உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Friday, November 16, 2012

இந்திய ஃபார்முலா 1 - நூறாவது பதிவு ..


நூறாவது பதிவு ..
கடந்த மூன்று  ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் ஃபார்முலா 1 ரேஸ் நடக்க போகிறது என்ற விஷயத்தை அறிந்து - பதிவுலகத்தில் என்னை அறிமுகபடுத்தி கொண்டு, நண்பர் சுகுமாருடன் கைகோர்த்துக்கொண்டு ஆரம்பித்த பயணம் இது ..இன்று அதே இந்திய மண்ணின் இரண்டாவது போட்டியில் - 100 ஆவது பதிவில் நிற்கிறது . பல இழப்புகளை கடந்து இந்த பதிவு பயணம் தொடர்ந்தாலும் என் ஆசை ஒரு முழு வடிவம் இந்த பதிவுகள் அடைந்து இருப்பதாக நான் நினைக்கவில்லை .எழுத வேண்டியது என் பின்னே - என்னை துரத்தி கொண்டே இருப்பதை என்னால் உணர முடிகிறது .


இந்திய ஃபார்முலா 1

முதல் சுற்று ..
ஆபத்தான இரண்டு அணிகளால் நாம் எந்த நேரமும் பின்னுக்கு தள்ளப்படலாம் என்ற நிர்பந்தத்தை சுமந்துகொண்டு ரெட்புல் அணி ,மிக தீவிர உத்வேகத்துடன் தனது வேகத்தை துவங்க எந்த மாற்றமும் இல்லாமல் முன்னுக்கு பாய ,அடுத்த நிலையில் இருந்த மெக்லரண் மெர்சடீஷ் லீவிஸ் ஹெமில்டனும் , ஜென்சன் பட்டனும் யார் முன்னுக்கு பாய்வது என்ற குழப்பத்தில் போட்டிபோட ,இதுதான் சமயம் என்று பெராரியின் - பெர்னாண்டோ அலோன்சா இருவருக்கும் நடுவே பாய்ந்து நான்காம்  இடத்தை தக்கவைத்தது அருமை .இப்போது அலோன்சா மூன்றாம் இடத்தில இருக்கும் ஜென்சனுக்கும் ஐந்தாம் இடத்திலிருக்கும் ஹெமில்டனுக்கும் இடையே ..


 பின்வரிசையில் வழக்கம்போல குழப்பத்திற்க்கு பஞ்சமில்லை .STR பெராரியின் வெர்ஜின் பின்புற வலது டயரில் மோதி பஞ்சர் பண்ண.. ஷூமேக்கர் பிட்லேன் திரும்பி மீண்டும் 24ஆம்  இடத்தில தொடர ..
நான்காம் சுற்று ..
 ஆலோன்சாவின் முயற்சி DRS பகுதி வந்தவுடன் மேலும் அதிகரித்தது .இப்போது ஜென்சனை தன்னுடைய மூன்றாம் இடத்தை ஆலோன்சாவிடம் பறிகொடுத்தார் .ஒரே அணிக்குள் ஏற்பட்ட மோதலை ஃபெராரி பயன்படுத்திகொண்டது.
ஆறாவது சுற்று ..
மீண்டும் ஜென்சன் பட்டனை பின்னுக்கு தள்ள ஹேமில்டன் பாய அடுத்த ஆண்டில் நம்மை விட்டு போக போகிற ஆளுக்கு  விட்டு கொடுப்பமே என்பது போல நான்காம் இடத்தை விட்டுகொடுத்தார் ஜென்சன்
பதிமூன்றாம் சுற்று ..
ஃபோர்ஸ் இந்தியாவின்- நிக்கோ ஹுல்கேன்பர்க் ஒன்பதாம்  இடத்திலிருந்து தனது DRS உச்சவேகமான 318 கி,மீ வேகத்தில் சாபர் பெராரியின் - செர்ஜியோ பெரசை எட்டாம் இடத்தை விட்டு அகற்றினார் .
 இருபதாம் சுற்று ..

இப்போது செர்ஜியோ பெரெஸ்  டயரும் மோதலில் பஞ்சராக-போட்டியை விட்டு வெளியேறியது
முப்பதாவது சுற்று ..
இப்போது டிரைவர்களின் வரிசை ..
1.வெட்டல் ,2.வெப்பர் ,3.ஹெமில்ட்டன் ,4.அலோன்சா .5.க்ரோயஜியன் ,6.ஜென்சன் ,7.மாசா ,8.ரைகொணன்,9.ஹுல்கேன்பர்க்,10.ரோஷ்பெர்க்
முப்பத்தி ஒன்றாம் சுற்று ..
மால்டோனா கார் கோபயாஷி காருடன் மோதியதில் .இரண்டு கார்களின் மோதலில் சற்றே எதிர்பாராத குழப்பத்தில் களத்தின் நடுவே இருக்கும்போது வெட்டலின் கார் இவர்களை கடந்து போனது - ரெட்புல் அணி நிம்மதி பெருமூச்சை விட்டது .
முப்பத்தி மூன்றாவது சுற்று ..
கடந்த எந்த போட்டியிலும் இல்லாத ஒன்று இப்போது நடந்தது ,அது மெக்லேரனின் - ஹெமில்டன் கார் பிட்லேன் வந்தபோது மாற்றப்பட்டது ஸ்டீயரிங் வீல் .அதுவும் 3.3 வினாடிக்குள் .பொதுவாக மெக்லேரனின்  அணியின் செயல்பாடு அந்த அணியின் கார்களுக்கு  ஐந்தாவது சக்கரம் என்பார்கள் .இதை பார்க்கும்போது அது உண்மை என படுகிறது .
நாற்பத்தி இரண்டாவது சுற்று..
 HRT யின் ( நம் நாராயண் கார்த்திகேயன்  அணி ) டி ல ரோசோ கார்  பிரேக் பிரச்சனையால் களத்தை விட்டு விட்டு விலகி பின்புறமாக இழுத்து சென்று ஓரசுவரில் மோதி நின்றது .
நாற்பத்தி எட்டாவது சுற்று ..
ஆலோன்சாவின் நோக்கம் இப்போது  ஏற்கனவே மெக்ளரனின் அணி செய்த செய்த தவறை பயன் படுத்தி கொண்டது  போல இப்போது இரண்டாம் இடத்திலிருந்த ரெட்புல்லின் மார்க் வெப்பரின் வெப்பரின் காரில் KERS வேலை செய்யவில்லை .இந்த பிரச்னை அறிந்த அலோன்சா ஒரே பாய்ச்சலில் முன்னேறி இரண்டாம் இடத்தை பிடித்தார் ஃபெராரி அணி உற்சாகமடைந்தது .
ஐம்பத்தி இரண்டாவது சுற்று ..
 வில்லியம்ஷின் - ப்ருனே சென்னா தன்னுடைய பதினோறாவது இடத்திலிருந்து முன்னேறி பத்தாம் இடத்து ரோஷ்பெர்க்கை பின்னுக்கு தள்ளி முன்னேறினார் .ரோஷ்பெர்க்கால் தன்னுடய காரின் DRS வலிமை புரிந்ததால் சத்தமிலாலாமல் ஒதுங்கிகொள்ள , கிடைக்க வேண்டிய ஒருபுள்ளியும் போனது .

ஐம்பத்தி நான்காவது சுற்று ..
முதலிடத்தில் பறந்து கொண்டு இருந்த வெட்டளுக்கும் இரண்டாவது இடத்து ஆலோன்சாவுக்கும் இடைவெளி 13 வினாடிகள் .ஆனால் வெட்டலின் காரின் அடிப்பகுதியிலிருந்து நெருப்பு பொறிகள் வெளிப்பட்டன ,ரெட்புல் அணி தனது நிம்மதியை இழந்து தவித்து பார்க்க தொடங்கியது ..ஆனால் அலோன்சா - வெட்டளுக்குமிடையே உள்ள இடைவெளி 9.459 வினாடிகள் என்று குறைந்தது .இப்போதும் ஆலோன்சாவின் காத்திருத்தல் தொடங்கியது - அது வெட்டல் காரின் வேகம்மேலும்  குறைய தொடங்கட்டுமென ..

அறுபதாவது இறுதி சுற்று ..


முதல் இடம் .

ரெட்புல்லின் -செபாஸ்டியன் வெட்டல் வெற்றி .அதுமட்டுமல்ல 1989 ஆண்டில் நடந்த ஃபார்முலா 1 போட்டிகளில் ஆண்ட்ரியன் சென்னா  தொடர்ந்து மூன்று  போட்டிகளில் ஆரம்பம் முதல் இறுதி வரை முதலிடத்தில் இருந்து வெற்றி பெற்ற சாதனை இன்று வெட்டளால் முறியடிக்கப்பட்டது . 240 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் இவரின் இடம் இன்னும் மூன்று போட்டிகளில் ஏதாவது இரண்டில் உறுதி செய்யப்பட்டுவிடும் ,

 
இரண்டாவது இடம் .
ஃபெராரியின் நம்பிக்கை நட்சத்திரம் ஃபெர்னாண்டோ அலோன்சா .கடந்த போட்டியில் ஆறு புள்ளிகளுடன் டிரைவர்கள் சாம்பியன்ஷிப் வரிசையில் இரண்டாவது இடத்தில இருந்த இவர் இந்த வெற்றியின் மூலம் 13 புள்ளிகள் இடைவெளியில் அதே இடத்தில .

மூன்றாவது இடம் .
ரெட்புல்லின் - மார்க் வெப்பர் இந்த வெற்றியின் மூலம் தனது நான்காவது இடத்தை வெப்பர் உறுதி செய்கிறாரோ இல்லையோ அணியை முதலிடத்திற்கு கொண்டு சேர்க்க உதவும் .

வாழ்த்து
   
வெற்றி புள்ளியை தொடும் காரை வரவேற்கும் கொடியசைப்பை இந்த முறை இந்தியாவிற்கு துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலம் வாங்கிய Gagan narang பெற்றார் .இந்த வாய்ப்பு ஒரு விளையாட்டு வீரருக்கு கிடைக்கவேண்டும் என்பதை போட்டி நிர்வாகம் நினைத்தது வாழ்த்துதற்கு உரியதாகும் .

வேடிக்கை

இந்த முறை போன ஆண்டை போல போட்டி நடக்கும்போது நாய்கள் குறுக்கே வராது என போட்டி நடத்தும் நிர்வாகம் உறுதியளித்தது வேடிக்கை .
வினோதம் .

82 வயதை நேற்றுடன் கடந்த ஃபார்முலா 1 நிர்வாகத்தின் ரிங் மாஸ்டர் என செல்லமாக அழைக்கப்படும் Bernie Ecclestone இந்தியாவை உங்களுக்கு ஏன் பிடித்திருகிறது என கேட்டபோது காதல் வலையில் உங்களை வீழ்த்திய பெண்ணுடன் வெளியிடம் செல்வது எப்படி ஏன் பிடிக்கிறதோ அதைப்போலத்தான் என குறும்பான பதில் தந்தார் கடந்த சில மாதங்களுக்கு முன்தானே  தனது   மூன்றாவது திருமணத்தை 46  வயது பிரேசிலின்  Fabiana Flosi அழகியை கைபிடித்திருகிறாரே  அப்புறம் ஏன் சொல்லமாட்டார்?

 விறுவிறுப்பு

சமீபத்திய பல போட்டிகளில் பின்னடைவை சந்தித்து கொண்டு இருக்கும் லீவிஸ் ஹெமில்டன் புது உத்வேகம் பெறும் வகையில் அவரின் ஹெல்மெட்டில் Belive in your self enough and anythink is Possiple - ஹெல்மெட் வர்ணம் தீட்டுபவர் ஜசோன் பிளோவேர் ( Jason Flower )  மூலம் ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளது இதற்கு உதவி நம் கருண் சந்தோக் .

வாடிக்கை

                                      கடந்த ஆண்டை விட( 94800 )  இந்த ஆண்டு போட்டி பார்க்கவரும் கூட்டம் குறைந்து விட்டது  .                                                                                                       காரணம் பல ....                                                                                                                                    
     
 அவற்றில் முக்கியமானது இந்திய வீரர்கள் முன்னணியில் இல்லாததது அதோடு  ஃ போர்ஸ் இந்திய அணியின் . செயல்பாடும்தான்.
                                    

   மேலும் முக்கியமானது இந்த போட்டிகள் கார்போட்டிகளில் ஆர்வம் இருக்கும் நகரங்களை தேர்வு செய்யாதது .


                                         கிரிகெட்டிலிருந்து வெளியேறி வேறு ஒரு இடத்திற்கு வர விரும்பும் மக்களை இந்த போட்டிகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் .
                        

                  பணக்ககார போட்டி இது என்ற திரை விலகுமோ அன்று இங்கு வரவேற்பு கூடும்

No comments: