உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, August 10, 2013

F 1 - Hungary High Speed Drama !

        
                           
Danube river
                    28 ஜூலை , ஹங்கேரியின்   தலைநகர் புடாபெஸ்ட்க்கு 18 கி.மீ அருகில் உள்ள Hungarian Grand Prix (Magyar Nagydíj)  களத்தில்   ஃபார்முலா 1 போட்டியின் 10 ஆவது சுற்று போட்டி  நடந்தது. ஹங்கேரியின் பாரம்பரியமிக்க புடாபெஸ்ட் பில்ஹார்மானிக் ஆர்கெஸ்டிரா குழுவை அவ்வளவு தூரம் யாரும் மறந்து இருக்க வாய்பில்லை .ஆமாம் இளையராஜாவின் திருவாசகம்  ஆரட்டோரியோ (Oratorio) எனும் தெய்வீக அருளிசை வடிவில் அரங்கேற்றிய ஊரல்லவா ?

சரி நாம் ரேசுக்குள் போவோம்.

பயிற்சி மற்றும் தகுதி போட்டி ...
                 கடந்த வெள்ளியன்று முதல் மற்றும் இரண்டாவது பயிற்சி போட்டியில் ,ரெட்புல் ரெனால்ட் - செபாஸ்டியன் வெட்டல் வந்து அசத்தினார்.
அடுத்த நாள் (சனியன்று )மூன்றாவது பயிற்சி போட்டியில் லோட்டஸ் ரெனால்ட்டின் ரொமைன் க்ரோஜியன் முதல் இடம் பிடிக்க ,



                     தகுதி சுற்றின் முதல் இடம் யாரும் எதிர்பாராத ஆனால் சமீபத்தில் தகுதி சுற்றில் முன்னனி வகிக்கும் மெர்சடிசின் அணியின் லீவிஸ் ஹேமில்ட்டன் முதலிடம் வந்தார். அவரை தொடர்ந்து இரண்டாவது செபாஸ்டியன் வெட்டல்,மூன்றாவது இடம் ரொமைன் க்ரோஜியன்.


 முதல் சுற்றில் ..
                 லீவிஸ் ஹேமில்ட்டன் மிக சிறந்த துவக்கத்தை ஏற்படுத்த அவரை தொடரும் செபாஸ்டியன் வெட்டல் தகுதி சுற்றில் முதலிடம் வந்ததர்க்கு ஹேமில்ட்டனுடன் கை குலுக்கினாலும் போட்டியில் அவரை தாண்டி செல்லவே பாய்ந்து வர , 

மூன்றாவது சுற்றில்..


               அதர்க்குள் பின் வரிசையில் ஃபெராரியின் ஃபிலிப் மாசா - மெர்சடிசின் நிக்கோ   ரோஸ்பெர்க்கை பின் இருந்து தாக்க அவர் இரண்டு சுற்று சுற்றி 5 ஆம் இடத்திலிருந்து 12 ஆம் இடம் போனார் 
எழாம் சுற்றில் ..
                  தொடரும் குழப்பம் மாறி இப்போது ஹேமில்ட்டன் ,வெட்டல் ,க்ரோஜியன் ,அலோன்சா ,மாசா என முதல் 5 கார்கள் பறந்து கொண்டு இருந்தன.

ஒன்பதாவது சுற்றில் ...
லீவிஸ் ஹேமில்டன் காரில் Soft Compound டயரை 3 வினாடிகளில் உதறி விட்டு Medium டயருக்கு மாறினார் .அதிகமான ட்ராக்கின்  வெப்ப அதிகரிப்பும் , தன்னை தொடரும் வெட்டலின் வேகத்திர்க்கு ஈடு கொடுக்கவும் தயாராவது முக்கியம் என்பதை புரியவைத்தார் .எட்டாவது இடத்தில் மீண்டும் தொடர்ந்தார் .

15 ஆவது சுற்றில் ...
இப்போது முன்னனி வீரர்கள் டயர் மாற்றம் காரணமாக ,பின்னுக்கு வர மார்க் வெப்பர் , ஹேமில்டன் ,ஜென்சன் பட்டன் ,வெட்டல் ,க்ரோஜியன் என வரிசை போட்டி துரிதமாக செயல் பட்டு கொண்டு இருந்தது .

17 ஆவது சுற்றில் 
வெட்டல் மன வேகத்திர்க்கு அவர் மாற்றிய டயர் ஒத்துழைக்காததால் ,இன்னும் இன்னும் என முடுக்கி பாய ,முன்னால் போன ஜென்சன் பட்டனை முந்த,வளைவில் அவர் பிந்த ,ஒரத்தில் வந்த க்ரோஜியனை தவிர்க்க தந்து முன் பக்க விங் சேதமாக்கினார் வெட்டல்..

20 ஆவது சுற்றில் ...
100 ஆவது போட்டி கரேஜுக்குள்..


                          ஃபோர்ஸ் இந்திய அணியின் ஆண்ட்ரியன் சட்டில் தனது 100 ஆவது போட்டியில் டயர் மாற்றம் செய்ய பிட் லேன் போகிறார் என்று நினைத்தால் ,இல்லைஅப்படியே பின்னுக்கு தள்ளி கரேஜுக்குள் தஞ்சம் அடைந்தது - காரணம் பிரேக் செயல்பாட்டுக்கு முக்கியமான 'ஹைட்ராலிக் லீக்' என சொல்லபட்டது .

24 ஆவது சுற்றில் ..
                          ஹேமில்டன் மெகல்ரண் மெர்சடிசை விட்டு வெளியேறிய பிறகு அந்த அணி ஏன் சோர்ந்து போனது என்பது ஆய்வுக்குரிய விசயம் .இன்று போட்டியை 13 ஆவது இடத்தில்த்வங்கிய ஜென்சன் பட்டன்  முதலிலேயே Medium டயரில் துவங்கி இப்போதுதான் எல்லோரையும் வழியனுப்பி விட்டு டயர் மாற்றம் வந்தார் .அவர் 33 புள்ளிகளுடன் 10 ஆவது இடத்தில் இருப்பது அந்த அணியின் பலவீனத்தை சொல்கிறது .போன ஆண்டு 10 ஆவது போட்டியில் 68 புள்ளிகளுடன் இருந்தவர் இவர் கடந்த ஆண்டு மொத்த போட்டியில் 5 ஆவது இடம் என்பதுவும் குறிப்பிடவேண்டிய விசயம் .

 காதல் ஜெசிகா ..


ஜென்சன்  தனது காதலி ஜெசிகா மேல் வைத்து  இருக்கும் காதலை தனது மெகல்ரண் மெர்சடிசை MP4-28 மேல் வைக்கவில்லையோ ? 

29 ஆவது சுற்றில் 


சாபர் ஃபெராரியின்   Esteban Gutierrez கார் போட்டியை விட்டு கியர் பாக்ஸ் பிரச்சனையால்  வெளியேறியது ..

32 ஆவது சுற்றில் ..
முதலிடத்தை தக்கவைத்து கொள்ளும்  ஹேமில்டன் பிடி தளர தொடங்கியது ..வெட்டலுக்கும் அவருக்கும் இடைவெளி குறைய தொடங்கியது .சுதாரித்து கொண்ட அணி மேலிடம் டயர் மாற்ற யுக்தியை கையாள அழைத்தது .0.3 வினாடிகளில் Medium Compound டயரை பொருத்திகொண்டு 4 ஆம் இடத்தை ஹேமில்டன் தொடர ..

35 ஆவது சுற்றில் ..
இப்போது ,ஹேமில்டன் பிடி வலுவாக இருப்பதை உணர்ந்த வெட்டல் டயர் மாற்றம் போக அவரை தொடர்ந்து இரண்டாம் இடத்து அலோன்சாவும் போனார்.


42ஆவது சுற்றில் 
வில்லியம்ஸ் ரெனால்ட்டின் - Valtteri Bottas ஹைட்ராலிக் பிரச்சனையால் புகையை வெளியேற்றி கொண்டு போட்டியை விட்டு வெளியேறியது .

வேகத்தை தக்கவைத்து கொள்ள


50 ஆவது சுற்றில் ..
இன்னும் இருபது சுற்றுக்கள் மீதம் இருந்த நிலையில் ,ஹெமில்ட்டன் அற்புதமான தனது முதலிடத்து வேகத்தை தக்கவைத்து கொள்ள மீண்டும் ,டயர் மாற்றதிர்க்கு வந்தார்  .இதுவே கடைசி மாற்றம் .

High Speed Drama..


62 ஆவது சுற்றில் ...
                    மிக ருசிகரமான கட்டத்தை எட்டிவிட்டது ரேஸ் . High Speed Drama என்ற அடைமொழி ஃபார்முலா 1 போட்டிக்கு எப்படி வந்தது என்பதை இப்போது ரேஸ் பார்ரக்கும் கண்களுக்கு புரியும் .முதலிடத்தை கடைசிவரை முடிவு செய்ய முடியாது என்பதே அதன் உள்ளர்த்தம் முதலிடத்து ஹேமில்ட்டனுக்கும் - கிமி ரெய்கொணனுக்கும் இடைவெளி வெறும் 1.418 வினாடிகள் அடுத்த 3 ஆம் இடத்தில் இருக்கும் வெட்டலுக்கும் -ரெய்கொணனுக்கும் உள்ள இடைவெளி அதை விட குறைவு ஆனாலும் ஒரே ஆறுதல் ரெய்கொணன் டயர் இரண்டு முறை மட்டுமே ( கடைசியாக 42 ஆவது சுற்றில் ) இதுவரை மாற்ற பட்டுள்ளதால் இப்போது அவர் முதல் இடத்து போட்டியில். இல்லை ஆனால் 55 ஆவது சுற்றில் டயர் மாற்றம் செய்து துரத்தி கொண்டு இருக்கும் வெட்டல் மிக ஆபத்தானவர் .


64  ஆவது சுற்றில் ...
ஃபெராரியின் மாசாவை குறிவைத்து 9 ஆம் இடத்திலிருந்து துரத்திகொண்டு இருந்த மெர்சடிசின் அணியின் நிக்கோ ரோஸ்பெர்க் காரில் எஞ்சின் பிரச்சனையால் புகை வர ,போட்டியை முழுமை செய்யாமல்  வெளியேறியது  சோகம் !



66 ஆவது சுற்றில் ..
ஃபோர்ஸ் இந்திய அணியின் இன்னொரு காருக்கும் இப்போது பிரச்சனை.ஆமாம் ஹங்கேரியின் வெப்பத்தை தாக்கு பிடிக்க முடியாத 3 ஆவது காராக பால்டி ரெஸ்டாவின் காரிலும் ஹைட்ராலிக் பிரச்சனையால் வெளியேறியது .( 19 ஆவது சுற்றில் ஆண்ட்ரியன் சட்டில் வெளியேறியது ஞாபகம் இருக்கும் )



67 ஆவது சுற்றில் ..
ஹேமில்ட்டன் இந்த ஆண்டில் தனது முதல் முதலிடத்ஹ்டு வெற்றியை உறுதி செய்யும்விதமாக தொடர்ந்து வரும் ரைகொணானை விட 12 வினாடிகள் முன்னிலையில் இருந்தார் .ஆனால் ரைகொணன் 2 ஆம் இடத்தை போராடி தக்கவைத்து  கொள்ள ட்ராக்கின் மத்திய பகுதியில் போவதன் மூலம் வெட்டலின் முன்னேற்ற வழியை அடைக்க முயற்சித்து கொண்டு இருக்க வெட்டல் வேகத்தின் உச்சத்தை தொட அது மிக தொந்தரவாக இருந்தது ! 

70 ஆவது கடைசி சுற்று ..



எவ்வித மாற்றமும் இல்லை .
முதல் இடம் - இந்த ஆண்டில் இதுவரை நடந்த பத்து போட்டிகளில் மெர்சடிசின் - லீவிஸ் ஹேமில்ட்டன் 4 முறை முதலிடத்திலும் 3 முறை இரண்டாம் இடத்திலும் ,1 முறை 3 ஆம் இடத்திலும் ஆக மொத்தம் 10 ல் 8 போட்டியை முதல் 3 இடங்களில் தொடங்கினாலும் , இந்த போட்டியில் மட்டுமே முதலித்தை தக்கவைத்து கொண்டுள்ளார். இது இந்த ஆண்டில் நல்ல துவக்கம் ..  Mercedes W04 கார் ஆனால் முடிவில் ... வெற்றியை நழுவ விட்டு விடுகிறது அந்த அணியின் தொழில் நுட்பம் .



இரண்டாம் இடம் - லோட்டஸ் ரெனால்ட்டின் - கிமி ரைகொணன் .கடந்த ஆண்டை விட கிமி நல்ல முன்னேற்றம் .கடந்த 10 போட்டிகளில் கிமி ஒருமுறை 2 ஆம் இடத்திலும் போட்டியையும் மற்ற 9 போட்டிகளில் 4 ஆம்  இடத்திலும் அதர்க்கு அடுத்துமே தொடங்கினாலும் 10 ல் 5 ல் இரண்டாம் இடம் வந்து அசத்தி வருகிறது லோட்டஸ் ரெனால்ட் இது வளரும் தொழில் நுட்ப வெற்றி .



மூன்றாம் இடம் - ரெட்புல் ரெனால்ட் -செபாஸ்டியன் வெட்டல் .முதல் இடத்தில் 3 முறை இரண்டாம் இடத்தில் 3 முறை 3 முறை 9 ஆம் இடத்தில் ஒருமுறை என தொடங்கினாலும் ,4 முதலிடமும் ,ஒரு 2 ஆம் இடமும் 2 முறை 3 ஆம் இடமும் வந்து அசத்தி கொண்டு இருக்கிறது .ஆனாலும் ஒட்டுமொத்த அளவில் முதலிட குறிக்கோள் மட்டுமே அவர்கள் தவறான இலக்கு.மற்றபடி வரும் போட்டிகளில் இதை உணர்ந்து செயல்பட வெட்டல் முயற்சிக்கலாம்.காத்து இருப்போம்.


                          ஃபார்முலா 1ன் அடுத்த வேக யுத்தம் பெல்ஜியத்தில் உள்ள  SHELL BELGIAN GRAND PRIX போட்டி வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடக்க இருக்கிறது .அங்கு நாம் சந்திக்கலாம் ..

Saturday, July 13, 2013

Nürburgring Hero - செபாஸ்டியன் வெட்டல்


Grober Preis von Deutschland (Beauty and sexiness of its women-Nurburgring )

 கடந்த ஞாயிறு July 7, 2013 ல் ஜெர்மனின் -Nürburgring களத்தில் ஃபார்முலா 1 போட்டிகளின் 9 ஆவது போட்டி நடந்தது .கடந்த Silverstone போட்டி அணிகளுக்கு முக்கியாமான இடம் .காரணம் மொத்தம் ஃபார்முலா 1ன் 11  அணிகளில் 8 அணிகள் (UK) கிரேட் பிரிட்டனில் தங்களது பயிற்சி மற்றும் மேம்பாட்டுக்காக தலைமையகத்தை கொண்டு இருப்பதால் ஒவ்வொரு அணியின் வெற்றி கோட்டின் மேல் தீவிர கவனம் செலுத்தியது  போல இங்கு Nürburgring களம் ட்ரைவர்களுக்கு முக்கியமானது .காரணம் 4 ஜெர்மன் வீரர்கள் களத்தில் ...
       

பயிற்சி மற்றும் தகுதி போட்டிகள் என்ன சொல்கிறது ?.
       கடந்த 5 ஆம் தேதி நடந்த முதல் பயிற்சி போட்டியில் மெர்சடீசின் லீவிஸ் ஹெமில்ட்டன் முதலிடமும் 
அடுத்து அன்றே நடந்த இரண்டாவது  பயிற்சி போட்டியில் ரெட்புல் ரேஸிங் ரெனால்ட் - செபாஸ்டியன் வெட்டலும் 
அடுத்த நாள் நடந்த இறுதி பயிற்சி போட்டியில் மீண்டும் செபாஸ்டியன் வெட்டலும் வந்தார் .இந்த மனிதர் கடந்த போட்டியில் கியர் பாக்ஸ் பிரச்சனையால் 42 ஆவது சுற்றோடு போட்டியை வெளியேறியது யாரும் மறந்து இருக்க மாட்டார்கள்.


தகுதி சுற்றில் ..
       மெர்சடீசின் லீவிஸ் ஹெமில்ட்டன் முதலிடமும் ,அடுத்த இடதில் செபாஸ்டியன் வெட்டலும்,மூன்றாவது இடத்தில் அதே ரெட்புல் ரேஸிங் ரெனால்ட்டின் மார்க் வெப்பரும் அடுத்த நாள் போட்டியை துவக்க தயாரானர் .


போட்டி ..
முதல் சுற்றில் ..
நல்ல துவக்கத்தை தருவார் என எதிர்பார்த்த லீவிஸ் ஹெமில்ட்டன் கார் இரண்டாவது ,மூன்றாவது கியர் மாற்றத்திர்க்குள் ஒரு நீண்ட விலகு கோணத்தில் சக்கரங்கள் வழுக்கிய நிலையில் ட்ராக்கை விட்டு விலக ,மிக அனாயசாமாக முதலிடம் வெட்டலுக்கும் இரண்டாம் இடம் வெப்பருக்கும் பரிசானது .போட்டி இல்லாத மாற்றம் !

நான்காவது சுற்றில் ...
           ஃபெராரியின் - ஃபிலிப் மாசா முதல் வளைவின் முடிவில் 5 ஆவது கியரிலிருந்த கார் ப்ரேக் அழுத்தி வேகம் குறைக்க வீல் சுழற்சி முழுவதும் தடை ஏற்பட கார் இழுத்து கொண்டு களத்தை விட்டு விலக கியரும் குறைக்க முடியாமல் அப்படியே காரை செழுத்த முடியாமல் எஞ்சினை அணைக்க ,வேறு வழி இல்லாமல் போட்டி விட்டு விலகினார் மாசா .

ஆறாவது சுற்றில் ...
       லீவிஸ் ஹெமில்ட்டன் தன்னுடய காரின் டயர் ஒத்துழைப்பை மேம்படுத்த Medium Compound டயருக்கு 3 வினாடிகளில் மாறி 9 ஆம் இடம் தொடர  ,அடுத்த சுற்றில் வெட்டல் 2.6 வினாடிகளில் அதே மீடியம் டயரோடு 7 ஆம் இடம் பறக்க,

ஒன்பதாவது சுற்றில்..
         இரண்டாவது இடத்திலிருந்த மார்க் வெப்பர் மீண்டும் அந்த இடத்தை தக்க வைக்க, மிக வேகமாக டயர் மாற்றி முடிக்கும் முன் கிளம்பி காரின் வலது பின்புற டயர் ஆரம்ப வேகத்தில் உறுவிய வேகத்தில் ...


விபத்து               நான்கு காரேஜ் தாண்டி படம் பிடித்து கொண்டு இருந்த இங்கிலந்து கேமிராமேன் Paul Allen மேல் தாக்க அவரின் கழுத்து எழும்பை இரண்டு இடத்தில் முறித்து விட்டு ஓய்ந்து போனது .உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார் இந்த மோசமான கவனகுறை செயலுக்கு ரெட் புல் அணிக்கு  £30,000 அபராதம் விதிக்கபட்டு இருக்கிறது .

 9 ஆவது சுற்றில் ..
          லீவிஸ் ஹெமில்டன் மீண்டும் 4 ஆம் இடத்தை தக்கவைத்து கொண்டாலும் தன்னுடைய டயரின் ஒத்துழைப்பை மிகவும் சந்தேகபட்டு கொண்டிருந்தார் கடந்த ரேசில் முதல் இடத்தை தவறவிட்டதர்க்கும் .இந்த ரேசில் இப்போது 4 ஆம் இடத்திர்க்கே போராடுவதர்க்கும் டயரின் ட்ராக்குடன் உள்ள  பிடிப்பில் குறைபாடே ( Lack of Grip ) காரணம் என்று உணர்கிறார் .


           இப்படி தன்னால் வேகத்தில் பதில் சொல்ல முடியாத  ட்ரைவர்கள் இப்படி டயர் குறைபாடு என்று பேசுவதாக எடுத்து கொள்ள முடியாது காரணம் முழுக்க முழுக்க கள பரிசோதனைக்கு உட்பட்டே ஒவ்வொரு டயர்களும் பயன்படுத்த அணிகள் ஒத்துழைக்கின்றன சரியான டயர்களின்  தேர்வே இந்த விசயத்திர்க்கு தீர்வு என்பதாக பதிலடி தருகிறார் பைரெலி டயர் இயக்குனர் பால் ஹெம்ப்ரி. 

23 ஆவது சுற்றில் ..
           ஹெமில்டன் பிரச்சனையை புரிந்து கொண்ட அலொன்சா அவரை சீண்டி கொண்டே இருக்க ,பொருத்து கொள்ள முடியாத அவர் மீண்டும் Miedum  டயரை மாற்றி சவாலை சந்திக்க கள்ம் திரும்ப ..


24 ஆவது சுற்றில் ..
                     13 ஆவது வளைவில் மருஷ்ய காஸ்வொர்த் அணியின் - Jules Bianchi காரில் எஞ்சின் கோளாறு காரணமாக திடீரெனெ தீப்பற்றி கொள்ள,கார் களத்தை விட்டு வெளியேறி  போவதர்க்குள் அவசரமாக காரை விட்டு வெளியேறினார்  ஜூலியஸ்  பத்திரமாக .சேஃப்டி கார் வந்தது .இவ்வளவு பாதுகாப்பு உத்ரவாதங்களுக்கு பிறகும்  இம்மாதிரி விபத்துகள் ஆச்சர்யம் அளிக்கிறது ..?


27 ஆவது சுற்றில்..
STR ஃபெராரியின் ஜீன் எரிக் வெர்ஜின் கார் போட்டியை விட்டு வெளியேறியது .காரணம் போட்டியின் ஆரம்பம் முதலே காரில் ஹைட்ராலிக் பிரச்சனை.இது பத்தாதர்க்கு ஃபோர்ஸ் இந்திய அணியின் -டி ரெஸ்டா பிட் ஸ்டாப்பின் வெளியேற்றத்தின் போது கொடுத்த அதிர்ச்சி! அதர்க்காக ஃபோர்ஸ் இந்திய அணி அபராதத்திர்க்கு உட்பட்டாலும் ஜீன் எரிக் ஓட்டத்திர்க்கு அதுவே முற்று புள்ளி ஆகிவிட்டது .

36 ஆவது சுற்றில் ..
              செர்ஜியோ பெர்சும் , மால்டோனாடொவும் 8 ஆம் இடத்திர்க்கு போராடிக்கொண்டு இருக்க ,வெட்டல் சின்ன அளவில் ப்ரேக் பிரச்சனை பற்றி பேச ,

42 ஆவது சுற்றில் ..
     வெட்டல் டயர் மாற்றம் வர ,முதலிடத்தில் இப்போது கிமி ரைகொணன் 

49 ஆவது சுற்றில் ..
     கிமி டயர் மாற்றம் .ஆனால் Soft டயர் .முதலிட ஆசையாக இருக்கலாம் !

54 ஆவது சுற்றில் 
             அருமையான வேகத்தில் வெட்டல் (51 ஆவது சுற்றில் பொருத்திய)புதிய  டயருடன் பாய்ந்து கொண்டு இருக்க ,பின்னால் தொடரும் க்ரோஜியனுடன் இடைவெளி 1.9 வினாடிகள் அடுத்த சில சுற்றுக்குள் ரைகொணன் முன்னேற வழி கொடுப்பார் என்பதை உறுதி செய்ய முடிந்தது .அலோன்சா நான்காம் இடம் ..

57 ஆவது சுற்றில் ..
              முதலிடத்து வெட்டலை தொடரும்  ரைகொணன் இடைவெளி 1.9 வினாடிகள்.. 
58 ஆவது சுற்றில் ..
இப்போது வெட்டலை - ரைகொணன் இடைவெளி 1.4 வினாடிகள்..
59 ஆவது சுற்றில் 
வெட்டலை -  ரைகொணன் இடைவெளி 1 வினாடி.

