உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Friday, September 30, 2011

பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகளில் இன்று இரண்டு முகம் உண்டு .ஒன்று தான் மற்றநாடுகளில் முதலீடு பண்ணுவதன் மூலம் முக்கியத்துவம் பெறுவது(சீனா) .மற்றொண்டு பிற நாடுகளை தன் நாட்டில் முதலீடு செய்ய தூண்டுவது .இந்த முகம் சிங்கப்பூருக்கு சொந்தமானது .


அதனால்தான் தென்கிழக்கு ஆசியாவில் 63 தீவுகளை கொண்ட உலகின் மூன்றாவது மிக சிறிய நாடான சிங்கப்பூர், உலகின் முதல் மூன்று எண்ணெய் சுத்திகரிப்பு மையம்,உலகின் மிக பெரிய எண்ணெய் ரிக் உற்பத்தி உருவாக்கும் நாடு, உலகின் இரண்டாவது சூதாட்ட சந்தை ,ஆசியாவின் நான்காவது வர்த்தக தளம் ,  மேலும் உலகின் ஐந்தாவது ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை கொண்ட துறைமுகம் எத்தனை வளர்ச்சி
1965 ஆகஸ்ட் 9 ஆம் தேதி விடுதலை பெற்று உள்கட்டமைப்பிலும்,, வெளியுறவு கொள்கையிலும் தாராள மயமக்களிலும் ,தன் சுய கலாச்சாரத்தையும் விட்டுகொடுக்காமல் உலகின் பல முன்னேற விரும்பும் நாடுகளின் வழிகாட்டியாக சிகப்பூர் ஒளிர்கிறது.


அந்த தேசத்தில் மட்டும்தான் பார்முலா 1 போட்டிகள் இரவில் நடத்தபடுகிறது .இதிலும் ஒரு அழகிய பொதுவான உள்நோக்கம் இருக்கிறது .ஐரோப்பிய நாடுகளின் நேர வித்தியாசங்களோடு ஒத்து போவதுவும் ,இரவில் நடத்தபடுவது அனைத்து தரப்பு மக்களையும் தன் தேசத்தில் கவரலாம் என்ற எண்ணமே காரணம் .ஆனால் அதுவும் அவ்வளவு சுலபமான வேலை அல்ல .

இரவு நேரத்தில் போட்டியில் டிரைவர்களின் காணொளி பிரச்சினை இல்லாமல் அதே நேரம் மின்சார தடைக்கான மாற்று ஏற்பாடு என ஒரு தனி யுத்ததிட்டமே நடந்து இருக்கிறது.

Lux Meters

பொதுவாக நாம் பார்க்கும் ஒளி அளவை லக்ஸ் அளவில் (Lux Meters) சொல்வார்கள் .உங்கள் பார்வையில் பொதுவாக மிக பளீரென தெரிவது ஹோட்டல் வரவேற்பு அறைகள் அதன் அளவு 700 - 1500 lux power இதனையே ஒரு தொழில்நுட்ப படம் வரைபவர்க்கு 1500 - 3000 lux power தேவைப்படுகிறது 



.அந்த 3000 lux power என்பது ஒரு சாதாரண ஒளியை நான்கு மடங்கு பெரிதுபடுத்தி பார்பதற்கு சமம் .இதனை போட்டி களத்தில் உருவாக்க 108423(108 கி .மீ) மீட்டர் கேபிள்கள் மூலம் 240 தற்காலிக ஸ்டீல் ப்ய்லோன்ஸ் (தூண்கள்)அமைத்து அதில் 1600 லைட் பொருத்தி இதல்லாது LED Boards,பத்து கிலோவாட்ட்ஸ் 12  ட்வின் பவர் டீசலில் இயங்கும் சத்தமில்லாத ஜெனரேட்டர்கள் .சுமார் 3180000 வாட்ஸ் சக்தி பயன்படுத்தப்பட்டது .
இந்த ஒளி அமைப்பினை நிறுவியது இத்தாலியின் -Valerio Maioli S.p.a நிறுவனம் .அதை சரிபார்த்து தர நிர்ணயம் செய்தது -Paul Ricard High Tech Test Track   in Le Castellet -France.



அனைத்திலும் வித்தியாசம், சிறப்பு- சிங்கப்பூர் என்பதே இந்தவிசயதிலும் நிரூபித்துவிட்டது விட்டது. அது இந்த களம் மற்ற உலக களம்போல இல்லாமல் எதிரிடையான (Anti Clockwise) 61 சுற்றுக்களை கொண்டது.

Kimi Raikkonen


மொத்த அளவு 309.306 கி.மீ, போட்டி களத்தின் ஒரு சுற்றின் நீளம் 5.073 கி .மீ இந்த தூரத்தை 1:45.599 நிமிடநேரத்தில் கிமிரேயகொனான் பெர்ரரியின் F2008 மூலம் கடந்ததே இன்று வரையான சாதனை .மிக சவாலான களமாக இதனை சொலவதற்கு இரவு போட்டி மட்டுமல்ல ,23 மிக கடினமான வளைவுகள் சுவர்களை ஒட்டிய களம் ,தொடர் திருப்பங்கள் ,அத்தனை விசயமும் தாண்டி விபத்து ஏற்படாமால் வெற்றிபெறுவது சவால் என்பதை தவிர வேறு எப்படி சொல்வது ?

அப்படிப்பட்ட சிங்கப்பூரின் Marina Bay Street Circuit ல் சென்ற ஞாயிறு (25.09.2011) அன்று சிங்கப்பூர் நேரம் இரவு 8 மணி ,இந்திய நேரப்படி மாலை ஐந்து முப்பதுக்கு போட்டி ஆரம்பம் ஆனது. 
வெளிச்ச வெள்ளத்தில் தோணி ஆற்றில் மிதப்பது போல ஒவ்வொரு கார்களும் மின்னி தெறிக்க போட்டி வரிசையில் நின்றது கார்கள் .




1.செபாஸ்டியன் வெட்டல் ,2.மார்க் வெப்பர்,(Red Pull) 3.ஜென்சன் பட்டன் ,4.லீவிஸ் ஹேமில்டன் (Meclaren Mercedes),5.பெர்னாண்டோ அலோன்சா ,6.பிலிப் மாசா (Ferrari).7.நிக்கோ ரோச்பெர்க் 8.மைக்கேல் ஷூமேக்கர் (Mercedes) 9.ஆண்ட்ரியன் சூட்டில், 10.பால்டி ரெஸ்டா (Force India). 
இவ்வளவு நீளமான பட்டியலுக்கு காரணம் அழகிய ஒவ்வொரு அணிக்கு இருவர் என்ற சரியான வரிசை அமைந்தது  




முதல் சுற்று ......
ஐந்து விளக்குகளும் எரிந்து அணைந்தது ....பாய்ந்தன கார்கள் .வெட்டல் முதலிடத்திலும் பட்டன் இரண்டாவது இடத்திற்கும் ,அலோன்சா மூன்றாவது இடத்திற்கும் மாறினார்கள .வழக்கம் போல வெப்பர் தடுமாற நாலாம் இடத்தில் தொடர்ந்தார் .
ரோச்பெர்க்கின் கார் வளைவுகளை மதிக்காமல் தவ்வி பயமுறுத்தியது .
மூன்றாவது சுற்று ...
DRS- தொழில்நுட்பம் பயன்படுத்த அனுமதிக்க பட்டது .
ஒன்பதாவது சுற்று ..
விர்ஜின் காஸ்வோர்த்தின் திமோ கிளாக் விபத்தில் வெளியேறினார் 
பதினோராவது சுற்று ..
வெப்பர் நான்காம் இடத்திலிருந்து முன்னுக்கு சென்ற அலோன்சாவை பின்னுக்கு தள்ளினார் .அலோன்சா டயர் மாற்ற வந்து விட்டார் .ஷூமேக்கரும் டயர் மாற்றம் .சுவரின் ஓரத்தில் மோதி விர்ஜின் திமோ கிளாக் கார் சேதப்பட்டது.
பனிரெண்டாவது சுற்று ...
ஹெமில்ல்டன் -மாசா மோதி விளையாடினார்கள் .மாசா காரின் டயர் தர தரவென தரையில் உரசி வந்தது .ஹேமில்டன் முன்பகுதியில் சேதமான wing ஐ மாற்றினார் .
தவறு ஹேமில்டன் மேல் .பதினாறாவது சுற்றில் Drive Through penalty முறையில் தண்டிக்கப்பட்டார் 
பதினாலாவது சுற்று ..
மைகேல் ஷூமேக்கேரும் சப்பர் அணியின் கொபயாசியும் லேசாய் மோதி பார்த்தார்கள் .
பதினைந்தாவது சுற்று ..
வெட்டல் மற்றும் பட்டன் டயர் மாற்ற வந்தார்கள் .
பத்தொன்பதாவது சுற்று ..
அலோன்சா நான்காம் இடத்திலிருந்து முன்னேறி மூன்றாம் இடம் தொடர ..
இருபத்தி மூன்றாவது சுற்று.. 
முதலிடத்தில் தொடர்ந்து கொண்டு இருக்கும் வெட்டளுக்கும்-இரண்டாம் இடத்து பட்டனுக்கும் 16:25 வினாடி இடைவெளி நீண்டு இருந்தது 
.


இருபத்தி ஒன்பதாவது சுற்று.. 
சப்பர் பெர்ரரியின்- செர்ஜியோ பெர்சின் காரை ஏழாம் வளைவில் முந்தி செல்ல முயன்ற மைக்கேல் ஷூமேக்கர் அந்த காரின் பின்பகுதில் மோதி, ஷூமேக்கர் காரின் முன்பகுதி மட்டும் பறந்து வந்து சுவரில் மோதி விபத்துக்குள்ளானது . வெளியேறினார் ஏழுமுறை உலக சாம்பியன் எட்டாவது வளைவில் .
முப்பத்தி ஒன்று முதல் முப்பத்தி மூன்றாவது சுற்று வரை ...
Safety car ஷூமேக்கேரின் உடைந்த காரின் பகுதிகளை அப்புறபடுத்த வந்தது .
முப்பத்தி நாலாவது சுற்று ..
வெப்பர் நாலாம் இடத்திலிருந்து மூன்றாம் இடம் வந்து அலோன்சாவை பின்னுக்கு தள்ளினார் .ஆலோன்சாவின் wings ஐ ("give you விங்க்ஸ்"-ரெட் புல் ரெனால்ட் Logo) பறித்து கொண்டார் போல !
நாற்பத்தி ஏழாவது சுற்று ..
லோட்டஸ் ரெனால்டின் -ஜர்னோ டருளி கியர் பாக்ஸ் பிரச்சனையால் வெளியேறினார் .
முப்பத்தி ஆறாவது சுற்று ..முதல் ஐம்பத்தி ரெண்டாவது சுற்று வரை பல போட்டியின் கேமராக்கள் கண் பதித்த இடம் ஹேமில்டன் .
ஆம் அத்தனை வேகம் ,அததனை ஓவர் டேக்கிங் என கலக்கி விட்டார் .
ஐம்பத்தி ஆறாவது சுற்று ..
டோரோ ரோசொவின் ஜெய்மி அல்குச்சுரை விபத்தில் வெளியேறினார் .

அறுபத்தி ஒன்றாவது சுற்று ....கடைசி சுற்று .



ஆம். செபாஸ்டியன் வெட்டல் என்ற ஜெர்மானிய இருபத்திநான்கு வயது இளம் புயல் தன்னுடைய 2011 ன் பார்முலா 1 ன் உலக சாம்பியன் நான்தான் என சொல்லிவிட்டார்.

இதுவரை நடந்த பதினான்கு போட்டிகளில் 309 புள்ளிகளை பெற்று மிக முன்னிலையில் உள்ள வெட்டலை யாரும் தொடமுடியாது என்பது உறுதி .
ஆனால் கணித முடிவுகள் படி வெட்டல் 310 புள்ளி இருந்திருந்தால் சிங்கப்பூர் போட்டி முடிந்தவுடன் மிக பெரிய விழா, ரெட்புல் அணியால் நடந்து இருக்கும் காரணம் இவரை அடுத்த புள்ளியில் உள்ள அணியின் ஜென்சன் பட்டன் 185 புள்ளியில் இருக்கிறார் அவர் இனி வரும் ஐந்து போட்டிகள் தொடர்ந்து வெற்றி பெற்றாலும் கூட ! (அதாவது வெட்டல் ஒரு புள்ளி கூட அடுத்து எடுக்காமல்!! ) 310 புள்ளிகளை பெற்று முதலிடம் வந்து விடுவாராம் .அதனால் அதிகாரபூர்வ அறிவிப்பை FIA அறிவிக்க இன்னும் ஒரு புள்ளி வெட்டல் சாம்பியன் என்ற முற்று புள்ளியாக தொக்கி நிற்க்கிறது.அடுத்த ஜப்பானின் போட்டி நடக்கும் -Suzuka International Racing Course களத்தில் இது உறுதி செய்யப்படும் .


இது ஒருபுறம் இருக்க ரெட்புல் அணி வெள்ளை நிற T-சர்ட்டில் வெட்டல்ஸ் லோகோவுடன்  “2011 F1 drivers’ world champion”.என்ற வார்த்தையுடன் € 29.95 (நம்முடைய மதிப்பில் சுமார் ரூ 2095/-) விற்பனைக்கு தயாராகி வருகிறது .


Nigel Mansell

இன்னுமொரு சாதனை இந்த சிங்கப்பூர் வெற்றி உறுதி செய்திருக்கிறது அதாவது இதுவரை இங்கிலாந்தின்- நிகெல் மன்செல்லின்(Nigel Mansell) சாதனையான 1992 ல் வில்லியம்ஸ் ரெனால்ட் அணிக்காக் கலந்து கொண்ட பதினாறில்- பனிரெண்டு போட்டிகளில் வென்று(முதல் இடம்-9,இரண்டாம் இடம்-3=12) சாதனை பண்ணியிருக்கிறார் .அதனை நம் வெட்டல் முறியடித்து (முதல் இடம் -9,இரண்டாம் இடம்-4=13)இதுவரை நடந்த பதினான்கில் பதிமூன்றில் வெற்றிபெற்று விட்டார் (இன்னும் ஐந்து போட்டிகள் இருப்பது வேறு விசயம்).சாதனை விசயத்தில் செபாஸ்டியன் இப்போது சபாஷ்டியன் ஆகிவிட்டார் .

இரண்டாவது இடம் ஜென்சன் பட்டன் .



மூன்றாவது இடம் மார்க் வெப்பர் .



டிரைவர்களின் நிலை .


Driver          Pts
1 Sebastian Vettel          309
2 Jenson Button         185
3 Fernando Alonso 184
4 Mark Webber         182
5 Lewis Hamilton         168
6 Felipe Massa           84
7 Nico Rosberg           62
8 Michael Schumacher   52
9 Vitaly Petrov           34
10 Nick Heidfeld           34
11 Adrian Sutil           28
12 Kamui Kobayashi   27
13 Paul di Resta           20
14 Jaime Alguersuari   16
15 Sébastien Buemi   13
16 Sergio Pérez             9
17 Rubens Barrichello    4
18 Bruno Senna            2
19 Pastor Maldonado    1
20 Pedro de la Rosa    0
21 Jarno Trulli            0
22 Heikki Kovalainen    0
23 Vitantonio Liuzzi    0
24 Jérôme d'Ambrosio    0
25 Timo Glock            0
26 Narain Karthikeyan    0
27 Daniel Ricciardo           0
28 Karun Chandhok           0

அணிகளின் நிலை .
Constructor
1 Red Bull-Renault          491
2 McLaren-Mercedes   353
3 Ferrari                  268
4 Mercedes                  114
5 Renault                   70
6 Force India-Mercedes    48
7 Sauber-Ferrari             36
8 Toro Rosso-Ferrari     29
9 Williams-Cosworth       5
10 Lotus-Renault               0
11 HRT-Cosworth                0
12 Virgin-Cosworth                0
  
வானவேடிக்கைகள் மினு மினுக்க போட்டி நிறைவு பெற்றது .

நம் அடுத்த வேகம் ஜப்பானில் 09-10-2011 அன்று நாம் சந்திக்கலாம் 



No comments: