உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, October 6, 2012

சிங்கப்பூர் வெற்றி - செபாஸ்டியன் வெட்டளுக்கு.



பொதுவாக சிங்கப்பூரை பற்றி தெரிந்துகொள்ள அநேக வலைத்தளங்களை அந்த நாட்டின் சுற்றுலாத்துறை உருவாக்கி வெளியிட்டுள்ளது .அது ஒவ்வொரு சுற்றுலா விரும்பிகளின் சுவர்க்கம் .ஆனால் நம் ஃபார்முலா 1 பற்றி தெரிந்துகொள்ளவும் அங்கு நடக்கும் அற்புதமான போட்டியின் ஏற்பாட்டு பற்றி அறிந்துகொள்ள எனது போன ஆண்டு பதிவை பார்க்கலாம் - http://f1inindia.blogspot.in/2011_09_01_archive.html


ஃபார்முலா 1 வெற்றி சூத்திரம்
                                     ஃபார்முலா 1 போட்டியில் மூன்று அம்சங்கள் 1.தொழில்நுட்பம் 2 .வர்த்தகம் 3.கவர்ச்சி ,அடங்கியது .இந்த மூன்றையும் வெளிபடையாய் இந்த சிங்கப்பூர்  -   Marina Bay Street Circuit ல் பார்க்கலாம் .நாளை நடக்க இருக்கும் போட்டி நேரம் இந்தியா நேரப்படி மாலை 5:30 ஆனால் சிங்கப்பூரில் இரவு 8:00 . இரவில் நடக்கும் போட்டி .இங்கு இரவில் போட்டி நடத்த முதல் காரணம் முழுக்க ,முழுக்கஇந்த களம்  Street Circuit .போக்குவரத்தை தடை செய்து அதற்குள் சுமார் 70 % போட்டி நடக்கிறது .

முதல் சுற்று ..
லீவிஸ் ஹெமில்டன் தனது சிறப்பான துவக்கத்தை கொடுத்து முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள ,இரண்டாவது இடத்தை தொடரவேண்டிய பாஸ்டர் மால்டோனடோ வேகம் குறைய அந்த இடத்தை மூன்றாவதாக் இருந்த செபாஸ்டியன் வெட்டலும் ,மூன்றாவதாக் ஜென்சன் பட்டனும் தீவிர இடதக்கவைத்தல் போட்டி நடைபெற துவங்கியது
வழக்கம்போல பின்வரிசையில் போட்டா போட்டியில்  தீவிர உரசல்கள் ஏற்பட்டது .
பிலிப் மாசா - விடாலி பெட்ரோவ் மோதல் ,மாசாவின் கார் டயர் பஞ்சர் , பிட் லேன் போனது - அவரை தொடர்ந்து பெட்ரோவ் Front Wing மாற்றப்பட்டது .
பத்தாவது சுற்று ..
வில்லியம்ஸ் அணியின் புருனே சென்னாவின் காரில் முதல் கியரில் பிரச்சனை .இந்த சிங்கபூர் களத்தை ஒரு ஒருமுறை சுற்றி வருவதற்குள் சுமார் 80 முறையாவது கியர் மாற்றங்ககளை செய்யவேண்டிய கட்டாயம் ட்ரைவருக்குரியது .இந்த நிலையில் சென்னாவின் நிலை பரிதாபம் .
பதினோராம் சுற்று ..
வெட்டல் இப்போது தன்னுடைய இரண்டாவது இடத்தை விட்டு முன்னேறும் முயற்சியில் ஒரு பகுதியாக தன்னுடைய Super Soft டயருக்கு விடை கொடுத்துவிட்டு Soft Compound டயரை மாட்டிகொண்டு பனிரெண்டாம் இடத்தில் தொடந்தார் .
பனிரெண்டாம் சுற்று ..
பெர்னாண்டோ அலோன்சா பிட் லேன் .அவரும் Soft Compound வெட்டல் பதினாறாம் இடத்தை விட்டு முன்னேற அந்த இடம் இப்போது ஆலோன்சாவிடம் .
பதிமூன்றாம் சுற்று ..
இப்போது முதலிடத்து லீவிஸ் ஹெமில்ட்டனும் டயர் மாற்றம்
அதற்குள் நான்காம் இடத்தை கைப்பற்றும் போட்டா போட்டியில் வெட்டலும் - கிமி ரைகொணனும் .வெட்டல் தன்னுடைய DRS உச்சவேகமான 293 கி.மீ வேகத்தில் ரைகொணனை பின்னுக்கு தள்ளினார் .

கலை காட்டிய சிங்கப்பூர் ..
 போட்டி ஒருபுறம் இருக்க நாம் இந்த போட்டியின்  புதிய   தோற்றத்தை பார்க்கலாம் .
 தூரத்து பார்வையில் எதோ ஒரு ஒளி வெள்ள காட்டாறு போட்டி களம் முழுவதும் புகுந்து வழிவது போல ஒரு பொய் தோற்றம் தெரிந்தது .அந்த அளவுக்கு பிரகாசம் .காரணம் பொதுவாக மற்ற நாடுகளில் மதியம் இரண்டு மணிக்கு துவங்கும் போட்டி இங்கு இரவு எட்டுமணிக்கு தொடங்குவதால்  இந்த காட்சி ஃபார்முலா வரலாற்றில் புதிய பதிவை கொடுக்கிறது.
களத்தை சுற்றியுள்ள வர்த்தக கட்டிடங்கள் உட்பட அனைத்து இடங்களும் ஃ பார்முலா கார்களின் "வ்வ்ர்ரூம் வ்வ்ர்ரூம்" பேரிரைச்சலால் அதிர்ந்தது .

பதினெட்டு ..
மார்க் வெப்பர் - ஒன்பதாம் இடத்திலிருந்து எட்டாம் இடத்தில உள்ள செர்ஜியோ பேரேஷை பின்னுக்கு தள்ளினார் .

வீரர்களின் வரிசை ..
1. லீவிஸ் ஹெமில்டன்2. செபாஸ்டியன் வெட்டல் 3. ஜென்சன் பட்டன் 4. பாஸ்டர் மால்டோனடோ 5. பெர்னாண்டோ அலோன்சா 6. டி ரெஸ்டா 7. மார்க் வெப்பர்8. டி லா ரோசோ 9. ரோமின் க்ரோசியன் 10.மைக்கேல் ஷூமேக்கர் .


இருபத்தி மூன்று
வெட்டல் மிக ஒரு தீவிர நெருக்கடியை முதலிடத்து ஹெமில்ட்டனுக்கு தந்து கொண்டே இருக்க ,சுமார் இரு வினாடிகள் இடைவெளியில் தொடர அப்போதுதான் அது நடந்தது .ஹெமில்டனின் காரில் திடீர் குழப்பம் சுமார் ஐந்து கார்கள் முன்னேறி செல்ல ,படிப்படியாக வேகம் குறைந்த கியர் பாக்ஸ் பிரச்சனையால் போட்டியை விட்டு மெக்லேரன் மெர்சிடீஷின் MP4 - 27 கார் முற்றிலுமாக  வெளியேறியது .மஞ்சள் கொடியசைக்கபட்டது .
இருபத்தாறு ...
இப்போது அலோன்சா ஒரு புது உத் வேகத்துடன் தொடர்ந்து கொண்டு இருந்தார் பாஸ்டர் மால்டோனடோவை முந்திக்கொண்டு சுலபமாக நான்காம் இடத்தை தட்டி கொண்டார் .
முப்பத்தி இரண்டு ..
அலோன்சாவின் இடத்தை பறித்துகொள்ள, ரோஷ்பெர்க் ,க்ரோஜியன்,மல்டோனடோ என பலரும் முயற்சி செய்ய களம் வெப்பத்தை தவிர்க்க  முடியாமல் தத்தளித்தது ..
முப்பத்தி மூன்று ..
எப்போதெல்லாம் வர்ணனையாளர்களால் பேச படுகிறாரோ அப்போதெல்லாம் நம் நாராயண் கார்த்திகேயன் விபத்துக்குட்படுவது வழக்கமாகிவிட்டது .இங்கும் அதுதான் பதினெட்டாம் வளைவில் திரும்பிய கார்த்திகேயனின் கார் எஞ்சின் வேகம் மிக குறைந்துபோக வண்டி நேராக வளைவு சுவரில் மோதி நின்றது .நல்லவேளை அவருக்கு ஒன்றுமில்லை .காரின் சேதம் அதிகம் .

முப்பத்தி ஆறு ..
வில்லியம்ஸ் ரெனால்ட்டின் -- பாஸ்டர் மால்டோனடோ காரில் ஏற்பட்ட ஹைட்ராலிக் குறைபாட்டால் போட்டியை வெளியேற வேண்டிவந்தது .
முப்பத்தி ஏழு ..
சேப்டி கார் வெளியேற , கார்களின் வேகம் மீண்டும் சிங்கபூரின் காதுகளை பதம் பார்க்க துவங்கிவிட்டது .
முப்பத்தி  எட்டாம் சுற்று ..

STR ஃபெராரியின் ஜீன் எரிக் வெர்ஜின் கார் முன்னாள் சென்ற காரை முந்த தொடரும்போது 14 ஆம் வளைவு வரவே வேகத்தை குறைக்க ,அவர்களை தொடந்து வந்த மைக்கேல் ஷூமேக்கரின் கார் இந்த எதிர்பாராத வேக குறைப்பை எதிர்கொள்ளமுடியாமல் அவரின காரின் பின்பகுதியில் அழுத்தமான தாக்குதலில் ஷூமேக்கரின் கார் மிக பல சேதத்துடன் களத்தை விட்டு வெளியேறி செயல் இழந்து நின்றது .அவரை தொடர்ந்து வெர்ஜின் கார் மிக பல சேதத்துடன் செயல் இழந்து நின்றது .

 
இப்போது ஒரு அற்புதமான் வேக யுத்தத்தின் நிகழ்வில்  இருப்பவர்களின் பார்வைக்கு நடந்தது .
சேதமுற்ற காரிலிருந்து வெளியேறிய ஷூமேக்கர் ஹெல்மெட்டை கழட்டிவிட்டு நிற்க ,அவரை தொடர்ந்து காரை விட்டு வெளியேறிய வெர்ஜின் நேரே ஷூமேக்கரிடம் செண்டு ஏதோ பேசி விட்டு ஒருவரை விட்டு ஒருவர் சபித்துகொள்வார்கள் என எதிர்பார்க்க பட்டது .ஆனால் ஷூமேக்கர் அனுபவத்தை மதித்த வெர்ஜின் அவருடன் நேசமுடன் பேசியது ஒரு நெகிழ்வை ஏற்படுத்தியது .வேண்டுமென்றே நடக்கவில்லை என்பதை இருவரும் உணர்ந்திருந்தார்கள் .

இத்துடன் ஐந்து கார்கள் போட்டியில் இல்லை மீண்டும் Safety Car வந்தது .
நாற்பத்தி ஒன்பது ..
செர்ஜியோ பெரஸ்  - நிக்கோ ஹுல்கேன் பர்கின் காரோடு மோதி Front Wing சேதமுற்றது .
ஐம்பதாவது சுற்று ..
இவர்கள் இருவரின் மோதலில் கோபயாஷி காரும் மாட்டிகொண்டு Front Wing பாதிக்கப்பட்டது .நல்லவேளை போட்டியில் தொடர்ந்தார்கள் ..
ஐம்பத்தி ஒன்று ..
ஹெமில்டனின் வெளியேற்றத்தில் கை விட்டுப்போன முதலிடத்தை குறிவைத்து ஜென்சன்பட்டன் இயங்கிகொண்டு இருக்கும்போது வெட்டலுக்கும்- பட்டனுக்கும் உள்ள இடைவெளி 2.7 வினாடிகள் .
இதே சமயம் பதினோராம் இடத்தில் மார்க் வெப்பர் தந்து DRS - 320 கி.மீ வேகத்தின் உச்சத்தில் பத்தாம் இடது புருனே சென்னாவை பின்னுக்கு தள்ளினார் .
ஐம்பத்தாறு ..
வெப்பர் இப்போது , ஒன்பதாம் இடது ரிக்கர்டியோவை முந்தினார் .
ஐம்பத்தி ஒன்பது ..

முதலிடம் .

செபாஸ்டியன் வெட்டல்- ரெட்புல்  ரெனால்ட் .இந்த ரேஸ் மூலம் இவர் 165 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை நோக்கி முன்னேறி இருக்கிறார்
இரண்டாம் இடம்

ஜென்சன் பட்டன் -மெக்லரண் மெர்சீடிஷின் இவர் இந்த போட்டியின் வெற்றி மூலம் 119 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தை தக்கவைத்துள்ளார் .
மூன்றாம் இடம்

ஃபெர்னாண்டோ அலோன்சா - ஃபெராரி  இவர் தொடர்ந்து( பெல்ஜியம் போட்டியில் விபத்தின் காரணமாக வெளியேறியது தவிர ) புள்ளிகளை பெற்றுவருவதன் மூலம் 194 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார் .இது மட்டுமல்ல இன்னும் ஆறு போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் இவர் முதலிடம் பிடிப்பார் என்பதில் ஃபார்முலா ஆர்வலர்களின் கருத்து .இவரின் உறுதியும்  + ஃபெராரியின் தொழில் நுட்ப எழுச்சியும் இந்த ஆண்டு அவரை மிகவும் முன்னணி படுத்தியுள்ளது .

அணிகளின் பலம் - பலவீனம்
அணிகளை பொறுத்தவரை ரெட்புல் அணி முதலிடம் தக்க வைத்துகொள்ளும் நிலையில் சந்தேகம் வருகிறது .காரணம் அந்த அணியின் மார்க் வெப்பர் ஒரு சுவாரஷ்யம் இழந்து காணபடுகிறார் .297 புள்ளிகளை பெற்று முதலிடம் இருந்தாலும் , அந்த அணி வரும் ஆறு போட்டிகளில் தக்கவைதுகொள்வது கடினமே .

ஃபெராரி அணியின் நிலையுமே அதுதான் .அலோன்சாவை தவிர பிலிப் மாசா மிகவும் குறைந்த திறமையையே வெளிப்படுத்தி வருகிறார் .எனவே அந்த அணி 245 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது .

ஆனால் ,மெக்லரண் மெர்சடீஸ் நல்ல நிலையை நோக்கி சென்று  கொண்டு இருக்கிறது .அந்த அணியின் ஜென்சனும் . ஹெமில்ட்டனும் தட்டி எறிகிறார்கள் .நிச்சயம் அடுத்த ஆண்டு  மெர்சீடிஷின் ஷூமேக்கர் இடத்தை நிரப்ப ஹெமில்டன் செல்லும் முன் இங்கு கோப்பையை பெற்று தருவார் என்பது உறுதி .

ஒரு வேதனையான விஷயம் .

அருமையான பதிவுகளை தந்து  கொண்டு  இருந்த  எனக்கு மிக முக்கியமான பலம்  Manipef1 ( http://www.manipef1.com/ ) அது விடை பெற்று விட்டது விடைபெறும் அந்த வாசகம் மிகவும் வலிக்கிறது .அது
All good things must come to an end they say, but even so, it is with a heavy heart that I today announce the end of the road for Manipe F1 and my own F1 journalism aspirations.

No comments: