பார்முலா 1ன் எட்டாவது போட்டி அழகிய ஸ்பெயினில் உள்ள வலன்சியா களத்தில் அரங்கேறியது .(Valencia Street Circuit) ஸ்பெயின் நாட்டில் நடக்கும் இரண்டாவது போட்டி ஆனால் இதன் பெயர் ஈரோப்பியன் கிராண்ட் பிரிக்ஸ் (2011 European Grand Prix)
Valencia Street Circuit
இந்த அழகிய கள வடிவமைப்புக்கு சொந்தக்காரர் உலகின் 22 கள வடிவமைப்பு கர்த்தா நமது ஹெர்மன் டில்கே ( Hermann Tilke) 25 வளைவுகளுடன் 460 அடி நீளம் அழகிய பாலத்தின் மேல்
(swing bridge) களம் அமைத்து இருப்பது மிக சிறப்பு அம்சம் .
வலன்சியா களம் 2008 லிருந்து பயன்பாடுக்கு வந்து விட்டது.
இதுவரை நான்கு போட்டிகள் இங்கு நடந்து விட்டது . 5.419 கி.மீ நீளமுள்ள, 57 சுற்றுக்களை கொண்ட
டம் முந்தி சென்றது, இந்தமுறையும் .
இந்த வலைப்பூஅழகிய வடிவமைப்பு- பள்ளி தோழரும்,சக பயணியுமான திரு .சுகுமார் அவர்களின் படைப்பு (*Sugumarje* *Caricaturist and Freelance Graphic Designer*)
Valencia Street Circuit
இந்த களத்தின் வேக நாயகன் டிமோ க்ளாக் (Timo Glock). கடந்த 2009 ல் டொயோட்டோ அணியிளிருந்தபோது (அதாவது அந்த அணியின் கடைசி வருடம்) சாதித்தார் .இப்போது இவர் விர்ஜின் காஷ்வோர்த் அணியில் இருக்கிறார் .
Timo Glock
போட்டியின் துவக்கம் ரெட் புல் ரெனால்டின் வசம் முழுமையாக இருந்தது அதாவது ரேஸ் (Grid)துவக்க நிலையில் செபாஸ்டியன் வெட்டல் ,மார்க் வெப்பர் இருவரும் முதல் இரு இடத்தில் இருந்தனர் .மூன்றாம் இடத்தில் மேக்ளரேன் மெர்சிடிசின் லீவிஸ் ஹேமில்டன் இருந்தார் .
முதல் சுற்றின் துவக்கத்திலேயே ஹெமில்டேன் ஐந்தாம் இடத்திற்கு தள்ளபட்டார் .
பய்ரலி (pirelli) கம்பெனி டயரின், ரேஸ் ட்ராக்கில் - உராய்வின் வாசம் பார்வையாளர்களை ஆக்கிரமித்தது.அந்த அளவுக்கு துவக்கம் பொறி பறந்தது .
ஆறாவது சுற்றில் ஏழாவதாக வந்து கொண்டு இருந்த ஜென்சென் பட்டன் ,ரோஸ் பெர்க் இடம் மாறி கொண்டனர் .
பதினாறாவது சுற்றில் ரெனால்ட் அணியின் விட்டலி பெட்னோவே
மைகேல் ஷுமேக்கரை முந்தி செல்ல முயற்சித்து ஷுமேக்கரின் காரின் முன்பகுதியை தாக்கினார் .வளைவில் முந்த கூடாது என்று ரேஸ் ட்ராக்கில் சொல்ல முடியாதே !
அதனால் தன்னுடைய எட்டாம் நிலையிலிருந்து இருபதாம் இடத்திற்கு ஏழு முறை சாம்பியன் பெற்ற களத்தின் சிங்கம் பதுங்கி விட்டது .மீண்டும் இருபத்தி ஏழாவது சுற்றில் பதினேழாம் இடத்திலுருந்து முன்னேறும்போது வில்லியம் காஷ்வோர்த்தின் - பாஸ்டர் மால்டோனவுடன் ரியர் வீல் மூலம் முத்தமிட்டு கொண்டனர் .(அப்போது தெரிந்தது சாம்பியனின் இன்னொரு முகத்தின் ஒரு பகுதி .) ரேஸின் முடிவில் பதினேழாம் இடத்தையே அடைய முடிந்தது,ஷுமேக்கரை துரதிருஷ்மைகேல் ஷுமேக்கரை முந்தி செல்ல முயற்சித்து ஷுமேக்கரின் காரின் முன்பகுதியை தாக்கினார் .வளைவில் முந்த கூடாது என்று ரேஸ் ட்ராக்கில் சொல்ல முடியாதே !
21 ஆம் சுற்றில் அலோன்சா மூன்றாம் இடத்திலுருந்து மார்க் வெப்பரை முந்தி இரண்டாம் இடத்தை பிடித்தார். போட்டியின் கடைசிவரை அலோன்சா தன்னுடைய இடத்தை பறிகொடுக்கவில்லை என்பது சிறப்பு அம்சம் .
போர்ஸ் இந்தியாவின் ஆண்ட்ரியன் சட்டில் ஒன்பதாம் இடம் பிடித்து ஆறுதல் தந்தார் விஜய் மல்லையாவுக்கு .
ஆஸ்த்ரேலியாவில் நடை பெற்ற முதல் போட்டியை நினைவுறுத்தினார் .
போட்டி முடிவுகள் மிக பெரிய மாற்றம் எதுவும் இல்லை .முதல் பத்து இடங்களுக்கான அனைத்து மாற்றங்களுமே ஏறக்குறைய முப்பது சுற்றுக்குள்ளேயே முடிவுக்கு வந்து விட்டது .
முடிவுகள் ?
முதல் இடத்தில் இருக்கும் செபாஸ்டியன் வெட்டல் ஜூலை மாதம் 3 ஆம் தேதி நடிகர் கார்த்தி -ரஞ்சனி திருமணம் தமிழகத்தில் நிறையபேருக்கு தெரியும் அன்று இன்னொரு முக்கியமான விஷயம்-ஜெர்மானிய இளம்புயல் செபாஸ்டியன் வெட்டல் தன்னுடைய 24 ஆம் வயதை தொடுகிறார் .அவருக்கு ஒரு வாழ்த்து சொல்லிக்கொள்வோம் .
அவர்தான் முதல் இடம் .
ஃபெராரியின் பெர்னாண்டோ அலோன்சா இரண்டாவது இடம்
மூன்றாவது இடமும் ரெட்புல் ரெனால்டின் மார்க் வெப்பர்
போட்டி முடிவுகள் .
இதுவரை
இதுவரை
1 comment:
:) நன்றிப்பா... என்னைப்பற்றி குறிப்பிட்டதற்கு...
தளம் இப்பொழுது தான் ஒரு சரியான ஓடு தளத்திற்கு வந்திருப்பதாக உணர்கிறேன்...
இனிமேல் ர்ர்ர்ர்ர்ரும்.. போல வேகத்தை எதிர்பார்க்கிறேன். செய்திகளின் தேடல் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. வாழ்த்துக்கள்
Post a Comment