உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Friday, September 2, 2011

ஒரு மாய வலையிலிருந்து,, ரெட் புல் ரெனால்ட் அணி


பார்முலா 1 ன் போட்டி ஐரோப்பா கண்டத்திலிருக்கும் பெல்ஜியத்தில் உள்ள Circuit de Spa-Francorchamps களத்தில் நடந்தது.

அழகிய பிரசெல்ஸ் .
ரண்டாம் உலகப்போரின்(1939-45 )காரணியான நாஜி ஜெர்மனின் எல்லையை தொட்டு கொண்டு இருக்கும் பெல்ஜியத்தில் டச்சு ,பிரெஞ்சு மற்றும் ,ஜெர்மன் ஆகிய மூன்றுமே ஆட்சி மொழியாகும் .அழகிய பிரசெல்ஸ் நகரமே இந்நாட்டின் தலை நகரமாகும் .
இங்குள்ள மறுசீரமைக்கப்பட்ட களம் ,கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இன்றுவரையிலும் ஐந்து போட்டிகளை சந்தித்துள்ளது .ஆனால் மறு சீரமைப்புக்கு முன்னர் 42 போட்டிகள் கடந்த 1950ஆண்டிலிருந்து நடந்துள்ளது என்பது முக்கியமான விஷயம்.  


மிகநீண்ட தூரமான 7.004 கி.மீ நீளமுள்ள களம் 44 சுற்றுக்களை கொண்டது .மொத்த போட்டி தூரம் 308.052 கி.மீ .2009 ஆம் ஆண்டு ரெட்புல்லின்


செபாஸ்டியன் வெட்டல் இந்த தூரத்தை 1:47.263 நிமிடத்தில் கடந்ததே சாதனை வேகம் .


ந்த பெல்ஜியன் களம் மிக முக்கியமான ஒரு ஓட்டுனரை கடந்த 1991 ல் ஃபார்முலா 1 ன் ஜோர்டான் அணிக்காக அறிமுகபடுத்தியது என்பது பொன் எழுத்துக்களால் எழுதபட்டது .

1991 ல் இருபத்திரண்டு வயது சுமி 

அவர் திரு .மைக்கேல் ஷூமேக்கர் என்ற ஜாம்பாவான் .இருபது வருடங்களாக பேசப்படும் ஒரு பெயர் அது- அவர் பெயர்தான் (.கடந்த 2007-2009 மூன்று வருடங்கள் ஃபெர்ராரியின் டெஸ்ட் டிரைவராக மற்றும் ஆலோசகராக பணியாற்றினார் ),இதுவரை 91 வெற்றிகளும் 68 முறை இரண்டாம் மற்றும் மூன்றாம் இடமும் ஏழு முறை சாம்பியன் பட்டமும் பெற்ற ஒரே ஒரு டிரைவர் .F1 களம் அவருடைய வசிக்கும் அறை (Living Room) என்று வர்ணிக்கும் அளவுக்கு அவரின அனுபவம் நீண்டது.


கடந்த மே மாதம் வரையிலான கணக்கெடுப்பில் ஒரு ஆண்டு வருமானத்தில்-விளையாட்டு துறையில் முன்னிலையில்அதாவது உலகில் அளவில் ஒன்பதாம் இடத்திலும், பார்முலா டிரைவர்களில் முதல் இடத்திலும் நம் அண்ணன்தான் இருக்கிறார் .$ 34 மில்லியன் வருட வருமானம் .

ந்த முறை தகுதி சுற்றிலேயே அனல் பறக்க நான், நீ என போட்டிபோட்டு கொண்டனர் .அதில் முதல் இருபது நிமிட தகுதி சுற்றில் மைக்கேல் ஷூமேக்கரின் மேர்சீடிஸ் தொண்ணூறு நிமிடத்தில் விபத்துக்குள்ளானது 



.என்ன நடந்தது என அறியும் முன்னரே கார் இழுத்துசெல்ல பட்டது போல சுவரில் மோதியது . விபத்துக்கான காரணம் -விசாரணையில் இருக்கிறது .அதனால், ஷூமேக்கரின் போட்டியை கடைசி இடமான 24ஆம் இடத்திலிருந்து தொடங்கினார் .


கடந்த மூன்று போட்டிகளில் முதல் இடத்தை தவற விட்ட செபாஸ்டியன் வெட்டல் முதல் இடத்தில் துவங்கினார் .இரண்டாவது இடத்தில் மேக்ளரனின் லீவிஸ் ஹெமில்டனும் ,மூன்றாம் இடத்தில் மார்க் வெப்பரும் துவக்கினார்கள் .


பெல்ஜிய நேரப்படி மதியம் இரண்டு மணிக்கு போட்டி துவங்கியது .....

போட்டியை மழை வரவேற்றது .மிகவும் எதிர்பார்க்க பட்ட மழை லேசாக தலை காட்டிவிட்டு சென்றது .
முதல் சுற்றின் துவக்கம் மிகபல மாற்றங்களை தந்தது .
முதல் இடத்திலிருந்த வெட்டலை ஐந்தாம் இடத்திலிருந்த ரோஷ்பெர்க் பின்னுக்கு தள்ளினார் .இரண்டாம் இடத்திலிருந்த ஹேமில்டன் நான்காம் இடத்திற்கும் ,மூன்றாம் இடத்தின் வெப்பர் எட்டாம் இடத்திற்கும் பின்தள்ள பட்டனர் .
டோரோ ரோசோ அணியின் ஜெயமே அல்குஎர்ஸுஅரி (jaime alguersurai ) ரெனால்டின் புருனே சென்னாவுடன் மோதி வெளியேறினார் .
இந்த ஆண்டில் FIA அனுமதித்த Drag Reduction System. தொழில் நுட்பத்தில் ரெட்புல் மிக அதிவேக வளர்ச்சியை தன்னகத்தே அடைந்து இருப்பது தெளிவாக - ஒவ்வொரு போட்டியிலும் தெரிகிறது .

மூன்றாவது சுற்று வரை போட்டியில் முதன் முறையாக நிக்கோ ரோஷ்பெர்க் வழிநடத்தினார் .தொழில் நுட்ப அடிப்படையில் மிக அபார நிலையில் இருக்கும் ரெட்புல் ரெனால்டின் முன் ரோஷ்பெர்க் தாக்கு பிடிக்க முடியாமல் பறிகொடுத்தார் .

 Drag Reduction System.

காற்றியக்கவியலின்(Aerodynamics ) ஒவ்வொரு முன்னேற்ற படியும் ஃபார்முலா 1  போட்டிகளில் பரிசோதிக்க படுகிறது அதன் இன்னொரு முகமான Drag Reduction System. போட்டிகளின் முடிவை பெரிதும் நிர்ணயம் செய்துவருகிறது .அதோடு டயர்களை தயாரிக்கும் ரப்பர் தொழில் நுட்பம் கைகோர்த்து கொண்டு மிக பல முடிவுகளை மாற்றும் திறன் அடைந்துள்ளது .
ஆறாம் சுற்றில் வெட்டல் மற்றுமொரு soft Tyre செட்டை மாற்றிகொண்டார் .அதனால் ஒன்றிலிருந்து ஒன்பதாம் இடத்தில் தன் பயணத்தை தொடர்ந்தார் 
அதே சுற்றில் டோரோ ரோசொவின் செபாஸ்டியன் புமி விபத்துக்கு உட்பட்டு வெளியேறினார் ஒரே அணியின் இரு வீரர்களும் வெளியேறி விட்டனர் .
எழாவது சுற்றில் ஆலோனசாவும் அவரை அடுத்து ஹெமில்டனும் ரோச்பெர்க்கை மிக சாதரணமாக பின்னேற்றிவிட்டனர் .
பெர்ரரியின் அலோன்சா நாங்களும் சளைத்தவர்களா அல்ல என்பது போல 
321 கி. மீ வேகத்தில் படம் காண்பித்தார் .
எழாவது சுற்றில் ஆலோனசாவும் அவரை அடுத்து ஹெமில்டனும் ரோச்பெர்க்கை மிக சாதரணமாக பின்னேற்றிவிட்டனர் .
பெர்ரரியின் அலோன்சா நாங்களும் சளைத்தவர்களா அல்ல என்பது போல 321 கி.மீ வேகத்தில் படம் காண்பித்தார் .
பதிமூன்றாவது சுற்றில் சப்பர் பெர்ரரியின் கமுய் கோபயாஷி
 ( Kamui Kobayashi) ஏற்கனவே   
விட்டலி பெட்ரோவினால் ஆதிக்க போட்டியில் இருக்கும்போது லீவிஸ் ஹெமில்டனுடன்  
மோதி அவரை போட்டியிலிருந்து வெளியேற்றிவிட்டார் .இதனால் போட்டியில் மூன்று சுற்றுக்கு Safety car வரவழைக்க பட்டது . 
அதே சுற்றில் ஹிஸ்பானிய அணியின் டேனியல் ரிக்கியார்டோ ஒரு அதிகபட்ச கார்களின் மோதல்களில் வெளியேறினார் .
பதினெட்டாம் சுற்றில் இரண்டாம் இடத்தில் இருந்த வெட்டல் முதலிடத்தை கைப்பற்றினார் .


இருபத்தி இரண்டாம் சுற்றில் எட்டாம் இடத்தில் இருந்த ஜென்சன் பட்டன் ஏழாம் இடத்தின் 
ஷூமேக்கரின் காரையும் அடுத்த சுற்றில் ஆண்ட்ரியன் சுட்டிளையும் ,இருபத்தி ஐந்தாவது சுற்றில் பிலிப் மாசாவையும் நாற்பத்தி இரண்டாவது சுற்றில் ஆலோன்சாவையும் முந்தி மூன்றாம் இடத்தை கடைசிவரை ,அற்புதமாக தக்க வைத்துகொண்டார் (நீண்ட துரத்தல் ....).

அவரை போல மைக்கேல் ஷுமேக்கரும் இருபதினாலாவது இடத்தில் தொடங்கிய வேகத்தை முதல் சுற்றில் பதினைந்தாவது இடத்தையும் இருபத்தி இரண்டாவது சுற்றில் ஏழாம் இடம் வரை முன்னேறி முப்பத்தி நாலாவது சுற்றில் ஆறும் ,நாற்பத்தி இரண்டில் ஐந்தாம் இடம் என்று நீண்ட துரத்தலுக்கு பின் ஐந்தாம் இடம் போதும் என முடித்துக்கொண்டார் .

இருபத்தி ஏழாவது சுற்றில் சப்பர் அணியின் செர்ஜியோ பெரேஸ் வெளியேறினார் .
பிறந்த நாள்.

முப்பத்தி ஏழாம் சுற்றில் மிக அற்புதமான வேகத்தில் வெப்பர் இரண்டாம் இடத்திலிருந்த அலோன்சாவை பின்னுக்கு தள்ளி கடைசிவரை இரண்டு போதும் என வெற்றிபெற்றார் .அவருக்கு ரேசிர்க்கு முந்தய நாள்(27.08.2011) பிறந்த நாள்..

பெல்ஜிய நாட்டின் ஒரே குடிமகன் விர்ஜின் காஸ்வோர்த்தில் உள்ள ஜெரோமோ அம்ப்ரோசியோ எந்த புள்ளியும்( இன்று கூட) எடுக்காதது அந்த மக்களின் ஏமாற்றம் .


போன முறை ஹங்கேரியில் நடந்த ரேசில் போர்ஸ் இந்தியாவின் பால்டி ரெஸ்டா எழாம் இடம் வந்தார் .இந்தமுறை ஆண்ட்ரியன் சட்டில் அந்த இடத்தை தக்க வைத்துகொண்டார் .


கடந்த மூன்று போட்டியில் கடந்துபோன முதல் இடத்தை பிடித்து எட்டாத இடத்தை தக்கவைத்து கொண்டு இருக்கிறார் வெட்டல் .அவர் இந்த பெல்ஜியன் போட்டியில் முதல் இடம் வந்தது -மொத்த அணிக்கே நிம்மதி பெருமூச்சாக இருக்கும் .ஒரு மாய வலையிலிருந்து  விடுபட்ட உற்சாகம் அந்த அணியில் இருந்தது .

ன்னும் ஏழு போட்டிகள் உள்ள நிலையில் அணிகளின் நிலையில் ஒரே நேர்கோடாய் ரெட் புல் ரெனால்ட் அணி(426) முதல் இடத்தை முட்டி தள்ளி யாரும் அடக்க முடியாத இரு காளையாக இருக்கிறது .
இரண்டாம் இடம் தவற விட கூடாது என்பது போல  பெர்ராரி(231) அணியும் ,மெக்லரண் அணியும்(295) தத்தளித்த நிலை .



Constructors' world championship
POSITION
TEAM
POINTS
1
426
2
295
3
231
4
98
5
68
6
35
7
32
8
22
9
5
10
0
,டிரைவர்களை பொறுத்தவரை வெட்டல் முதலிடம் (259) அடுத்த நிலையில் வெப்பர் (167),அலோன்சா (157), பட்டன் (159),ஹேமில்டன்  (146) எனவே இரண்டாம் இடம் தெளிவாக இல்லை .வரும் போட்டிகள் அதுவும் தொடர்ந்து ஐந்து போட்டிகள் தீர்மானிக்கலாம். 
நான் சொல்வது உண்மையாகலாம் !


Drivers' world championship
POSITION
COUNTRY
DRIVER
POINTS
1
Ger
259
2
Aus
167
3
Spa
157
4
GB
149
5
GB
146
6
Brz
74
7
Ger
56
8
Ger
42
9
Rus
34
10
Ger
34



இன்றைய நம் காதல் ஜோடி மார்க் வெப்பர்
Mark-Webber_Ann-Neal

அடுத்த போட்டி வேகத்தின் பிறப்பிடம் இத்தாலியில் வரும் செப்டெம்பர் 11 .
 அழகிய இத்தாலியை பார்க்க எல்லோரும் ஆர்வமுடன் இருப்போம் .போட்டி அனல் பறக்கும் .சந்தேகமில்லை .
அடுத்த வேகத்தில் உங்களுடன் ,நானும்... .




No comments: