உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, July 28, 2012

பெர்னாண்டோ அலோன்சா - ஜெர்மனின் நாயகன்




கடந்த ஞாயிறு ஜூலையில் 22  ஆம் நாள் ஜெர்மனின் - Hockenheimring களத்தில் அரங்கேற காத்திருந்தது .அணிகளின் நிலை ..
1. பெராரியின் - பெர்னாண்டோ அலோன்சா 2. ரெட்புல் ரெனால்ட்டின் - செபாஸ்டியன் வெட்டல் 3. மெர்சிடிஷின் - மைக்கேல் ஷூமேக்கர் 4. ஷஹாரா போர்ஸ் இந்தியாவின் - நிக்கோ ஹுல்கேன்பர்க் 5. வில்லியம்ஸ் ரெனால்ட்டின் - பாஷ்ட்டர் மால்டோனாண்டோ 6. மெக்லரண் மெர்சிடிஷின் - ஜென்சன் பட்டன் 7. லீவிஸ் ஹெமிட்டன் 8.மார்க் வெப்பர் 9. ஷஹாரா போர்ஸ் இந்தியாவின் - பால்டி ரேஷ்டா  10.லோட்டஸ் ரெனால்ட்டின் - கிமி ரைகொணன் .
முதல் சுற்று .

மிக அருமையான துவக்கத்தை அலோன்சா கார் கொடுத்தது .அவரை தொடர்ந்த செபாஸ்டியன் வெட்டலை மூன்றாம் நிலையில் இடத்திலிருந்த மைக்கேல் ஷூமேக்கர் இணையாக செல்ல ஒரு கட்டத்தில் வெட்டல் தன்னிலையை தக்கவைத்துக்கொண்டார் .
(இங்கு ஒரு தகவல் .தகுதி சுற்றில் மூன்றாம் நிலையில் வந்த ரெட்புல்லின் மார்க் வெப்பர் - கியர் பாக்ஸ் அனுமதி மீறி மாற்றியதால் அவர் மூன்றாம் நிலையிலிருந்து ஐந்து இடம் தள்ளி எட்டாம் இடத்தில் துவங்க பணிக்கப்பட்டார் இவர் மட்டுமல்ல மெர்ஷடீசின் - நிக்கோ ரோஷ்பெர்க் 15- 21,அடுத்து லோட்டஸ் ரெனால்டின் - ரோமின் க்ரோசியன் 14 - 19ஆகியோரும் இதில் அடங்குவார்கள் .)
பின்வரிசையில் மிக பெரிய குழப்பம்+ மோதல் ..பெர்ராரியின் பிலிப் மாசா கார் -  லோட்டஸ் ரெனால்டின் - ரோமின் க்ரோசியன் கார் மோதல் இவர்களுடன் வில்லியம்ஷின் - சென்னா கார் மோதி விளையாடியதில் மாசாவின் காரில் - Front Wing உடைந்தது .க்ரோசியன் கார்   Nose மாற்றப்பட்டது .வில்லியம்ஸ் - சென்னாவின் கார் பஞ்சர் .மூன்று காரும் பிட்லேனில் .
பொதுவாகவே உலகின் மிக பல களங்கள் இந்த களத்தை போல கார்களின் உச்ச வேகத்தை தொடும்போது ( முதல் சுற்றின் துவக்கத்தில் ) ஒரு வளைவு இருப்பது போட்டியின் வேறுபல காரணங்களுக்கு சரியாக இருந்தாலும் - விபத்துக்கு நிறைய வாய்பை தருகிறது .இதை அணி நிர்வாகங்கள் FIA விடம் சொல்லலாம் ! 
இரண்டாம் சுற்று ..
ஏற்கனவே தன்னுடைய எழாம் இடத்தை தவறவிட்ட ஹெமில்ட்டன் கார் இப்போது இடது பின்புற டயர் பஞ்சர் .டயர் மாற்றி திரும்பும்போது 22 இடத்தையே அவர் தொடர வேண்டியதாகிவிட்டது .ஹெமிட்டனின் மனம் துவண்டு விட்டது .அவரின ரேடியோ பேச்சு இதை உறுதி செய்தது .

ஐந்தாவது சுற்று ..
முன்வரிசையில் வெட்டல் - அலோன்சாவுக்கு அழுத்தம் கொடுக்க ஒரு தகுதி சுற்றின் நிலையை போல எந்த தவறுக்கும் இடம் கொடுக்க கூடாது என்பதில் மிக கவனமான டிரைவிங் அலோன்சா .
எட்டாவது சுற்று ..
ஜென்சன் பட்டன் ஓட்டும் முறையில் ஒரு வெறித்தனம் தெரிந்தாலும் அது இழந்த தன நம்பிக்கையை திரும்பபெறும்  முயற்சியாக தெரிந்தது .இப்போது ஆறாம் இடத்திலிருந்த பட்டன்  -ஐந்தாம் இடத்து சஹாரா போர்ஸ் இந்தியா அணியின் - நிகோ ஹுல்க்கேன் பர்கை முந்தினார் .

பதினொன்று ..
பட்டனின் அடுத்த வேட்டை ஷூமேக்கரின் கார்தான் .இன்றுள்ள சூழ்நிலையில் DRS பகுதியில் அதிவேகத்தை எட்டுவது ரெட்புல் அடுத்து மெக்லரண் மெர்சடீஷ் என்பதால் ஷூமேக்கரின் கார் மிக எளிதாக பட்டனின் வேகத்துக்கு இரையானது .இப்போது பட்டன் மூன்றாம் இடம் .அற்புதம் .

பதினான்காம் சுற்று ..
ஷூமேக்கர் ஐந்தாம் இடத்திற்கு தள்ள பட்ட  கோபத்தில் டயர் மாற்ற வந்தார் .ஆனால் கிடைத்த நேரத்தில் எல்லோரும் Medium Compound டயருக்கு மாறிக்கொண்டு இருக்க விட்ட இடத்தை பிடிக்க ஷூமேக்கர் மீண்டும் தேர்வு செய்தது Soft Compound .மீண்டும் ஏழாம் இடத்தை தொடர .

பதினாறு ...
ஷூமேக்கர் நெருப்பு பரவுவதை போல ஒரே அழுத்து - அழுத்த பின்னோக்கி போனது நிக்கோ ஹுலேன்பெர்க் கார் இப்போது ஆறாம் இடத்தில் ஷூமேக்கர் .
பதினெட்டு ..
அலோன்சா தன்னுடைய நீண்ட ஓட்டத்திற்கு வலு சேர்க்க ,டயர் மாற்றி மீண்டும் மூன்றாம் இடத்திற்கு வர ,இதோ வந்தேன் என்பதாக ஜென்சன் பட்டன்  டயர் மாற்றம் .அதே  Medium Compound டயர் .மீண்டும் நான்காம் இடத்தில் ..

இருபத்தி ஒன்று ..
வெட்டலும் டயர் மாற்றம் அவரும்  Medium Compound .மீண்டும் மூன்றாம் இடம் .
அதற்குள் ரெய்கொணன் ஆறாம் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்து ஷூமேக்கரை பின்னுக்கு தள்ள ..

இருபத்தி ஐந்து ..
மூன்றாம்  இடத்து கோபயாஷி டயர் மாற்றம் போக அந்த இடத்தில் இப்போது ஜென்சன் பட்டன் .போட்டி களைகட்டியது .வெட்டலின் வேகம் அதிகரிக்க தொடங்கியது .ஒவ்வொரு சுற்றிலும் அலோன்சாவை பின்னுக்கு தள்ளும் வேகம் மட்டுமல்ல பின்னால் வரும் பட்டனுக்கும் தனக்கும் ஒரு வலுவான இடைவெளியை ஏற்படுத்த முயற்சி நடந்தது .

முப்பதாவது சுற்று ..
ஒவ்வொரு DRS பகுதியிலும் பெராரியை விட ரெட்புல் வேகம் ஒப்பிடும்போது ஐந்து கிலோ மீட்டர் அதிகமாக இருப்பது தெளிவாக காண முடிந்தது .ஆபத்தை ஆலோன்சாவும் உணர்வார் .ஜெர்மானியர்களின் துரத்தலில் தப்பித்தவர்கள் வெகு சிலரே என்பதை நன்கு உணர்வார் .

முப்பத்தி நானகாவது  சுற்று ..
வித்தியாசமான ஒரு சம்பவம் இப்போது நடந்து கொண்டு இருந்தது ..பதினேழாம் இடத்து லீவிஸ் ஹெமில்ட்டனை கடக்கும் நிலை முதல் இடத்து ஆலோன்சாவுக்கும் ,இரண்டாம் இடத்து வெட்டளுக்கும் ஏற்ப்பட்டது .அப்போது ஹெமில்ட்டன் கார் வேண்டுமென்றே வழிவிடாது முன்னோக்கி சென்று கொண்டு இருந்தது .இதை ஒருவாறு சமாளித்த அலோன்சா கடந்து விட்டார் .ஆனால் வெட்டல் கடக்க முடியவில்லை .முன்னணியில் இருக்கும் காருக்கு வழிவிட வேண்டுமென்பது நியதி .அதுமட்டுமல்ல பதினேழாம் இடத்திலிருக்கும் ஹெமில்டன் ,வெட்டலை தாமத படுத்த காரணம் என்ன ? இருக்கிறது சுமார் மூன்று வினாடிகள் வித்தியாசத்தில் வெட்டலை தொடர்வது ஹெமில்டன் கூட்டாளி பட்டன் அல்லவா ? வெட்டலை தாமத படுத்தினால் பட்டன்  சுலபமாக இரண்டாம் இடத்தை எட்டி பிடித்து விடலாம் என்பதாக கணக்கிட்டது அணி .விளைவு ..இந்த  தாமதம் பட்டனுக்கு உதவியது .
முந்தி செல்ல விடாது செல்லும் ஹெமில்ட்டனின் வியூகத்தை உணர்ந்த வெட்டல் இரண்டு முறை முயற்சி செய்துவிட்டு கைகளை உயர்த்தி சபிக்க தொடங்கினார் ..பின்னர் , The Motor Report பத்திரிக்கை பேட்டியில் வெட்டல் இதை பற்றி சொல்லும்போது "That was not nice of him," . "It's a bit stupid to disturb the leaders."

முப்பத்தி ஆறாவது சுற்று ..
இப்போது ஷூமேக்கர் டயர் மாற்றம் .ஆனால் எல்லோரும்போல Medium Compound .ஆச்சர்யம் .ஆனால் இன்னும் முப்பத்தி ஒரு சுற்றுக்களை எப்படி சமாளிப்பார் ?
நாற்பது ..
பட்டன் டயர் மற்றம் - மீண்டும் Medium Compound 
நாற்பத்தி இரண்டு ..
அலோன்சா டயர் மாற்ற வர அவரை தொடர்ந்து வெட்டல் இருவரும் Medium Compound .போட்டி பலமாக இருக்கிறது .அதுமட்டுமல்ல ரெட்புல்லின் நோக்கம் அடுத்தவர்கள் திட்டத்தை தொடர்ந்து செயல்பட்டு அவர்களை முறியடிப்பது .சகல நேரங்களிலும் இது சாதகமான விளைவை தருவதில்லை .இருந்தாலும் ...
இப்போது டயர் மாற்றி வர முதலிடத்தில் அலோன்சா அவரை தொடர்ந்து ஜென்சன் பட்டன் ,ஆனால் ஜென்சனை கடந்து விடலாம் என்று தொடர்ந்த வெட்டளுக்கு அதிர்ச்சி கார் களத்தை விட்டு விலகி ஓரத்திற்கு போக இந்த தவறை நன்கு பயன்படுத்திய பட்டன் அருமையான வேகத்தில் அடுத்த இலக்கான அலோன்சாவை நோக்கி போக அங்கு இடைவெளி 1.3 வினாடிகளானது. 

ஐம்பத்தி மூன்று ..
ஐந்தாம் இடத்திலிருந்த ஷூமேக்கர் இப்போது டயர் மாற்றம் ஆனால் Soft Compound .கடைசி பதினைந்து சுற்றில் ஏதோ தற்காப்பை கருதி இதை செய்யலாம் .ஆனால்இது இரண்டு முறை மட்டுமே முன்னணியில் மாற்றும்போது இவர் மூன்றாம் முறை டயர் மாற்றம் செய்துள்ளதால் கார் ஒத்துழைப்பை இழந்த நிலையில் ஷூமேக்கரின் முடிவில் ஒரு காரணம் இருக்கும் .
ஐம்பத்தி நான்கு ..
மீண்டும் வெட்டலின் கார் களத்தின் ஓரத்திற்கு சென்று திரும்பியது .அந்த பதஷ்டம் அணியை பயமுறுத்தியது .
ஐம்பத்தி எட்டு .
மூன்றாம் சுற்றில் போட்டியிலிருந்து விலக விரும்பிய ஹெமில்ட்டன் இப்போது நிறைவேறியது .டயர் பஞ்சர் .இனியும் தொடர்வதில் அர்த்தம் இல்லை என அணி முடிவுசெய்து அழைத்துவிட்டது .
அறுபது ..
கடந்த ஆறு போட்டிகளுக்கு பிறகு பட்டனின் காரின் உற்சாகம் மிக அருமையான வெற்றியை நோக்கி பயணித்து மன்னிக்கவும் பாய்ந்து கொண்டு இருந்தது ..ஒருபக்கம் ஹெமில்ட்டனின் வெளியேற்றம், மறுபுறம் பட்டனின் இரண்டாம் இடம் .
அறுபத்தி இரண்டு ..
பட்டனுக்கும் - ஆலோன்சாவுக்கும் இடையே 1.5 வினாடிகள் அவ்வப்போது குறைந்தும் கூடியும் கொண்டே இருக்க ஆனால் பட்டனை தொடரும் வெட்டல் நிச்சயம் இரண்டாம் இடத்தை டயரின் ஒத்துழைப்பை இழந்தாலும் பெறுவதில் தீவிரம் காட்டிகொண்டு இருப்பது மெக்லரண் அணிக்கு நல்லதல்ல .
63 - 64 - 65 - 66 சுற்றுக்கள் ..கேமிராவின் பார்வை வெட்டல் - ஜென்சன் மேல் இருந்தது .வினாடிகளில் இருந்த இருவருக்கும் இடைவெளி வினாடிகளுக்கு கீழே போய்கொண்டு இருந்தது .எந்த நேரமும் ஜெர்மனியன் பின்னுக்கு தள்ளலாம் .ஹெமில்டன் ஏற்கனவே பட்டனுக்கு உதவிய குறுக்கு வழி கோபம் இருந்ததால் வெட்டலின் காரில் வேகத்தை விட ஒருவித வெறி இருந்தது களத்தின் ஓரங்களில் டயர் கதறியது .வெட்டல் இலக்கு மேக்ளரனை வீழ்த்துவது மட்டுமே .

வெட்டலின் கார் ஒருசில சமயத்தில் மெக்ளரனை தொட்டுவிடுமோ என்ற நிலையில் முதல் வளைவில் வெட்டலின் கார் Off the Track என்ற நிலையில் முழு நான்கு சக்கரனகளும் களத்தை விட்டு வெளியேறி ஜென்சனை முந்தி சென்றது .இதனால் மிக கடைசி நேரத்தில் பின்னுக்கு தள்ளப்பட்ட ஜென்சன் ரேடியோவில் முறையிட்டார் .அதற்குள் போட்டி முடிவுக்கு வந்தது .இது விதி மீறலா என்பதை FIA வின் சட்டம் ஆய்விற்கு அனுப்பட்டது .
ரெட்புல்லின் தலைமை இந்த விசயத்தை மிக சாதரணமாக எடுத்துகொள்ள வாதிட்டது .ஆனால் இந்த ஆண்டில் இதே முறையில் ஒரு தவறை பஹரைன் ரேசில் நிக்கோ ரோஷ்பெர்க் செய்தார் அப்போது வழங்கப்பட்ட தீர்ப்பை சுட்டிகாட்டியது .ஆனால் இங்கு நடந்த விஷயம் வேறு .எப்போதும் தவறை அதற்க்கு முன் சம்பந்தப்பட்டவர் செய்து இருக்கிறரா அல்லது முதல் முறையா என ஆய்வு செய்வார்கள் .அப்படி பார்க்கும்போது வெட்டல் இந்த Off the Track பிசினசை பல முறை செய்துள்ளார் .அது மட்டுமல்ல அன்று ரோஷ்பெர்க்கின் இதே தவறுக்கு முக்கியமான காரணம் விபத்தை தவிர்க்க செய்தது .எனவே இங்கு தீர்ப்பு ஒரே முறையில் எதிர் பார்ப்பது தவறு .பிறகு பேசுவோம் .

முதல் இடம் ..
பெர்னாண்டோ அலோன்சா - பெர்ராரி .கடைசி வரை ஒரு அருமையான ட்ரைவிங்கை வெளிப்படுத்தி மொத்த 67 சுற்றுக்களையுமே ( Q3 )  கடைசி தகுதி சுற்றில் பாத்து கார்களை வெற்றி பெற எடுத்துகொள்ளும் வேகம் ஆலோன்சாவிடம் இருந்தது .இங்கு வெற்றிக்கு காரின் தொழில் நுட்பத்தை விடவும் ஆலோன்சாவின் பங்கு அதிகம் .

இரண்டாவது இடம் .
செபாஸ்டியன் வெட்டல் - ரெட்புல் ரெனால்ட் .இந்த வெற்றி பரிசீலனைக்கு உட்பட்டு இருக்கிறது .இருந்தாலும் பரிசு வாங்குவதற்கு முன் டிரைவர்கள் எடை பார்த்துவிட்டு ,முதல் மற்றும் இரண்டு ,மூன்று இடத்திற்கான எண்ணுள்ள தொப்பிகளை பெறும்போது ஜென்சன் பட்டனும் ,வெட்டலும் பேசி கொள்ளும்போது வெட்டல் முகத்தில் அடித்தாற்போல வெட்டல் பதில் இருந்தது .நீங்கள் தடுத்தீர்கள் நான் முன்னேறி செல்ல வேண்டியாகிதாகிவிட்டது என மிக சாதரணமாக சொன்னார் .இதே பதிலை பரிசு பெற்ற பிறகு மேடையிலும் பேட்டியின் போது ஒருவித முக இறுக்கத்துடன் பதில் பேசும் போதும் தவறில்லை என்றாகவே இருந்தது .
 மூன்றாவது இடம் ..
ஜென்சன் பட்டன் - மெக்லரண் மெர்சடிசீஷ் .முதல் போட்டியில் முதலிடம் மூன்றாவது போட்டியில் இரண்டாம் இடம் .இதுவரை நடந்த பத்து போட்டிகளில் இது மூன்றாவது வெற்றி .அதுவும் ஜெர்மன் களத்தில் .பட்டன் விரைவில் பார்ம் அடைவார் .

போட்டி நடந்த சில நாளுக்கு பிறகு ஜென்சன் பட்டனின் கோரிக்கைக்கு சாதகமான தீர்ப்பு - Breach of article 5.5.3 of the technical regulation சரத்துப்படி FIA வின் Stewards வழங்கினார் .அது மட்டுமல்ல அந்த தீர்ப்பு மிகவும் அழுத்தமானதும் வருங்காலத்தில் மற்ற டிரைவர்களுக்கு பாடமாக அமைந்தது .அது வெட்டல் காரின் முந்திசெல்லும் நடவடிக்கை முழுவதுமாக தவறான பாதையில் செல்கிறது .இதில் மோதலை தவிர்க்கும்  பிரயர்த்தனமோ அல்லது விதியை பின்பற்றி முந்தி செல்லும் நடவடிக்கையோ துளியும் இல்லை என்பதுவும் அதற்கக்காக வெட்டலின் வெற்றி பெற்ற நேரத்தில் 20 வினாடியை கூட்டும்போது வரும் இடமே அவர் வெற்றி பெற்ற இடமாக கொள்ளவேண்டும் என தீர்ப்பானது .அதன் படி வெட்டலின் இரண்டாவது இடத்தை பெற எடுத்துக்கொண்ட நேரத்தில் 20 வினாடி கூட்டும்போது  1:31.22.870 என்ற நேரம் ஆகிறது இது நான்காம் இடமான 1.807 வினாடிகள் அதிகம் இருப்பதால் ஐந்தாம் இடத்தை வெட்டல் அடைகிறார் இதன் மூலம் இரண்டாமிடத்தில் கிடைக்கும் 18 புள்ளியை இழந்து  10 புள்ளிகளை பெருகிறார் .

அந்தமூன்றாம்  இடத்தை லோட்டஸ் ரெனால்ட்டின் - கிமி ரைகொணன் பெற்றார்

ஆக மொத்தத்தில் ஜெர்மானியர்களுக்கு கோப்பை இல்லை .சவாலே சாபமாக போய்விட்டது .போன ஆண்டு கூட 2010 ஆண்டுக்கு பிறகு (அதுவும் வெட்டல் மூன்றாம் இடம் .) அந்த இடம் காலியாகவே உள்ளது .கடைசியாக அண்ணன் மைக்கேல் ஷூமேக்கர், கடந்த 2006 ல் - முதல் இடம் வந்து சிறப்பு செய்ததே இன்னும் (கடந்த கால )வரலாறாக இருக்கிறது .

கடந்த போட்டோ விசயத்தில் நாம் பார்த்தது Gabriella Tarkany Samantha ,நண்பர் வில்லியம்ஸ் ரெனால்ட்டின் - பாஷ்ட்டர் மால்டோனாடாவின் காதலி .
இந்த மனிதன் காரில் பறப்பதை விட காதலியுடன் பறப்பதை விரும்புவார்போல !


No comments: