உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Wednesday, March 27, 2013

Malaysia F1 Hero - செபாஸ்டியன் வெட்டல்


          அழகிய மலேசியாவின் - Sepang International Circuit ல் 24 மார்ச் ஃபார்முலா 1  இரண்டாவது சுற்று போட்டி ஹாயிறு அன்று நடந்தது.சுற்றி பார்க்கவைத்தே காசு சம்பாதிக்கும் திறமை சிங்கப்பூருக்கும் மலேசியாவிர்க்கும் கை வந்த கலை! .அது ஃபார்முலா களத்திலும் நிரூபிக்கப்பட்டுள்ளது .குடைக்குள் மழை போல குடைக்குள் F1 ரசிகர்கள் !. மொத்த அரங்கு 1 லட்சத்து 30 ஆயிரம் மக்களை ஏற்க்கும் வகையில் வடிவைமக்கப்பட்டுள்ளது.


சரி இன்றைய போட்டிக்கு போவோம் .

      வெள்ளி அன்று நடந்த முதல் பயிற்சி போட்டியில் ரெட்புல்-மார்க்  வெப்பர் முதலிடமும் 2 ஆவது ப.போ.லோட்டஸ் ரெனால்டின் -கிமி ரைகொணன்.சனிக்கிழமை நடந்த 3ஆவது ப.போ ரெட்புல்- செபாஸ்டியன் வெட்டல். ஆனால் தகுதி சுற்றில் தனது முந்தைய இரண்டு ஆண்டுகளின்  தொடர்ந்து முன்னிலையை பெற்றது போல தன் இடத்தை நிலைநிறுத்திக்கொண்டது ரெட்புல்.



போட்டிகளின் அணி துவக்க வீரர்கள் (Gride Position ).
முதலிடம்  - ரெட்புல்- செபாஸ்டியன் வெட்டல்.
இரண்டு   - ஃபெராரி - ஃபிலிப் மாஸா
மூன்று    - ஃபெராரி - ஃபெர்னாண்டொ அலோன்சா 
நான்கு    - மெர்சடீஸ் - லீவ்ஸ் ஹேமில்டன் 
ஐந்து      - ரெட்புல் - மார்க் வெப்பர்  
ஆறு      - மெர்சடீஸ் - நிக்கொ ரோஸ்பெர்க்.

ரைகொணன் தவறு !


       மூன்றாவது தகுதி சுற்றில் லோட்டஸ் ரெனால்ட்டின் - கிமி ரைகொணன் ,மெர்சடீஸ் - நிக்கொ ரோஸ்பெர்கை 12 மற்றும் 15 ஆம் வளைவுகளில் ஓரம் கட்டிய குற்றதிர்க்காக- ஏழாம் இடம் தகுதி பெற்று வந்தவரை மூன்று இடம் தள்ளி 10 ஆம் இடத்திலிருந்து போட்டியை தொடங்க சொல்லிவிட்டார்கள் !

செபாஸ்டியன் வெட்டலுக்கு இரண்டு சவால்கள்.
      முதலிடத்தில் போட்டியை துவங்கினாலும்  வெட்டலுக்கு இரண்டு சவால்கள்.ஒன்று ஃபெராரியிடமிருந்து காத்து இருக்கிறது.அதோடு 4 ஆம் இடத்தில் ஹேமில்ட்டன் இரண்டாவது சவால் .ஒரு சின்ன அழுத்தம் அணிகளின் தலைமையிடமும் , ஆர்வம் ரசிகளிடமும் விரவி கிடந்தன .


முதல் சுற்று...
       சீறிபாய்ந்த ஃபெராரி கார்களை மிக சாதுர்யமாக ஓரங்கட்டி வெட்டல்  முதலிடத்தை தக்கவைத்து கொள்ள ,3 ஆம் இடத்து அலோன்சா 2 ஆம் இடம் வர ,நிச்சயம் ஏதோ நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பில் முதல் இடத்தை எல்லோரும் கவனிக்க இரண்டாம் வளைவில் அலோன்சா தன்னுடய காரின்  Front Wing ஐ வெட்டலின் காரில் மோதி கார் மெல்ல களத்தின் ஓரத்தில் உள்ள சரலை கள்களின் மீது பயனித்து நின்றது . Front Wing  பெரும்பகுதியை இல்லாமல் இருப்பது தெரிந்தது .முடிந்தது அலோன்சாவின் கனவு .


இரண்டாம் சுற்று ..
        இந்த களோபரத்தை பயன்படுத்திக்கொண்ட மார்க் வெப்பர் மூன்றாம் இடம் முன்னேறி அதோடு நிற்காமல் - இரண்டாம் இடம் முன்னேறினார் அங்கிருந்த மாசாவை ஓரங்கட்டினார் .மீண்டும் மூன்றாம் இடதில் இருந்த மாசாவை லீவிஸ் ஹேமில்ட்டன் பின்னுக்கு தள்ளி நான்காம் இடத்திற்க்கு தள்ள ..

ஆறாம் சுற்று ..
வெட்டல் தன்னுடய Intermediate tyre க்கு விடை கொடுத்து விட்டு Medium Tyre  மாட்டிக்கொண்டு மீண்டும் பறந்தார் ..

எட்டாம் சுற்று ...
      மார்க் வெப்பரை தொடர்ந்து டயர் மாற்றம் செய்ய பிட் லேன் நுழைந்த மெர்சடீஸ் - லீவ்ஸ் ஹேமில்டன் ஒரு மிக பெரிய சுவாரஸ்யத்தை செய்தார் .


                      தன்னுடய பிட்லேனுக்கு இரண்டு தள்ளி இருக்கும் McLaren-Mercedes பிட்லேனுக்குள் நுழைந்து விட அதிர்ச்சியில் முன் பகுதி Jack Man யோசித்து விலகி கொள்ள ,மீண்டும் வெளியேறி தன்னுடய பிட்லேன் நுழைந்து டயர் மாற்றம் செய்து போக ( இதை பற்றி பின்னால் நினைவு கூர்ந்த ஹேமில்ட்டன் 6 வருட ஹாபகம் என்று நெகிழ்ந்து போனார்.  ) ஆனால் இதன் மூலம்  ஒரு மிக மோசமான விசயம் நடந்தது .இரண்டாம் இடத்தை பிடிக்கும் வாய்பை இந்த சில வினாடிகளை காப்பாற்றி கொள்ளாததால் ரேசின் முடிவில் இழந்தார் ஹேமில்ட்டன் .


20 ஆம் சுற்று ..
        வெப்பர் இந்த முறை Hard Compound Tyre தேர்வு செய்ய ஏதோ காரணம் இருந்தது .ஹேமில்டன் சிறு தவறினால் சுமார் நான்கு வினாடிகள் வெப்பருக்கு முதலிடத்து வெற்றி வாய்பை தந்து விட்டார் .அதாவது முதல் இரண்டு இடம் ரெட்புல் என் அவர்கள் அணி தீர்மானித்து விட்டது .அதனால்தான் வெப்பரின் டயர் மாற்றம் முதலில் (வெட்டல் இன்னும் டயர் மாற்றம் செய்ய வரவில்லை ).


22 ஆம் சுற்று ..
           இந்திய -ஃபோர்ஸ் இந்திய அணியின் -Paul di Resta மூன்றாவது டயர் மாற்றத்தில் போட்டியிலிருந்து நிறுத்தப்பட்டு கேரேஜுக்குள் பின்புறம் தள்ளபட்டது .காரணம் .’வீல் நட்’ பொருத்துவதில் பிரச்சனை. முதல் இரண்டு டயர் மாற்றதிலும் இது நடந்தது . இனி இது தொடர வாய்ப்பு இருந்தால் எதாவது விபத்தை சந்திக்கலாம் என்பதாக திருப்பி அழைக்கப்பட்டது .அப்படியானால் அடுத்த  Adrian Sutil கார் இதே பிரச்சனையா ?

27 ஆம் சுற்று ..

     ஆமாம் இபோது  ஃபோர்ஸ் இந்திய அணியின் இன்னொரு   Adrian Sutil கார் இப்போது திருப்பி அழைக்கப்பட்டது .ஒன்பதாம் இடத்தில் போட்டியை துவங்கிய  கார் இது .இன்று நிச்சயம் சில புள்ளிகள் பெறும் வாய்ப்பு இருந்தது .
           இது மிக பெரிய பாடம்  அந்த அணிக்கு .எந்த ஒரு சோதனை முயற்சியும் களத்தில் செய்வது மோசமான விளைவை தரும் என்பதுவே அது .

31 ஆம் சுற்று .
வெப்பர் இப்போது மீண்டும் டயர் மாற்றம் .ஆனால் Medium Compound Tyre .

33 ஆம் சுற்று ..
ஆனால் அதே அணியின் வெட்டல் Hard Compound Tyre .ஏன் ? நீண்ட பயனத்தை சந்திக்க தேய்மானம் குறைந்த அதே சமயம் அதிக வெப்பத்தை தாங்கும் பண்பு கொண்ட டயர் இது .நாம் இங்கு F1 கார்களில் பயன்படுத்தும் டயர்களை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா....


ஃபார்முலா 1 ல் பயன்படுத்தும்  டயர்கள்..


        பொதுவாகவே நமக்கு  உபயோகத்தை பொருத்து டயர்களில் இரண்டுவகை தெரியும் .ஒன்று நல்ல Grip Button Tyre இன்னொன்று Running Button  (முன் பக்க சக்கரங்களில் பொருத்துவது ).ஆனால் இது ஃபார்முலா 1 ஆச்சே .இங்கு டயர்கள்  Dry yres -slicks Tyres மற்றும் Wet tyres - Grooves Tyres என்ற இரண்டு பெரும் பிரிவாக வகைப்படுத்தப்படுகிறது ,

 Wet tyres


               Wet tyres சிறு மழை தூறல் போட்டி துவங்கும்போது எதிர்பார்க்கபட்டதால்  Intermediate tyre உபயோகிக்கப்பட்டது .அதுவே களத்தில் மழை பெய்ய துவங்கியிருந்தால் அதாவது களத்தில் நீர் தேங்கியிருக்கும்போது  போது Wet  tyres பயன்படுத்தி இருப்பார்கள் .கார் களத்தில் போகும்போது வேகத்திர்க்கு தடையாக இருக்கும் நீரை வெளியேற்றும் தன்மையில் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.அவ்வளவுதான்.  


       அடுத்து Hard Compound Tyre இதில் உட்பிரிவை நான்கு வகையாக பிரிக்கிறார்கள் .1.Super Soft - வேகம் குறைந்த குறுகிய வளைவுகளை கொண்ட களங்களில் இதுபயன்படுகிறது .இது விரைவில் தேயும் ஆனால் வளைவுகளில் நல்ல பிடிப்பை ( Grip) தரும்.வேகம்.அதிக வேகம் . அடுத்து 2.Soft Compound tyres - இது super Soft ஐ விட கொஞ்சம் பெட்டர் தேய்மானத்தில் 3.Medium Compound Tyre - இது சாதரண வெப்ப நிலையில் உபோயோகிக்க சிறந்த தேர்வு .குறிப்பிட்ட சூழ்நிலை வெப்பத்தில் இது பொருத்தப்படும்போது சுமார் 0.8 வினாடி / 1 சுற்று வேகத்தை கூட்ட கூடியது .கடைசி 4.Hard Compound Tyre - தனக்கு முன்னே செல்லும் காரை தொடர்ந்து துரத்தவும் அல்லது தன்னை தொடரும் காருக்கு வழி கொடுக்காமல் நீண்ட பயனத்தை சந்திக்க தேய்மானம் குறைந்த அதே சமயம் அதிக வெப்பத்தை தாங்க்கும் கொண்ட டயர் இது.
                          ஆனால் இதில் இன்னொரு விசயம் Dry Race ல் Hard Compound Tyre மற்றும் Soft Compound tyres கட்டாயம் பயன்படுத்தவேண்டும் அதே போல மழை நேரத்தில் மேற்படி இரண்டு டயர்களை பயன்படுத்தவேண்டும் இல்லாவிட்டால் 30 வினாடி காரை ரேசிலிருந்து நிறுத்தி தொடர செய்வார்கள் .

 மீண்டும் போட்டிக்குள்..


36 ஆவது சுற்று ..
           McLaren-Mercedes - ஜென்சன் பட்டன்  போன ஆண்டு முழுவதுவும் பிட் லேனில் டயர் பொருத்தும்போது( அதுவும் Rear Left  )பல பிரச்சனை . இப்போது Front Right டயர் சரியாக பொருத்த தாமதம் .மீண்டும் 14 ஆம் இடம் தொடரும்  நிலை.

43 ஆவது சுற்று ..
       ரெட்புல்லின் இரண்டு  காரும் இப்போது டயர் மாற்றம் வந்தது. முதலில் வந்த வெப்பர் Hard Compound Tyre .ஆனால் பின்னே வந்த வெட்டல் Medium Compound Tyre .அதாவது முழு ரேசும் நமது கட்டுபாட்டில் வந்து விட்டதாக அணித்தலமை முடிவு செய்து வெப்பர் இன்று முதல் இடம் போக சொல்ல தீர்மானித்து விட்டது .மீண்டும் முதலிடத்தில் வெப்பர் இரண்டாம் இடத்தில் வெட்டல் தொடர ...


46 ஆவது சுற்று ..

Kinetic Energy Recovery System

          Williams-Renault அணியின் Pastor Maldonado கார்( KERS ) Kinetic Energy Recovery System எனப்படும் F 1 கார்களில் பிரேக்கை பயன்படுத்தப்படும்பொது வெளிப்படும் - வீணாகும் வெப்ப சக்தியை ,காரின் பேட்டரியில் ப்ரத்தியோக முறையில்  சேமிக்கப்பட்டு,  தேவைப்படும்போது ( விதிகளுக்கு உட்பட்டு ) மீண்டும் உபோயோக்கிக்கும் இயக்க சக்தியாக ( Kinetic Energy ) பெறப்படும் அமைப்பு இயங்காததால் களத்தை விட்டு வெளியேறிவிட்டது .


எதிர்பாராத ஒன்று நடந்தது!!
        இந்த சமயத்தில் இப்போது யாரும் ஏன் ரெட்புல் அணியின் தலமை கூட எதிர்பாராத ஒன்று நடந்தது.ஆம் இரண்டாவது வந்து கொண்டு இருந்த வெட்டல் முன்னேறி முதலிடத்து தன் அணியின் மார்க் வெப்பரை Wheel to Wheel ஒரு ஆபத்தான அதே சமயம் அபத்தமான அணிதலமை கட்டளையை மீறி முதலிடம் தொடர ,வெப்பர் அதிர்சியுற்று அணித்தலமையுடன் தொடர்புகொள்ள...


47 ஆவது சுற்று..
         ரெட்புல்லின் வெட்டலின் இந்த வெளிப்படையான கீழ்பைடியாமைக்கு அணித்தலமை கோபத்துடன் ரேடியோவில் காரணம் கேட்க ,அதர்க்கு பதிலாக வெட்டல் ,வெப்பரின் வேகம் தனக்கு திருப்தி அளிக்கவில்லை.இதனால் பின்னே தொடரும் மெர்சடீஸ் - லீவ்ஸ் ஹேமில்டனுக்கு அது பெரும் வாய்ப்பை தந்து விடலாம் என்பதாகவே அந்த முடிவை எடுத்தேன் என்றார் .ஆனால் மிக கடுமையாக அணித்தலைவரும் ,தொழில்நுட்ப இயக்குனரும் கடிந்து கொள்ள அவர்களின் இன்னொரு கவலை வெட்டலின் கார்  அந்த அளவுக்கு வெப்பர் காரை நெருங்கும்போது ஏற்படும் காற்றியக்க மாறுபாடுகளும் மற்றும் தூசிகள் ஆபத்தானவை .அதனால் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது .ஒரு புள்ளிகள் கூட கிடைக்காமல் போயிருக்கலாம்.


50 ஆவது சுற்று.
         இந்த சமயத்தில்   மெர்சடீஸ் அணியின் நிக்கோ ரோஸ்பெர்க்கிடமிருந்து அணித்தலமைக்கு ஒரு விண்ணப்பம் கோரப்பட்டது .எனக்கு முன்னால் 3 ஆம் இடத்தில் சென்றுகொண்டு இருக்கும் ஹேமில்ட்டன் காரை விட என் காரின் செயல்திறன் அதாவது டயர் மற்றும் எரிபொருள் அளவு போதுமான அளவு அல்ல போட்டி போடும் நிலையி இருக்கிறது நான் முன்னேறி செல்லவா என கேட்க அணித்தலவைர் Ross  Brawn வேண்டாம் என்பதாக அறிவுறுத்த தொடங்கினார் ..


51 ஆவது சுற்று ..
            Exhaust அமைப்பில் ஏற்பட்ட பிரசனையால் STR-Ferrari அணியின் Daniel Ricciardo கார் போட்டியை விட்டு வெளியேறியது .

53 ஆவது சுற்று ..


            36 ஆவது சுற்றுக்கு டயர் பொருத்திய பிரச்சனை  McLaren-Mercedes - ஜென்சன் பிறகு 18 சுற்றுகள் சமாளித்த பிறகும் தீரவில்லை . எனவே பொட்டியை விட்டு விலகும் கட்டாயத்தில் விலகினார் ஜென்சன் பட்டன் .

54 ஆவது சுற்று ..


             இப்போது கூட  Ross  Brawn - நிக்கொ ரோஸ்பெர்க் விவாதம் தொடர்ந்து கொண்டு இருந்தது .காரணம் இரண்டு காருக்கும் இடைவெளி வெறும் 0.5 மைக்ரோ வினாடிகள் .அணிக்கு இப்பொதுதான் ஹேமில்ட்டன் வந்து இருக்கிறார் இந்த அணிக்கு ,இந்த சமயத்தில்  ரோஸ்பெர்க் முன்னேறுவது சற்றும் உகந்ததாக தெரியவில்லை என்று நினைத்தார்போல அணித்தலவைர்.மேலும் இயல்பில் ஹேமில்ட்டன் அவ்வளவு சாதுர்யமானவர் இல்லை .ஏற்றுகொள்ள மாட்டார் .

56 ஆவது கடைசி சுற்று ..
             வெற்றிக்கோட்டை தொட்ட முதல்    மூன் று கார்கள் 

முதலிடம்          -ரெட்புல் . செபாஸ்டியன் வெட்டல் 
இரண்டாவது இடம் -ரெட்புல் .மார்க் வெப்பர்  
மூன்றாவ்து இடம்  -மெர்சடீஸ் - லீவ்ஸ் ஹேமில்டன் 


         பரிசளிப்பு மேடையில் வெற்றி பெற்றவர்கள் ஒருத்தர் மீது ஒருத்தர் ஃசாம்பைன் தெளிப்பில் ( Sprey )ரெட்புல் வீரர்களுக்கிடையே  எவ்வித சுவாரஸ்யமும் இல்லை . ஒரு வெற்றி கொண்டாட படவேண்டியதுதான்!இங்கு சுமூகம் இல்லை .மிக சாதரணமான சூழல் நிலவியது .  

சரி மலேசிய களத்திலிருந்து நாம் விடைபெறுவோம் .
         


        நமது அடுத்த வேகம் - உலக வரைபடத்தில் நமக்கு மேலே 2.30 மணி நேரம் (பின்னால்) வித்தியாசத்தில் இருக்கும் சீனாவின் -CHINESE GRAND PRIX போட்டியில் அடுத்த மாதம் ஏப்ரல் 14 ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு பார்க்கலாமா .....





3 comments:

tech news in tamil said...

மிக சிறப்பாக லேப் வாரியாக விளக்கியதற்க்கு நன்றி...

ஆட்டோமொபைல் தமிழன்
http://www.automobiletamilan.com/

tech news in tamil said...

ஃபார்முலா பந்தயங்களின் கார்களின் டயர் பற்றி விளக்கியமைக்கும் நன்றி

Sugumarje said...

நல்ல முன்னேற்றம்... அருமையான ஆட்டகள வர்ணனை... தொடர்க :)