உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, November 24, 2012

அபுதாபி - கிமி ரைகொணன்


கடந்த நவம்பர் 4 ஆம் தேதி, அபுதாபியின் -  அழகிய யாஷ் மெரீனா சர்க்யூட்டில் நடை பெற்றது .இது இந்த ஆண்டின் 18 ஆவது சுற்று போட்டி .இந்த போட்டியில் அனேகமாக ஃ சாம்பியன்ஷிப்பை பெரும் அணி தீர்மானிக்கப்பட்டுவிடும் அது ரெட்புல் ரெனால்ட் என்பது மாற்று கருத்து இல்லை .ஆனால் டிரைவர்களுக்கான ஃ சாம்பியன் யார் என்பது அடுத்து நடக்க இருக்கும் (18 - நவம்பர் FORMULA 1 UNITED STATES GRAND PRIX )போட்டியில் ஏறக்குறைய தீர்மானிக்கப்பட்டுவிடும்

யாஷ் மெரினாவின் பயிற்சி போட்டி ..
முதல் பயிற்சி -மெக்லரண் மெர்சடீசின் லீவிஸ் ஹேமில்டன் .
2 ஆவது பயிற்சியில் - ரெட்புல் ரெனல்டின் -செபாஸ்டியன்  வெட்டல் .
3 ஆவது பயிற்சி போட்டியில் - மீண்டும் லீவிஸ் .


யாஷ் மெரினாவின் தகுதி போட்டி ..
Q 1- 107% நேர நிர்ணயம் செய்தவர் அதே -மெக்லரண் மெர்சடீசின் லீவிஸ் ஹேமில்டன் .முதலிடம் .
Q 2 -இரண்டாவது தகுதியிலும் - லீவிஸ் ஹேமில்டன் .

Q 3 - உண்மையில் இந்த சுற்றில் முதலிடம் பிடித்தது , ரெட்புல் ரெனல்டின்-செபாஸ்டியன்  வெட்டல் .ஆனால் லீவிஸ் ஹேமில்டன் முதலிடம் .

ஆனால் , மூன்றாவது போட்டியின் முடிவில் அவருடைய காரின் எரிபொருள் மாதிரி தருவதில் சிக்கல் ஏற்படவே அதிலும்  லீவிஸ் ஹேமில்டன் முதலிடம் .

இரண்டாவது இடத்தில ரெட்புல் ரெனல்டின்- மார்க் வெப்பர் .
மூன்றாவது , வில்லியம்சின் - பாஸ்டர்  மல்டோனடோ .


முதல் சுற்று ..
லீவிஸ் ஹேமில்டன் அபாரமான துவக்கத்தை தந்தார் .
மூன்றாம் சுற்று ..
                                 கடைசி இடத்தில துவங்கிய ரெட்புல்லின் வெட்டல் மிக அசூரத்தனமான வேகத்தை காட்டினார் .அது 24 ஆம் இடத்திலிருந்து  18 ஆவது இடத்தை நோக்கி இழுத்துவந்தது .ஆனால் வலது புற விங் சேதமடைந்தது .ஒரு வேலை மீண்டும் ரேசில் கலந்து கொள்ள வருவாரா வெட்டல் என்ற சந்தேகத்தை தீர்த்து மீண்டும் ,மீண்டு வந்தார் .
நான்காம் சுற்று ..
வெட்டலின் வேகம் நேரம் ஆக ,ஆக வெறித்தனமாக இருந்தது என்றே சொல்லலாம் இப்போது 16 ஆம் இடம் .
ஐந்தாம் சுற்று
வெட்டல் இப்போது 14 ஆம் இடம் .
 ஏழாவது சுற்று ..
கடைசி பரிட்சை


அது போல மோதல்கள் துவங்கின .ஃபோர்ஸ் இந்திய அணியின் இரண்டு கார்களும் ,புருனே சென்னா ,ரோமின் க்ரோஜியன் ,நிக்கோ ரோஷ்பர்க் என மோதல்களின் பட்டியல் நீண்டு விட்டது .18 ஆவது ரேசில் இப்படி போட்டி போட்டு கொள்ள பல காரணம் அணிகளின் புள்ளி பட்டியலில் இணைத்துகொள்வது ,டிரைவர்கள் அடுத்த அணிக்கு தாவும்போது கௌரவத்தை பெற ..என இருந்தாலும் இதெல்லாம் ஏதோ முதல்முறையாக பப்ளிக் எக்ஸாம் சந்தித்தவன் கடைசி பரிட்சையாவது நன்றாக பண்ணவேண்டும் என்ற ஆர்வத்தைப்போல நடந்துகொள்ள தொடங்கியது போல இருக்கிறது .
முதல் சுற்றில் ,போர்ஸ் இந்தியாவின் நிக்கோ ஹுல்கேன்பர்க் ,வெளியேறினார். ஏழாவது சுற்றில் நிக்கோ ரோஷ்பெர்க் .நமது நாராயண் கார்த்திகேயன் என பட்டியல் துவங்கியது ..

பதினேழாவது சுற்று ..
மீண்டும் க்ரோஜியனுடன் முந்திசெல்ல முயன்ற வெட்டல் ட்ராக்கை விட்டு வெளியேறி கட்டுப்பாட்டை இழந்து   முயன்று . முடியாமல் ஓர சுவரில் மோதியது வெட்டலின் கார் .மீண்டும் பிட்ளேன் .மீண்டும் 21 ஆவது இடம் .சரிதான் இன்று வெட்டல் தனக்காக போராடிக்கொண்டு இருக்கிறார் .அணி ஏற்கனவே சாம்பியன் ஆனால் டிரைவர் சாம்பியன் அலோன்சாவுக்கு போய்விடக்கூடாதே !


பத்தொன்பதாவது சுற்று ..
முதலிடத்தில் அற்புதமான வேகத்தில் இருந்த மெக்லரண் மெர்சடீசின் லீவிஸ் ஹேமில்டன் காரில் எரிபொருள் அழுத்த குறைபாடு .கார் களத்தை விட்டு மெல்ல வெளியேறியது .சூழ் நிலை மெல்ல  இப்போது முதலிடத்தில் லோட்டசின் - கிமி ரைகொணன் முதலிடம் .

21 ஆம் சுற்று ..
மூன்றாம் இடத்தில இருந்த அலோன்சா இப்போது பாஸ்டர் மல்டோனாவை மூன்றாம் இடத்திற்கு தள்ளினார் .

23 ஆவது சுற்று ..
இப்போது மூன்றாம் இடத்து மல்டோனாவை வேப்பர் முந்த முயன்று மோதிகொண்டார் .நல்லவேளை ஒரு சுற்று சுற்றி பழைய படி கார் ட்ராக்கில் ..

26 ஆவது சுற்று ..
மீண்டும் இப்போது வெப்பர் மாசாவின் காரின் டயருடன் - டயர் உரசினார் ..
பின் வரிசையிலும் அநேக கார்கள் கடிவாளம் இல்லாத குதிரைகளாக உரசுவதும் ,மோதுவதுமாக கடந்து கொண்டு இருந்தது

31 ஆவது  சுற்று ..
இப்போது தன்னை தொடரும் வெட்டளுக்கு  வெப்பர் வழிகொடுக்காமல் தவிர்த்து பிட் லேன் வந்தார் .

 
39 ஆவது சுற்று க்ரோஜியன் - பெரஸ் மோதலில் குழம்பிய க்ரோஜியன்  கார் நேரடியாக வெப்பரின் காரில் இடது டயரை பிடுங்கியது .இரண்டு காரும் வெளியேறியது .இந்த மோதலை ஏற்படுத்திய பெரசுக்கு 10 வினாடிகள்                ஃ பெனால்டி என்பதாக நிறுத்தி அனுப்ப பட்டது.

உற்சாக பானம் தயாரிக்கும் கம்பனி ரெட்புல் என்பதை வெட்டல் வேகத்தில் தெரிகிறது .அற்புதமான வேகம் .மிரளவைக்கிறது .இந்த  ஆண்டுக்கு பிறகும் ரெட்புல்லின் சாம்பியன்ஷிப் பயணம் தொடரும்போல தெரிகிறது .ரெட்புல்லின் சுலோகம் பானங்களின்  ' Red Bull's Not the Only Thing That Gives You Wings என்பது உண்மைதானோ !

44 ஆவது சுற்று ..
நான்காம் இடத்து வெட்டளுக்கும் - மூன்றாம் இடத்து பட்டனுக்கும் இடையே போராட்டம் வலுப்பெற்றது .இடைவெளி 0.584 வினாடிகள் ஆனது .
 இதே போல முதலிடத்து ரைக்கொணன் - இரண்டாம் இடத்து ஆலோன்சாவிர்க்கு இடையேயுள்ள யுத்தம் 3 வினாடிகள் வித்தியாசத்தில் தொடர்ந்தது .ஆலோனாவின் செயல்பாடு அற்புதமாக இருந்தது .
 52 ஆவது சுற்று வெட்டல் தன்னுடயான அற்புதமான செயல்பாட்டில் ஜென்சன் பட்டனின் மூன்றாவது இடத்தை பறித்தார் .இப்போது அலோன்சாவுக்கு நெருக்கடி

54 ஆவது சுற்று ஆலோன்சாவிடம் ஒரு தீவிர வேகம் வெளிப்பட்டது .எப்படியும் முதலிடம் வந்து விடும் என்பது ,காரணம் இப்போது ஒரு வினாடி இடைவெளி மட்டுமே இருந்தது ,
மொத்தம் 17 கார்கள் மட்டுமே போட்டியில் இருந்தது ...

55 ஆவது - கடைசி  சுற்று .
திரைப்படத்தின் உச்சகட்ட காட்சியைப்போல ரைகொணன் - அலோன்சா வேக யுத்தம் முடிவுக்கு வந்தது 55 சுற்றுக்களை விட இன்னும் சுமார் நான்கு சுற்றுகள் அதிகம் இருந்திருந்தால் கூட முடிவுகள் வேறுமாதிரியாக இருந்திருக்கலாம் !


 முதலிடத்தில் ..
கிமி ரைகொணன் .
கடந்த 2009 ஆம் ஆண்டு  போட்டியில் முதலிடம்  வந்ததர்க்கு பிறகு இதுவே  முதலிடம் ( 2010 - 2011 எந்த போட்டியிலும் பங்குபெறவில்லை )

 இரண்டாவது இடம் ..


ஃ`பெர்னாண்டோ அலோன்சா 0.8 வினாடிகள் வித்தியாசத்தில்.முதலிடம் பறிபோனது, பெரிய விஷயம் இல்லை அடுத்த போட்டியாளர் வெட்டல்  மிக அருகில் 10 புள்ளிகள் முன்னணியில் இருக்கிறார் .

மூன்றாவது இடம் ..

செபாஸ்டியன் வெட்டல் - இந்த ஆண்டில் ரெட்புல்லின் சாம்பியன்ஷிப்பை வாங்கி தந்துவிட்டார் .ஆனால் தன்னுடைய சாம்பியன்ஷிப் புள்ளிக்காக  போராடிக்கொண்டு இருக்கிறார் .


            அடுத்த அமெரிக்காவின் கரண்ட் பிரிக்ஸ் இரவு இந்திய நேரப்படி நள்ளிரவு ..
                  ஆனால் முடிந்த அந்த போட்டியின் பதிவை வரும் பிரேசில் போட்டியுடன் பதிவு செய்யும் நிலை வந்து விட்டது .

No comments: