உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, April 20, 2013

சீனாவில் - ஃபெர்னாண்டொ அலோன்சாவின் ஆதிக்க வெற்றி !


         கடந்த 14-04-2013 ல் CHINESE GRAND PRIX போட்டி நடந்தது. போட்டிக்கு முன் நடந்த பயிற்சி போட்டியில் ஃபெராரியின் + மெர்சடிஸ் அணிகளின் ஆதிக்கம் ஆச்சர்யத்தை அளித்தது .முதல் பயிற்சி போட்டியில் மெர்சடிஸின் -லீவிஸ் ஹேமில்ட்டன் அடுத்த இரண்டு பயிற்சி போட்டிகளிலும் ஃபெராரியின் ஃபிலிப் மாஸா ,ஃபெர்னாண்டொ அலோன்சா ஆதிக்கமே அதிகம் இருந்தது .ஆனால் தகுதி சுற்றில் முதலிடத்தை - லீவிஸ் ஹேமில்ட்டன் பிடித்து அசத்தினார் .இரண்டாவது இடத்தை லோட்டஸ் ரெனால்ட்டின் - கிமி ரைகொணனும் ,மூன்றாவது இடத்தை ஃபெர்னாண்டொ அலோன்சா அடைந்தார் .


            இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் நடந்து முடிந்த போட்டிகளில் முதல் மூன்று இடதிர்க்குள் ரெட்புல் அணியை காணோம் .என்ன ஆனது ?  செபாஸ்டியன் வெட்டல் ஒன்பதாம் இடத்தை மட்டுமே பிடித்தார் .தன்னுடய மனவருத்ததை இப்படித்தான் காட்டவேண்டும் என அந்த ஜெர்மன் இளைஞர் நினைத்து இருக்கலாம் ! 
           சரி இவர் இப்படி இன்னொருத்தர் மார்க் வெப்பர் என்ன ஆனார் ? தகுதி சுற்று முடிந்தபோது ஒவ்வொரு காரிலும் அதில்  பயன்படுத்திய எரிபொருள் மாதிரி FIA பரிசோதனைக்கு ஒரு லிட்டர் தரவேண்டியது அவசியம்.அதில் மார்க் வெப்பர் ஏற்கனவே 14 ஆவது இடம் வந்த நிலையில் தராததால் அவர் போட்டியை 20 ஆம் இடத்திலிருந்து தொடங்கவேண்டிய கட்டாயத்திர்க்கு தள்ளப்பட்டார் .குறைந்த எரிபொறுள் பயன்படுத்தினாள் காரின் எடையும் குறையும் அதனால் முதல் மூன்று இடத்தை பிடிக்கலாம் என்பது வேறு விசயம் .அதர்க்காக பரிசோதனைக்கு கூட பத்தாமல் ஓட்டுவது கொஞ்சம் அதீத கணக்குதான் !

சரி போட்டி என்ன ஆச்சு ...?

முதல் சுற்று.. 
முதலிடத்து மெர்சடிஸின் -லீவிஸ் ஹேமில்ட்டன் தெளிவான வேகத்தில் பாய்ந்து முதலிடத்தில் முன்னேற அவரை தொடர்ந்து செல்ல வேண்டிய இரண்டாவது  இடத்து லோட்டஸ் ரெனால்ட்டின் - கிமி ரைகொணனும் சற்று தாமதிக்க, அந்த இடத்தை ஃபெராரியின் அலோன்சா பிடிக்க அவரை தொடர்ந்து ஃபிலிப் மாஸாவும் இப்போது கிமி ரைகொணனும் நான்காவது இடத்தில் தவித்தார் ..


மூன்றாவது சுற்று ..
முதலிடத்தில் நான்கு கார்களும் 1.7 வினாடிகள் வித்தியாசத்திர்க்குள் ஏறக்குறைய முந்தியடித்துகொண்டு இருந்தன .DRS அனுமதிக்கப்பட்டது .இந்த சமயத்தில் இது மிக முக்கியம் இவ்வளவு குறைந்த இடைவெளியில் பறந்து கொண்டு இருக்கும் வேளையில் DRS அனுமதி போட்டியின் போக்கை மாற்றலாம் .பொதுவாக இந்த DRS - Drag Reduction System பற்றி சுமாராக தெரிந்து கொண்டு நகரலாமே !


