உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Wednesday, March 27, 2013

Malaysia F1 Hero - செபாஸ்டியன் வெட்டல்


          அழகிய மலேசியாவின் - Sepang International Circuit ல் 24 மார்ச் ஃபார்முலா 1  இரண்டாவது சுற்று போட்டி ஹாயிறு அன்று நடந்தது.சுற்றி பார்க்கவைத்தே காசு சம்பாதிக்கும் திறமை சிங்கப்பூருக்கும் மலேசியாவிர்க்கும் கை வந்த கலை! .அது ஃபார்முலா களத்திலும் நிரூபிக்கப்பட்டுள்ளது .குடைக்குள் மழை போல குடைக்குள் F1 ரசிகர்கள் !. மொத்த அரங்கு 1 லட்சத்து 30 ஆயிரம் மக்களை ஏற்க்கும் வகையில் வடிவைமக்கப்பட்டுள்ளது.


சரி இன்றைய போட்டிக்கு போவோம் .

      வெள்ளி அன்று நடந்த முதல் பயிற்சி போட்டியில் ரெட்புல்-மார்க்  வெப்பர் முதலிடமும் 2 ஆவது ப.போ.லோட்டஸ் ரெனால்டின் -கிமி ரைகொணன்.சனிக்கிழமை நடந்த 3ஆவது ப.போ ரெட்புல்- செபாஸ்டியன் வெட்டல். ஆனால் தகுதி சுற்றில் தனது முந்தைய இரண்டு ஆண்டுகளின்  தொடர்ந்து முன்னிலையை பெற்றது போல தன் இடத்தை நிலைநிறுத்திக்கொண்டது ரெட்புல்.



போட்டிகளின் அணி துவக்க வீரர்கள் (Gride Position ).
முதலிடம்  - ரெட்புல்- செபாஸ்டியன் வெட்டல்.
இரண்டு   - ஃபெராரி - ஃபிலிப் மாஸா
மூன்று    - ஃபெராரி - ஃபெர்னாண்டொ அலோன்சா 
நான்கு    - மெர்சடீஸ் - லீவ்ஸ் ஹேமில்டன் 
ஐந்து      - ரெட்புல் - மார்க் வெப்பர்  
ஆறு      - மெர்சடீஸ் - நிக்கொ ரோஸ்பெர்க்.

ரைகொணன் தவறு !


       மூன்றாவது தகுதி சுற்றில் லோட்டஸ் ரெனால்ட்டின் - கிமி ரைகொணன் ,மெர்சடீஸ் - நிக்கொ ரோஸ்பெர்கை 12 மற்றும் 15 ஆம் வளைவுகளில் ஓரம் கட்டிய குற்றதிர்க்காக- ஏழாம் இடம் தகுதி பெற்று வந்தவரை மூன்று இடம் தள்ளி 10 ஆம் இடத்திலிருந்து போட்டியை தொடங்க சொல்லிவிட்டார்கள் !

செபாஸ்டியன் வெட்டலுக்கு இரண்டு சவால்கள்.
      முதலிடத்தில் போட்டியை துவங்கினாலும்  வெட்டலுக்கு இரண்டு சவால்கள்.ஒன்று ஃபெராரியிடமிருந்து காத்து இருக்கிறது.அதோடு 4 ஆம் இடத்தில் ஹேமில்ட்டன் இரண்டாவது சவால் .ஒரு சின்ன அழுத்தம் அணிகளின் தலைமையிடமும் , ஆர்வம் ரசிகளிடமும் விரவி கிடந்தன .


முதல் சுற்று...
       சீறிபாய்ந்த ஃபெராரி கார்களை மிக சாதுர்யமாக ஓரங்கட்டி வெட்டல்  முதலிடத்தை தக்கவைத்து கொள்ள ,3 ஆம் இடத்து அலோன்சா 2 ஆம் இடம் வர ,நிச்சயம் ஏதோ நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பில் முதல் இடத்தை எல்லோரும் கவனிக்க இரண்டாம் வளைவில் அலோன்சா தன்னுடய காரின்  Front Wing ஐ வெட்டலின் காரில் மோதி கார் மெல்ல களத்தின் ஓரத்தில் உள்ள சரலை கள்களின் மீது பயனித்து நின்றது . Front Wing  பெரும்பகுதியை இல்லாமல் இருப்பது தெரிந்தது .முடிந்தது அலோன்சாவின் கனவு .


இரண்டாம் சுற்று ..
        இந்த களோபரத்தை பயன்படுத்திக்கொண்ட மார்க் வெப்பர் மூன்றாம் இடம் முன்னேறி அதோடு நிற்காமல் - இரண்டாம் இடம் முன்னேறினார் அங்கிருந்த மாசாவை ஓரங்கட்டினார் .மீண்டும் மூன்றாம் இடதில் இருந்த மாசாவை லீவிஸ் ஹேமில்ட்டன் பின்னுக்கு தள்ளி நான்காம் இடத்திற்க்கு தள்ள ..

ஆறாம் சுற்று ..
வெட்டல் தன்னுடய Intermediate tyre க்கு விடை கொடுத்து விட்டு Medium Tyre  மாட்டிக்கொண்டு மீண்டும் பறந்தார் ..

எட்டாம் சுற்று ...
      மார்க் வெப்பரை தொடர்ந்து டயர் மாற்றம் செய்ய பிட் லேன் நுழைந்த மெர்சடீஸ் - லீவ்ஸ் ஹேமில்டன் ஒரு மிக பெரிய சுவாரஸ்யத்தை செய்தார் .


                      தன்னுடய பிட்லேனுக்கு இரண்டு தள்ளி இருக்கும் McLaren-Mercedes பிட்லேனுக்குள் நுழைந்து விட அதிர்ச்சியில் முன் பகுதி Jack Man யோசித்து விலகி கொள்ள ,மீண்டும் வெளியேறி தன்னுடய பிட்லேன் நுழைந்து டயர் மாற்றம் செய்து போக ( இதை பற்றி பின்னால் நினைவு கூர்ந்த ஹேமில்ட்டன் 6 வருட ஹாபகம் என்று நெகிழ்ந்து போனார்.  ) ஆனால் இதன் மூலம்  ஒரு மிக மோசமான விசயம் நடந்தது .இரண்டாம் இடத்தை பிடிக்கும் வாய்பை இந்த சில வினாடிகளை காப்பாற்றி கொள்ளாததால் ரேசின் முடிவில் இழந்தார் ஹேமில்ட்டன் .


20 ஆம் சுற்று ..
        வெப்பர் இந்த முறை Hard Compound Tyre தேர்வு செய்ய ஏதோ காரணம் இருந்தது .ஹேமில்டன் சிறு தவறினால் சுமார் நான்கு வினாடிகள் வெப்பருக்கு முதலிடத்து வெற்றி வாய்பை தந்து விட்டார் .அதாவது முதல் இரண்டு இடம் ரெட்புல் என் அவர்கள் அணி தீர்மானித்து விட்டது .அதனால்தான் வெப்பரின் டயர் மாற்றம் முதலில் (வெட்டல் இன்னும் டயர் மாற்றம் செய்ய வரவில்லை ).


22 ஆம் சுற்று ..
           இந்திய -ஃபோர்ஸ் இந்திய அணியின் -Paul di Resta மூன்றாவது டயர் மாற்றத்தில் போட்டியிலிருந்து நிறுத்தப்பட்டு கேரேஜுக்குள் பின்புறம் தள்ளபட்டது .காரணம் .’வீல் நட்’ பொருத்துவதில் பிரச்சனை. முதல் இரண்டு டயர் மாற்றதிலும் இது நடந்தது . இனி இது தொடர வாய்ப்பு இருந்தால் எதாவது விபத்தை சந்திக்கலாம் என்பதாக திருப்பி அழைக்கப்பட்டது .அப்படியானால் அடுத்த  Adrian Sutil கார் இதே பிரச்சனையா ?

27 ஆம் சுற்று ..

     ஆமாம் இபோது  ஃபோர்ஸ் இந்திய அணியின் இன்னொரு   Adrian Sutil கார் இப்போது திருப்பி அழைக்கப்பட்டது .ஒன்பதாம் இடத்தில் போட்டியை துவங்கிய  கார் இது .இன்று நிச்சயம் சில புள்ளிகள் பெறும் வாய்ப்பு இருந்தது .
           இது மிக பெரிய பாடம்  அந்த அணிக்கு .எந்த ஒரு சோதனை முயற்சியும் களத்தில் செய்வது மோசமான விளைவை தரும் என்பதுவே அது .

31 ஆம் சுற்று .
வெப்பர் இப்போது மீண்டும் டயர் மாற்றம் .ஆனால் Medium Compound Tyre .

33 ஆம் சுற்று ..
ஆனால் அதே அணியின் வெட்டல் Hard Compound Tyre .ஏன் ? நீண்ட பயனத்தை சந்திக்க தேய்மானம் குறைந்த அதே சமயம் அதிக வெப்பத்தை தாங்கும் பண்பு கொண்ட டயர் இது .நாம் இங்கு F1 கார்களில் பயன்படுத்தும் டயர்களை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா....


ஃபார்முலா 1 ல் பயன்படுத்தும்  டயர்கள்..


        பொதுவாகவே நமக்கு  உபயோகத்தை பொருத்து டயர்களில் இரண்டுவகை தெரியும் .ஒன்று நல்ல Grip Button Tyre இன்னொன்று Running Button  (முன் பக்க சக்கரங்களில் பொருத்துவது ).ஆனால் இது ஃபார்முலா 1 ஆச்சே .இங்கு டயர்கள்  Dry yres -slicks Tyres மற்றும் Wet tyres - Grooves Tyres என்ற இரண்டு பெரும் பிரிவாக வகைப்படுத்தப்படுகிறது ,

 Wet tyres


               Wet tyres சிறு மழை தூறல் போட்டி துவங்கும்போது எதிர்பார்க்கபட்டதால்  Intermediate tyre உபயோகிக்கப்பட்டது .அதுவே களத்தில் மழை பெய்ய துவங்கியிருந்தால் அதாவது களத்தில் நீர் தேங்கியிருக்கும்போது  போது Wet  tyres பயன்படுத்தி இருப்பார்கள் .கார் களத்தில் போகும்போது வேகத்திர்க்கு தடையாக இருக்கும் நீரை வெளியேற்றும் தன்மையில் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.அவ்வளவுதான்.  


       அடுத்து Hard Compound Tyre இதில் உட்பிரிவை நான்கு வகையாக பிரிக்கிறார்கள் .1.Super Soft - வேகம் குறைந்த குறுகிய வளைவுகளை கொண்ட களங்களில் இதுபயன்படுகிறது .இது விரைவில் தேயும் ஆனால் வளைவுகளில் நல்ல பிடிப்பை ( Grip) தரும்.வேகம்.அதிக வேகம் . அடுத்து 2.Soft Compound tyres - இது super Soft ஐ விட கொஞ்சம் பெட்டர் தேய்மானத்தில் 3.Medium Compound Tyre - இது சாதரண வெப்ப நிலையில் உபோயோகிக்க சிறந்த தேர்வு .குறிப்பிட்ட சூழ்நிலை வெப்பத்தில் இது பொருத்தப்படும்போது சுமார் 0.8 வினாடி / 1 சுற்று வேகத்தை கூட்ட கூடியது .கடைசி 4.Hard Compound Tyre - தனக்கு முன்னே செல்லும் காரை தொடர்ந்து துரத்தவும் அல்லது தன்னை தொடரும் காருக்கு வழி கொடுக்காமல் நீண்ட பயனத்தை சந்திக்க தேய்மானம் குறைந்த அதே சமயம் அதிக வெப்பத்தை தாங்க்கும் கொண்ட டயர் இது.
                          ஆனால் இதில் இன்னொரு விசயம் Dry Race ல் Hard Compound Tyre மற்றும் Soft Compound tyres கட்டாயம் பயன்படுத்தவேண்டும் அதே போல மழை நேரத்தில் மேற்படி இரண்டு டயர்களை பயன்படுத்தவேண்டும் இல்லாவிட்டால் 30 வினாடி காரை ரேசிலிருந்து நிறுத்தி தொடர செய்வார்கள் .

 மீண்டும் போட்டிக்குள்..


36 ஆவது சுற்று ..
           McLaren-Mercedes - ஜென்சன் பட்டன்  போன ஆண்டு முழுவதுவும் பிட் லேனில் டயர் பொருத்தும்போது( அதுவும் Rear Left  )பல பிரச்சனை . இப்போது Front Right டயர் சரியாக பொருத்த தாமதம் .மீண்டும் 14 ஆம் இடம் தொடரும்  நிலை.

43 ஆவது சுற்று ..
       ரெட்புல்லின் இரண்டு  காரும் இப்போது டயர் மாற்றம் வந்தது. முதலில் வந்த வெப்பர் Hard Compound Tyre .ஆனால் பின்னே வந்த வெட்டல் Medium Compound Tyre .அதாவது முழு ரேசும் நமது கட்டுபாட்டில் வந்து விட்டதாக அணித்தலமை முடிவு செய்து வெப்பர் இன்று முதல் இடம் போக சொல்ல தீர்மானித்து விட்டது .மீண்டும் முதலிடத்தில் வெப்பர் இரண்டாம் இடத்தில் வெட்டல் தொடர ...


46 ஆவது சுற்று ..

Kinetic Energy Recovery System

          Williams-Renault அணியின் Pastor Maldonado கார்( KERS ) Kinetic Energy Recovery System எனப்படும் F 1 கார்களில் பிரேக்கை பயன்படுத்தப்படும்பொது வெளிப்படும் - வீணாகும் வெப்ப சக்தியை ,காரின் பேட்டரியில் ப்ரத்தியோக முறையில்  சேமிக்கப்பட்டு,  தேவைப்படும்போது ( விதிகளுக்கு உட்பட்டு ) மீண்டும் உபோயோக்கிக்கும் இயக்க சக்தியாக ( Kinetic Energy ) பெறப்படும் அமைப்பு இயங்காததால் களத்தை விட்டு வெளியேறிவிட்டது .


எதிர்பாராத ஒன்று நடந்தது!!
        இந்த சமயத்தில் இப்போது யாரும் ஏன் ரெட்புல் அணியின் தலமை கூட எதிர்பாராத ஒன்று நடந்தது.ஆம் இரண்டாவது வந்து கொண்டு இருந்த வெட்டல் முன்னேறி முதலிடத்து தன் அணியின் மார்க் வெப்பரை Wheel to Wheel ஒரு ஆபத்தான அதே சமயம் அபத்தமான அணிதலமை கட்டளையை மீறி முதலிடம் தொடர ,வெப்பர் அதிர்சியுற்று அணித்தலமையுடன் தொடர்புகொள்ள...


47 ஆவது சுற்று..
         ரெட்புல்லின் வெட்டலின் இந்த வெளிப்படையான கீழ்பைடியாமைக்கு அணித்தலமை கோபத்துடன் ரேடியோவில் காரணம் கேட்க ,அதர்க்கு பதிலாக வெட்டல் ,வெப்பரின் வேகம் தனக்கு திருப்தி அளிக்கவில்லை.இதனால் பின்னே தொடரும் மெர்சடீஸ் - லீவ்ஸ் ஹேமில்டனுக்கு அது பெரும் வாய்ப்பை தந்து விடலாம் என்பதாகவே அந்த முடிவை எடுத்தேன் என்றார் .ஆனால் மிக கடுமையாக அணித்தலைவரும் ,தொழில்நுட்ப இயக்குனரும் கடிந்து கொள்ள அவர்களின் இன்னொரு கவலை வெட்டலின் கார்  அந்த அளவுக்கு வெப்பர் காரை நெருங்கும்போது ஏற்படும் காற்றியக்க மாறுபாடுகளும் மற்றும் தூசிகள் ஆபத்தானவை .அதனால் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது .ஒரு புள்ளிகள் கூட கிடைக்காமல் போயிருக்கலாம்.


50 ஆவது சுற்று.
         இந்த சமயத்தில்   மெர்சடீஸ் அணியின் நிக்கோ ரோஸ்பெர்க்கிடமிருந்து அணித்தலமைக்கு ஒரு விண்ணப்பம் கோரப்பட்டது .எனக்கு முன்னால் 3 ஆம் இடத்தில் சென்றுகொண்டு இருக்கும் ஹேமில்ட்டன் காரை விட என் காரின் செயல்திறன் அதாவது டயர் மற்றும் எரிபொருள் அளவு போதுமான அளவு அல்ல போட்டி போடும் நிலையி இருக்கிறது நான் முன்னேறி செல்லவா என கேட்க அணித்தலவைர் Ross  Brawn வேண்டாம் என்பதாக அறிவுறுத்த தொடங்கினார் ..


51 ஆவது சுற்று ..
            Exhaust அமைப்பில் ஏற்பட்ட பிரசனையால் STR-Ferrari அணியின் Daniel Ricciardo கார் போட்டியை விட்டு வெளியேறியது .

53 ஆவது சுற்று ..


            36 ஆவது சுற்றுக்கு டயர் பொருத்திய பிரச்சனை  McLaren-Mercedes - ஜென்சன் பிறகு 18 சுற்றுகள் சமாளித்த பிறகும் தீரவில்லை . எனவே பொட்டியை விட்டு விலகும் கட்டாயத்தில் விலகினார் ஜென்சன் பட்டன் .

54 ஆவது சுற்று ..


             இப்போது கூட  Ross  Brawn - நிக்கொ ரோஸ்பெர்க் விவாதம் தொடர்ந்து கொண்டு இருந்தது .காரணம் இரண்டு காருக்கும் இடைவெளி வெறும் 0.5 மைக்ரோ வினாடிகள் .அணிக்கு இப்பொதுதான் ஹேமில்ட்டன் வந்து இருக்கிறார் இந்த அணிக்கு ,இந்த சமயத்தில்  ரோஸ்பெர்க் முன்னேறுவது சற்றும் உகந்ததாக தெரியவில்லை என்று நினைத்தார்போல அணித்தலவைர்.மேலும் இயல்பில் ஹேமில்ட்டன் அவ்வளவு சாதுர்யமானவர் இல்லை .ஏற்றுகொள்ள மாட்டார் .

56 ஆவது கடைசி சுற்று ..
             வெற்றிக்கோட்டை தொட்ட முதல்    மூன் று கார்கள் 

முதலிடம்          -ரெட்புல் . செபாஸ்டியன் வெட்டல் 
இரண்டாவது இடம் -ரெட்புல் .மார்க் வெப்பர்  
மூன்றாவ்து இடம்  -மெர்சடீஸ் - லீவ்ஸ் ஹேமில்டன் 


         பரிசளிப்பு மேடையில் வெற்றி பெற்றவர்கள் ஒருத்தர் மீது ஒருத்தர் ஃசாம்பைன் தெளிப்பில் ( Sprey )ரெட்புல் வீரர்களுக்கிடையே  எவ்வித சுவாரஸ்யமும் இல்லை . ஒரு வெற்றி கொண்டாட படவேண்டியதுதான்!இங்கு சுமூகம் இல்லை .மிக சாதரணமான சூழல் நிலவியது .  

சரி மலேசிய களத்திலிருந்து நாம் விடைபெறுவோம் .
         


        நமது அடுத்த வேகம் - உலக வரைபடத்தில் நமக்கு மேலே 2.30 மணி நேரம் (பின்னால்) வித்தியாசத்தில் இருக்கும் சீனாவின் -CHINESE GRAND PRIX போட்டியில் அடுத்த மாதம் ஏப்ரல் 14 ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு பார்க்கலாமா .....





Thursday, March 21, 2013

Australian GP - Kimi Raikkonen Win .

எனது புதிய அவதாரம் !!!

       கடந்த இரு ஆண்டாக ரேஸ் போட்டிகளை அதன் நடக்கும் நாடு பற்றியும் ,களம் பற்றியும் ,முக்கியமான சுற்றுக்களையும் , வேறு சில உபரி விசயங்களையும் கற்றுகொண்டுடே  எழுதி வந்தேன் .காலம் மாறிவருகிறது.விரல் நுனியில் ’டச்’ மாயஜாலத்தால் கற்று கொள்ள ஆயிரமாயிரம் விசயங்கள் எளிதாகவிட்டது .போட்டிகளை  Live Streaming ஆக பார்க்கலாம் ஆனால் அதர்க்கு பின்னே பல விசயங்கள் இருப்பதால் அது பற்றி பேசலாமே ! 


           எனவே ,இப்போது கொஞ்சம் ட்ராக் மாறி ஒவ்வொரு போட்டியின் வெற்றி பற்றியும் , தொழில்நுட்ப ஆதிக்கத்தின் விளைவால் கை மாறும்  வெற்றியின் போக்கையும், ஆர்வமுள்ள நமது எதிர்கால சந்ததிகள் எப்படி ஃபார்முலா போட்டிக்குள் நுழையலாம்  அதர்க்கு கார்டிங்  ( Karting ) போட்டிகளில் இருந்து உயிரை பணயம் வைத்து பணம் சம்பாதிக்க படிப்படியாய் இன்று புகழ் பெற்றவர்கள் எப்படி வளர்ந்தார்கள்  அவர்களின் பொது வாழ்கை காதல் ,திருமணம் ,பொழுதுபோக்கு  என்பது போல  ஜாலியாக பேசலாம் என தோன்றுகிறது. அதன் துவக்கம் ..இனி ...இங்கே....


நிகழ்காலம்..

         2013 ஆம் ஆண்டின் முதல் வெற்றியுடன் லோட்டஸ் ரெனால்ட்டின் அணியும் அதன் முதலிடத்தை பெற்று இது தான் நான் என்பது போல இங்கு வெற்றி தட்டுடன் நிற்க்கும் கிமி ரெய்கொணன் சொல்வது போல இருக்கிறது .

கடந்த காலம்..

34 வயதை தொடும் நிலையிலிருக்கும் கிமி தனது ஃபார்முலா 1 போட்டிக்கான முதல் அடியை இதே ஆஸ்த்ரேலியாவில் கடந்த 2001 மார்ச் மாதம் 4 ஆம் தேதி நடந்த போட்டியில் 6 ஆம் இடத்தை பிடித்து ஒரு புள்ளி பெற்று சாஃபர் பெட்ரோனஷ் (Sauber Petronas அணிக்காக  தொடங்கினார் என்பதே இந்த களத்தில் இவரின் ராசி. எளிதில் களத்தில் உணர்ச்சி வசப்படும் இடத்தில் கூட அமைதியை கடைபிடிப்பவர் .ஆனால் போட்டியில் சற்றும் வெற்றியை விட்டுகொடுக்காத போராளி ! இந்த போட்டியில் எழாம் இடத்தில் தொடங்கி முதலிடத்தை பெற்று இருப்பதே அவரின் போராட்ட குணத்திர்க்கு சான்று .

2007 ல் உலக சாம்பியன் பட்டம்.

            2002 - 2006 வரை McLaren-Mercedes பிறகு 2007 - 2009 வரை  Ferrari இப்போதுதான் 2007 ல் உலக சாம்பியன் பட்டம் .  2010 - 2011.  எந்த அணியிலும் இல்லை 2012 மீண்டும் Lotus-Renault இப்போதுவரை .இந்த ஆண்டு மிக சிறப்பாக ஆரம்பித்து இருக்கிறார் கிமி.

2 ம் , 3 ம்...
       அவரை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் ferrari- ஃபெர்னாடோ அலோன்சா .கடந்த ஆண்டில் 3 புள்ளிகளில் தவறவிட்டவர் ,5 ஆம் இடத்தில் தொடங்கி 2 ஆம் இடம் .இந்த ஆண்டு மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் 32 வயது ஸ்பானிஷ் துள்ளும் குதிரை  .

      மூன்றாமவர் கடந்த மூன்றும் தொடர் சாம்பியன்  Red pull -செபாஸ்டியன் வெட்டல் 26 வயதே தொட்டு கொண்டு இருக்கும் இளம் முரட்டு காளை .


நமது அடுத்த போட்டி இங்கே நமக்கு மலேசிய நாட்டின் Sepang International Circuit ல் வரும் ஹாயிறு - 24 மார்ச்சில் நடக்கிறது .  அடுத்த வேக யுத்தத்தை ரசிக்க போகலாமே ...

Thursday, March 14, 2013

ஃபார்முலா 1ன் புதிய சவால்கள்

               இன்று பிற்பகல்15-மார்ச், இந்திய நேரப்படி 12.30 மணிக்கும் ஆஸ்த்ரேலியாவின் ஆல்பெர்ட் பார்க் நேரப்படி (5.30 மணி குறைவாக) காலை 7 மணிக்கு ஃபார்முலா 1 போட்டியின் ”வ்வ்வ்ர்ர்ருருரூரூம்”  சத்தம் தொடங்குகிறது ... 

போட்டி அட்டவணை
           இந்த ஆண்டுக்கான வேகம் எனும் மொழி பேசப்படுவதர்கான நாடுகளின் பட்டியல்லை போட்டியை நடத்தும் Fédération Internationale de l'Automobile (FIA) அறிவித்துவிட்டது.19 நாடுகளில் மட்டுமே இந்த ஆண்டுக்கான போட்டி அட்டவணையில் இருக்கிறது .

2013 F1 calendar
Round
Race
Circuit
Date
1
Australian Grand Prix
March 15 – 17
2
Malaysian Grand Prix
March 22 – 24
3
Chinese Grand Prix
April 12 – 14
4
Bahrain Grand Prix
April 19 – 21
5
Spanish Grand Prix
May 10 – 12
6
Monaco Grand Prix
May 23 – 26
7
Canadian Grand Prix
June 7 – 9
8
British Grand Prix
June 28 – 30
9
German Grand Prix
July 5 – 7
10
Hungarian Grand Prix
July 26 – 28
11
Belgian Grand Prix
August 23 – 25
12
Italian Grand Prix
September 6 – 8
13
Singapore Grand Prix
September 20 – 22
14
Korean Grand Prix
October 4 – 6
15
Japanese Grand Prix
October 11 – 13
16
Indian Grand Prix
October 25 – 27
17
Abu Dhabi Grand Prix
November 1 – 3
18
United States Grand Prix
November 15 – 17
19
Brazilian Grand Prix
November 22 – 24


 நுழைவு கட்டணம்.
         சென்ற ஆண்டை காட்டிலும் FIA போட்டிக்கான அணிகளின் நுழைவு கட்டணத்தை உயர்த்தியுள்ளது .


            கடந்த வருடம் 3,96,637 அமெரிக்க டாலெர் ( இந்திய மதிப்பில் ரூ-21503278 ) மதிப்பில் மட்டுமே இருந்த கட்டணம் இப்போது இரண்டு முறையில் அதிகபடுத்தி வசூலிக்கப்படுகிறது .ஒன்று நுழைவு கட்டணமாக டாலர் 5,00,000 + கடந்த ஆண்டு ஒவ்வொரு அணியும்  தான் பெற்ற ஓவ்வொரு புள்ளி * 5000 டாலெர் கட்டவேண்டுமாம் ( கடந்த ஆண்டின் சாம்பியன் ஃரெட் புல் அணி என்பதால் அந்த அணி மட்டும் 6000 டாலெர் ) அதன் படி ஒரு உதாரணத்திர்க்கு எடுத்துகொண்டால் கடந்த ஆண்டு நமது இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட ஃபோர்ஸ் இந்தியா 69 புள்ளி பெற்றது .எனவே 500000+345000=845000 டாலெர் இந்த ஆண்டு கட்டவேண்டுமாம் ( இந்திய மதிப்பில் ரூ-45810830 )  .

அணிகளின் மாற்றம் .
         கடந்த ஆண்டு நமது நாராயண் கார்த்திகேயன் கலந்து கொண்ட HRT F1 அணி இந்த ஆண்டில் இல்லை .மொத்தம் 11 அணிகள் மட்டுமே .


           மீண்டும் இந்தியர் யாரும் இல்லாத ஃபார்முலா போட்டிகள் பார்க்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது என்பது மிக பெரிய சோகம் .


( 1 )ஃபோர்ஸ் இந்திய அணி .( இந்தியா )


அணியின் தொழில் நுட்ப இயக்குனர்  Andrew green இங்கிலாந்தை சேர்ந்தவர்.


ஃபோர்ஸ் இந்தியாவின் VJM 06 கார் இந்த ஆண்டில் ஃபெப்ரவ்ரி 01 ஆம் தேதி அறிமுகப்படுத்தபட்டது.ஒவ்வொரு போட்டியிலும் புள்ளிகளில் ஏறுமுகத்தை சந்தித்து கொண்டு இருக்கும் இந்த அணியின் செயல்பாடுகள் இந்த ஆண்டில் சவால்கள் அதிகரித்துள்ளது..

 Paul di Resta 
.கடந்த ஆண்டு இங்கிலாந்தின் ஓட்டுனர்களாக Paul di Resta மற்றும் ஜெர்மனின் Nico Hülkenberg இருந்தனர் .இதில் Hülkenberg நீக்கப்பட்டு 2011 ல் இதே அணியிலிருந்த

Adrian Sutil
இன்னொரு ஜெர்மன் வீரர்  Adrian Sutil இணைந்துள்ளார்

( 2 ) மருஸ்ய காஷ்வொர்த்.( United Kingddom )


 இங்கிலாந்தின் John Booth அதன் அணித்தலைவர் .



    இந்த அணி தனது  MR O2 காரை கடந்த ஃபெப்ரவரி 5 ஆம் தேதி உலகின் கண்ணிர்க்கு காட்டியது .United Kingdom நாட்டின் இந்த அணி கடந்த ஒரு புள்ளியை கூட எட்ட முடியவில்லை காரணம்  KERS தொழில்நுட்ப வசதி  இல்லாததால் .




     அதே சமயம் மருஸ்ய காஸ்வொர்த்தின் அணியில் இருந்த ஜெர்மானிய ட்ரைவர் டிமோ க்லோக் ,ஃப்ரென்ஞ் ட்ரைவர் சார்லெஸ் பிக் இரண்டுபேருமே நீக்கப்பட்டு ஃப்ரான்ஸ் நாட்டின் 21 வயதான ஜூலெஸ் பிலாஞ்சி 21 வயதில் முதல் F1 ஓட்டுனர்  என்ற வரலாறு ஏற்படுத்திய முதலாமவர்   மற்றும் இங்கிலாந்தின் 22 வயது  மேக்ஸ் சில்ட்டன் வந்துவிட்டர்கள்( Max Chilton and Jules Bianchi) இவர்கள் இரண்டு பேருமே புதியவர்கள் .மருஸ்ய அணி ரிஸ்க் எடுக்க துணிந்து விட்டனர்.இளமை கூட்டனி  .

( 3 ) வில்லயம்ஸ் ரெனால்ட் ( இங்கிலாந்து )


அணியின் தொழில்நுட்ப இயக்குனர் United Kingdom ஐ சேர்ந்த Mike Coughlan.இவர் மெக்லரனில் 2002- 2007 முதன்மை வடிவமைப்பாளராக பணிபுரிந்தார் .அப்போது  மெக்லரன் அணிக்கும் ஃபெராரி அணிக்குமிடையே தகவலை வழங்கிய  குற்றத்திர்காக நீக்கப்பட்ட புண்ணியவான் .


வில்லியம்ஸ் தனது FW35 கடந்த ஃபெப்ரவரி 19 தேதி உலகுக்கு காட்டியது .கடந்த 1989 முதல் 1999 வரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்த அணிக்கு தடை ஏற்பட்டு கடந்த ஆண்டுதான் மீண்டும் அடியெடுத்து வைத்துள்ளது .மேலும் ஒரு தீ விப்த்தை இந்த அணி கடந்த ஆண்டில் சந்தித்து மீண்டுவந்துள்ளது 
கடந்த ஆண்டில் வென்சுலாவின் ட்ரைவர் Pastor Maldonado மற்றும் ப்ரேசில் நாட்டின் Bruno Senna இருந்தனர் .

Valtteri Bottas
இப்போது  Senna மாற்றாக ஒரு புதிய வரவான பின்லாந்து நாட்டின் Valtteri Bottas களம் இறங்குகிறார் .

( 4 ) கேட்டர்ஹாம் ரெனால்ட்( இங்கிலாந்து) 


இங்கிலாந்தின் Mark Smith இதன் தொழில் நுட்ப இயக்குனர்.


அணியின் CT03 காரை ஃபெப்ரவரி 5 ஆம் தேதி காட்டியது .கடந்த ஆண்டு F1 போட்டிகளுக்குல் அடியெடுத்து வைத்த இந்த ஒரு புள்ளி கூட வாங்கி சுமையாக ஆக்கி கொள்ளவில்லை .


ஃபினிஸ் நாட்டின் -Heikki Kovalainen மற்றும் ரஷ்யாவின் ஒரே நம்பிக்கை மனிதன் Vitaly Petrov ஆகிய இருவருமே மாற்றப்பட்டு ஃப்ரான்ஸ் நாட்டின்  Charles Pic மற்றொருவர் நெதர்லாந்தின் -Giedo van der Garde இவரும் புதியவரே .


( 5 )சாஃபெர் ஃபெராரி ( Switzerland )

Monisha Narang

இந்த  அணியில் ஒரு பெண் தலைவர் இருக்கிறார் அவர்தான் உலகின் முதல் ஃபார்முலாவின் அணித்தலைவர் என்பதை விடவும் அவர்  இந்தியாவில் பிறந்தவர் என்பது சந்தோசமான செய்தியாகும் அவர் பெயர் Monisha Narang ( இப்போது  Monisha Kaltenborn )ஆஸ்ட்ரியாவின் குடிமகள் அந்தஸ்த்தை பெற்றவர் சின்ன வயதில் அங்கு போனவர் .இதைவிட முக்கிய அந்த அணியின் செய்தி இவர் ஒரு 33.3 சதவிகித பங்குதாரர் .41 வயதான இவர் சர்வதேச வர்த்தக சட்டம் பயின்றவர் .


கடந்த ஃபெப்ரவரி 2 ஆம் நால் தன்னுடைய c32க காரை உலகை கவனிக்க செய்தார்கள்  கடந்த 2011 ,2012 ஆம் ஆண்டில் காலெடுத்து வைத்தாலும் நல்ல பல முன்னேற்றத்தை கொண்ட அணி .தற்போது 6 ஆம் இடதில் இருக்கிறது இந்த அணி.


இந்த அணியில் சென்ற ஆண்டு ஜப்பானின் ஒரே ஒரு ட்ரைவர் Kamui Kobayashi மற்றும் மெக்சிக்கன் ட்ரைவர் Sergio Pérez அருமையான கூட்டனியாக செயல்பட்டனர் ஆனால் இந்த ஆண்டு ஜெர்மனியின் Nico Hulkenberg க்கும் அவருடன் மெக்சிக்கனின் புதிய ட்ரைவர்  Esteban Gutierrez அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.21 வயதில் முதல் F1 ஓட்டுனர்  என்ற வரலாறு ஏற்படுத்திய இராண்டாமவர் இவர்தான் என்பது கூடுதல் விசயமாகும்  .அதனால் இந்த ஆண்டு புதிய சவால்களை எதிர்நோக்குகிறது இந்த அணி .

( 6 ) லோட்டஸ் ரெனால்ட் ( united kingdom )


ஃப்ரான்சின் Éric Boullier தான் இந்த அணியின் அணித்தலைவர்


        கடந்த ஜனவரி 28 அம் தேதியே இந்த அணி தன் E21 காரை வெளிக்காட்டியது .கடந்த 2011 ஆம் அண்டு ஒரு புள்ளி கூட எடுக்க முடியாத அணி ஆனால் 2012 ல் 303 புள்ளிகளை பெற்று 4 ஆவது இடத்தை பெற்று அசத்தியது .இந்த ஆண்டும் இதன் அசத்தலை தொடரும் ..
Kimi Raikkonen and  Romain Grosjean

ஃபின்லாந்து  நாட்டின் Kimi Raikkonen யாரும் எதிர்பாரத வகையில் 207 புள்ளிகளை எடுத்து 3 ஆவது இடம் வந்து அசத்தினார் .அவரோடு ஃப்ரென்ஞ் தேசத்தின்  Romain Grosjean கைகோர்த்து 96 புள்ளிகளை பெற்று தந்தார் .இந்த அசத்தல் ஜோடி நல்லவேளை  மாறவில்லை .அப்படியே தொடர்கிறது .

( 7 ) மெக்லரெண் மெர்சடிஸ் ( United Kingdom )


 இந்த அணியின் இயக்குனர் Martin Whitmarsh இங்கிலாந்தை சேர்ந்தவர் .கடந்த ஆண்டு மட்டும்தான் இரண்டு உலக சாம்பியன்கள் இருந்த அணி என்று பெற்று இருந்த இந்த அணி யார் கண் பாட்டதோ Whitmarsh மேல்  ,இங்கிலாந்தை சேர்ந்த Lewis Hamilton ஜ இழந்தது இந்த அணி  .6 வருடங்கள் அந்த அணியில் இருந்த ஒரு சாம்பியன் வெளியே வரும்போது Whitmarsh தடுத்தாரோ இல்லயோ கடைசிவரை ஏன் என்ற காரணத்தை மறைத்தார் என்பது சாமர்த்தியம் .


அணியின் இந்த ஆண்டு புது வடிவ கார் MP4-28 கடந்த ஜனவரி 31 காட்சி பட வைத்தனர் .எப்போதுமே  மெக்லரெண் கார் மிக அழகான வடிவமைப்பு இருக்கும் .தொழில் நுட்பத்திலும் மிக அற்புதமாக இருக்கும் இன்னும் சொன்னால் இங்கிலாந்தின் கௌரவம் -  மெக்லரெண் அணி .முதல் இரண்டு இடத்தை மட்டுமே குறிவைத்து செயல்படுவார்கள்.


இந்த அணியின் முன்னால் டிரைவர்கள் இரண்டுபேருமே இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் .ஒருவர் நாம் பேசிய Lewis Hamilton மற்றொருவர் Jenson Button .இப்போது Jenson தொடர்கிறார்.ஆனால் இன்னொருவர் மெக்ஸிக்கன் நாட்டை சேர்ந்த Sergio Perez இவர் சாஃபெர் அணியில் 65  புள்ளிகளை பெற்று 9 ஆம் இடத்தை பெற்றவர்.கலக்கல் காம்பினேசன் .இன்னொரு முக்கிய விசயம் இந்த அணியிலிருந்த Hamilton ஐ ஏற்கனவே Jenson விலகியிருந்தார் இப்போது எதிரணி சொல்லவே வேண்டாம் .போட்டி களம் தீ பிடிக்க போகிறது !


( 8 ) மெர்சடிஸ் -Mercedes AMG Petronas ( Germany )


 இங்கிலாந்தின் Ross James Brawn மிக நாசூக்கான மனிதர் முகத்தில் எளிதில் உணர்வுகளை வெளிக்காட்டாதவர் .அவரின் மிக சிறப்பான காய் நகர்த்தலில்தான்  Lewis Hamilton   மெக்லரெணிலிருந்து இடம் பெயர்ந்து இங்கு இருக்கிறார் .அனுபவசாலி .Benetton மற்றும்  Ferrari
அணிகளுக்கு இவரின் தொழில்நுட்ப தலமையில் ஒட்டுமொத்த சாம்பியன் ( அணி மற்றும் ஓட்டுனர் )  பட்டத்தை தேடித்தந்தவர் அதுமட்டுமல்ல Brawn GP Formula One Team என்ற அணியை 2009 ஆம் அண்டில் உருவாக்கி அந்த அணியையும்  ஒட்டுமொத்த சாம்பியன் ஆக்கியவர்.


 W04 கடந்த ஃபெப்ரவரி 4 ஆம் நாள் களத்தில் வைத்து நாங்கள் போட்டிக்கு தயார் என்பதாக அறிவித்தது மெர்சடிஸ் அணி தன்னுடய Engines பயன்படுத்துகிறது .இதன் வெற்றி கடந்த ஆண்டு இரண்டு விசயத்தில் பின்னடைவை சந்தித்தது ஒன்று KERS அடுத்து  Engines பிரச்சனை .அதனால் 5 ஆம் இடத்தை மட்டுமே இந்த அணி பிடிக்க முடிந்தது .


அணியின் கடந்த ஆண்டில் ஃபார்முலா 1 போட்டியின் சரித்திர நாயகன் ஜெர்மனின் - மைக்கேல் ஷூமேக்கர் விடை பெற்றார் .அந்த இடத்திர்க்கு  Lewis Hamilton அடுத்தவர் இன்னொரு ஜெர்மன் ட்ரைவர் - Nico Rosberg

( 9 ) டோரோ ரோசோ - Scuderia Toro Rosso ( Italy )


                  இந்த அணி முழுக்க முழுக்க இன்னொரு Red Bull அணி . இதன் தொழில் நுட்ப இயக்குனர் இங்கிலாந்தின் James Key .இவர் நமது அரசு அலுவலகங்களில் ப்யூன் வேலைக்கு சேர்ந்து படிப்படியாக முன்னேறி உயர்பதவி அடைவது போல இவர் 1998 ல் Jordan Grand Prix அணியில் Data Engineer ஆக சேர்ந்து பலவருடம் பணிபுரிந்த பின்,Vehicle Dynamics department பிறகு 2005 ல் தொழில்நுட்ப  இணை இயக்குனர் மற்றும் தொழில் நுட்ப இயக்குனர் ஆக உயர்வு பெற்றார் .இதிலும் இவர்தான் 33 வயதில் F1 வரலாற்றில் முதல் தொழில் நுட்ப இயக்குனர் .இந்த அணியில் இப்போது 3 முறை  ட்ரைவர் சாம்பியனான Sebastian Vettel ஐ அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவர் .


அணியின் புதிய  கார் STR8 ஐ காண்ணை பறிக்கும் வண்ணத்தில் கடந்த ஃபெப்ரவரி 4 ஆம் நாள் அறிமுகபடுத்தி கொண்டாடினர்.


அணியின் ஒட்டுனரகளில் மாற்றம் இல்லை .ஆஸ்த்ரேலியாவின் - Daniel Ricciardo மற்றும் ஃப்ரான்ஸ் நாட்டின் Jean-Eric Vergne .

(10 ) Red Bull - ( United Kingdom )


2005 ஆம் ஆண்டில் F1 வரலாறுக்குள் வந்த அணி .கடந்த நான்கு வருடங்களில் மிக அபூர்வமான ஆக்கிவிட்டது .அதிலும் கடந்த மூன்று வருடமும் தொடர்ந்து ஒட்டுமொத்த சாம்பியன்சிப்பையும் அள்ளிக்கொண்டது .அதன் முக்கியகாரணியாக செயல்பட்டது சாட்சாத் United Kingdom நாட்டை சேர்ந்த  Christian Horner என்பவர் மட்டுமே .அடிப்படையில் இவர் ரேஸ் ட்ரைவர் .போட்டியின் போது இவரின் அந்த  பதஷ்டம் அவ்ர் கால்களில் மாட்டியிருக்கும் கேன்வாஸ் காட்டி கொடுத்துவிடும் .மிக பெரிய வெற்றி அணியின் இயக்குனர் .


ரெட்புல்லின் RB9 கார் கடந்த ஃபெப்ரவரி 3 ஆம் நாள் உலக அறிமுக தினம் .பல மாற்றங்களை தொழில் நுட்பத்தில் காட்டியதோடு வண்ண வடிவத்திலும் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது . 


ஒட்டுனர்களில் மாற்றம் ஏதுமில்லை .ஜெர்மனியின் - Sebastian Vettel
அடுத்தவர் ஆஸ்த்ரேலியாவின் Mark Webber .இவர்கள் இருவ்ருக்கும் இடையே நல்லுணர்வு இல்லை என்பது உலகம் அறிந்த விசயம் .இருந்தாலும் இந்த வேறுப்பாட்டில் அணியின் வெற்றி தொடர்கிறது .

( 11 ) ஃபெராரி -Scuderia Ferrari ( Italy ) 

Stefano Domenicali
         எப்பொதுமே ஃபார்முலா 1 வரலாற்றில் அழுந்த பதிந்த அணியின் பெயர் இது .ஒரு சைக்கிளில் கூட ஃபெராரியின் - "Prancing horse" துள்ளும் குதிரையின் வடிவம் வேகத்தை சொல்லுகிறது .அந்த அணியின் அணியின் இயக்குனர் இத்தாலியின் Stefano Domenicali இவர் கடந்த ஆண்டில் BBC மூலம் நடத்தப்படும் Top Gear (magazine) மோட்டார் உலக  பத்திரிக்கையின் ”The Men of the Year 2012" மரியாதயை பெற்றவர் .


        ஃபெராரியின் F2013 கார் மிக இளமையானது .இத்தாலியின் கௌரவம்  ஃபெராரி இந்த முறை சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது .ஏனெனில் கடந்த ஆண்டு மிக எளிதாக ட்ரைவருக்கான சாம்பியன் பட்டதை நழுவவிட்டது .காரணம் அணியின் மேலோ ட்ரைவர் மெலோ இல்லை .எதிர்பாராத விபத்துக்களால் .எனவே இந்த முறை பல திட்டங்களை அந்த அணி செயல்படுத்தும் .கடந்த 2008 க்கு பிறகு அணியின் சாம்பியன் கனவு ,கனவாகவே இருக்கிறது .


ட்ரைவர்கள் விசயத்தில் எந்த மாற்றமும் இந்த அணியில் இல்லை .ஸ்பெயின் நாட்டின் -Fernando Alonso மற்றும் ப்ரேசில் நாட்டின் Felipe Massa .அலோன்சா இரண்டாம் இடம் 278 புள்ளி அதே சமயம் மாசா 122 புள்ளி .ஆனால் மாசா அலொன்சாவின் மேல் மிக மரியாதை வைத்து இருக்கிறார் .


ஆஸ்த்ரேலியாவின் ஆல்பெர்ட் பார்க்போட்டிக்கு போவோமா வாருங்கள் !