மும்பையில் F1 களம் .
மகாராஷ்டிர மாநில சாலை வளர்ச்சி கழகம் (MSRDC) ஒரு அற்புதமான பல்நோக்கு ஃபார்முலா 1 களத்தை ,தீம் பார்க்குடன் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது இதனை அமைப்பதர்க்கு இடம் மும்பையின் புறநகர் மற்றும் பான்வெல்,மலாடு,தானே பகுதிகளில் சுமார் நானூறு முதல் ஐநூறு ஏக்கர் நிலம் கையக படுத்தும் முயற்சியில் மாநில வருவாய் துறையின் துணையுடன் மும்முரமாக நடந்துவருகிறது .
உருவாக்கும் சிற்பிகள்
ஆனால் ...
இந்திய கார் டிரைவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் .இப்போதே சாஹார போர்ஸ் இந்திய அணிக்கு ஜெர்மனியிலும் ,இங்கிலாந்திலும் கைய்ந்திக்கொண்டு இருக்கிறோம் .இந்த நிலை நீடித்தால் இந்தியாவில் இன்னும் பல அணிகள் ,களங்கள் உருவாகலாம் .ஆனால் இந்தியர்கள் கடைசிவரை வரிசையில் நின்று அனுமதி சீட்டு வாங்கி வேடிக்கை பார்பவர்களாய் மட்டுமே நீடிக்கலாம் .
அதர்க்காக இந்தியர்களை மட்டுமே சேர்த்து ஒரு அணி செயல் படும் என்றால் ,அந்த ஆண்டேகூட அந்த அணி இல்லாமல் போகலாம் .காரணம் மங்காத்தா அஜீத்குமார் சொல்வதை (அவரும் ரேஸ் டிரைவர் என்பதால் ) போல (ஒரு கெட்ட வார்த்தை சொல்வாரே) அது இல்லாமல் சொனால் Money,Money! பார்முலா போட்டிகளை நடத்த கோடிக்கணக்கில் அவசியப்படுகிறது
இதர்க்கு இன்னொரு களம் வேண்டாம். காலம்தான் வேண்டும் .அந்தகாலம் உடனே வரவேண்டும் - மீண்டும் ,மீண்டும் “One in a billion” நடத்த முடியாது .ஆனால் அடிப்படை கட்டமைப்பில் தீவிர மாறுதல் அவசியம் .
அதர்க்கு ,அந்த மாறுதல் நான்கு கட்டமாக வகுக்க படவேண்டும் .
முதல் கட்டம் .
அரசின் உதவியோடு அல்லது மேற்பார்வையில் ரேஸ் அகாடமிகள் உருவாக்கப்படவேண்டும் .இது தமிழகம் கண்டுகொள்ள வேண்டிய விஷயம் .இன்றுகூட நம் தமிழக வீரர்களின் கொடிதான் பறந்துகொண்டு இருக்கிறது .அதை நாம் தக்க வைத்துகொண்டால் போதும் .இந்த துறைக்கு ஊக்குவிக்கும் தனியார் துறைக்கு வரி குறைப்பு கொடுப்பதன் மூலம் நிறைய ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள் .சர்வதேச ரேஸில் கலந்துகொள்ளும் எல்லா தமிழக ரேஸ் வீரர்களும் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கும் நிலை மாறும் .
இரண்டாவது கட்டம் ...

இந்தியாவின்- Delhi Integrated Multi Modal Transit System Ltd. (DIMTS),இங்கிலாந்தின் - Capita Symonds அமெரிக்காவின் கட்டிட கலையில் புகழ் பெற்ற ,வரும் ஆண்டில் இங்கிலாந்தின் ஒலிம்பிக் போட்டிக்கான அரங்கை உருவாக்கும் Populous நிறுவனமும் வடிவமைப்பில் தீவிரம் காட்டிவருகின்றன .
இடம் முடிவானபின் கள அடிக்கல் நடக்கலாம்.
இந்த செய்தி மிகுந்த சந்தோசத்தை தருகிறது .இந்தியா, உலகஅளவில் பேசப்படும் .சுற்றுலா வளர்ச்சிபெறும் ,கார் கம்பெனிகளின் பார்வை அதிகரிக்கும் .உண்மைதான் .
ஆனால் ...
இந்திய கார் டிரைவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் .இப்போதே சாஹார போர்ஸ் இந்திய அணிக்கு ஜெர்மனியிலும் ,இங்கிலாந்திலும் கைய்ந்திக்கொண்டு இருக்கிறோம் .இந்த நிலை நீடித்தால் இந்தியாவில் இன்னும் பல அணிகள் ,களங்கள் உருவாகலாம் .ஆனால் இந்தியர்கள் கடைசிவரை வரிசையில் நின்று அனுமதி சீட்டு வாங்கி வேடிக்கை பார்பவர்களாய் மட்டுமே நீடிக்கலாம் .
அதர்க்காக இந்தியர்களை மட்டுமே சேர்த்து ஒரு அணி செயல் படும் என்றால் ,அந்த ஆண்டேகூட அந்த அணி இல்லாமல் போகலாம் .காரணம் மங்காத்தா அஜீத்குமார் சொல்வதை (அவரும் ரேஸ் டிரைவர் என்பதால் ) போல (ஒரு கெட்ட வார்த்தை சொல்வாரே) அது இல்லாமல் சொனால் Money,Money! பார்முலா போட்டிகளை நடத்த கோடிக்கணக்கில் அவசியப்படுகிறது
இந்திய டிரைவர்களை ஜெர்மன் மற்றும் இங்கிலாந்து போல முக்கியத்துவம் பெறவேண்டும் .
இதர்க்கு இன்னொரு களம் வேண்டாம். காலம்தான் வேண்டும் .அந்தகாலம் உடனே வரவேண்டும் - மீண்டும் ,மீண்டும் “One in a billion” நடத்த முடியாது .ஆனால் அடிப்படை கட்டமைப்பில் தீவிர மாறுதல் அவசியம் .
அதர்க்கு ,அந்த மாறுதல் நான்கு கட்டமாக வகுக்க படவேண்டும் .
முதல் கட்டம் .
அரசின் உதவியோடு அல்லது மேற்பார்வையில் ரேஸ் அகாடமிகள் உருவாக்கப்படவேண்டும் .இது தமிழகம் கண்டுகொள்ள வேண்டிய விஷயம் .இன்றுகூட நம் தமிழக வீரர்களின் கொடிதான் பறந்துகொண்டு இருக்கிறது .அதை நாம் தக்க வைத்துகொண்டால் போதும் .இந்த துறைக்கு ஊக்குவிக்கும் தனியார் துறைக்கு வரி குறைப்பு கொடுப்பதன் மூலம் நிறைய ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள் .சர்வதேச ரேஸில் கலந்துகொள்ளும் எல்லா தமிழக ரேஸ் வீரர்களும் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கும் நிலை மாறும் .
இரண்டாவது கட்டம் ...
நவீன தரத்தில் இரண்டாம் நிலை களங்கள்( Second Grade Circuit ) ஒவ்வொரு மாநிலங்களிலும் குறைந்தது மூன்று உருவாக்க படவேண்டும் .சென்னை இருங்காட்டுகோட்டையில் அர்பணிக்கப்பட்ட Madras Motor Sports Club போலவும் ,கோவையின் Kari Motor Speedway போன்ற களங்கள், ஒரு தூரப்பார்வையின் அல்லது முன்னோக்கு அவதானிப்பின் விளைவு .அதன் பலன் நம் நாராயண் கார்த்திகேயன் ,கருண் சந்தோக் போன்ற நட்சத்திரங்கள் இன்றைய உலக ஃபார்முலா 1 வானில் பிரகாசிக்கிறார்கள் ..
மூன்றாம் கட்டம்...
பள்ளிகளில் எத்தனையோ பொய் கணக்கில் (காணாமல் போன குதிரை(Horse Raiding fees) ,வாடகை நிலத்தை விளையாட்டு மைதானம்(Games Fee) என சொல்லியும் , Smart class fee சொல்லிக்கொண்டே போகலாம்) .வசூளிப்பதர்க்கு பதில் எட்டு வயதுக்கு மேல் Soapbox Game Kid Karts போட்டிகளையும் பதினைந்து வயசு வரை Go Kart ரேஸ் போட்டிகளை பழக்க படுத்தலாம் .கல்லூரிகளில் Kart racing அதில் உள்ள உட்பிரிவுகளையும் படிப்படியாக அறிமுகப்படுத்தலாம் .உலக அளவில் உள்ள ஒரு போட்டியின் ஆரம்பத்தை இங்கு தொடங்கும் போது கோ-கார்ட்டிங், ஜூனியர் லெவல், நேஷனல் லெவல்னுஅந்த பாதை விசாலமாக்கப்படும் .
நான்காம் கட்டம்...
நாம் பார்முலா காரின் அறிமுகத்தை, அதன் மாதிரியை மறை திரு .கரிவரதன் அவர்களின் Formula Maruti Single Seater racing Car (FISSME) ,அடுத்த வந்த திரு .விஜயகுமார் அவர்களின் LGB -Formula Car, Formula LGB Swift,Formula Rolon Chevrolet ,இன்று நம் தல- அஜீத் ஓட்டும் MRF Formula 1600 cc car போன்ற கார்கள் அத்தனையுமே படிப்படியான வளர்ச்சி கொடுத்துள்ளது அதனை பயன்படுத்திகொண்டவர்கள் நம் நாராயண் கார்த்திகேயன் ,அர்மான் இப்ராஹிம் கருண் சந்தோக்கும் .இன்னும் பல பார்முலா கார்களை ஒத்த கண்டுபிடிப்புகள் பராமரிப்பு மற்றும் விலைகளில் குறைந்த கார்கள் உருவாக்கப்படவேண்டும் .
நம் எண்ணங்களில் மாறுதல் அவசியம் .
Natham parameswarimangalam temple
இந்தியாவிலும் தமிழகதிலும் நிறைய கோவில்கள் இருக்கின்றன .ஆனால் பராமரிப்பில் இருப்பதுவும் ,கோயிலுக்குரிய ஆகம நியமங்களை தொடர்ந்துகொண்டு இருக்கும் கோவில்கள் மிக குறைவு .ஆனால் இன்னும் பல புதிய கோவில்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறது .கேட்டால் புண்ணியம் என்கிறார்கள் .அதனால் கடவுளே முன்வந்து சில கோவில்களில் காணாமல் போய்கொண்டு இருக்கிறார்கள் (கடவுள்களே -சிலை திருடுபவர்களின் நெட் வொர்க்கில் உறுப்பினர் பட்டியல்களுக்கு போய்கொண்டு இருப்பது இன்னும் சகஜமாகலாம் !)
மும்பை மற்றும் பிற இந்திய நகரங்கள் புதிய கோவில்கள் கட்டட்டும் .
தமிழகம் இருக்கும் கடவுள்களை காணாமல் போகாமல் காப்பாற்றட்டும் .
நாளைய தலைப்பு செய்தியின் முன்னோட்டம் .
நாளைய அபுதாபி ரேஸின் வெள்ளிகிழமை மற்றும் சனிகிழமை பயிற்சி போட்டியில் மெக்ளறேன் மேர்சீடிஸ் அணி சிறப்பாக செயல் பட்டுவருகிறது .
வெள்ளிகிழமை முதல் பயிற்சி போட்டியில் ஜென்சன் பட்டன் 1:40.263 நிமிடத்தை முதல் இடத்தில் பதிவு செய்தார் .
அதே நாளின், இரண்டாவது பயிற்சி போட்டியில் லீவிஸ் ஹேமில்டன் 1:39.586 நிமிடத்தை முதல் இடத்தில் பதிவு செய்தார் .
இன்று நடந்த மூன்றாவது பயிற்சி போட்டியில் லீவிஸ் ஹேமில்டன் 1:38.976 முதல் இடத்தில் பதிவு செய்தார் .
இன்றைய பிறந்தநாள் பார்முலா 1 டிரைவர் .
George Eaton
கனடாவின் பார்முலா 1 டிரைவர் ஜார்ஜ் ஈடன் (George Eaton) தன்னுடைய 66 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் ,அவரை வணங்குவோம் .
மீண்டும் நாளை சிந்திப்போம் .
இந்திய நேரம் மாலை 6.30.
1 comment:
மிக அற்புதமான யோசனைகள், ஆய்வு...
//சுற்றுலா வளர்ச்சிபெறும் ,கார் கம்பெனிகளின் பார்வை அதிகரிக்கும் .உண்மைதான்.ஆனால் ...இந்திய கார் டிரைவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்//
வருத்ததிற்குரியதுதான்...
//இதர்க்கு இன்னொரு களம் வேண்டாம். காலம்தான் வேண்டும்//
உண்மை, உண்மை, உண்மை
புதிய தலைமுறை வேக ஓட்டுனருக்கான நான்கு வழிகாட்டுதலும் அருமை... நல்ல யோசனைகள்
//தமிழகம் இருக்கும் கடவுள்களை காணாமல் போகாமல் காப்பாற்றட்டும்//
கடவுளைப்பற்றி தமிழ்நாட்டில் பேசுவது குற்றமாகிவிடக்கூடும்... அல்லது பெரியார்த்தனமாகிவிடும் :)
குண்டுச்சட்டியில் இவர்கள் கார் ஓட்டுவார்கள் :)
வழிபடும், வழிபடா கோவில்களில் இருக்கும் இறைவன் இவர்களுக்கு வழிகாட்டட்டும்...
அபுதாபி ரேஸின் சிறப்பு கண்ணோட்டத்தின் மூலம் மீண்டும் சந்திப்போம்...
பதிவில் கொஞ்சம் எழுத்துப்பிழை கண்டுகொள்வீரா? :)
Post a Comment