உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Friday, October 14, 2011

2011ன் உலக சாம்பியன் செபாஸ்டியன் வெட்டல்.

லகத்தின் பல புராண கற்பனை கதைகளில் பீனக்ஸ் (Phoenix) பறவையை பற்றி நாம் அறிகிறோம் .எரியும் நெருப்பில் தானே விழுந்து முழுதும் சாம்பலாகி அந்த சாம்பலிலிருந்து மீண்டும் உயிர்த்தெழும் அழியாத தன்மையை விளக்கும் ஒரு அற்புதமான உவமை பீனக்ஸ் .இந்த உவமையின் முழு பொருளும் "நிகோன் கொகு அல்லது "நிப்பொன் கொகு" (ஜப்பானிய மொழி )எனப்படும் ஜப்பானுக்குத்தான் பொருந்தும்.

Phoenix Bird

6852 தீவுகளின் சங்கமமாக திகழும்ஆசிய கண்டத்திலுள்ள ஜப்பானின் முதல் சோதனை அமெரிக்காவின் 33 ஆவது ஜனாதிபதி ஹாரி எஸ் ட்ருமன் மூலம் 1945 ல் வீசப்பட்ட லிட்டில் பாய், ஃபேட் மேன் அணுகுண்டுகள் மூலம் வந்தது ,அப்புறம் இயற்கை சீற்றங்களான பூகம்பங்கள் ,சுனாமி ( Tsunami-இந்த பெயர் கூட ஜப்பானிய மொழியில்தான் உருவானது ) எத்தனை சோதனைகளை கடந்து நிற்கிறது ஜப்பான் .அதர்க்கு முதல் காரணம் எதையும் தாங்கி அதிலிருந்து வெளிவரும் அவர்களின் உழைப்பு அந்த உழைப்புக்கு உறுதுணையாக இருக்கும் அவர்களின் பௌத்த மதம் .


கடந்த 09-10-2011 ல் ஜப்பானின் -Suzuka International Racing Course களத்தில் ஃபார்முலா 1 ன் பதினைந்தாவது போட்டி நடந்தது .2003 ஆம் ஆண்டிலுருந்து இதுவரையிலும் ஏழு போட்டிகள் நடந்துள்ளது .



களத்தின் நீளம் 307.471 கி.மீ . பதினெட்டு வளைவுகளை கொண்ட இந்த களத்தின் வேக நாயகன் மெக்லரண் மெர்சீடிசின் கிமி ரேயகொனேன் கடந்த 2005 ல் ஒருமுறை 1:31.540 நிமிடத்தில் கடந்ததே சாதனையாக இருந்து வருகிறது .



இந்த களம் ஒரு முக்கியமான விஷயத்தை உறுதி செய்ய போகிறது  .அது ரெட்புல் அணியின் செபாஸ்டியன் வெட்டல் உலக சாம்பியன் என்ற  அதிகாரபூர்வ அறிவிப்பு .கடந்த போட்டியில் ஒரு புள்ளியில் தனது வெற்றியை கொண்டாட காத்திருந்த அவரின அணி இந்தமுறை களைகட்டியிருந்தது .எங்கும் ரெட்புல் ரெனால்டின் கொடிகளும் ரசிகர்களின் உற்சாக வரவேற்ப்பு காத்திருந்தது .... 


இந்திய நேரப்படி பகல் 11:30 க்கும் ,ஜப்பானின் நேரப்படி பிற்பகல் மூன்று மணிக்கும் போட்டி ஆரம்பித்தது ....

முதல் வரிசையில் ரெட்புல்லின் செபாஸ்டியன் வெட்டல் இரண்டாம் இடத்தில் வெள்ளிகிழமை மற்றும் சனிக்கிழமை பயிற்சி போட்டியிலும் முதலிடத்தில் இருந்த மெக்ளறேன் மெர்சீடிசின் ஜென்சன் பட்டன் மூன்றாம் இடம் அதே அணியின் லீவிஸ் ஹேமில்டன் துவங்கினார்கள் .
போட்டி ஆரம்பித்தது ...

முதல் சுற்று ...

செபாஸ்டியன் வெட்டல் புயலென கிளம்பிபோவார் என எதிர்பார்த்தால் சட்டென இரண்டாம் இடத்தில் கிளம்பிய ஜென்சன் பட்டனை முந்திச்செல்ல விடாமல் தடுத்தார்( இது புகார் அளிக்கப்பட்டது. ) இதனால் மூன்றாம் இடத்தில் துவங்கிய ஹேமில்டன் இரண்டாம் இடத்திற்கு விரைந்தார்.வெட்டலின் இந்த செயல் ரேஸ் ஆர்வலர்களை புருவத்தை தூக்க வைத்தது .
எட்டாவது சுற்று ...
பட்டன் மூன்றாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்கு ஹெமில்டனை தள்ளினார் .
பத்தாவது சுற்று ...
வெட்டல் டயர் மாற்றவந்து ஆறாம் இடத்தில் தொடர்ந்தார் .
பனிரெண்டாவது சுற்று ..
டோரோ ரோசோ அணியின் செபாஸ்டியன் புமி வலது முன்பகுதி டயர் விலகி வெளியற போட்டியிலிருந்து வெளியேறினார் .
வழக்கமான துரத்தல்களை தவிர போட்டி சுவாரசிய பஞ்சத்தை ஏற்படுத்தியது .
இருபத்திரெண்டாவது சுற்று ...
பிலிப் மாசா -ஹெமில்டனை மோதி விளையாடினார் .
இருபத்தி நாலாவது சுற்று ...
முதலிடத்தில் தொடர்ந்த பட்டனை வெட்டல் பின்னுக்கு தள்ள பிரயர்த்தனம் பண்ணிக்கொண்டு இருந்தார் .
இருபத்தி ஆறாவது மற்றும் இருபத்தி ஏழாவது சுற்று ..
சேப்டி காரின் ஊர்வலம் ...காரணம் பிலிப் மாசா -ஹெமில்டனை விசாரணை.
முப்பத்தி நாலாவது சுற்று ...
மைக்கேல் ஷூமேக்கர் ரேஸ் லீடர் .ஆம் டயர் மாற்ற ஒருவர் பின் ஒருவர் சென்ற காரணத்தினால் .

நாற்பத்தி ஒன்றாவது சுற்று ...
ஆலோன்சாவின் இடத்தை இரண்டாம் இடத்தை பிடிக்க வெட்டல் கடுமையாக போராடி கொண்டே இருக்க ...
ஐம்பத்தி மூன்றாவது -கடைசி சுற்று ...




எவ்வித மாற்றமும் இல்லாது ஜென்சன் பட்டன் முதலிடத்தில் வந்தார்.


இரண்டாம் இடம் .
பெர்ரரியின்- பெர்னாண்டோ அலோன்சா அந்த இடத்தை நிரப்பினார் .




மூன்றாம் இடம் ...
ஆனால் 2011 ஆம் ஆண்டின் சாம்பியனை முடிவு செய்த இடம் .செபாஸ்டியன் வெட்டல் .கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் சாம்பியன் .அது மட்டுமல்ல கடந்த ஆண்டு வெட்டல் சாம்பியன் ஆன போது , 2008 ஆம் ஆண்டில் இளம்வயதில் சாம்பியன் பட்டம் வென்ற ,லீவிஸ் ஹெமில்டனை விட 168 நாள் வித்தியாசத்தில் மிக இளம் வயது சாம்பியன் ஆனதால் அந்த சாதனையையும்  பறித்தார் .
மற்ற படி போர்ஸ் இந்தியா எந்த புள்ளியும் எடுக்காமல் பதினொன்று ,மற்றும் பனிரெண்டாம் இடம் வந்து விஜய் மல்லயாவை ஜப்பானில் ஏமாற்றியது அது மட்டுமல்ல இந்தியாவில் நடந்த CLT20 போட்டியில்அவரின் ராயல் செலேஞ்சர்ஸ் அணி மும்பை இந்தியன்சிடம் தோற்று ஏமாற்றம் அளித்தது ...

இது மட்டுமல்ல அவரின் போர்ஸ் இந்திய அணியை விற்று விட முடிவு செய்ததாக தவறான தகவல் கசிய விடப்படுகிறது .உண்மையில் அவர் தன்னுடைய பங்கில் 42.5% பகுதியை அதாவது 100 மில்லியன் அமெரிக்கன் டாலர் மதிப்பு பங்கை ”சஹார குரூப்” கம்பெனிக்கு(SAHARA GROUP) தாரை வார்த்து விட்டார் .



இதன் மூலம் சாஹார போர்ஸ் இந்தியா என பெயர் மாற்றம் நிகழ்ந்தது மட்டுமே நடந்துள்ளது . 



Kamui Kobayashi

சப்பர் பெர்ரரியின் -கமுய் கோபயாஷி ,இவர் ஜப்பானின் ஒரே ஒரு பார்முலா டிரைவர் இவர் தன்னுடைய மண்ணில் பதிமூன்றாம் இடம் வந்து ஏமாற்றினார் .ஆனால் இருபத்தி ஏழு புள்ளிகளுடன் பனிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் .

Jessica Celeste Michibat


னால் அதே ஜப்பானில் பிறந்த இன்னொருவர் மிக சந்தோசமாக இருந்தார் அனைவரையும் சந்தோசமாக வைத்திருந்தார்-அவர் ஜப்பனின் மாடல் அழகி ஜெசிகா ( Jessica Celeste Michibata).
 மாடல் அழகி என்பதோடு அவர் முதலிடத்தில் வந்த ஜென்சனின் காதலி என்பதே அந்த பெயர் சிறப்பு!

Korea International Circuit

அதர்க்குள் கொரியா போட்டி களத்தின் வெள்ளி கிழமைக்கான பயிற்சி போட்டி ஆரம்பித்து விட்டது .முதல் போட்டியில் ரெயின் மாஸ்டர் சூமேக்கர் முதல் இடத்திலும் இரண்டாம் போட்டியில் லீவிஸ் ஹெமில்டனும் வந்து வ்வ்வர்ர்ரூம் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் .



புள்ளி பட்டியலை அடுத்த வாரம் ஆய்வு செய்யலாம்.

ந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 16-10-2011 ல் கொரிய தேசத்தில் Korea International Circuit ல் போட்டி இந்திய நேரப்படி பகல் 11.30 க்கு நடக்க இருக்கிறது அங்கு நாம் சந்திப்போம்.

1 comment:

Sugumarje said...

போட்டி வர்ணனை அருமை... நல்ல ஒளிப்படத்தேர்வு...