உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, October 29, 2011

இந்திய பார்முலா 1 வரலாற்றில் முதல் பதிவு

ந்திய பார்முலா 1 வரலாற்றில் முதல் பதிவு.




இந்திய புத் இன்டர்நேஷனல்சர்க்யூட்டில் இரண்டாவது பயிற்சி போட்டியும் முடிந்துவிட்டது நேற்று (28.10.2011) மாலை இன்று நடக்க வேண்டிய மூன்றாவது பயிற்சி போட்டியும் ,முடிந்து விட்டது .அதன் பிறகு நடந்த தகுதி சுற்றுக்கான முக்கியமான போட்டி முடிவுகள் வந்து விட்டது .



இந்திய களத்தை பற்றிய சகல விசயன்களும்  விரிவாக ஆராயப்பட்டுவிட்டது.



செபாஸ்டியன் வெட்டல் ...
சவால் மிகுந்த ,அதே சமயம் சுவாரஸ்யமாக களம் வடிவைமைக்கப்பட்டுள்ளது,மூன்றாம்-நான்காம் வளைவுக்கிடையேயுள்ள   நீண்ட அதிவேக பாதை முந்தி செல்ல அருமையானதாக உள்ளது .


மார்க் வெப்பர் ....
வளைவுகள் மிக அருமையாக ,சவால் மிக்க பார்முலா1  போட்டுக்குரிய வகையில் அமைக்க பட்டுள்ளது .மூன்றாம் வளைவை தவிர மற்றுள்ள வளைவுகளை ஐந்தாம் கியரில் ஓட்டியே கடந்து செல்ல முடியும் என்கிறார் .


லூயிஸ் ஹாமில்டன்...
நான் பார்த்தவரையில் மிக அழகான வேகமும் அதே சமயம் நல்ல பிடிப்புடன்(Grip)  கூடிய
ஓடுபாதைகள் .கள அமைப்பாளர் மிக பாராட்டுக்குரியவர் என்கிறார் .


ஜென்சன் பட்டன் ...
இந்த களத்தின் போட்டியில் பங்கு பெறுவது ரசிக்கும்படியாக உள்ளது .மூன்றாம் மற்றும் ஐந்தாம் எண் வளைவுகள் கடினமாக வளைவுகள் .இந்த களத்தை ரசிக்கிறேன் என்கிறார் .


பெர்னாண்டோ அலோன்சா ...
இது மிக அருமையான களம் .பரந்த அழகான வளைவுகள் .அதை சராசரி வேகத்தில் கடக்கும் படி செய்திருப்பது அருமை என்கிறார்.


பிலிப் மாசா...
மிக அருமையான வளைவுகள் -சிறந்த ஓட்டுனர்கள் மட்டுமே உணரமுடியும் .களத்தின் மிக பல பகுதிகள் அகலமாக இருப்பது முந்திச்செல்லும் வகையில் இருப்பது அருமை என்கிறார் .


நிக்கோ ரோபெர்க் ...
உலகின் மற்றைய புதிய களத்தை போல் இல்லாமல் அழகிய வளைவுகள் உள்ளது .குறிப்பாக இரண்டாம் வளைவின் தாழ்ந்த மற்றும் உயர்ந்த அமைப்பு ரசிக்க வைக்கிறது .


மைக்கேல் ஷூமேக்கர் ...
களத்தின் வடிவமைப்பு அருமை .என்கிறார் .


புருனே சென்னா ...
களத்தின் வளைவுகள் மேலும் மேலும் முன்னேறி செல்ல தூண்டும் வகையில் அமைக்க பட்டு இருப்பது விரும்பும் படியாக இருக்கிறது என்கிறார்.


ஆண்ட்ரியன் சாட்டில் ...
களம் அருமையான வளைவுகளையும் முந்தி செல்லும் வகையிலும் பிரமாதமாக வடிவமைக்க பட்டுள்ளதாக சொல்கிறார் .

கமோய் கொபயாசி ,செர்ஜியோ பெரஸ் ,செபாஸ்டியன் பூமி ,ஜெய்மி அழகுசுரெய் ,ஜர்னோ டருளி ஆகியோரும் ஒத்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் .

களவடிவமைப்பில் மிக பாராட்டுக்களை பெற்றுவிட்டோம் .முதல் படி .வெற்றி .



ஆயிரத்து எழுநூறு கோடி செலவில் கட்டபெற்ற களம் போட்டி பாதையில் எங்கும் தூசி படலங்கள் என்பது ஏகோபித்த ஓட்டுனர்களின் புகார் .
அடுத்து சித்தர்கள் வாழும் பூமியான சதுரகிரியில் பல சித்தர்கள் நாய்கள் உருவத்தில் வழிநடத்துவதாக நம்பிக்கை உண்டு .அது என்னை போல இந்திய பார்முலா 1 கனவுடன் உயிர்நீத்த ஆன்மாக்கள் நாய்கள் வடிவில் களத்தில் பத்தாவது வளைவில் பாய்ந்து வந்ததை ரெனால்ட் அணியின் புருனே சென்னவாவின் பார்வையில் பட்டுவிட்டது .(2008 ஆம் ஆண்டில் இது மாதிரி ஒரு நாய் துருக்கி களத்தின் GP 2 போட்டியில் குறுக்கே புகுந்து ,அவர் கார் முன்பகுதி சேதமடைந்து போட்டியை விட்டு வெளியேறும்படி ஆகிவிட்டது ).எனவே மனிதர் கதி கலங்கி விட்டார் .


உடனே சிவப்புக்கொடி காட்டி போட்டி நிறுத்த பட்டு மீண்டும் அந்த ஆத்மாவை இல்லை நாயை விரட்டிவிட்டார்கள் .இது போட்டி அமைப்பாளரை தர்மசங்கடத்திற்கு தள்ளிவிட்டது .ஆனால் இது அவ்வளவு சீரியஸாக எடுத்துகொள்ள படவேண்டியதில்லை என பார்முலா பெர்மி எச்லச்டோனால் ஆறுதல் படுத்தப்பட்டார் .
(ஒருவேளை அவர் சதுரகிரி பற்றி அறிந்திருப்பாரோ ?).




இந்திய போட்டியின் முடிவுகளை நிர்ணயிக்கும் தகுதி சுற்றுக்கான முடிவுகள் ..
இந்திய களத்திலும் வெட்டலின் கொடிதான் முதல் இடத்தில் நடப்பட்டு இருக்கிறது .1:24.178 நிமிடத்தில் கடந்து மற்றவர்களுக்கு நேர நிர்ணயம் செய்து விட்டார் .

அடுத்து மார்க் வெப்பர் இரண்டாம் இடம் .மூன்றாம் இடம் பெர்னாண்டோ அலோன்சா .நான்காம் இடம் ஜென்சன் பட்டன் .ஐந்து-லீவிஸ் ஹேமில்டன் .கடந்த நேரப்படி இவர் இரண்டாம் இடம் ஆனால் பயிற்சி போட்டியில் மஞ்சள் கொடிக்கு மதிப்பு அளிக்காததால் ஐந்தாம் இடம் .ஆறு -பிலிப் மாசா ,.ஏழு- நிக்கோ ரோச்பெர்க், எட்டு -ஆண்ட்ரியன் சட்டில்,ஒன்பது செபாஸ்டியன் ப்யுமி ,பத்தில் - ஜெய்மி அழகுசுரெய் .




நாளைய சுவாரசியத்தை அறியும் முன் மதியம் மூன்று மணிக்கு போட்டி ஆரம்பிக்கிறது ஆனால் இரண்டு மணிக்கே காண தொடங்கினால் போட்டி பற்றி பல ஆழமான விசயங்கள் அறியலாம் .வாருங்கள் அந்த அற்புத நிகழ்வை .





Friday, October 28, 2011

இந்திய ஃபார்முலா1 ன் வாசல் திறந்து விட்டது .

இந்திய பார்முலா 1 ரசிகர்களின் கொண்டாட்டங்கள் தொடர்கிறது ...

லகின் அத்தனை முன்னணி வீர்களின் அணிவகுப்பு இந்திய மோட்டார் பந்தய வீரர்களுக்கு மிக சிறந்த உற்சாகத்தை தந்து இருக்கிறது .
ஒரு வாசல் பல வாய்ப்புகளை உலகிலிருந்து பெற வழி வகுக்கிறது .



உலக கார் உற்பத்தியாளர்களின் நம்பிக்கை அதிகரித்து விட்டது .ஏற்கனவே உலக புகழின் அழியா நினைவு சின்னம் தாஜ்மகால் போன்ற டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள வரலாற்று புகளிடங்களின் புதுபிப்புகளுக்கு வருமான முகவரி கிடைத்து இருக்கிறது .புதிய கார்களின் தர பரிசோதனைக்கான சர்வதேச களம் கிடைத்து இருக்கிறது .களத்தின் வடிவமைப்பு சவால் தந்து இருக்கிறது .இந்திய மோட்டார் போட்டிகளின் அட்டவணையில் மிக பெரிய களத்திர்க்கான வெற்றிடம் நிரப்ப பட்டு விட்டது.ஒரு போட்டி எத்தனை வாசல்களை திறக்கும் சாவி என்பது இனி அறிந்து கொள்ளலாம் ...



ஆனால் வழக்கம் போல வாழ்கையின் வழி போல சந்தோசங்கள் ஜன்னல் வழியாகவும் துக்கம் கதவு வழியாகவும் வந்து நிற்க்கிறது .ஆம் இந்திய வீரர்கள் இருவரையும் களத்தில் பார்த்து ரசிக்க விரும்பிய நமது இளம் உள்ளங்களை HRT-Cosworth அணி புரிந்து கொண்டு விடன்ட்டனியோ ல்யுசி (Vitantonio Liuzzi) விலக்கிவிட்டு நமது இந்திய கனவை நிஜமாக்கிய நரேன் கார்த்திகேயனை களம் இறக்கியது

Naren Helmet design 
 .ஆனால் Lotus Renault அணி நமது கருண் சந்தோக்கை களமிறக்க மறுத்து விட்டது .காரணம் பல சொல்லபடுகிறது .ஆனால் இந்திய ரசிகர்களின் ஏமாற்றி விட்டது .




நம் இந்தியாவின் ஒரே அணியும் நம்பிக்கையுமான போர்ஸ் இந்திய அணி ஜெர்மனியின் ஆண்ட்ரியன் சட்டிளையும் ,இங்கிலாந்தின் பால் டி ரெஷ்டவையும் நம்பியுள்ளது .இவர்கள் அணியின் நிலையை ஆறாம் இடத்தில், காப்பாற்றி கொண்டுவருகிறார்கள் .



இந்திய கிரிக்கெட்டின் கடவுள் -சச்சின் நீடா அம்பானியின் மும்பை அணியை சார்ந்தவர் என்றாலும் ,மெக்ளறேன் மெர்சீடிசின் மைக்கேல் ஷூமேக்கரின் நண்பர் என்ற போதும் விஜய் மல்லயாவின் போர்ஸ் இந்திய அணிக்கு தன் ஆதரவை தெரிவித்து இந்திய பார்முலா1 ரசிகர்கள் மனதினை ஒரே பந்தில் சென்சுரி விட்டார் !!.



இன்று இந்திய களத்தின் திறப்பு விழா மற்றும் ஒரு விசேஷம் என்னவென்றால் ,உலகின் பார்முலா போட்டிகளை நடத்தும் FIA (International Automobile Federation) வின் ஏராளமான பதவிகளை வகித்துக்கொண்டு இருக்கும் முன்னால் F1 டிரைவர் இங்கிலாந்தின் சிறந்த தொழில் அதிபருமான பெர்னி எக்லேஸ்டோனின் (Bernard Charles "Bernie" Ecclestone) 81 ஆவது பிறந்தநாள் .

Bernie" Ecclestone



அவரை வாழ்த்தலாம் .வாழ்த்த வயது குறைவாக இருந்தால் வணங்கவேண்டும் .நான் வணங்குகிறேன் .



இரண்டாவது தீபாவளி.


.இன்னொரு தீபாவளியை கொண்டாட இந்தியஃபார்முலா 1 தயாராகி வருகிறார்கள் அதுவும் இந்தியஃபார்முலா 1 ரசிகர்களுக்கு தலைதீபாவளி..

இந்திய தலை நகரம் டெல்லியின் இந்த இலையுதிர் காலத்தை பார்முலா பார்ட்டிகள் மூலம் வசந்த காலமாக மாற்றும் முயற்சிகள் நடந்து வருகிறது .மொத்த உலக ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு ஏற்பாடுகள் மிக பிரமாதமாக அமைந்து விட்டது.


இந்த இடத்தில் என் வலைப்பூக்கென நான் வைத்திருக்கும் எழுதும் சில முறைகளை மெல்ல விலக்கிவிட்டு எழுத ஆசைப்படுகிறேன் .





இந்திய நேரம் 10 மணி முதல் 11.30 வரை நடந்த பயிற்சி போட்டி முடிவுகள் வெளியாகி விட்டது .என்னுடைய இருபது வருட கனவின் அல்லது வெறித்தனமான ஆசையின் அற்புதத்தை தரிசிக்கிறேன் .உலகின் அத்தனை சாம்பியன்களும் இன்று இப்போது இந்திய "புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்" களத்தில் .


நிலவை நேரில் தரிசித்தாவர்கள் பலர் இருக்கலாம் ஆனால் நான் தூரத்தில் இருந்து ரசிக்கிறேன் .நேரில் போட்டிகளை ரசிக்கும் வாய்ப்பு மற்றும் வசதி எனக்கு வாய்க்கவில்லை ஆனால் இந்தியாவில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஒவ்வொரு உலக சாம்பியனின் மூச்சு காற்றின் அனுபவத்தை உணர்கிறேன் .


அடுத்து வரும் சந்ததியினருக்கு அவர்களின் விதை இந்திய களத்தில் லட்ச கணக்கில் விதைக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு விதையும் எத்தனை விருட்சங்களை உருவாக்க போகிறது என்பது காலம்தான் முடிவு செய்யும் .

என் போல இந்திய மண்ணில் பார்முலா 1 போட்டிகள் வரவேண்டும் என் விரும்பிய இந்த நேரம் மிக பல விசித்திர உணர்வுகளை ரசிக்கவைக்கும் .

இந்திய மண்ணில் பயிற்சி போட்டியின் முதல் வேக பதிவை ,செய்தவர் .அடுத்த இங்கிலாந்தின் ஜேம்ஸ் பாண்டாக ஆசைப்படும் மெக்லரண் மெர்சீடிசின் லீவிஸ் ஹேமில்டன்.



இந்திய போட்டிகளைபற்றி -இந்த வாழ்வின் மறக்கமுடியாத தருணத்தை கொட்டி தீர்க்க இன்னும் என் வேகம் வரும் ...

இன்று மாலை கூட !






Friday, October 21, 2011

பாதுகாப்பின் விலை -டான் வெல்டன் உயிர் .

டான் வெல்டன் ஆத்மாவுக்கு அஞ்சலி .


 Dan Wheldon


கிழக்கு ஆசியாவின் கொரிய தீபகர்ப்பத்தில் தென்பகுதியில் அமைந்துள்ள தென்கொரியாவின் -Korea International Circuit ல் பார்முலா 1 ன் பதினாறாவது போட்டி கடந்த 16-10-2011 ல் நடந்தது .அழகிய இந்த நாட்டின் கிறிஸ்துவ மதமும் ,பௌதமதமும் அதிகம் பின்பற்றபட்டாலும் அதே சமவிகிதத்தில் வேற்று மதங்களும் உள்ளது.



ஆனால் புத்தர் பிறந்த இந்தியாவில் அவர் தொலைந்து போகாமல் இருக்க நமது ஜெய்ப்பீ குரூப் கம்பெனியால் புத் இண்டெர் நேசனல் சர்குயுட் என பெயர்- தாங்கி இருக்கிறது. 


தென்கொரியாவின் சியோலில் உள்ள ஹூண்டாய் மோடார் கம்பனி (Hyundai Motors Company)தற்போது இந்தியாவின் இரண்டவாது அதிக கார் உற்பத்தி நிறுவனமாக உள்ளது .இதன அழகான சொகுசுகார்கள் கொரியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு -ஒரு உதாரணம் மட்டுமே .இன்னும் பல விசயங்களில் அபார வளர்ச்சி பெற்றுள்ளது தென்கொரியா .

Korea International Circuit 

கொரியாவிலுள்ள ய்யோங்கம் (  Yeongam)  களத்தில் கடந்த ஆண்டுமுதல்தான் போட்டி நடத்தப்படுகிறது இந்த களம் 308.630 கி.மீ நீளமுள்ளது. ஐம்பத்தி ஐந்து சுற்றுக்களையும் பதினெட்டு வளைவுகளையும் (Turns) கொண்டது .


Fernando Alonso

கடந்த ஆண்டில் வேக நாயகனாக வந்தவர் -ஃபெர்ராரியின் பெர்னாண்டோ அலோன்சா 1:50.257 நிமிடத்தில் கடந்து சாதித்தார் .அது மட்டுமல்ல கடந்த ஆண்டில் போட்டியை நிறைவு செய்தவர்கள் பதினைந்து பேர்தான் .அவ்வளவு கடுமையான கள அமைப்பு !

ஏற்கனவே சாம்பியன் யார் என தெரிந்தாலும் அதர்க்கு அடுத்த முக்கியமான முதல் அணிக்கான (Constructor ) முடிவு முழுவதுமாக தீர்மானிக்கபடாத நிலை தொடர்வதால் அணிகளின் தீவிர உழைப்பு கடுமையாக வெளிப்படும் என எதிபார்க்க படுகிறது .ரெட்புல் ரெனால்ட் 518 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது .மெக்லரண் மேர்சீடிஸ் 388 புள்ளிகள் மூன்றாம் இடத்தில் பெராரி 292 .எனவே அணிகளின் தீவிரம் இருக்கத்தானே செய்யும் .
அதுமட்டுமல்ல எஞ்சின் தயாரிப்பு ,கார் தயாரிப்பு ,இன்னபிற தயாரிப்புக்களின் எதிர்காலங்கள் தீர்மானிக்கபட இருப்பதால் இனி வரும் போட்டிகள் முக்கியம் அடைகின்றது ..



இந்திய நேரப்படி பகல் 11:30 க்கும் தென்கொரியாவின் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கும் போட்டி ஆரம்பித்தது .
முதல் சுற்று ...
முதல் சுற்றுதான ஆனால் மோதல் சுற்றா என்பது போல இருந்தது .
ஹேமில்டன் வேகம் ஆரம்பிக்க அவரை தொடர முயன்ற ஜென்சனை வெட்டல் வழக்கம் போல முன்னேற விடமால் தடுத்து (தனது கடமையை செய்து !) ஹெமில்டனை துரத்த ..
ஐந்தாம் இடத்தில் துவங்கிய பெர்ரரியின் பிலிப் மாசா இந்த முன்னணி கலவரத்தை புரிந்து கொண்டதால் முன்னேறி மூன்றாம் இடத்தை பிடித்தார் .இதனால் ஹேமில்டன் ஐந்தாம் இடத்தில் தொடர்ந்தார் .
அதர்க்குள் வெட்டல் லீவிசை வளைவில் முந்தி பின்னுக்கு தள்ளினார் .வெட்டல் ரேஸ் லீடர் ஆகி விட்டார் .
நான்காம் சுற்று ...
DRS தொழில்நுட்பம் அனுமதிக்க பட்டது .
கார்களின் தொடரும் நிலைகள் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது .
எட்டாவது சுற்று....
வெட்டளுக்கும் ஹெமில்டனுக்கும் இடையே உள்ள இடைவெளி இரண்டு வினாடிகளாய் அதிகரித்தது .
பதினோராம் சுற்று ...
வெட்டல் ,ஹேமில்டன் ,தொடர அடுத்த இடத்தில் வெப்பர் .மாசா ,அலோன்சா ,பட்டன் மூன்று பெரும் மழை வரும் என எதிர்பார்த்து அவரவர் நிலையில் தொடர ..
பதினாலாவது சுற்று ...
ஆறாம் நிலையிலிருந்த ஜென்சன் பட்டனும் ,ஏழாம் நிலையிலிருந்த  நிக்கோ ரோஸ் பெர்க்கும் துறத்தல் போட்டி நடத்தி கொண்டு இருந்தார்கள் .தொழில்நுட்பம் கை கொடுக்க பட்டன் தன்னுடைய இடத்தை தக்கவைத்துகொண்டார் .
பதினைந்தாவது சுற்று...
வெப்பர் ,மாசா டயர் மாற்ற வர அவர்களை தொடர்ந்து மைக்கேல் ஷுமேக்கர் .பெட்ரோவும் வந்தார்கள் 
பதினாறாவது சுற்று ...


அலோன்சா பிட் லேன் விட்டு வெளியேறி கொண்டுஇருந்தார் .அப்போது அங்குள்ள வளைவில் முந்த முயன்ற சூமேக்கரை அவரை தொடர்ந்து வந்த ரெனால்டின் விட்டாலி பெட்ரோவ் சற்றும் எதிர்பாராமல் தாக்கினார் .அந்த வேகத்தில் தூக்கி எரியபட்டதை போல ஷூமேக்கர் கார் பறந்து ஓரசுவரில் மோதி விபத்துக்குள்ளானது .சிங்கத்தை சாய்த்து விட்டார்கள் !
அவரை தொடர்ந்து பெட்ரோவும் வெளியேறினார் .(கேரம் விளையாட்டில் ரெட் காயினுக்கு ஃபாலோ ஆன் போல).

பதினேழாம் சுற்று ...சேப்டி காரின் வழி நடத்தல் முடிவுக்கு வந்ததது .
இருபத்தி ஒன்றாவது சுற்று ...
ஜென்சன் பட்டன் ,வெப்பரை முந்தி செல்ல முற்பட்டு தோற்றுப்போனார் .
இருபத்தினாலாவது சுற்று ...
HRT- காஷவோர்தின் டேனியல்ரிகார்டியோ பிட் லேனை விட்டு வெளியேறும்போது பாதுக்காப்பற்ற வெளியேற்றம் (Unsafe  Release)  காரணமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் )
.
முப்பதாவது சுற்று ...
எஞ்சின் கோளாறினால் வில்லியம் காஸ்வோர்த்தின் -பாஸ்டர் மால்டோனா போட்டியிலிருந்து வெளிய்றினார். முப்பதினாலவது சுற்று.. 
ஹேமில்டன் -வெப்பர் ஓயாத போராட்டமாக இருந்தது .
முப்பத்தி ஏழாவது சுற்று ..
ஆண்ட்ரியன் சட்டில் பிட் லேன் வர அவரை தொடர்ந்து ரோச்பெர்க் .
ஷூமேக்கர் வெளியேற்றத்தில் மிக பொறுப்புடன் ரோஷ்பெர்க்  செயல்படுவது வாடிக்கை ஆகிவிட்டது .

நாற்ப்பத்தி ஒன்றாவது சுற்று ...
ஜைமி அல்குச்வரி எட்டாம் இடத்திலிருந்து ஏழாம் இடத்திலிருந்த ரோஷ்பெர்க்கை துரத்தி பிடித்தார் .இந்த துரத்தலை அபாயகரமாக இருந்ததாக புகார் செய்தார்  ரோஷ்பெர்க்.
நாற்ப்பத்தி மூன்றாவது சுற்று ...
ஹெமில்டனை தாண்டிசெல்ல வெப்பர் பல வழிகளை செய்து கொண்டே இருந்தார் .அவர்களுக்கு இடையே வினாடி ௦0.3 அளவே இருந்தது .

நாற்ப்பத்தி ஆறாவது சுற்று ...
மூன்று வினாடி இடைவெளியில் நாலாவது இடத்து பட்டனை பிடிக்க பிரயர்த்தனம் செய்து கொண்டு இருக்க ..

ஐம்பத்தி ஒன்றாவது சுற்று ...
எப்படியாவது இந்த ஆண்டின் முதலிடத்தில் ஒரு முறையாவது வரவேண்டும் என்ற வெப்பரின் ஆசை இந்த தீவிரம் தெரிந்தது .அவரின ஆசையை அவரின கார் RB 7க்கு புரியவில்லை!.

ஐம்பத்தி ஐந்தாவது (கடைசி) சுற்று ....



இந்த கடைசி சுற்றில் வெட்டல் முன்னிலையில் இருந்தாலும் தொடர்ந்து வரும் மெக்ளரனின் தொழில் நுட்பத்தில் உள்ள நம்பிக்கையால்! தன்னுடைய அதிவேகத்தை பதிவு செய்தார் .1:39.605 அது அந்த களத்தின் அதிவேகமும் கூட .
.
Red Pull Team.

இந்த போட்டியின் முடிவு ரெட்புல் ரெனால்ட் அணியின் சாம்பியன் பட்டத்தை எளிதாக்கிவிட்டது எனலாம் .ஆமாம் பதினாறு போட்டிகள் முடிந்த நிலையில் 518 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது .அடுத்த நிலையிலுள்ள மெக்ளறேன் அணி அடுத்து வரும் மூன்று போட்டிகளில் முதல் இரண்டு இடங்களையும் தொடர்ந்து பிடித்தால் கூட(! )129 புள்ளிகள் பெறமுடியும் 
418 + 129 = 547 புள்ளிகள் மட்டுமே பெற முடியும் .

அதுவரை வெட்டலும் ,வெப்பரும் சும்மா இருப்பார்களா ? இன்னும் மூன்று போட்டிகளில் 30 புள்ளிகள் எடுக்கமாட்டர்களா ?.வாய்ப்பே இல்லை . எனவே 2011 ன் constructors' championship  கட்டாயம் ரெட் புல் ரெனால்ட் அணிதான். 




இன்றைய போட்டி முடிவுகள் ... 




ரெட்புல்லின் செபாஸ்டியன் வெட்டல் முதலிடத்தை பிடித்தார் .






இரண்டாம் இடத்தை மெக்ளரனின் லீவிஸ் ஹேமில்டன் இரண்டாம் இடம் .




மூன்றாம் இடத்தில் மார்க் வெப்பர் .




நான்காம் இடம் ஜென்சன் பட்டனுக்கும் ,ஐந்தாம் இடம் பெர்ரரியின் ஆலோன்சவுக்கும் ஆறு மாசாவுக்கும் ஏழாம் இடமும் ஒன்பதாம் இடமும் டோரோ ரோசோ அணிக்கும் ,எட்டு மெர்சிடீஸ் அணிக்கும் ,பத்து போர்ஸ் இந்திய அணிக்கும் கிடைத்தது .



இந்தபோட்டி நடந்த அதே நாள் இன்னொரு துயர சம்பவம்அமெரிக்காவில் நடந்தது . பார்முலா போட்டிகளின் வரிசையில் நடக்கும் இண்டி கார் சீரீஸ்
(  IndyCar Series ) இம்மாதிரி போட்டிகள் பார்முலா 1 போட்டிகளுக்கு வழிநடத்தும் போட்டிகள் .





Las Vegas Motor Speedway, USA, 


கடந்த அக்டோபர் ஆறாம் நாள் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் ஸ்பீட் வேயில் நடந்த போட்டியில் பதினோராவது சுற்றில் முப்பத்தி மூன்று வயதான பிரிடீஷ் டிரைவர் டேன் வெல்டன் (Dan Wheldon)  தன்னுடைய எழுபத்தி ஏழாம் எண் ஹோண்டா கொண்ட காரில் விபத்துக்குள்ளானார் .


டான் வெல்டன் ஆத்மாவுக்கு அஞ்சலி .

இந்த கொடூரமான விபத்தின் மூலம் அவர் விட்டு சென்ற செய்தி பாது காப்பின் தரம் போதாது என்பதே ஆகும் .இதனை வேறுவிதமாக செபாஸ்டியன் வெட்டல் உறுதி செய்கிறார் .இந்த போட்டிகளில் அபாயத்தை தவிர்க்க முடியாது என்பதே அது .அதுமட்டுமல்ல நாங்கள் மோட்டார் பந்தயத்தையும் அதன் அபாயத்தையும் நேசிக்கிறோம் என்கிறார்.


அவரின அன்பான மனைவி சுசி பேம் (Susie Behm) அவரின இரண்டரை வயது மற்றும் ஆறு மாத குழந்தைக்கு என்ன பதில் இனி சொல்ல போகிறார் ?

உங்கள் அப்பா பாதுகாப்பு இல்லாத பந்தயத்தை நேசித்தார் என்றா ?






Friday, October 14, 2011

2011ன் உலக சாம்பியன் செபாஸ்டியன் வெட்டல்.

லகத்தின் பல புராண கற்பனை கதைகளில் பீனக்ஸ் (Phoenix) பறவையை பற்றி நாம் அறிகிறோம் .எரியும் நெருப்பில் தானே விழுந்து முழுதும் சாம்பலாகி அந்த சாம்பலிலிருந்து மீண்டும் உயிர்த்தெழும் அழியாத தன்மையை விளக்கும் ஒரு அற்புதமான உவமை பீனக்ஸ் .இந்த உவமையின் முழு பொருளும் "நிகோன் கொகு அல்லது "நிப்பொன் கொகு" (ஜப்பானிய மொழி )எனப்படும் ஜப்பானுக்குத்தான் பொருந்தும்.

Phoenix Bird

6852 தீவுகளின் சங்கமமாக திகழும்ஆசிய கண்டத்திலுள்ள ஜப்பானின் முதல் சோதனை அமெரிக்காவின் 33 ஆவது ஜனாதிபதி ஹாரி எஸ் ட்ருமன் மூலம் 1945 ல் வீசப்பட்ட லிட்டில் பாய், ஃபேட் மேன் அணுகுண்டுகள் மூலம் வந்தது ,அப்புறம் இயற்கை சீற்றங்களான பூகம்பங்கள் ,சுனாமி ( Tsunami-இந்த பெயர் கூட ஜப்பானிய மொழியில்தான் உருவானது ) எத்தனை சோதனைகளை கடந்து நிற்கிறது ஜப்பான் .அதர்க்கு முதல் காரணம் எதையும் தாங்கி அதிலிருந்து வெளிவரும் அவர்களின் உழைப்பு அந்த உழைப்புக்கு உறுதுணையாக இருக்கும் அவர்களின் பௌத்த மதம் .


கடந்த 09-10-2011 ல் ஜப்பானின் -Suzuka International Racing Course களத்தில் ஃபார்முலா 1 ன் பதினைந்தாவது போட்டி நடந்தது .2003 ஆம் ஆண்டிலுருந்து இதுவரையிலும் ஏழு போட்டிகள் நடந்துள்ளது .



களத்தின் நீளம் 307.471 கி.மீ . பதினெட்டு வளைவுகளை கொண்ட இந்த களத்தின் வேக நாயகன் மெக்லரண் மெர்சீடிசின் கிமி ரேயகொனேன் கடந்த 2005 ல் ஒருமுறை 1:31.540 நிமிடத்தில் கடந்ததே சாதனையாக இருந்து வருகிறது .



இந்த களம் ஒரு முக்கியமான விஷயத்தை உறுதி செய்ய போகிறது  .அது ரெட்புல் அணியின் செபாஸ்டியன் வெட்டல் உலக சாம்பியன் என்ற  அதிகாரபூர்வ அறிவிப்பு .கடந்த போட்டியில் ஒரு புள்ளியில் தனது வெற்றியை கொண்டாட காத்திருந்த அவரின அணி இந்தமுறை களைகட்டியிருந்தது .எங்கும் ரெட்புல் ரெனால்டின் கொடிகளும் ரசிகர்களின் உற்சாக வரவேற்ப்பு காத்திருந்தது .... 


இந்திய நேரப்படி பகல் 11:30 க்கும் ,ஜப்பானின் நேரப்படி பிற்பகல் மூன்று மணிக்கும் போட்டி ஆரம்பித்தது ....

முதல் வரிசையில் ரெட்புல்லின் செபாஸ்டியன் வெட்டல் இரண்டாம் இடத்தில் வெள்ளிகிழமை மற்றும் சனிக்கிழமை பயிற்சி போட்டியிலும் முதலிடத்தில் இருந்த மெக்ளறேன் மெர்சீடிசின் ஜென்சன் பட்டன் மூன்றாம் இடம் அதே அணியின் லீவிஸ் ஹேமில்டன் துவங்கினார்கள் .
போட்டி ஆரம்பித்தது ...

முதல் சுற்று ...

செபாஸ்டியன் வெட்டல் புயலென கிளம்பிபோவார் என எதிர்பார்த்தால் சட்டென இரண்டாம் இடத்தில் கிளம்பிய ஜென்சன் பட்டனை முந்திச்செல்ல விடாமல் தடுத்தார்( இது புகார் அளிக்கப்பட்டது. ) இதனால் மூன்றாம் இடத்தில் துவங்கிய ஹேமில்டன் இரண்டாம் இடத்திற்கு விரைந்தார்.வெட்டலின் இந்த செயல் ரேஸ் ஆர்வலர்களை புருவத்தை தூக்க வைத்தது .
எட்டாவது சுற்று ...
பட்டன் மூன்றாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்கு ஹெமில்டனை தள்ளினார் .
பத்தாவது சுற்று ...
வெட்டல் டயர் மாற்றவந்து ஆறாம் இடத்தில் தொடர்ந்தார் .
பனிரெண்டாவது சுற்று ..
டோரோ ரோசோ அணியின் செபாஸ்டியன் புமி வலது முன்பகுதி டயர் விலகி வெளியற போட்டியிலிருந்து வெளியேறினார் .
வழக்கமான துரத்தல்களை தவிர போட்டி சுவாரசிய பஞ்சத்தை ஏற்படுத்தியது .
இருபத்திரெண்டாவது சுற்று ...
பிலிப் மாசா -ஹெமில்டனை மோதி விளையாடினார் .
இருபத்தி நாலாவது சுற்று ...
முதலிடத்தில் தொடர்ந்த பட்டனை வெட்டல் பின்னுக்கு தள்ள பிரயர்த்தனம் பண்ணிக்கொண்டு இருந்தார் .
இருபத்தி ஆறாவது மற்றும் இருபத்தி ஏழாவது சுற்று ..
சேப்டி காரின் ஊர்வலம் ...காரணம் பிலிப் மாசா -ஹெமில்டனை விசாரணை.
முப்பத்தி நாலாவது சுற்று ...
மைக்கேல் ஷூமேக்கர் ரேஸ் லீடர் .ஆம் டயர் மாற்ற ஒருவர் பின் ஒருவர் சென்ற காரணத்தினால் .

நாற்பத்தி ஒன்றாவது சுற்று ...
ஆலோன்சாவின் இடத்தை இரண்டாம் இடத்தை பிடிக்க வெட்டல் கடுமையாக போராடி கொண்டே இருக்க ...
ஐம்பத்தி மூன்றாவது -கடைசி சுற்று ...




எவ்வித மாற்றமும் இல்லாது ஜென்சன் பட்டன் முதலிடத்தில் வந்தார்.


இரண்டாம் இடம் .
பெர்ரரியின்- பெர்னாண்டோ அலோன்சா அந்த இடத்தை நிரப்பினார் .




மூன்றாம் இடம் ...
ஆனால் 2011 ஆம் ஆண்டின் சாம்பியனை முடிவு செய்த இடம் .செபாஸ்டியன் வெட்டல் .கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் சாம்பியன் .அது மட்டுமல்ல கடந்த ஆண்டு வெட்டல் சாம்பியன் ஆன போது , 2008 ஆம் ஆண்டில் இளம்வயதில் சாம்பியன் பட்டம் வென்ற ,லீவிஸ் ஹெமில்டனை விட 168 நாள் வித்தியாசத்தில் மிக இளம் வயது சாம்பியன் ஆனதால் அந்த சாதனையையும்  பறித்தார் .
மற்ற படி போர்ஸ் இந்தியா எந்த புள்ளியும் எடுக்காமல் பதினொன்று ,மற்றும் பனிரெண்டாம் இடம் வந்து விஜய் மல்லயாவை ஜப்பானில் ஏமாற்றியது அது மட்டுமல்ல இந்தியாவில் நடந்த CLT20 போட்டியில்அவரின் ராயல் செலேஞ்சர்ஸ் அணி மும்பை இந்தியன்சிடம் தோற்று ஏமாற்றம் அளித்தது ...

இது மட்டுமல்ல அவரின் போர்ஸ் இந்திய அணியை விற்று விட முடிவு செய்ததாக தவறான தகவல் கசிய விடப்படுகிறது .உண்மையில் அவர் தன்னுடைய பங்கில் 42.5% பகுதியை அதாவது 100 மில்லியன் அமெரிக்கன் டாலர் மதிப்பு பங்கை ”சஹார குரூப்” கம்பெனிக்கு(SAHARA GROUP) தாரை வார்த்து விட்டார் .



இதன் மூலம் சாஹார போர்ஸ் இந்தியா என பெயர் மாற்றம் நிகழ்ந்தது மட்டுமே நடந்துள்ளது . 



Kamui Kobayashi

சப்பர் பெர்ரரியின் -கமுய் கோபயாஷி ,இவர் ஜப்பானின் ஒரே ஒரு பார்முலா டிரைவர் இவர் தன்னுடைய மண்ணில் பதிமூன்றாம் இடம் வந்து ஏமாற்றினார் .ஆனால் இருபத்தி ஏழு புள்ளிகளுடன் பனிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் .

Jessica Celeste Michibat


னால் அதே ஜப்பானில் பிறந்த இன்னொருவர் மிக சந்தோசமாக இருந்தார் அனைவரையும் சந்தோசமாக வைத்திருந்தார்-அவர் ஜப்பனின் மாடல் அழகி ஜெசிகா ( Jessica Celeste Michibata).
 மாடல் அழகி என்பதோடு அவர் முதலிடத்தில் வந்த ஜென்சனின் காதலி என்பதே அந்த பெயர் சிறப்பு!

Korea International Circuit

அதர்க்குள் கொரியா போட்டி களத்தின் வெள்ளி கிழமைக்கான பயிற்சி போட்டி ஆரம்பித்து விட்டது .முதல் போட்டியில் ரெயின் மாஸ்டர் சூமேக்கர் முதல் இடத்திலும் இரண்டாம் போட்டியில் லீவிஸ் ஹெமில்டனும் வந்து வ்வ்வர்ர்ரூம் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் .



புள்ளி பட்டியலை அடுத்த வாரம் ஆய்வு செய்யலாம்.

ந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 16-10-2011 ல் கொரிய தேசத்தில் Korea International Circuit ல் போட்டி இந்திய நேரப்படி பகல் 11.30 க்கு நடக்க இருக்கிறது அங்கு நாம் சந்திப்போம்.