உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, July 16, 2011

தொடமுடியாத இடத்தை நோக்கி ரெட் புல் அணி ...


இந்தமுறை பார்முலாவின்1 ன் ஒன்பதாவது சுற்று இங்கிலாந்தில் உள்ள சில்வர் ஸ்டோன் களத்தில் நடந்தது .இந்த களம் மறு சீரமைபுக்குபின் முதன்முறையாக பயன்படுத்த படுகிறது 


306.139 கி.மீ நீளமுள்ள இந்த களம் 52 சுற்றுக்களை கொண்டது .

Jose Froilan Gonzalez led

ஆனால் மிக பழமை ஆதிக்கம் நிறைந்த களம் இது .ஜோஸ் ப்ரோய்லான் கோன்ஸாலேஸ்(Jose Froilan Gonzalez led ) மூலம் 1951 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ்சில் பெர்ராரி அணிக்கு அதன் முதல் வெற்றியை தொடங்கி வைத்தார் .

1951
அந்த வெற்றி சரித்திரம் நினைவு கூறும் வகையில் இங்கு இன்று பெறப்பட்ட வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது 

2011
போட்டி, இங்கிலாந்து நேரப்படி மதியம் ஒரு மணிக்கு களத்தின் செய்தி தொகுப்புடன் தொடங்கியது .

இந்த முறை மார்க்வெப்பர் முதலாம் இடத்திலும் வெட்டல் இரண்டாம் இடத்திலும் அலோன்சா மூன்றாம் இடத்திலும்( Grid position)போட்டியை துவங்கினார்கள் .


வழக்கம்போல வெப்பரின் கார் அவரின மன வேகத்துக்கு இடம் கொடுக்காமல் வெட்டளிடம் பறி கொடுத்துவிட்டது முதல் சுற்றின் துவக்கத்தில் 

நான்காம் சுற்றில் ஹெம்மில்டன் கள பாதையை விட்டு விலகிசென்று பயமுறுத்தினார் .

13 ஆம் இடத்தில் துவங்கிய மைக்கேல் சூமேக்கர் ஒன்பதாம் இடத்திற்கு ஒரு குறிக்கோளுடன் விரைந்து வந்து சப்பர் அணியின் ஜப்பானிய டிரைவர் கோபயாசியுடன் மோதி விளையாடி ,பத்து வினாடி பெனால்டி மூலம் தாமதித்து மீண்டும் பதினைந்தாம் இடத்தில் தொடங்கி,முடிவில் ஒன்பதாம் இடம் பெற்றார் .

schumacher accident with kobayashi

சூமேக்கேரின் காரிலும் ,அவரிடமும் ஒரு மிக பெரிய மாற்றம் தெரிகிறது .வரும் போட்டிகளில் எதிர்பார்க்கலாம் ...

பதினைந்தாம் சுற்றில் ஹேமில்டன் நாலாம் இடத்திலுருந்து முந்தி மூன்றாம் இடம் வந்து மிக பெரிய எதிபார்ப்பை தந்தார் .முடிவில் நான்காம் இடத்தை தக்கவைத்து கொண்டார் .
26 ஆம் சுற்றில் நமது போர்ஸ் இந்தியா அணியின் -பவுல் டி ரெஸ்டா(paul di resta) கார் டயர் மாற்றும்போது ஒருவித குழப்பத்தில் அதிக நேரம் எடுத்துக்கொண்டதே மனித தவறின் மூலம் முடிவுகளில் மாற்றத்தின் விதை விதைக்க பட்டது .இதுவே முதல் தவறு அதனால் அவர் 
15 ஆம் இடமே பெற முடிந்தது .


28 ஆம் சுற்றில் மிக பெரிய இரண்டாவது தவறு நடந்தது .அது சாம்பியன் வெட்டளுக்கு நடந்தது .பிட் லேன்ட் டயர் மாற்றும்போது தடுமாற்றமும் ,தாமதமும் ஏற்பட்டது .அதனை மிக அழகாக பயன்படுத்திகொண்டது பெர்ராரி .

அதுவரை இரண்டாவது இடத்தில் இருந்த பெராரியின் அலோன்சா முதலிடத்தை பிடித்து விடாமல் கடைசிவரை தக்கவைத்து கொண்டார் .39 ஆவது சுற்றில் ஐந்தாம் இடத்திலிருந்த மேக்ள்ரனின் ஜென்சென் பட்டனுக்கு காருக்கு டயர் மாற்றும்போது மூன்றாவது மிக பெரிய தவறு நடந்தது .

அது அவரின முன் பக்க வலது டயரின் வீல் நட் பொருத்தவில்லை .பிட் லேன் விட்டு கிளம்பும் முன் கவனித்தார்கள் .ஆனாலும் பாதுகாப்பு அற்ற பராமரிப்பு காரணமாக 5000 டாலர் அபராதம் பெற்று ,போட்டியிலிருந்தும் வெளியேறினார் .

46 ஆவது சுற்றில் 4 ஆவது இடத்திலிருந்த வெப்பர் 3 ஆம் இடத்திலிருந்த ஹெமில்ட்டனை பின்னுக்குதள்ளினார் .இறுதி வரை தக்கவைத்துக்கொண்டார் .


மற்றும் ஒரு வேடிக்கை சம்பவம் நடந்தது ரெட்புல் ரெனால்டின் வெப்பர் மூன்றாம் இடம் தாண்டி தன்னுடைய அணியை சார்ந்த வெட்டலை பலமுறை முந்த முயன்றது .அணியின் கட்டளைப்படி நடக்க முடியாது என்பது வெளிப்டையாக நிரூபித்தார் வெப்பர் .லோட்டஸ் ரெனால்டின் -ஹயக்கி கோவளைனேன் இரண்டாவது சுற்றில் கியர் பாக்ஸ் பிரச்னையாலும் 10 ஆவது சுற்றில் அதே அணியின் ஜோர்னோ ட்ரூலி எஞ்சின் ஆயில் வெளியேற, களத்தை விட்டு அவரும்  வெளியேறினார் .

23 ஆவது சுற்றில் சப்பர் அணியின் காமுயை கோபயாசி ஆயில் லீக்கில் வெளியேறினார் .அவரை தொடந்து டோரோ ரோசொவின் செபாஸ்டியன் பியுமி கார் டயர் பஞ்சராக அவரும் வெளியேறி முடிவின் மொத்தத்தில் 19 கார்கள் மட்டுமே இருந்தது 

அந்த 19 ஆவது கார் ஹிஷ்பானிய அணியில் நமது நரேன் கார்த்திகேயனுக்கு மாற்றாக வந்த டேனியல் ரிகார்டோவின் கார் .


பார்முலா 1 பந்தயத்தை பொறுத்தவரை
மனித திறமை + தொழில்நுட்பம் = வெற்றி.
அதில் இந்தமுறை ரெட்புல் ரேனால்டின் மனித திறமை சில நொடிகளில் தவறிப்போனதால் வெற்றி என்பதன் முகவரி பெராரி அணிக்கு சொந்தமாகிவிட்டது .


இரண்டாம் இடம் வெற்றி பாதையின் தொட முடியாத தூரத்திற்கு போய் கொண்டு இருக்கும் ரெட் புள் அணியின் செபாஸ்டியன் வெட்டல் .


மூன்றாவது இடமும் அந்த அணியின் மார்க் வெப்பர் .

அணிகளின் நிலை புள்ளி பட்டியல் 
TeamPts
1Red Bull328
2McLaren218
3Ferrari164
4Mercedes68
5Renault65
6Sauber33
7Toro Rosso17
8Force India12
9Williams4
10Lotus0
11HRT F10
12Virgin0


அணிகளின் நிலையை விட அணிந்து இருக்கும் ஆடை தேசிய கொடி.

அடுத்த போட்டி -வரும் ஜூலை 24  ஆம் தேதி


 ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிக்காக நாம் காத்திருப்போம்  ....

Saturday, July 9, 2011

இந்தியாவின் வேகமனிதன்

இந்தியாவின் மொத்த (1,210,193,422 (1.21 billion) மக்களின் கனவு நாயகன் நரேன் கார்த்திகேயன் .இந்தியாவின் வேகமனிதன் என்று விரும்பபடுபவர் .இந்திய பார்முலா1  ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயத்தைஹிஸ்பானியா அணியும் ரெட்புல் ரெனால்ட் அணியும் ஒரு குழு அமைப்போடு செய்திருப்பது மிகவும் கவலை தருகிறது .

நமது பாரத பிரதமர் மன்மோகன் சிங்கால் "He is a true representative of India's young spirit and he has set an example for the entire motorsports fraternity of India to follow."வருணிக்கப்பட்ட நமது நரேன் கார்த்திகேயன் ஹிஸ்பானியா ரேசிங் டீமின்  (Hispania Racing  Team) பயிற்சி ஓட்டுனராக (Test driver)
தரவிறக்கம் செய்ய படுகிறார்.

இந்த வருடம் முழுவதும் ஹிஸ்பானியா அணியில் ஒப்பந்தம் செய்ய பட்டு இருந்தாலும் ஓட்டுனர் என்ற அந்தஸ்த்தை மாற்றிக்கொள்ளும் அதிகாரம் அணியின் தலைமைக்கு இருந்தாலும் இந்த முடிவுக்கு பின்னால் மிக பெரிய உள்நோக்கம் உள்ளது .


கடந்த ஆண்டு சாம்பியனும் ,இந்த ஆண்டில் முன்னணியில் உள்ள  ரெட்புல் ரெனால்டின் தலைமை .
அந்த அணியின் மார்க் வெப்பருக்கு வரும் காலத்தில் மாற்றாக ஒரு டிரைவர் தேவை .
Daniel Ricciardo

அதற்காக டோரோ ரோசோ (  Toro Rosso) அணியில் பயற்சி ஓட்டுனரான இருக்கும் ஆஸ்திரேலியாவின் டேனியல் ரிக்கியர்டோ (Daniel Ricciardo) வை மிக பெரிய தொகையை ஹிஸ்பானிய அணிக்கு கொடுத்து டிரைவர் சீட்டில் அமர வைத்துவிட்டது .டேனியல் ரிக்கியர்டோ பார்முலா1 பந்தயத்திற்கு புதியவர் .

ஆனால் நரேன் கார்த்திகேயன் தரவிறக்கம் செய்யப்பட்டதற்கு பல உதவாத காரணங்களை ஹிஸ்பானியா அணி சொல்லிகொள்ளலாம் .நரேனின் வேகமும் ,உணர்வும் அவருடைய அணியின் லூசியோடு (Vitantonio Liuzzi) இணங்கி போகவில்லையாம் .என்னோவோ லூசி தொடர்ந்து முதலிடம் வந்தது போலவும் நரேன் கடைசியாகவே வருவது போலவும் சிலாகிக்க படுகிறது .ஆனால் புள்ளிவிவரங்கள் சொல்லுவது என்ன ?

Vitantonio Liuzzi


லூசி இந்தவருடம் இதுவரை ஹிஸ்பானியா அணியிலிருந்து 17 ஆம் இடம் அடைந்ததே அதிக பட்ச இடம் .கடந்த 2009 ஆம் வருடம் நமது போர்ஸ் இந்தியா அணியில் இருந்தபோது கலந்து கொண்டது மொத்தம் ஆறு போட்டிகள் அதில் 11 ஆம் இடமே அதிகபட்சம் .அதே அணியில் 2010 ஆம் ஆண்டில் கலந்து கொண்ட 19 போட்டிகளில் சவுத் கொரியாவில் 6 ஆம் இடமும் -19 போட்டிகளில்-மொத்த புள்ளி அடிப்படையில் 21 புள்ளிகள் மட்டுமே பெற்றார் .அதனால் அந்த வாதம் செல்லாது .
மற்றும் ஒரு முக்கியமான விஷயம் ஹிஸ்பானிய அணியின் ஓட்டுனர்களை வைத்து கொள்ளும் முறையும் மிக மோசமானது .கடந்த ஆண்டுதான் இந்த அணி பார்முலா போட்டியில் அடியெடுத்து வைத்தது .ஆனால்,டிரைவர்கள் பட்டியல் மிக நீண்டது .
1) கடந்த ஆண்டில்(2010) பதினெட்டு போட்டிகளில் மட்டுமே - புருனே சென்னா (Bruno Senna) பயன்படுத்தபட்டார் .
2) கடந்த ஆண்டில் நமது இந்திய வீரர் கருண் சந்தோக் பத்து போட்டிகள் மட்டுமே பயன்படுத்தபட்டார் .
3) அதே ஆண்டில் ஜப்பானிய வீரர் சகான் யமமொடோ ( sakon Yamamoto) ஏழு போட்டிகளில் மட்டுமே பயன்படுத்தபட்டார் .
4) அதே ஆண்டில் ஆஸ்திரியாவின் கிறிஸ்டியன் கிளைன்( Christian Klien) மூன்று போட்டிகளில் மட்டுமே பயன்படுத்தபட்டார்.
எனவே இந்த ஆண்டு இதுவே தொடக்கம் ......

நமது இந்திய நரேனின் ஆதரவாளர்கள் (sponser)
டாட்டா குழுமமும் மற்றும் பேஸ் பேட்டரியின் தன்னிலை என்ன என்பது தெரியவில்லை .

 
வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில்  புத் இன்டர்நேஷனல் களத்தில் நடக்கவிருக்கும்  போட்டிகளில் எத்தனை இந்தியா முகத்தை பார்க்கலாம் என்று ஒவ்வொரு இந்திய பார்முலா ரசிகர்களின் ஒட்டுமொத கனவையும் தகர்த்து வீசிவிட்டார்கள் .

ஆசையை  வென்ற புத்தரின் பெயரில் உள்ள களத்தின் போட்டிகளில், இந்தியர் யாரும் இல்லை என்ற வேதனையை யார் வெல்லக்கூடும் ?மீண்டும் வருவேன் ....

மீட்க்க வருவேன் .......

Tuesday, July 5, 2011

ஜெர்மானிய இளம்புயல் செபாஸ்டியன் வெட்டல் தன்னுடைய 24 ஆம் வயதை தொடுகிறார்

பார்முலா 1ன் எட்டாவது போட்டி அழகிய ஸ்பெயினில் உள்ள வலன்சியா களத்தில் அரங்கேறியது .(Valencia Street Circuit) ஸ்பெயின் நாட்டில் நடக்கும் இரண்டாவது போட்டி ஆனால் இதன் பெயர் ஈரோப்பியன் கிராண்ட் பிரிக்ஸ் (2011 European Grand Prix) 

Valencia Street Circuit

இந்த அழகிய கள வடிவமைப்புக்கு சொந்தக்காரர் உலகின் 22 கள வடிவமைப்பு கர்த்தா நமது ஹெர்மன் டில்கே ( Hermann Tilke) 25 வளைவுகளுடன் 460 அடி நீளம் அழகிய பாலத்தின் மேல்
(swing bridge) களம் அமைத்து இருப்பது மிக சிறப்பு அம்சம் .

வலன்சியா களம் 2008 லிருந்து பயன்பாடுக்கு வந்து விட்டது. 
இதுவரை நான்கு போட்டிகள் இங்கு நடந்து விட்டது . 5.419 கி.மீ நீளமுள்ள, 57 சுற்றுக்களை கொண்ட


Valencia Street Circuit

இந்த களத்தின் வேக நாயகன் டிமோ க்ளாக் (Timo Glock). கடந்த 2009 ல் டொயோட்டோ அணியிளிருந்தபோது (அதாவது அந்த அணியின் கடைசி வருடம்) சாதித்தார் .இப்போது இவர் விர்ஜின் காஷ்வோர்த் அணியில் இருக்கிறார் .

Timo Glock

போட்டியின் துவக்கம் ரெட் புல் ரெனால்டின் வசம் முழுமையாக இருந்தது அதாவது ரேஸ் (Grid)துவக்க நிலையில் செபாஸ்டியன் வெட்டல் ,மார்க் வெப்பர் இருவரும் முதல் இரு இடத்தில் இருந்தனர் .மூன்றாம் இடத்தில் மேக்ளரேன் மெர்சிடிசின் லீவிஸ் ஹேமில்டன் இருந்தார் .


முதல் சுற்றின் துவக்கத்திலேயே ஹெமில்டேன் ஐந்தாம் இடத்திற்கு தள்ளபட்டார் .
பய்ரலி (pirelli) கம்பெனி டயரின், ரேஸ் ட்ராக்கில் - உராய்வின் வாசம் பார்வையாளர்களை ஆக்கிரமித்தது.அந்த அளவுக்கு துவக்கம் பொறி பறந்தது .
ஆறாவது சுற்றில் ஏழாவதாக வந்து கொண்டு இருந்த ஜென்சென் பட்டன் ,ரோஸ் பெர்க் இடம் மாறி கொண்டனர் . 

பதினாறாவது சுற்றில் ரெனால்ட் அணியின் விட்டலி பெட்னோவே 
மைகேல் ஷுமேக்கரை முந்தி செல்ல முயற்சித்து ஷுமேக்கரின் காரின் முன்பகுதியை தாக்கினார் .வளைவில் முந்த கூடாது என்று ரேஸ் ட்ராக்கில் சொல்ல முடியாதே !


அதனால் தன்னுடைய எட்டாம் நிலையிலிருந்து இருபதாம் இடத்திற்கு ஏழு முறை சாம்பியன் பெற்ற களத்தின் சிங்கம் பதுங்கி விட்டது .மீண்டும் இருபத்தி ஏழாவது சுற்றில் பதினேழாம் இடத்திலுருந்து முன்னேறும்போது வில்லியம் காஷ்வோர்த்தின் - பாஸ்டர் மால்டோனவுடன்  ரியர் வீல் மூலம் முத்தமிட்டு கொண்டனர் .(அப்போது தெரிந்தது சாம்பியனின் இன்னொரு முகத்தின் ஒரு பகுதி .) ரேஸின் முடிவில் பதினேழாம் இடத்தையே அடைய முடிந்தது,ஷுமேக்கரை  துரதிருஷ்டம் முந்தி சென்றது, இந்தமுறையும் .


21 ஆம் சுற்றில் அலோன்சா மூன்றாம் இடத்திலுருந்து மார்க் வெப்பரை முந்தி இரண்டாம் இடத்தை பிடித்தார். போட்டியின் கடைசிவரை அலோன்சா தன்னுடைய இடத்தை பறிகொடுக்கவில்லை என்பது சிறப்பு அம்சம் .

போர்ஸ் இந்தியாவின் ஆண்ட்ரியன் சட்டில் ஒன்பதாம் இடம் பிடித்து ஆறுதல் தந்தார் விஜய் மல்லையாவுக்கு .
ஆஸ்த்ரேலியாவில் நடை பெற்ற முதல் போட்டியை நினைவுறுத்தினார் .


போட்டி முடிவுகள் மிக பெரிய மாற்றம் எதுவும் இல்லை .முதல் பத்து இடங்களுக்கான அனைத்து மாற்றங்களுமே ஏறக்குறைய முப்பது சுற்றுக்குள்ளேயே முடிவுக்கு வந்து விட்டது .

முடிவுகள் ?

முதல் இடத்தில் இருக்கும் செபாஸ்டியன் வெட்டல்  ஜூலை மாதம் 3 ஆம் தேதி நடிகர் கார்த்தி -ரஞ்சனி திருமணம் தமிழகத்தில் நிறையபேருக்கு தெரியும் அன்று இன்னொரு முக்கியமான விஷயம்-ஜெர்மானிய இளம்புயல் செபாஸ்டியன் வெட்டல் தன்னுடைய 24 ஆம் வயதை தொடுகிறார் .அவருக்கு ஒரு வாழ்த்து சொல்லிக்கொள்வோம்  .
அவர்தான் முதல் இடம் .
ஃபெராரியின் பெர்னாண்டோ அலோன்சா இரண்டாவது இடம் 


மூன்றாவது இடமும் ரெட்புல் ரெனால்டின் மார்க் வெப்பர்
இந்த வலைப்பூஅழகிய  வடிவமைப்பு- பள்ளி தோழரும்,சக பயணியுமான திரு .சுகுமார் அவர்களின் படைப்பு (*Sugumarje* *Caricaturist and Freelance Graphic Designer*)
 போட்டி  முடிவுகள் .
இதுவரை 


Driver Standings
1
S Vettel
186
2
J Button
109
3
M Webber
109
4
L Hamilton
97
5
F Alonso
87
6
F Massa
42
7
N Rosberg
32
8
V Petrov
31
9
N Heidfeld
30
10
M Schumacher
26
Team Standings
1
Red Bull Renault
295
2
McLaren-Mercedes
206
3
Ferrari
129
4
Renault
61
5
Mercedes GP
58
6
Sauber
27
7
STR Ferrari
16
8
Force India Mercedes
12
9
Williams Cosworth
4
10
Lotus Renault
0