          ஃபார்முலா போட்டிகலை பற்றி எப்போதும் சுருக்கமாக High speed drama என்றூ அழைக்கபடுவதர்க்கு காரணம் அதில் உள்ள வேகம் , புதிய தொழில்நுட்பம் ,அதிக செலவு மட்டுமல்ல , பல திருப்பங்களை( Turns & Bends ) போட்டி நடத்தும் களத்தில்  மட்டுமல்ல ,அந்த இரண்டு மணி நேர போட்டியில் எந்த அளவுக்கு திருப்பங்கள் , சுவாரசியங்கள் , என்ற யோசிப்பின் விளைவுதான் பல் நுட்ப கண்டுபிடிப்புகள் உருவாகி கொண்டே இருக்கின்றன .அதில் ஒன்று KERS - Kinetic Energy Recovery System & DRS - Drag Reduction System இதில் KERS போன போட்டியில் பார்த்து விட்டோம் 
.

DRS என்பது ...
               இப்போது Drag Reduction System பற்றி சுருக்கமாக சொல்வதானால் (இது மிக பெரிய விசயம் )ஃபார்முலா 1 காரின்  ஓடு பாதையில்( ட்ராக்கில் )  வேகத்தை தடைபடுத்தும் முக்கிய காரணியான   ” காற்றின் எதிர் விசை” தன்மையை குறைத்து தன்னைவிட முந்தி செல்லும் காரை ( ஒரு விதிமுறைக்கு உட்பட்ட இடத்தில் மற்றும் நேரத்தில் ) கடந்து செல்ல உதவும் காரின் அமைப்பு . ஃபார்முலா 1 காரின்  மொத்த அமைப்பே வேகத்தை தடை செய்யும் காற்றுக்கு எதிரான யுத்தம்தான் .அதன் முழுபெயர் - காற்றியக்கவியல் (Aerodynamics) .ஒரு ஃபார்முலா 1 அணியின் மொத்த செலவில் 60 சதவிகித பணம் முதலீடு இந்த காற்றியக்கவியல் தொழில் நுட்ப ஆராய்சிக்குத்தான் என்பது முக்கியமான விசயம் .அது பற்றி இன்னொரு முறை பார்ப்போம் .ஆனால் இங்கு நாம் அதன் ஒரு சிறு பகுதியான DRS பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கிறோம். 



DRS அமைப்பு ..
 சாதரணமாக சாலைகளில் பயன்படுத்தும் காரின் பின்புறம் இந்த அமைப்பை பார்க்கும்போது ஏதோ அழகுக்கு மாற்றி இருப்பது போல தோன்றும் ஆனால் இதன் வேலை ஒரு கார் முன்னோக்கி செல்லும்போது காரின் முன்பகுதியில் நுழையும் காற்று காரின் முன்பக்கம் காருக்கு கீழ் பகுதியிலும் அதே சமயம் காரின் மேல் பகுதி மற்றும் காரின் பக்கவாட்டு பகுதியிலும்  கடந்து செல்கிறது .அப்போது  இரு வேறுபட்ட இயக்கத்தை காற்று ஏற்படுத்துகிறது .காருக்கு மேலே  கடந்து செல்லும் காற்று காரில் ஒரு கீழே அமுக்கத்தையும் ( Downforce  )காருக்கு அடியில் செல்லும்போது காரை மேலே தூக்கும் ( Up Lift Force)ஒரு அழுத்ததையும் தருகிறது .பக்கவாட்டு பகுதியில் கடக்கும் காற்று காரின் திருப்பங்களில் திரும்பும் பகுதிக்கு ஏதிராக காரை தள்ளும் விசையை ஏற்படுத்தும் .இந்த காற்றின் விசை எதிர்ப்பை  தவிர்ப்பதர்க்கும் குறைப்பதர்க்கும்  இந்த அமைப்பு உதவுகிறது  .கீழேயுள்ள சாதரண சாலையில் ஒடக்கூடிய Mitsubishi Lancer Evo   காரின் இந்த சாதனம் 
                        இன்னும் சுருக்கமாக சொல்லபோனால் எந்த அமைப்பு வானில் பறக்கும் விமானத்திர்க்கு பறக்க கரணமாக இருக்கிறதோ  அதே அமைப்பு இங்கு அதர்க்கு எதிராக செயல்படுகிறது எனலாம் (காரை அதன் திசையில் தடையில்லாமல் செல்ல உதவுகிறது அவ்வளவுதான் )



                    அங்கு நாம் பார்தெல்லாம் சாதரண சாலையில் செல்லும் நிலையாக பொருத்தப்பட்ட அமைப்பு .ஆனால் ஃபார்முலா 1 காரில் அதே அமைப்பு காரை செலுத்தும் ட்ரைவர் தன் விருபத்திர்க்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ளுமாறு அமைக்கபட்டு இருக்கிறது .ஆனால் ஃபார்முலா 1 போட்டிகளில் சில நிபந்தனைகளுடன் இதை செயல் படுத்த வேண்டும் .


                          ஆம். பயிற்சி போட்டி மற்றும் தகுதி சுற்றுக்களில் இதை ட்ரைவர் எப்போது வேண்டுமானலும் எங்குவேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் .அதே அமைப்பை போட்டி களத்தில் அனுமதிக்கபட்ட பகுதிகளில் ( DRS Zone ) 1.தன்னை முந்தி செல்லும்  காருக்கும் தனக்கும் ஒரு வினாடி வேக வித்தியாசம் இருக்கும்போது மட்டுமே தொடரும் கார் ட்ரைவர் இந்த அமைப்பை முன்னேறி செல்ல செயல் படுத்த வேண்டும் (அந்த முன்னே செல்லும் கார் தன்னுடய KERS தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம் ) 2.போட்டி தொடங்கிய முதல் இரண்டு சுற்றுகளில் பயன்படுத்த கூடாது .3.ஏதேனும் விபத்தினால் பாதுகாப்பு கார் (Safty car ) வந்து சென்ற இரண்டு சுற்றுக்களுக்கு பிறகுதான் இதை பயன்படுத்தவேண்டும் .4.மழை மற்றும் போட்டியை நடத்தும்  Race Director அனுமதியும் அவசியம் .


இது எப்படி செயல் படுகிறது ?
காரின் பின்பகுதியில் Rear Wing பகுதிக்கு மேல் படுக்கை நிலையில் உள்ள இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்ட அல்லது ஒரே நிலையில் உள்ள ஒரு சட்டத்தில் பொருத்தபட்ட மேல் நோக்கி அசையும் 50 மில்லி மீட்டர் அள்வில் மட்டும் எழும்பும் (Flap )லேசான தகடு போன்ற அமைப்பு .இதனை இயக்கி இதன் வழியே காற்று 
அனுமதிக்கப்படும்போது முந்தி செல்லும் காரை விட சுமார் 10 முதல் 12 கி.மீ வேகம் கூடுவதாக கணிக்கப்படுகிறது .



நான்காவது சுற்றில் ..

ஹேமில்ட்டனுக்கு த்னது காரின் தொழில் நுட்பம் ஃபெராரியின் வேகத்திர்க்கு போட்டி போடும் அளவுக்கு கைகொடுக்கவில்லை .முதல் வளைவில் ஏறக்குறைய தற்காப்பு நடவடிக்கையை செய்யும் அளவுக்கு ஹேமிட்டனின் நிலை இருந்தது .அலோன்சாவும் .மாஸாவும்  எப்போது வேண்டுமாணாலும் தன்னை பின்னுக்கு தள்ளலாம் என்பதை ஹேமிட்டனின்  காரின் வலதுபக்க கண்ணாடி ( சைடு மிர்ரர் ) எச்சரித்துகொண்டு இருந்தது ..



சாபர் ஃபெராரியின் - Esteban Gutierrez உடன் ஃபோர்ஸ் இந்திய காரின் ஆண்ட்ரியன் சட்டில் மோதி அடுத்தடுது இரண்டு கார்களும் போட்டியை விட்டு விலகியது. ஃபோர்ஸ் இந்திய இரண்டு கார்களும்  கடந்த மலேசியன் க்ராண்ட் ( PETRONAS MALAYSIA GRAND PRIX ) போட்டியில் வீல் நட் பிரச்சனை காரணமாக வெளியேறியது .இன்று ஒரு கார் .மீண்டு வர காலம் இருக்கிறது..

ஐந்தாவது சுற்றில் ...
அது உண்மை ஆகிவிட்டது .ஃபெராரியின் அலொன்சாவும் .மாஸாவும் ஒரு சேர ஹேமில்ட்டனை மூன்றாம் இடத்திர்க்கு தள்ளிவிட்டார்கள் .அந்த இடத்திலும் தொல்லை கொடுக்க கிமி ரைகொணன்  காத்து இருந்தார் .கஷ்டகாலம் ! எனவே டயர் மாற்றம் செய்தாவது தனது இடத்தை தக்கவைத்துகொள்ளலாம் என Medium Compound Tyre க்கும் மாறினார் .இனி தொடர் போராட்டம் இருப்பதர்க்கு இந்த Compound Tyre தான் பதில் சொல்லபோகிறது .

ஆறாவது சுற்றில்..
தனது இலக்கை அடையும் குறிக்கோளை நிறைவேற்றிய Soft Compound டயருக்கு நன்றி சொல்லிவிட்டு ஃபெராரியின் அலோசன்சா Medium Compound Tyre க்கும் மாறினார்.அவரை தொடர்ந்து மாஸாவும் ,
எழாவது சுற்றில்..
இப்போது முதலிடத்து வேக பறவைகள் விலகி போகவே அந்த மூன்று இடங்கள் இப்போது போட்டியை  Medium Compound Tyre மாட்டிகொண்டு ஓடிக்கொண்டு இருக்கும் முதல் மூன்று இடத்து தற்போதைய ஹீரோக்கள் நிக்கொ ஹல்கேன்பர்க் ,செபாஸ்டியன் வெட்டல் , ஜென்சன் பட்டன் ,விரட்டி கொண்டு இருக்க ..

எனவே இன்றைய போட்டியின் முடிவுகள் எந்த டயரை எப்போது எனத அணி தேர்வு செய்கிறார்கள் என்பதை பொறுத்தே அமையும்.


பதினான்காவது சுற்றில் ..
ஹல்கேன்பர்க்,வெட்டல் ஒரு சேர  Medium Compound டயர் மாற்றம் .ஆனால் வெட்டல் 2.5 வினாடிகளில் மீண்டும் களதிர்க்கு திரும்ப அந்த வாய்ப்பு ஹல்கேன்பர்க் பெறவில்லை .
பதினைந்தாவது சுற்றில்
ரெட்புல்லின் மார்க் வெப்பர் டோரோ ரோஷோவின் - ஜீன் எரிக் வெர்ஜினை முந்தி செல்ல முயன்று பிறகு வேண்டாம் என்று முடிவெடுத்து மீண்டும் முந்திசெல்ல பாவம் இதில் எரிக் வெர்ஜின் குழம்பி போய் ஒருசுற்று சுற்றி (Spin ) தனது முன்பக்க Wing சேதமடைந்து தொங்கியதுதான் மிச்சம் .ஆனால் வெப்பரின் வலது பக்க டயர் ஏறகுறைய முழுவதும் உறுவிய நிலையில் மேலே வர முடிந்தது வெப்பரின் ஒட்டம் .


பதினாறாவது சுற்றில் .
இன்னும் ஒரு மோதல் - கிமி ரைகொணன் - செர்ஜியோ பெர்ஸ் காரை மோதி தனது காரின் முன் பக்க நோஸ் பகுதியை காயாமாக்கினார் கோபத்தில் உச்சம் சென்ற ரைகொணன் தனது அணி ரேடியோ தொடர்பில் பெர்ஸை நரகத்திர்க்கு அனுப்ப சபித்துகொண்டு இருந்தார் ! (What the hell is he ( Perez) doing ?)


26ஆம்  ஆறாம் சுற்றில் ..
ஐந்தாம் இடத்திலிருந்த ஹேமில்டன் 4 ஆம் இடத்து பழைய அணித்தோழன் ஜென்சன் பட்டனை நெருங்கி ஹாய் சொல்லுவது போல சொல்லி விட்டு அடுத்த இரண்டு சுற்றுக்களில் எளிதாக கடந்து சென்றார் .

31 ஆவது சுற்றில் ..
வெட்டல் தன்னுடய நேரத்தை வீண் செய்வது போல தோன்றுவதாகவும் எனவே இப்போது டயர் மாற்றம் அவசியம் என வலியுறுத்தவே அழைக்கப்பட்டார் .ஆனால் இப்போதும் Medium Compound டயர்தான் என்பது முக்கியமான விசயம் .பத்தாம் இடத்தை மீண்டும் தொடர்ந்தார் வெட்டல் .

41 ஆவது சுற்றில் .
அலோன்சா நல்ல வலுவான நிலையில் முதலிடத்தில் பயனித்து கொண்டு இருக்கும்போதே டயர் மாற்றம் செய்ய வர ,இப்போதும் அதே Mediuam Compound டயர் .மீண்டும் முதலிடத்தில் அலோன்சா .சூப்பர் .இன்று முதலிடம் அலோன்சாவுக்கு என்பதை ஃபெராரி முடிவு செய்துவிட்டது .

47 ஆவது சுற்றில்..
தொடர்ந்து வலுவான அலோன்சவின் பயனம் வெற்றியை தக்கவைத்துகொள்வதில் பயனிக்க ...இந்த சமயத்தில் ஹேமில்ட்டனின் இரண்டாவது இடம் பறிபோனது கிமிரைகொணனால் .இருவர் இடைவெளி மீண்டும் மீண்டும் ஒரு வினாடி !

52 ஆவது சுற்றில் ..வெட்டல் கடசி டயர் மாற்றம் - Soft Compound .இப்போது வெட்டலின் குறிக்கோள் மூன்றாம் இடம் .அது இப்போது 13 வினாடிகள் இடைவெளியில் ஹேமில்ட்டனிடம் இருந்து பறிக்க திட்டம் .

53 ஆவது சுற்றில் ஹேமில்ட்டன் - வெட்டல் இடைவெளி 11.5 வினாடி .....
54 ஆவது சுற்றில் ஹேமில்ட்டன் - வெட்டல் இடைவெளி 7.5 வினாடி ....
55 ஆவது சுற்றில் ஹேமில்ட்டன் - வெட்டல் இடைவெளி 5.2 வினாடி ...
56 ஆவது சுற்றில் ஹேமில்ட்டன் - வெட்டல் இடைவெளி 2.0 வினாடி ..

இடைவெளி முடியவில்லை .போட்டி முடிந்துவிட்டது .


ஃபெராரியின்- ஃபெர்னாண்டொ அலோன்சா சைனிஸ் போட்டியின் 56 சுற்றுக்களை மூன்றாவது இடத்தில் தொடங்கி , 1:36:26.945 நேரத்தில் கடந்து முதலிடத்தை பிடித்தார் .மிக பதுகாப்பாக யாருடைய அழுத்தமில்லாமல் மிக அழகான வெற்றியை பதிவு செய்தார் 
.
இரண்டாவது இடத்தை, லோட்டஸ் ரெனால்ட்டின் - கிமி ரைகொணனும் தகுதி சுற்றில் 2 ஆம் இடம் போட்டியிலும் 2 ஆம் இடம் .

மூன்றாவது இடத்தை ,  மெர்சடிஸின் -லீவிஸ் ஹேமில்ட்டன் பிடித்து அந்த அணிக்கு பெருமை சேர்த்தார் .


அடுத்து நாம் நாளை (21 .04. 2013 )  போக போவது GULF AIR BAHRAIN GRAND PRIX போட்டிக்கு ,மாலை இந்திய நேரப்படி 5.30 க்கு பார்க்க தயாராகுங்கள் ..

No comments: