பொதுவாக F1 ரேசில் கார்கள் "வ்வ்ர்ர்ர்ரூம் வ்வ்ர்ர்ர்ரூம்" சத்தத்துடன் சுமார் ஐந்து கிலோ மீட்டர் மைதானத்தை 360 கி .மீ வேகத்தில் 55 முதல் 60 சுற்றுகள் கார்கள் ஒரே வண்ணத்தில் இரண்டு கார்கள் வீதம் 24 கார்கள் அவசர ,அவசரமாக போவதும் வருவதுமே பார்க்கிறோம் .
சில சமயம் எதற்காக இப்படி பார்முலா பந்தயம் நடத்துகிறார்கள், என்பதற்க்கு சரியான காரணம் தெரியாததால் ஆர்வம் குறைந்து போக, வேறு தொலை காட்சி சானலை நோக்கி போக நேரிடுகிறது .
சில சமயம் போட்டி மைதானம் முழுவதும் மற்றும் கார்களின் மேல் ஒரு இடம் விடாது நாம் பார்க்கும் விளம்பரம் இது வெறும் விளம்பர நிகழ்ச்சியாக எடுத்துகொள்ள, வாய்ப்பு இருக்கிறது
உண்மையில் இது ஒரு சோதனைக்காக ஏற்ப்படுத்தப்பட்ட சாதனை ஓட்டம் .இங்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல் ,டயர் ,எஞ்சின் ,கியர் பாக்ஸ், வடிவங்களின் ஏரோ டைனமிக் அமைப்பு இன்னும் பல சங்கதிகள் தினமும் உங்கள் முன் கடந்து போவதை உணர்வீர்களா?
சாலையில் நாம் பல விதமான கார்களை பார்க்கிறோம் .நம் பார்வையில் அதன் வடிவங்கள் வெவ்வேறாய் இருக்கலாம் .ஆனால் அதனுள் இருக்கும் தொழில்நுட்பத்தோடு ஏதாவது ஒரு விஷயம் பார்முலா ரேஸ்களில் பயன்படுத்தும் காரின் நுட்பத்திலிருந்து பெறப்பட்டு இருக்கும் என்பது உண்மை .பல தொழில் நுட்பங்களின் சோதனைக்கூடமே பார்முலா ரேஸ் .
அந்த கண்ணுக்கு தெரியாத சாகசத்தை புரிந்து கொள்ளும் முன் சில நம் விருப்பங்களுக்குரிய கார்களின் அணிவகுப்பை பார்க்கலாம் .
கார்களை விரும்புவதர்க்கு குறைந்தபட்சமாக மூன்று விதமான காரணம் இருக்கலாம் .
1 .வேகத்தை விரும்புவது
2 .சொகுசை .விரும்புவது
3 . தேவைக்காக வாங்குவது
ஆனால் கார்கள் அதிகபட்சமாக எத்தனைவிதமாக வகை படுத்தப்பட்டுள்ளது என்பதும் சுவாரசியமானதுதான்
பயன்பாடை பொறுத்தே கார்கள் வகைப்படுதப்படுள்ளது
A) கூபே வகை (Coupe)
இரண்டு கதவுகளும் இரண்டு இருக்கைகள் மட்டுமே இருக்கும் எளிமையான (ஆனால் விலையில் அல்ல!) வகை கார்கள் BMW சமீபத்தில் வெளியிட்டுள்ள பளீர் வண்ண கார்கள் .இப்போது இந்தியாவில் கிடைக்கிறது .
B) கன்வேர்டிபில் வகை (Convertible)
மேற்கூரை இல்லாத கல்யாண ஊர்வல கார் போல இருக்கும் மெர்சிடீஸ் SLK .இந்த வகை
C) ஹேட்ச்பேக் வகை (Hatchpack)
பொருள்களை வைத்துக்கொள்ளும் டிக்கி இல்லாத ஹூண்டாய் கெட்ஸ் இந்தவகையாகும் .
D) செடான் வகை (sedan)
வண்டியின் உயரத்தில் பாதி வரை, பொருள் வைத்துகொள்ளும் டிக்கி இருக்கும் புதிய ஆடி கார் இந்த வகையாகும்
E) ஸ்டேசன் வேகான் வகை (Station Wegan)
வண்டியின் உயரத்திற்கு டிக்கி இருக்கும் டாட்டா இண்டிகா மரினா இந்தவகை
F) மினி வேன் (Mini Van)
பாதி கார் ,பாதி வேன் என கலந்த கலவை இது மாருதி வெர்சா இந்த வசதி கொண்ட அமைப்பு .
G) மல்டி யுடிலிட்டி வகை MUV (Multi Utility Vehicle)
குடும்ப கார் .மிக அதிகமாக பரவி வரும் டொயோட்ட இன்னோவோ தான் இந்த வகை
H) ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வகை SUV(Sports Utility Vehile)
இந்த வகை காடு ,மலை ,பள்ளம் ,மேடு என கடினமான இலக்குகளின் சுவர்க்கம் .நான்கு சக்கரங்களும் கட்டுபாட்டில் இருக்கும் .
போர்ட் எண்டோவர் இந்த வகையாகும்
இதையும் தாண்டி நிற்க்கும் நம் பார்முலா கார்கள் பிரத்தியோகமாக சிறப்பாக அமைக்கப்பட்ட சர்க்யுட் ,ட்ராக் போன்றவற்றில் மட்டுமே ஓட்டப்படும் கார்கள்
கார் உலகம் இவ்வளவு பரந்து விரிவதர்க்கு பார்முலா போட்டியில் செலுத்தப்படும் அதி தீவிர தொழில்நுட்ப புரட்சிதான்
.ஒரு பார்முலா காரில் 80000 க்கும் மேற்பட்ட தனிப்பட்ட பாகங்கள்ஒன்றாக பிணைக்கப்பட்டு குறைந்த பட்சம் 640 கிலோ எடையில் (கார் + டிரைவர் + பெட்ரோல் + கேமரா ) எட்டு கியர்களுடன் (7+1)மணிக்கு 360 கி .மீ வேகத்தில் 980 குதிரை திறனில் பறக்கும், மன்னிக்கவும் பாயும் காரின் பின்னால் எவ்வளவு தோள்கள் தாங்குகின்றன என்பதை அறியும்போது ஆச்சர்யம் கூடிக்கொண்டே போகிறது
காரின் வடிவம் ,காரின் பராமரிப்பு ,கியர் பாக்ஸ் மிக முக்கியமான ஏரோடைனமிக் என ஒவவொரு தனிப்பட்ட பணிக்கும் , குழுவாக நியமித்து சுமார் 400 என்ஜீனியர்கள் பணியாற்றுகிறார்கள் .வருடம் மிக சாதாரண அணிக்கு 500 கோடிக்குமேல் செலவாகிறது.உலக போட்டிகளில் எந்திர திறனும் மனித திறனும் போட்டி போட்டு செயலாற்றும் போட்டியாக பார்முலா1 போட்டியாக மட்டுமே இருக்கும்
இத்தனைக்கும் பின்னே வெறும் விளம்பரமோ ,சம்பாத்தியம் மட்டும் இல்லை என்பதை போக போக நாம் புரிந்து கொள்வோம்
இதன் வசீகரமே செலவும் உழைப்புமும்தான்
மீண்டும் பார்ப்போம் அடுத்த வேகத்தில் .
2 comments:
Cool post! :-)
superb..
Post a Comment