உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, June 18, 2011

வேகமும் -விவேகமும் கலந்த வெற்றி

நமது பார்முலா 1 ன் ஏழாவது போட்டி கனடாவின் - கனேடியன் கிராண்ட் பிரிக்ஸ் களத்தில் நடந்தது .


அருவி என்றாலே உலக மக்களின் கண் முன் சாரலுடன் நினைவுக்கு வருவது அழகிய நயாகரா நீர்வீழ்ச்சிதான் .அமேரிக்கா -கனடாவின் எல்லை பகுதிக்கு ஆண்டுக்கு பத்து மில்லியன் மக்களின் வருகையை இந்த அருவி ஏற்படுத்தி உள்ளது .

அழகிய ஒரு நதி மூன்று நீர்வீழ்ச்சியில் மூலம் தன் பெயரை சொல்கிறது ஒன்றுபிரைடல்வெல்ஸ் (Bridal Veil Falls),இரண்டாவது அமெரிக்கன் நீர்வீழ்ச்சி, (American Falls )மூன்றாவது -குதிரை குழம்பு வடிவ கனடா அல்லது ஹார்ஸ் சூ  (Canadian or Horseshoe Falls) வீழ்ச்சி .அந்த  மிகவும் புகழ் பெற்ற நதி வீழ்ச்சியில் 86% பங்கை ஹார்ஸ் சூ மூலம் கனடா வாங்கி அணைத்து கொள்கிறது .

வீழும்போதும் பெயர் பெறுவது இயற்கை மட்டுமே. 

கனடாவின் மமுன்னாள் வீரர் கில்ஸ் வில்நேவ் பெயரில் (Joseph Gilles Henri Villeneuve) இந்த களம் Circuit Gilles Villeneuve அழைக்க அழைக்கபடுகிறது .

image.png
Gilles Villeneuve 

கில்ஸ் வில்நேவ் மரணம், 1982 மே மாதம் எட்டாம் தேதி பெல்ஜியத்தில் நடந்த பெர்ராரி அணியிலிருந்து கலந்து கொண்ட போட்டிக்கான தகுதி சுற்றில் மிக மோசமான விபத்தில் நிகழ்ந்தது .

image.png
Circuit Gilles Villeneuve 

இந்த களம் கடந்த 2002 ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்த பட்டு வருகிறது இதுவரை ஒன்பது போட்டிகள் நடந்து இருக்கிறது .4:361 கி .மீ நீளமுள்ள இந்த களத்தின் மிக வேக மனிதன் .

Rubens Barrichello

பெர்ரரியின் ரூபன் பேரிகொலோ( Rubens Barrichello)  1:13.622 நிமிட நேரத்தில் கடந்ததே இன்றும் சாதனை சாட்சி .

கனடாவின் உள்ளூர் நேரப்படி மதியம் ஒரு மணிக்கு( நம்மூர் நேரப்படி இரவு 10.30) ரேஸ் மழையால் துவங்கி வைக்கப்பட்டது ...
அப்படித்தான் நடந்தது .


.முதல் சுற்றிலேயே சேப்ட்டி கார் ரேஸ் லீடர் போல வழி நடத்த நான்கு சுற்று வரை நீடித்தது .மழை.

ஏழாவது சுற்றில் மீண்டும் சேப்ட்டி கார்-12 ஆம் சுற்று வரை .காரணம் மேலரண் அணியின்  ஹேமில்டன் -ஜென்சென் பட்டன் மோதல் .


ஹெமில்டேன் காரின் இடது ரியர் சஷ்பென்செர் பாதிக்க பட்டதால் வெளியேறினார் .(அவர்தான் துவக்கம்... )

மீண்டும் 21 ஆம் சுற்றிலிருந்து  24 ஆம் சுற்றுவரை சேப்ட்டி கார்.

மழை வலுக்கவே ரேஸ் நிறுத்தப்பட்டது .

சுமார் இரண்டு மணிநேரத்திற்கு பிறகு துவங்கிய ரேஸ் மழையின் துணையுடனே நடந்தது .
.
28 ஆம் சுற்றில் லோட்டஸ் ரெனால்டின் கோவலைனன் வெளியேற (Heikki Kovalainen) அடுத்து 36 ஆவது  சுற்றில் பெர்ரரியின் 
அலோன்சா 
கடந்த இரண்டு போட்டிகளில்
 வெளியேறிய பிலிப் மாசாவுக்கு போட்டியாக நானும், என்று ஆட்டத்தை
 கலைத்தார் .

49 ஆவது சுற்றில் போர்ஸ் இந்திய அணியின் ஆண்ட்ரியன் சட்டில்
 வெளியேறினார் .

55 ஆவது சுற்றில் ரெனால்டின் நிக் ஹைபீல்ட் 61 ஆவது சுற்றில்
 வில்லியம்
 காஷ்வோர்தின் பாஸ்டர் மால்டோனா வெளியேற 
67 ஆவது சுற்றில்  போர்ஸ் இந்திய அணியின் பால்டி ரெஸ்டா 
பயமுறுத்தினார் .
ஆனால் தப்பித்தார் .
இந்த ரேஸின் மிக அற்புதமான திறமையை வெளிபடுத்திய 
மைகேல் சூமேக்கர்  நான்காம் இடத்தை பிடித்து, தான் -Rain Master  
என்பதை நிரூபித்தார் .
எனவே இந்த முறையும் மொத்தம் 18 கார்கள் மட்டுமே 70 முழு சுற்று 
எல்லை கோட்டை தொட முடிந்தது.
போட்டி தடை பட்ட நேரத்தில் களத்தின் கேமராக்கள், மிகவும் 
அக்கறையுடன்,
 சலிக்காமல் இருக்க சுவாரசியமான காட்சிகளை படம் பிடித்து தள்ளியது 
-நல்ல விருந்து .

 போட்டியின் முடிவு ?

Jenson Button

போட்டியின் 69 ஆவது சுற்றில் மிக சிறந்த தன் மேர்சீடிஸ் FO 108 Y எஞ்சினின் முழுவேகத்தை பயன்படுத்தி( 1:16.956) ஜென்சன் பட்டென வெட்டளிடமிருந்த முதல் இடத்தை பறித்தார்- என்பது மிக வேக விறு விறுப்பு.


Sebastian Vettel
இரண்டாம் இடத்தை ரெட்புல் ரெனால்டின் செபாஸ்டியன் வெட்டலும் ,

Mark Webber

மூன்றாம் இடத்தை அதே அணியின் மார்க் வெப்பரும் பகிர்ந்து கொண்டார்கள்.

போட்டியின் முடிவில் சில மாற்றங்கள் இருந்தாலும் ரெட் புல் அணியின் முதல் இடத்தின்  வேகம் எந்த அணிக்கும் இன்னும் வரவில்லை என்பது சவால்தான் !

புள்ளிகளின் அடிப்படையில் நாம் தற்போதைய நிலவரம் பார்ப்போமா ?




அணிகள் 


நாம் மீண்டும் ஒரு street circuit ல் மிக வேகமாக வரும் ஜூன் 26 ஆம் தேதி சந்திப்போம்

Valencia Street Circuit

அவ்வளவுதானா ?

இல்லை .

நமக்காக காத்திருப்பவர்கள் நம்மை கோவித்து கொள்ள கூடாதல்லவா ?


பார்த்துவிட்டு போவேமே ! 

1 comment:

Sugumarje said...

நல்ல தொகுப்பு... நல்ல தகவல் வாழ்த்துகள்