சுந்தரம் கரிவரதன் அவர்களுக்கு சமர்ப்பணம்.
1983 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நம் இந்திய அணி யாரும் எதிர்பாராமல் வெற்றி பெற்ற அன்றைய இரவு நடந்த வெற்றி விழா விருந்தில் யார் செலவு செய்தார்கள் என்று இன்று வரை எனக்கு தெரியாது என்பதாக கபில்தேவ் ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்ததது போல, இந்தியன் கிராண்ட் ப்ரிக் இன்று நடந்து விட்டது.
அதர்க்காக பல விழாக்கள் நடக்கிறது .ஆனால் அந்த விழாக்களின் பெருமையை கொண்டாட தகுதியான பலரில் - முக்கியமானவரும் ஐரோப்பிய சொத்தான பார்முலா 1 போட்டியை இந்திய கதவை தட்ட செய்த முக்கியமான இரு பார்முலா டிரைவர்கள உருவாக காரணமான மறைதிரு .சுந்தரம் கரிவரதன் அவர்களை இன்று மறந்தால் இன்றைய நாள் தன் நிஜத்தை இழந்து விடும் .
"We, Indians can rub shoulders with the best in the world provided there is adequate corporate sponsorship and increased global opportunities."
Marco Simoncelli
இத்தாலியின் பைக் வீரர் மார்கோ சிமேன்செள்ளியின் மரணத்திற்கும் அதர்க்குமுன் அக்டோபர் 16 ஆம் நாள் இறந்த டான் வெல்டன் இறப்புக்கும் அஞ்சலி செலுத்தினார்கள் .
இந்திய களத்தின் அறிமுகம் தேவையான அளவுக்கு சகல நாளேடுகளிலும் முதல் பக்கம் வெளியிட்டு ஒரு மாத கொண்டாட்டமாக வந்து இருந்தாலும் நாம் பேசும் இடத்தில் அதை ஏன் விடவேண்டும் ?
ஒரு துப்பாக்கியை உயர்த்தி பிடித்த தோற்றம் .(ஆனால் இதன் பெயரில் சுத்த சைவம் .புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்.).சுமார் 875 ஏக்கர் நில பரப்பில் வியாப்பித்துள்ள இந்த களம் 5.14 கி.மீ நீளத்துக்குள் 308.4 கி.மீ நீளத்தில், 60 சுற்றுக்களுடன் 16 வளைவுகளுடன் ஜெர்மனியின்- ஹெர்மன் டில்க்கே களஅறிவாற்றலால் உருவாக்கப்பட்ட அழகிய களம் நம்முடைய இந்திய களம்.
1700 கோடி செலவில் ஜெயப்பி குரூப்பின் அனைத்து துறைகளிலும் (Engineering ,Construction ,Cement, Power, Hospitality,Real Estate) அவர்களுக்குள்ள அனுபவத்தின் வெளிப்பாட்டை இந்த உலகுக்கு சொல்ல உதாரணமாக் எடுத்து கொண்டதோடு அவர்களின் கனவாகவும் இருந்ததாக
அதன் மேனேஜிங் டைரக்டர் சமீர் கவுர்(Sameer Gaur) தெரிவிக்கிறார் .ஒரு லட்சத்து இருபதாயிரம் மக்கள் அமர்ந்து பார்க்கும் வசதி செய்ய பட்டு இருக்கிறது ஸ்டேடியம்.
காமன் வெல்த் விளையாட்டில் காணமல் போன நம் மரியாதையை மீட்டு எடுக்க பட்டதர்க்கு இங்கு வந்த 95000 ரசிகர்களே சாட்சி .
ஆனால் ,இந்திய புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் ஒரு கை ஓசை அல்ல .மிக பெரிய பின் புலம் இந்த உருவாக்கத்திர்க்கு அஸ்திவாரமாக உள்ளது .
இந்திய நேரப்படி போட்டி மதியம் மூன்று மணிக்கு கோலாகளமாக துவங்கியது...
முதல் சுற்று ...
செபாஸ்டியன் வெட்டலின் ஆரம்ப வேகம் இந்திய களத்தில் இருந்ததாக சொன்ன அத்தனை தூசிகளையும் முகவரியில்லாமல் பண்ணிவிட்டது .அவ்வளவு வேகம் ...
வழக்கம் போல இரண்டாம் இடத்தில் துவங்கிய மார்க் வெப்பர் மூன்றாம் இடமும் மூன்றாம் இடத்தில் தொடங்கிய பெர்னாண்டோ அலோன்சா நான்காம் இடத்திர்க்கும் நான்காம் இடத்தில் தொடங்கிய ஜென்சன் பட்டன் மிக அருமையாக இரண்டாம் இடத்திலும் தங்கள் வேகத்தை பிடிக்க ,
பின்னால் மிக பெரிய மோதல் உருவானது .
ஆம்.15 ஆம் இடத்து வில்லியம்ஸ் அணியின் பேரிகொலோ 17 ஆம் இடத்தில் தொடங்கிய சப்பர் அணி- கொபயாசி 19 ஆம் இடத்து லோட்டஸ் அணி -ட்ரூலி ,20 ஆம் இடத்து சப்பரின் இன்னொரு வீரர் -பெர்ஸ் ,22 ஆம் இடத்து கிளாக் மோதி கலைந்தார்கள் .ஆனால் பரிதாபமாக இந்த மோதலில் சப்பர் அணியின் கொபயாசி வெளியேறும்படி ஆகிவிட்டது .
இரண்டாவது சுற்று ...
முதல் சுற்றில் கும்பலாக மோதிக்கொண்டதில் ஒருவரான விர்ஜின் அணியின் கிளாக் வெளியேறினார் .
மூன்றாம் சுற்று ...
ரெனால்டின் -ப்ரூனே சென்னா அருமையான தன்னுடைய பத்தாம் இடத்தை தககவைத்துகொண்டார் .
நான்காம் சுற்று ...DRS இயக்க அனுமதிக்கப்பட்டது .
ஐந்தாம் சுற்று ...
இரண்டாம் இடத்தை பிடிக்க வெப்பர் தளராமல் பட்டனை நெருங்கி அதிரடியாக முற்சிக்க முடியாமல் போனது .
ஏழாம் சுற்று ...
வெட்டல் - பட்டனை 4.7 வினாடி இடைவெளியில் பறந்து கொண்டு இருக்க ,ஹேமில்டன் (ஆறாம் இடம் ),ஆலோசாவை துரத்தி கொண்டு இருக்க -அங்கு கேமிராவின் கண் சிமிட்டாமல் (விலகாமல் ) தொடர்து கொண்டு இருந்தது .
பதிமூன்றாவது சுற்று ...
பால்டி ரெஸ்டா - செர்ஜியோ பெர்செய் முந்தினார் .
பதினெட்டாம் சுற்று ...
பிலிப் மாசா டயர் மாற்றம் செய்தார் .
இருபதாம் சுற்று ...
வெட்டால் 3.2 வினாடியில் டயர் மாற்றம் செய்து ,தன்னுடைய முதல் இடத்திலே மீண்டும் தொடர்ந்தார் ..
இருபத்தி ஒன்று ...
மைக்கேல் ஷூமேக்கர் எட்டாம் இடத்தில் தொடரும் புருனே சென்னாவின் இடத்தை பிடித்தார் .
இருபத்தி நாலாவது சுற்று ...
அது நடந்தே விட்டது .பிலிப் மாசா மற்றும் ஹேமில்டன் இருவர்மேல் மையம் கொண்டு இருந்த கேமிராவின் பார்வை வீண் போகவில்லை .மாசாவை துரத்திக்கொண்டு இருத்த ஹேமில்டன் வளைவில் முந்த முயசிக்க மாசா திடீரென வேகம் குறைய ஹேமில்டன் கார் முன்பகுதி பசிகொண்ட சுராவை போல மாசாவின் பெர்ரரியை ,தாக்கியது
இந்த காட்சியை கண்ட நம் மிஸ்டர் பீன் -Rowan Atkinson ஹாலிவுட்நடிகரின் -எபோதும் வேடிக்கையை கொண்டு இருக்கும் முகம், அதை இழந்து சீரியஸ் ஆக்கிவிட்டது .அவர் லூயிஸ் ஹெமில்டனின் நண்பர் .மெக்லரண் அணிக்காக வந்திருந்தார் .
பெர்ராரி முன்பகுதி தரையில் உரசி தீப்பொறி பறக்க அப்படியே தொடர்ந்தார் மாசா .ஆனால் ஹெமில்டன் உடனே பாதிக்க பட்ட முன் பகுதியை உடனே மாற்றினார் .
மோதல் விசாரணக்கு உட்படுத்தப்பட்டது .
இருபத்தி நான்காவது சுற்று..
டோரோ ரோசோ அணியின் - செபாஸ்டியன் ப்யுமி ,காரின் எஞ்சின் கோளாறால் வெளியேறினார் .
முப்பத்தி ஒன்று ...
ஹெமில்டன் -மாசா மோதலில் ,மாசாவின் தவறான ஓட்டுதளுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அவர் போட்டியிலிருந்து விலகினார் .
இந்த மோதலை - மீண்டும் மோதிகொண்டார்கள் என்பதாக பத்திரிகைகள் வர்ணிக்கின்றன ...
இத்ர்க்குள் ஹெமில்டன் எட்டாம் இடத்தில் இருக்கும் ஜெய்மே அல்குசுரையை பிடித்தார் .
இந்திய களம் தொழில் நுட்பம் முன்னேற்றம் அடைந்த அணிகளுக்கு மட்டுமே மிக சாதகமாக அமைக்கப்பட்டுவிட்டது .ஓட்டுனரின் திறமை இரண்டாம் இடம்தான் .முந்திய வண்டி முந்தியே சென்று கொண்டு இருக்கிறது .எவ்வித பெரிய மாற்றமும் நடக்கவில்லை .
நாற்பத்தி ஒன்று...
இந்த வருட தொடரில் முதல் இடத்தை ஒருமுறையாவது ருசிக்க வேண்டும் என்ற வெப்பரின் ஆசை அனல் பறக்க அவரின் டயரின் மூலம் வெளிபடுத்த ,இதெல்லாம் முடியாது என்பது போல பட்டன் பறக்க வேக விவாதங்கள் தொடர்ந்தன .
நாப்பத்தி எட்டாவது ...
தன் அணியின் ரோஷ்பெர்க்கை(ஆறாம் இடத்தில் ) பின்தொடர்ந்த மைக்கேல் ஷூமேக்கர் ரோஷ்பெர்க் டயர் மாற்ற செல்ல ஐந்தாம் இடத்தில் ஷூமேக்கர் .
அறுபதாவது சுற்று ...
இந்திய மண்ணில் போட்டியின் கடைசி சுற்று .
எல்லையை முத்தமிடுகிறது ரெட்புல்லின் RB 7 கார்.
வெற்றிக்கொடியை பறக்க விடுகிறார்- நம் இந்திய கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் .
முதல் இடம் .
ரெட்புல் ரேனால்ட்டின் -செபாஸ்டியன் வெட்டல் 1 மணி 30 நிமிடம் 35 வினாடி மற்றும் 002 மில்லி வினாடியில் கடந்து வெற்றி கோப்பையை (வெற்றிக்கனியின்- ரசத்தை)சாம்பைன் ஒயின்(champagne) ஊற்றிச்சுவைத்தார் .
முதல் இடத்திர்க்கான கோப்பையை வழங்கியவர்' சாட்சாத் நம் மாயாவதி அம்மையார் அவர்கள் .
அதர்காக,இந்திய F1 போட்டியில் அரசியல் கலப்பு இல்லாமலும் போகவில்லை இந்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேகன் அழைக்கப்படவில்லை . காரணம் வரிவிலக்கு தரவில்லையாம் .காங்கிரசின் எதிர்ப்பாளர் மாயாவதிக்கு இது கூட ஒரு காரணம்தான் !
(சீனாவிற்கு ஒரு மஞ்சள் ஆறு ( ஹோவாங்கோ ஆறு ) இந்தியாவுக்கு நம் அரசியல் வாதிகள்- என்பது சொல்லவும் வேண்டுமா ? ஆனால் இரண்டுமே துயரம்தான் !)
முதல் இடத்திர்க்கான கோப்பையை வழங்கியவர்' சாட்சாத் நம் மாயாவதி அம்மையார் அவர்கள் .
அதர்காக,இந்திய F1 போட்டியில் அரசியல் கலப்பு இல்லாமலும் போகவில்லை இந்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேகன் அழைக்கப்படவில்லை . காரணம் வரிவிலக்கு தரவில்லையாம் .காங்கிரசின் எதிர்ப்பாளர் மாயாவதிக்கு இது கூட ஒரு காரணம்தான் !
(சீனாவிற்கு ஒரு மஞ்சள் ஆறு ( ஹோவாங்கோ ஆறு ) இந்தியாவுக்கு நம் அரசியல் வாதிகள்- என்பது சொல்லவும் வேண்டுமா ? ஆனால் இரண்டுமே துயரம்தான் !)
இதுவரை நடந்த பதினேழு போட்டிகளில் முதலிடத்தில் இது பதினோராவது முதலிடத்து வெற்றி .வெட்டல் ஏற்கனவே பார்முலா 1 போட்டிகளில்,புதிய உலக சாதனை பயணத்தில் இருக்கிறார் .இதன் மூலம் 374 புள்ளிகளை பெற்றுள்ளார் .
இரண்டாவது இடம்,
மேக்ளரனின் -ஜென்சன் பட்டன் .வெட்டளுக்கு அடுத்த நிலையில் இந்த ஆண்டின் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக்கொள்ள போராடி வருகிறார் .இதுவரை 240 புள்ளிகள் பெற்றுள்ளார் .
மூன்றாவது இடம் ..
பெர்ரரியின் -பெர்னாண்டோ அலோன்சா .இவருக்கும் இரண்டாம் இடம் கிடைக்க பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது .இவர் இத்துடன் 227 புள்ளிகள் பெற்றுள்ளார் .
இந்த போட்டியில் மூன்றாம் இடம் வந்த அலோன்சாவுக்கு,விக்கி சந்தோக் (கருண் சந்தோக்கின் தந்தை ) கோப்பையை வழங்கினார் என்பதோடு இந்திய களத்தின் உருவாகத்திர்க்கு இவர் பங்கும் பெரியதுதான் . இவர் FMSCI (Federation of Motor Sports Clubs of India ) தலைவர் .
இந்த போட்டியில் மூன்றாம் இடம் வந்த அலோன்சாவுக்கு,விக்கி சந்தோக் (கருண் சந்தோக்கின் தந்தை ) கோப்பையை வழங்கினார் என்பதோடு இந்திய களத்தின் உருவாகத்திர்க்கு இவர் பங்கும் பெரியதுதான் . இவர் FMSCI (Federation of Motor Sports Clubs of India ) தலைவர் .
இவர்களை அடுத்து, இரண்டாம் இடத்தை கைப்பற்றும் முனைப்பில் இருப்பவர்கள் மார்க் வெப்பர் 221 புள்ளிகள் ,லூயிஸ் ஹெமில்டன் 202 புள்ளிகள் .
பத்தொன்பது கார்கள் மட்டுமே முடிவில் இருந்தது .இதில் நம் இந்திய நம்பிக்கை- நரேன் கார்த்திகேயன் ,தகுதி சுற்றில் இருபத்தி இரண்டாம் இடம் துவங்க வேண்டிய நரேன், மைக்கேல் ஷூமேக்கர் காருக்கு( முதல் தகுதி சுற்றில்) வழி மறித்த விவகாராத்தால் இருபத்தி நான்காம் இடத்தில் துவங்கி பதினேழாம் இடம் பிடித்தார் .இந்த ஆண்டில் இவரின் ஒன்பதாவது போட்டி ஆகும் .ஏற்கனவே லோட்டஸ் அணியில் கருண் சந்தோக் நிராகரிக்க பட்ட நிலையில் ,நரேன் ஆறுதல் அளித்தார் .
இந்திய களத்தில்மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாஹார போர்ஸ் இந்திய அணி இரண்டு புள்ளிகள் மட்டுமே பெற்றது .அந்த அணியின் ஆண்ட்ரியன் சட்டில் இந்த புள்ளிக்கு சொந்தகாரர் .அந்த அணயின் பால்டி ரெஸ்டா பதிமூன்றாவது இடமே வந்தார் .
இந்த முறை மைக்கேல் ஷூமேக்கர் ஐந்தாவது இடம் வந்து அசத்தினார் .நிக்கோ ரோஷ்பெர்க் ஆறாவது இடம் .மொத்தத்தில் மேர்சீடிஸ் அணி -அணிகளின் வரிசையில் ,நானகாவது இடம் என்பது தெளிவு .
அடுத்த போட்டிநவம்பர் 13 ஆம்தேதி - சூரிய சக்தியின் அபரிதமான கொடையால் அபுதாபியின் யாஸ் மரினா சர்க்யூட்டில் மாலை 6.30 க்கு .(இந்தியா நேரப்படி )போட்டி துவங்க இருக்கிறது .இந்த ஜோலிப்பின் மயக்கத்தை ரசிக்க, தவற விடவேண்டாம் .அடுத்த நம் சந்திப்பு இங்குதான் ..
இந்திய களத்தில்மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாஹார போர்ஸ் இந்திய அணி இரண்டு புள்ளிகள் மட்டுமே பெற்றது .அந்த அணியின் ஆண்ட்ரியன் சட்டில் இந்த புள்ளிக்கு சொந்தகாரர் .அந்த அணயின் பால்டி ரெஸ்டா பதிமூன்றாவது இடமே வந்தார் .
இந்த முறை மைக்கேல் ஷூமேக்கர் ஐந்தாவது இடம் வந்து அசத்தினார் .நிக்கோ ரோஷ்பெர்க் ஆறாவது இடம் .மொத்தத்தில் மேர்சீடிஸ் அணி -அணிகளின் வரிசையில் ,நானகாவது இடம் என்பது தெளிவு .
அடுத்த போட்டிநவம்பர் 13 ஆம்தேதி - சூரிய சக்தியின் அபரிதமான கொடையால் அபுதாபியின் யாஸ் மரினா சர்க்யூட்டில் மாலை 6.30 க்கு .(இந்தியா நேரப்படி )போட்டி துவங்க இருக்கிறது .இந்த ஜோலிப்பின் மயக்கத்தை ரசிக்க, தவற விடவேண்டாம் .அடுத்த நம் சந்திப்பு இங்குதான் ..
இன்று ,இந்த பதிவின் போது பார்முலா டிரைவர் -Jacques Villeneuve Sr. தன்னுடைய 58 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் .அவரை வணங்குவோம் .
இந்திய போட்டி தவறே நடக்காமல் சகல விதத்திலும் சிறப்பாக மட்டுமே நடந்ததா ?பிரச்சனைகள் ஏதும் இல்லையா என்பதர்க்கு நம்சார்பாக F1 BOSS- Bernie Ecclestone தன் காதுகளுக்கு வந்த செய்திகளுக்கு என்ன பதில் சொன்னார் ?
"Normally you get people complaining if there is something to complain about, but I haven't heard any complaints - nothing."
அதுவே நம் பதிலாக இருக்கட்டுமே ! (குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை என்பார்களே ! )
இந்திய களத்தின் அழகிய யுவதிகளின் வழி அனுப்புதளுடன் நாம் இப்போது வ்வ்வர்ர்ரூம் விடை பெறுவோம்
1 comment:
அருமை, நல்ல வர்ணனை...
தலைப்புக்கள் இல்லாமல் தொடர்சியாக இருப்பது கொஞ்சம் கவனிக்க வேண்டியது...
எத்தனையோ தடைகளை தாண்டி, கனவை நினைவாக்கி இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர்களை மனம் குளிரச் செய்துவிட்டனர், ஜேபி குரூப்ஸ்.
//(சீனாவிற்கு ஒரு மஞ்சள் ஆறு ( ஹோவாங்கோ ஆறு ) இந்தியாவுக்கு நம் அரசியல் வாதிகள்- என்பது சொல்லவும் வேண்டுமா ? ஆனால் இரண்டுமே துயரம்தான் !)//
:) உன்மைதான்
//"Normally you get people complaining if there is something to complain about, but I haven't heard any complaints - nothing."//
Well Said :)
Post a Comment