உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Tuesday, January 22, 2013

மைக்கேல் ஷூமேக்கருக்கு ( இரண்டாவது முறையாக )வழியனுப்பும் போட்டி !.


கடந்த 25 டிசம்பரில் பிரேசிலிலுள்ள - Interlagos களத்தில் நடந்தது .ஃ பார்முலா 1 போட்டியின் சாம்பியனை முடிவு பண்ணவேண்டிய போட்டி என்பதால் மிக கடுமையான எதிர்பார்ப்பு களத்தில் மட்டுமல்ல உலக ஃ பார்முலா 1 ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட - இந்த ஆண்டின் கடைசி( 20 ஆவது )போட்டி ..


 இந்த விசயத்தை அவர்கள் பேசிகொண்ட மாதிரியே இருந்தது !

ஆரம்பம் முதலே மெக்லரண் மெர்சடீசின் கை ஓங்கியிருந்தது .காரணம் அணியின் சாம்பியன்ஷிப்புக்கான இரண்டாம் இடம்
முதல் இரண்டு பயற்சி போட்டியிலுமே லீவிஸ் ஹெமில்டனும் ,கடைசி ப.போ ஜென்சன் பட்டனும் பகிர்ந்து கொண்டார்கள் .தகுதி சுற்றில் மீண்டும் லீவிஸ் ஹெமில்டனே வந்தார் நேர நிர்ணயம் 107% அவரே செய்தார் (1:15.075 + 0:5.255 =1:20.330 ) மேலும் கடந்த பல போட்டிகளில் மெக்லரண் மெர்சடீசின் இரு வீரர்களும் ரெட்புல்லின் செபாஷ்டியனால் பலமுறை வார்த்தை பிரோயோகத்தால் காயப்பட்டு  இருப்பதுவும் சுலபமாக அவருக்கு தனி வீரருக்கான சாம்பியன்ஷிப் பட்டதை எளிதில் தட்டி செல்ல கூடாது எனும் பழிவாங்கலும் இருந்தது .
    
நான்காம் இடத்தில வெட்டல் போட்டியை துவங்குவது ஒருவிதத்தில் மெக்லரண் அணிக்கு சற்று அழுத்தம் தந்தாலும் எதிர்கொள்ள காத்து இருந்தார்கள் .


போட்டி துவங்கியது ..

வேகத்தின் மொத்த கோபத்தையும் முதல் துவக்கத்தில்   மெக்லரண் அணியிடம் இருந்தது .

யாரும் எதிர்பாராத விதமாக வெட்டலின் கார் மோதலில் சில பாகங்களை பறக்கவிட்டது .


வில்லியஸ் - ப்ருனே சென்னா ,சாபெர் அணியின் செர்ஜியோ பெரேஸ் மோதல் குழப்பத்தில் வெளியேறினார்கள் .நல்லவேளை வெட்டல் தனது சமயோகிதத்தால் தப்பித்தார் .

எட்டாவது இடத்தில ஆரமிபித்த ஃபெராரி - பெர்னாண்டோ அலோன்சா ...இப்போது இந்த குழப்பத்தை பயன்படுத்திக்கொண்டு மூன்றாவது இடத்தை மிக எளிதாக பிடித்தார் .

இரண்டாவது சுற்று ஆரம்பிக்கும்போது வில்லியசின் - அடுத்த காரும்  வெளியேறியது .

ஐந்தாவது சுற்று
லோட்டஸ் ரெனால்டின் - ரோமின் க்ரோஜியன் காரும் வெளியேறியது ஆக மொத்தம் 5 சுற்றுக்குள் 4 கார்கள் அவுட் !
இந்த சமயத்தில் ஆலோன்சாவின் கார் கட்டுபடுத்த முடியாத வேகத்தில் களத்தை விட்டு வெளியேறி போட்டியில் தனது காதலர் சாம்பியன்சிப் பெறுவார்  என காத்திருந்த ஆலோன்சாவின் காதலி - Dasha Kapustina, ஏறக்குறைய  கத்திவிட்டார் ( அம்மணி ,போட்டி அலோன்சா  போல மென்மையாக இருக்காது - பயப்படாதீர்கள் )

8 ஆவது சுற்றில்
வீரர்களின் நிலை ..
1.ஜென்சன் பட்டன் 2. ஹெமில்ட்டன் 3.ஹுல்கேன்பர்க் 4.அலோன்சா 5. மாசா 6.வெட்டல் 7.டி ரெஸ்டா 8.ரோஷ்பெர்க் 9.வெர்ஜின் 10.ரிகார்டியோ

மாசாவின் சேவை ஃ பெராரிக்கு தேவை என்பது போல அலோன்சாவை யாரும் கடந்து விடகூடாது என்பதில் கவனமாக கேட் கீப்பர் போல செயல்பட வெட்டல் பொறுக்கமுடியாமல் புகார் செய்ய ..
11 ஆவது சுற்று
அலோன்சா டயர் மாற்றம் வர பின்னாலேயே வெட்டலும் ..மீண்டும் அலோன்சா 9 ஆம் இடம் ,வெட்டல் 14.

16 ஆவது சுற்று
மாசா டயர் மாற்றம் வர தற்போது 6 ஆம் இடதிலிருந்த அலோன்சாவை ஐந்தாம் இடத்திற்கு வந்து துரத்த ..

18 ஆவது சுற்று
ஹுல்கேன் பெர்க் - ஜென்சனை பின்னுக்கு தள்ளி அசத்தினார் ..

