உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Friday, October 28, 2011

இந்திய ஃபார்முலா1 ன் வாசல் திறந்து விட்டது .

இந்திய பார்முலா 1 ரசிகர்களின் கொண்டாட்டங்கள் தொடர்கிறது ...

லகின் அத்தனை முன்னணி வீர்களின் அணிவகுப்பு இந்திய மோட்டார் பந்தய வீரர்களுக்கு மிக சிறந்த உற்சாகத்தை தந்து இருக்கிறது .
ஒரு வாசல் பல வாய்ப்புகளை உலகிலிருந்து பெற வழி வகுக்கிறது .உலக கார் உற்பத்தியாளர்களின் நம்பிக்கை அதிகரித்து விட்டது .ஏற்கனவே உலக புகழின் அழியா நினைவு சின்னம் தாஜ்மகால் போன்ற டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள வரலாற்று புகளிடங்களின் புதுபிப்புகளுக்கு வருமான முகவரி கிடைத்து இருக்கிறது .புதிய கார்களின் தர பரிசோதனைக்கான சர்வதேச களம் கிடைத்து இருக்கிறது .களத்தின் வடிவமைப்பு சவால் தந்து இருக்கிறது .இந்திய மோட்டார் போட்டிகளின் அட்டவணையில் மிக பெரிய களத்திர்க்கான வெற்றிடம் நிரப்ப பட்டு விட்டது.ஒரு போட்டி எத்தனை வாசல்களை திறக்கும் சாவி என்பது இனி அறிந்து கொள்ளலாம் ...ஆனால் வழக்கம் போல வாழ்கையின் வழி போல சந்தோசங்கள் ஜன்னல் வழியாகவும் துக்கம் கதவு வழியாகவும் வந்து நிற்க்கிறது .ஆம் இந்திய வீரர்கள் இருவரையும் களத்தில் பார்த்து ரசிக்க விரும்பிய நமது இளம் உள்ளங்களை HRT-Cosworth அணி புரிந்து கொண்டு விடன்ட்டனியோ ல்யுசி (Vitantonio Liuzzi) விலக்கிவிட்டு நமது இந்திய கனவை நிஜமாக்கிய நரேன் கார்த்திகேயனை களம் இறக்கியது

Naren Helmet design 
 .ஆனால் Lotus Renault அணி நமது கருண் சந்தோக்கை களமிறக்க மறுத்து விட்டது .காரணம் பல சொல்லபடுகிறது .ஆனால் இந்திய ரசிகர்களின் ஏமாற்றி விட்டது .
நம் இந்தியாவின் ஒரே அணியும் நம்பிக்கையுமான போர்ஸ் இந்திய அணி ஜெர்மனியின் ஆண்ட்ரியன் சட்டிளையும் ,இங்கிலாந்தின் பால் டி ரெஷ்டவையும் நம்பியுள்ளது .இவர்கள் அணியின் நிலையை ஆறாம் இடத்தில், காப்பாற்றி கொண்டுவருகிறார்கள் .இந்திய கிரிக்கெட்டின் கடவுள் -சச்சின் நீடா அம்பானியின் மும்பை அணியை சார்ந்தவர் என்றாலும் ,மெக்ளறேன் மெர்சீடிசின் மைக்கேல் ஷூமேக்கரின் நண்பர் என்ற போதும் விஜய் மல்லயாவின் போர்ஸ் இந்திய அணிக்கு தன் ஆதரவை தெரிவித்து இந்திய பார்முலா1 ரசிகர்கள் மனதினை ஒரே பந்தில் சென்சுரி விட்டார் !!.இன்று இந்திய களத்தின் திறப்பு விழா மற்றும் ஒரு விசேஷம் என்னவென்றால் ,உலகின் பார்முலா போட்டிகளை நடத்தும் FIA (International Automobile Federation) வின் ஏராளமான பதவிகளை வகித்துக்கொண்டு இருக்கும் முன்னால் F1 டிரைவர் இங்கிலாந்தின் சிறந்த தொழில் அதிபருமான பெர்னி எக்லேஸ்டோனின் (Bernard Charles "Bernie" Ecclestone) 81 ஆவது பிறந்தநாள் .

Bernie" Ecclestoneஅவரை வாழ்த்தலாம் .வாழ்த்த வயது குறைவாக இருந்தால் வணங்கவேண்டும் .நான் வணங்குகிறேன் .1 comment:

Sugumarje said...

//புதிய கார்களின் தர பரிசோதனைக்கான சர்வதேச களம் கிடைத்து இருக்கிறது .களத்தின் வடிவமைப்பு சவால் தந்து இருக்கிறது .இந்திய மோட்டார் போட்டிகளின் அட்டவணையில் மிக பெரிய களத்திர்க்கான வெற்றிடம் நிரப்ப பட்டு விட்டது//
நம்ப முடியாத அதிசய நிகழ்வாக மாறிவிட்டது... இந்தியா இனி பிரமாண்டமாக வளரும் :)