உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Thursday, June 6, 2013

நிக்கோ ரோஸ்பெர்க்- மோண்டோ கார்லோ நாயகன்


                 உலகின் ஆபத்தான அதே சமயம் மிக பெரிய வேக அனுபவத்தை தரும் ஃபார்முலா 1 களங்களில் இப்போதைக்கு முதன்மையானது இந்த ”மொனாக்கோ க்ராண்ட் ப்ரிக்ஸ்” போட்டிதான் ( Le Grand Prix de Monaco ). ஐரோப்பாவில் ஃபிரான்ஸ் நாட்டுக்கு தென்கிழக்கு பகுதியில் உள்ள உலகின் இரண்டாவது சிறிய  நகரம்தான் இந்த மொனாக்கோ .வெறும் இரண்டு கிலோமீட்டருக்கு கொஞ்சம் அதிகமான  பரப்பளவையே  கொண்ட  இந்த நகரம் அபாயமான , உயிருக்கு மிக குறைவான உத்ரவாதமுள்ள ஃபார்முலா 1 களத்தை கொண்டு இருந்தாலும் இந்த நகர வாசிகளின்  மொத்த  ஆயுட்காலம் அதிகம் என்பதாக  பேசப்படுகிறது ( 81.89 - உலகில் 12ஆவது  இடம் ) மேலும் இந்த நகரத்தின் அல்லது குட்டி நாட்டின் ருசிகர சம்பவங்கள் - http://f1inindia.blogspot.in/2011/06/blog-post_08.html எனது மற்றொரு  பதிவில் இருக்கிறது.முடிந்தால்  படியுங்கள்.. 



                           இங்கு போட்டி நடந்தது கடந்த மே மதம் 26 ல்.உலகின் மற்ற நாடுகளில் ஃபார்முலா 1 போட்டிகளில் முதல் இரண்டு பயிற்சி போட்டிகள் வெள்ளி கிழமை காலை 10 மணி முதல் 11.30 மற்றும் பிற்பகல் 2 முதல் 3.30 வரையும்  சனிக்கிழமை மூன்றாவது பயிற்சி போட்டி முற்பகல் 11 - 12. வரையும் அதை தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு மூன்று அங்கமாக Q1,Q2 ,Q3 தகுதி சுற்றும் ,ஞாயிறு போட்டியும் நடப்பது வழக்கம் .ஆனால் மொனாக்கொ போட்டிக்களத்தின் பல பகுதிகள் நகரின் !  முக்கிய பகுதி சாலையையும் , கடற் பாலங்களையும்  குறுக்கிட்டு நடத்தபடுவதால்  தொடர்ந்து மூன்று  அந்த  நகர பகுதிகளின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வியாழன் ,சனி ,ஞாயிறு மேற்குறிப்பிட்ட நேரத்தில் நடக்கிறது .




                                  எனக்கு ,இந்த பயிற்சி  போட்டிகளில் P1,P2,P3 மற்றும் தகுதி போட்டிகளில் Q2 ,Q3  ஆகிய அனைத்திலும் தொடர்ந்து முதல் இடத்தை பிடித்து மெர்சடீஸ் அணியின் நிக்கோ ரோஸ்பெர்க் தனி தனியே பதியும் வேலையை குறைத்து விட்டார் .இரண்டாவது இடத்தை அதே அணியின் லீவிஸ் ஹேமில்ட்டனும் ,மூன்றாவது இடத்தை ரெட்புல் ரெனால்ட்டின் செபாஸ்டியன் வெட்டலும் பகிர்ந்து கொண்டார்கள் . இனி போட்டி...



                    மூன்றாவது பயிற்சி போட்டியே இந்த களத்தின் அபாயத்தை சொல்லுவது மாதிரி முதல் வளைவில் (Turn 1 ) ஃபெராரியின் - ஃபிலிப் மாசாவும் ,லோட்டஸ் ரெனால்ட்டின் -ரொமைன் க்ரோஜியனும் மற்றும் சஹாரா ஃபோர்ஸ் இந்திய அணியின் ஆண்ட்ரியன் சட்டிலும்  களத்தின் பக்க சுவற்றில் மோதி கொண்டதால் காருக்கு சேதம் ஏற்பட்டது .


        இதில் ஃபிலிப் மாசா கார் மிக சேதமானது அதனால் அந்த கார் குறிபிட்ட பயன்பாட்டுக்கு பிறகு மாற்ற வேண்டிய கியர் பாக்ஸ் முன்னரே மாற்றியதால் 20 ஆம்  இடத்துக்கு பின்னால் போட்டியை தொடங்க பணிக்கப்பட்டது .



முதல் சுற்றில் ..

மிக மெதுவான துவக்கத்தை முதலிடத்து  நிக்கோ ரோஸ்பெர்க் கொடுத்தாலும் ,தொடர்ந்து வந்த லீவிஸ் ஹேமில்ட்டனை முன்னேற விடவில்லை .
பின் வரிசையில் அதர்குள் முன்று கார்கள் மோதி விளையாடி கொண்டது .கேட்டர் ஹாமின் - Giedo van der Garde கார் ,வில்லியம்ஸ் ரெனால்டின் - Pastor Maldonado அடுத்து  சஹாரா ஃபோர்ஸ் இந்திய அணியின் - Adrian Sutil மூன்று கார்களும் பிட் லேன் போனது .

இரண்டாவது சுற்றில் ..

ஃபெராரியின் ஃபெர்னாண்டோ அலோன்சா கார் தொடங்கிய ஆறாவது இடத்திலே போய்கொண்டு இருந்தது. முன்னே சென்று கொண்டு இருக்கும் கார்களில் ஏதேனும் மோதல் அல்லது பிரச்சனை ஏற்பட காத்து இருக்கலாம் .. 

ஏழாவது சுற்றில்.. 
கேட்டர்ஹாம் ரெனால்டின் - சார்லஸ் பிக் கார் கியர் பாக்ஸ் பிரச்சனையால் காரிலிருந்து புகை வெளியேற அந்த கார் போட்டிக்கு விடை பெற்று பிட் லேன் திரும்பியது .
முதல் காரின் வெளியேற்றம் ..

12 ஆவது சுற்றில்..

முதலிடத்தில் போய் கொண்டு இருக்கும்  ரோஷ்பெர்க்குக்கும் அவரின் அணியின் ஹேமில்டனுக்கும் இடிவெளி வெறும் 1.8 வினாடிகள்தான் .இன்று அணி மேலிடமே சொன்னாலும் ஹேமில்டனுக்கு விட்டு தர மாட்டார் ரொஷ்பெர்க் .காரணம் ஒவ்வொரு ஃபார்முலா 1 ட்ரைவரின் கனவும் இந்த ஆபத்தான மொனாக்கோ களத்தில் ஒருமுறையேனும் வெற்றியை ருசிக்க வேண்டும் என்பதே .ஆனால் ஹேமிடனுக்கு அடுத்து வரும் வெட்டல் இந்த களத்தை போல ஆபத்தானவர். எப்போது வேண்டுமானலும் தன் கைவரிசையை காட்டி பின்னுக்கு தள்ளுவார் என்பது ரோஷ்பெர்க்குக்கு தெரியும் .

21 ஆவது சுற்றில்..

11 வினாடி இடைவெளிக்குள் முதல் 7 கார்களும் “விசுக் , விசுக் “ என்று மொனாக்கோவின் கடல் காற்றின் ஈரத்தை சூடேற்றி கொண்டு இருந்தன .STR - ஃபெராரியின் பிட் லேன் தவிர எந்த பிட்லேனும் டயர் மாற்றும் நிலைக்கு தயாராகவில்லை  .இன்று போட்டியை தொடங்கிய 22 கார்களில் 4 கார்களை தவிர 18 கார்களும் Super SOft Compound டயரில் பறந்து கொண்டு இருந்தன .


25 ஆவது சுற்றில் ..

நாம் பேசியதை கேட்டது மாதிரி ,ரெட்புல்லின் மார்க் வெப்பர் டயர் மாற்றம் சென்று SOft Compound டயரை தேர்வு செய்தார் .அனைத்து அணிகளின் இன்றைய டயர் மாற்ற நிலைபாடு இரண்டு முறை மட்டுமே .காரணம் இந்த களத்தின் ஒரு சுற்றின் நீளம் 3.34 கி.மீட்டர்தான் .ஆனால் அதிகபட்ச வேகமாக இந்த களத்தில் ஃபார்முலா 1 காரின் வேகம் 283 கி.மீ .இதனால் மொத்த களத்தின் தூரம் 260.52 கி.மீட்டரி குறைந்தது 3 ல் 1 பகுதியான 87  கி.மீ  தூரத்தை அதாவது 26 சுற்றை கடந்த பிறகு  முதல் டயர் மாற்றம் செய்வதையே சரியானது .இந்த கணக்கை சரிவர துவங்கியது ரெட்புல் ரெனால்ட் அணிதான் .



28 ஆவது சுற்றில் .. 

ஃபெராரியின் - ஃபிலிப் மாசா தனது பயிற்சி போட்டியின் போது ஏற்பட்ட விபத்து மாதிரியே இப்போதும் நடந்தது .ஆனால் சற்று குறைவாக ,சிறு காயங்களுடன் மாசா தப்பினார் ..ஆனாலும் கார் அகற்றும் வரை சேஃப்டி கார் போட்டியை வழி நடத்தியது .
               


     முதலாளித்துவம் ஃபார்முலா 1 போட்டியிலும் மேலோங்கி நிற்கிறது என்பதை இந்த களத்தின் ஆபத்து வெளிச்சமிடுகிறது .உலகத்தின் மிக அதிக Down Force அதிகம் உள்ள களம் இதில் நடத்தபடும் அனைத்து போட்டிகளுமே விபத்தை சந்தித்துதான் முடிந்து இருக்கிறது .அதிக வருவாய் மற்றும் ஆபத்தான பொழுது போக்காக ஃபார்முலா 1 ரேஸ் தனது அடையாளமாக காட்டும் வரை இந்த களத்தின் போட்டி ஓயாது .ஆனால் மிக பெரிய அச்சுறுத்தலான களம் இது .

31 ஆவது சுற்றில் ..

மூன்றாவதாக வந்து கொண்டு இருந்த முக்கிய போட்டியாளரான வெட்டல் டயர் மாற்றம் சென்ற சுற்றில் சென்றதாலும் , சேஃப்டி காரின் வழி நடத்தலும் மெர்சடீஸ் டயர் மாற்றத்திர்க்கு வர காரணமாயிற்று .இரண்டு காருமே SOft Compound டயரை பொருத்தி கொண்டது .


44 ஆவது சுற்றில் ..

மீண்டும் ஒரு விபத்து .ஆம் ஆனால் பெரிதாக .வில்லியஸ் ரெனால்ட்டின் பாஸ்டெர் மால்டொனாடொ காரும் மற்றும் மவுரிஸ்ய காஸ்வொர்த்தின் - மேக்ஸ் சில்ட்டன் காரும் விபத்தில் மாட்டி  கொண்டது .குறுகிய களத்தில் முந்தி செல்லும் வேகத்தில் இந்த விபத்து நிகழ்ந்து விட்டது .இதில்  மால்டொனாடொ கார் சுமார் மூன்றடிக்கு மேல் மேலே தூக்கப்பட்டு விழுந்தது .

போட்டி முற்றிலுமாக நிறுத்தபட்டது .
மீண்டும் சுமார் 20 நிமிடத்திர்க்கு பிறகு போட்டி தொடங்கியது ..
இப்போது வரிசையில் ரோஸ்பெர்க் ,வெட்டல்,வெப்பெர் ,ஹேமில்ட்டன் ,ரைகொணன்,பெர்ஸ்,அலோன்சா ,பட்டன் ...

58 ஆவது சுற்று ..

மவுரிஸ்ய காஸ்வொர்த்தின் - மேக்ஸ் சில்ட்டன் விபத்து பிரச்சனையில் விபத்து ஏற்பட காரணம் என்பதாக பெனால்ட்டி அனுபவிக்கு தருவாயில் அந்த அணியின் இன்னொரு  ட்ரைவர் ஜுலஸ் பியான்சி பிரேக் பிரச்சனையால் வெளியேறினார் .



மொனாக்கொ போட்டியின் மிக அபாயமானது “நொவேலி திருப்பம் ”(Nouvelle Chicane )  அதில் STR ஃபெராரியின் டேனியல் ரிக்கைடோ கார் முன்னே சென்று கொண்டு இருந்த லோட்டஸ் ரெனால்ட்டின் - ரொமைன் க்ரோஜியன் காரை தாக்கியது இதில் லோட்டஸ் காரின் பெரும்பகுதி சேதம் அடைந்தது .இரண்டு கார்களும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டியை விட்டு வெளியேறியது இத்துடன் மொத்தம் ஆறு கார்கள் போட்டியை விட்டு விலகிவிட்டது .
63 முதல் 66 சுற்றில் ..
சேஃப்டி காரின் ஆதிக்கம் .

    மீண்டும் இப்போது வரிசையில் ரோஸ்பெர்க் ,வெட்டல்,வெப்பெர் ,ஹேமில்ட்டன் ,ரைகொணன்,பெர்ஸ்,சட்டில் ,அலோன்சா ,பட்டன் ,வெர்ஜின் ...

70 ஆவது சுற்று ,,
ரைகொணனுக்கும் பெர்ஸ் காருக்கும் போட்டொ போட்டி எற்பட்டு ரைகொணன் காரி டயர் பஞ்சர் ஆகி விட்டது .அலொன்சா இந்த மாதிரி ஒரு திருப்பத்துக்காக காத்து இருந்தார் .

72 ஆவது சுற்று 
ரைகொணனை பின்னுக்கு தள்ளிய மெக்லரன் மெர்சடீசின் - செர்ஜியோ பெர்ஸ் காரில் ப்ரேக் பிரச்சனை ஏற்பட மெல்ல களத்தை விட்டு ஒதுங்கியது .ஏழாவது காராக மெக்லரண் வெளியேற ,..போட்டியில் இப்போது 15 கார்கள் மட்டுமே .



78 ஆவது வெற்றிச்சுற்று ..

மொனாக்கோ நகரின் - மோண்டோ கார்லோ போட்டியில் மிக அற்புதமான வெற்றியை ,பயிற்சி போட்டி முதல் கடைசி வரை எனக்கு மட்டுமே இந்த கோப்பை என, சாதனை வெற்றியை பதிவு செய்தார் மெர்சடீஸ் அணியின் நிக்கோ ரோஸ்பெர்க்.

இரண்டாவது இடம் ..ரெட்புல் ரெனால்ட்டின் -செபாஸ்டியன் வெட்டல் ,மூன்றாவது இடமும் அதே அணியின் மார்க் வெப்பர் .


      நிக்கோ ரோஸ்பெர்க்.அவரது  இந்த ஆண்டில் முதல் -முதலிடத்து வெற்றியை தனது ஜெர்மானிய காதலி  Vivian Sibold யுடன் பங்கிட்டு மகிழ்கிறார் ( தொப்பி இடிக்குது பாஸ் !)

Monday, May 20, 2013

ஸ்பெயின் தேசமும் + F1 கோப்பையும் - அலோன்சாவுக்கு சொந்தம் !



             

அவ்வளவுதான் சஸ்பென்ஸ். 
                 ஸ்பெயின்  நாட்டின் Circuit de Catalunya களத்தில்  வரும்  மே  மாதம் 12 ஆம் நாள் ஃபார்முலா 1 போட்டி சுற்றின் 5 ஆவது போட்டி நடந்தது.கடந்த ஏப்ரல் 22 பதிவில் முடிவில் , ஃபெராரியின்  - ஃபெர்ணாண்டோ அலோன்சாவின் சொந்த நாடு என்பதை பதிவிட்டோம் அதே போல அந்த படத்தில் இருக்கும் பெண் பெயர் Dasha Kapustina ரஷ்யாவின் மாடல் அழகி .இந்த 23 வயது , 59 கிலோ எடையுள்ள தாஜ்மஹால் அலோன்சாவிர்க்கு  சொந்தம் (காதலி) . அவ்வளவுதான் சஸ்பென்ஸ் .சரி ஸ்பெயின் போட்டி  



பயிற்சி முடிவுகள்  ..

                முதல் பயிற்சி போட்டியில் ஃபெராரியின் - ஃபெர்னாண்டொ அலோன்சாவும் 2ஆவதில் ,ரெட்புல் ரெனால்டின் - செபாஸ்டியன் வெட்டலும்,3ஆவது பயிற்சியில் மீண்டும் ஃபெராரியின் - ஃபிலிப் மாசாவும் வந்தாலும்  தகுதி சுற்றின் முடிவு ஆச்சர்யத்தை அளித்தது .ஆம் .மெர்சடீஸ் அணியின் நிக்கோ ரோஸ்பெர்க் முதலிடமும் .அதே அணியின் லீவிஸ் ஹேமில்டன் இரண்டாம் இடமும் வந்து அசத்தினர் .



                ஆனால் என்ன செய்ய ?  போன (BAHRAIN GRAND PRIX)  அதர்க்கு முந்திய (CHINA GRAND PRIX ) இரண்டிலும் கூட இந்த அணிதான் முதலிடத்தில் போட்டியை துவங்கியது .ரெட்புல்,ஃபெராரி,லோட்டஸ் அணிகளின் வேகத்திர்க்கு ஈடு கொடுக்கமுடியாமல் அந்த அணிதான் தவிக்கிறதே .சரி அழகிய ஸ்பைன் நாட்டின் காளை சண்டைகளை பார்த்த மக்கள் இந்த போட்டியை எப்படி ரசிக்கிறார்கள் என பார்ப்போம் அது மட்டுமில்லை உள்ளூர் காளை அலோன்சா யாரை முட்டி தூக்க போகிறார் எனவும் பார்க்க வேண்டும்  - ஏனென்றால் அவர் இந்த போட்டியில் 5 ஆம் இடத்திலிருந்து ஆரம்பிக்கிறார் . 



போட்டி 
முதல் சுற்றில் ...
ரெட் புல்லின் - செபாஸ்டியன் வெட்டல் தனது மூன்றாம் இடத்திலிருந்து ஒரே பாய்சலாக கிளம்ப ,அவரை தொடர்ந்து அலோன்சாவும் ,3ஆவது வளைவில்  ஹேமில்ட்டனை 4ஆம் இடத்திர்க்கு பின்னுக்கு தள்ளி இரண்டு மூன்றாம் இடத்தை வெட்டலும் அலொன்சாவும் பகிர்ந்து கொள்ள, 

ஏழாவது சுற்றில்..
நாழாம் இடமும் சொந்தமில்லாமல் போனது ஹேமில்டனுக்கு காரணம் லோட்டஸ் - கிமி ரைகொணன் .

ஒன்பதாவது சுற்றில் ...
இனியும் இந்த Medium compound டயரை வைத்து போராடுவது சரியல்ல என முடிவெடுத்த மெர்சடீஸ் அணி நிர்வாகம் ஹேமில்ட்டனை அழைத்து போராடும் குணமுள்ள Hard Compound டயருக்கு மாற்ற அலோன்சாவும் அதே டயரை மாட்டி கொண்டு களம் திரும்ப ..
லோட்டஸ் ரெனால்ட்டின் - ரோமைன் க்ரொஜியன் கார் சஸ்பென்சன் கோளாரில் போட்டியை விட்டு வெளியேறியது .



பதிமூன்றாவது சுற்றில் ..
அலோன்சாவின் ஒவ்வொரு சுற்று மற்றும் செயலிளும் தன் ஸ்பைன் நாட்டு மக்களுக்காக இந்த போட்டியில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேகம் இருந்தது.அணியின் செயல்பாடும் ஒத்துழைப்பும் அற்புதம் .

20 ஆவது சுற்றில் ..
ஃபிலிப் மாசா டயர் மாற்றம் கேட்க அணி சரி என்றது .அனேகமாக நான்கு முறை டயர் மாற்றம் செய்ய அந்த அணியும் முடிவு செய்து இருக்கும்போல எற்கனவே ரெட்புல் அதே நிலையில்தான்  இருக்கிறது.



21 ஆவது சுற்றில் ..
இப்போது அலோன்சா - அதே Hard Compound .மிக வேகமான டயர் மாற்றம் .
கேட்டர் ஹாம் அணியின் - Giedo van der Garde வின் கார்  வீல் பிரச்சனை.பிட் லேன் வரும்போது மூன்று டயருடன் வந்தது .எனவே  அந்த காரும்  வெளியேறியது . இப்போது போட்டியில் 20 கார்கள் மட்டுமே .                                  
               

33 ஆவது சுற்று ..
வெட்டல் மூன்றாவது இடத்தில் போய் கொண்டு இருக்க ரைகொணன் மிக மிக அருகே வந்து அச்சுறுத்த , ஒரு சமயத்தில் வெட்டல் தன்னுடய இடத்தை ரைகொணனிடம் பறிகொடுத்தார் .


35 ஆவது சுற்றில் ..
சாபர் ஃபெராரியின் -நிக்கோ ஹல்க்கேன் பெர்க்கும் STR ஃபெராரியின் ஜீன் எரிக் வெர்ஜினும் பிட் லேன்  பகுதியில் மோதிக் கொண்டனர் .எதிர்பாராத மோதல் .

42 ஆவது சுற்றில் ..
அலோன்சாவின் வேகம் அபாரமாக இருந்தது .தொடரும் ரைகொணனுக்கும் அவருக்கும் ஏழு வினாடிகள் இடைவெளி .

49 ஆவது சுற்றில் ..
இன்னும் 17 சுற்றுகள் மீதமுள்ள நிலையில் தனது கடைசி டயர் மாற்றத்தில்  அலோன்சா தேர்வு செய்து இருப்பது Hard Compound .அனேகமாக இதே தேர்வு தான் முன்னனி கார்களும் தேர்வு செய்ய வேண்டும் நிலை புரிகிறது .

52 ஆவது சுற்றில் ..
மிக திடமான நிலையில் அலோன்சா .தொடரும் காருக்கு 11 வினாடிகள் வித்தியாசத்தில் பறந்து கொண்டு இருந்தது .
35ஆவது சுற்றில் பாதிப்பு அடைந்த STR ஃபெராரியின் ஜீன் எரிக் வெர்ஜின் கார் தொடர முடியாமல் போட்டியை விட்டு விலக வேண்டியாதாகி விட்டது .இவருடன் மோதலை ஏற்படுத்திய நிக்கோ ஹல்க்கேன் விசாரணைக்கு உட்படுவார் .



ஸ்பெயின் தேசமும் + F1  கோப்பையும்... 
66 ஆவது வெற்றி சுற்று ..

                                  கடைசிவரை 11 வினாடிகள் தொடர்ந்து கொண்டு இருந்த அலோன்சா - கிமி இடைவெளி இரண்டாவது இடம் வெற்றியை தொடும்போது 9.3 வினாடிகள் வித்தியாசம் .ஆனால் மூன்றாவது வெற்றியை தொட்ட மாசாவுக்கும் அலோன்சாவுக்கும் இடைவெளி 26 வினாடிகள்


5 போட்டிகள் முடிந்த நிலையில் புள்ளி பட்டியலில் முன்னால் சாம்பியன்கள் மட்டுமே முன்னிலை வகிக்கிறார்கள் .

  1. As of: Spanish Grand Prix +/- Points Behind Wins
    1
    Sebastian Vettel - Red Bull
    –
    89
    ‒
    2
    2
    Kimi Raikkonen - Lotus
    –
    85
    4
    1
    3
    Fernando Alonso - Ferrari
    +1
    72
    17
    2
    4
    Lewis Hamilton - Mercedes
    -1
    50
    39
    0
    5
    Felipe Massa - Ferrari
    +1
    45
    44
    0


              மீண்டும் நாம், வரும் வாரம் மே 26 ஆம் நாள் உலகின் மிக கடினமான போட்டி களங்களின் ஒன்றான Monaco Grand Prix களத்தில் சந்திப்போம் .மேலே   போட்டியை பார்க்க அழைக்க நிற்கும் யுவதிகள் நமது சஹார ஃபோர்ஸ் இந்திய அணிய சேர்ந்தவர்கள் .சரி இப்படி யுவதிகளை கண்டாள் எப்படித்தான் கார் ஓட்ட போகிறார்களோ அந்த அணி ட்ரைவர்கள்  ?அதையும் பார்ப்போம், வாருங்கள் .

Monday, April 22, 2013

பஹரைன் கோப்பை - செபாஸ்டியன் வெட்டளுக்கு .


           நேற்று ( 21-04-2013 ) Bahrain International Circuit ல் போட்டி நடந்தது . சைகு ஹம்மாத் இப்னு ஈசா அல்-கலீபா அவர்களின் மன்னர் ஆட்சியை எதிர்த்து இங்கு பல உள் நாட்டு சண்டைகள் நடந்து கொண்டே இருக்கிறது .கடந்த ஆண்டில் ஃபோர்ஸ் இந்திய அணியின் மெக்கானிக்குகள் வந்த வண்டியில் மேல் கூறையில் பெட்ரோல் பாம் வீசப்பட்டது நினைவிருக்களாம் .பாரசீக வளைகுடாவில் அமைதியை கொண்டு வருவதர்க்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் செய்ய முடியாததை ஃபார்முலா 1 தலைவர் Bernie Ecclestone செய்ய முடியாது இருந்தாலும் அவர் மன்னரிடம் உத்ரவாதம் பெற்ற பின்னரே போட்டியை இங்கு முடிவு செய்தார்.  அதோடு எதிர் கட்சி தலைவர் al-Wefaq பேசிய பின்னரே போட்டியை நடத்த தீர்மானித்தார்.ஆனால் கிளர்சியாளர்களின் எச்சரிக்கையால் பார்வையாளர்கள் வரத்து குறைந்து  இருந்தது அதர்க்கு கண்டனம் தெரிவித்தார் 82 வயது Bernie .



            இந்த முறை முதலிடத்தில் மெக்லரண் அணியின் நிக்கோ ரோஸ்பெர்க் போட்டியை துவக்கி வைக்கிறார் .ஏன் துவக்கி வைக்கிறார் என சொல்ல வேண்டி இருக்கிறது என்றால் அந்த அணியின் தொழில் நுட்ப முன்னேற்றம் ரெட்புல் ,ஃபெராரி , லோட்டஸ் , போன்ற அணிகளுட்ன் ஒப்பிடும் போது பின் தங்கித்தான் உள்ளது.எனவே அந்த அணி தாக்கு பிடிப்பது கஷ்ட்மே அடுத்து ரெட்புல் - செபாஸ்டியன் வெட்டல்  மூன்றாவது ஃபெராரியின் ஃபெர்னாண்டோ அலோன்சா .

முதல் சுற்றில் ...
மெர்சடிஷ் - நிக்கொ ரோஸ்பெர்க் கார் முதல் முதல் வளைவிலேயே தன்னுடய தற்காப்பு நடவடிக்கயாய் தொடர்ந்து வரும் ரெட்புல்லின் செபாஸிடியன் வெட்டல் முன்னேறவிடாமல் தடுக்க ,அது வெகு வினாடிகள் தாங்காது என்பதாக பட்டது 

மூன்றாவது சுற்றில் ..
DRS - இயக்குவதர்க்கு அனுமதிக்கப்பட்டது .இனி வெட்டலின் அணுகுமுறை பற்றி சொல்லவே வேண்டியதில்லை .மிக சாதாரணமாக முதலிடத்தை வெட்டல் தக்கவைத்துகொள்ள ,

ஐந்தாவது சுற்றில் ..
ரோஸ்பெர்க்குக்கு கிடைத்த இரண்டாவது இடத்தை ஃபெராரியின் - ஃபெர்னாண்டோ அலோன்சா விடவில்லை  .3ஆம் இடமே சொந்தமானது .
எழாவது சுற்றில் ..
ரோஸ்பெர்க்குக் நிலமை மேலும் மோசமாகி கொண்டே இருந்தது .அவரை ஃபெராரி - ஃபிலிப் மாசா முந்த முயற்சி செய்து  தன்னுடய Front Wing பகுதியை காயப்படுத்தி கொள்ள ..