24 ஆம் சுற்று
வெட்டல் கார் மீண்டும்

25 ஆம் சுற்று ..
மீண்டும் வீரர்களின் நிலை .
1.ஹுல்கேன்பர்க் 2.ஜேன்சன் 3.ஹேமில்டன் 4.அலோன்சா 5.வெட்டல் 6.கோபயாஷி 7.வெப்பர் 8.டி ரெஷ்டா 9.ரிக்கர்டியோ 10.ரைகொணன்

27 ஆவது சுற்று
மீண்டும் ஆலோன்சாவின் கார் மீண்டும் களத்தில் ஒரு சுற்று ஸ்பின் ஆனது .களத்தில் வழுக்கள் அதிகரித்தது .இதை பயன்படுத்திகொண்ட வெட்டல் நான்காம் இடம் .
34 ஆவது சுற்று
இப்போது அலோன்சா 3 ஆம் இடம் .வேட்டல் 6. ஒருவேளை அலோன்சா வெற்றி பெற வேண்டும் என்றால் ,இந்த போட்டியில் இந்த நிலைமைக்கு வெட்டல் ஒரு புள்ளி கூட பெறாமல் இருக்கவேண்டும் அத்தகு சாத்தியமில்லை .இந்து வேட்டலின் வேகத்தை பார்த்தால் காரே இல்லாவிட்டாலும்கூட வெறும் ஸ்டீயரிங் வீலோடு ஓடியே  கடந்து விடுவார் போல !
அவ்வளவு போராட்டம் தெரிகிறது வெட்டளிடத்தில் !
51 ஆவது சுற்று
வெட்டளின் காரின் ரேடியோ உரையாடல் தொடர்பில் கோளாறு .                    மிக ஆபத்தானது இது .களத்தில் இருக்கும் காருக்கு - அணியுடன் தொடர்பு தொப்புள் கொடி உறவு போல !
54 ஆவது சுற்று
சஹாரா போர்ஸ் இந்திய காரின் - நிக்கோ ஹுல்கேன்பர்க்கை காரை முந்தும்போது  ஹேமில்டன் கார் விபத்துக்குள்ளானது .மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெக்லரண் அணியின் இரண்டாவது இடத்து கனவும் தகர்ந்தது ,

58 ஆவது சுற்று
இப்போது அலோன்சா இரண்டாவது இடத்தை பிடித்தார் .இப்போது வெட்டல்   8 ஆம் இடத்திற்கு கீழே போனால் அலோன்சா சாம்பியன் வாய்பை பெறலாம் .ஆனால் 7 ஆம் இடம் .
67 ஆவது சுற்று ..
  முதல் வளைவில் மீண்டும் ஒரு சின்ன ஸ்பின் வேட்டளின் காரில் நடந்தது .இந்த செய்தி ஆலோன்சாவின் பெராரி சந்தோசம் என்று அனுபவிக்கும் முன் மீண்டும் ஏழாம் இடம்.இப்போது ஒரே வழி ஆலோன்சாவிர்க்கு தனக்கு முன்னேறி கொண்டு இருக்கும் ஜென்சன் பட்டன் ஸ்பின் ஆகவேண்டும் அல்லது மீண்டும் வெட்டல் ...
முடியாது .வாய்ப்பில்லை .ஆலோன்சாவின் சாம்பியன் கனவு ....வெறும் கனவுதான் ! இப்போது 6 ஆம் இடத்தில் வெட்டல் இருவருக்கும் 3 புள்ளிகள் இடைவெளி .Bad luck to Alonsa !!!
70 ஆவது சுற்று .
ஆலோன்சாவின் நினைப்பில் பாதிக்கப்பட்டது கோபயாஷி .ஆம் அந்த கார் ஸ்பின் ஆனது .டி ரெஷ்டாவின்  காரில் உரசியது .

71 ஆவது சுற்று கடைசி சுற்று .


முதலிடம் ..
ஜென்சன் பட்டன் - மெக்லரண் மெர்சடிஸ் .

Bad luck to Alonsa !!!But Game is Game
இரண்டாம் இடம் ..
வெறும் 3 புள்ளிகளில் சாம்பியன்ஷிப்பை இழந்த ஃபெர்னாண்டோ அலோன்சா - ஃபெராரி .


மூன்றாவது இடம் ..
பிலிப் மாசா - ஃபெராரி .
ஹெமில்டனின் இழப்பால் (ஒருவேளை ஹேமில்டன் முதலிடம் வந்து இருந்தால் ) மெக்லரண் மெர்சடிஸ் தன்னுடைய இரண்டாவது இடத்தை ஃபெராரியிடம் பறிகொடுத்துவிட்டது .


 ரெட்புல்லின் - செபாஸ்டியன் வெட்டல் கார் 6 ஆம் இடத்தில போட்டியில் வென்றது .வெட்டளின் சப்தம் எதுவும் இல்லை .காரணம் மீண்டும் ரேடியோ கோளாறு .பின்னால் வந்த செய்தியில் கடந்த 2010 ஆம் ஆண்டில் முதல்முறையாக உலக சாம்பியன் பெற்றபோது தனது  அழுகையோடு கூடிய சத்தத்தை  ஹெல்மெட்டுடன் பகிர்ந்து கொண்டதை நினைவுகூர்ந்தார் .

Wednesday, December 5, 2012

லீவிஸ் ஹெமில்டன் -


பயிற்சி போட்டியிலும் சரி .தகுதி சுற்றிலும் சரி நான் தாமதமாக இந்த பதிவை பதிவு செய்வேன் என்பதை அறிந்தோ ரெட்புல்லின் - செபாஸ்டியன் வெட்டலே சகல இடத்திலும் முதலிடம் .அதுமட்டுமல்ல 107% நேர
நிர்ணயத்தையும்( 1:43.317  ) அவரே முடிவு செய்தது மேலும் ஒரு சாதனை .

 முதல் சுற்று..
வழக்கம் போல முதலிடத்தில் இருந்த செபாஸ்டியன் வெட்டல் அதிவேகத்தில் பாய ,அவரை தொடர்ந்த மார்க் வெப்பர் பாய இவர்களிருவரையும் மூன்றாம் இடத்து லீவிஸ் ஹெமில்ட்டன் துரத்த ஆரம்பம் அதிரடியாக இருந்தது.

2 ஆம் சுற்று
மைக்கேல் ஷுமேக்கர் கார் 5 ஆம் இடத்தில் வேகம் மிக போராடி கொண்டுஇருந்தார் .முடியவில்லை.7 ஆம் இடமே தக்கவைத்துகொண்டார்.

4 ஆவது சுற்று
ஹெமில்ட்டன் சரியான சயத்தில் வெப்பரை பின்னுக்கு தள்ளி 2 ஆம் இடத்தை சுவீகரித்தார்.

6 ஆவது மீண்டும் ஒரு பிரச்சனை ஷுமேக்கருக்கு டயர் வெப்பம் அதிகரிக்க இப்போது 9 ஆம் இடம்.

8 ஆம் சுற்று .
ரோமின் க்ரோஜியன் காரில் ப்ரேக் பிரச்னை
11 ஆம் சுற்று
பத்தாம் இடத்தில யாருடனும் வம்பு செய்யாமல் சென்று கொண்டு இருந்த ஷூமேக்கரின் காருடன் 11 ஆம் இடத்திலிருந்த ஜென்சன் பட்டனின் கார் வீலோடு - வீல் இரண்டு முறை உரசினார் .

14ஆம் சுற்று ..
STR பெராரியின் ஜீன் எரிக் வெர்ஜின் சஸ்பென்சன் பிரச்னையால் வெளியேறியது .
முன் வரிசையில் வெட்டலின் வேகம் அதிகரித்தது - காரணம் ரெட்புல்லை விடவும் Straight Line Speed மெக்லரண் சுமார் 20 கி.மீ வேகம் அதிகம் .அதற்கு உதவியாக களமும் சாதகம் என்பதால் வேட்டலின் பதஷ்டம் நியாமானது .


16 ஆம் சுற்று
வேட்டல் மேலும் டென்சன் ஆகலாம் .காரணம் இப்போது அவர் அணியின் மார்க் வெப்பரின் கார் ஆல்டேர்நெட்டேர் பிரச்சனையால் வெளியேறியது .

18 ஆம் சுற்று
மெக்ளரனின் Straight Line Speed ஐ விட வில்லியம்சின் புருனே சென்னாவின் கார் பறந்தது ஜென்சன் பட்டனை பின்னுக்கு தள்ளியது .
21 ஆம் சுற்று ..
ஹேமில்டன் டயர் மாற்றம் வர ,அவரை தொடர்ந்து அலோன்சா ..முறையே 3 ஆம் - 5 ஆம் இடத்தில மீண்டும் இருவரும் தொடர ..

25 ஆம் சுற்று
கிமி ரைகொணன் டயர் மாற்றி 6 ஆம் இடத்தில மீண்டும் .

முதலிடத்து யுத்தம் தொடர் கதையானது ..42 ஆம் சுற்று வரை .
இப்போது ஹேமில்டன் முதலிடம் .மெக்ளரனின் Straight Line Speed வென்று விட்டது .

இதை பற்றி வெட்டலின் அணியுடனான விமர்சனம் ." மிக மோசமான அதேசமயம் முட்டாள்தனமான Overtaking "இது என்றார்
50 ஆம் சுற்று
இந்த போட்டியில் தன சாம்பியன் தேர்வுக்கான புள்ளியை உறுதி செய்யும் முயற்சியில் மீண்டும் வெட்டல் ஹெமில்டனை துரத்த இப்போது இடைவெளி 1.2 வினாடியானது .

56 ஆறாவது இறுதி சுற்று ..
அமெரிக்காவின் ஃபார்முலா 1 போட்டி மேடை மூண்டு உலக சாம்பியன்களின் வருகையை விரும்பியது போல .


முதல் இடம் மெக்லரண் மெர்சீடிசின் - லீவிஸ் ஹெமில்டன் .(2008 சாம்பியன் )

இரண்டாவது இடம் .
ரெட்புல்லின் - செபாஸ்டியன் வெட்டல் .(2010 -2011 சாம்பியன்)


மூன்றாவது இடம் ..
ஃபெராரியின் - பெர்னாண்டோ அலோன்சா .(2005 - 2006 சாம்பியன்)

 அடுத்த போட்டி ஃபார்முலா 1 ன் இறுதி போட்டி .அது பிரேசிலில் கடந்த 25.11.2012நடைபெற்றது அதில்தான் நமது உலக சாம்பியன் முடிவு செய்யபட்டார் அதை அடுத்த பதிவில் பார்ப்போம் ....


Saturday, November 24, 2012

அபுதாபி - கிமி ரைகொணன்


கடந்த நவம்பர் 4 ஆம் தேதி, அபுதாபியின் -  அழகிய யாஷ் மெரீனா சர்க்யூட்டில் நடை பெற்றது .இது இந்த ஆண்டின் 18 ஆவது சுற்று போட்டி .இந்த போட்டியில் அனேகமாக ஃ சாம்பியன்ஷிப்பை பெரும் அணி தீர்மானிக்கப்பட்டுவிடும் அது ரெட்புல் ரெனால்ட் என்பது மாற்று கருத்து இல்லை .ஆனால் டிரைவர்களுக்கான ஃ சாம்பியன் யார் என்பது அடுத்து நடக்க இருக்கும் (18 - நவம்பர் FORMULA 1 UNITED STATES GRAND PRIX )போட்டியில் ஏறக்குறைய தீர்மானிக்கப்பட்டுவிடும்

யாஷ் மெரினாவின் பயிற்சி போட்டி ..
முதல் பயிற்சி -மெக்லரண் மெர்சடீசின் லீவிஸ் ஹேமில்டன் .
2 ஆவது பயிற்சியில் - ரெட்புல் ரெனல்டின் -செபாஸ்டியன்  வெட்டல் .
3 ஆவது பயிற்சி போட்டியில் - மீண்டும் லீவிஸ் .


யாஷ் மெரினாவின் தகுதி போட்டி ..
Q 1- 107% நேர நிர்ணயம் செய்தவர் அதே -மெக்லரண் மெர்சடீசின் லீவிஸ் ஹேமில்டன் .முதலிடம் .
Q 2 -இரண்டாவது தகுதியிலும் - லீவிஸ் ஹேமில்டன் .

Q 3 - உண்மையில் இந்த சுற்றில் முதலிடம் பிடித்தது , ரெட்புல் ரெனல்டின்-செபாஸ்டியன்  வெட்டல் .ஆனால் லீவிஸ் ஹேமில்டன் முதலிடம் .

ஆனால் , மூன்றாவது போட்டியின் முடிவில் அவருடைய காரின் எரிபொருள் மாதிரி தருவதில் சிக்கல் ஏற்படவே அதிலும்  லீவிஸ் ஹேமில்டன் முதலிடம் .

இரண்டாவது இடத்தில ரெட்புல் ரெனல்டின்- மார்க் வெப்பர் .
மூன்றாவது , வில்லியம்சின் - பாஸ்டர்  மல்டோனடோ .


முதல் சுற்று ..
லீவிஸ் ஹேமில்டன் அபாரமான துவக்கத்தை தந்தார் .
மூன்றாம் சுற்று ..
                                 கடைசி இடத்தில துவங்கிய ரெட்புல்லின் வெட்டல் மிக அசூரத்தனமான வேகத்தை காட்டினார் .அது 24 ஆம் இடத்திலிருந்து  18 ஆவது இடத்தை நோக்கி இழுத்துவந்தது .ஆனால் வலது புற விங் சேதமடைந்தது .ஒரு வேலை மீண்டும் ரேசில் கலந்து கொள்ள வருவாரா வெட்டல் என்ற சந்தேகத்தை தீர்த்து மீண்டும் ,மீண்டு வந்தார் .
நான்காம் சுற்று ..
வெட்டலின் வேகம் நேரம் ஆக ,ஆக வெறித்தனமாக இருந்தது என்றே சொல்லலாம் இப்போது 16 ஆம் இடம் .
ஐந்தாம் சுற்று
வெட்டல் இப்போது 14 ஆம் இடம் .
 ஏழாவது சுற்று ..
கடைசி பரிட்சை


அது போல மோதல்கள் துவங்கின .ஃபோர்ஸ் இந்திய அணியின் இரண்டு கார்களும் ,புருனே சென்னா ,ரோமின் க்ரோஜியன் ,நிக்கோ ரோஷ்பர்க் என மோதல்களின் பட்டியல் நீண்டு விட்டது .18 ஆவது ரேசில் இப்படி போட்டி போட்டு கொள்ள பல காரணம் அணிகளின் புள்ளி பட்டியலில் இணைத்துகொள்வது ,டிரைவர்கள் அடுத்த அணிக்கு தாவும்போது கௌரவத்தை பெற ..என இருந்தாலும் இதெல்லாம் ஏதோ முதல்முறையாக பப்ளிக் எக்ஸாம் சந்தித்தவன் கடைசி பரிட்சையாவது நன்றாக பண்ணவேண்டும் என்ற ஆர்வத்தைப்போல நடந்துகொள்ள தொடங்கியது போல இருக்கிறது .
முதல் சுற்றில் ,போர்ஸ் இந்தியாவின் நிக்கோ ஹுல்கேன்பர்க் ,வெளியேறினார். ஏழாவது சுற்றில் நிக்கோ ரோஷ்பெர்க் .நமது நாராயண் கார்த்திகேயன் என பட்டியல் துவங்கியது ..

பதினேழாவது சுற்று ..
மீண்டும் க்ரோஜியனுடன் முந்திசெல்ல முயன்ற வெட்டல் ட்ராக்கை விட்டு வெளியேறி கட்டுப்பாட்டை இழந்து   முயன்று . முடியாமல் ஓர சுவரில் மோதியது வெட்டலின் கார் .மீண்டும் பிட்ளேன் .மீண்டும் 21 ஆவது இடம் .சரிதான் இன்று வெட்டல் தனக்காக போராடிக்கொண்டு இருக்கிறார் .அணி ஏற்கனவே சாம்பியன் ஆனால் டிரைவர் சாம்பியன் அலோன்சாவுக்கு போய்விடக்கூடாதே !


பத்தொன்பதாவது சுற்று ..
முதலிடத்தில் அற்புதமான வேகத்தில் இருந்த மெக்லரண் மெர்சடீசின் லீவிஸ் ஹேமில்டன் காரில் எரிபொருள் அழுத்த குறைபாடு .கார் களத்தை விட்டு மெல்ல வெளியேறியது .சூழ் நிலை மெல்ல  இப்போது முதலிடத்தில் லோட்டசின் - கிமி ரைகொணன் முதலிடம் .

21 ஆம் சுற்று ..
மூன்றாம் இடத்தில இருந்த அலோன்சா இப்போது பாஸ்டர் மல்டோனாவை மூன்றாம் இடத்திற்கு தள்ளினார் .

23 ஆவது சுற்று ..
இப்போது மூன்றாம் இடத்து மல்டோனாவை வேப்பர் முந்த முயன்று மோதிகொண்டார் .நல்லவேளை ஒரு சுற்று சுற்றி பழைய படி கார் ட்ராக்கில் ..

26 ஆவது சுற்று ..
மீண்டும் இப்போது வெப்பர் மாசாவின் காரின் டயருடன் - டயர் உரசினார் ..
பின் வரிசையிலும் அநேக கார்கள் கடிவாளம் இல்லாத குதிரைகளாக உரசுவதும் ,மோதுவதுமாக கடந்து கொண்டு இருந்தது

31 ஆவது  சுற்று ..
இப்போது தன்னை தொடரும் வெட்டளுக்கு  வெப்பர் வழிகொடுக்காமல் தவிர்த்து பிட் லேன் வந்தார் .

 
39 ஆவது சுற்று க்ரோஜியன் - பெரஸ் மோதலில் குழம்பிய க்ரோஜியன்  கார் நேரடியாக வெப்பரின் காரில் இடது டயரை பிடுங்கியது .இரண்டு காரும் வெளியேறியது .இந்த மோதலை ஏற்படுத்திய பெரசுக்கு 10 வினாடிகள்                ஃ பெனால்டி என்பதாக நிறுத்தி அனுப்ப பட்டது.

உற்சாக பானம் தயாரிக்கும் கம்பனி ரெட்புல் என்பதை வெட்டல் வேகத்தில் தெரிகிறது .அற்புதமான வேகம் .மிரளவைக்கிறது .இந்த  ஆண்டுக்கு பிறகும் ரெட்புல்லின் சாம்பியன்ஷிப் பயணம் தொடரும்போல தெரிகிறது .ரெட்புல்லின் சுலோகம் பானங்களின்  ' Red Bull's Not the Only Thing That Gives You Wings என்பது உண்மைதானோ !

44 ஆவது சுற்று ..
நான்காம் இடத்து வெட்டளுக்கும் - மூன்றாம் இடத்து பட்டனுக்கும் இடையே போராட்டம் வலுப்பெற்றது .இடைவெளி 0.584 வினாடிகள் ஆனது .
 இதே போல முதலிடத்து ரைக்கொணன் - இரண்டாம் இடத்து ஆலோன்சாவிர்க்கு இடையேயுள்ள யுத்தம் 3 வினாடிகள் வித்தியாசத்தில் தொடர்ந்தது .ஆலோனாவின் செயல்பாடு அற்புதமாக இருந்தது .
 52 ஆவது சுற்று வெட்டல் தன்னுடயான அற்புதமான செயல்பாட்டில் ஜென்சன் பட்டனின் மூன்றாவது இடத்தை பறித்தார் .இப்போது அலோன்சாவுக்கு நெருக்கடி

54 ஆவது சுற்று ஆலோன்சாவிடம் ஒரு தீவிர வேகம் வெளிப்பட்டது .எப்படியும் முதலிடம் வந்து விடும் என்பது ,காரணம் இப்போது ஒரு வினாடி இடைவெளி மட்டுமே இருந்தது ,
மொத்தம் 17 கார்கள் மட்டுமே போட்டியில் இருந்தது ...

55 ஆவது - கடைசி  சுற்று .
திரைப்படத்தின் உச்சகட்ட காட்சியைப்போல ரைகொணன் - அலோன்சா வேக யுத்தம் முடிவுக்கு வந்தது 55 சுற்றுக்களை விட இன்னும் சுமார் நான்கு சுற்றுகள் அதிகம் இருந்திருந்தால் கூட முடிவுகள் வேறுமாதிரியாக இருந்திருக்கலாம் !


 முதலிடத்தில் ..
கிமி ரைகொணன் .
கடந்த 2009 ஆம் ஆண்டு  போட்டியில் முதலிடம்  வந்ததர்க்கு பிறகு இதுவே  முதலிடம் ( 2010 - 2011 எந்த போட்டியிலும் பங்குபெறவில்லை )

 இரண்டாவது இடம் ..


ஃ`பெர்னாண்டோ அலோன்சா 0.8 வினாடிகள் வித்தியாசத்தில்.முதலிடம் பறிபோனது, பெரிய விஷயம் இல்லை அடுத்த போட்டியாளர் வெட்டல்  மிக அருகில் 10 புள்ளிகள் முன்னணியில் இருக்கிறார் .

மூன்றாவது இடம் ..

செபாஸ்டியன் வெட்டல் - இந்த ஆண்டில் ரெட்புல்லின் சாம்பியன்ஷிப்பை வாங்கி தந்துவிட்டார் .ஆனால் தன்னுடைய சாம்பியன்ஷிப் புள்ளிக்காக  போராடிக்கொண்டு இருக்கிறார் .


            அடுத்த அமெரிக்காவின் கரண்ட் பிரிக்ஸ் இரவு இந்திய நேரப்படி நள்ளிரவு ..
                  ஆனால் முடிந்த அந்த போட்டியின் பதிவை வரும் பிரேசில் போட்டியுடன் பதிவு செய்யும் நிலை வந்து விட்டது .

Friday, November 16, 2012

இந்திய ஃபார்முலா 1 - நூறாவது பதிவு ..


நூறாவது பதிவு ..
கடந்த மூன்று  ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் ஃபார்முலா 1 ரேஸ் நடக்க போகிறது என்ற விஷயத்தை அறிந்து - பதிவுலகத்தில் என்னை அறிமுகபடுத்தி கொண்டு, நண்பர் சுகுமாருடன் கைகோர்த்துக்கொண்டு ஆரம்பித்த பயணம் இது ..இன்று அதே இந்திய மண்ணின் இரண்டாவது போட்டியில் - 100 ஆவது பதிவில் நிற்கிறது . பல இழப்புகளை கடந்து இந்த பதிவு பயணம் தொடர்ந்தாலும் என் ஆசை ஒரு முழு வடிவம் இந்த பதிவுகள் அடைந்து இருப்பதாக நான் நினைக்கவில்லை .எழுத வேண்டியது என் பின்னே - என்னை துரத்தி கொண்டே இருப்பதை என்னால் உணர முடிகிறது .


இந்திய ஃபார்முலா 1

முதல் சுற்று ..
ஆபத்தான இரண்டு அணிகளால் நாம் எந்த நேரமும் பின்னுக்கு தள்ளப்படலாம் என்ற நிர்பந்தத்தை சுமந்துகொண்டு ரெட்புல் அணி ,மிக தீவிர உத்வேகத்துடன் தனது வேகத்தை துவங்க எந்த மாற்றமும் இல்லாமல் முன்னுக்கு பாய ,அடுத்த நிலையில் இருந்த மெக்லரண் மெர்சடீஷ் லீவிஸ் ஹெமில்டனும் , ஜென்சன் பட்டனும் யார் முன்னுக்கு பாய்வது என்ற குழப்பத்தில் போட்டிபோட ,இதுதான் சமயம் என்று பெராரியின் - பெர்னாண்டோ அலோன்சா இருவருக்கும் நடுவே பாய்ந்து நான்காம்  இடத்தை தக்கவைத்தது அருமை .இப்போது அலோன்சா மூன்றாம் இடத்தில இருக்கும் ஜென்சனுக்கும் ஐந்தாம் இடத்திலிருக்கும் ஹெமில்டனுக்கும் இடையே ..


 பின்வரிசையில் வழக்கம்போல குழப்பத்திற்க்கு பஞ்சமில்லை .STR பெராரியின் வெர்ஜின் பின்புற வலது டயரில் மோதி பஞ்சர் பண்ண.. ஷூமேக்கர் பிட்லேன் திரும்பி மீண்டும் 24ஆம்  இடத்தில தொடர ..
நான்காம் சுற்று ..
 ஆலோன்சாவின் முயற்சி DRS பகுதி வந்தவுடன் மேலும் அதிகரித்தது .இப்போது ஜென்சனை தன்னுடைய மூன்றாம் இடத்தை ஆலோன்சாவிடம் பறிகொடுத்தார் .ஒரே அணிக்குள் ஏற்பட்ட மோதலை ஃபெராரி பயன்படுத்திகொண்டது.
ஆறாவது சுற்று ..
மீண்டும் ஜென்சன் பட்டனை பின்னுக்கு தள்ள ஹேமில்டன் பாய அடுத்த ஆண்டில் நம்மை விட்டு போக போகிற ஆளுக்கு  விட்டு கொடுப்பமே என்பது போல நான்காம் இடத்தை விட்டுகொடுத்தார் ஜென்சன்
பதிமூன்றாம் சுற்று ..
ஃபோர்ஸ் இந்தியாவின்- நிக்கோ ஹுல்கேன்பர்க் ஒன்பதாம்  இடத்திலிருந்து தனது DRS உச்சவேகமான 318 கி,மீ வேகத்தில் சாபர் பெராரியின் - செர்ஜியோ பெரசை எட்டாம் இடத்தை விட்டு அகற்றினார் .
 இருபதாம் சுற்று ..

இப்போது செர்ஜியோ பெரெஸ்  டயரும் மோதலில் பஞ்சராக-போட்டியை விட்டு வெளியேறியது
முப்பதாவது சுற்று ..
இப்போது டிரைவர்களின் வரிசை ..
1.வெட்டல் ,2.வெப்பர் ,3.ஹெமில்ட்டன் ,4.அலோன்சா .5.க்ரோயஜியன் ,6.ஜென்சன் ,7.மாசா ,8.ரைகொணன்,9.ஹுல்கேன்பர்க்,10.ரோஷ்பெர்க்
முப்பத்தி ஒன்றாம் சுற்று ..
மால்டோனா கார் கோபயாஷி காருடன் மோதியதில் .இரண்டு கார்களின் மோதலில் சற்றே எதிர்பாராத குழப்பத்தில் களத்தின் நடுவே இருக்கும்போது வெட்டலின் கார் இவர்களை கடந்து போனது - ரெட்புல் அணி நிம்மதி பெருமூச்சை விட்டது .
முப்பத்தி மூன்றாவது சுற்று ..
கடந்த எந்த போட்டியிலும் இல்லாத ஒன்று இப்போது நடந்தது ,அது மெக்லேரனின் - ஹெமில்டன் கார் பிட்லேன் வந்தபோது மாற்றப்பட்டது ஸ்டீயரிங் வீல் .அதுவும் 3.3 வினாடிக்குள் .பொதுவாக மெக்லேரனின்  அணியின் செயல்பாடு அந்த அணியின் கார்களுக்கு  ஐந்தாவது சக்கரம் என்பார்கள் .இதை பார்க்கும்போது அது உண்மை என படுகிறது .
நாற்பத்தி இரண்டாவது சுற்று..
 HRT யின் ( நம் நாராயண் கார்த்திகேயன்  அணி ) டி ல ரோசோ கார்  பிரேக் பிரச்சனையால் களத்தை விட்டு விட்டு விலகி பின்புறமாக இழுத்து சென்று ஓரசுவரில் மோதி நின்றது .
நாற்பத்தி எட்டாவது சுற்று ..
ஆலோன்சாவின் நோக்கம் இப்போது  ஏற்கனவே மெக்ளரனின் அணி செய்த செய்த தவறை பயன் படுத்தி கொண்டது  போல இப்போது இரண்டாம் இடத்திலிருந்த ரெட்புல்லின் மார்க் வெப்பரின் வெப்பரின் காரில் KERS வேலை செய்யவில்லை .இந்த பிரச்னை அறிந்த அலோன்சா ஒரே பாய்ச்சலில் முன்னேறி இரண்டாம் இடத்தை பிடித்தார் ஃபெராரி அணி உற்சாகமடைந்தது .
ஐம்பத்தி இரண்டாவது சுற்று ..
 வில்லியம்ஷின் - ப்ருனே சென்னா தன்னுடைய பதினோறாவது இடத்திலிருந்து முன்னேறி பத்தாம் இடத்து ரோஷ்பெர்க்கை பின்னுக்கு தள்ளி முன்னேறினார் .ரோஷ்பெர்க்கால் தன்னுடய காரின் DRS வலிமை புரிந்ததால் சத்தமிலாலாமல் ஒதுங்கிகொள்ள , கிடைக்க வேண்டிய ஒருபுள்ளியும் போனது .

ஐம்பத்தி நான்காவது சுற்று ..
முதலிடத்தில் பறந்து கொண்டு இருந்த வெட்டளுக்கும் இரண்டாவது இடத்து ஆலோன்சாவுக்கும் இடைவெளி 13 வினாடிகள் .ஆனால் வெட்டலின் காரின் அடிப்பகுதியிலிருந்து நெருப்பு பொறிகள் வெளிப்பட்டன ,ரெட்புல் அணி தனது நிம்மதியை இழந்து தவித்து பார்க்க தொடங்கியது ..ஆனால் அலோன்சா - வெட்டளுக்குமிடையே உள்ள இடைவெளி 9.459 வினாடிகள் என்று குறைந்தது .இப்போதும் ஆலோன்சாவின் காத்திருத்தல் தொடங்கியது - அது வெட்டல் காரின் வேகம்மேலும்  குறைய தொடங்கட்டுமென ..

அறுபதாவது இறுதி சுற்று ..


முதல் இடம் .

ரெட்புல்லின் -செபாஸ்டியன் வெட்டல் வெற்றி .அதுமட்டுமல்ல 1989 ஆண்டில் நடந்த ஃபார்முலா 1 போட்டிகளில் ஆண்ட்ரியன் சென்னா  தொடர்ந்து மூன்று  போட்டிகளில் ஆரம்பம் முதல் இறுதி வரை முதலிடத்தில் இருந்து வெற்றி பெற்ற சாதனை இன்று வெட்டளால் முறியடிக்கப்பட்டது . 240 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் இவரின் இடம் இன்னும் மூன்று போட்டிகளில் ஏதாவது இரண்டில் உறுதி செய்யப்பட்டுவிடும் ,

 
இரண்டாவது இடம் .
ஃபெராரியின் நம்பிக்கை நட்சத்திரம் ஃபெர்னாண்டோ அலோன்சா .கடந்த போட்டியில் ஆறு புள்ளிகளுடன் டிரைவர்கள் சாம்பியன்ஷிப் வரிசையில் இரண்டாவது இடத்தில இருந்த இவர் இந்த வெற்றியின் மூலம் 13 புள்ளிகள் இடைவெளியில் அதே இடத்தில .

மூன்றாவது இடம் .
ரெட்புல்லின் - மார்க் வெப்பர் இந்த வெற்றியின் மூலம் தனது நான்காவது இடத்தை வெப்பர் உறுதி செய்கிறாரோ இல்லையோ அணியை முதலிடத்திற்கு கொண்டு சேர்க்க உதவும் .

வாழ்த்து
   
வெற்றி புள்ளியை தொடும் காரை வரவேற்கும் கொடியசைப்பை இந்த முறை இந்தியாவிற்கு துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலம் வாங்கிய Gagan narang பெற்றார் .இந்த வாய்ப்பு ஒரு விளையாட்டு வீரருக்கு கிடைக்கவேண்டும் என்பதை போட்டி நிர்வாகம் நினைத்தது வாழ்த்துதற்கு உரியதாகும் .

வேடிக்கை

இந்த முறை போன ஆண்டை போல போட்டி நடக்கும்போது நாய்கள் குறுக்கே வராது என போட்டி நடத்தும் நிர்வாகம் உறுதியளித்தது வேடிக்கை .
வினோதம் .

82 வயதை நேற்றுடன் கடந்த ஃபார்முலா 1 நிர்வாகத்தின் ரிங் மாஸ்டர் என செல்லமாக அழைக்கப்படும் Bernie Ecclestone இந்தியாவை உங்களுக்கு ஏன் பிடித்திருகிறது என கேட்டபோது காதல் வலையில் உங்களை வீழ்த்திய பெண்ணுடன் வெளியிடம் செல்வது எப்படி ஏன் பிடிக்கிறதோ அதைப்போலத்தான் என குறும்பான பதில் தந்தார் கடந்த சில மாதங்களுக்கு முன்தானே  தனது   மூன்றாவது திருமணத்தை 46  வயது பிரேசிலின்  Fabiana Flosi அழகியை கைபிடித்திருகிறாரே  அப்புறம் ஏன் சொல்லமாட்டார்?

