உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, September 15, 2012

லீவிஸ் ஹெமில்டன் இத்தாலியின் வெற்றியாளர்

உலகின் மூத்த இத்தாலியின் -Autodromo Nazionale Monza சர்க்யூட்டில் இன்று நடக்க இருப்பது 62 ஆவது போட்டியாகும் .ஒவ்வொரு ஃ பார்முலா 1 டிரைவரின் கனவும் இந்த களத்தில் வெற்றி பெறுவது என்பது கனவே ஆகும் .எந்த அளவுக்கு மிக பெயர் இருக்கிறதோ அந்த அளவுக்கு இங்கு வெற்றியை அனுபவிப்பது என்பது ஒரு சவால் என்பதில் சந்தேகம் இல்லை .ஒருவித அபார வேகம் இந்த களத்தின் ஆத்மாவாக இருப்பதாலோ என்னவோ இதன் பெயர் The Magic Track எனபடுகிறது .


தகுதி சுற்றில் கிடைத்த வாய்ப்பை பெற்ற வீரர்களின் வரிசை ..
1.லீவிஸ் ஹெமில்டன்,2. ஜென்சன் பட்டன்.3.பிலிப் மாசா ,4.மைக்கேல் ஷூமேக்கர் ,5.செபாஸ்டியன் வெட்டல் ,6.நிக்கோ ரோஷ்பெர்க் ,7.கிமி ரைகொணன் 8.கமோய் கோபயாஷி ,9.பால்டி.ரெஷ்டா,10.பெர்னாண்டோ அலோன்சா ,11.மார்க் வெப்பர்,12.செர்ஜியோ பெரெஸ்
முதல் சுற்று ..
முதலில் கிளம்பிய ஹெமில்டனின் வேகம் இரண்டாவது கிளம்பவேண்டிய ஜென்சனிடம் ஏனோ இல்லை அதி பயன்படுத்தி கொண்ட பிலிப் மாசா அருமையான துவக்கத்தில் இரண்டாவது இடத்தை கைப்பற்றினார்.
நான்காம் சுற்று ..
அத்துடன் விடவில்லை மாசா ,ஹெமில்ட்டனையும் ஒரு கைபார்க்க தொடங்க ..சுதாரித்த அவர்  தக்கவைத்துக்கொள்ள பாடுபட்டார் .வெட்டல் இப்போது ஐந்திலிருந்த ஷூமேக்கரை பின்னுக்கு தள்ளி நான்காம் இடத்திற்கு முன்னேற ,ரோஷ்பெர்க்கும் - சென்னாவும் Wheel to Wheel உரசி கொண்டதில் சென்னாவின் கார் ட்ராக்கை விட்டு கார் வெளியேறி உள்ளே வந்தது .
ஏழாம் சுற்று ..
சென்னா இந்தமுறை டி ரெஷ்டாவுடன் மோதி விளையாட நல்லவேளை இரண்டும் காரும் பத்திரமாக போட்டியை தொடர்ந்தன .
எட்டாம் சுற்று ..
அலோன்சா இப்போது ஐந்தாம் இடத்து ஷூமேக்கரை பின்னுக்கு தள்ளினார் .


ஒன்பதாம் சுற்று ..
டோரோ ரோசொவின் - ஜீன் எரிக் வெர்ஜின் கார் நடுக்களத்தில் தன்னைத்தானே ஒருமுழு சுற்று சுற்றி தொடர.. ரேசை முடித்துக்கொண்டு களத்தை விட்டு வெளியேறியது .முதல் வெளியேற்றம் ..இந்த நிகழ்வு மற்ற கார்களின் வேகத்தை மட்டுப்படுத்தும் மஞ்சள் கொடி அசைக்கப்பட்டு விளைவை ஏற்படுத்தியதோடு ,DRS இயக்கம் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது .

பதினோராம் சுற்று ...
மார்க் வெப்பர் தன்னுடைய DRS வலிமையால் 335 கி.மீ உச்சவேகத்தில்  11 ஆம் இடத்திலிருந்து பத்தாம் இடத்து ரெஷ்டாவை பின்னுக்கு தள்ளி அதே வேகத்தில் களத்தை விட்டு Off the Track போக அங்கிருந்து மண் புழுதி மேலே எழும்பியது .இதென்ன கூத்து ? உலக புகழ் பெற்ற ட்ராக்கின் ஓரத்தில் மண்ணுக்கு என்ன வேலை ?
பதினாறாம் சுற்று ..
கிமி ரெய்கொணன் ஏழாம் இடத்தை பிடித்து ,ஷூமேக்கரை பின்னுக்கு தள்ளினார் .ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல மெர்சடீஷை ஃபார்முலா போட்டியில் ஏகத்திற்கு பின்னுக்கு தள்ளுகிறார்கள் .எங்கே போனது மெர்ஷடீசின் பலம் ? தொழில்நுட்ப குறைபாடுதான் என்ன ?
டயர் மாற்றத்திற்கு வந்த ஷூமேக்கர் தேர்வு செய்தது - Hard Compound டயரை .மீண்டு பதினைந்தாம் இடம் ..
பதினேழு ..
ஜென்சன் பட்டன் கார் இப்போது இரண்டாம்  இடம் ..அங்கிருந்த மாசா பின்னுக்கு தள்ளபட்டார்
இருபது ...
மிக வேகமாக ஜென்சனை பிடிக்க முயற்சி செய்த மாசா கடைசியில் பிட் லேன் வந்து Hard Compound டயரை தேர்வு செய்தார் .இப்போது தொடர்ந்த இடம் ஒன்பது .
1.ஹெமில்டன்,2.பட்டன் ,3.வெட்டல் ,4.அலோன்சா ,5.பெரெஸ், 6.வெப்பர் ,7.கோபயாஷி ,8.டி.ரேஷ்டா ,9.சென்னா ,10.ரிக்கார்டியோ .

இருபத்தி ஒன்று ..
வெட்டலும் - ஆலோன்சாவும் ஒரே நேரத்தில் டயர் மாற்றம் வர ,யார் முதலில் வெளியேறுவார்கள் என்ற கேள்விக்கு ரெட்புல் அணி வெட்டலை அனுப்ப ,அதை தொடர்ந்து அலோன்சா ..பிட்லேனை விட்டு முன்னேற முயற்சித்த அலோன்சாவை வெட்டல் பிட்லேன் யுத்தம் நடத்தி எல்லோரின் அதிருப்தியை சம்பாதித்தார் .காரணம் இத்தாலி ஃபெர்ராரியின் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது ..
இருபத்தி நான்கு..
ஹெமில்டன் இப்போது பிட் லேனில் 2.7 வினாடிகளில்  Hard Compound டயரை தேர்வு  செய்து இரண்டாம் இடத்தை தொடர ..அது வரை செர்ஜியோ பெரஸ் முதலிடத்தை பிடித்து கொண்டார் .

இருபத்தியாரம் சுற்று ..
பிட்லேனில் அலோன்சாவை முன்னுக்கு வர தடுத்த வெட்டல் அதை பலமுறை களத்தின் பாதையிலும் செய்ய ,முதல் வளைவில் நிச்சயம் அலோன்சா முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்டபோது ,அலோன்சாவை உரசுவது போல வேட்டலின் ரெட்புல் நெருங்க ,தவிர்க்க நினைத்த அலோன்சா களத்தை விட்டு சுமார் 200 கி.மீ வேகத்தில் மண் பகுதிக்குள் இறங்கி சுதாரித்து வெளியேற ..முற்றிலுமாக தவறான இந்த வெட்டல் நடவடிக்கை ஸ்டூவர்ட்டின் விசாரணைக்கு போனது .வெட்டல் - ஷூமேக்கரை போல நடப்பதாக சிலர் விமர்சிக்கிறார்கள .ஆனால் காலம் வேறு .அன்று இன்றைய நிலையில் சுமார் ஐந்து கேமராக்கள் ரேஸ் காரில் ( பல்வேறு காரணங்களுக்காக )  பொருத்தப்பட்டு கண்காணிக்க படுகிறது .,யாரும் எதிலும் தப்ப வழி  இல்லை .அனாலும் வெட்டல் இந்த வருடம் மூன்றாவது வருட சேம்பியன்ஷிப்பை பெறுவாரோ இல்லையோ நிறைய விமர்சனதிற்கு உட்பட்டு வருகிறார் .
இருபத்தி எட்டு
இப்போது எட்டாம் இடத்து ரைகொணன் - ஷூமேக்கர் பலபரீட்சை .
இருபத்தி  ஒன்பது ..
இரண்டாம் இடத்தில் தொடர்ந்து கொண்டு இருந்த ஹெமில்டன் தனஊடைய காரின் DRS உச்ச வேகமான 340 கி.மீ வேகத்தில் செர்ஜியோ பெரஷை பின்னுக்கு தள்ளி தன்னுடைய இடத்தை தக்கவைத்துக்கொண்டார் .
அதே சமயத்தில் வெட்டலின் மேல் உள்ள கோபத்தை தீர்த்துக்கொள்ள அலோன்சா ஐந்தாம் இடத்தை பிடித்தார் .

முப்பத்தி இரண்டு ..
ஜென்சனின் கார் இப்போது வேகம் குறைந்து களத்தின் ஓரத்திற்கு வந்து நின்றது .காரின் எரிபொருள் செயல் பாட்டில் ஏதோ குறைபாடு .போட்டியை விட்டு வெளியேறிவிட்டது .101 புள்ளிகளை மட்டுமே பெற்று இருக்கும் ஜென்சனின் முதல் மூன்று இடத்து வாய்ப்பு இன்னும் பறிபோகவில்லை .பார்ப்போம் இன்னும் ஏழு போட்டிகள் இதற்க்கு பதில்  சொல்லும் .
முப்பத்தி  மூன்று ..
வெட்டல் இருபத்தி ஆறாம் சுற்றில் அலோன்சா முன்னேற விடாமல் தடுத்த விவகாரத்தின் தீர்ப்பின் படி பிட்லேன் அழைக்கபட்டார் .பெனால்ட்டி .
முப்பத்தி ஐந்து ..
ஆறாம் இடத்து வெட்டல் ஒன்பதாம் இடத்தில் மீண்டும் தொடர நிர்பந்திக்கப்பட்டார்
முப்பத்தி ஆறு ..
செர்ஜியோ பெரெஸ் ஐந்தாம் இடத்திற்கு மிகுந்த போராட்டத்திற்கு பிறகு முன்னேறினார் .
நாற்பதாவது சுற்று ..
மூன்றாம் இடத்து அலோன்சா ஒரு இடம் முன்னேற முயற்சிக்க அங்கு  இருந்த மாசா மிக அழகாக வழிகொடுத்தார்.இப்போது அலோன்சா இரண்டாம் இடம் ..

 1.ஹெமில்டன் ,2.அலோன்சா ,3.மாசா ,4.பெரஸ் ,5.ரெய்கொணன் ,6.வெட்டல் ,7.வெப்பர்,8.டி ரெஷ்டா,9.கோபயாஷி .10.ஷூமேக்கர் .
நாற்பத்தி நான்கு ..
இப்போது DRS இல்லாத பகுதியில் மிக வேகமாக பறந்த செர்ஜியோ பெரஸ் மூன்றாம் இடத்து மாசாவை மிக சுலபமாக பின்னுக்கு தள்ளினார் .வாவ் ! அருமை பெரஸ் .
நாற்பத்தி ஆறு
இப்போது DRS பகுதியில் அலோன்சாவை பின்னுக்கு தள்ளி செர்ஜியோ பெரெஸ் முன்னேற ,ஃபெர்ராரி ரசிகர்களின் நம்பிக்கை உடைத்தார் .என்ன ஒரு அபார வேகம் ?

நாற்பத்தி ஏழு ..
வெட்டல் காரும் பட்டனின் காரை போல களத்தின் பாதையை விட்டு வேகம் குறைந்து ஆல்டர் நேட்டர் பிரச்சனையால் போட்டியை விட்டு வெளியேறியது ,, அணித்தலைவர் Christian horner அதிர்ச்சியில் உறைந்து போனார் .
புள்ளியை பெறாவிட்டாலும் 80% போட்டியை ( 43 சுற்று ) கடந்து முடித்து விட்டதால் இதை 'ரிட்டயர்மெண்டில்' கொள்ளவில்லை   .இந்த ஆண்டு வெட்டலின் ஆவேசம் காரிடமும் வந்து விட்டது .கடந்த வருடம் காரும் வெட்டலும் ஒத்து வந்தது போல எந்த ஒரு டிரைவருக்கும் உலகில் ஒத்து போயிருக்காது .அப்போது காரில் வெட்டல் இருந்தார் இப்போது வேட்டளிடம் கார் இருக்கிறது .

ஐம்பதாவது சுற்று ..
போர்ஸ் இந்தியாவின் நிக்கோ ஹுல்கேன்பர்க் கார் பிரேக் பிரச்சனையால் வெளியேறியது .

ஐம்பத்தி ஒன்றாவது சுற்று ..
மிக நல்ல நிலையில் இருந்த வெப்பர் கார் திடீரென ஸ்பின் ஆனது .தொடர்ந்து எந்த காரும் வராததால் விபத்து எதுவும் நிகழவில்லை .ஆனால் டயர் பஞ்சர் ஆகி இருக்கலாம் .வெட்டல் காரோடு வெப்பர் காரும்  போட்டியை விட்டு வெளியேறியது .

இந்த ஆண்டில கடந்த பனிரெண்டு போட்டிகளில் ரெட்புல் அணி கனடாவில் நடந்த ரேசில் மட்டுமே ஆறு புள்ளிகளை குறைந்த பட்சமாக பெற்று இருந்தது .அதற்கடுத்து இப்போது ஒரு புள்ளிகளை கூட பெறாதது இப்போது  மட்டுமே.
ஐம்பத்தி மூன்றாவது சுற்று ..
செர்ஜியோ பெரெஸ் இப்போது ஹெமில்டனின் முதல் இடத்தை பிடிக்கும் முயற்சியில் இருப்பதை பார்க்க முடிந்தது .ஆனால் இருவருக்கும் இடையில் நான்கு வினாடிகள் இருந்தது .

முதல் இடம் ..

லீவிஸ் ஹெமில்டன் - மெக்லரண் மெர்சடீஷ்.28 ஆவது முதலிட வெற்றியை பெற்று இருக்கும் லீவிஸ் ,இத்தாலியில் இதுவரை முதல் கடந்த 2007 ல் வந்த புதிதில் இரண்டாம் இடம் வந்ததே அதிகபட்சம் .இப்போது அந்த கனவும் நிறைவேறிவிட்டது .
இரண்டாம் இடம் ..

செர்ஜியோ பெரெஸ் ..சாபெர் பெர்ராரி .இந்த களத்தை Magic Track என்பதை நிருபித்து விட்டது .12 ஆம் இடத்தில் ஆரம்பித்த பெரெஸ் இன்னும் சில சுற்றுக்கள் இருந்திருந்தால் ஹெமில்டனை கூட பதம் பார்த்திருப்பார் போல !அருமை சாபெர் பெர்ராரி அணி மிக உற்சாக கொண்டாட்டத்தில் இருந்தது .
மூன்றாவது இடம் ..

பெர்னாண்டோ அலோன்சா - ஃபெர்ராரி .இத்தாலியின் ஃபெர்ராரி ரசிகர்கள் மனதை காயப்படுத்தாமல் ஆறுதல் வெற்றி தேடி  தந்த அலோன்சாவை இத்தாலி ரசிகர்கள் கொண்டாடினார்கள் .நன்றி சொல்வது போல கூட எடுத்து கொள்ளலாம் .
அலோன்சா தன்னுடைய டிரைவர்களுக்கான சாம்பியன்ஷிப் பாதையில் மிக நலமாக இருக்கிறார் 179 புள்ளிகள் ( அடுத்து இருப்பது லீவிஸ் 142 புள்ளிகள் )


அடுத்த நமது இரவு போட்டி நடக்க இருக்கும் சிங்கபூருக்கு எப்படி போவது வழி  சொல்ல  காத்திருப்பது யாராம் ?

No comments: