இந்தமுறை பார்முலாவின்1 ன் ஒன்பதாவது சுற்று இங்கிலாந்தில் உள்ள சில்வர் ஸ்டோன் களத்தில் நடந்தது .இந்த களம் மறு சீரமைபுக்குபின் முதன்முறையாக பயன்படுத்த படுகிறது
306.139 கி.மீ நீளமுள்ள இந்த களம் 52 சுற்றுக்களை கொண்டது .
Jose Froilan Gonzalez led
ஆனால் மிக பழமை ஆதிக்கம் நிறைந்த களம் இது .ஜோஸ் ப்ரோய்லான் கோன்ஸாலேஸ்(Jose Froilan Gonzalez led ) மூலம் 1951 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ்சில் பெர்ராரி அணிக்கு அதன் முதல் வெற்றியை தொடங்கி வைத்தார் .
1951
அந்த வெற்றி சரித்திரம் நினைவு கூறும் வகையில் இங்கு இன்று பெறப்பட்ட வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது
2011
போட்டி, இங்கிலாந்து நேரப்படி மதியம் ஒரு மணிக்கு களத்தின் செய்தி தொகுப்புடன் தொடங்கியது .
இந்த முறை மார்க்வெப்பர் முதலாம் இடத்திலும் வெட்டல் இரண்டாம் இடத்திலும் அலோன்சா மூன்றாம் இடத்திலும்( Grid position)போட் டியை துவங்கினார்கள் .
வழக்கம்போல வெப்பரின் கார் அவரின மன வேகத்துக்கு இடம் கொடுக்காமல் வெட்டளிடம் பறி கொடுத்துவிட்டது முதல் சுற்றின் துவக்கத்தில்
நான்காம் சுற்றில் ஹெம்மில்டன் கள பாதையை விட்டு விலகிசென்று பயமுறுத்தினார் .
13 ஆம் இடத்தில் துவங்கிய மைக்கேல் சூமேக்கர் ஒன்பதாம் இடத்திற்கு ஒரு குறிக்கோளுடன் விரைந்து வந்து சப்பர் அணியின் ஜப்பானிய டிரைவர் கோபயாசியுடன் மோதி விளையாடி ,பத்து வினாடி பெனால்டி மூலம் தாமதித்து மீண்டும் பதினைந்தாம் இடத்தில் தொடங்கி,முடிவில் ஒன்பதாம் இடம் பெற்றார் .
26 ஆம் சுற்றில் நமது போர்ஸ் இந்தியா அணியின் -பவுல் டி ரெஸ்டா(paul di resta) கார் டயர் மாற்றும்போது ஒருவித குழப்பத்தில் அதிக நேரம் எடுத்துக்கொண்டதே மனித தவறின் மூலம் முடிவுகளில் மாற்றத்தின் விதை விதைக்க பட்டது .இதுவே முதல் தவறு அதனால் அவர்
15 ஆம் இடமே பெற முடிந்தது .
15 ஆம் இடமே பெற முடிந்தது .
28 ஆம் சுற்றில் மிக பெரிய இரண்டாவது தவறு நடந்தது .அது சாம்பியன் வெட்டளுக்கு நடந்தது .பிட் லேன்ட் டயர் மாற்றும்போது தடுமாற்றமும் ,தாமதமும் ஏற்பட்டது .அதனை மிக அழகாக பயன்படுத்திகொண்டது பெர்ராரி .
அதுவரை இரண்டாவது இடத்தில் இருந்த பெராரியின் அலோன்சா முதலிடத்தை பிடித்து விடாமல் கடைசிவரை தக்கவைத்து கொண்டார் .
39 ஆவது சுற்றில் ஐந்தாம் இடத்திலிருந்த மேக்ள்ரனின் ஜென்சென் பட்டனுக்கு காருக்கு டயர் மாற்றும்போது மூன்றாவது மிக பெரிய தவறு நடந்தது .
அது அவரின முன் பக்க வலது டயரின் வீல் நட் பொருத்தவில்லை .பிட் லேன் விட்டு கிளம்பும் முன் கவனித்தார்கள் .ஆனாலும் பாதுகாப்பு அற்ற பராமரிப்பு காரணமாக 5000 டாலர் அபராதம் பெற்று ,போட்டியிலிருந்தும் வெளியேறினார் .
46 ஆவது சுற்றில் 4 ஆவது இடத்திலிருந்த வெப்பர் 3 ஆம் இடத்திலிருந்த ஹெமில்ட்டனை பின்னுக்குதள்ளினார் .இறுதி வரை தக்கவைத்துக்கொண்டார் .
மற்றும் ஒரு வேடிக்கை சம்பவம் நடந்தது ரெட்புல் ரெனால்டின் வெப்பர் மூன்றாம் இடம் தாண்டி தன்னுடைய அணியை சார்ந்த வெட்டலை பலமுறை முந்த முயன்றது .அணியின் கட்டளைப்படி நடக்க முடியாது என்பது வெளிப்டையாக நிரூபித்தார் வெப்பர் .
லோட்டஸ் ரெனால்டின் -ஹயக்கி கோவளைனேன் இரண்டாவது சுற்றில் கியர் பாக்ஸ் பிரச்னையாலும் 10 ஆவது சுற்றில் அதே அணியின் ஜோர்னோ ட்ரூலி எஞ்சின் ஆயில் வெளியேற, களத்தை விட்டு அவரும் வெளியேறினார் .
23 ஆவது சுற்றில் சப்பர் அணியின் காமுயை கோபயாசி ஆயில் லீக்கில் வெளியேறினார் .அவரை தொடந்து டோரோ ரோசொவின் செபாஸ்டியன் பியுமி கார் டயர் பஞ்சராக அவரும் வெளியேறி முடிவின் மொத்தத்தில் 19 கார்கள் மட்டுமே இருந்தது
அந்த 19 ஆவது கார் ஹிஷ்பானிய அணியில் நமது நரேன் கார்த்திகேயனுக்கு மாற்றாக வந்த டேனியல் ரிகார்டோவின் கார் .
பார்முலா 1 பந்தயத்தை பொறுத்தவரை
மனித திறமை + தொழில்நுட்பம் = வெற்றி.
அதில் இந்தமுறை ரெட்புல் ரேனால்டின் மனித திறமை சில நொடிகளில் தவறிப்போனதால் வெற்றி என்பதன் முகவரி பெராரி அணிக்கு சொந்தமாகிவிட்டது .
இரண்டாம் இடம் வெற்றி பாதையின் தொட முடியாத தூரத்திற்கு போய் கொண்டு இருக்கும் ரெட் புள் அணியின் செபாஸ்டியன் வெட்டல் .
மூன்றாவது இடமும் அந்த அணியின் மார்க் வெப்பர் .
அணிகளின் நிலை புள்ளி பட்டியல்
Team | Pts | |
---|---|---|
1 | Red Bull | 328 |
2 | McLaren | 218 |
3 | Ferrari | 164 |
4 | Mercedes | 68 |
5 | Renault | 65 |
6 | Sauber | 33 |
7 | Toro Rosso | 17 |
8 | Force India | 12 |
9 | Williams | 4 |
10 | Lotus | 0 |
11 | HRT F1 | 0 |
12 | Virgin | 0 |
அணிகளின் நிலையை விட அணிந்து இருக்கும் ஆடை தேசிய கொடி.
அடுத்த போட்டி -வரும் ஜூலை 24 ஆம் தேதி
ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிக்காக நாம் காத்திருப்போம் ....
No comments:
Post a Comment