 விறுவிறுப்பு

சமீபத்திய பல போட்டிகளில் பின்னடைவை சந்தித்து கொண்டு இருக்கும் லீவிஸ் ஹெமில்டன் புது உத்வேகம் பெறும் வகையில் அவரின் ஹெல்மெட்டில் Belive in your self enough and anythink is Possiple - ஹெல்மெட் வர்ணம் தீட்டுபவர் ஜசோன் பிளோவேர் ( Jason Flower )  மூலம் ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளது இதற்கு உதவி நம் கருண் சந்தோக் .

வாடிக்கை

                                      கடந்த ஆண்டை விட( 94800 )  இந்த ஆண்டு போட்டி பார்க்கவரும் கூட்டம் குறைந்து விட்டது  .                                                                                                       காரணம் பல ....                                                                                                                                    
     
 அவற்றில் முக்கியமானது இந்திய வீரர்கள் முன்னணியில் இல்லாததது அதோடு  ஃ போர்ஸ் இந்திய அணியின் . செயல்பாடும்தான்.
                                    

   மேலும் முக்கியமானது இந்த போட்டிகள் கார்போட்டிகளில் ஆர்வம் இருக்கும் நகரங்களை தேர்வு செய்யாதது .


                                         கிரிகெட்டிலிருந்து வெளியேறி வேறு ஒரு இடத்திற்கு வர விரும்பும் மக்களை இந்த போட்டிகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் .
                        

                  பணக்ககார போட்டி இது என்ற திரை விலகுமோ அன்று இங்கு வரவேற்பு கூடும்

Saturday, October 27, 2012

இந்திய ஃபார்முலா 1 திருவிழா .



                               நாளை இந்தியாவில், இந்திய நேரப்படி  பிற்பகல் 3 மணிக்கு Airtel Indian Grand  Prix ஐ  உங்கள் வீட்டில் கால் மேல் கால் போட்டுகொண்டு ரசிக்க தயாராகிவிடுங்கள் .அருமையான போட்டியை இந்த  நேரில் சென்று பார்க்கும் வாய்பை இந்த முறையும் இழந்து விட்டேன் .என் பிரிய நண்பர் ஒருவர் புறப்படட்டு போகலாம் என அழைத்திருந்தார் .ஆனால் என்விருப்பம் வேறு .முன் அனுமதியும் ,சரியான வழிகாட்டுதலும் இல்லாமல் செல்ல மனமில்லை .( அலுவலகத்தில் போராடி விடுமுறை வாங்கி விடலாம் என்பது வேறு விஷயம் ) ஒன்று இந்திய வீரர்கள் இருவரின் மூலமாகவோ அல்லது முக்கிய அனுமதி மோட்டார் கிளப் வழியாகவோ பெற்று போக வேண்டும் .அல்லது ஃ பேஸ்புக் நண்பர் சுகுமாரின் நண்பர் சூனா மானா போன்றவர்களின் (இவர் இப்போது பெர்ராரி அணிக்காக பணிபுரிந்து கொண்டு இருக்கிறார் ) வெளிப்படையாக சொன்னால்  முக்கியத்துவம் இல்லாமால் போனால் யாரையும் நேரில்பார்த்து ஹலோ சொல்லகூட முடியாமல் போகலாம் .அடுத்த ஆண்டு நேரில் சென்று பார்த்து எழுத ஆசை .அதற்க்கு இன்னும் என் பதிவுகள் முக்கியத்துவம் பெற்றால் ( கடினமாக உழைத்து எழுதினால் ) வாய்ப்புகள் வரலாம் .( அல்லது எழுதுவதை நிறுத்தி எல்லோரையும் காப்பாற்றலாம் ).அடுத்த ஆண்டு இலக்கு-  நேரில் போய் எழுத வேண்டும் .



சரி, இந்திய போட்டியில் பார்ப்போம் ..
பயிற்சி போட்டி .
                        எனக்கு வேலையே வைக்கவில்லை பயிற்சி போட்டி P1,P2,P3 தகுதி போட்டி Q1,Q2,Q3 எல்லாவற்றிலும் ரெட்புல் ரேனால்ட்டின் -செபாஸ்டியன் வெட்டல் முதலிடம் .அதே போட்டி வரிசையில் முதல் இரண்டு இடம் ரெட்புல் அணிக்கு அடுத்த இரண்டு இடம் மெக்லரண் மெர்சடீஷ் அணிக்கும் ,அதற்க்கு அடுத்த இரண்டு இடம் ஃபெர்ராரி அணிக்கும் மிக அபூர்வமாக அமைந்து இருக்கிறது .போட்டியும் அற்புதமாக இருக்கும் .சென்ற முறை செபாஸ்டியன் வெட்டல் இந்திய கிராண்ட் பிரிக்ஸ் நாயகன் .அது மட்டுமல்ல சென்ற ஆண்டு அவர் அந்த போட்டியில் சாம்பியன் பட்டத்திற்கு தகுதி பெற்றுவிட்டார் .ஆனால் இந்த ஆண்டு இன்னும் அது உறுதி பெறவில்லை .


 சரி இந்திய போட்டியின் ஏர்டெல் அழகிகளை பார்க்கலாமா ?