மலேஷ்யாவின் மிக அழகான சுற்றுலா தளங்களை பாராட்டாதவர்கள் இல்லை .ஒருவகையில் பார்முலா போட்டிகள் அன்னிய செலாவணியை ஈட்டு தரும் வகையில்தான், அதிக சுற்றுலா தளங்கள் அமைந்துள்ள மைய பகுதியாக போட்டி களம் தேர்வு செயப்படுகிறது .
இந்தியாவில் கூட ஜெய்பீ களம் அப்படிதான் தேர்ந்தெடுக்க பட்டுள்ளது .
சரி .நம் ஒரு அழகான மலேசியா காட்சியை பார்க்கலாமே
Twin Towers
இங்குள்ள செபாங் இண்டர்நேசனல் சர்க்யூட் (Sepang International Circuit) பார்முலா டிரைவர்களின் விரும்பப்படும் ஏனைய உலக சர்க்யூட்களை ஒப்பிடும் போது மிக சிறந்தது .
.கடந்த 2000 ஆண்டு முதல் இன்று வரை 12 போட்டிகள் நடைபெற்ற 5.543 கி .மீ (3.44 mi) நீளமுள்ள களம் .56 சுற்றுகளில் 310.408 கி. மீ தூரம் கடக்கப்படுகிறது 15 வளைவுகள் கொண்ட இந்த களத்தை கொலம்பியன் டிரைவர் ஜூயான் பாப்லோ மொண்டோயோ ரோல்டேன் (Juan Pablo montoya Rolden) கடந்த 2004 ல் வில்லியம்ஸ் பி.எம். டபிள்யு அணிக்காக ஒரு நிமிடம் முப்பத்தி நாலு வினாடியில் மற்றும் 223 மில்லி வினாடியில் (1:34.223 ) குறைந்த பட்ச வேகத்தில் கடந்து , பதிவு செய்துள்ளார்
இந்த களத்தின் மிக பெரிய உழைப்பு ஹெர்மன் டில்கே (Hermann Tilke) என்ற வடிவமைப்பாளர் என்றாலும், மூளையாக செயல்பட்டவர் அந்நாட்டு பிரதமர் திரு மகாதீர் முகமது ( Mahathir Mohamad)அவரின் அதிகபட்ச கனவுதான், இந்த அழகிய வடிவமைப்பு .வேறு எந்த களமும், களகட்டிட வடிவமைப்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வாய்ப்பு இல்லை
Dr. Mahathir Mohamad
கடந்த ஏப்ரல் 10 அன்று மதியம் நம் இந்திய நேரப்படி 1.30 க்கு போட்டி ஆரம்பித்தது .இந்தமுறையும் நான்தான் என்ற செபாஸ்டியன் வெட்டல் என்ற இளம் புயல் மட்டுமே மொத்த களத்தில் இருப்பது போன்ற ஒரு பிரம்மையை ஏற்படுத்திவிட்டார் .
வ்ரர்ர்ர்ர்,வ்ரர்ர்ர்ன்னு அந்த ஆர்பி ஆர் ரேனால்டின் (RBR-RENAULT)அணியின்
சத்தமே நிரம்பி வழிந்தது .வெற்றி முழுவதையும் அவரே ஆக்கிரமிப்பு செய்துவிட்டாரோ என்பதாய் பட்டது.அவரின் கார் வெற்றிக்கு ஒத்து உழைத்ததோ இல்லையோ ஆனால் அவரின் தன்னம்பிக்கை அசாத்திய வெற்றி கனியை பறித்து விட்டது .
RBR-RENAULT
காரணம் இந்த போட்டியில் ஐந்து கார்கள் புதிய தொழில் நுட்பமான KERS-Kinetic Energy Recovery System, DRS-The Drag Reduction அமைப்புகள் போட்டி முடிவில் மிக பல தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது .இந்த நுட்பம் மிக முக்கியமானது .ஆனால் அடுத்த சந்திப்பில் நிறைய !
பேசுவோம்.
மிகவும் எதிபார்க்க பட்ட நரேன் கார்த்திக்கும் மேற்கண்ட புதிய தொழில் நுட்ப மாற்றங்களால் போட்டியின் பாதியில் வெளியேறிவிட்டார் .
வெட்டளுக்கு இந்த முறை போட்டியாக துவங்கிய மெக்ளரனின்- ஜென்சன் பட்டன் நெருக்கடி தருவதாக நினைத்தாலும் எதுவும் நடக்கவில்லை .ஆனால் இரண்டாம் இடம் மெக்லாரன் அணிதான் வெற்றி பெற்றது.மூன்றாம் இடம் ரெனால்ட் அணியின் நிக் கேய்பில்டு
Renault RS27
இந்த ஆண்டில் காரின் என்ஜின் தயாரிப்பில் பெர்ராரி ,காஷ்வோர்த் .மெர்சிடிஸ் கம்பெனிகளை காட்டிலும் ரெனால்ட்RS 27 தயாரிப்பு மட்டுமே சிறப்பாக செயல் பட்டு வருகிறது .
மீண்டும் அடுத்த ரேஸ் ,வரும் 10 ஆம் தேதி சீனாவில் ஆரம்பிக்கும் முன் வேகமாக சந்திப்போம்
1 comment:
ஆஹா..எழுத்துக் கூட ரேஸ் குதிரை மாதிரி என்னமா ஓடுது?
Post a Comment