உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, July 21, 2012

ஜெர்மன் தேசத்து ஓட்டுனர்களுக்கு சவால் ! நாளை நாம் பார்க்க இருப்பது பார்முலா 1 ன் பத்தாவது சுற்று போட்டி அது ஜெர்மனியின் - Hockenheimring circuit ல் இந்திய நேரப்படி மாலை 5: 30 க்கு நடக்க இருக்கிறது .பதினேழு வளைவுகளை கொண்ட இந்த களத்தின் ஒரு சுற்றின் நீளம் 4.574 கி.மீ .இந்த தூரத்தை ஒரு போட்டி கார் 67 சுற்றுக்கள் சுற்றி முடிக்கும்போது கடக்கும் தூரம் 306.458 கி.மீ கடந்து இருக்கும் .மிக கடுமையான வளைவுகள் காரின் முழு வேகத்தை பயன்படுத்த முடியாத களம்

இது அதனால் ஒருமுறை இந்தகளத்தை கடக்க சுமார் 46 முறை கியரை உயர்த்தி ,குறைக்க வேண்டும் .அதுமட்டுமல்ல இந்த களத்தின் ஓடுபாதை அகலம் சுமார் 50 அடிக்குள் இருப்பது , முந்தி செல்லும் கார்களுக்கு வாய்ப்பு அதிகம்  .கடந்த 2002 ஆம் ஆண்டில் - Herman Tilke எண்ணத்தில் உருவான களத்தின் மொத்த ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் அளவு ஒரு லட்சத்து இருபதாயிரம் .இந்த களத்தின் வேக நாயகன் 2004 ல் மெக்லரண் மெர்சடீசின் - கிமி ரைகொணன் .


இந்த தேசத்து கார்கள்
இந்தகளத்தில் சொந்த தேசத்து காரர்களான மெக்லரண் மெர்சடீசின் - மைக்கேல் ஷூமேக்கர் , நிக்கோ ரோஷ்பெர்க் அடுத்து ,சஹாரா போர்ஸ் இந்திய அணியின் - ஹுல்கேன் பெர்க் ,ரெட்புல்லின் சிங்கம் - செபாஸ்டியன் வெட்டல் , மருஷ்ய காஷ்வோர்தின் - திமோ கிலோக் என  ஐவர் பட்டாளம் வெகு முனைப்பாக வெற்றியை பதிவு செய்ய காத்து இருக்கிறது.கடந்த ரேசில் ( 2010 ) இங்கு வெற்றி பெற்றது ரெட்புல்லின் சிங்கம் - வெட்டல்  என்பது குறிப்பிடத்தக்கது .( போட்டோவில் போட்டி களம் என்று நினைத்து வெப்பர் குறுக்கே வந்துவிட்டார் )சரி நாம் பயிற்சி போட்டி தகவலை சேகரிப்போம் ..
வெள்ளிகிழமை  நடந்த முதல் பயற்சி போட்டியில் மெக்லரண் மெர்சடீசின் - ஜென்சன் பட்டன் . நேரம் - 1:16.595
இரண்டாவது பயிற்சி  போட்டியில் வில்லியம்ஸ் ரெணால்ட்டின் - பாஸ்டர் மல்டோனடோ  - 1:27.476
சனிகிழமை நடந்த - மூன்றாவது பயிற்சி போட்டியில் , பெராரியின் - பெர்னாண்டோ அலோன்சா - 1:16.014

(Picture Old)
தகுதி போட்டி
Q1ல், இருபத்தி நான்கு கார்களில் மிக அதிவேகத்தை பதிவு செய்ததும் 107% நேரத்தை நிர்ணயம செய்தது .இந்த களத்தின்  r வேக நாயகன் கிமி ரைகொணன் - 1:15.693 + (107%) 0.5.298 =  1:20.991.இந்த நேரத்திற்குள்  எல்லோரும் கடந்து விட்டார்கள் .
Q2 ல், பதினேழு கார்களில்  மெக்லரண் மெர்சடீசின் - லீவிஸ் ஹெமில்ட்டன் 1:37.௩௬௫
Q3,ல் கடைசி பத்து கார்களில் முதலிடத்தை தக்கவைத்துகொண்டவர் - பெராரியின் - பெர்னாண்டோ அலோன்சா - 1:40.621
இரண்டாவது - ரெட்புல்லின் செபாஸ்டியன் வெட்டல் ,மூன்றாவது அதே அணியின் மார்க் வெப்பர்.
நம் கணக்கு படி முதல் பத்து  இடங்களில் மூன்று   இடம் ஜெர்மானியர்கள் .2 ல் வெட்டல், 4 ல்  ஷூமேக்கர் ,5 ல் ஹுல்கேன் பெர்க்  .இது மட்டும் போதாது .களத்தின் வெற்றியே இதை உறுதி  செய்யும் .


நாளை மாலை போட்டியை பார்க்குமுன் ஒரு ஆறுதலான செய்தி - மௌரிஷ்ய காஷ் வோத்தின்  -   பெண் டெஸ்ட் டிரைவர்  மரியா  டி வில்லோட தன்னுடைய சொந்த நாட்டிற்கு அனுப்பபடுகிறார் .அங்கு அவருக்கு முழு சிகிச்சை கண்காணிப்பில் இருப்பார் என சொல்லபடுகிறது .


நாளை நடக்கும் போட்டியில் இவர்கள் எந்த பக்கம் கை தட்ட போகிறார்கள் என்பது தெரியவில்லை .ஆனால் இவர்களை பார்த்து பலபேர் தட்டுவார்கள்
-

1 comment:

Sugumar Je said...

Nice Writing! Keep going!