மொனாக்கோ சுதந்திர நாடு ,வருடத்தின் 300 நாளும் சூரிய தரிசனத்தை அனுபவிக்கும், உலகின் வாடிகன் நகருக்கு அடுத்த, சிறிய நாடு.
Francois Grimaldi, the royal dynasty's 13th century founder
.கடந்த 2010 ஆம் ஆண்டு நிலவரப்படி மக்கள் தொகையின் அளவு 31,000 மட்டுமே .மொத்த பரப்பளவு முக்கால் மைல் (1.95 கி .மீ ).தன்னுடைய நிதி பற்றாகுறைக்காக பாதி நாட்டை ஃபிரான்ஸுக்கு கொடுத்த நாடு .
ஆனால் இயற்கையின் அதிருஷ்டம் கடல் பரப்பு விட்டு கொடுத்த நிலபரப்பு அதில் உருவான சூதாட்ட நிலையங்கள் அதனுடைய செல்வாக்கை உலகில் உயர்த்தியது .
அது எப்படி? என்பதற்கு 2006 ல் வெளிவந்த ஜேம்ஸ் பாண்ட் -டேனியல் கிரேக்கின் "காசினோ ராயல்" திரைப்படம் நீங்கள் பார்க்க வேண்டும் .
சரி இத்தனை விஷயம் நம் பார்முலாவின் போட்டிக்கு தொடர்புள்ளதா ?.ஆம் இத்தனை சிறிய பரப்பளவில் ரேஸ் எப்படி நடத்துவது ?அதிலும் இத்தாலியின் மோன்சா ( Monza) களத்திற்கு அடுத்த அனுபவம் வாய்ந்த அதாவது 58 ரேஸ் நடத்திய உலகின் இரண்டாம் நாடு .இப்போது புரியும் .
இங்குள்ள மொனாக்கோ சர்க்யூட்டில் (Circuit de Monaco) உலகின் மிக வினோதமான ஸ்ட்ரீட் சர்க்யூட் முழுவதுமாக நகரத்தில் அதுவும் சுரங்க பாதை (Tunnel) வழியாக கூட அமைக்கப்பட்ட மிக கடினமான வளைவுகளையும், திருப்பங்களையும் குறுகிய அகலத்தையும் கொண்டது .78 சுற்றுக்களை கொண்ட 3.340 கி .மீ நீளமுடையது.
Michael Schumacher
இதில் கடந்த 2004 ஆம் ஆண்டில்-பெர்ரரியின் F2004 காரில் 1:14.439 நிமிடத்தில் கடந்து ,அண்ணன்- திமிங்கலம் மைக்கேல் சூமேக்கர் சாதித்து இருக்கிறார் .
ஒவ்வொரு பார்முலா 1 வீரரும் வெற்றி பெற துடிக்கும் சவாலான களம் .ஆனால் மிக சிறந்த வெற்றியை விடவும் பாதுகாப்பு மிக அவசியம் பாதுகாப்பு வாகனம் (Safety Car) வழி நடத்தாத போட்டிகளே இல்லை என சொல்லாம் .
தகுதி சுற்றிலே சப்பர் (BMW Sauber) அணியின் செஜியோ பெர்ஷ் (Segio Perez) விபத்துக்குட்பட்டார் .ஆனால் அதிருஷ்டவசமாக காயம் மட்டுமே அடைந்தார் . அடுத்த கனடா ரேஸில் கலந்து கொள்வார் என நம்பப்படுகிறது .
Perez crashes out of Monaco qualifying Accident
இந்த களத்தில் கடந்த 1952 ல் இத்தாலியின் லியூஜி ,அதே நாட்டின் லாரோன்சோ, 1967 லிலும் விபத்தில் இறந்து போனார்கள்.
Luigi Fagioli Accident
lorenzo bandini Accident
விலை மதிப்பில்லாத உயிரின் போட்டிக்களம் மொனோக்கோ என்பது மனதின் வலியோடு ஒப்புகொள்ள வேண்டியதாக இருக்கிறது .
எனவே அபாயமான இந்த போட்டி களம் அவசியமா ?
தவிர்க்கலாம்...
அவசியத்தினை யோசிக்க எடுத்துகொள்ளும் நேரத்தில் இதன் தொடர் பதிவை நாளை பேசலாமா ?
இவர்களுக்கும் இந்த அடுத்த பதிவிற்கும் ஆதார பூர்வ தொடர்பு இருக்கிறது .
1 comment:
//அண்ணன்- திமிங்கலம் மைக்கேல் சூமேக்கர்//
Well Said:)
//விலை மதிப்பில்லாத உயிரின் போட்டிக்களம் மொனோக்கோ//
மொனோக்கோ மட்டுமல்ல, எஃப் 1 என்பதே அப்படித்தானே... புகழ் தரும் விலைக்கு உயிரின் விலை சற்று மதிப்புக்குறைவோ?
Post a Comment