உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, November 12, 2011

ஃபார்முலா 1 போட்டிக்கான இன்னொரு இந்திய கதவு திறக்கிறது .

மும்பையில் F1 களம் .



மகாராஷ்டிர மாநில சாலை வளர்ச்சி கழகம் (MSRDC) ஒரு அற்புதமான பல்நோக்கு ஃபார்முலா 1 களத்தை ,தீம் பார்க்குடன் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது இதனை அமைப்பதர்க்கு இடம் மும்பையின் புறநகர் மற்றும் பான்வெல்,மலாடு,தானே பகுதிகளில் சுமார் நானூறு முதல் ஐநூறு ஏக்கர் நிலம் கையக படுத்தும் முயற்சியில் மாநில வருவாய் துறையின் துணையுடன் மும்முரமாக நடந்துவருகிறது .

உருவாக்கும் சிற்பிகள் 


இந்தியாவின்- Delhi Integrated Multi Modal Transit System Ltd. (DIMTS),இங்கிலாந்தின் -  Capita Symonds அமெரிக்காவின் கட்டிட கலையில் புகழ் பெற்ற ,வரும் ஆண்டில் இங்கிலாந்தின் ஒலிம்பிக் போட்டிக்கான அரங்கை உருவாக்கும் Populous நிறுவனமும் வடிவமைப்பில் தீவிரம் காட்டிவருகின்றன .
இடம் முடிவானபின் கள அடிக்கல் நடக்கலாம்.

இந்த செய்தி மிகுந்த சந்தோசத்தை தருகிறது .இந்தியா, உலகஅளவில் பேசப்படும் .சுற்றுலா வளர்ச்சிபெறும் ,கார் கம்பெனிகளின் பார்வை அதிகரிக்கும் .உண்மைதான் .


ஆனால் ...



இந்திய கார் டிரைவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் .இப்போதே சாஹார போர்ஸ் இந்திய அணிக்கு ஜெர்மனியிலும் ,இங்கிலாந்திலும் கைய்ந்திக்கொண்டு இருக்கிறோம் .இந்த நிலை நீடித்தால் இந்தியாவில் இன்னும் பல அணிகள் ,களங்கள் உருவாகலாம் .ஆனால் இந்தியர்கள் கடைசிவரை வரிசையில் நின்று அனுமதி சீட்டு வாங்கி வேடிக்கை பார்பவர்களாய் மட்டுமே நீடிக்கலாம் .




அதர்க்காக இந்தியர்களை மட்டுமே சேர்த்து ஒரு அணி செயல் படும் என்றால் ,அந்த ஆண்டேகூட அந்த அணி இல்லாமல் போகலாம் .காரணம் மங்காத்தா அஜீத்குமார் சொல்வதை (அவரும் ரேஸ் டிரைவர் என்பதால் ) போல (ஒரு கெட்ட வார்த்தை சொல்வாரே) அது இல்லாமல் சொனால் Money,Money! பார்முலா போட்டிகளை நடத்த கோடிக்கணக்கில் அவசியப்படுகிறது

இந்திய டிரைவர்களை ஜெர்மன் மற்றும் இங்கிலாந்து போல முக்கியத்துவம் பெறவேண்டும் .

இதர்க்கு இன்னொரு களம் வேண்டாம். காலம்தான் வேண்டும் .அந்தகாலம் உடனே வரவேண்டும் - மீண்டும் ,மீண்டும் “One in a billion” நடத்த முடியாது .ஆனால் அடிப்படை கட்டமைப்பில் தீவிர மாறுதல் அவசியம் .

அதர்க்கு ,அந்த மாறுதல் நான்கு கட்டமாக வகுக்க படவேண்டும் .


முதல் கட்டம் .





 அரசின் உதவியோடு அல்லது மேற்பார்வையில் ரேஸ் அகாடமிகள் உருவாக்கப்படவேண்டும் .இது தமிழகம் கண்டுகொள்ள வேண்டிய விஷயம் .இன்றுகூட நம் தமிழக வீரர்களின் கொடிதான் பறந்துகொண்டு இருக்கிறது .அதை நாம் தக்க வைத்துகொண்டால் போதும் .இந்த துறைக்கு ஊக்குவிக்கும் தனியார் துறைக்கு வரி குறைப்பு கொடுப்பதன் மூலம் நிறைய ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள் .சர்வதேச ரேஸில் கலந்துகொள்ளும் எல்லா தமிழக ரேஸ் வீரர்களும் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கும் நிலை மாறும் .

இரண்டாவது கட்டம் ...


 நவீன தரத்தில் இரண்டாம் நிலை களங்கள்( Second Grade Circuit ) ஒவ்வொரு மாநிலங்களிலும் குறைந்தது மூன்று உருவாக்க படவேண்டும் .சென்னை இருங்காட்டுகோட்டையில் அர்பணிக்கப்பட்ட Madras Motor Sports Club போலவும் ,கோவையின் Kari Motor Speedway போன்ற களங்கள், ஒரு தூரப்பார்வையின் அல்லது முன்னோக்கு அவதானிப்பின் விளைவு .அதன் பலன் நம் நாராயண் கார்த்திகேயன் ,கருண் சந்தோக் போன்ற நட்சத்திரங்கள் இன்றைய உலக ஃபார்முலா 1 வானில் பிரகாசிக்கிறார்கள் ..

மூன்றாம் கட்டம்... 




பள்ளிகளில் எத்தனையோ பொய் கணக்கில் (காணாமல் போன குதிரை(Horse Raiding fees) ,வாடகை நிலத்தை விளையாட்டு மைதானம்(Games Fee) என சொல்லியும் , Smart  class fee சொல்லிக்கொண்டே போகலாம்) .வசூளிப்பதர்க்கு பதில் எட்டு வயதுக்கு மேல் Soapbox Game  Kid Karts போட்டிகளையும் பதினைந்து வயசு வரை Go Kart ரேஸ் போட்டிகளை பழக்க படுத்தலாம் .கல்லூரிகளில் Kart racing அதில் உள்ள உட்பிரிவுகளையும் படிப்படியாக அறிமுகப்படுத்தலாம் .உலக அளவில் உள்ள ஒரு போட்டியின் ஆரம்பத்தை இங்கு தொடங்கும் போது கோ-கார்ட்டிங், ஜூனியர் லெவல், நேஷனல் லெவல்னுஅந்த பாதை விசாலமாக்கப்படும் .

 நான்காம் கட்டம்...  


நாம் பார்முலா காரின் அறிமுகத்தை, அதன் மாதிரியை மறை திரு .கரிவரதன் அவர்களின் Formula Maruti Single Seater racing Car (FISSME) ,அடுத்த வந்த திரு .விஜயகுமார் அவர்களின் LGB -Formula Car, Formula LGB Swift,Formula Rolon Chevrolet ,இன்று நம் தல- அஜீத் ஓட்டும் MRF Formula 1600 cc car போன்ற கார்கள் அத்தனையுமே படிப்படியான வளர்ச்சி கொடுத்துள்ளது அதனை பயன்படுத்திகொண்டவர்கள் நம் நாராயண் கார்த்திகேயன் ,அர்மான் இப்ராஹிம் கருண் சந்தோக்கும் .இன்னும் பல பார்முலா கார்களை ஒத்த கண்டுபிடிப்புகள் பராமரிப்பு மற்றும் விலைகளில் குறைந்த கார்கள் உருவாக்கப்படவேண்டும் .

நம் எண்ணங்களில் மாறுதல் அவசியம் .

Natham parameswarimangalam temple

இந்தியாவிலும் தமிழகதிலும் நிறைய கோவில்கள் இருக்கின்றன .ஆனால் பராமரிப்பில் இருப்பதுவும் ,கோயிலுக்குரிய ஆகம நியமங்களை தொடர்ந்துகொண்டு இருக்கும் கோவில்கள் மிக குறைவு .ஆனால் இன்னும் பல புதிய கோவில்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறது .கேட்டால் புண்ணியம் என்கிறார்கள் .அதனால் கடவுளே முன்வந்து சில கோவில்களில் காணாமல் போய்கொண்டு இருக்கிறார்கள் (கடவுள்களே -சிலை திருடுபவர்களின் நெட் வொர்க்கில் உறுப்பினர் பட்டியல்களுக்கு போய்கொண்டு இருப்பது இன்னும் சகஜமாகலாம் !)



மும்பை மற்றும் பிற இந்திய நகரங்கள் புதிய கோவில்கள் கட்டட்டும் .
தமிழகம் இருக்கும் கடவுள்களை காணாமல் போகாமல் காப்பாற்றட்டும் .

 நாளைய தலைப்பு செய்தியின் முன்னோட்டம் .  



நாளைய அபுதாபி ரேஸின் வெள்ளிகிழமை மற்றும் சனிகிழமை பயிற்சி போட்டியில் மெக்ளறேன் மேர்சீடிஸ் அணி சிறப்பாக செயல் பட்டுவருகிறது .

வெள்ளிகிழமை முதல் பயிற்சி போட்டியில் ஜென்சன் பட்டன் 1:40.263 நிமிடத்தை முதல் இடத்தில் பதிவு செய்தார் .


அதே நாளின், இரண்டாவது பயிற்சி போட்டியில் லீவிஸ் ஹேமில்டன் 1:39.586 நிமிடத்தை முதல் இடத்தில் பதிவு செய்தார் .

இன்று நடந்த மூன்றாவது பயிற்சி போட்டியில் லீவிஸ் ஹேமில்டன் 1:38.976 முதல் இடத்தில் பதிவு செய்தார் .


இன்றைய பிறந்தநாள் பார்முலா 1 டிரைவர் .

George Eaton



 

கனடாவின் பார்முலா 1 டிரைவர் ஜார்ஜ் ஈடன் (George Eaton) தன்னுடைய 66 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் ,அவரை வணங்குவோம் .



மீண்டும் நாளை சிந்திப்போம் .
இந்திய நேரம் மாலை 6.30.



Friday, November 4, 2011

இந்திய பார்முலா 1 வரலாற்றின் முன்னுரை .



சுந்தரம் கரிவரதன் அவர்களுக்கு சமர்ப்பணம்.

1983 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நம் இந்திய அணி யாரும் எதிர்பாராமல் வெற்றி பெற்ற அன்றைய இரவு நடந்த வெற்றி விழா விருந்தில் யார் செலவு செய்தார்கள் என்று இன்று வரை எனக்கு தெரியாது என்பதாக கபில்தேவ் ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்ததது போல, இந்தியன் கிராண்ட் ப்ரிக் இன்று நடந்து விட்டது.


அதர்க்காக பல விழாக்கள் நடக்கிறது .ஆனால் அந்த விழாக்களின் பெருமையை கொண்டாட தகுதியான பலரில் - முக்கியமானவரும் ஐரோப்பிய சொத்தான பார்முலா 1  போட்டியை இந்திய கதவை தட்ட செய்த முக்கியமான இரு பார்முலா டிரைவர்கள உருவாக காரணமான மறைதிரு .சுந்தரம் கரிவரதன் அவர்களை இன்று மறந்தால் இன்றைய நாள் தன் நிஜத்தை இழந்து விடும் .



"We, Indians can rub shoulders with the best in the world provided there is adequate corporate sponsorship and increased global opportunities."


போட்டிஆரம்பிக்கும் முன் அனைத்து வீரர்களும் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி மலேசியாவில் செபான்க் சர்க்யூட்டில் நடத்த மிக பெரிய கோர விபத்தில்

Marco Simoncelli

 இத்தாலியின் பைக் வீரர் மார்கோ சிமேன்செள்ளியின் மரணத்திற்கும் அதர்க்குமுன் அக்டோபர் 16 ஆம் நாள் இறந்த டான் வெல்டன் இறப்புக்கும் அஞ்சலி செலுத்தினார்கள் .


இந்திய களத்தின் அறிமுகம் தேவையான அளவுக்கு சகல நாளேடுகளிலும் முதல் பக்கம் வெளியிட்டு ஒரு மாத கொண்டாட்டமாக வந்து இருந்தாலும் நாம் பேசும் இடத்தில் அதை ஏன் விடவேண்டும் ?



ஒரு துப்பாக்கியை உயர்த்தி பிடித்த தோற்றம் .(ஆனால் இதன் பெயரில் சுத்த சைவம் .புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்.).சுமார் 875 ஏக்கர் நில பரப்பில் வியாப்பித்துள்ள இந்த களம் 5.14 கி.மீ நீளத்துக்குள் 308.4 கி.மீ நீளத்தில், 60 சுற்றுக்களுடன் 16 வளைவுகளுடன் ஜெர்மனியின்- ஹெர்மன் டில்க்கே களஅறிவாற்றலால் உருவாக்கப்பட்ட அழகிய களம் நம்முடைய இந்திய களம்.


1700 கோடி செலவில் ஜெயப்பி குரூப்பின் அனைத்து துறைகளிலும் (Engineering ,Construction ,Cement, Power, Hospitality,Real Estate) அவர்களுக்குள்ள அனுபவத்தின் வெளிப்பாட்டை இந்த உலகுக்கு சொல்ல உதாரணமாக் எடுத்து கொண்டதோடு அவர்களின் கனவாகவும் இருந்ததாக 


அதன் மேனேஜிங் டைரக்டர் சமீர் கவுர்(Sameer Gaur)  தெரிவிக்கிறார் .ஒரு லட்சத்து இருபதாயிரம் மக்கள் அமர்ந்து பார்க்கும் வசதி செய்ய பட்டு இருக்கிறது ஸ்டேடியம்.
 காமன் வெல்த் விளையாட்டில் காணமல் போன நம் மரியாதையை மீட்டு எடுக்க பட்டதர்க்கு இங்கு வந்த 95000 ரசிகர்களே சாட்சி .

ஆனால் ,இந்திய புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் ஒரு கை ஓசை அல்ல .மிக பெரிய பின் புலம் இந்த உருவாக்கத்திர்க்கு அஸ்திவாரமாக உள்ளது .


இந்திய நேரப்படி போட்டி மதியம் மூன்று மணிக்கு கோலாகளமாக  துவங்கியது...

முதல் சுற்று ...
செபாஸ்டியன் வெட்டலின் ஆரம்ப வேகம் இந்திய களத்தில் இருந்ததாக சொன்ன அத்தனை தூசிகளையும் முகவரியில்லாமல் பண்ணிவிட்டது .அவ்வளவு வேகம் ...
வழக்கம் போல இரண்டாம் இடத்தில் துவங்கிய மார்க் வெப்பர் மூன்றாம் இடமும் மூன்றாம் இடத்தில் தொடங்கிய பெர்னாண்டோ அலோன்சா நான்காம் இடத்திர்க்கும் நான்காம் இடத்தில் தொடங்கிய ஜென்சன் பட்டன் மிக அருமையாக இரண்டாம் இடத்திலும் தங்கள் வேகத்தை பிடிக்க ,
பின்னால் மிக பெரிய மோதல் உருவானது .
ஆம்.15 ஆம் இடத்து வில்லியம்ஸ் அணியின் பேரிகொலோ 17 ஆம் இடத்தில் தொடங்கிய சப்பர் அணி-  கொபயாசி 19 ஆம் இடத்து லோட்டஸ் அணி -ட்ரூலி ,20 ஆம் இடத்து சப்பரின் இன்னொரு வீரர் -பெர்ஸ் ,22 ஆம் இடத்து கிளாக் மோதி கலைந்தார்கள் .ஆனால் பரிதாபமாக இந்த மோதலில் சப்பர் அணியின் கொபயாசி வெளியேறும்படி ஆகிவிட்டது .
இரண்டாவது சுற்று ...
முதல் சுற்றில் கும்பலாக மோதிக்கொண்டதில் ஒருவரான விர்ஜின் அணியின் கிளாக் வெளியேறினார் .

மூன்றாம் சுற்று ...
ரெனால்டின் -ப்ரூனே சென்னா அருமையான தன்னுடைய பத்தாம் இடத்தை தககவைத்துகொண்டார் .


நான்காம் சுற்று ...DRS இயக்க அனுமதிக்கப்பட்டது .

ஐந்தாம் சுற்று ...
இரண்டாம் இடத்தை பிடிக்க வெப்பர் தளராமல் பட்டனை நெருங்கி அதிரடியாக முற்சிக்க முடியாமல் போனது .

ஏழாம் சுற்று ...
வெட்டல் - பட்டனை 4.7 வினாடி இடைவெளியில் பறந்து கொண்டு இருக்க ,ஹேமில்டன் (ஆறாம் இடம் ),ஆலோசாவை துரத்தி கொண்டு இருக்க -அங்கு கேமிராவின் கண் சிமிட்டாமல் (விலகாமல் ) தொடர்து கொண்டு இருந்தது .

பதிமூன்றாவது சுற்று ...
பால்டி ரெஸ்டா - செர்ஜியோ பெர்செய் முந்தினார் .

பதினெட்டாம் சுற்று ...
பிலிப் மாசா டயர் மாற்றம் செய்தார் .

இருபதாம் சுற்று ...
வெட்டால் 3.2 வினாடியில் டயர் மாற்றம் செய்து ,தன்னுடைய முதல் இடத்திலே மீண்டும் தொடர்ந்தார் ..

இருபத்தி ஒன்று ...
மைக்கேல் ஷூமேக்கர் எட்டாம் இடத்தில் தொடரும் புருனே சென்னாவின் இடத்தை பிடித்தார் .


இருபத்தி நாலாவது சுற்று ...
அது நடந்தே விட்டது .பிலிப் மாசா மற்றும் ஹேமில்டன் இருவர்மேல்  மையம் கொண்டு இருந்த  கேமிராவின் பார்வை வீண் போகவில்லை .மாசாவை துரத்திக்கொண்டு இருத்த ஹேமில்டன் வளைவில் முந்த முயசிக்க மாசா திடீரென வேகம் குறைய ஹேமில்டன் கார் முன்பகுதி பசிகொண்ட சுராவை போல மாசாவின் பெர்ரரியை ,தாக்கியது 


இந்த காட்சியை கண்ட நம் மிஸ்டர் பீன் -Rowan Atkinson ஹாலிவுட்நடிகரின் -எபோதும் வேடிக்கையை கொண்டு இருக்கும் முகம், அதை  இழந்து சீரியஸ் ஆக்கிவிட்டது .அவர் லூயிஸ் ஹெமில்டனின் நண்பர் .மெக்லரண் அணிக்காக வந்திருந்தார் .

பெர்ராரி முன்பகுதி தரையில் உரசி தீப்பொறி பறக்க அப்படியே தொடர்ந்தார் மாசா .ஆனால் ஹெமில்டன் உடனே பாதிக்க பட்ட முன் பகுதியை உடனே மாற்றினார் .
மோதல் விசாரணக்கு உட்படுத்தப்பட்டது .


இருபத்தி நான்காவது சுற்று.. 
டோரோ ரோசோ அணியின் - செபாஸ்டியன் ப்யுமி ,காரின்  எஞ்சின் கோளாறால் வெளியேறினார் .

முப்பத்தி ஒன்று ...
ஹெமில்டன் -மாசா மோதலில் ,மாசாவின் தவறான ஓட்டுதளுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அவர் போட்டியிலிருந்து விலகினார் .
இந்த மோதலை - மீண்டும் மோதிகொண்டார்கள் என்பதாக பத்திரிகைகள் வர்ணிக்கின்றன ...
இத்ர்க்குள் ஹெமில்டன் எட்டாம் இடத்தில் இருக்கும் ஜெய்மே அல்குசுரையை பிடித்தார் .

இந்திய களம் தொழில் நுட்பம் முன்னேற்றம் அடைந்த அணிகளுக்கு மட்டுமே மிக சாதகமாக அமைக்கப்பட்டுவிட்டது .ஓட்டுனரின் திறமை இரண்டாம் இடம்தான் .முந்திய வண்டி முந்தியே சென்று கொண்டு இருக்கிறது .எவ்வித பெரிய மாற்றமும் நடக்கவில்லை .

நாற்பத்தி ஒன்று...
 இந்த வருட தொடரில் முதல் இடத்தை ஒருமுறையாவது ருசிக்க வேண்டும் என்ற வெப்பரின் ஆசை அனல் பறக்க அவரின் டயரின் மூலம் வெளிபடுத்த ,இதெல்லாம் முடியாது என்பது போல பட்டன் பறக்க வேக விவாதங்கள் தொடர்ந்தன .

நாப்பத்தி எட்டாவது ...
தன் அணியின் ரோஷ்பெர்க்கை(ஆறாம் இடத்தில் ) பின்தொடர்ந்த மைக்கேல் ஷூமேக்கர் ரோஷ்பெர்க் டயர் மாற்ற செல்ல ஐந்தாம் இடத்தில் ஷூமேக்கர் .

அறுபதாவது சுற்று ...
இந்திய மண்ணில் போட்டியின் கடைசி சுற்று .



எல்லையை முத்தமிடுகிறது ரெட்புல்லின் RB 7 கார்.

 வெற்றிக்கொடியை பறக்க விடுகிறார்- நம் இந்திய கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் .

முதல் இடம் .



ரெட்புல் ரேனால்ட்டின் -செபாஸ்டியன் வெட்டல் 1 மணி 30 நிமிடம் 35 வினாடி மற்றும் 002 மில்லி வினாடியில் கடந்து வெற்றி கோப்பையை (வெற்றிக்கனியின்- ரசத்தை)சாம்பைன் ஒயின்(champagne) ஊற்றிச்சுவைத்தார் .


முதல் இடத்திர்க்கான கோப்பையை வழங்கியவர்' சாட்சாத் நம் மாயாவதி அம்மையார் அவர்கள் .

 அதர்காக,இந்திய F1 போட்டியில் அரசியல் கலப்பு இல்லாமலும் போகவில்லை இந்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேகன் அழைக்கப்படவில்லை . காரணம் வரிவிலக்கு தரவில்லையாம் .காங்கிரசின் எதிர்ப்பாளர் மாயாவதிக்கு இது கூட ஒரு காரணம்தான் !

(சீனாவிற்கு ஒரு மஞ்சள் ஆறு ( ஹோவாங்கோ ஆறு ) இந்தியாவுக்கு நம் அரசியல் வாதிகள்- என்பது சொல்லவும் வேண்டுமா ? ஆனால் இரண்டுமே துயரம்தான் !)

இதுவரை நடந்த பதினேழு போட்டிகளில் முதலிடத்தில் இது பதினோராவது முதலிடத்து வெற்றி .வெட்டல் ஏற்கனவே பார்முலா 1 போட்டிகளில்,புதிய உலக சாதனை பயணத்தில் இருக்கிறார் .இதன் மூலம் 374 புள்ளிகளை பெற்றுள்ளார் .


இரண்டாவது இடம், 


மேக்ளரனின் -ஜென்சன் பட்டன் .வெட்டளுக்கு அடுத்த நிலையில் இந்த ஆண்டின் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக்கொள்ள போராடி வருகிறார் .இதுவரை 240 புள்ளிகள் பெற்றுள்ளார் .

மூன்றாவது இடம் ..


பெர்ரரியின் -பெர்னாண்டோ அலோன்சா .இவருக்கும் இரண்டாம் இடம் கிடைக்க பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது .இவர் இத்துடன் 227 புள்ளிகள் பெற்றுள்ளார் .



இந்த போட்டியில் மூன்றாம் இடம் வந்த அலோன்சாவுக்கு,விக்கி சந்தோக் (கருண் சந்தோக்கின் தந்தை ) கோப்பையை வழங்கினார் என்பதோடு இந்திய களத்தின் உருவாகத்திர்க்கு இவர் பங்கும் பெரியதுதான் . இவர் FMSCI (Federation of Motor Sports Clubs of India ) தலைவர் .


இவர்களை அடுத்து, இரண்டாம் இடத்தை கைப்பற்றும் முனைப்பில் இருப்பவர்கள் மார்க் வெப்பர் 221 புள்ளிகள் ,லூயிஸ் ஹெமில்டன் 202 புள்ளிகள் .



பத்தொன்பது கார்கள் மட்டுமே முடிவில் இருந்தது .இதில் நம் இந்திய நம்பிக்கை- நரேன் கார்த்திகேயன் ,தகுதி சுற்றில் இருபத்தி இரண்டாம் இடம் துவங்க வேண்டிய நரேன், மைக்கேல் ஷூமேக்கர் காருக்கு( முதல் தகுதி சுற்றில்) வழி மறித்த விவகாராத்தால் இருபத்தி நான்காம் இடத்தில் துவங்கி பதினேழாம் இடம் பிடித்தார் .இந்த ஆண்டில் இவரின் ஒன்பதாவது போட்டி ஆகும் .ஏற்கனவே லோட்டஸ் அணியில் கருண் சந்தோக் நிராகரிக்க பட்ட நிலையில் ,நரேன் ஆறுதல் அளித்தார் .



இந்திய களத்தில்மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாஹார போர்ஸ் இந்திய அணி இரண்டு புள்ளிகள் மட்டுமே பெற்றது .அந்த அணியின் ஆண்ட்ரியன் சட்டில் இந்த புள்ளிக்கு சொந்தகாரர் .அந்த அணயின் பால்டி ரெஸ்டா பதிமூன்றாவது இடமே வந்தார் .


இந்த முறை மைக்கேல் ஷூமேக்கர் ஐந்தாவது இடம் வந்து அசத்தினார் .நிக்கோ ரோஷ்பெர்க் ஆறாவது இடம் .மொத்தத்தில் மேர்சீடிஸ் அணி -அணிகளின் வரிசையில் ,நானகாவது இடம் என்பது தெளிவு .



அடுத்த போட்டிநவம்பர் 13 ஆம்தேதி - சூரிய சக்தியின் அபரிதமான கொடையால் அபுதாபியின் யாஸ் மரினா சர்க்யூட்டில் மாலை 6.30 க்கு .(இந்தியா நேரப்படி )போட்டி துவங்க இருக்கிறது .இந்த ஜோலிப்பின் மயக்கத்தை ரசிக்க, தவற விடவேண்டாம் .அடுத்த நம் சந்திப்பு இங்குதான் ..




இன்று ,இந்த பதிவின் போது பார்முலா டிரைவர் -Jacques Villeneuve Sr. தன்னுடைய 58 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் .அவரை வணங்குவோம் .



இந்திய போட்டி தவறே நடக்காமல் சகல விதத்திலும் சிறப்பாக மட்டுமே நடந்ததா ?பிரச்சனைகள் ஏதும் இல்லையா என்பதர்க்கு நம்சார்பாக F1 BOSS- Bernie Ecclestone தன் காதுகளுக்கு வந்த செய்திகளுக்கு என்ன பதில் சொன்னார் ?

 "Normally you get people complaining if there is something to complain about, but I haven't heard any complaints - nothing." 

அதுவே நம் பதிலாக இருக்கட்டுமே ! (குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை என்பார்களே ! )



  இந்திய களத்தின் அழகிய யுவதிகளின் வழி அனுப்புதளுடன் நாம் இப்போது வ்வ்வர்ர்ரூம் விடை பெறுவோம் 











Saturday, October 29, 2011

இந்திய பார்முலா 1 வரலாற்றில் முதல் பதிவு

இந்திய பார்முலா 1 வரலாற்றில் முதல் பதிவு.




இந்திய புத் இன்டர்நேஷனல்சர்க்யூட்டில் இரண்டாவது பயிற்சி போட்டியும் முடிந்துவிட்டது நேற்று (28.10.2011) மாலை இன்று நடக்க வேண்டிய மூன்றாவது பயிற்சி போட்டியும் ,முடிந்து விட்டது .அதன் பிறகு நடந்த தகுதி சுற்றுக்கான முக்கியமான போட்டி முடிவுகள் வந்து விட்டது .



இந்திய களத்தை பற்றிய சகல விசயன்களும்  விரிவாக ஆராயப்பட்டுவிட்டது.



செபாஸ்டியன் வெட்டல் ...
சவால் மிகுந்த ,அதே சமயம் சுவாரஸ்யமாக களம் வடிவைமைக்கப்பட்டுள்ளது,மூன்றாம்-நான்காம் வளைவுக்கிடையேயுள்ள   நீண்ட அதிவேக பாதை முந்தி செல்ல அருமையானதாக உள்ளது .


மார்க் வெப்பர் ....
வளைவுகள் மிக அருமையாக ,சவால் மிக்க பார்முலா1  போட்டுக்குரிய வகையில் அமைக்க பட்டுள்ளது .மூன்றாம் வளைவை தவிர மற்றுள்ள வளைவுகளை ஐந்தாம் கியரில் ஓட்டியே கடந்து செல்ல முடியும் என்கிறார் .


லூயிஸ் ஹாமில்டன்...
நான் பார்த்தவரையில் மிக அழகான வேகமும் அதே சமயம் நல்ல பிடிப்புடன்(Grip)  கூடிய
ஓடுபாதைகள் .கள அமைப்பாளர் மிக பாராட்டுக்குரியவர் என்கிறார் .


ஜென்சன் பட்டன் ...
இந்த களத்தின் போட்டியில் பங்கு பெறுவது ரசிக்கும்படியாக உள்ளது .மூன்றாம் மற்றும் ஐந்தாம் எண் வளைவுகள் கடினமாக வளைவுகள் .இந்த களத்தை ரசிக்கிறேன் என்கிறார் .


பெர்னாண்டோ அலோன்சா ...
இது மிக அருமையான களம் .பரந்த அழகான வளைவுகள் .அதை சராசரி வேகத்தில் கடக்கும் படி செய்திருப்பது அருமை என்கிறார்.


பிலிப் மாசா...
மிக அருமையான வளைவுகள் -சிறந்த ஓட்டுனர்கள் மட்டுமே உணரமுடியும் .களத்தின் மிக பல பகுதிகள் அகலமாக இருப்பது முந்திச்செல்லும் வகையில் இருப்பது அருமை என்கிறார் .


நிக்கோ ரோபெர்க் ...
உலகின் மற்றைய புதிய களத்தை போல் இல்லாமல் அழகிய வளைவுகள் உள்ளது .குறிப்பாக இரண்டாம் வளைவின் தாழ்ந்த மற்றும் உயர்ந்த அமைப்பு ரசிக்க வைக்கிறது .


மைக்கேல் ஷூமேக்கர் ...
களத்தின் வடிவமைப்பு அருமை .என்கிறார் .


புருனே சென்னா ...
களத்தின் வளைவுகள் மேலும் மேலும் முன்னேறி செல்ல தூண்டும் வகையில் அமைக்க பட்டு இருப்பது விரும்பும் படியாக இருக்கிறது என்கிறார்.


ஆண்ட்ரியன் சாட்டில் ...
களம் அருமையான வளைவுகளையும் முந்தி செல்லும் வகையிலும் பிரமாதமாக வடிவமைக்க பட்டுள்ளதாக சொல்கிறார் .

கமோய் கொபயாசி ,செர்ஜியோ பெரஸ் ,செபாஸ்டியன் பூமி ,ஜெய்மி அழகுசுரெய் ,ஜர்னோ டருளி ஆகியோரும் ஒத்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் .

களவடிவமைப்பில் மிக பாராட்டுக்களை பெற்றுவிட்டோம் .முதல் படி .வெற்றி .



ஆயிரத்து எழுநூறு கோடி செலவில் கட்டபெற்ற களம் போட்டி பாதையில் எங்கும் தூசி படலங்கள் என்பது ஏகோபித்த ஓட்டுனர்களின் புகார் .
அடுத்து சித்தர்கள் வாழும் பூமியான சதுரகிரியில் பல சித்தர்கள் நாய்கள் உருவத்தில் வழிநடத்துவதாக நம்பிக்கை உண்டு .அது என்னை போல இந்திய பார்முலா 1 கனவுடன் உயிர்நீத்த ஆன்மாக்கள் நாய்கள் வடிவில் களத்தில் பத்தாவது வளைவில் பாய்ந்து வந்ததை ரெனால்ட் அணியின் புருனே சென்னவாவின் பார்வையில் பட்டுவிட்டது .(2008 ஆம் ஆண்டில் இது மாதிரி ஒரு நாய் துருக்கி களத்தின் GP 2 போட்டியில் குறுக்கே புகுந்து ,அவர் கார் முன்பகுதி சேதமடைந்து போட்டியை விட்டு வெளியேறும்படி ஆகிவிட்டது ).எனவே மனிதர் கதி கலங்கி விட்டார் .


உடனே சிவப்புக்கொடி காட்டி போட்டி நிறுத்த பட்டு மீண்டும் அந்த ஆத்மாவை இல்லை நாயை விரட்டிவிட்டார்கள் .இது போட்டி அமைப்பாளரை தர்மசங்கடத்திற்கு தள்ளிவிட்டது .ஆனால் இது அவ்வளவு சீரியஸாக எடுத்துகொள்ள படவேண்டியதில்லை என பார்முலா பெர்மி எச்லச்டோனால் ஆறுதல் படுத்தப்பட்டார் .
(ஒருவேளை அவர் சதுரகிரி பற்றி அறிந்திருப்பாரோ ?).




இந்திய போட்டியின் முடிவுகளை நிர்ணயிக்கும் தகுதி சுற்றுக்கான முடிவுகள் ..
இந்திய களத்திலும் வெட்டலின் கொடிதான் முதல் இடத்தில் நடப்பட்டு இருக்கிறது .1:24.178 நிமிடத்தில் கடந்து மற்றவர்களுக்கு நேர நிர்ணயம் செய்து விட்டார் .

அடுத்து மார்க் வெப்பர் இரண்டாம் இடம் .மூன்றாம் இடம் பெர்னாண்டோ அலோன்சா .நான்காம் இடம் ஜென்சன் பட்டன் .ஐந்து-லீவிஸ் ஹேமில்டன் .கடந்த நேரப்படி இவர் இரண்டாம் இடம் ஆனால் பயிற்சி போட்டியில் மஞ்சள் கொடிக்கு மதிப்பு அளிக்காததால் ஐந்தாம் இடம் .ஆறு -பிலிப் மாசா ,.ஏழு- நிக்கோ ரோச்பெர்க், எட்டு -ஆண்ட்ரியன் சட்டில்,ஒன்பது செபாஸ்டியன் ப்யுமி ,பத்தில் - ஜெய்மி அழகுசுரெய் .




நாளைய சுவாரசியத்தை அறியும் முன் மதியம் மூன்று மணிக்கு போட்டி ஆரம்பிக்கிறது ஆனால் இரண்டு மணிக்கே காண தொடங்கினால் போட்டி பற்றி பல ஆழமான விசயங்கள் அறியலாம் .வாருங்கள் அந்த அற்புத நிகழ்வை .