உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, September 15, 2012

லீவிஸ் ஹெமில்டன் இத்தாலியின் வெற்றியாளர்

உலகின் மூத்த இத்தாலியின் -Autodromo Nazionale Monza சர்க்யூட்டில் இன்று நடக்க இருப்பது 62 ஆவது போட்டியாகும் .ஒவ்வொரு ஃ பார்முலா 1 டிரைவரின் கனவும் இந்த களத்தில் வெற்றி பெறுவது என்பது கனவே ஆகும் .எந்த அளவுக்கு மிக பெயர் இருக்கிறதோ அந்த அளவுக்கு இங்கு வெற்றியை அனுபவிப்பது என்பது ஒரு சவால் என்பதில் சந்தேகம் இல்லை .ஒருவித அபார வேகம் இந்த களத்தின் ஆத்மாவாக இருப்பதாலோ என்னவோ இதன் பெயர் The Magic Track எனபடுகிறது .


தகுதி சுற்றில் கிடைத்த வாய்ப்பை பெற்ற வீரர்களின் வரிசை ..
1.லீவிஸ் ஹெமில்டன்,2. ஜென்சன் பட்டன்.3.பிலிப் மாசா ,4.மைக்கேல் ஷூமேக்கர் ,5.செபாஸ்டியன் வெட்டல் ,6.நிக்கோ ரோஷ்பெர்க் ,7.கிமி ரைகொணன் 8.கமோய் கோபயாஷி ,9.பால்டி.ரெஷ்டா,10.பெர்னாண்டோ அலோன்சா ,11.மார்க் வெப்பர்,12.செர்ஜியோ பெரெஸ்
முதல் சுற்று ..
முதலில் கிளம்பிய ஹெமில்டனின் வேகம் இரண்டாவது கிளம்பவேண்டிய ஜென்சனிடம் ஏனோ இல்லை அதி பயன்படுத்தி கொண்ட பிலிப் மாசா அருமையான துவக்கத்தில் இரண்டாவது இடத்தை கைப்பற்றினார்.
நான்காம் சுற்று ..
அத்துடன் விடவில்லை மாசா ,ஹெமில்ட்டனையும் ஒரு கைபார்க்க தொடங்க ..சுதாரித்த அவர்  தக்கவைத்துக்கொள்ள பாடுபட்டார் .வெட்டல் இப்போது ஐந்திலிருந்த ஷூமேக்கரை பின்னுக்கு தள்ளி நான்காம் இடத்திற்கு முன்னேற ,ரோஷ்பெர்க்கும் - சென்னாவும் Wheel to Wheel உரசி கொண்டதில் சென்னாவின் கார் ட்ராக்கை விட்டு கார் வெளியேறி உள்ளே வந்தது .
ஏழாம் சுற்று ..
சென்னா இந்தமுறை டி ரெஷ்டாவுடன் மோதி விளையாட நல்லவேளை இரண்டும் காரும் பத்திரமாக போட்டியை தொடர்ந்தன .
எட்டாம் சுற்று ..
அலோன்சா இப்போது ஐந்தாம் இடத்து ஷூமேக்கரை பின்னுக்கு தள்ளினார் .


ஒன்பதாம் சுற்று ..
டோரோ ரோசொவின் - ஜீன் எரிக் வெர்ஜின் கார் நடுக்களத்தில் தன்னைத்தானே ஒருமுழு சுற்று சுற்றி தொடர.. ரேசை முடித்துக்கொண்டு களத்தை விட்டு வெளியேறியது .முதல் வெளியேற்றம் ..இந்த நிகழ்வு மற்ற கார்களின் வேகத்தை மட்டுப்படுத்தும் மஞ்சள் கொடி அசைக்கப்பட்டு விளைவை ஏற்படுத்தியதோடு ,DRS இயக்கம் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது .

பதினோராம் சுற்று ...
மார்க் வெப்பர் தன்னுடைய DRS வலிமையால் 335 கி.மீ உச்சவேகத்தில்  11 ஆம் இடத்திலிருந்து பத்தாம் இடத்து ரெஷ்டாவை பின்னுக்கு தள்ளி அதே வேகத்தில் களத்தை விட்டு Off the Track போக அங்கிருந்து மண் புழுதி மேலே எழும்பியது .இதென்ன கூத்து ? உலக புகழ் பெற்ற ட்ராக்கின் ஓரத்தில் மண்ணுக்கு என்ன வேலை ?
பதினாறாம் சுற்று ..
கிமி ரெய்கொணன் ஏழாம் இடத்தை பிடித்து ,ஷூமேக்கரை பின்னுக்கு தள்ளினார் .ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல மெர்சடீஷை ஃபார்முலா போட்டியில் ஏகத்திற்கு பின்னுக்கு தள்ளுகிறார்கள் .எங்கே போனது மெர்ஷடீசின் பலம் ? தொழில்நுட்ப குறைபாடுதான் என்ன ?
டயர் மாற்றத்திற்கு வந்த ஷூமேக்கர் தேர்வு செய்தது - Hard Compound டயரை .மீண்டு பதினைந்தாம் இடம் ..
பதினேழு ..
ஜென்சன் பட்டன் கார் இப்போது இரண்டாம்  இடம் ..அங்கிருந்த மாசா பின்னுக்கு தள்ளபட்டார்
இருபது ...
மிக வேகமாக ஜென்சனை பிடிக்க முயற்சி செய்த மாசா கடைசியில் பிட் லேன் வந்து Hard Compound டயரை தேர்வு செய்தார் .இப்போது தொடர்ந்த இடம் ஒன்பது .
1.ஹெமில்டன்,2.பட்டன் ,3.வெட்டல் ,4.அலோன்சா ,5.பெரெஸ், 6.வெப்பர் ,7.கோபயாஷி ,8.டி.ரேஷ்டா ,9.சென்னா ,10.ரிக்கார்டியோ .

இருபத்தி ஒன்று ..
வெட்டலும் - ஆலோன்சாவும் ஒரே நேரத்தில் டயர் மாற்றம் வர ,யார் முதலில் வெளியேறுவார்கள் என்ற கேள்விக்கு ரெட்புல் அணி வெட்டலை அனுப்ப ,அதை தொடர்ந்து அலோன்சா ..பிட்லேனை விட்டு முன்னேற முயற்சித்த அலோன்சாவை வெட்டல் பிட்லேன் யுத்தம் நடத்தி எல்லோரின் அதிருப்தியை சம்பாதித்தார் .காரணம் இத்தாலி ஃபெர்ராரியின் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது ..
இருபத்தி நான்கு..
ஹெமில்டன் இப்போது பிட் லேனில் 2.7 வினாடிகளில்  Hard Compound டயரை தேர்வு  செய்து இரண்டாம் இடத்தை தொடர ..அது வரை செர்ஜியோ பெரஸ் முதலிடத்தை பிடித்து கொண்டார் .

இருபத்தியாரம் சுற்று ..
பிட்லேனில் அலோன்சாவை முன்னுக்கு வர தடுத்த வெட்டல் அதை பலமுறை களத்தின் பாதையிலும் செய்ய ,முதல் வளைவில் நிச்சயம் அலோன்சா முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்டபோது ,அலோன்சாவை உரசுவது போல வேட்டலின் ரெட்புல் நெருங்க ,தவிர்க்க நினைத்த அலோன்சா களத்தை விட்டு சுமார் 200 கி.மீ வேகத்தில் மண் பகுதிக்குள் இறங்கி சுதாரித்து வெளியேற ..முற்றிலுமாக தவறான இந்த வெட்டல் நடவடிக்கை ஸ்டூவர்ட்டின் விசாரணைக்கு போனது .வெட்டல் - ஷூமேக்கரை போல நடப்பதாக சிலர் விமர்சிக்கிறார்கள .ஆனால் காலம் வேறு .அன்று இன்றைய நிலையில் சுமார் ஐந்து கேமராக்கள் ரேஸ் காரில் ( பல்வேறு காரணங்களுக்காக )  பொருத்தப்பட்டு கண்காணிக்க படுகிறது .,யாரும் எதிலும் தப்ப வழி  இல்லை .அனாலும் வெட்டல் இந்த வருடம் மூன்றாவது வருட சேம்பியன்ஷிப்பை பெறுவாரோ இல்லையோ நிறைய விமர்சனதிற்கு உட்பட்டு வருகிறார் .
இருபத்தி எட்டு
இப்போது எட்டாம் இடத்து ரைகொணன் - ஷூமேக்கர் பலபரீட்சை .
இருபத்தி  ஒன்பது ..
இரண்டாம் இடத்தில் தொடர்ந்து கொண்டு இருந்த ஹெமில்டன் தனஊடைய காரின் DRS உச்ச வேகமான 340 கி.மீ வேகத்தில் செர்ஜியோ பெரஷை பின்னுக்கு தள்ளி தன்னுடைய இடத்தை தக்கவைத்துக்கொண்டார் .
அதே சமயத்தில் வெட்டலின் மேல் உள்ள கோபத்தை தீர்த்துக்கொள்ள அலோன்சா ஐந்தாம் இடத்தை பிடித்தார் .

முப்பத்தி இரண்டு ..
ஜென்சனின் கார் இப்போது வேகம் குறைந்து களத்தின் ஓரத்திற்கு வந்து நின்றது .காரின் எரிபொருள் செயல் பாட்டில் ஏதோ குறைபாடு .போட்டியை விட்டு வெளியேறிவிட்டது .101 புள்ளிகளை மட்டுமே பெற்று இருக்கும் ஜென்சனின் முதல் மூன்று இடத்து வாய்ப்பு இன்னும் பறிபோகவில்லை .பார்ப்போம் இன்னும் ஏழு போட்டிகள் இதற்க்கு பதில்  சொல்லும் .
முப்பத்தி  மூன்று ..
வெட்டல் இருபத்தி ஆறாம் சுற்றில் அலோன்சா முன்னேற விடாமல் தடுத்த விவகாரத்தின் தீர்ப்பின் படி பிட்லேன் அழைக்கபட்டார் .பெனால்ட்டி .
முப்பத்தி ஐந்து ..
ஆறாம் இடத்து வெட்டல் ஒன்பதாம் இடத்தில் மீண்டும் தொடர நிர்பந்திக்கப்பட்டார்
முப்பத்தி ஆறு ..
செர்ஜியோ பெரெஸ் ஐந்தாம் இடத்திற்கு மிகுந்த போராட்டத்திற்கு பிறகு முன்னேறினார் .
நாற்பதாவது சுற்று ..
மூன்றாம் இடத்து அலோன்சா ஒரு இடம் முன்னேற முயற்சிக்க அங்கு  இருந்த மாசா மிக அழகாக வழிகொடுத்தார்.இப்போது அலோன்சா இரண்டாம் இடம் ..

 1.ஹெமில்டன் ,2.அலோன்சா ,3.மாசா ,4.பெரஸ் ,5.ரெய்கொணன் ,6.வெட்டல் ,7.வெப்பர்,8.டி ரெஷ்டா,9.கோபயாஷி .10.ஷூமேக்கர் .
நாற்பத்தி நான்கு ..
இப்போது DRS இல்லாத பகுதியில் மிக வேகமாக பறந்த செர்ஜியோ பெரஸ் மூன்றாம் இடத்து மாசாவை மிக சுலபமாக பின்னுக்கு தள்ளினார் .வாவ் ! அருமை பெரஸ் .
நாற்பத்தி ஆறு
இப்போது DRS பகுதியில் அலோன்சாவை பின்னுக்கு தள்ளி செர்ஜியோ பெரெஸ் முன்னேற ,ஃபெர்ராரி ரசிகர்களின் நம்பிக்கை உடைத்தார் .என்ன ஒரு அபார வேகம் ?

நாற்பத்தி ஏழு ..
வெட்டல் காரும் பட்டனின் காரை போல களத்தின் பாதையை விட்டு வேகம் குறைந்து ஆல்டர் நேட்டர் பிரச்சனையால் போட்டியை விட்டு வெளியேறியது ,, அணித்தலைவர் Christian horner அதிர்ச்சியில் உறைந்து போனார் .
புள்ளியை பெறாவிட்டாலும் 80% போட்டியை ( 43 சுற்று ) கடந்து முடித்து விட்டதால் இதை 'ரிட்டயர்மெண்டில்' கொள்ளவில்லை   .இந்த ஆண்டு வெட்டலின் ஆவேசம் காரிடமும் வந்து விட்டது .கடந்த வருடம் காரும் வெட்டலும் ஒத்து வந்தது போல எந்த ஒரு டிரைவருக்கும் உலகில் ஒத்து போயிருக்காது .அப்போது காரில் வெட்டல் இருந்தார் இப்போது வேட்டளிடம் கார் இருக்கிறது .

ஐம்பதாவது சுற்று ..
போர்ஸ் இந்தியாவின் நிக்கோ ஹுல்கேன்பர்க் கார் பிரேக் பிரச்சனையால் வெளியேறியது .

ஐம்பத்தி ஒன்றாவது சுற்று ..
மிக நல்ல நிலையில் இருந்த வெப்பர் கார் திடீரென ஸ்பின் ஆனது .தொடர்ந்து எந்த காரும் வராததால் விபத்து எதுவும் நிகழவில்லை .ஆனால் டயர் பஞ்சர் ஆகி இருக்கலாம் .வெட்டல் காரோடு வெப்பர் காரும்  போட்டியை விட்டு வெளியேறியது .

இந்த ஆண்டில கடந்த பனிரெண்டு போட்டிகளில் ரெட்புல் அணி கனடாவில் நடந்த ரேசில் மட்டுமே ஆறு புள்ளிகளை குறைந்த பட்சமாக பெற்று இருந்தது .அதற்கடுத்து இப்போது ஒரு புள்ளிகளை கூட பெறாதது இப்போது  மட்டுமே.
ஐம்பத்தி மூன்றாவது சுற்று ..
செர்ஜியோ பெரெஸ் இப்போது ஹெமில்டனின் முதல் இடத்தை பிடிக்கும் முயற்சியில் இருப்பதை பார்க்க முடிந்தது .ஆனால் இருவருக்கும் இடையில் நான்கு வினாடிகள் இருந்தது .

