ஒரே அணியின் வெற்றியும் அதன் ட்ரைவருமே தொடர்ந்து வெற்றியை குவிப்பதுமே போரடிடித்தது F1 போட்டிகள் மேல் .அப்புறம் டெலிக்காஸ்ட் உரிமையை குளறுபடிகளும் என்னை F1 போட்டிகள் மேல் உள்ள ஊடலை அதிகப் படுத்தி வைத்து விட்டது.இருந்தாலும் ஃபார்முலா 1 போட்டிகளின் மேல் உள்ள காதலில்தான் எனது வலைத்தள பயணம் முதன் முதலாக தொடங்கியது .எனது இரண்டு சக்கர வாகனத்தில் 60 கி.மீ வேகத்திர்க்கு மேல் போனாலே கால் லேசாய் உதறல் எடுப்பதை தவிர்க்க முடியாத எனக்கு 360 கி.மீ வேகத்தில் பாயும் ஃபார்முலா 1 கார்களை பற்றி எழுதும் ஆர்வம் மட்டும் தீராத காதலாக தொடர்கிறது...
இதன் மேல் காதலுக்கு உலகத்தின் வேக ப்ரியர்களின் பார்வை இங்கு குவிந்து இருப்பது மட்டுமல்ல , உலகின் F1 - Road Course Racing Car ன் தொழில்நுட்ப ஆழம் .என்னதான் பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட சாலைகளில் ( Circuits ) போட்டி நடந்தலும் அதன் கண்டு பிடிப்புகள் அத்தனையும் ஏதாவது ஒரு விதத்தில் சாதரண மோட்டார் துறைகளுக்கு முன்னுதாரணமாகவும் ,புதிய வழி நடத்தலுக்கும் ஒரு வகையில் உதவி கொண்டேதான் இருக்கிறது .
இரண்டாவது மிக பெரிய காரணம் பதிவுகளை பற்றிய புதிய விசயங்களை தேடும் போது வெகு புது விசயங்களை அறிந்து கொள்ள வழி தெரிகிறது .என்னதான் வேகம் கொண்ட F 1 காரானாலும் அதனை செலுத்துவது ஒரு மனிதனும் அவனின் சமயோகித புத்தியும்தான் வெற்றியை பரிசாக்குகின்றன என்ற தாரக மந்திரம் என்னை வெளியே வேறு வலைப்பகுதிக்குள் பதிவுகளில் பயணம் செய்தாலும் மீண்டும் மீண்டும் என்னை வேகம் எனும் மொழிக்குள் இழுத்து வந்து நிறுத்துகிறது .
போதிய பதிவுலக அறிவு வளமை இல்லாததால் கடந்த 94 பதிவுகள் என்னுடைய தேடலாக வெகு உழைப்புக்கு பின் ஒவ்வொரு பதிவுகளையும் பதிவு செய்தாலும் படிப்பவர்களுக்கு எது , எவ்வளவு தேவை என்பதில் என் கவனம் போகவில்லை .ஒவ்வொரு சுற்றையும் ( Lap By Lap ) எழுதி போரடித்து விட்டேன் .தமிழில் இப்படி ஒரு பதிவு இருக்க வேண்டும் என்ற பிடிவாதம் படிப்பவர்களின் மன நிலையை கவனிக்க தவறிவிட்டது .
போட்டிகளில் உள்ள சுவாரசியஙளின் பிரதிபலிப்பாக இருப்பதே போதும் என்ற முடிவுடன் இனி அதன் வெற்றிகளை பற்றிய ஒரு பார்வையை பதிவிடுவதன் மூலம் இந்த வேகம் எனும் மொழி பகுதியில் நீடிக்கலாம் என்று நினைக்கிறேன்
இவ்வளவு நாட்களாக நண்பர் சுகுமார் இந்த பதிவுலகிற்கான வடிவமைப்பை பயன் படுத்தாமல் இது வரை தவற விட்டதே எங்கோ உறுத்துகிறது ...