உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Monday, April 1, 2013

விதி மீறப்பட்ட வெற்றி - மரணத்திர்கு சமம்

           
               

             சாலை விதிகளை மதிப்பவர்கள் வீட்டுக்கு போகிறார்கள் .மதிக்காதவர்கள் காட்டுக்கு போகிறார்கள் என்பார்கள் .சாலை விதிகள் ஒருபுறம் இருக்கட்டும் பொதுவாக வாகன ஓட்டுனர்களுக்கு தாரக மந்திரம் போல ஒரு மூத்த 50 வருட கனரக வாகன ஒட்டுனர் எனக்கு ஒன்று சொன்னார் .உன்னை பின் தொடருபவனும் , எதிரே வருபவனும் முட்டாள் என்று நினைத்துக்கொள் .உன் கவனம் உன் வாகன ஓட்டுதலிலும் மற்றவன் ஒட்டுதலிலும் கவனம் தானே  வரும் என்றார் .இந்த விதியை பின்பற்றுவர்கள் எனக்கு சொல்லவும் 
.

               இதே விசயம் ஃபார்முலா 1 போட்டியை நடத்தும் FIA  (Fédération Internationale de l'Automobile) போட்டியில் பங்கு பெறும் அணி  அதன் சார்பாக ஓட்டுனர்கள் மற்றும் இந்த போட்டிகளை நடத்தும் (அந்த அந்த நாட்டின் ) அமைப்புகளுக்கு என விதிகளை வடிவமைத்து இருக்கிறார்கள் என்பது அறிந்த விசயம் .ஆனால் ஓட்டுனர்களுக்கு FIA வின் விதிகளுடன் தனது அணி விதிகளுக்கும் கட்டுபடவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதை மீறி விட்ட நமது ஃபார்முலா 1 சாம்பியன் ( அதுவும் மூன்று முறை தொடர் சாம்பியன் ) ரெட்புல்லின் - செபாஸ்டியன் வெட்டல் பற்றியும் விதிமீறல் எந்த அளவுக்கு ஒரு மரணம் வரை மோசமான விளைவை தரும் என்பதை பற்றிய பார்வை இது .
           கடந்த மார்ச் 24 ல் மலேசியாவின் Sepang International Circuit ல் நடந்தது .இந்த போட்டியில் 46 ஆவது சுற்றில் ரெட்புல் அணியின் ஆதிக்கம் அல்லது அன்றைய போட்டியின் முடிவு முழுவதுவும் தன்வசம் இருப்பதை அறிந்து கடைசி டயர் மாற்றத்தின்போது அணி ,அந்த அணியின் மார்க் வெப்பரை முதலிடத்தில் இன்று வெப்பரையும் ,இரண்டாவது இடத்தில் வெட்டலையும் வருமாறு வெற்றியை பகிர்ந்து கொள்ள பணித்தது .ஆனால் இதை அந்த சுற்றிலேயே வெட்டல் மீறியதோடு , எனக்கு வழிவிட சொல்லுங்கள் ,பாதையிலிருந்து விலக சொல்லவுமாறு தன் அணியிடம் சொல்லி இருக்கிறார்.மேலும்  ஒரு விபத்துக்கு ஏற்படும் அளவுக்கு ( விபத்து நடக்கவில்லை ) நெருங்கி போய் கடந்து முன்னேறி முதலிடம் வந்தார் .இவ்வாறு முந்தி வந்ததர்க்கு வெட்டல் சொன்ன ஒரே காரணம் வெப்பரின் கார் களத்தில் மிகவும் மெதுவாக முன்னே சென்று கொண்டு இருந்ததே என்றார்.           அப்படி இல்லை என்கிறார்கள் வெட்டல் தரப்பினரும் கோபத்தில் இருக்கும் அந்த அணியின் மார்க் வெப்பரும் .எப்பொதுமே வெட்டல் தன்னுடய அணியின் கட்டலைகளை மதிப்பதே இல்லை என்பதே வெப்பரின் வாதம் .தன்னுடய நெடுநாள் ஆதங்கத்தை போட்டு உடைத்து விட்டார் இதன் மூலம் வெப்பர் .சரி அணி தலைவர் Christian Horner வெட்டலை முந்தி செல்லவேண்டாம் அமைதியாக இரு .முட்டாள்தனமாக எதுவும் செய்ய வேண்டாம் என்றும் சொல்லியும் இப்படி நடந்து கொண்டார் என்பது ஏன் என்ற கேள்விக்குறிய விசயமாக இருக்கிறது .
                 இந்த நடத்ததைக்கு தன் அணியிடமும் , மார்க் வெப்பரிடமும் மன்னிப்பு கோருவதாக சொல்லி விட்டார் .தன்னுடய இந்த செயல் இன்றைய தன் உறக்கத்தை மிகவும் இழக்க செய்ய போவதாக சொல்லி இருக்கிறார் வெட்டல் .இதர்க்கு இடையே இவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து மோசமான விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது.ஒரு வெற்றி மன்னிப்பாக கேட்டுகொள்ளபடும் இந்த நிலைக்கு யார் காரணம் ?            இப்படி நெருங்கி போய் பயமுறித்தியதர்க்கு FIA விதிகள் இடம் குடுக்கிறதா ? இல்லை .ஆனால் இங்கு வெட்டல் எந்த தவறும் செய்யவில்லை சரியான இடத்தில் சரியான வேகத்தில் வெட்டல் கடந்து இருப்பது நாங்கள் அறிகிறோம் என ஒதுங்கிகொண்டார்கள் .


            அணிதலைமை யோசிப்பதை விட வெட்டல் ஏன் இப்படி செய்யவேண்டும் ? காரணம் ஒன்று மார்க் வெப்பர் – வெட்டல் ஈகோ பிரச்சனை .இரண்டு போன ஆண்டில் கடைசி போட்டிவரை தன்னால் போராடி முதலிடம் பிடிக்கும் அளவுக்கு புள்ளி அடைப்படையில் (ஃபெராரியின் அலோன்சா போட்டியாக  ) இந்த ஆண்டும் எற்படுத்திகொள்ளகூடாது என வெட்டல் நினைக்கலாம் .மூன்றாவதாக தொடர்ந்து சாம்பியன் அந்தஸ்த்து இருக்கும்பட்சத்தில்தான் தனக்கு மதிப்பு என்று முடிவு செய்திருக்கலாம்  நான்காவதாக அப்போதுதான் தன் அணியிலும் பிற அணிகளிலும் வரவேற்ப்பு இருந்துகொண்டே இருக்கும் என்றும் நினைத்து இருக்கலாம் வெட்டல் .ஐந்தாவதாக ஒருவகையில் வெட்டலை ’சாம்பியன் நாற்காலி போதை’ கெட்டியாக பிடித்து கொண்டது போல .கடைசியாக  கடந்த ஆண்டே நமது நாட்டின் நாராயண் கார்த்திகேயனை விமர்சித்தது (வார்த்தைகள் )உட்பட வெட்டலின் நடத்தை சற்று சரியான பாதையில் செல்லவில்லை . 

Jacques Villeneuve

           சரி என்பார்வை இருக்கட்டும் நான் பார்வையாளன் மட்டுமே .ஆனால் முன்னால் கனடா நாட்டின் உலக சாம்பியன் Jacques Villeneuve (Jacques Joseph Charles Villeneuve 1996 – 2006 ) தனது Williams-Renault அணிக்காக 1997 ல்  சாம்பியன் பட்டம் வென்றவர்.

 Gilles Villeneuve

          இவர் தனது கருத்தை மட்டுமல்ல தனது தந்தை Gilles Villeneuve (Joseph Gilles Henri Villeneuve 1977 -1982 ) மரணம் கூட இப்படித்தான் அவருடைய    ஃபெராரி என்ஞினியர் Mauro Forghieri பேச்சை கேட்காமல் அவர் அணியை சார்ந்த ஃப்ரென்ஞ் ஓட்டுனர் - Didier Pironi (1978 -1982 ) ஐ விட தன்னுடைய தகுதி சுற்றின் நேரத்தை குறைக்க Belgiam நாட்டில் –Zolder களத்தில்  ஜெர்மன் ட்ரைவர் Jochen Mass ( 1973 -1980 ,1982) காரை முந்திசெல்லும்போது விபத்துக்குட்பட்டு அன்று இரவு 9:12 க்கு இறந்து போனார் .
           

                 எனவே அணியின் கட்டளைக்கு கட்டாயமாக கீழ்படிவது அவசியம் மேலும் அவர்கள் அவர்கள் விரும்புவதை செய்வதற்க்காகத்தான் நம்மை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள் ,அதர்க்காக மட்டுமே பணம் கொடுக்கிறார்கள் எனவே வெட்டலின் இந்த நடவடிக்கை அணிக்கு எந்த உபயோகமும் இல்லாத முட்டாள் தனமான நடவடிக்கை என்று கடிந்து கொள்கிறார் . இது போதுமே வெட்டல் .இனி...பாதுகாப்பு முக்கியம் என்பதை உணருங்கள் .

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பணம் தான் கண் முன்னே தெரிகிறது... மற்றவை அப்புறம் என்று நினைத்தால் என்ன செய்வது...? மரணம் தான் பரிசா...?

Sugumar Je said...

நல்ல தெளிவான அலசல். எல்லோருக்குமே ஒரு வெற்றிப்போதை வந்துவிடுகிறது. விளையாட்டில் மட்டுமல்ல, சராசரி மனிதருக்குமே...

Krishna moorthy said...

நாம் எழுதியதை படித்து விட்டு அல்ல .இந்த மோசமான நிகழ்வுக்கு காரணம் ரேடியோ வேலை செய்யவில்லை ,சரியாக புரிந்து கொள்ளவில்லை என பல காரணம் சொன்ன வெட்டல் முன்னால் சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கருடன் இந்த விசயத்தை கேளி செய்யும் விதமாக பேசிய போட்டோ வெளியானதும், கோபத்தில் ரெட்புல்லின் இன்னொரு அணியான Toro Rosso team அணிக்கு ட்ரைவராக மாற்றப்பட்டுள்ளார் .அணியின் நடவடிக்கை இது .