உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, July 21, 2012

மார்க் வெப்பர் - சில்வர் ஸ்டோன் நாயகன்

பார்முலா 1 ன் ஒன்பதாவது சுற்று போட்டி 2012 British Grand Prix கடந்த ஞாயிறு ஜூலை 08 ஆம் தேதி Silver stone Circuit ல் நடந்தது .விறுவிறுப்பான கட்டத்தை போட்டிகள் முடிவுகள் எட்டியிருந்தாலும் ,பார்முலா போட்டிகளின் பழைய முடிவுகளை பற்றிய சூத்திரம் இப்போது செல்லுபடியாகாமல் போய் கொண்டு இருப்பது கவனிக்க வேண்டியதாகிவிட்டது .

முதல் மூன்று இடத்தில் தொடங்கிய போட்டியாளர்கள் எப்படியும் கடைசியில் முதலிடத்தை பிடிப்பார்கள் என்பதுவும் DRS மற்றும்  KERS தொழில் நுட்பத்தில் முன்னேறிய அணிகள் மட்டுமே ( சென்ற ஆண்டை போல ) முதலிடத்தை பிடிப்பார்கள் என்ற சமீபத்திய புள்ளி விவரங்கள்கூட கைகட்டிக்கொண்டு நிற்கிறது இப்போது உள்ள நேரத்திற்கு ஏற்றார்போல டயர் தேர்வு தொழில்நுட்பம் .ஆம் இங்கு -  Silver stone Circuit ல் நடந்தபோட்டியின் முடிவுகள் இதுதான் என்று முடிவு செய்து விட்டு பெராரியின் குதிரை சந்தோசமாக ஓடிக்கொண்டு இருந்தபோது இரண்டு முரட்டு காளைகள் அதை பின்னுக்கு தள்ளி அதிர்ச்சி கொடுத்த நிகழ்வை பற்றிதான் இங்கு பேச போகிறோம் .


போட்டிக்குள் பயணிப்போம் ..
இந்திய  நேரப்படி மாலை 5:30 க்கு போட்டி ஆரம்பித்தது .முதல் வரிசை இந்த முறை ஒரு அருமையான களத்திற்கு வெளியே போட்டியாக கருதப்படும் பெராரி - முதலிடத்திலும் , ரெட்புல் ரெனால்ட் - இரண்டாம்  இடத்திலும் ,மெர்சடீஷ் மூன்றாம் இடத்திலும் ( இங்கு இன்னொரு போட்டியாளர் மெக்லரண் மெர்சடீஷ்  மிஸ்ஸிங். ) இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே கேட்டார் ஹாமின் Vitaly Petrov கார்  எஞ்சின்  பிரச்னையால் கலந்து கொள்ளவேயில்லை என்பது முதல் சோகம்பார்முலா 1 ன் ஒன்பதாவது சுற்று போட்டி 2012 British Grand Prix கடந்த ஞாயிறு ஜூலை 08 ஆம் தேதி Silver stone Circuit ல் நடந்தது .விறுவிறுப்பான கட்டத்தை போட்டிகள் முடிவுகள் எட்டியிருந்தாலும் ,பார்முலா போட்டிகளின் பழைய முடிவுகளை பற்றிய சூத்திரம் இப்போது செல்லுபடியாகாமல் போய் கொண்டு இருப்பது கவனிக்க வேண்டியதாகிவிட்டது .
அணிவீரர்கள் வரிசை
1.பெர்னாண்டோ அலோன்சா ,2.மார்க் வெப்பர் ,3. மைக்கேல் ஷுமேக்கர் ,4.செபாஸ்டியன் வெட்டல் ,5.பிலிப் மாசா ,6.கிமி ரெய்கொணன் ,7.பாஸ்டர் மல்டோனடோ ,8.லீவிஸ் ஹேமில்டன் ,9.ரோமின் க்ரோஜியன் ,10.பௌல் டி ரெஸ்டா .
முதல் சுற்று ..
அலோன்சா மிக நம்பிக்கைக்குரிய துவக்கத்தை ஆரம்பிக்க ,அதை முறியடிக்க வெப்பர் ஒரே நேர்கோட்டில் முந்த முயன்று மெல்ல பெர்ராரியின் காரை தொட்டு விட்டு முதலிடத்தை பிடிக்கும் முயற்சியை திரும்ப பெற்றுக்கொண்டார் .பௌல் டி ரெஸ்டா டயர் பஞ்சர் .மெல்ல பிட் லேன் திரும்பிய அவரின கார்கேரேசுக்குள்  தஞ்சம் புகுந்தது 

எந்த வித குழப்பமும் இல்லாமல் அவரவர் இடத்தை முதல் ஐந்து வீரர்களும் தக்க வைத்துகொள்ள ,அடுத்த ஐந்து இடத்தில் ரோமின் க்ரோஜியன் சற்று ஒரு சுழற்சியில் ஒன்பதாம் இடத்தை இழந்து பின் தங்கினார் .


இரண்டாவது சுற்று ..
பதினாறாம்  இடத்தில் தொடங்கிய மெக்ளரனின்- ஜென்சன் பட்டன் ஒரே தாவலாக பதினான்கில் வந்து கொண்டு இருந்தவரை பின்தங்கிய க்ரோஜியன் போட்டிக்கு போட்டியாக முந்த முயற்சித்தார் முடியாது போகவே தன்னுடைய Soft Compound டயரை கழற்றி வீசிவிட்டு Hard Compound டயரை தேர்வு  செய்தார் .இது ஒரு நல்ல முடிவுதான் அடுத்து பத்து சுற்றுக்கு பிறகு தேர்வு செய்ய வேண்டியதை   இப்போது செய்துவிட்டார் .


மூன்றாவது சுற்று ..
வெட்டலின் நான்காம் இடத்தை வெகு முனைப்பாக கைப்பற்றும் முயற்சியில் ஐந்தாம் இடத்து மாசா முயற்சிக்க ,இரண்டு கார்களும் பல வளைவுகளில் ஒரே கோட்டில் Wheel to wheel போட்டியிட்டுகொண்டன ..இந்த பல பரிட்சையில் வெட்டலின் Front wing ன் ஒரு சிதைவு பறந்து போவது தெரிந்தது .மிகப்பெரிய சேதம் தவிர்த்து கொண்டார்கள் .


ஏழாவது சுற்று ..
நான்காம்  இடத்து மாசா  ஏழாம் Luffield வளைவிலும் பதிமூன்றாம் Chapel முனையிலும் மிக நெருக்கமாக வந்து முந்த தீர்மானித்தார் .முடியவில்லை .ஆனால் மெர்சடிசீன் சூமேக்கர்  தடுப்பாட்டம் செய்தாரே தவிர இது நீடிக்காது என்பது புரிந்தது .மெர்சடிசீன் வேகம் பெர்ராரியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க தயங்குவது நல்லதல்ல .


பதினோராவது சுற்று ..
இப்போது வெட்டலின் கார் டயர் மாற்றத்திற்கு வந்தது .காரணம் சில திட்டங்கள் ரெட்புல் அணியிடம் இருக்கிறது .இப்போது வெட்டலின் டயர் தேர்வு Hard Compound .மீண்டும் வெட்டல் பதினைந்தாம் இடத்தில் தொடர ,,இந்த தருணத்தை பயன்படுத்த காத்திருந்த மாசா இப்போது மூன்றாம் இடத்து ஷூமேக்கரை முந்தினார் .
 பதிமூன்றாம் சுற்று ...
சாபர் பெர்ராரியின் - Sergio Pérez - வில்லியம்ஸ் அணியின் - Pastor Maldonado இருவரும் டயர் மாற்றி வெளியே வந்தவர்கள் ஒரே துரத்தலாக இருக்க அது விபத்தில் முடிந்தது .வளைவில் மிக மோசமாக செர்ஜியோ பெரஸ் கார் தாக்கப்பட்டது .ஸ்டூவர்ட் சட்டப்படி சுமார் எட்டாயிரம் ஈரோ அபராதத்தை சந்தித்துள்ளார் மல்டோனடோ ! அது மட்டுமல்ல இந்த விபத்தை பற்றி பாதிக்கப்பட்டு வெளியேறிய பெரஸ் ,மால்டோனடோ மிக ஆபத்தானவர் என வருணித்துள்ளார் . ஆஸ்ட்ரேலியா போட்டியில் இவர் புண்ணியத்தில் லோட்டஸ் அணியின் ரோமின் க்ரோஜீயன் வெளியேறினார் அடுத்து மொனாக்கோ ரேசில் இதே பெர்ஷுடன் அதர்க்கு அடுத்து ஐரோப்பிய போட்டியில்  ஹேமில்ட்டன் .. நீண்டு கொண்டே போகிறது இவரின் மோதி விளையாடும் பணி .அப்படியானால் பெரஸ் சொல்வது "He's a very dangerous driver and he can hurt someone," உண்மைதானோ ?


பதினைந்து ...
மூன்றாம் இடத்தை இழந்த ஷூமேக்கர் உடனடியாக டயர் மாற்றம் வர ,அவரும்  Hard Compound டயரை தேர்வு செய்து விட்டு பதிமூன்றாம் இடத்தில் தொடர ..


பதினான்காம் சுற்று ..
இப்போது மாசாவும்   Hard Compound டயரை தேர்வு செய்து பத்தாம் இடத்தில் தொடர


பதினைந்து ..
இரண்டாம் இடத்து வெப்பர் Hard Compound டயர்மாற்றி நான்காம்  இடத்தில் தொடர ..
ஆலோன்சாவும் டயர் மாற்றம் Hard Compound தேர்வு செய்து மீண்டும் இரண்டாம் இடத்தில் தொடர ..
இப்பொழுது எலாம் இடத்தில் தொடர்ந்து கொண்டு இருந்த வெட்டல் மிக சாதரணமாக ஆறாம் இடத்து ஜான்சன் பட்டனை முந்தினார் .


இப்போது வீரர்களின் வரிசை ..
1.ஹேமில்டன்2அலோன்சா.3.வெப்பர்4.வெட்டல்5.மாசா6.ஷுமேக்கர்7.ரெய்கொணன்8.க்ரோஜியன்9.கோபாயாசி10.ஹுல்பெர்க் முதல் எட்டு இடங்கள் பிய்த்து போட்டது போல சற்று இடம்  மாறியிருந்தார்கள் .


பத்தொன்பது ..
ஹெமில்டனின் முதலிடம் நிலைக்கவில்லை ..மாசா இப்போது முதலிடம் .காரணம் இந்த ஆண்டில் பெர்ராரி எஞ்சினின் பிரமாதமான முன்னேற்றம் மெக்ளரனில் இல்லை . ஹெமிடன் காரின் டயர் Hard Compound மாற்றபடாததால் , களத்தின்  31“°C”  வெப்ப மாற்றத்தோடு போராடிக்கொண்டு இருந்தது .


இருபத்தி ஒன்று
இனி என்னால் பொறுக்க முடியாது என்று கதறிய  ஏழாம் மாற்றிய அவருக்கு இப்போது Soft Compound டயரை தேர்வு செய்தார்கள் .ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடிக்கும் திட்டம் இப்போது மெக்லரண் அணியிடம் இருந்தது .எந்த இடம் ?


இருபத்திநான்கு ..
ரைகொணன் , ஹேமில்டன் இப்போது முறையே  ஆறாம் ஏழாம் இடத்து இருவரும் அந்த இடத்திலிருந்து ஷூமேக்கரை பின்னுக்கு தள்ளி ஐந்தாம் ஆறாம் இடத்தை அடைந்தார்கள் .


இருபத்தி ஒன்பது ..
 ஹேமில்டன் திடீரென டயர் மாற்றத்திற்கு வந்து மீண்டும் இப்போது  Hard Compound டயரே தேர்வு செய்து பனிரெண்டாம் இடத்தில் தொடர ..


முப்பத்தி ஒன்று ..
இப்போது வெட்டல் ,ஜென்சன் பட்டன் ,வெப்பர் மூவரும் ஒருவர் பின்னால் ஒருவராக டயர் மாற்றம் வந்தாலும் மூவருமே இம்முறை தேர்வு செய்தது  Hard Compound டயர் .ரெட்புல்லை பொறுத்தவரை எதோ முடிவு செய்து விட்டார்கள் .


முப்பத்தி நான்கு + ஐந்து .
கொபாயாஷி ஆறாம்  இடத்து ஷூமேக்கரை பின்னுக்கு தள்ள இனியும் தாமதம் வேண்டாம் என்று முடிவு செய்த ஷூமேக்கர் இந்த சுற்றின் முடிவில்Hard Compound  டயர் மாற்றம்  செய்ய பதினோராம் இடத்தில் தொடர ,அவருக்கு முன் ஐந்தாம் இடத்து ரைகொணன் Hard Compound ஐ மாற்றி பத்தாம் இடத்தில்  தொடர்ந்தார் .



முப்பத்தி எட்டு .-
ஒரு கேள்வி குறி ?
முதலிடத்து அலோன்சா இப்போது டயர் மாற்றம் .ஆனால் தேர்வு செய்தது  Soft Compound ஐ .இது என்ன குழப்பம் .நல்லாதானே போய்கொண்டு இருந்தது ? ஆனால் மீண்டும் முதலிடத்தில் தொடர்ந்தார் .ஒருவேளை எந்த நேரமும் மார்க் வெப்பரால் தனக்கு பிரச்சனை ஏற்படும்  என்று முன்னேற்பாடாக இருக்கலாம் .இருந்தாலும்    Soft Compound ஐ பொருத்தவரை - களத்திற்கும் காருக்கும் இடையே உள்ள பிடிப்பை ( Grip ) அதிகமாக்கும் , ஆனால் விரைவில் தேயும் , வெப்பத்தை தாங்கும் தன்மையுடையது .அதனால்தான் தகுதி சுற்றிலும் , ரேஸின் துவக்கத்திலும் வளைவுகளை - இதன் நெகிழ்வுதன்மைக்காகவும்   ( Flexible ) , வேகத்தை அதிகபடுத்த போன்ற காரணங்களுக்காக இது உபயோகப்படுத்தபடுகிறது .ஆனால்  Hard Compound  அப்படியல்ல.இது தேயும் தன்மை குறைவு ஆனால்  மேற்ப்படி சமாச்சாரங்கள் இல்லை எனவே இந்த தேர்வில் ஒரு கேள்வி குறி  இருக்கிறது ..




தடங்கலுக்கு வருந்துகிறோம் - இது விளம்பரநேரம் ) 


தற்போதைய ஜென்சன் பட்டனின் புள்ளிபட்டியலில் பின்னடைவை நம் Commercial Break குக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்




நாற்பத்தி ஐந்து ..
இது ஒரு முக்கியமான சுற்றாக வருணிக்க படுகிறது .ஆம் இந்த சுற்றில் ரெட்புல்லின் அணி தலைவர் Christian Horner டமிருந்து இரண்டாம் இடத்து மார்க் வெப்பருக்கு - "அது கமான் வெப்பர்" அலோன்சாவை இப்போது கடக்கும் தருணம்  என்பதுவே .


நாற்பத்தி ஆறு ..
அலோன்சாவுக்கு பின்னால் ஏழு காரும் Hard Compound - இப்போது ஆலோன்சாவுக்கும் வெப்பருக்கும் இடையே உள்ள தூரம் மூன்று வினாடிகளில் இருந்து மெல்ல குறைய தொடங்கியது ..


நாற்பத்தி எட்டு ..
ஆம் .ஆலோன்சாவின் தவறான டயர் தேர்வுக்கு பலன் கிடைத்தது .அலோன்சாவை இன்னும் நான்கு சுற்றுக்கள் மீதம் இருக்கும்போது ரெட்புல்லின் அணி கட்டளையை வெப்பர் நிறைவேற்றினார் .இரண்டாம் இடத்து அலோன்சாவை வெட்டல் விடுவாரா ?


ஐம்பது ..
வேட்டளிடம் இரண்டாம் இடத்தை தரகூடாது என்பதில் அலோன்சா மிக பாதுகாப்பாக இருக்க ..மாசாவின் நான்காம் இடத்தை குறிவைத்த ரைகொணனை காமிராக்கள்  உன்னிப்பாக கவனிக்க ..


ஐம்பத்தி ஒன்று..
Silver stone Circuit ல் நடந்தது .விறுவிறுப்பான கட்டத்தை போட்டிகள் முடிவுகள் எட்டியிருந்தாலும் ,பார்முலா போட்டிகளின் பழைய முடிவுகளை பற்றிய சூத்திரம் இப்போது செல்லுபடியாகாமல் போய் கொண்டு இருப்பது கவனிக்க வேண்டியதாகிவிட்டது .
ஐம்பத்தி இரண்டு கடைசி சுற்று ..


முதலிடம் .
ரெட்புல்லின் மார்க் வெப்பர்.கடந்த ஆண்டின் 19 போட்டிகளில் கடைசி பிரேசில் போட்டியில் மட்டுமே முதலிடம் பிடித்த வெப்பர் ,இந்த ஆண்டு ஒன்பது போட்டிகளில் இரண்டு முறை முதலிடம் வந்து இருக்கிறார் .இதுவரை 116 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் .35 வயதான மார்க் ஆலன் வெப்பரின் இந்த முதலிட வெற்றி ஒன்பதாவது முறையாகும் .கடந்த பதினோரு  வருட பார்முலா 1 வாழ்கையில் இந்த ஆண்டு அவருக்கு சிறந்த ஆண்டாக உள்ளது .
இரண்டாவது இடம் .
பெராரியின் - பெர்னாண்டோ அலோன்சா .மிக அருமையான தன்னுடைய நம்பிக்கையில் அலோன்சா இந்த ஆண்டில் ஓட்டுனர்களில் முதலிடத்தில் 129 புள்ளிகளுடன் இருக்கிறார் .
மூன்றாவது இடம் ...
ரெட்புல்லின் - செபாஸ்டியன் வெட்டல் ..இந்த ரேசில் பெற்ற 15 புள்ளிகள்மூலம் 100 புள்ளிகளை   F1 - ல்செஞ்சரி அடித்தார் .


வழக்கத்திற்கு மாறாக ***

 * பரிசுகள் பெறும் போடியத்தில் கேமிராக்கள் தயாராகும் முன்னரே வெப்பர் 'போடியம் ஜம்ப்' செய்ய ,அந்த ஜம்பை பலவிதத்தில் வம்பு செய்து போட்டுவிட்டார்கள் அதில் ஒன்று இங்குசர்கஸ் சாகசமாக  .ஆனால் வெப்பர் இந்தவெற்றி தன்னுடையது மட்டுமல்ல என்பதால், மிக சாதரணமாக இருந்தார் ,


* வழக்கத்திற்கு மாறாக , முன்னாள் மூன்றுமுறை F1 சாம்பியன் - Sir John Young 'Jackie' Stewart போடியத்தில் பேட்டிஎடுத்தார்.


* மாசாவும் - வெப்பரும் வெற்றியை பெற்று தந்த அணிக்கு சாம்பெயின் ஸ்ப்ரே செய்வதை விட்டு விட்டு வழக்கத்திற்கு மாறாக போடியத்தில் பரிசு எடுத்து வந்து விட்டு ஓரமாகா நின்று கொண்டு இருக்கும் அழகிகளை  சாம்பெயின் ஸ்ப்ரே மூலம் அபிஷேகம் செய்தார்கள் .





நாம்  முந்தய பதிவில் - Silver stone Circuit - ஏழு அணிகளுக்கு பயிற்சி இடம் என்று வருணித்து இருந்தது போல இந்த முறை  Silver stone க்கு சொந்தமான ஐந்து அணிகளின் எட்டு வீரர்கள் முதல் இடம் மற்றும் பத்து இடங்களை கைப்பற்றி இருக்கிறார்கள் - பெராரியை தவிர (மீதி இருவர்கள் ) 






சென்ற பதிவில் நாம் பிரார்த்திகொண்ட மௌரிஷ்ய காஷ் வோத்தின்  -   பெண் டெஸ்ட் டிரைவர்  மரியா  டி வில்லோட ஆபத்தான நிலைமைகளை கடந்து விட்டார் .சீரான கேம்ப்ரிட்ஜில் உள்ள Addenbrooke’s மருத்துவமனையில் தொடர்  சிகிச்சையில் இருக்கும் அவர் “a critical but stable condition” என்ற நிலையை தாண்ட வில்லை கடந்த புதன் கிழமை இரவு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது .அவரின வலது கண்ணை இழந்து விட்டார் ,முகத்தின் மற்றும் தலைப்பகுதிக்கான சிகிச்சை தொடர்கிறது .மீண்டும் பிரார்த்திப்போம்.

ஸ்பெயின் வெற்றிபற்றிய பதிவில் ( http://f1inindia.blogspot.in/2012/06/blog-post_29.html ) நாம் ஒரு அழகிய போட்டோ பற்றி பேசவில்லை அவர் - Tschumitschewa Xenia ரஷ்ய தேசத்து கவர்ச்சி மாடல் அழகி ஆனால் அது முக்கியமில்லை இப்போது அவர் இப்பொது புள்ளி பட்டியலில் முதிலடத்தில் இருக்கும் பெர்னாண்டோ ஆலோன்சாவின் காதலி - என்பதுவே கூடுதல் தகவல் .கடந்த டிசம்பர் மாதம் பழைய மனைவி Raquel del Rosario வுடனான ஐந்து வருட மணவாழ்க்கையை முறித்துகொண்டவுடன் இப்போது Tschumitschewa Xenia .
இன்று மாலை நாம் சந்திக்கும் முன் இன்னொரு அறியாத முகத்தை பாருங்கள் .சமீபத்தில் நிறைய பார்முலா  வீரகளுக்கு ஓய்வு தரும் நல்ல வீரரின் ! காதலி .ஜெர்மன் கிராண்ட்  பிரிக்ஸ் போட்டியின் தகுதி சுற்றி பற்றி பேசும்முன் இவரை பற்றி யோசிப்போம் 

1 comment:

Sugumarje said...

Tschumitschewa Xenia தகவலுக்கு நன்றி :P