உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Monday, April 22, 2013

பஹரைன் கோப்பை - செபாஸ்டியன் வெட்டளுக்கு .


           நேற்று ( 21-04-2013 ) Bahrain International Circuit ல் போட்டி நடந்தது . சைகு ஹம்மாத் இப்னு ஈசா அல்-கலீபா அவர்களின் மன்னர் ஆட்சியை எதிர்த்து இங்கு பல உள் நாட்டு சண்டைகள் நடந்து கொண்டே இருக்கிறது .கடந்த ஆண்டில் ஃபோர்ஸ் இந்திய அணியின் மெக்கானிக்குகள் வந்த வண்டியில் மேல் கூறையில் பெட்ரோல் பாம் வீசப்பட்டது நினைவிருக்களாம் .பாரசீக வளைகுடாவில் அமைதியை கொண்டு வருவதர்க்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் செய்ய முடியாததை ஃபார்முலா 1 தலைவர் Bernie Ecclestone செய்ய முடியாது இருந்தாலும் அவர் மன்னரிடம் உத்ரவாதம் பெற்ற பின்னரே போட்டியை இங்கு முடிவு செய்தார்.  அதோடு எதிர் கட்சி தலைவர் al-Wefaq பேசிய பின்னரே போட்டியை நடத்த தீர்மானித்தார்.ஆனால் கிளர்சியாளர்களின் எச்சரிக்கையால் பார்வையாளர்கள் வரத்து குறைந்து  இருந்தது அதர்க்கு கண்டனம் தெரிவித்தார் 82 வயது Bernie .



            இந்த முறை முதலிடத்தில் மெக்லரண் அணியின் நிக்கோ ரோஸ்பெர்க் போட்டியை துவக்கி வைக்கிறார் .ஏன் துவக்கி வைக்கிறார் என சொல்ல வேண்டி இருக்கிறது என்றால் அந்த அணியின் தொழில் நுட்ப முன்னேற்றம் ரெட்புல் ,ஃபெராரி , லோட்டஸ் , போன்ற அணிகளுட்ன் ஒப்பிடும் போது பின் தங்கித்தான் உள்ளது.எனவே அந்த அணி தாக்கு பிடிப்பது கஷ்ட்மே அடுத்து ரெட்புல் - செபாஸ்டியன் வெட்டல்  மூன்றாவது ஃபெராரியின் ஃபெர்னாண்டோ அலோன்சா .

முதல் சுற்றில் ...
மெர்சடிஷ் - நிக்கொ ரோஸ்பெர்க் கார் முதல் முதல் வளைவிலேயே தன்னுடய தற்காப்பு நடவடிக்கயாய் தொடர்ந்து வரும் ரெட்புல்லின் செபாஸிடியன் வெட்டல் முன்னேறவிடாமல் தடுக்க ,அது வெகு வினாடிகள் தாங்காது என்பதாக பட்டது 

மூன்றாவது சுற்றில் ..
DRS - இயக்குவதர்க்கு அனுமதிக்கப்பட்டது .இனி வெட்டலின் அணுகுமுறை பற்றி சொல்லவே வேண்டியதில்லை .மிக சாதாரணமாக முதலிடத்தை வெட்டல் தக்கவைத்துகொள்ள ,

ஐந்தாவது சுற்றில் ..
ரோஸ்பெர்க்குக்கு கிடைத்த இரண்டாவது இடத்தை ஃபெராரியின் - ஃபெர்னாண்டோ அலோன்சா விடவில்லை  .3ஆம் இடமே சொந்தமானது .
எழாவது சுற்றில் ..
ரோஸ்பெர்க்குக் நிலமை மேலும் மோசமாகி கொண்டே இருந்தது .அவரை ஃபெராரி - ஃபிலிப் மாசா முந்த முயற்சி செய்து  தன்னுடய Front Wing பகுதியை காயப்படுத்தி கொள்ள ..

எட்டாவது சுற்றில் ...
கடந்த சுற்றில் டயர் மாற்றி வந்த அலோன்சாவின் காரில் DRS அமைப்பு வேலை செய்யவில்லை .அதை சரி செய்ய மீண்டும் பிட்லேன் போனது .போச்சு .முதல் 15 சுற்றுக்குள் தக்கவைத்து கொள்ளும் இடமே கடசி வரை நிலைக்கும் அதை இழந்த்தது அலோன்சா கார் .

பத்தாவது சுற்றில் ..
செபாஸ்டியன் வெட்டல் இப்போது பிட்லேனில் .எனவே ஃபோர்ஸ் இந்திய அணியின் ஆண்ரியன் சட்டில் ரேஸ் லீடர் .இரண்டாவது இடத்தில் கிமி ரைக்கொணன் 
பதினோறாவது சுற்றில் ..
ஒரே சமயத்தில்  மாஸா, ஹேமில்ட்டன் , மால்டொனாடோ , சில்ட்டன் ஆகியோர் பிட்லேனி டயர் மாற்றம் வந்து கலக்கிகொண்டு இருக்க ..

பதினைந்தாவது சுற்று ...
ஆண்ரியன் சட்டில் இடத்தை இப்போது வெட்டல் ஏறக்குறைய கைப்பற்ற ..

 
பதினெட்டாவது  சுற்றில் ..
STR - ஃபெராரியின் ஜீன் எரிக் வெர்ஜின் கார் மெல்ல கெரேஜுக்குள் தஞ்சம் அடைந்து போட்டியிலிருந்து விலகி கொண்டது .
மாசாவின் வலது பின்புற டயரில் ஏதோ பிரச்சனை பிட்லேன் ..

21 ஆவது சுற்றில் ..
முதல் இரண்டு இடமும் ரெட்புல் வெட்டல் வெப்பர் ஆனால் இடைவெளி 14 களுக்கு மேல் .
ஜென்சன் பட்டன் மூன்றாம் இடம். காரணம் ரோஸ்பெர்க் பிட்லேன் .அந்த இடத்தை பிடிக்க க்ரோஜியன் வெகு சுவாரசியமாக துர்த்த ..இனி தாக்கு பிடிக்க முடியாது என்ற நிலையில் பட்டன் டயர் மாற்றம் போனார்,
25 ஆவது சுற்றில் 
அலோன்சாவின் நிலை ரேஸை முடிப்பதாக மட்டுமே இருந்தது .இப்போது பிட்லேன் மீண்டும் 15 ஆவது இடம் ..
26 ஆவது சுற்றில் ..
வெட்டல் பிட் லேன் வர வெப்பர் முதலிடம் .
29 ஆவது சுற்றில் ..
அட என்ன ஆச்சு இந்த ஜென்சன் பட்டனுக்கு பத்தாவது வளைவில் தனது அணியின் செர்ஜியோ பெரெஸை முந்த இடது பக்கமும் வலது பக்கமும் மாறி மாறி முயற்சிக்க அணி கண்டுகொள்ளாமல் இருக்கவே ..


30 ஆவது சுற்றில் ..
இனியும் பொறுத்துகொள்ள என்ன இருக்கிறது என்பது போல இந்த முறை ஜென்சன் பட்டன் மீண்டும் முயல உரசலே ஏற்பட்டுவிட்டது .காரின் பாகம் ஒன்று களத்தில் விழுந்தது கிடந்தது.கோபத்தில் ஜென்சன் அணித்தலைமையிடம் முறையிட ...

33 ஆவது சுற்றில் 
க்ரோஜியனையும் விட்டு வைக்கவில்லை செர்ஜியோ பெரெஸ் அவரோடும் ஒரு சிறு உரசல் .சரிதான் .நிச்சயம் இதை போட்டியை நடத்தும் FIA ஒத்துக்கொள்ளாது ..

35 ஆவது சுற்றில் ..
ஹேமில்ட்டன் போட்டியிலிருக்கிறாரா என்பது போல 9 ஆம் இடத்தில் காரின் எரிபொருளை சேமித்து அதாவது ஒரே வேகத்தை பின்பற்றி மெல்ல முன்னேறி கொண்டே இருப்பது என ஒரு திட்டம் வைத்து இருப்பார் போல .பின்னாடி உதவும் !

37 ஆவது சுற்றில் ..
மாஸா காரின் பின்பக்க டயர் பஞ்சர்,ஃபெராரியின் இரண்டு கார்களின் நிலையுமே இன்று கேள்விகளை எழுப்புகிறது ..


38 அவது சுற்றில்..
மார்க் வெப்பரும் - ரோஸ்பெர்க்கும் உரசல் .இதுவும் FIA வழக்கில் எடுத்து கொள்ளும் .இன்று தனது 200 ஆவது போட்டியில் கலந்து கொள்வதை கொண்டாடி விட்டு வந்த வெப்பருக்கு இது வருத்தம் தரும் .சண்டையில் கிழியாத சட்டையா என்பது போல போட்டின்னா உரசல் சகஜமப்பா ..

