Grober Preis von Deutschland (Beauty and sexiness of its women-Nurburgring )
கடந்த ஞாயிறு July 7, 2013 ல் ஜெர்மனின் -Nürburgring களத்தில் ஃபார்முலா 1 போட்டிகளின் 9 ஆவது போட்டி நடந்தது .கடந்த Silverstone போட்டி அணிகளுக்கு முக்கியாமான இடம் .காரணம் மொத்தம் ஃபார்முலா 1ன் 11 அணிகளில் 8 அணிகள் (UK) கிரேட் பிரிட்டனில் தங்களது பயிற்சி மற்றும் மேம்பாட்டுக்காக தலைமையகத்தை கொண்டு இருப்பதால் ஒவ்வொரு அணியின் வெற்றி கோட்டின் மேல் தீவிர கவனம் செலுத்தியது போல இங்கு Nürburgring களம் ட்ரைவர்களுக்கு முக்கியமானது .காரணம் 4 ஜெர்மன் வீரர்கள் களத்தில் ...
பயிற்சி மற்றும் தகுதி போட்டிகள் என்ன சொல்கிறது ?.
கடந்த 5 ஆம் தேதி நடந்த முதல் பயிற்சி போட்டியில் மெர்சடீசின் லீவிஸ் ஹெமில்ட்டன் முதலிடமும்
அடுத்து அன்றே நடந்த இரண்டாவது பயிற்சி போட்டியில் ரெட்புல் ரேஸிங் ரெனால்ட் - செபாஸ்டியன் வெட்டலும்
அடுத்த நாள் நடந்த இறுதி பயிற்சி போட்டியில் மீண்டும் செபாஸ்டியன் வெட்டலும் வந்தார் .இந்த மனிதர் கடந்த போட்டியில் கியர் பாக்ஸ் பிரச்சனையால் 42 ஆவது சுற்றோடு போட்டியை வெளியேறியது யாரும் மறந்து இருக்க மாட்டார்கள்.
தகுதி சுற்றில் ..
மெர்சடீசின் லீவிஸ் ஹெமில்ட்டன் முதலிடமும் ,அடுத்த இடதில் செபாஸ்டியன் வெட்டலும்,மூன்றாவது இடத்தில் அதே ரெட்புல் ரேஸிங் ரெனால்ட்டின் மார்க் வெப்பரும் அடுத்த நாள் போட்டியை துவக்க தயாரானர் .
போட்டி ..
முதல் சுற்றில் ..
நல்ல துவக்கத்தை தருவார் என எதிர்பார்த்த லீவிஸ் ஹெமில்ட்டன் கார் இரண்டாவது ,மூன்றாவது கியர் மாற்றத்திர்க்குள் ஒரு நீண்ட விலகு கோணத்தில் சக்கரங்கள் வழுக்கிய நிலையில் ட்ராக்கை விட்டு விலக ,மிக அனாயசாமாக முதலிடம் வெட்டலுக்கும் இரண்டாம் இடம் வெப்பருக்கும் பரிசானது .போட்டி இல்லாத மாற்றம் !
நான்காவது சுற்றில் ...
ஃபெராரியின் - ஃபிலிப் மாசா முதல் வளைவின் முடிவில் 5 ஆவது கியரிலிருந்த கார் ப்ரேக் அழுத்தி வேகம் குறைக்க வீல் சுழற்சி முழுவதும் தடை ஏற்பட கார் இழுத்து கொண்டு களத்தை விட்டு விலக கியரும் குறைக்க முடியாமல் அப்படியே காரை செழுத்த முடியாமல் எஞ்சினை அணைக்க ,வேறு வழி இல்லாமல் போட்டி விட்டு விலகினார் மாசா .
ஆறாவது சுற்றில் ...
லீவிஸ் ஹெமில்ட்டன் தன்னுடய காரின் டயர் ஒத்துழைப்பை மேம்படுத்த Medium Compound டயருக்கு 3 வினாடிகளில் மாறி 9 ஆம் இடம் தொடர ,அடுத்த சுற்றில் வெட்டல் 2.6 வினாடிகளில் அதே மீடியம் டயரோடு 7 ஆம் இடம் பறக்க,
ஒன்பதாவது சுற்றில்..
இரண்டாவது இடத்திலிருந்த மார்க் வெப்பர் மீண்டும் அந்த இடத்தை தக்க வைக்க, மிக வேகமாக டயர் மாற்றி முடிக்கும் முன் கிளம்பி காரின் வலது பின்புற டயர் ஆரம்ப வேகத்தில் உறுவிய வேகத்தில் ...
விபத்து நான்கு காரேஜ் தாண்டி படம் பிடித்து கொண்டு இருந்த இங்கிலந்து கேமிராமேன் Paul Allen மேல் தாக்க அவரின் கழுத்து எழும்பை இரண்டு இடத்தில் முறித்து விட்டு ஓய்ந்து போனது .உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார் இந்த மோசமான கவனகுறை செயலுக்கு ரெட் புல் அணிக்கு £30,000 அபராதம் விதிக்கபட்டு இருக்கிறது .
9 ஆவது சுற்றில் ..
லீவிஸ் ஹெமில்டன் மீண்டும் 4 ஆம் இடத்தை தக்கவைத்து கொண்டாலும் தன்னுடைய டயரின் ஒத்துழைப்பை மிகவும் சந்தேகபட்டு கொண்டிருந்தார் கடந்த ரேசில் முதல் இடத்தை தவறவிட்டதர்க்கும் .இந்த ரேசில் இப்போது 4 ஆம் இடத்திர்க்கே போராடுவதர்க்கும் டயரின் ட்ராக்குடன் உள்ள பிடிப்பில் குறைபாடே ( Lack of Grip ) காரணம் என்று உணர்கிறார் .
இப்படி தன்னால் வேகத்தில் பதில் சொல்ல முடியாத ட்ரைவர்கள் இப்படி டயர் குறைபாடு என்று பேசுவதாக எடுத்து கொள்ள முடியாது காரணம் முழுக்க முழுக்க கள பரிசோதனைக்கு உட்பட்டே ஒவ்வொரு டயர்களும் பயன்படுத்த அணிகள் ஒத்துழைக்கின்றன சரியான டயர்களின் தேர்வே இந்த விசயத்திர்க்கு தீர்வு என்பதாக பதிலடி தருகிறார் பைரெலி டயர் இயக்குனர் பால் ஹெம்ப்ரி.
23 ஆவது சுற்றில் ..
ஹெமில்டன் பிரச்சனையை புரிந்து கொண்ட அலொன்சா அவரை சீண்டி கொண்டே இருக்க ,பொருத்து கொள்ள முடியாத அவர் மீண்டும் Miedum டயரை மாற்றி சவாலை சந்திக்க கள்ம் திரும்ப ..
24 ஆவது சுற்றில் ..
13 ஆவது வளைவில் மருஷ்ய காஸ்வொர்த் அணியின் - Jules Bianchi காரில் எஞ்சின் கோளாறு காரணமாக திடீரெனெ தீப்பற்றி கொள்ள,கார் களத்தை விட்டு வெளியேறி போவதர்க்குள் அவசரமாக காரை விட்டு வெளியேறினார் ஜூலியஸ் பத்திரமாக .சேஃப்டி கார் வந்தது .இவ்வளவு பாதுகாப்பு உத்ரவாதங்களுக்கு பிறகும் இம்மாதிரி விபத்துகள் ஆச்சர்யம் அளிக்கிறது ..?
27 ஆவது சுற்றில்..
STR ஃபெராரியின் ஜீன் எரிக் வெர்ஜின் கார் போட்டியை விட்டு வெளியேறியது .காரணம் போட்டியின் ஆரம்பம் முதலே காரில் ஹைட்ராலிக் பிரச்சனை.இது பத்தாதர்க்கு ஃபோர்ஸ் இந்திய அணியின் -டி ரெஸ்டா பிட் ஸ்டாப்பின் வெளியேற்றத்தின் போது கொடுத்த அதிர்ச்சி! அதர்க்காக ஃபோர்ஸ் இந்திய அணி அபராதத்திர்க்கு உட்பட்டாலும் ஜீன் எரிக் ஓட்டத்திர்க்கு அதுவே முற்று புள்ளி ஆகிவிட்டது .
36 ஆவது சுற்றில் ..
செர்ஜியோ பெர்சும் , மால்டோனாடொவும் 8 ஆம் இடத்திர்க்கு போராடிக்கொண்டு இருக்க ,வெட்டல் சின்ன அளவில் ப்ரேக் பிரச்சனை பற்றி பேச ,
42 ஆவது சுற்றில் ..
வெட்டல் டயர் மாற்றம் வர ,முதலிடத்தில் இப்போது கிமி ரைகொணன்
49 ஆவது சுற்றில் ..
கிமி டயர் மாற்றம் .ஆனால் Soft டயர் .முதலிட ஆசையாக இருக்கலாம் !
54 ஆவது சுற்றில்
அருமையான வேகத்தில் வெட்டல் (51 ஆவது சுற்றில் பொருத்திய)புதிய டயருடன் பாய்ந்து கொண்டு இருக்க ,பின்னால் தொடரும் க்ரோஜியனுடன் இடைவெளி 1.9 வினாடிகள் அடுத்த சில சுற்றுக்குள் ரைகொணன் முன்னேற வழி கொடுப்பார் என்பதை உறுதி செய்ய முடிந்தது .அலோன்சா நான்காம் இடம் ..
57 ஆவது சுற்றில் ..
முதலிடத்து வெட்டலை தொடரும் ரைகொணன் இடைவெளி 1.9 வினாடிகள்..
58 ஆவது சுற்றில் ..
இப்போது வெட்டலை - ரைகொணன் இடைவெளி 1.4 வினாடிகள்..
59 ஆவது சுற்றில்
வெட்டலை - ரைகொணன் இடைவெளி 1 வினாடி.
60 ஆவது இறுதி சுற்றில் ..
சொந்த மண்ணில் செபாஸிட்யன் வெட்டல் முதலிடத்து வெற்றியை தக்கவைத்துகொள்ள ,
இரண்டாம் இடத்தை லோட்டஸ் ரெனால்ட்டின் - கிமி ரைகொணனும் ,
மூன்றாவது இடத்தை அதே அணியின் ரொமைன் க்ரோஜியனும் தக்கவைத்து கொள்ள ..போட்டி முடிந்தது .
அடுத்த வேக யுத்தம் ..
வரும் ஜூலை 28 ல் ஹங்கேரியின் - Magyar Nagydíj ட்ராக்கில் ,இந்திய நேரப்படி மாலை 5.30 க்கு தொடங்கும் ..அங்கு பார்ப்போம் .