60 ஆவது இறுதி சுற்றில் ..


சொந்த மண்ணில் செபாஸிட்யன் வெட்டல் முதலிடத்து வெற்றியை தக்கவைத்துகொள்ள ,


இரண்டாம் இடத்தை லோட்டஸ் ரெனால்ட்டின் - கிமி ரைகொணனும் ,


மூன்றாவது இடத்தை அதே அணியின் ரொமைன் க்ரோஜியனும் தக்கவைத்து கொள்ள ..போட்டி முடிந்தது .

அடுத்த வேக யுத்தம் ..
        


           வரும் ஜூலை 28 ல் ஹங்கேரியின் - Magyar Nagydíj ட்ராக்கில் ,இந்திய நேரப்படி மாலை 5.30 க்கு தொடங்கும் ..அங்கு பார்ப்போம் .






  

Thursday, July 11, 2013

Silverstone நாயகன் - நிக்கோ ரோஸ்பெர்க் !


                             
              கடந்த வாரத்திர்க்கு முந்திய ஞாயிறு 30 ஜூன் ஃபார்முலா 1 போட்டியின் எட்டாவது சுற்று போட்டி கிரேட் பிரிட்டனின் உலகின் பழமை வாய்ந்த ,  Silverstone களத்தில் நடந்தது .


              பொதுவாகவே நமக்கு இங்கிலாந்து பற்றி சொல்லும்போது யுனைடெட் கிங்டம் என்றும், கிரேட் பிரிட்டன் என்றும் சொல்வார்கள் வேறொன்றும் இல்லை .இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து சேர்ந்தது `யுனைடெட் கிங்டம் .இதில் வடஅயர்லாந்து தவிர்த்த மூன்று நாடுகளும் கிரேட் பிரிட்டன் எனப்படுகிறது .ஆங்கில கால்வாயை தாண்டிய ஃப்ரான்ஸ் நாட்டில் ஒரு பகுதியான பிரிட்டனி அல்லது பிரிட்டன் என்ற பகுதியை பிரித்து காட்ட, கிரேட்( பிரிட்டன் ) என்ற வார்த்தை சேர்த்துகொள்ளபட்டது அவ்வளவுதான் .அதனால் இனி நமக்கு போட்டியில் என்ன நடந்தது என்பது பற்றி பார்ப்போம் .
பயிற்சி மற்றும் தகுதி போட்டிகள்  .

         மழையுடன் ஆரம்பித்த முதல் பயிற்சி போட்டி நடக்குமா என்பதர்க்கு STR ஃபெராரியின் டேனியல் ரிக்கார்டியோ முதலிடம் நாந்தான் என பதில் அளிக்க அன்று நடந்த இரண்டாவது ப.போ,மெர்சடீஸ் அணியின் நிக்கோ ரோஸ்பெர்க் முதலிடமும் அடுத்த நாள் நடந்த 3 ஆவது ப.போ,அவரே வந்தாலும் ,


                 தகுதி சுற்றில் உனக்கு நான்தான் சீனியர் என்பதாக அதே அணியின் லீவிஸ் ஹெமில்ட்டன் முதலாவதாகவும் இரண்டாவது இடத்தை ரோஸ்பெர்க்குக்கும் ,மூன்றாவது இடத்தை ,ரெட்புல் ரேசிங்-ரெனால்டின் செபாஸ்டியன் வெட்டலும் பெற்றனர் .


போட்டி ...
முதல் சுற்றில் ..
              முதல் இடத்து  லீவிஸ் ஹெமில்ட்டன் வேகம் எடுத்து துவங்க அவரை தொடரும் ரோஸ்பெர்க்கை மூன்றாவது இடத்து வெட்டல் துப்பாக்கியின் பூல்லட் போல தாண்டி இரண்டாவது இடத்தை தக்கவைத்துகொண்டார் அதே போல நான்காவதாக துவங்கிய ரெட்புல்லின் - மார்க் வெப்பர் காரின் பம்பர் உடைந்த நிலையில் பின் தங்கி, 17 இடத்திர்க்கு தள்ளபட்டது .

4 ஆவது சுற்றில் ...

        வெட்டலால் துரத்தபடும் ஹெமில்ட்டன் .வெறும் 1.9 வினாடிகள் முன்னனி வகிப்பது ரெட்புல் அணிக்கு சந்தோசம் தந்தது .

8 ஆவது சுற்றில் ..

               ரெட்புல் அணியின் பிரார்த்தனை என்பது போல , ஹெமில்ட்டன் காரின் இடது பின்புற Medium compound டயர் டிஸ்க்கை விட்டு முற்றிலுமாக் அறுந்து வெளியேறியது ..


10 ஆவது சுற்றில் ..
            ஹெமில்ட்டன் பிரச்சனை முடிவுக்கு வருவதர்க்குள் ஃபெராரியின் ஃபிலிப் மாசாவின் காரில் அதே போல் இடது பின்புற Medium compound டயர் பஞ்சர் ..

15 ஆவது சுற்றில்..
           இப்போது ,STR ஃபெராரியின்- ஜீன் எரிக் வெர்ஜின் காரின் எல்லாமே அதே டயர் மற்றும் ஆனால் Hard compound !!

என்ன ஆச்சு Pirelli டயர் கம்பெனிக்கு ? 


          குறிப்பாக 4 ஆவது The Loop வளைவிலும் மற்றும் 5 ஆவது Aintree வளைவில் மட்டும் பில்லி சூனியம் வைத்தது போல இடது பின்புற டயர்களின் தொடர் பஞ்சர் ..ஒருவேளை அந்த வளைவுகளின் ட்ராக் Kerp எனப்படும் அமைப்பு  டயர்களை வெட்டுகிறதா ,போட்டியின் முடிவுகள் தலைகீழாக மாறப்போகிறது போலவே?


21 ஆவது சுற்றில் ..

                 களத்தில் இப்போது முதல் 5 வீரர்கள் 1. வெட்டல் 2. ரோஸ்பெர்க் 3. ஆண்ட்ரியன் சட்டில் 4. அலோன்சா 5.ரைகொணன்

28 ஆவது சுற்று ..
              ஹெமில்ட்டன் விட்ட இடத்தை பிடிக்கும் வேகத்தில் இப்பொது 12 ஆம் இடத்தில் பாய்ந்து கொண்டு இருக்க ..

35ஆவது சுற்றில் ..

           STR ஃபெராரியின்- ஜீன் எரிக் வெர்ஜின் கார் டயர் பிரச்சனையால் போட்டியை விட்டு விலகியது .

41 ஆவது சுற்றில் ..


            முதல் இடத்து வெட்டலின் கார் திடீரென வேகம் குறைந்து பின் தங்க , ரெட்புல்லின் தொழில் நுட்ப பகுதியளர்கள் அதிர்சியில் உறைய ,வெட்டலின் காரின் 5 ஆவது கியர் முற்றிலுமாக செயல் படாமல் போகவே க்களத்தின் ஓரமாக காரை நிறுத்திவிட்டு இறங்கி காரருகே நின்று கொண்டு இருக்க , கடந்து போன மற்ற ஓட்டுனருக்கும் , ரசிகர்களுக்கும் அந்த நிகழ்வு மிகவும் சோகமாக்கியது ..
இதர்க்கு முன் கடந்த ஆண்டின் இதே எட்டாவது போட்டியில்  ஐரோப்பாவின் போட்டியில் (24 Jun 2012)வெளியேறியதர்க்கு பிறகு இதுவே அவரின் ரிட்டயர்மெண்ட் .

46 ஆவது சுற்றில்..
              அதே போல் இடது பின்புற Medium compound டயர் பஞ்சர் ..மெக்லரனின் மெர்சடீசின் - செர்ஜியோ பெரெஸ் கார்.


48 ஆவது சுற்றில் 
                  யாரும் எதிபாராத விதமாக மூன்றாவது இடத்தில் இருந்த ரெட்புல்லின் மார்க் வெப்பெர் இரண்டாவது இடத்து ரைகொணனை முந்தி செல்ல வெட்டலின் வெளியேற்ற சோகத்தை ஆறுதல் படுத்துவிதமாக இருந்தது .இன்னும் 4 சுற்றுக்கள் இருந்த நிலையில் இந்த முன்னேற்றம் முதலிடத்தை நோக்கி என்பதாக பட்டது .


50 ஆவது சுற்றில்..
              மூன்றாவது இடத்து ரைகொணன் இப்போது ஃபெராரியின் அலோன்சாவால் முன்றாவது இடம் தள்ளப்பட்டார் .போடியம் வாய்ப்பு பறிபோனது .


51 ஆவது சுற்றில்..
                 ரைகொணன் இப்போது  லீவிஸ் ஹேமில்ட்டனால் மீண்டும் பின்னுக்கு தள்ளபட்டார் .


52 இறுதி சுற்றில் 
மார்க் வெப்பரின் முதலிடத்து முயற்சியை 0.7 வினாடிகள் வித்தியாசத்தில் முறியடித்து, முதல் இடம் மெர்சடீஸ் அணியின் - நிக்கோ ரொஸ்பெர்க்.


இரண்டாம் இடம் ரெட்புல் ரேசிங்-ரெனால்டின் மார்க் வெப்பர் .


முன்றாவது இடம் ஃபெராரியின் -ஃபெர்னாண்டொ அலோன்சா .  

அடுத்த போட்டி 
  



Tuesday, June 11, 2013

கனடாவின் வெற்றி - Mark Robinson கண்ணீர் அஞ்சலிக்கு சமர்பணம் .


          கடந்த ஞாயிறு ( 09.06.2013 ) வட அமெரிக்கா கண்டத்தின் உலகின் இரண்டாவது பெரிய நாடான  கனடாவின் - மோண்ட்ரியால் நகரின் The Circuit Gilles Villeneuve களத்தில் ஃபார்முலா 1 போட்டிகளின் 7 ஆவது சுற்று நடந்தது.இந்த களம் புனித லாரன்ஸ் நதியின்  மேல்   305.27 கி.மீ நீளத்திர்க்கு செயற்கையாக மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு குட்டி தீவுதான் இந்த களம் . 

பயிற்சி மற்றும் தகுதி போட்டிகள் .
(P 1 ) முதல் பயிற்சி போட்டியில் , சஹாரா ஃபோர்ஸ் இந்தியாவின் - பால்டி ரெஸ்டா வந்தார் .
(P 2 ) 2 இரண்டாவதில் ,ஃபெராரியின் - ஃபெர்ணாண்டொ அலோன்சா 
(P 3 ) 3 ல் ,ரெட்புல் ரேசிங் அணியின் மார்க் வெப்பர் 
.

ஆனால் தகுதி போட்டி ..
          ரெட்புல்லின் - செபாஸ்டியன் வெட்டல் வசம் ஆகிவிட்டது .வெகு சில ரேசுகளுக்கு பிறகு ..இரண்டாவது இடம் மெர்சடிசீன் -ஜென்சன் பட்டன் ,மூன்றாவதாக -இதுவரை நடந்த 6 போட்டிகளிலும் எவ்வித புள்ளியும் பெறாத -வில்லியம்ஸ் ரெனால்டின் Valtteri Bottas .

இந்திய நேரப்படி இரவு 11.30 க்கு போட்டி துவங்கியது .
முதல் சுற்றில் ...
           போட்டி துவங்கிய உடனே Valtteri Bottas ஐ மிக சாதரணமாக ரோஸ்பெர்க் ,மார்க் வெப்பர் ,ஃபெர்னாண்டொ அலோன்சா ஆகிய மூவரும் பின்னுக்கு தள்ள அவர் 6 ஆவது இடம் . சுமார் 27 -39 அடி அகளமுள்ள வில்நேவ் களம்  முதல் மற்றும் இரண்டாம் வளைவு தூரம் நீளமானது என்பதாலும் வெகு சுலபமாக முந்தினார்கள்.


9 ஆவது சுற்றில் ..
             லோட்டஸ் ரெனால்ட்டின் - ரைகொணன் இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முன்னனி வீரர் .இன்று அவரின் காரில் KERS தொழில்னுட்பத்தில் கோளாறு .DRS தவிர்த்த பகுதிகளில் KERS கை கொடுக்காவிட்டால் முன்னனி  புள்ளிகளை இழக்க நேரிடலாம் .

17 ஆவது சுற்றில் ...
              Medium Compound டயரை தேர்வு செய்த வெட்டல் டயர் மாற்றம் வருவதர்க்கு முன் ஹேமில்டன் உடனான இடைவெளி 7.6 வினாடிகள் . இப்போது அவரை தொடர்ந்து அலொன்சோவும் டயர் மாற்றம் .அதே தேர்வு .


18 ஆவது சுற்று..

           10 ஹேர் பின் வளைவில் வந்து கொண்டு இருந்த சஹார ஃபோர்ஸ் இந்திய அணியின் - ஆண்ட்ரியன் சட்டிலை காரின் பின்பகுதியில் வில்லியம்ஸ் அணியின் -  பாஸ்டெர் மால்டொனாடொ கார் உரசியது .அது ஒரு பிரேக்கிங் பாயிண்ட் இடம் .எந்த ஒரு காரும் ஓவர் டேக்கிங் செய்யும் முயற்சி செய்ய தவறான இடம் .அதில் போன ஆண்டு முழுதும் மோதலில் பெயர் போன மால்டொனடோ , சட்டிலை 15 ஆவது சுற்றில் மோதியதர்க்கு கொடுக்கப்பட்டது .



அது என்ன Drive-through penalty ?

   பொதுவாக ரேசின் போது ட்ரைவரின் சின்ன தவறுகளுக்கு அளிக்கபடும் தண்டனை.
                     ட்ராக்கில் உள்ள வெள்ளை கோடுகளை தாண்டுவது , தொடர்ந்து இரண்டு வளைவுகளை அடுத்தடுத்து கொண்ட ட்ராக்கின் அமைப்பான chicanes பகுதியில் வளையாமல் நேரே செல்வது ,ட்ராக்கில் முன்னே செல்லும் காரின் விபத்தினாலோ அல்லது கோளாறு காரணமாகவோ நின்று போகும்போதும், அதனால் ஓவர் டேக்கிங் தவிர்க்க ஒரு முறை மஞ்சள் கொடி அசைக்கும்போதும் ,(அதே போல வேறு ஏதேனும் பெரிய விபத்து நடந்து அதர்க்கு இரண்டு முறை தொடர்ந்து மஞ்சள் கொடியசைக்கும்போதும் வேகத்தையும்  குறைத்து  ,ஓவர் டேக்கிங் செய்வதை தவிர்க்க அறிவுறுத்தபடும் ,இதைவிட மஞ்சள் கொடியுடன் SC - (Safty Car )என்ற பெரிய கறுப்பு எழுத்துக்களுடன் கூடிய வெள்ளை போர்டு காட்டப்படும் )  அதை மதிக்காமல் போகும் காரை அந்த அணியின் பிட் லேனுக்கு அழைத்து பத்து வினாடிகள் நிறுத்தி மீண்டும் அனுப்புவதர்க்கு Drive-through penalty எனப்படுகிறது .அதனாலேயே இதர்க்கு இன்னொறு பெயர்  Stop-Go Penalty.இப்படி நிறுத்தி அனுப்பும்போது டயர் மாற்றம் மற்றும் வேறு ரிப்பேர் பார்ப்பதர்க்கு அனுமதி  இல்லை .

27 ஆவது சுற்றில் ...
இப்போதுதான் ஜென்சன் பட்டன் டயர் மாற்றம் செய்தார் .
அதே சமயம் கார்களின் நிலை .வெட்டலுக்கு சுமார் 15 வினாடிகள் இடைவெளியில் ஹேமில்டன் வர ,அவரை தொடர்ந்து வந்த ரோஸ்பெர்க் முன்னே செல்லும் தன் அணியின் ஹேமிடல்னுக்கு எவ்வித தொந்தரவும் செய்யாமல் தொடர ,இவர்களுக்கு பின்னால் வெப்பர் ,அலோன்சா .



37 அவது சுற்றில் ..
வெப்பர் கார் மிக ஆக்ரோசமாக ஹேமில்டனின் இரண்டாவது இடத்தை நோக்கி முன்னேறி கொண்டு இருக்கும்போது கேட்டர் ஹாமின் - வான் டெர் கார்ட் கார் ஹேர்பின் வளைவில் தொடர்ந்து பின்னே வரும் முன்னனி வரிசை காருக்கு வழிகொடுக்க எச்சரிக்கை செய்யும் நீல கொடி அசைக்க பட்டும் ,அதை கவனிக்க தவறியதால் பின்னால் வந்த வெப்பர் கார் மோதியது .இதில் வெப்பர் காரின் முன்பகுதி மிகவும் பாதிக்கபட்டது .எனவே கார் பிட் லேன் போனது .இரண்டாம் இடம் கை நழுவியது மீண்டும் 4 ஆம் இடமே வெப்பருக்கு .வான் டெர் கார்ட் கார் Stop-Go Penalty அனுபவித்தது .

43 ஆவது சுற்றில் ,,
       கேட்டர் ஹாமின் - வான் டெர் கார்ட் கார் இன்று இன்னொரு வில்லியம்ஸ்-பாஸ்டெர் மால்டொனாடொவாக செயல்பட்டார் .ஆம் இப்போதும் அதே நீல கொடி அசைவை மதிக்காமல் சென்றதால்   சாபர் ஃபெராரியின் - நிக்கோ ஹல்கென்பர்க் இவரை தொடர்ந்து வந்து மோதி கொண்டதில் இரண்டு காரும் போட்டியை விட்டு வெளியேறியது .

    இதனால் வெறுத்து போன போட்டி நடுவர் அடுத்து ஜுன் 30 ஆம் தேதி நடக்க இருக்கும் ப்ரிட்டிஸ் க்ராண்ட் ப்ரிக்ஸின்   ஐந்து இடம் பின்னால் இருந்து போட்டியை தொடங்குமாறு  தண்டிக்கபட்டார் .


52 ஆவது சுற்றில் ..
வெட்டல் மீண்டும் அதே Mediuam Compound டயரை தேர்வு செய்து போட்டியின் வெற்றியை முழுவதுமாக தன் கட்டுபாட்டில் வைத்து இருக்கும்போது ,மூன்றாவது சுற்றில் முதல் வளைவில் களத்தை விட்டு வழுக்கிய கார் புல் தரைக்கு சென்றது ,சுதாரித்து கொண்ட வெட்டல் வேகத்தை குறைத்து ட்ராக்குக்கு மீண்டபோது ,அவருக்கும் ஹேமில்டனுக்குமான இடைவெளி 14.6 வினாடிகள் .



63 ஆவது சுற்றில் ..
                    இரண்டாவது இடத்து ஹேமில்ட்டனை நெருங்கி , விலகி வந்து கொண்டு இருந்த ஃபெர்னாண்டொ அலோன்சா ஹேமில்ட்டனின் தற்காப்பு ஓட்டத்திர்க்கு முற்று புள்ளி வைத்து முன்னேறினார் .இந்த தாண்டுதலின்போது அலோன்சாவின் கார் ஹேமில்டனின் காரில் உரசியது .சிறு பாதிப்பை ஏற்படுத்தியது .மஞ்சள் கொடி அசைக்க பட்டது .
சின்ன உரசல்தானே என்று பார்த்து கொண்டு இருக்கும்போதே  கேமிராவின் பார்வை பின்னோக்கி திரும்ப அங்கு..சாபர் ஃபெராரியின் - மீதம் இருந்த Esteban Gutierrez கார் முதல் வளவு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது .இந்தகாரும் போட்டியை விட்டு வெளியேறியது .இத்துடன் நான்காவது கார் வெளியேறுகிறது .



70 ஆவது  வெற்றி சுற்றில் ..
            முதல் இடம் எவ்வித சந்தேகமும் இல்லை .ரெட்புல்லின் - செபாஸ்டியன் வெட்டல் .இரண்டாவது இடம் ஃபெராரியின் - ஃபெர்னாண்டோ அலோன்சா , மூன்றாவது இடம் - மெர்சடீசின் லீவிஸ் ஹெமில்ட்டன் ‘

        மூன்று முன்னால் உலக சாம்பியன்கள் மேடையேறி வெற்றியை கொண்டாடினாலும் ,வெற்றிக்கு அடுத்து நடக்கும் ஸ்பான்சர் பார்ட்டியில் இந்த வெற்றி வீரர்கள் கலந்து கொள்ளமுடியாது என்பது அப்போது தெரியாது .

    ஆம் .  அதர்க்கு பின்னால் ஒரு துக்கமான விபத்து ஒரு மரணத்தை அழைத்து வந்தது ..அதுவும் சாபர் அணியின் கடைசி விபத்துக்குட்பட்ட Esteban Gutierrez' கார் , போட்டி முடிந்தவுடன்  ட்ராக்கில் இருந்து அகற்ற பயன்படுத்தபடும் க்ரேன் மூலம் அந்த காரை தூக்கப்பட்டு - சாபர் அணியின் பிட்லேனில் இறக்கி வைக்க படும்முன் அந்த களத்தின் மார்ஸல் (Marshal) எனப்படும் ஊழியர் ஒருவரின் மரணத்தை ஏற்படுத்தியது .




யார் இந்த மார்ஸல்கள் ? 

                       Racing Safety Schools மற்றும் Crash and Burn Schools மூலம் தேர்ந்தெடுக்கப்படும் இந்த Marshal என்பவர்கள் அந்த பள்ளிகள் மூலம் (1)கொடிகள் அதன் பயன்பாடுகள் (2)அடிப்படை செய்தி மற்றும் ரேடி்யோ தொடர்புகள் (3) களத்தில் ஏற்படும் விபத்து முதலுதவி (4) நெருப்பு மற்றும் விபத்தான காரில் சிக்கிய ஒட்டுனரை காப்பாத்துவது என்பது போன்ற பயிற்சி முடித்தவர்கள் .இவர்கள் களத்தின் போட்டி நடத்தும் அமைப்பின் நிரந்த ஊழியர்களும் இருக்கிறார்கள் அதோடு இரண்டு நாள் பயிற்சி மட்டுமே பெற்ற தாற்காலிக ஊழியர்களும் இருக்கின்றனர் .


          இந்த களத்தின் மார்ஸல் - Mark Robinson என்பவர்    Automobile Club de l'Île Notre Dame உறுப்பினரும் கூட  . அந்த காரை தூக்கி செல்லும் ”மொபைல் க்ரேன் “ வண்டியை தொடரும்போது தவறவிட்ட தனது தொடர்புகொள்ளும் ரேடியோவை எடுக்க முயலும்போது ,அந்த க்ரேன் வண்டி மூலம் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார் .உடனே அவரை ஹெலிகாப்டர் மூலம் மோண்ட்ரியால் - Sacre-Coeur மருத்துவமணைக்கு எடுத்து செல்லப்பட்டார் .ஆனால் சிகிச்சை பலனிக்காமல் அங்கு இறந்து போனார் .

              இதில் மிக பெரிய விசயம் என்னவென்றால் இந்த மார்ஸல் வேலையை  Mark Robinson  செய்வதர்க்கு அவர் ஃபார்முலா 1 வைத்து இருந்த அலாதியான நேசம்தான் காரணம் .அவர்  UPS logistics ல் பணிபுரிபவர் .தனது 39 ஆவது பிறந்த நாளை தனது நண்பர்களுடன் ,வாராந்திர சாப்ட்பால் விளையாட்டு போது அவரை தனது பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டு இருந்தார் .நேசிக்கும் இடத்திலேயே மரணம் எத்தனை பேருக்கு கொடுத்து வைக்கபட்டு இருக்கு ?


                இதனால்தான் போட்டி யில் வெற்றி பெற்ற அனைத்து வீரர்களும் அந்த மார்ஸலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தங்களது வெற்றி பார்ட்டியை கைவிட்டனர் .வெற்றி இங்கு ஒரு ஃபார்முலா 1 காதலனின் அஞ்சலிக்கு சமர்ப்பிக்கபட்டது .