எட்டாவது சுற்றில் ...
கடந்த சுற்றில் டயர் மாற்றி வந்த அலோன்சாவின் காரில் DRS அமைப்பு வேலை செய்யவில்லை .அதை சரி செய்ய மீண்டும் பிட்லேன் போனது .போச்சு .முதல் 15 சுற்றுக்குள் தக்கவைத்து கொள்ளும் இடமே கடசி வரை நிலைக்கும் அதை இழந்த்தது அலோன்சா கார் .

பத்தாவது சுற்றில் ..
செபாஸ்டியன் வெட்டல் இப்போது பிட்லேனில் .எனவே ஃபோர்ஸ் இந்திய அணியின் ஆண்ரியன் சட்டில் ரேஸ் லீடர் .இரண்டாவது இடத்தில் கிமி ரைக்கொணன் 
பதினோறாவது சுற்றில் ..
ஒரே சமயத்தில்  மாஸா, ஹேமில்ட்டன் , மால்டொனாடோ , சில்ட்டன் ஆகியோர் பிட்லேனி டயர் மாற்றம் வந்து கலக்கிகொண்டு இருக்க ..

பதினைந்தாவது சுற்று ...
ஆண்ரியன் சட்டில் இடத்தை இப்போது வெட்டல் ஏறக்குறைய கைப்பற்ற ..

 
பதினெட்டாவது  சுற்றில் ..
STR - ஃபெராரியின் ஜீன் எரிக் வெர்ஜின் கார் மெல்ல கெரேஜுக்குள் தஞ்சம் அடைந்து போட்டியிலிருந்து விலகி கொண்டது .
மாசாவின் வலது பின்புற டயரில் ஏதோ பிரச்சனை பிட்லேன் ..

21 ஆவது சுற்றில் ..
முதல் இரண்டு இடமும் ரெட்புல் வெட்டல் வெப்பர் ஆனால் இடைவெளி 14 களுக்கு மேல் .
ஜென்சன் பட்டன் மூன்றாம் இடம். காரணம் ரோஸ்பெர்க் பிட்லேன் .அந்த இடத்தை பிடிக்க க்ரோஜியன் வெகு சுவாரசியமாக துர்த்த ..இனி தாக்கு பிடிக்க முடியாது என்ற நிலையில் பட்டன் டயர் மாற்றம் போனார்,
25 ஆவது சுற்றில் 
அலோன்சாவின் நிலை ரேஸை முடிப்பதாக மட்டுமே இருந்தது .இப்போது பிட்லேன் மீண்டும் 15 ஆவது இடம் ..
26 ஆவது சுற்றில் ..
வெட்டல் பிட் லேன் வர வெப்பர் முதலிடம் .
29 ஆவது சுற்றில் ..
அட என்ன ஆச்சு இந்த ஜென்சன் பட்டனுக்கு பத்தாவது வளைவில் தனது அணியின் செர்ஜியோ பெரெஸை முந்த இடது பக்கமும் வலது பக்கமும் மாறி மாறி முயற்சிக்க அணி கண்டுகொள்ளாமல் இருக்கவே ..


30 ஆவது சுற்றில் ..
இனியும் பொறுத்துகொள்ள என்ன இருக்கிறது என்பது போல இந்த முறை ஜென்சன் பட்டன் மீண்டும் முயல உரசலே ஏற்பட்டுவிட்டது .காரின் பாகம் ஒன்று களத்தில் விழுந்தது கிடந்தது.கோபத்தில் ஜென்சன் அணித்தலைமையிடம் முறையிட ...

33 ஆவது சுற்றில் 
க்ரோஜியனையும் விட்டு வைக்கவில்லை செர்ஜியோ பெரெஸ் அவரோடும் ஒரு சிறு உரசல் .சரிதான் .நிச்சயம் இதை போட்டியை நடத்தும் FIA ஒத்துக்கொள்ளாது ..

35 ஆவது சுற்றில் ..
ஹேமில்ட்டன் போட்டியிலிருக்கிறாரா என்பது போல 9 ஆம் இடத்தில் காரின் எரிபொருளை சேமித்து அதாவது ஒரே வேகத்தை பின்பற்றி மெல்ல முன்னேறி கொண்டே இருப்பது என ஒரு திட்டம் வைத்து இருப்பார் போல .பின்னாடி உதவும் !

37 ஆவது சுற்றில் ..
மாஸா காரின் பின்பக்க டயர் பஞ்சர்,ஃபெராரியின் இரண்டு கார்களின் நிலையுமே இன்று கேள்விகளை எழுப்புகிறது ..


38 அவது சுற்றில்..
மார்க் வெப்பரும் - ரோஸ்பெர்க்கும் உரசல் .இதுவும் FIA வழக்கில் எடுத்து கொள்ளும் .இன்று தனது 200 ஆவது போட்டியில் கலந்து கொள்வதை கொண்டாடி விட்டு வந்த வெப்பருக்கு இது வருத்தம் தரும் .சண்டையில் கிழியாத சட்டையா என்பது போல போட்டின்னா உரசல் சகஜமப்பா ..

39 ஆவது சுற்று 
ஹேமில்ட்டன் பிட்லேன் , அவரை தொடர்ந்து ரோஸ்பெர்க் .அலோன்சாவை அணித்தலைமை KERS ன் முழுவேகத்தை பயன்படுத்தி முன்னேறி டயர் மாற்றம் வர அழைத்தது .

43 ஆவது சுற்று ..
லோட்டஸ் அணிக்கு இரண்டாம் இடம் உறுதி ஆகிவிட்டது கிமி ரைகொணாண் மூலம் .  ஆனால் அந்த அணி கவனம் இப்போது மூன்றாம் இடத்தில் இருந்தது .எனவே அந்த அணியின் க்ரோஜியனை ஏனென்றால் அவருக்கும் மூன்றாம் இடத்து ஃபோர்ஸ் இந்தியாவின் ஆண்ட்ரியன் சட்டில் இடத்தை பிடிக்க முடிவு செய்ய டயர் மாற்றி அந்த கார் இப்போது 5 ஆம் இடம் தொடர ..

44 ஆவது சுற்றில்.. 
 க்ரோஜியன் டயர் மாற்றம் வேலை செய்ய ஆரம்பித்தது .5 ஆம் இடத்து வெப்பரை பின்னுக்கு தள்ளி கைப்பற்றியது .

45 ஆவது இடம் ..
ரோஸ்பெர்க் 4 ஆவது முறையாக டயர் மாற்றம் .
ஹேமில்ட்டன் தனது வேலையை தொடங்கிவிட்டார் .6 ஆம் இடத்தில் இருந்த தனது முன்னால் சக தோழன் ஜென்சனை பின்னுக்கு தள்ளினார் 

47 ஆவது சுற்றில் ..
இப்போது ஹேமில்ட்டன் 5 ஆம் இடத்து மார்க் வெப்பரை பின்னுக்கு தள்ளி அந்த இடம் .
அதேபோல க்ரோஜியன் மூன்றாம் இடத்தை  மிக சாதுர்யமாக 
ஆண்ட்ரியன் சட்டில் இடத்தை பிடித்துவிட்டார் .

53 ஆவது சுற்றில் ..
மீண்டும் வெப்பர் தன்னுடய 5 ஆம் இடத்தை தக்கவைத்து கொள்ள .போட்டி கலக்க தொடங்கியது ...

54 ஆவது முதல் - 56 ஆவது சுற்று வரை 
வெப்பர் Vs ஹேமில்ட்டன்  போரட்டம் முடிவுக்கு வந்தது. ஹேமில்டன் தந்து முழுபலத்தை பயன்படுத்தி 5 ஆம் இடத்தை பிடிக்க சத்தமில்லாமல் அவரை தொடர்ந்து வந்த மெக்லரன் அணியின் செர்ஜியோ பெரஸ் வெப்பரை மேலும் ஒரு இடம் தள்ளி ஏழாம் இடத்திர்க்கு அனுப்பிவைத்தார்.


57 ஆவது கடைசி சுற்று ..
சுமார் 9.1 வினாடிகள் வித்தியாசத்தில் தொடர்ந்து வந்த கிமி ரைகொணனை முந்தி முதலிடம் வந்தார்  ரெட்புல்லின் - செபாஸ்டியன் வெட்டல் 
இரண்டாவது  இடம் லோட்டஸ் ரெனால்ட்டின் - கிமி ரைகொணன் 
மூன்றாவதும் அதே அணியின்          - ரொமைன் க்ரோஜியன் 
மிக பெரிய மாற்றங்கள் இல்லாத பெரிய சுவாரஸ்யம் இல்லாத போட்டியாக முடிந்து விட்டது .


                   நமது அடுத்த வேகம் ஸ்பைன் நாட்டின் Circuit de Catalunya களத்தில்  வரும்  மே  மாதம் 12 ஆம் நாள் பிற்பகல்  5.30 க்கு  நடை பெற இருக்கிறது.     அந்த நாடு        நமது           ஃபெராரியின்  - ஃபெர்ணாண்டோ அலோன்சாவின் சொந்த நாடு .    எனவே அங்கு போட்டி பலமாகவும் அழகாவும் இருக்கும் .     அதர்க்கு ஒரு உதாரணம் இந்த பெண் அங்கு கட்டாயம் வருவார் .யாருடன் என்பதை சொல்லுங்கள் ..