39 ஆவது சுற்று 
ஹேமில்ட்டன் பிட்லேன் , அவரை தொடர்ந்து ரோஸ்பெர்க் .அலோன்சாவை அணித்தலைமை KERS ன் முழுவேகத்தை பயன்படுத்தி முன்னேறி டயர் மாற்றம் வர அழைத்தது .

43 ஆவது சுற்று ..
லோட்டஸ் அணிக்கு இரண்டாம் இடம் உறுதி ஆகிவிட்டது கிமி ரைகொணாண் மூலம் .  ஆனால் அந்த அணி கவனம் இப்போது மூன்றாம் இடத்தில் இருந்தது .எனவே அந்த அணியின் க்ரோஜியனை ஏனென்றால் அவருக்கும் மூன்றாம் இடத்து ஃபோர்ஸ் இந்தியாவின் ஆண்ட்ரியன் சட்டில் இடத்தை பிடிக்க முடிவு செய்ய டயர் மாற்றி அந்த கார் இப்போது 5 ஆம் இடம் தொடர ..

44 ஆவது சுற்றில்.. 
 க்ரோஜியன் டயர் மாற்றம் வேலை செய்ய ஆரம்பித்தது .5 ஆம் இடத்து வெப்பரை பின்னுக்கு தள்ளி கைப்பற்றியது .

45 ஆவது இடம் ..
ரோஸ்பெர்க் 4 ஆவது முறையாக டயர் மாற்றம் .
ஹேமில்ட்டன் தனது வேலையை தொடங்கிவிட்டார் .6 ஆம் இடத்தில் இருந்த தனது முன்னால் சக தோழன் ஜென்சனை பின்னுக்கு தள்ளினார் 

47 ஆவது சுற்றில் ..
இப்போது ஹேமில்ட்டன் 5 ஆம் இடத்து மார்க் வெப்பரை பின்னுக்கு தள்ளி அந்த இடம் .
அதேபோல க்ரோஜியன் மூன்றாம் இடத்தை  மிக சாதுர்யமாக 
ஆண்ட்ரியன் சட்டில் இடத்தை பிடித்துவிட்டார் .

53 ஆவது சுற்றில் ..
மீண்டும் வெப்பர் தன்னுடய 5 ஆம் இடத்தை தக்கவைத்து கொள்ள .போட்டி கலக்க தொடங்கியது ...

54 ஆவது முதல் - 56 ஆவது சுற்று வரை 
வெப்பர் Vs ஹேமில்ட்டன்  போரட்டம் முடிவுக்கு வந்தது. ஹேமில்டன் தந்து முழுபலத்தை பயன்படுத்தி 5 ஆம் இடத்தை பிடிக்க சத்தமில்லாமல் அவரை தொடர்ந்து வந்த மெக்லரன் அணியின் செர்ஜியோ பெரஸ் வெப்பரை மேலும் ஒரு இடம் தள்ளி ஏழாம் இடத்திர்க்கு அனுப்பிவைத்தார்.


57 ஆவது கடைசி சுற்று ..
சுமார் 9.1 வினாடிகள் வித்தியாசத்தில் தொடர்ந்து வந்த கிமி ரைகொணனை முந்தி முதலிடம் வந்தார்  ரெட்புல்லின் - செபாஸ்டியன் வெட்டல் 
இரண்டாவது  இடம் லோட்டஸ் ரெனால்ட்டின் - கிமி ரைகொணன் 
மூன்றாவதும் அதே அணியின்          - ரொமைன் க்ரோஜியன் 
மிக பெரிய மாற்றங்கள் இல்லாத பெரிய சுவாரஸ்யம் இல்லாத போட்டியாக முடிந்து விட்டது .


                   நமது அடுத்த வேகம் ஸ்பைன் நாட்டின் Circuit de Catalunya களத்தில்  வரும்  மே  மாதம் 12 ஆம் நாள் பிற்பகல்  5.30 க்கு  நடை பெற இருக்கிறது.     அந்த நாடு        நமது           ஃபெராரியின்  - ஃபெர்ணாண்டோ அலோன்சாவின் சொந்த நாடு .    எனவே அங்கு போட்டி பலமாகவும் அழகாவும் இருக்கும் .     அதர்க்கு ஒரு உதாரணம் இந்த பெண் அங்கு கட்டாயம் வருவார் .யாருடன் என்பதை சொல்லுங்கள் .. 

No comments: