும் மெக்ளறேன் தன்னுடைய வேகத்தை நிரூபிக்கலாம்..
ஐம்பத்தி இரண்டு ..
ஜப்பானின் தேசத்தவர்கள் இருப்பிடத்தை விட்டு எழுந்து கோபயாஷியின் வெற்றியை கையசைத்து . கொடியசைத்து காட்ட ,அதே சமயம் ஜென்சன் பட்டனின் அணி அவரை முந்த சொல்லி அறிவுறுத்தி கொண்டே இருந்தன ..
ஐம்பத்தி மூன்று ..கடைசி சுற்று ..
முதலிடம்

எந்தவித போட்டியும் இல்லாமல் வெட்டல் தன்னை அடுத்து வந்த மாசாவை 20. 6 வினாடிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் வென்றார் .காரை விட்டு வெளியேறிய வெட்டல்  காரின் வரையப்பட்டு இருந்த அணியின் சின்னமான பாயும் காலயியா தடவி  மகிழ்ந்தார் .2009 ,2010 மற்றும் இந்த ஆண்டு ஜப்பானின் முதலிடத்து கோப்பை வெட்டளுக்கு என்பது வாடிக்கை ஆகிவிட்டது .அது மட்டுமல்ல இந்த ரேஸின் மூலம் மூன்றாவது முறையாக டிரைவர்களுக்கான சாம்பியன் பட்டதை நோக்கி தெளிவாக நடை போடவழிவகுத்து கொண்டார் .முதலிடத்தில் உள்ள ஆலோன்சாவுக்கும் இவருக்கும் புள்ளிகளின் இடைவெளி நான்கு மட்டுமே
இரண்டாம் இடம் ..


பிலிப் மாசா ..
2010 ஆம் ஆண்டில்சவுத் கொரியா  ரேசில் மூன்றாம் இடம்  வந்ததர்க்கு பிறகு இவரின்  போடியம் வருகை .வெகுநாள் தன்னுடைய ரசிகர்களை காக்க  வைத்துவிட்டார் .அதிலும் இன்று அலோன்சா இடத்தை சரிசெய்து விட்டார் .
மூன்றாம் இடம் ..

கமுய் கொபாயாஷி .தன்னுடைய ஃபார்முலா 1 வாழ்கையை 2009 ஆம் ஆண்டில் தொடங்கிய பிறகு முதல் பெரிய  வெற்றியை பெற்றது அதுவும் தான் சொந்த மண்ணில் ஏறும் 0.5 வினாடி  வித்தியாசத்தில் ஜென்சன் பட்டனிடமிருந்து பாதுகாத்தது பெரிய விஷயம் .அவரின தேசபற்றை வெளிபடுத்தும் சந்தோசத்தை பெற்றார் .


முதல் முறை .
அருமையான இந்த பதிவை  அதுவும் இன்று நடந்த போட்டியை இன்றே   பதிந்த சந்தோசம் அடைகிறேன் காரணம் எனது இரண்டு ஆண்டு பதிவு வரலாற்றில் இதுவே முதல் முறை .

Saturday, October 6, 2012

நாளை ஜப்பானின் F1 போட்டியை பார்க்கலாம்


நாளைய போட்டி
நாளை நாம் காண இருக்கும் போட்டி ஜப்பானின் -     Suzuka International Racing Course ல் நடக்க இருக்கிறது
களத்தை பற்றி ..


53 சுற்றுக்களை கொண்ட இந்த களத்தின் மொத்த போட்டி தூரம்  307.471 கி.மீ.ஒரு சுற்றின் நீளம் 5.807 கி.மீ.அதில் 18 வளைவுகள் ( Turns ) இருக்கிறது .பொதுவாகவே ஒரு சின்ன பொருள் கண்டுபிடித்தாலே அதில் பல சூட்சுமம் வைத்திருக்கும் ஜப்பான்காரர்கள் இந்த களத்தை எவ்வளவு கடினமாக செதுக்க முடியுமோ அவ்வளவு கடினத்தை கொண்டு இருக்கிறது .

பயிற்சி போட்டி ( ஜப்பான் நேரப்படி )
கடந்த வெள்ளி காலை10 - 11:30  நடந்த முதல் பயிற்சி  போட்டியில், மெக்லரண் மெர்சடிஷின் - ஜென்சன்பட்டன் .
அடுத்து நடந்த 2 - 3:30 இரண்டாம் பயிற்சி  போட்டியில், ரெட்புல் ரெனால்ட் - மார்க் வெப்பர் .
இன்று  நடந்த 11 - 12 மூன்றாம் பயிற்சி  போட்டியில் ,ரெட்புல் ரெனால்ட் - செபாஸ்டியன் வெட்டல் .
தகுதி சுற்று ..
இன்று நடந்த 2 - 3 தகுதி சுற்றில் 107% நேரத்தை நிர்ணயம் செய்தது லோட்டஸ் ரெனால்ட்டின் - ரோமின் க்ரோஜியன் 1:32.029 + (107%) 0:6.442 = 1:38.471 ஆனால்

 மூன்றாவது இறுதி சுற்றில் முதலிடத்தை தக்கவைதுகொண்டது 
 செபாஸ்டியன் வெட்டல் ..இரண்டாம் இடம் அதே அணியின் மார்க் வெப்பர். மூன்றாம் இடம் - மெக்லரண் மெர்சடிஷின் - ஜென்சன்பட்டன் .
களம் கடுமைதான் .ஆனால் ரெட்புல் தவறு செய்யாமல் இருக்கும்பட்சத்தில் வெற்றி சுலபம் .


போட்டி நேரம்
நாளை காலை இந்திய நேரப்படி  11:30 க்கு தொடங்குகிறது ( நம்மை விட ஜப்பானின்  நேரம் + 3:30 அதிகம் )

சிங்கப்பூர் வெற்றி - செபாஸ்டியன் வெட்டளுக்கு.பொதுவாக சிங்கப்பூரை பற்றி தெரிந்துகொள்ள அநேக வலைத்தளங்களை அந்த நாட்டின் சுற்றுலாத்துறை உருவாக்கி வெளியிட்டுள்ளது .அது ஒவ்வொரு சுற்றுலா விரும்பிகளின் சுவர்க்கம் .ஆனால் நம் ஃபார்முலா 1 பற்றி தெரிந்துகொள்ளவும் அங்கு நடக்கும் அற்புதமான போட்டியின் ஏற்பாட்டு பற்றி அறிந்துகொள்ள எனது போன ஆண்டு பதிவை பார்க்கலாம் - http://f1inindia.blogspot.in/2011_09_01_archive.html


ஃபார்முலா 1 வெற்றி சூத்திரம்
                                     ஃபார்முலா 1 போட்டியில் மூன்று அம்சங்கள் 1.தொழில்நுட்பம் 2 .வர்த்தகம் 3.கவர்ச்சி ,அடங்கியது .இந்த மூன்றையும் வெளிபடையாய் இந்த சிங்கப்பூர்  -   Marina Bay Street Circuit ல் பார்க்கலாம் .நாளை நடக்க இருக்கும் போட்டி நேரம் இந்தியா நேரப்படி மாலை 5:30 ஆனால் சிங்கப்பூரில் இரவு 8:00 . இரவில் நடக்கும் போட்டி .இங்கு இரவில் போட்டி நடத்த முதல் காரணம் முழுக்க ,முழுக்கஇந்த களம்  Street Circuit .போக்குவரத்தை தடை செய்து அதற்குள் சுமார் 70 % போட்டி நடக்கிறது .

முதல் சுற்று ..
லீவிஸ் ஹெமில்டன் தனது சிறப்பான துவக்கத்தை கொடுத்து முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள ,இரண்டாவது இடத்தை தொடரவேண்டிய பாஸ்டர் மால்டோனடோ வேகம் குறைய அந்த இடத்தை மூன்றாவதாக் இருந்த செபாஸ்டியன் வெட்டலும் ,மூன்றாவதாக் ஜென்சன் பட்டனும் தீவிர இடதக்கவைத்தல் போட்டி நடைபெற துவங்கியது
வழக்கம்போல பின்வரிசையில் போட்டா போட்டியில்  தீவிர உரசல்கள் ஏற்பட்டது .
பிலிப் மாசா - விடாலி பெட்ரோவ் மோதல் ,மாசாவின் கார் டயர் பஞ்சர் , பிட் லேன் போனது - அவரை தொடர்ந்து பெட்ரோவ் Front Wing மாற்றப்பட்டது .
பத்தாவது சுற்று ..
வில்லியம்ஸ் அணியின் புருனே சென்னாவின் காரில் முதல் கியரில் பிரச்சனை .இந்த சிங்கபூர் களத்தை ஒரு ஒருமுறை சுற்றி வருவதற்குள் சுமார் 80 முறையாவது கியர் மாற்றங்ககளை செய்யவேண்டிய கட்டாயம் ட்ரைவருக்குரியது .இந்த நிலையில் சென்னாவின் நிலை பரிதாபம் .
பதினோராம் சுற்று ..
வெட்டல் இப்போது தன்னுடைய இரண்டாவது இடத்தை விட்டு முன்னேறும் முயற்சியில் ஒரு பகுதியாக தன்னுடைய Super Soft டயருக்கு விடை கொடுத்துவிட்டு Soft Compound டயரை மாட்டிகொண்டு பனிரெண்டாம் இடத்தில் தொடந்தார் .
பனிரெண்டாம் சுற்று ..
பெர்னாண்டோ அலோன்சா பிட் லேன் .அவரும் Soft Compound வெட்டல் பதினாறாம் இடத்தை விட்டு முன்னேற அந்த இடம் இப்போது ஆலோன்சாவிடம் .
பதிமூன்றாம் சுற்று ..
இப்போது முதலிடத்து லீவிஸ் ஹெமில்ட்டனும் டயர் மாற்றம்
அதற்குள் நான்காம் இடத்தை கைப்பற்றும் போட்டா போட்டியில் வெட்டலும் - கிமி ரைகொணனும் .வெட்டல் தன்னுடைய DRS உச்சவேகமான 293 கி.மீ வேகத்தில் ரைகொணனை பின்னுக்கு தள்ளினார் .

கலை காட்டிய சிங்கப்பூர் ..
 போட்டி ஒருபுறம் இருக்க நாம் இந்த போட்டியின்  புதிய   தோற்றத்தை பார்க்கலாம் .
 தூரத்து பார்வையில் எதோ ஒரு ஒளி வெள்ள காட்டாறு போட்டி களம் முழுவதும் புகுந்து வழிவது போல ஒரு பொய் தோற்றம் தெரிந்தது .அந்த அளவுக்கு பிரகாசம் .காரணம் பொதுவாக மற்ற நாடுகளில் மதியம் இரண்டு மணிக்கு துவங்கும் போட்டி இங்கு இரவு எட்டுமணிக்கு தொடங்குவதால்  இந்த காட்சி ஃபார்முலா வரலாற்றில் புதிய பதிவை கொடுக்கிறது.
களத்தை சுற்றியுள்ள வர்த்தக கட்டிடங்கள் உட்பட அனைத்து இடங்களும் ஃ பார்முலா கார்களின் "வ்வ்ர்ரூம் வ்வ்ர்ரூம்" பேரிரைச்சலால் அதிர்ந்தது .

பதினெட்டு ..
மார்க் வெப்பர் - ஒன்பதாம் இடத்திலிருந்து எட்டாம் இடத்தில உள்ள செர்ஜியோ பேரேஷை பின்னுக்கு தள்ளினார் .

வீரர்களின் வரிசை ..
1. லீவிஸ் ஹெமில்டன்2. செபாஸ்டியன் வெட்டல் 3. ஜென்சன் பட்டன் 4. பாஸ்டர் மால்டோனடோ 5. பெர்னாண்டோ அலோன்சா 6. டி ரெஸ்டா 7. மார்க் வெப்பர்8. டி லா ரோசோ 9. ரோமின் க்ரோசியன் 10.மைக்கேல் ஷூமேக்கர் .


இருபத்தி மூன்று
வெட்டல் மிக ஒரு தீவிர நெருக்கடியை முதலிடத்து ஹெமில்ட்டனுக்கு தந்து கொண்டே இருக்க ,சுமார் இரு வினாடிகள் இடைவெளியில் தொடர அப்போதுதான் அது நடந்தது .ஹெமில்டனின் காரில் திடீர் குழப்பம் சுமார் ஐந்து கார்கள் முன்னேறி செல்ல ,படிப்படியாக வேகம் குறைந்த கியர் பாக்ஸ் பிரச்சனையால் போட்டியை விட்டு மெக்லேரன் மெர்சிடீஷின் MP4 - 27 கார் முற்றிலுமாக  வெளியேறியது .மஞ்சள் கொடியசைக்கபட்டது .
இருபத்தாறு ...
இப்போது அலோன்சா ஒரு புது உத் வேகத்துடன் தொடர்ந்து கொண்டு இருந்தார் பாஸ்டர் மால்டோனடோவை முந்திக்கொண்டு சுலபமாக நான்காம் இடத்தை தட்டி கொண்டார் .
முப்பத்தி இரண்டு ..
அலோன்சாவின் இடத்தை பறித்துகொள்ள, ரோஷ்பெர்க் ,க்ரோஜியன்,மல்டோனடோ என பலரும் முயற்சி செய்ய களம் வெப்பத்தை தவிர்க்க  முடியாமல் தத்தளித்தது ..
முப்பத்தி மூன்று ..
எப்போதெல்லாம் வர்ணனையாளர்களால் பேச படுகிறாரோ அப்போதெல்லாம் நம் நாராயண் கார்த்திகேயன் விபத்துக்குட்படுவது வழக்கமாகிவிட்டது .இங்கும் அதுதான் பதினெட்டாம் வளைவில் திரும்பிய கார்த்திகேயனின் கார் எஞ்சின் வேகம் மிக குறைந்துபோக வண்டி நேராக வளைவு சுவரில் மோதி நின்றது .நல்லவேளை அவருக்கு ஒன்றுமில்லை .காரின் சேதம் அதிகம் .

முப்பத்தி ஆறு ..
வில்லியம்ஸ் ரெனால்ட்டின் -- பாஸ்டர் மால்டோனடோ காரில் ஏற்பட்ட ஹைட்ராலிக் குறைபாட்டால் போட்டியை வெளியேற வேண்டிவந்தது .
முப்பத்தி ஏழு ..
சேப்டி கார் வெளியேற , கார்களின் வேகம் மீண்டும் சிங்கபூரின் காதுகளை பதம் பார்க்க துவங்கிவிட்டது .
முப்பத்தி  எட்டாம் சுற்று ..

STR ஃபெராரியின் ஜீன் எரிக் வெர்ஜின் கார் முன்னாள் சென்ற காரை முந்த தொடரும்போது 14 ஆம் வளைவு வரவே வேகத்தை குறைக்க ,அவர்களை தொடந்து வந்த மைக்கேல் ஷூமேக்கரின் கார் இந்த எதிர்பாராத வேக குறைப்பை எதிர்கொள்ளமுடியாமல் அவரின காரின் பின்பகுதியில் அழுத்தமான தாக்குதலில் ஷூமேக்கரின் கார் மிக பல சேதத்துடன் களத்தை விட்டு வெளியேறி செயல் இழந்து நின்றது .அவரை தொடர்ந்து வெர்ஜின் கார் மிக பல சேதத்துடன் செயல் இழந்து நின்றது .

 
இப்போது ஒரு அற்புதமான் வேக யுத்தத்தின் நிகழ்வில்  இருப்பவர்களின் பார்வைக்கு நடந்தது .
சேதமுற்ற காரிலிருந்து வெளியேறிய ஷூமேக்கர் ஹெல்மெட்டை கழட்டிவிட்டு நிற்க ,அவரை தொடர்ந்து காரை விட்டு வெளியேறிய வெர்ஜின் நேரே ஷூமேக்கரிடம் செண்டு ஏதோ பேசி விட்டு ஒருவரை விட்டு ஒருவர் சபித்துகொள்வார்கள் என எதிர்பார்க்க பட்டது .ஆனால் ஷூமேக்கர் அனுபவத்தை மதித்த வெர்ஜின் அவருடன் நேசமுடன் பேசியது ஒரு நெகிழ்வை ஏற்படுத்தியது .வேண்டுமென்றே நடக்கவில்லை என்பதை இருவரும் உணர்ந்திருந்தார்கள் .

இத்துடன் ஐந்து கார்கள் போட்டியில் இல்லை மீண்டும் Safety Car வந்தது .
நாற்பத்தி ஒன்பது ..
செர்ஜியோ பெரஸ்  - நிக்கோ ஹுல்கேன் பர்கின் காரோடு மோதி Front Wing சேதமுற்றது .
ஐம்பதாவது சுற்று ..
இவர்கள் இருவரின் மோதலில் கோபயாஷி காரும் மாட்டிகொண்டு Front Wing பாதிக்கப்பட்டது .நல்லவேளை போட்டியில் தொடர்ந்தார்கள் ..
ஐம்பத்தி ஒன்று ..
ஹெமில்டனின் வெளியேற்றத்தில் கை விட்டுப்போன முதலிடத்தை குறிவைத்து ஜென்சன்பட்டன் இயங்கிகொண்டு இருக்கும்போது வெட்டலுக்கும்- பட்டனுக்கும் உள்ள இடைவெளி 2.7 வினாடிகள் .
இதே சமயம் பதினோராம் இடத்தில் மார்க் வெப்பர் தந்து DRS - 320 கி.மீ வேகத்தின் உச்சத்தில் பத்தாம் இடது புருனே சென்னாவை பின்னுக்கு தள்ளினார் .
ஐம்பத்தாறு ..
வெப்பர் இப்போது , ஒன்பதாம் இடது ரிக்கர்டியோவை முந்தினார் .
ஐம்பத்தி ஒன்பது ..

முதலிடம் .

செபாஸ்டியன் வெட்டல்- ரெட்புல்  ரெனால்ட் .இந்த ரேஸ் மூலம் இவர் 165 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை நோக்கி முன்னேறி இருக்கிறார்
இரண்டாம் இடம்

ஜென்சன் பட்டன் -மெக்லரண் மெர்சீடிஷின் இவர் இந்த போட்டியின் வெற்றி மூலம் 119 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தை தக்கவைத்துள்ளார் .
மூன்றாம் இடம்

ஃபெர்னாண்டோ அலோன்சா - ஃபெராரி  இவர் தொடர்ந்து( பெல்ஜியம் போட்டியில் விபத்தின் காரணமாக வெளியேறியது தவிர ) புள்ளிகளை பெற்றுவருவதன் மூலம் 194 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார் .இது மட்டுமல்ல இன்னும் ஆறு போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் இவர் முதலிடம் பிடிப்பார் என்பதில் ஃபார்முலா ஆர்வலர்களின் கருத்து .இவரின் உறுதியும்  + ஃபெராரியின் தொழில் நுட்ப எழுச்சியும் இந்த ஆண்டு அவரை மிகவும் முன்னணி படுத்தியுள்ளது .

அணிகளின் பலம் - பலவீனம்
அணிகளை பொறுத்தவரை ரெட்புல் அணி முதலிடம் தக்க வைத்துகொள்ளும் நிலையில் சந்தேகம் வருகிறது .காரணம் அந்த அணியின் மார்க் வெப்பர் ஒரு சுவாரஷ்யம் இழந்து காணபடுகிறார் .297 புள்ளிகளை பெற்று முதலிடம் இருந்தாலும் , அந்த அணி வரும் ஆறு போட்டிகளில் தக்கவைதுகொள்வது கடினமே .

ஃபெராரி அணியின் நிலையுமே அதுதான் .அலோன்சாவை தவிர பிலிப் மாசா மிகவும் குறைந்த திறமையையே வெளிப்படுத்தி வருகிறார் .எனவே அந்த அணி 245 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது .

ஆனால் ,மெக்லரண் மெர்சடீஸ் நல்ல நிலையை நோக்கி சென்று  கொண்டு இருக்கிறது .அந்த அணியின் ஜென்சனும் . ஹெமில்ட்டனும் தட்டி எறிகிறார்கள் .நிச்சயம் அடுத்த ஆண்டு  மெர்சீடிஷின் ஷூமேக்கர் இடத்தை நிரப்ப ஹெமில்டன் செல்லும் முன் இங்கு கோப்பையை பெற்று தருவார் என்பது உறுதி .

ஒரு வேதனையான விஷயம் .

அருமையான பதிவுகளை தந்து  கொண்டு  இருந்த  எனக்கு மிக முக்கியமான பலம்  Manipef1 ( http://www.manipef1.com/ ) அது விடை பெற்று விட்டது விடைபெறும் அந்த வாசகம் மிகவும் வலிக்கிறது .அது
All good things must come to an end they say, but even so, it is with a heavy heart that I today announce the end of the road for Manipe F1 and my own F1 journalism aspirations.