முதல் இடம் ..

லீவிஸ் ஹெமில்டன் - மெக்லரண் மெர்சடீஷ்.28 ஆவது முதலிட வெற்றியை பெற்று இருக்கும் லீவிஸ் ,இத்தாலியில் இதுவரை முதல் கடந்த 2007 ல் வந்த புதிதில் இரண்டாம் இடம் வந்ததே அதிகபட்சம் .இப்போது அந்த கனவும் நிறைவேறிவிட்டது .
இரண்டாம் இடம் ..

செர்ஜியோ பெரெஸ் ..சாபெர் பெர்ராரி .இந்த களத்தை Magic Track என்பதை நிருபித்து விட்டது .12 ஆம் இடத்தில் ஆரம்பித்த பெரெஸ் இன்னும் சில சுற்றுக்கள் இருந்திருந்தால் ஹெமில்டனை கூட பதம் பார்த்திருப்பார் போல !அருமை சாபெர் பெர்ராரி அணி மிக உற்சாக கொண்டாட்டத்தில் இருந்தது .
மூன்றாவது இடம் ..

பெர்னாண்டோ அலோன்சா - ஃபெர்ராரி .இத்தாலியின் ஃபெர்ராரி ரசிகர்கள் மனதை காயப்படுத்தாமல் ஆறுதல் வெற்றி தேடி  தந்த அலோன்சாவை இத்தாலி ரசிகர்கள் கொண்டாடினார்கள் .நன்றி சொல்வது போல கூட எடுத்து கொள்ளலாம் .
அலோன்சா தன்னுடைய டிரைவர்களுக்கான சாம்பியன்ஷிப் பாதையில் மிக நலமாக இருக்கிறார் 179 புள்ளிகள் ( அடுத்து இருப்பது லீவிஸ் 142 புள்ளிகள் )


அடுத்த நமது இரவு போட்டி நடக்க இருக்கும் சிங்கபூருக்கு எப்படி போவது வழி  சொல்ல  காத்திருப்பது யாராம் ?

Saturday, September 8, 2012

The Magic Track ( "La Pista Magica" ) - இத்தாலி


மேஜிக் என்பதர்க்கு வெளிப்படையாய் தெரியாத விஷயம் 'கண் கட்டி வித்தை 'என்போம் நம் எளிய தமிழில் .அந்த பெயர் இத்தாலியின் மோன்சா     Autodromo Nazionale Monza களத்திற்கு உள்ளது 


                                      உலக ஃ பார்முலா போட்டி அட்டவணையில் மிக அதிக வேகத்தில் கார்கள் செல்லும் களம் இதுவே .சுமார் 250 கி.மீ முதல் 350 கி.மீ வேகம் செல்லாம் .இதனால் கார்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்லும் வாய்ப்பு அதிகம் .விஷயம் உள்ள பிள்ளை பிழைத்து கொள்ளும் என்பதுபோல வேகமும் .விவேகமும் உள்ள காரும் + ஓட்டுனரும் ,சரியானா டயர் தேர்வும் ,முக்கியமான DRS & KERS தொழில்நுட்ப உதவியின் ஒத்துழைப்பும் இருக்கும் பட்சத்தில் எந்த இடத்தில் ( Grid Position ) ஆரம்பித்தாலும் வெற்றியை ருசி பார்கலாம் .

                                     அதுமட்டுமல்ல குறைந்த காற்றியக்கு  விசையை கொண்டுள்ளதால் சிறு மோதல்கள் பெரும் விபத்தை சந்திக்க வைத்துவிடலாம் .முக்கியமாக 4 மற்றும் 5 குறுகிய உடனடி தொடர் திருப்பமான  chicanes என்று அழைக்கப்படும் .Variante Della Roggia turn வளைவுகள் மிக விமர்சனதிற்கு உட்பட்டு கொண்டே இருக்கும் ஆபத்தான Death Race படத்தின் விளைவுகளை போல இருக்கிறது . .காரணம் நான்காம் வளைவுவரை 233 கி.மீ வேகத்தில் வரும் கார் அந்த வளைவில் சுமார் 100 கி .மீ வேகத்தை குறைத்து திருப்ப வேண்டும் .மற்றபடி இரண்டு நீண்ட DRS பகுதிகள் முதல் DRS பயன்பாட்டு தூரம் 210 மீட்டர் தூரம் .இரண்டாவது 115 மீட்டர் தூரம் மொத்த 5.793 கி .மீ தூரமுள்ள களத்தில் 0 .3250 கி .மீ தூரம் DRS வெற்றி பகுதி .

                                
                    எனவே இந்த வேகயுத்தம் முன்னணி அணிகளின் கௌரவ யுத்தம் என்றால் கூட சொல்லாம் .பார்ப்பதற்கு இந்த   Autodromo Nazionale Monza களம் - கழற்றி வைத்த சூ சாக்ஸ் போல இருந்தாலும் மிக பல தந்திரங்களை ஒளித்துவைத்து இருக்கும் சூத்திரம் இதற்குள் ஒளிந்துள்ளது .

யாருக்கு அதிக வாய்ப்பு ?
இத்தாலிய அணியான ஃ பெர்ராரிக்கு அதிகம் .அத்துடன் இத்தாலிய வீரர்களுக்கும் அதிகம்தான் .ஆனால் ஜெர்மானியர்கள் வழக்கம்போல இங்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை வரலாறு பதித்து இருக்கிறது .பார்ப்போம் .(என் மனதில் ஜெர்மானிய  கொடிதான் பறக்கிறது ! )
பயிற்சி போட்டி ..
வெள்ளியன்று முதல் பயிற்சி போட்டியில்
ஃ பார்முலாவின் தல மைக்கேல் ஷூமேக்கர் . முதலிடம் வந்து அசத்தினார் .
இரண்டாவது பயிற்சியில் ..லீவிஸ் ஹெமில்டன்.
இன்று நடந்த மூன்றாவது பயிற்சியில் ..லீவிஸ் ஹெமில்டன்.
தகுதி போட்டி ..


முதல் தலைவிதி ( Q1 ) சுற்றின் நேரத்தை இந்தமுறை நாம் எதிர்பார்த்தது போல ஃபெர்ராரியின் - பெர்னாண்டோ அலோன்சா .அவர் எடுத்துக்கொண்ட நேரம் 1:24.175 + (107%) 0.5.892 = 1:30.067 .யாரும்  இந்த அபாயத்தில் இல்லை .
இரண்டாவது  தகுதி ( Q2 ) சுற்றிலும்  அவரே பதினேழு கார்களில் அவரே .
                                 ஆனால் மூன்றாவது பத்து கார்களில் முதலிடம் லீவிஸ் ஹெமில்ட்டன் .இரண்டாவது அவர் அணியின் ஜென்சன் பட்டன் .ஆனால் மூன்றாவது இடத்தில் பெர்ராரியின் பிலிப் மாசா .                                                   அடுத்த 4,5,6,7, ஜெர்மனிய  டிரைவர்கள்  என்பது போட்டியின் முகவரிக்கு பொருத்தமாக இருக்கும் - The Magic Track

நாம் நாளை மோன்சாவில் சந்திக்கும் வரை இந்த மோனலிசாவின் ! ஹாய்ய் ...........

பெல்ஜியத்தின் கோப்பை - ஜென்சன் பட்டனிடம்


களம் 
ஒலிம்பிக் போட்டியினால் நீண்ட இடைவெளியை சந்தித்தது  பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ்.இங்குள்ள  Circuit de Spa Francorchamps ல் கடந்த செப்டெம்பர்  02 ஆம் நாள் நடந்தது .இந்த வருட ஃ பார்முலா 1 அட்டவணையில் மிக நீண்ட களம் .ஒரு சுற்றின் நீளம் 7.004 கி.மீ .மொத்த தூரம் 308 .052 கி.மீ .அழகிய ஏற்ற இறக்கங்களை கொண்டுள்ள இந்தக்களம் முற்றிலும் புது அனுபவத்தை ஒவ்வொரு அணியின் ஓட்டுனருக்கும் கொடுக்கும் .
பயிற்சி போட்டி ..
வெள்ளிகிழமை நடந்த முதல் பயிற்சி போட்டியில் - சாபர் பெர்ராரியின் ,கமுய் கோபயாஷி முதலிடம் வந்தார் 
அன்று நடந்த இரண்டாவது பயிற்சி போட்டியில்  -  மருஷியா காஷ்வோர்தின் சார்லஸ் பிக்கும் ,
சனிகிழமை நடந்த இறுதி பயிற்சியில் - பெர்ராரியின் - பெர்னாண்டோ அலோன்சா வந்தார் 
தகுதி சுற்று
சனிக்கிழமை நடந்த ( Q 1 ) முதல் தகுதி சுற்றில் 107% தலைவிதியை நிர்ணயித்து வில்லியம்ஸ் ரெனால்ட்டின் - பாஸ்டர் மால்டோனடோ .1:48.993 நிமிடம் .ஆனால் இவர் போர்ஸ் இந்தியாவின் நிக்கோ ஹுள்கேன்பர்கை குறுக்கே சென்று முன்னேற விடாத விதிமீறலை செய்து  இந்த முதல் தகுதி சுற்றில் முதலிடம் வந்ததை பார்முலாவின் ஸ்டூவர்ட்ஸ்( நடுவர்) வீடியோ பதிவில் ஆராய்ந்து இந்த போட்டியில் மூன்றாவதாக வந்திருந்ததை ( Grid Position ) மூன்று இடம் தள்ளி ஆறாவதாக போட்டியில் தொடங்கவேண்டும் என்று பணித்துவிட்டனர்  .ஆனால் தகுதி சுற்றிலே இந்த அந்தஸ்தை பெரும் இந்த ஆண்டின் முதல் மனிதர் இவர்தான் .
நான்தான் என்கிறார் ஜென்சன் .
(Q 2 )& (Q 3 )  இரண்டாவது மற்றும் மூன்றாவது தகுதி சுற்றில் மெக்ளரனின் மெர்சீடிஷின் ஜென்சன் பட்டன் முதலிடத்தை பெற்றதால் அவரே முதலிடத்தில் ரேஷை தொடங்குவார் .
இரண்டாவது இடம்... சாபர் பெர்ராரியின் ,கமுய் கோபயாஷி
மூன்றாவது இடம் : ( வில்லியம்ஸ் ரெனால்ட்டின் - பாஸ்டர் மால்டோனடோ கழட்டி விடப்பட்டதால்)  லோட்டஸ் ரெனால்ட்டின் - கிமி ரைகொணன் .
இந்த போட்டியில் விதிமீறலை மேற்கொண்டு ஐந்து இடத்தை பின்னோக்கி ( place grid penalty )சென்றவர்களில் இருவர் .இருவரும் கியர் பாக்ஸ் அனுமதிக்கப்பட்ட இடைவெளியில் மாற்றவில்லை அவர்களில் முதலாமவர் ரெட்புல் ரெனால்ட்டின் - மார்க் வேப்பர் இவர் ஏழாம்  இடத்திற்கு தகுதி பெற்று - பனிரெண்டாம் இடம் தள்ளப்பட்டார் .அடுத்தவர் மெர்சடீஷின் நிக்கோ ரோஷ்பெர்க் .இவர் பதினெட்டாம்  இடத்திலிருந்து இருபத்தி மூன்றாம் இடம் .

சரி நாம் போட்டிக்கு போவோமே !
வீரர்களின்  வரிசை ..
1. ஜென்சன் பட்டன் 2. கமுய் கோபயாஷி3. கிமி ரைகொணன் . 4. செர்ஜியோ பெரேஸ் 5. பெர்னாண்டோ அலோன்சா 6. பாஸ்டர் மல்டோனடோ 7. லீவிஸ் ஹேமில்டன்8. ரோமின் க்ரோஜியன்9. பால்டி ரெஸ்டா 10.செபாஸ்டியன் வெட்டல் .

போட்டி தொடங்குமுன் கார்களின் நிலையை சோதிக்கும் ( Warm-up )  முடிந்து வந்து நின்ற கமுய் கோபயாஷி காரில் புகை மூட்டம் எழுந்தது .அதர்க்குள் போட்டிக்கான விளக்கு அறிவிக்கப்பட்டவுடன் சீறிப்பாய்ந்தன கார்கள் .இதில் ஆறாம் இடத்து பாஸ்டர் மல்டோனடோ குறுக்கே பாய்ந்து சீறி கிளம்ப,லீவிஸ் ஹெமில்ட்டனை முந்தி செல்லும் நோக்கத்தோடு ரோமின் க்ரோஜியன் கார் சரி சமமாக ( Wheel to wheel ) பாய ,

அப்போது ரோமின் க்ரோஜியன் காரின் வலது பின்பக்கத்து சக்கரம் ஹேமில்டன் காரின் இடது முன்பக்கத்து சக்கரத்தை தாக்கி செயல் இழக்க செய்து முன்பக்கம் முன்னேற ,
செயல் இழந்த சக்கரத்தோடு ஹெமிலடன் கார் முன்பக்கம் முன்னேறி கொண்டு இருந்த  ரோமின் க்ரோஜியன் காரை பின் புறம் பலமாக தாக்க ,

 அவ்வளவுதான் க்ரோஜியன்  கார் அலாக்காக மேலே சென்று பெர்னாண்டோ ஆலோன்சாவின் கையை ஒட்டி தலைக்கு மேலே பாய்ந்து 

சுழன்று செர்ஜியோ பெரெஸ் காரை தாக்கி முதல் வளைவில் இழுத்து ஓய்ந்து  நின்றது .  கார்களின் பாகங்கள் பல அடிக்கு சிதறி பரவியது ..மருத்துவ குழுக்களும் ,அணிகளை சேர்ந்தவர்களும், சம்பவ இடத்திற்கு பாய்ந்து சென்றனர் .பெர்னாண்டோ அலோன்சா அதிர்ச்சியில் உறைந்து காரை விட்டு வெளியேறாமல் இருக்கவே எல்லோரும் அங்கு செல்ல ஒரு பயம் வெப்பத்தை விடவும் வெகுவாக பரவியது . கலவர பூமியானது !

காரை விட்டு வெளியேறிய ஹேமில்ட்டன் மூளை இருக்கா ?என்பது   போல சைகையுடன் செர்ஜியோ பெரஷை நெருங்க மருத்துவ குழுவினர் அமைதிப்படுதினர் . செர்ஜியோ பெரெஸ் தவறை உணர்ந்து ஏதோ பேச சில நல்ல போட்டியாளர்களை மற்றும் அவர்களின் சாம்பியன்ஷிப் புள்ளிகள் தடை பட்டுவிட்டது .


 இது என்ன பாதுகாப்பு ?

ஃ பார்முலா 1 நடக்கும் பல போட்டி களங்கள் இப்படித்தான் போட்டி தொடங்கிய சில நூறு மீட்டர்களில் ஒரு வளைவை ( Turn Or Corner) கொண்டுஇருக்கிறது .இது ஏன் ? பல விதிமுறைகளை பின்பற்றும் FIA - இந்த போட்டிக்கு முன் தகுதி சுற்றில் கூட பாதுகாப்பு விதிமுறைகளை முக்கியகட்டமாக முன் நிறுத்தி தன்கருத்தை பதிவிட்டாலும்  ,இந்த வளைவை அல்லது குறுகிய திருப்பங்களை அனுமதிப்பது வேடிக்கை மட்டுமல்ல - பிள்ளையாய் கிள்ளுவதும் தொட்டிலை ஆட்டுவதும் போல இருக்கிறது .
 
 சேப்டிகார் வந்தது ...


மூன்று சுற்றுக்கள் முடிந்த நிலையில் நான்காவது சுற்றில் சேப்டி கார் வெளியேறியது .ஆனால் DRS அனுமதி இல்லை .அதற்குள் மூன்று கார்கள் டயர் மாற்றம் செய்து வந்தன .விபத்துக்கான சுவடு மறைந்து போய்கொண்டு இருந்தது ..பரபரப்பு ரெக்கை கட்ட தொடங்கியது ..
வீரர்களின் வரிசையில் மிகப்பெரிய மாற்றம் வந்தது .
ஐந்தாம் சுற்று ..
குறுக்கே பாய்ந்து முன்னேறிய பாஸ்டர் மல்டோனடோ வலது முன்புற wink உடைந்து தொங்கி கொண்டு இருந்தது .மெல்ல கார் ஓரம் கட்டப்பட்டது .ரேசை முடித்தவர் ,முடிந்து போனார் ..

 இப்போது ,ஷூமேக்கர் ஒரு இடம் முன்னேறி நான்காம் இடத்தில் இருந்தார் .இந்த ரேஸ் ஷூமேக்கரின் 300 போட்டியாகும் .இதே பெல்ஜியத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் நாள் ஜோர்டான் போர்ட் காஷ் வொர்த் அணிக்காக தன்னுடைய ஃ பார்முலா பயணத்தை தொடங்கினார் .என்பது நினைவில் வருகிறது .
ஏழாம் சுற்று..
DRS அனுமதிக்கப்பட்டது .கேட்டர் ஹாமின் - ஹெயகி கோவலைனன் கார் ஒரு முழு சுற்றி நின்று மீண்டும் தொடங்கியது .நல்லவேளை .பின்தொடரும் கார் இல்லை .
 எட்டாம் சுற்று ..
பத்தாம் இடது வெட்டல் ஒரு இடம் முன்னேறி ஒன்பதாம் இடம் .
ஒன்பதாம் சுற்று ..
வெட்டலின் வேகம் குறையவில்லை .ஆனால் எட்டாம் இடதிளிருப்பது வெப்பர் வழக்கம்போல வழிகொடுக்கவில்லை .ஒருஇடத்தில் இருவரும் மோதிக்கொள்ளும் அபாயம் வந்தது .No Compromise (because it  race )ஒரே  அணிக்குள்
பத்தாம் சுற்று
ரோசம் வந்தது போல வெப்பர் ஏழாம் இடது சென்னாவை பின்னுக்கு தள்ளினார் .இப்போது நான்கில் இருந்த மைக்கேல் ஷூமேக்கர் மூன்றாம் இடத்து ரைகொணனை பலப்பரீட்சை செய்து முன்னேறினார் .
பனிரெண்டு ..
இப்போது வெப்பரும் .ரைகொணனும் பிட் லேன் வந்து Hard Compound டயர் மாற்றி 13 மற்றும் 10 ஆம் இடம் தொடர ..
பதினான்கு ..
இப்போது டயர் மாற்ற செய்ய  வெப்பரும் , ரைகொணனும் சென்றதால் அந்த இடத்தை சென்னா நிரப்பி இருந்தார் .அந்த மூன்றாம் இடத்தை வெட்டல் பிடித்தார் .
பட்டன்,ஷூமேக்கர் ,வெட்டல் என்ற சாம்பியன்கள் முதல் மூன்று இடத்தை நிரப்பி இருந்தனர் .
இருபதாவது சுற்று ..
இப்போது வெட்டளுக்கு டயர் மாற்றம் செய்ய அழைப்பு வந்தது .அதே சமயம் ஷூமேக்கருக்கும் .இருவரும் பிட் லேன் திருப்பத்திற்கு சில நூறு மீட்டருக்கு முன்  வேகமெடுக்க இரண்டாவது வந்த ஷூமேக்கர் வெட்டளுக்கு வழி கொடுக்க பிரேக்கை அழுத்த டயரில் புகை கிளம்பியது .ஆனால் இதை உணராத வெட்டல்தாமதிக்க ,சரி வேறு வழி இல்லை என்று மிக வேகத்தில் முன்னேறி பிட் லேன் வளைவில் திரும்ப ,இதை எதிர்பாராத வெட்டல் நிலை குலைந்து தடுமாறிக்கொண்டு இருக்கும்போது நல்லவேளை ஷூமேக்கர் கார் கடந்து விட்டது .விபத்து சுதாரிப்பால் தவிர்க்க பட்டது .ஆனால் விசாரணை நடக்கும் .

இருபத்தி ஒன்று ..
பட்டன் டயர் மாற்றம் .Hard Compound.2.6 வினாடிகளில் மாற்றிய பின் அதே முதலிடத்தில் தொடர ..
இருபத்தி இரண்டு ..
வெட்டல் டயர் மாற்றம் Hard Compound.மீண்டும்  ஆறாம்  இடத்தில் .தொடர
இருபத்திநான்கு
ஆறாம் இடத்து வெட்டல் இப்போது ஐந்தாம் இடத்து மாசாவை பின்னுக்கு தள்ளி ஐந்தாம் இடம் .
இருபத்தி ஆறு ..
பொதுவாக இந்தியாவில் விளையாட்டுகளில் தமிழர்கள் எவ்வளவுதான் திறமை இருந்தாலும் முன்னுக்கு வரவிட மாட்டார்கள் .காரணம் அதிக பார்லிமென்ட் உறுபினர்களை கொண்ட மாநிலங்கள் இதை தீர்மானிக்கின்றன .அவர்கள் மாநிலங்கள் முன்னுக்கு வரவேண்டும் என்பதால் .அதே நிலை ஃ பார்முலா போட்டியிலும்கூடவா .ஆம் நமது நாராயன் கார்த்திக்கை பற்றி எப்போது சொல்ல கூட மாட்டார்கள் .இந்து அத்தி பூத்தாற்போல பதினாறாம் இடத்தில் இருப்பதாக சொன்னார்கள் .
இருபத்தி ஒன்பதாம் சுற்று ..

மீண்டும் பிட் லேன் கலாட்டா .வெப்பர் டயர் மாற்றி கிளம்பிய அதே சமயம் அவர்களுக்கு முன்னே இருந்த பெர்ராரியின் கேறேஜுக்கு வந்த மாசா குறுக்கே பாய சுதாரித்த வெப்பர் நிறுத்தினார் .அங்கும் ஒரு ரெட்புல் அணி விபத்தை தவிர்த்தது .

அப்போது தான் டயர் மாற்றி வந்த  நம் நாராயன் கார்த்திகேயன் கார் வளைவில் திரும்பும்போது எந்தவித கட்டுப்பாடும் இல்லாத நிலையில் அவரின் கார் பாதுகாப்பு சுவரை நோக்கி சென்று மோதி நின்றது .காரணம் டயர் மாற்றிய மெக்கானிக்குகளின் கவனக்குறைவு  .சக்கரத்தை பொருத்தும்போது சாய்வான முறையில் அதில் உள்ள மறைகளை மழுங்க செய்து மாட்டியதால் சக்கரத்தின் நட்டு வெளியேறியது .இந்த ஆபத்தை உணரும்முன் ,கார்  விபத்துக்குள்ளானது .இந்த மோதலில் கார்த்திகேயனின் இடது கால் தாக்கப்பட்டது .கடவுள் புண்ணியத்தில் அபாயமான பாதிப்பு இல்லை என்பதை அறிந்த .அவரின் குடும்பம் மற்றும் இந்திய மக்களின் மன ஆறுதல் ஏற்பட்டது
முப்பதாவது சுற்று ..
வீரர்களின் நிலை .

1.பட்டன் ,2.வெட்டல் ,3.ஷூமேக்கர் ,4.ரைகொணன் ,5.ஹுல்க்கேன்பர்க் ,6.வெப்பர் ,7.மாசா ,8.சென்னா ,9.ரோஷ்பெர்க் ,10.ரிக்கார்டியோ
முப்பத்தி இரண்டு
நான்காம் இடத்து ரைகொணன் வேகத்தை உபயோகித்து முன்னேறி மூன்றில் இருந்த ஷூமேக்கரை பின்னுக்கு தள்ள ,விடமாட்டேன் என்பது போல தன்னுடைய DRS அஷ்த்திரத்தை உபயோகித்து தன்னுடைய இடத்தை தக்கவைத்தார் ஷூமேக்கர் .
முப்பத்தி நான்கு
ஆனால் அது இப்போது நிலைக்கவில்லை .மீண்டும் ஷூமேக்கரின் மூன்றாம் இடம் பறிபோனது .
முப்பத்தி ஐந்து ..
ஷூமேக்கர் டயர் மாற்றம் மீண்டும் Medium Compound டயரைதேர்வு செய்தார் .
நாற்பது ..
.1.பட்டன்2.வெட்டல். ,3.ரைகொணன் 4,ஹுல்க்கேன்பர்க் ,5. .மாசா,6.வெப்பர்,7.ஷூமேக்கர்  ,8 ஜீன் எரிக் 9.ரிக்கார்டியோ 10.பால்டிரெஸ்டா .
நார்ப்பதி நான்காவது  கடைசி சுற்று ..

முதல் இடம் .
 ஜென்சன் பட்டன் இதுவரை பெல்ஜியத்தில் முதலிடத்தில் வெற்றி பெற்றதில்லை .அந்த தாகத்தை தீர்த்துக்கொண்டார் .அதை விடவும் இன்னொரு முக்கியமான விஷயம் .சீனாவில் நடந்த முதல் போட்டிக்கு அப்புறம் முதலிடத்தை அடைந்து இருக்கிறார் .அப்பாடா! 14 ஆவது முதலிடத்து வெற்றி .
 இரண்டாவது இடம் ..
பத்தாம் இடத்தில ஆரம்பித்த செபாஸ்டியன் வெட்டல் .பல சோதனைகளை கடந்த வெட்டல் சாதித்து இருக்கிறார் .( சொந்த அணியிலேகூட வழிதர மாட்டேன்கிறார்கள் ).உள்ளூர ஜென்சன் மேல் வெட்டளுக்கு கோபம் இருந்தாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல் சமாளித்தார் .ஆனால் முதலில் வெற்றி மேடைக்கு போகும் முன்னர் பேசியது ஜென்சன் பட்டன்தான் .

மூன்றாவது இடம் .

கிமி ரைகொணன் .மேடையில் பேட்டி கொடுத்த கிமி எந்த வித சுவாரஸ்யமும் இல்லாமல் ஏதோ  போல் டயரில் இன்னும் காற்று  இருந்தால் நன்றாக இருக்கும் என்பது போல சாவகாசமாக பேசிக்கொண்டு இருந்தார்.வெற்றியை இப்படித்தான் எடுத்துகொள்ளவேண்டுமா ?என்னமோ போங்க கிமி . 
அய்யோ சிரிக்காதிங்க மேடம் ! 

நம் அடுத்த பகிர்வு  நாளை இத்தாலியின் -மோன்சா  நகரில்   நடக்க இருக்கும் ஃ பார்முலா 1 ன் மூத்த களமான Autodromo di Monza போட்டியைப்பற்றி பார்ப்பதர்க்குமுன் சென்ற வருடம் இதே களத்தின் Grid Girls ன் இந்த புன்னகையை பத்திரமாக வைத்துருங்கள் .

(இளையராஜாவின் நீதானே என்போன் வசந்தம் படத்தில் யுவன் பாடிய சாய்ந்து ..சாய்ந்து ...நீ பார்க்கும்போது ,அடாடா .........என்ற பாடலை நினைவுபடுத்தலாம் .)


Thursday, September 6, 2012

ஹங்கேரியின் கோப்பை லீவிஸ் ஹெமில்டனுக்குதான்

 வரை சுமந்து செல்கிறாலண்டன் ஒலிம்பிக் நிகழ்ச்சி துவக்கத்தை கடைசியாக அந்த தீபத்தை ஏந்தி செல்லும் 133 நபர்களில் ஒருவராக (தீபத்தை பல்வேறு தரப்பட்ட விளையாட்டு அல்லாதவர்கள் கூட ) சுமந்து செல்கிறார்கள் அதில் ஒருவராக மெக்ளரனின் - லீவிஸ் ஹெமில்டனும் - லுட்டான் முதல் ஆக்ஸ் போர்டு வரை சுமக்கிறார் - அந்த ஒலிம்பிக் பெருமையை.

இந்த  முறை வெகு தாமதமாக உங்களை சந்திக்கிறேன் .காரணங்கள் எத்தனை இருந்தாலும் சொல்வதில் பயன் இல்லை ....

ஹங்கேரியின் -  Eni Magyar Nagydíj களத்தில் கடந்த மாதம் ஜூலை 29 ல் நடந்த பார்முலாவின் 11 சுற்று போட்டி ஜெர்மனி போட்டிக்கு அடுத்த குறுகிய காலத்தில் இந்த போட்டி நடைபெற காரணம் பலவற்றில் ஒன்று ஒலிம்பிக் போட்டியுமாகும் .அதுமட்டுமல்ல உலக பார்முலா 1 ரசிகர்களில் அதிகம் பேர் இருக்கும் நாட்டில் முதல் ஐந்து இடத்தில் இங்கிலாந்து இல்லை என்பது வேறு விஷயம் .

வேகயுத்த களமா ஹங்கேரி ?
இந்தமுறை ஹங்கேரி போட்டி வேக யுத்த களமாக இருக்கும் என்பதர்க்கு பல காரணங்கள் இருக்கிறது .அதில் ஒன்று ரெட்புல்லின் செபாஸ்டியன் வெட்டல் ,மெக்லரண் மெர்சடிஷின் ஜென்சன பட்டனின் இரண்டாம் இடத்தை Off the Track மூலம் ஜெர்மனி ரேசில் கடந்து வெற்றி பெற்று பிறகு அவர் ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டது , அதே அணியின் லீவிஸ் ஹெமில்ட்டனை வெகு மோசமாக் விமர்சித்தது அதோடு இந்த ரேசில் அதர்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக லீவிஸ் முதலிடத்தில் தொடங்குவது ,மேலும் அவருக்கு பின்னால் நான்காம் இடத்தில் நெருக்கடியை கொடுக்கும்விதமாக ஜென்சன் இருப்பது போன்ற விசயங்கள் ஏற்கனவே கொதிக்க போகும் களத்தின் வெப்பத்தை பன்மடங்கு அதிகரிக்க போகிறது ...
போட்டி ..
போட்டியின் நேரடி ஒளிபரப்பை தர வேண்டிய ESPN  Star Sports , ஒலிம்பிக்கின் நேரடி சைக்கிள் மாரத்தான் போட்டியில் இருந்தது

முதல் சுற்று ..
1.லீவிஸ் ஹெமில்டன் 2.ரோமின் க்ரோசியன்  3.செபஸ்டியன் வெட்டல்  4. ஜென்சன் பட்டன் 5. கிமி ரைகொணன் 6.பெர்னாண்டோ அலோன்சா  7.பிலிப் மாசா  8.பாஷ்ட்டர் மல்டோனடோ  9. ப்ருனே சென்னா 10.நிக்கோ ஹுல்கேன் பர்க்.
 போட்டி தொடங்கியதும் லீவிஷின் மெக்லரண் சீறிபாய்ந்து ..அவரை தொடர்ந்து முன்னோக்கி செல்ல முயற்சி செய்த வெட்டலை மிக மோசமான் வேகத்தில் நெருங்க ..யுத்தம் நடப்பதை வேடிக்கை பார்க்க எல்லோரும் தயார் செய்துகொண்டார்கள் ..

ஐந்தாம் சுற்று ...
 இந்த போட்டியில் நிறைய கார்கள் - Off the Track என்று  விலகி ,விலகி பறந்தன ..ஐந்தாம் இடத்தை பிடித்து அப்பாடா என்று  இருந்த மைக்கேல் ஷூமேக்கரை எட்டி பறந்தார் அலோன்சா ..

ஆறாம் சுற்று ..
ஹெமில்டன் -வெட்டல் இடைவெளி 4.5 வினாடி - மிக அழுத்தமாக இருந்தது .தொடர்ந்து ஹெமில்டனின் பார்வை காரின் சைடு மிர்ரரில் பதிந்து இருந்தது .அதில் வளைவுகளில் ஜென்சன் பட்டனும் இருந்தார் ..

பத்தாம்  சுற்று ..
ரோஷ்பெர்க் பாதையை விட்டு விலகி பயமுறுத்த  அலோன்சா அதிவேக பாய்ச்சலில் இருந்தார் ..
பதினான்காம் சுற்று ..
பட்டன் - வெட்டலை இரண்டாம் வளைவில் நெருங்க ...

பதினைந்தாம் சுற்று ..
பதிமூன்றாம் இடத்து பாஷ்ட்டர் மல்டோனடோ அங்கீகரிகப்பட்ட பிட் லேன் வேகத்தை பின்பற்றாமல் வந்ததுக்கும் ,ஹெயக்கி கோவலைனன் டயர் மாற்றி பிட் லேனை விட்டு வெளியேறிய  வேகம் அதிகரித்தால் இரண்டும் காரும் விசாரணைக்கு உட்பட்டது .
இருபதாம் சுற்று ..
 பதினெட்டாம் சுற்று ..

ரேஸ் லீடர் ஹெமில்டன் முதல் டயர் மாற்றத்திற்கு வந்தார் அவரை தொடர்ந்து லோட்டஸ் அணியின் - க்ரோஜியன் வர பிட் லேன் பரபரப்பை அடைந்தது .ஆனால் ஹெமில்டனின் கார் மிக மெதுவாக பிட் லேனை அடைந்தது ஆச்சர்யத்தை கொடுத்தது .நல்ல வேலை க்ரோஜியனை விட ஹெமில்டன் கார் கிளம்பியது .க்ரோஜியன் Soft Compound டயரை தேர்வு  செய்தது ஒரு ஆச்சர்யத்தை தந்தது .இது ஏதோ ஒரு திட்டத்தை வெளிப்படுத்தினாலும் முடிவில் தெரியும் ..

இருபதாம் சுற்று ..
வெட்டல் இப்போது மிக வேகம் காட்டினார் .ஹெமில்டனும் , க்ரோஜியனும் இப்போதுதான் பிட் லேன் விட்டு வெளிவந்து இருக்கிறார்கள் .அதற்குள் ஒருவித நேர தக்கவைத்தலை பெரும் முயற்சியாக இருக்கலாம் .
இருபத்தி மூன்று ..
ஹெமில்டன் -  க்ரோசியன் இடைவெளி ஒரு வினாடியாக இருந்தது .
இருபத்தாறு ..
கோஜியன் காரின் வேகம் சட்டென குறைய தொடங்கியது ..
முப்பத்தி ஒன்று ..
ஹெமில்டன - க்ரோஜியன் இடைவெளி 1.01 வினாடி என்று சுருங்கி கொண்டே வர மெக்ளரனின் அணிக்கு கவலை தொற்றிக்கொண்டது.

முப்பத்தி நான்கு ..
பட்டன் தன்னுடைய இரண்டாவது டயர் மாற்றத்திற்க்கு வந்து 2.8 வினாடிகளில் வெளியேறினார் .எப்போதும் ஏதாவது சிக்கலில் மாட்டும் பட்டனின் கார் இப்போது சற்று மெக்கானிக்குகளின் கவன ஆழத்தில் இருக்கிறது .அதனால் தவறுகள் சரிசெய்யபடுகிறது.காரணம் இது ரேஸ் மட்டுமல்ல - பார்முலா  1.எல்லா சிக்கலையும் தீர்க்கும் சூத்திரத்தை கற்றுக்கொள்கிறது
முப்பத்தி எட்டு ..
வெட்டல் இரண்டாம் முறையாக டயர் மாற்றம் செய்ய வர  அங்கு எப்போதும் போல ஒரு அவசரம் நிலவியது .காரணம் பட்டன் தன்னுடைய இடத்தை பிடிக்க கூடாது என்ற அணியின் வேகம் அது .
 நாற்பதாவது சுற்று ..
ஹெமில்டன் தன்னுடைய இரண்டாவது டயர் மாற்றம் வர பட்டனுக்கு டயர் மாற்றத்திற்கு எடுத்துக்கொண்ட நேரமே ஹெமில்டனுக்கும்  ஆனது .
நாற்ப்பத்தி ஐந்து
எனவே ரைகொணனின், லோட்டஸ் E20 காரின் வேகத்தை அதிகரிக்க இப்போது Medium compound டயரை பொருத்தி வேகமெடுத்து வந்தது .
நாற்ப்பத்தி ஆறு ..
இப்போது களத்தின் முதலிடம் ஹெமில்டனின்  கையில் இருந்தது .தொடர்ந்து வரும் ரைகொணனை 3 வினாடிகள் வித்தியாசத்தில் நெருங்க விடாமல் மெக்ளறேன் MP4 27 கார் பாய்ந்து  கொண்டு இருந்தது
ஐம்பத்தி இரண்டு .
லோட்டஸ் காரின் புதிய டயர் மாற்றம் நன்றாக வேலை செய்ய தொடங்கியது .இப்போது இடைவெளி 1.3 வினாடிகள் என்று குறைந்தது
இப்போதைய ஓட்டுனர்களின் பட்டியல்
1. ஹேமில்டன் 2. ரைகொணன் 3.க்ரோஜியன் 4.வெட்டல்  5. வெப்பர்6.அலோன்சா  7. பட்டன் 8. சென்னா 9. மாசா 10.ரோச்பர்க் .
ஐம்பத்தி ஆறு ..
பார்முலா 1 வரலாற்றில் இந்த ஆறாவது முறையாக ஐம்பத்தி ஆறு சுற்றுக்களுக்கு பிறகும் மொத்த 24 கார்களும் தொடர்கின்றன .
ஐம்பத்தி  எட்டு ..
வெட்டலின் கார் மூன்றாம் முறையாக டயர் மாற்றம் செய்ய வந்தது .நான்காம் இடத்தில் தொடர்ந்தது ..இம்முறை Soft Compound டயர் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது .அது மட்டுமல்ல முதல் மூன்று இடத்தில் இருப்பவர்களில் மூன்றாவது டயர் மாற்றத்தை ரெட்புல் அணி செய்கிறது .ஆனால் இங்கு ஒரு விசயத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும் .இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக பிட் லேன் நேரத்தில் மிக விரைவாக  செயல்பட்டதில் குறைந்த நேரத்தை பயன்படுத்தியவர்கள் பட்டியலில் ரெட்புல் அணி மெக்கானிக்குகள் கடந்த ஆறு ஆண்டுகளில் 11 முறை இந்த இடத்தை தக்க வைத்துள்ளார்கள்  .இந்த திட்டமிட்ட உழைப்பே கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்திலும் இந்த ஆண்டும் முதலிடத்தில் புள்ளிகளை அள்ளிக்கொண்டு இருக்கிறது .

இப்போது மைக்கேல் ஷூமேக்கரின் கார் ரேசை விட்டு வெளியேறியது .ஆரம்பம் முதலே காரின் என்ஜினில் வெப்பம் அதிகமாகவே இருந்தது உணர்ந்த ஷூமேக்கர் மகவும் அவதிக்கு உட்பட்டே காரை செலுத்தி இருக்கிறார் .எஞ்சின் எலெக்ட்ரானிக் எச்சரிக்கை மஞ்சள் விளக்கு மூலம் உணர்த்திய பின்னரே இனி வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது .ஏனெனில் எந்த நேரத்திலும் எஞ்சின்  தன் இயக்கத்தை கைவிடலாம் அதனால் விபத்து ஏற்படலாம் என்பதால் பிட் லேன் திரும்பியது மைக்கேல் ஷூமேக்கரின் கார்.கடந்த 11 ரேஷ்களில் இது ஆறவது ரிட்டையர் மென்ட்.சாம்பியன் உங்கள் போட்டியை அடிக்கடி மிஸ் பண்ணுகிறோம் !
அறுபத்தி இரண்டு ..
ரைகொணனின் வேகம் பிரமிப்பை ஏற்படுத்தியது .ஏதாவது ஒரு வளைவில் ஹெமில்டனை பின்னுக்கு தள்ளும் வேகம் .நிச்சயமாக ஏதாவது நடக்கலாம் ...
அறுபத்தி ஆறு ..
கேமிராகளின் பார்வை முழுவதுமே முதல் இரண்டு கார்களை வில்ல அகலவில்லை .இப்போது இடைவெளி 1.2 வினாடிகள் மட்டுமே .

அறுபத்தி எட்டு ..
இப்போது 1 வினாடிகள் இடைவெளி ...

அறுபத்தி ஒன்பது ..கடைசி சுற்று

இப்போது 1 வினாடிகள் இடைவெளியில் ஹங்கேரியின் வெற்றிகொப்பையை தக்கவைதுகொண்டார் மெக்லரண் மெர்சடிசீன் - லீவிஸ் ஹேமில்டன் .அப்பாடா என்று இருந்தது மெக்லரண் அணிக்கு .

இரண்டாவது இடம் ..

லோட்டஸ் ரெனால்ட்டின் - கிமி ரைகொணன் .இந்த ஆண்டு மிக அருமையான எழுச்சி பெற்று இருக்கிறது லோட்டஸ் ரெனால்ட் அணி .சென்ற ஆண்டு பத்தாம் இடத்திலிருந்தது .இந்த ஆண்டு மூன்றாம் இடத்தை நோக்கி மிக எளிதாக முன்னேறிக்கொண்டு இருக்கிறது .
மூன்றாம் இடம் ..

அதே அணியின் ரோமின் க்ரோஜியன்.

மிக தாமதமான இந்த பதிவிற்கு வருந்துகிறேன் .

அடுத்து நாம் பார்க்க  இருப்பது

கடந்த ஆகஸ்ட்  02 ல் நடந்த பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ் .