உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Thursday, September 6, 2012

ஹங்கேரியின் கோப்பை லீவிஸ் ஹெமில்டனுக்குதான்

 வரை சுமந்து செல்கிறாலண்டன் ஒலிம்பிக் நிகழ்ச்சி துவக்கத்தை கடைசியாக அந்த தீபத்தை ஏந்தி செல்லும் 133 நபர்களில் ஒருவராக (தீபத்தை பல்வேறு தரப்பட்ட விளையாட்டு அல்லாதவர்கள் கூட ) சுமந்து செல்கிறார்கள் அதில் ஒருவராக மெக்ளரனின் - லீவிஸ் ஹெமில்டனும் - லுட்டான் முதல் ஆக்ஸ் போர்டு வரை சுமக்கிறார் - அந்த ஒலிம்பிக் பெருமையை.

இந்த  முறை வெகு தாமதமாக உங்களை சந்திக்கிறேன் .காரணங்கள் எத்தனை இருந்தாலும் சொல்வதில் பயன் இல்லை ....

ஹங்கேரியின் -  Eni Magyar Nagydíj களத்தில் கடந்த மாதம் ஜூலை 29 ல் நடந்த பார்முலாவின் 11 சுற்று போட்டி ஜெர்மனி போட்டிக்கு அடுத்த குறுகிய காலத்தில் இந்த போட்டி நடைபெற காரணம் பலவற்றில் ஒன்று ஒலிம்பிக் போட்டியுமாகும் .அதுமட்டுமல்ல உலக பார்முலா 1 ரசிகர்களில் அதிகம் பேர் இருக்கும் நாட்டில் முதல் ஐந்து இடத்தில் இங்கிலாந்து இல்லை என்பது வேறு விஷயம் .

வேகயுத்த களமா ஹங்கேரி ?
இந்தமுறை ஹங்கேரி போட்டி வேக யுத்த களமாக இருக்கும் என்பதர்க்கு பல காரணங்கள் இருக்கிறது .அதில் ஒன்று ரெட்புல்லின் செபாஸ்டியன் வெட்டல் ,மெக்லரண் மெர்சடிஷின் ஜென்சன பட்டனின் இரண்டாம் இடத்தை Off the Track மூலம் ஜெர்மனி ரேசில் கடந்து வெற்றி பெற்று பிறகு அவர் ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டது , அதே அணியின் லீவிஸ் ஹெமில்ட்டனை வெகு மோசமாக் விமர்சித்தது அதோடு இந்த ரேசில் அதர்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக லீவிஸ் முதலிடத்தில் தொடங்குவது ,மேலும் அவருக்கு பின்னால் நான்காம் இடத்தில் நெருக்கடியை கொடுக்கும்விதமாக ஜென்சன் இருப்பது போன்ற விசயங்கள் ஏற்கனவே கொதிக்க போகும் களத்தின் வெப்பத்தை பன்மடங்கு அதிகரிக்க போகிறது ...
போட்டி ..
போட்டியின் நேரடி ஒளிபரப்பை தர வேண்டிய ESPN  Star Sports , ஒலிம்பிக்கின் நேரடி சைக்கிள் மாரத்தான் போட்டியில் இருந்தது

முதல் சுற்று ..
1.லீவிஸ் ஹெமில்டன் 2.ரோமின் க்ரோசியன்  3.செபஸ்டியன் வெட்டல்  4. ஜென்சன் பட்டன் 5. கிமி ரைகொணன் 6.பெர்னாண்டோ அலோன்சா  7.பிலிப் மாசா  8.பாஷ்ட்டர் மல்டோனடோ  9. ப்ருனே சென்னா 10.நிக்கோ ஹுல்கேன் பர்க்.
 போட்டி தொடங்கியதும் லீவிஷின் மெக்லரண் சீறிபாய்ந்து ..அவரை தொடர்ந்து முன்னோக்கி செல்ல முயற்சி செய்த வெட்டலை மிக மோசமான் வேகத்தில் நெருங்க ..யுத்தம் நடப்பதை வேடிக்கை பார்க்க எல்லோரும் தயார் செய்துகொண்டார்கள் ..

ஐந்தாம் சுற்று ...
 இந்த போட்டியில் நிறைய கார்கள் - Off the Track என்று  விலகி ,விலகி பறந்தன ..ஐந்தாம் இடத்தை பிடித்து அப்பாடா என்று  இருந்த மைக்கேல் ஷூமேக்கரை எட்டி பறந்தார் அலோன்சா ..

ஆறாம் சுற்று ..
ஹெமில்டன் -வெட்டல் இடைவெளி 4.5 வினாடி - மிக அழுத்தமாக இருந்தது .தொடர்ந்து ஹெமில்டனின் பார்வை காரின் சைடு மிர்ரரில் பதிந்து இருந்தது .அதில் வளைவுகளில் ஜென்சன் பட்டனும் இருந்தார் ..

பத்தாம்  சுற்று ..
ரோஷ்பெர்க் பாதையை விட்டு விலகி பயமுறுத்த  அலோன்சா அதிவேக பாய்ச்சலில் இருந்தார் ..
பதினான்காம் சுற்று ..
பட்டன் - வெட்டலை இரண்டாம் வளைவில் நெருங்க ...

பதினைந்தாம் சுற்று ..
பதிமூன்றாம் இடத்து பாஷ்ட்டர் மல்டோனடோ அங்கீகரிகப்பட்ட பிட் லேன் வேகத்தை பின்பற்றாமல் வந்ததுக்கும் ,ஹெயக்கி கோவலைனன் டயர் மாற்றி பிட் லேனை விட்டு வெளியேறிய  வேகம் அதிகரித்தால் இரண்டும் காரும் விசாரணைக்கு உட்பட்டது .
இருபதாம் சுற்று ..
 பதினெட்டாம் சுற்று ..

ரேஸ் லீடர் ஹெமில்டன் முதல் டயர் மாற்றத்திற்கு வந்தார் அவரை தொடர்ந்து லோட்டஸ் அணியின் - க்ரோஜியன் வர பிட் லேன் பரபரப்பை அடைந்தது .ஆனால் ஹெமில்டனின் கார் மிக மெதுவாக பிட் லேனை அடைந்தது ஆச்சர்யத்தை கொடுத்தது .நல்ல வேலை க்ரோஜியனை விட ஹெமில்டன் கார் கிளம்பியது .க்ரோஜியன் Soft Compound டயரை தேர்வு  செய்தது ஒரு ஆச்சர்யத்தை தந்தது .இது ஏதோ ஒரு திட்டத்தை வெளிப்படுத்தினாலும் முடிவில் தெரியும் ..

இருபதாம் சுற்று ..
வெட்டல் இப்போது மிக வேகம் காட்டினார் .ஹெமில்டனும் , க்ரோஜியனும் இப்போதுதான் பிட் லேன் விட்டு வெளிவந்து இருக்கிறார்கள் .அதற்குள் ஒருவித நேர தக்கவைத்தலை பெரும் முயற்சியாக இருக்கலாம் .
இருபத்தி மூன்று ..
ஹெமில்டன் -  க்ரோசியன் இடைவெளி ஒரு வினாடியாக இருந்தது .
இருபத்தாறு ..
கோஜியன் காரின் வேகம் சட்டென குறைய தொடங்கியது ..
முப்பத்தி ஒன்று ..
ஹெமில்டன - க்ரோஜியன் இடைவெளி 1.01 வினாடி என்று சுருங்கி கொண்டே வர மெக்ளரனின் அணிக்கு கவலை தொற்றிக்கொண்டது.

முப்பத்தி நான்கு ..
பட்டன் தன்னுடைய இரண்டாவது டயர் மாற்றத்திற்க்கு வந்து 2.8 வினாடிகளில் வெளியேறினார் .எப்போதும் ஏதாவது சிக்கலில் மாட்டும் பட்டனின் கார் இப்போது சற்று மெக்கானிக்குகளின் கவன ஆழத்தில் இருக்கிறது .அதனால் தவறுகள் சரிசெய்யபடுகிறது.காரணம் இது ரேஸ் மட்டுமல்ல - பார்முலா  1.எல்லா சிக்கலையும் தீர்க்கும் சூத்திரத்தை கற்றுக்கொள்கிறது
முப்பத்தி எட்டு ..
வெட்டல் இரண்டாம் முறையாக டயர் மாற்றம் செய்ய வர  அங்கு எப்போதும் போல ஒரு அவசரம் நிலவியது .காரணம் பட்டன் தன்னுடைய இடத்தை பிடிக்க கூடாது என்ற அணியின் வேகம் அது .
 நாற்பதாவது சுற்று ..
ஹெமில்டன் தன்னுடைய இரண்டாவது டயர் மாற்றம் வர பட்டனுக்கு டயர் மாற்றத்திற்கு எடுத்துக்கொண்ட நேரமே ஹெமில்டனுக்கும்  ஆனது .
நாற்ப்பத்தி ஐந்து
எனவே ரைகொணனின், லோட்டஸ் E20 காரின் வேகத்தை அதிகரிக்க இப்போது Medium compound டயரை பொருத்தி வேகமெடுத்து வந்தது .
நாற்ப்பத்தி ஆறு ..
இப்போது களத்தின் முதலிடம் ஹெமில்டனின்  கையில் இருந்தது .தொடர்ந்து வரும் ரைகொணனை 3 வினாடிகள் வித்தியாசத்தில் நெருங்க விடாமல் மெக்ளறேன் MP4 27 கார் பாய்ந்து  கொண்டு இருந்தது
ஐம்பத்தி இரண்டு .
லோட்டஸ் காரின் புதிய டயர் மாற்றம் நன்றாக வேலை செய்ய தொடங்கியது .இப்போது இடைவெளி 1.3 வினாடிகள் என்று குறைந்தது
இப்போதைய ஓட்டுனர்களின் பட்டியல்
1. ஹேமில்டன் 2. ரைகொணன் 3.க்ரோஜியன் 4.வெட்டல்  5. வெப்பர்6.அலோன்சா  7. பட்டன் 8. சென்னா 9. மாசா 10.ரோச்பர்க் .
ஐம்பத்தி ஆறு ..
பார்முலா 1 வரலாற்றில் இந்த ஆறாவது முறையாக ஐம்பத்தி ஆறு சுற்றுக்களுக்கு பிறகும் மொத்த 24 கார்களும் தொடர்கின்றன .
ஐம்பத்தி  எட்டு ..
வெட்டலின் கார் மூன்றாம் முறையாக டயர் மாற்றம் செய்ய வந்தது .நான்காம் இடத்தில் தொடர்ந்தது ..இம்முறை Soft Compound டயர் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது .அது மட்டுமல்ல முதல் மூன்று இடத்தில் இருப்பவர்களில் மூன்றாவது டயர் மாற்றத்தை ரெட்புல் அணி செய்கிறது .ஆனால் இங்கு ஒரு விசயத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும் .இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக பிட் லேன் நேரத்தில் மிக விரைவாக  செயல்பட்டதில் குறைந்த நேரத்தை பயன்படுத்தியவர்கள் பட்டியலில் ரெட்புல் அணி மெக்கானிக்குகள் கடந்த ஆறு ஆண்டுகளில் 11 முறை இந்த இடத்தை தக்க வைத்துள்ளார்கள்  .இந்த திட்டமிட்ட உழைப்பே கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்திலும் இந்த ஆண்டும் முதலிடத்தில் புள்ளிகளை அள்ளிக்கொண்டு இருக்கிறது .

இப்போது மைக்கேல் ஷூமேக்கரின் கார் ரேசை விட்டு வெளியேறியது .ஆரம்பம் முதலே காரின் என்ஜினில் வெப்பம் அதிகமாகவே இருந்தது உணர்ந்த ஷூமேக்கர் மகவும் அவதிக்கு உட்பட்டே காரை செலுத்தி இருக்கிறார் .எஞ்சின் எலெக்ட்ரானிக் எச்சரிக்கை மஞ்சள் விளக்கு மூலம் உணர்த்திய பின்னரே இனி வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது .ஏனெனில் எந்த நேரத்திலும் எஞ்சின்  தன் இயக்கத்தை கைவிடலாம் அதனால் விபத்து ஏற்படலாம் என்பதால் பிட் லேன் திரும்பியது மைக்கேல் ஷூமேக்கரின் கார்.கடந்த 11 ரேஷ்களில் இது ஆறவது ரிட்டையர் மென்ட்.சாம்பியன் உங்கள் போட்டியை அடிக்கடி மிஸ் பண்ணுகிறோம் !
அறுபத்தி இரண்டு ..
ரைகொணனின் வேகம் பிரமிப்பை ஏற்படுத்தியது .ஏதாவது ஒரு வளைவில் ஹெமில்டனை பின்னுக்கு தள்ளும் வேகம் .நிச்சயமாக ஏதாவது நடக்கலாம் ...
அறுபத்தி ஆறு ..
கேமிராகளின் பார்வை முழுவதுமே முதல் இரண்டு கார்களை வில்ல அகலவில்லை .இப்போது இடைவெளி 1.2 வினாடிகள் மட்டுமே .

அறுபத்தி எட்டு ..
இப்போது 1 வினாடிகள் இடைவெளி ...

அறுபத்தி ஒன்பது ..கடைசி சுற்று

இப்போது 1 வினாடிகள் இடைவெளியில் ஹங்கேரியின் வெற்றிகொப்பையை தக்கவைதுகொண்டார் மெக்லரண் மெர்சடிசீன் - லீவிஸ் ஹேமில்டன் .அப்பாடா என்று இருந்தது மெக்லரண் அணிக்கு .

இரண்டாவது இடம் ..

லோட்டஸ் ரெனால்ட்டின் - கிமி ரைகொணன் .இந்த ஆண்டு மிக அருமையான எழுச்சி பெற்று இருக்கிறது லோட்டஸ் ரெனால்ட் அணி .சென்ற ஆண்டு பத்தாம் இடத்திலிருந்தது .இந்த ஆண்டு மூன்றாம் இடத்தை நோக்கி மிக எளிதாக முன்னேறிக்கொண்டு இருக்கிறது .
மூன்றாம் இடம் ..

அதே அணியின் ரோமின் க்ரோஜியன்.

மிக தாமதமான இந்த பதிவிற்கு வருந்துகிறேன் .

அடுத்து நாம் பார்க்க  இருப்பது

கடந்த ஆகஸ்ட்  02 ல் நடந்த பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ் .No comments: