உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, October 29, 2011

இந்திய பார்முலா 1 வரலாற்றில் முதல் பதிவு

ந்திய பார்முலா 1 வரலாற்றில் முதல் பதிவு.




இந்திய புத் இன்டர்நேஷனல்சர்க்யூட்டில் இரண்டாவது பயிற்சி போட்டியும் முடிந்துவிட்டது நேற்று (28.10.2011) மாலை இன்று நடக்க வேண்டிய மூன்றாவது பயிற்சி போட்டியும் ,முடிந்து விட்டது .அதன் பிறகு நடந்த தகுதி சுற்றுக்கான முக்கியமான போட்டி முடிவுகள் வந்து விட்டது .



இந்திய களத்தை பற்றிய சகல விசயன்களும்  விரிவாக ஆராயப்பட்டுவிட்டது.



செபாஸ்டியன் வெட்டல் ...
சவால் மிகுந்த ,அதே சமயம் சுவாரஸ்யமாக களம் வடிவைமைக்கப்பட்டுள்ளது,மூன்றாம்-நான்காம் வளைவுக்கிடையேயுள்ள   நீண்ட அதிவேக பாதை முந்தி செல்ல அருமையானதாக உள்ளது .


மார்க் வெப்பர் ....
வளைவுகள் மிக அருமையாக ,சவால் மிக்க பார்முலா1  போட்டுக்குரிய வகையில் அமைக்க பட்டுள்ளது .மூன்றாம் வளைவை தவிர மற்றுள்ள வளைவுகளை ஐந்தாம் கியரில் ஓட்டியே கடந்து செல்ல முடியும் என்கிறார் .


லூயிஸ் ஹாமில்டன்...
நான் பார்த்தவரையில் மிக அழகான வேகமும் அதே சமயம் நல்ல பிடிப்புடன்(Grip)  கூடிய
ஓடுபாதைகள் .கள அமைப்பாளர் மிக பாராட்டுக்குரியவர் என்கிறார் .


ஜென்சன் பட்டன் ...
இந்த களத்தின் போட்டியில் பங்கு பெறுவது ரசிக்கும்படியாக உள்ளது .மூன்றாம் மற்றும் ஐந்தாம் எண் வளைவுகள் கடினமாக வளைவுகள் .இந்த களத்தை ரசிக்கிறேன் என்கிறார் .


பெர்னாண்டோ அலோன்சா ...
இது மிக அருமையான களம் .பரந்த அழகான வளைவுகள் .அதை சராசரி வேகத்தில் கடக்கும் படி செய்திருப்பது அருமை என்கிறார்.


பிலிப் மாசா...
மிக அருமையான வளைவுகள் -சிறந்த ஓட்டுனர்கள் மட்டுமே உணரமுடியும் .களத்தின் மிக பல பகுதிகள் அகலமாக இருப்பது முந்திச்செல்லும் வகையில் இருப்பது அருமை என்கிறார் .


நிக்கோ ரோபெர்க் ...
உலகின் மற்றைய புதிய களத்தை போல் இல்லாமல் அழகிய வளைவுகள் உள்ளது .குறிப்பாக இரண்டாம் வளைவின் தாழ்ந்த மற்றும் உயர்ந்த அமைப்பு ரசிக்க வைக்கிறது .


மைக்கேல் ஷூமேக்கர் ...
களத்தின் வடிவமைப்பு அருமை .என்கிறார் .


புருனே சென்னா ...
களத்தின் வளைவுகள் மேலும் மேலும் முன்னேறி செல்ல தூண்டும் வகையில் அமைக்க பட்டு இருப்பது விரும்பும் படியாக இருக்கிறது என்கிறார்.


ஆண்ட்ரியன் சாட்டில் ...
களம் அருமையான வளைவுகளையும் முந்தி செல்லும் வகையிலும் பிரமாதமாக வடிவமைக்க பட்டுள்ளதாக சொல்கிறார் .

கமோய் கொபயாசி ,செர்ஜியோ பெரஸ் ,செபாஸ்டியன் பூமி ,ஜெய்மி அழகுசுரெய் ,ஜர்னோ டருளி ஆகியோரும் ஒத்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் .

களவடிவமைப்பில் மிக பாராட்டுக்களை பெற்றுவிட்டோம் .முதல் படி .வெற்றி .



ஆயிரத்து எழுநூறு கோடி செலவில் கட்டபெற்ற களம் போட்டி பாதையில் எங்கும் தூசி படலங்கள் என்பது ஏகோபித்த ஓட்டுனர்களின் புகார் .
அடுத்து சித்தர்கள் வாழும் பூமியான சதுரகிரியில் பல சித்தர்கள் நாய்கள் உருவத்தில் வழிநடத்துவதாக நம்பிக்கை உண்டு .அது என்னை போல இந்திய பார்முலா 1 கனவுடன் உயிர்நீத்த ஆன்மாக்கள் நாய்கள் வடிவில் களத்தில் பத்தாவது வளைவில் பாய்ந்து வந்ததை ரெனால்ட் அணியின் புருனே சென்னவாவின் பார்வையில் பட்டுவிட்டது .(2008 ஆம் ஆண்டில் இது மாதிரி ஒரு நாய் துருக்கி களத்தின் GP 2 போட்டியில் குறுக்கே புகுந்து ,அவர் கார் முன்பகுதி சேதமடைந்து போட்டியை விட்டு வெளியேறும்படி ஆகிவிட்டது ).எனவே மனிதர் கதி கலங்கி விட்டார் .


உடனே சிவப்புக்கொடி காட்டி போட்டி நிறுத்த பட்டு மீண்டும் அந்த ஆத்மாவை இல்லை நாயை விரட்டிவிட்டார்கள் .இது போட்டி அமைப்பாளரை தர்மசங்கடத்திற்கு தள்ளிவிட்டது .ஆனால் இது அவ்வளவு சீரியஸாக எடுத்துகொள்ள படவேண்டியதில்லை என பார்முலா பெர்மி எச்லச்டோனால் ஆறுதல் படுத்தப்பட்டார் .
(ஒருவேளை அவர் சதுரகிரி பற்றி அறிந்திருப்பாரோ ?).




இந்திய போட்டியின் முடிவுகளை நிர்ணயிக்கும் தகுதி சுற்றுக்கான முடிவுகள் ..
இந்திய களத்திலும் வெட்டலின் கொடிதான் முதல் இடத்தில் நடப்பட்டு இருக்கிறது .1:24.178 நிமிடத்தில் கடந்து மற்றவர்களுக்கு நேர நிர்ணயம் செய்து விட்டார் .

அடுத்து மார்க் வெப்பர் இரண்டாம் இடம் .மூன்றாம் இடம் பெர்னாண்டோ அலோன்சா .நான்காம் இடம் ஜென்சன் பட்டன் .ஐந்து-லீவிஸ் ஹேமில்டன் .கடந்த நேரப்படி இவர் இரண்டாம் இடம் ஆனால் பயிற்சி போட்டியில் மஞ்சள் கொடிக்கு மதிப்பு அளிக்காததால் ஐந்தாம் இடம் .ஆறு -பிலிப் மாசா ,.ஏழு- நிக்கோ ரோச்பெர்க், எட்டு -ஆண்ட்ரியன் சட்டில்,ஒன்பது செபாஸ்டியன் ப்யுமி ,பத்தில் - ஜெய்மி அழகுசுரெய் .




நாளைய சுவாரசியத்தை அறியும் முன் மதியம் மூன்று மணிக்கு போட்டி ஆரம்பிக்கிறது ஆனால் இரண்டு மணிக்கே காண தொடங்கினால் போட்டி பற்றி பல ஆழமான விசயங்கள் அறியலாம் .வாருங்கள் அந்த அற்புத நிகழ்வை .





2 comments:

Sugumarje said...

//இந்திய பார்முலா 1 கனவுடன் உயிர்நீத்த ஆன்மாக்கள் நாய்கள் வடிவில்//
:D
இந்தியாவில் அதும் தினத்தந்தி பத்திரிக்கைகூட F1 பற்றி எழுதியாக வேண்டிய கட்டாயம் வந்து விட்டது குறித்து மனம் மகிழ்கிறேன்... வாழ்க F1, வாழ்க இந்தியா :)
ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டு JAYPEE க்கே :)

Sugumarje said...

இந்திய களத்தில் நடந்த சுவாரசிய செய்திகளை அடுத்த பதிவில் காண ஆர்வமாக உள்ளேன் :)