உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, October 27, 2012

இந்திய ஃபார்முலா 1 திருவிழா .                               நாளை இந்தியாவில், இந்திய நேரப்படி  பிற்பகல் 3 மணிக்கு Airtel Indian Grand  Prix ஐ  உங்கள் வீட்டில் கால் மேல் கால் போட்டுகொண்டு ரசிக்க தயாராகிவிடுங்கள் .அருமையான போட்டியை இந்த  நேரில் சென்று பார்க்கும் வாய்பை இந்த முறையும் இழந்து விட்டேன் .என் பிரிய நண்பர் ஒருவர் புறப்படட்டு போகலாம் என அழைத்திருந்தார் .ஆனால் என்விருப்பம் வேறு .முன் அனுமதியும் ,சரியான வழிகாட்டுதலும் இல்லாமல் செல்ல மனமில்லை .( அலுவலகத்தில் போராடி விடுமுறை வாங்கி விடலாம் என்பது வேறு விஷயம் ) ஒன்று இந்திய வீரர்கள் இருவரின் மூலமாகவோ அல்லது முக்கிய அனுமதி மோட்டார் கிளப் வழியாகவோ பெற்று போக வேண்டும் .அல்லது ஃ பேஸ்புக் நண்பர் சுகுமாரின் நண்பர் சூனா மானா போன்றவர்களின் (இவர் இப்போது பெர்ராரி அணிக்காக பணிபுரிந்து கொண்டு இருக்கிறார் ) வெளிப்படையாக சொன்னால்  முக்கியத்துவம் இல்லாமால் போனால் யாரையும் நேரில்பார்த்து ஹலோ சொல்லகூட முடியாமல் போகலாம் .அடுத்த ஆண்டு நேரில் சென்று பார்த்து எழுத ஆசை .அதற்க்கு இன்னும் என் பதிவுகள் முக்கியத்துவம் பெற்றால் ( கடினமாக உழைத்து எழுதினால் ) வாய்ப்புகள் வரலாம் .( அல்லது எழுதுவதை நிறுத்தி எல்லோரையும் காப்பாற்றலாம் ).அடுத்த ஆண்டு இலக்கு-  நேரில் போய் எழுத வேண்டும் .சரி, இந்திய போட்டியில் பார்ப்போம் ..
பயிற்சி போட்டி .
                        எனக்கு வேலையே வைக்கவில்லை பயிற்சி போட்டி P1,P2,P3 தகுதி போட்டி Q1,Q2,Q3 எல்லாவற்றிலும் ரெட்புல் ரேனால்ட்டின் -செபாஸ்டியன் வெட்டல் முதலிடம் .அதே போட்டி வரிசையில் முதல் இரண்டு இடம் ரெட்புல் அணிக்கு அடுத்த இரண்டு இடம் மெக்லரண் மெர்சடீஷ் அணிக்கும் ,அதற்க்கு அடுத்த இரண்டு இடம் ஃபெர்ராரி அணிக்கும் மிக அபூர்வமாக அமைந்து இருக்கிறது .போட்டியும் அற்புதமாக இருக்கும் .சென்ற முறை செபாஸ்டியன் வெட்டல் இந்திய கிராண்ட் பிரிக்ஸ் நாயகன் .அது மட்டுமல்ல சென்ற ஆண்டு அவர் அந்த போட்டியில் சாம்பியன் பட்டத்திற்கு தகுதி பெற்றுவிட்டார் .ஆனால் இந்த ஆண்டு இன்னும் அது உறுதி பெறவில்லை .


 சரி இந்திய போட்டியின் ஏர்டெல் அழகிகளை பார்க்கலாமா ?

No comments: