பார்முலா1 போட்டிகள் உலகமெல்லாம் இவ்வளவு தூரம் கிளை பரப்பி வளர்ந்தது ஒரு தன்னார்வ(non-profit association) கூட்டமைப்பு மூலம் என்பது ஒரு ஆச்சர்யமான உண்மை .பிரெஞ்ச் தலைநகரம் பாரிசில் அகில உலக தானுந்து கூட்டமைப்பு (FIA) Fédération Internationale de l'Automobile .
1904 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் நாள் The Association Internationale des Automobile Clubs Reconnus (AIACR) என்ற பெயரில் தொடங்க்கப்பட்டது .இரண்டாம் உலக யுத்தம் காரணமாக மீண்டும் 1920 ஆண் ஆண்டு தொடர்ந்தாலும் ,1946 ல் போட்டி விதிமுறைகள் , சுற்றுசூழல் பாதுகாப்பு ,நடத்தைகள் ,பயன்படுத்தும் பொருட்கள் என முழுவடிவம் பெற்றது . அந்த விதிமுறைகளின்படி பார்முலா-1 போட்டிகள் முதல் முறையாக இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் களத்தில்தான் நடைபெற்றது.
இன்றைய நிலையில், உலகின் ஐந்து கண்டங்களில்(ஆசியா ,ஆப்பிரிக்கா ,ஐரோப்பா ,தென் அமெரிக்கா,ஓசியானியா ) 132 நாடுகளில் உள்ள 227 தானுந்து (Auto) அமைப்புகளின் தவிர்க்கமுடியாத சக்தியாக எழுந்துநிர்க்கிறது FIA .அதோடு ஒவ்வொரு ஆண்டும் உலகில் நடக்கும் பார்முலா1 போட்டிகளின் அட்டவணைகள் ,நாடுகள் ,களத்தின் தன்மைகள் என பல நுட்பங்கள் FIA அங்கீகரித்த பின்னர்தான் நடத்தப்படுகிறது .
நடப்பு 2011 ஆண்டில் FIA 20 நாடுகளில் அரசியல் நிலைப்பாடுகளின் காரணமாக பக்ரைனில் போட்டி நடக்கவில்லை( Bahrain Formula One Grand Prix ) ஏனைய 19 நாடுகள் பட்டியல் இடப்பட்டு இருக்கிறது .
Dates | Races | Country |
27.03.2011 | Grand Prix of Australia | AUS |
10.04.2011 | Grand Prix of Malaysia | MYS |
17.04.2011 | Grand Prix of China * | CHN |
08.05.2011 | Grand Prix of Turkey | TUR |
22.05.2011 | Grand Prix of Spain | ESP |
29.05.2011 | Grand Prix of Monaco | MCO |
12.06.2011 | Grand Prix of Canada | CAN |
26.06.2011 | Grand Prix of Europe | ESP |
10.07.2011 | Grand Prix of Great Britain | GBR |
24.07.2011 | Grand Prix of Germany | DEU |
31.07.2011 | Grand Prix of Hungary | HUN |
28.08.2011 | Grand Prix of Belgium | BEL |
11.09.2011 | Grand Prix of Italy | ITA |
25.09.2011 | Grand Prix of Singapore | SGP |
09.10.2011 | Grand Prix of Japan | JPN |
16.10.2011 | Grand Prix of Korea | KOR |
30.10.2011 | Grand Prix of India * | IND |
13.11.2011 | Grand Prix of Abu Dhabi | ARE |
27.11.2011 | Grand Prix of Brazil | BRA |
.
இதில் 9 நாடுகளை சார்ந்த 12 அணிகள் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .
1.இந்தியா அணி
2.இங்கிலாந்து அணிகள்
3.இத்தாலி அணிகள்
4.ஜெர்மன் அணி
5.பிரெஞ்ச் அணி
6.ஆஸ்திரிய அணி
7.சுவிஸ் அணி
8.மலேசியா அணி
9.ஸ்பெயின் அணி
ஒவ்வொரு அணியும் தான் விரும்பிய ஓட்டுனர்களை (pilot )
நியமித்துக்கொள்ளும் 14 நாடுகளை சேர்ந்த 24 இந்த போட்டிகளில் பங்கேற்கிறார்கள் .
இந்தியா -1
ஜெர்மன் வீரர்கள்-6
MICHAEL SCHUMACHER , NICO ROSBERG ADRIAN SUTIL
NICK HEIDFELD SEBASTIAN VETTEL TIMO GLOCK
இங்கிலாந்து -3
PAUL DI RESTA JENSON BUTTON LEWIS ஹமில்டன்
இத்தாலி-2
VITANTONIO LIUZZI JARNO TRULLI
ரஷ்யா-1
ஸ்பெயின் -2
ஆஸ்த்ரேலியா -1
பிரேசில் 2
சுவிர்ச்சர்லாந்த்-1
பெல்ஜியம்-1
பின்லாந்த -1
வெனிசுலா-1
மெக்ஸிகோ-1
ஜப்பான் -1
நாம் பேசிக்கொண்டு இருக்கும்போது ஒரு போட்டியே முடிந்து விட்டது
· நம் வேகத்தின் அடுத்த கட்டம்
போட்டிக் களம்
1 comment:
நல்ல தகவல்... அருமை... நல்ல உழைப்புங்கூட :) வாழ்த்துக்கள்... மிக விரைவாக கற்றுக்கொண்டதற்கு... :)
Post a Comment