உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Monday, May 20, 2013

ஸ்பெயின் தேசமும் + F1 கோப்பையும் - அலோன்சாவுக்கு சொந்தம் !             

அவ்வளவுதான் சஸ்பென்ஸ். 
                 ஸ்பெயின்  நாட்டின் Circuit de Catalunya களத்தில்  வரும்  மே  மாதம் 12 ஆம் நாள் ஃபார்முலா 1 போட்டி சுற்றின் 5 ஆவது போட்டி நடந்தது.கடந்த ஏப்ரல் 22 பதிவில் முடிவில் , ஃபெராரியின்  - ஃபெர்ணாண்டோ அலோன்சாவின் சொந்த நாடு என்பதை பதிவிட்டோம் அதே போல அந்த படத்தில் இருக்கும் பெண் பெயர் Dasha Kapustina ரஷ்யாவின் மாடல் அழகி .இந்த 23 வயது , 59 கிலோ எடையுள்ள தாஜ்மஹால் அலோன்சாவிர்க்கு  சொந்தம் (காதலி) . அவ்வளவுதான் சஸ்பென்ஸ் .சரி ஸ்பெயின் போட்டி  பயிற்சி முடிவுகள்  ..

                முதல் பயிற்சி போட்டியில் ஃபெராரியின் - ஃபெர்னாண்டொ அலோன்சாவும் 2ஆவதில் ,ரெட்புல் ரெனால்டின் - செபாஸ்டியன் வெட்டலும்,3ஆவது பயிற்சியில் மீண்டும் ஃபெராரியின் - ஃபிலிப் மாசாவும் வந்தாலும்  தகுதி சுற்றின் முடிவு ஆச்சர்யத்தை அளித்தது .ஆம் .மெர்சடீஸ் அணியின் நிக்கோ ரோஸ்பெர்க் முதலிடமும் .அதே அணியின் லீவிஸ் ஹேமில்டன் இரண்டாம் இடமும் வந்து அசத்தினர் .                ஆனால் என்ன செய்ய ?  போன (BAHRAIN GRAND PRIX)  அதர்க்கு முந்திய (CHINA GRAND PRIX ) இரண்டிலும் கூட இந்த அணிதான் முதலிடத்தில் போட்டியை துவங்கியது .ரெட்புல்,ஃபெராரி,லோட்டஸ் அணிகளின் வேகத்திர்க்கு ஈடு கொடுக்கமுடியாமல் அந்த அணிதான் தவிக்கிறதே .சரி அழகிய ஸ்பைன் நாட்டின் காளை சண்டைகளை பார்த்த மக்கள் இந்த போட்டியை எப்படி ரசிக்கிறார்கள் என பார்ப்போம் அது மட்டுமில்லை உள்ளூர் காளை அலோன்சா யாரை முட்டி தூக்க போகிறார் எனவும் பார்க்க வேண்டும்  - ஏனென்றால் அவர் இந்த போட்டியில் 5 ஆம் இடத்திலிருந்து ஆரம்பிக்கிறார் . போட்டி 
முதல் சுற்றில் ...
ரெட் புல்லின் - செபாஸ்டியன் வெட்டல் தனது மூன்றாம் இடத்திலிருந்து ஒரே பாய்சலாக கிளம்ப ,அவரை தொடர்ந்து அலோன்சாவும் ,3ஆவது வளைவில்  ஹேமில்ட்டனை 4ஆம் இடத்திர்க்கு பின்னுக்கு தள்ளி இரண்டு மூன்றாம் இடத்தை வெட்டலும் அலொன்சாவும் பகிர்ந்து கொள்ள, 

ஏழாவது சுற்றில்..
நாழாம் இடமும் சொந்தமில்லாமல் போனது ஹேமில்டனுக்கு காரணம் லோட்டஸ் - கிமி ரைகொணன் .

ஒன்பதாவது சுற்றில் ...
இனியும் இந்த Medium compound டயரை வைத்து போராடுவது சரியல்ல என முடிவெடுத்த மெர்சடீஸ் அணி நிர்வாகம் ஹேமில்ட்டனை அழைத்து போராடும் குணமுள்ள Hard Compound டயருக்கு மாற்ற அலோன்சாவும் அதே டயரை மாட்டி கொண்டு களம் திரும்ப ..
லோட்டஸ் ரெனால்ட்டின் - ரோமைன் க்ரொஜியன் கார் சஸ்பென்சன் கோளாரில் போட்டியை விட்டு வெளியேறியது .பதிமூன்றாவது சுற்றில் ..
அலோன்சாவின் ஒவ்வொரு சுற்று மற்றும் செயலிளும் தன் ஸ்பைன் நாட்டு மக்களுக்காக இந்த போட்டியில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேகம் இருந்தது.அணியின் செயல்பாடும் ஒத்துழைப்பும் அற்புதம் .

20 ஆவது சுற்றில் ..
ஃபிலிப் மாசா டயர் மாற்றம் கேட்க அணி சரி என்றது .அனேகமாக நான்கு முறை டயர் மாற்றம் செய்ய அந்த அணியும் முடிவு செய்து இருக்கும்போல எற்கனவே ரெட்புல் அதே நிலையில்தான்  இருக்கிறது.21 ஆவது சுற்றில் ..
இப்போது அலோன்சா - அதே Hard Compound .மிக வேகமான டயர் மாற்றம் .
கேட்டர் ஹாம் அணியின் - Giedo van der Garde வின் கார்  வீல் பிரச்சனை.பிட் லேன் வரும்போது மூன்று டயருடன் வந்தது .எனவே  அந்த காரும்  வெளியேறியது . இப்போது போட்டியில் 20 கார்கள் மட்டுமே .                                  
               

33 ஆவது சுற்று ..
வெட்டல் மூன்றாவது இடத்தில் போய் கொண்டு இருக்க ரைகொணன் மிக மிக அருகே வந்து அச்சுறுத்த , ஒரு சமயத்தில் வெட்டல் தன்னுடய இடத்தை ரைகொணனிடம் பறிகொடுத்தார் .


35 ஆவது சுற்றில் ..
சாபர் ஃபெராரியின் -நிக்கோ ஹல்க்கேன் பெர்க்கும் STR ஃபெராரியின் ஜீன் எரிக் வெர்ஜினும் பிட் லேன்  பகுதியில் மோதிக் கொண்டனர் .எதிர்பாராத மோதல் .

42 ஆவது சுற்றில் ..
அலோன்சாவின் வேகம் அபாரமாக இருந்தது .தொடரும் ரைகொணனுக்கும் அவருக்கும் ஏழு வினாடிகள் இடைவெளி .

49 ஆவது சுற்றில் ..
இன்னும் 17 சுற்றுகள் மீதமுள்ள நிலையில் தனது கடைசி டயர் மாற்றத்தில்  அலோன்சா தேர்வு செய்து இருப்பது Hard Compound .அனேகமாக இதே தேர்வு தான் முன்னனி கார்களும் தேர்வு செய்ய வேண்டும் நிலை புரிகிறது .

52 ஆவது சுற்றில் ..
மிக திடமான நிலையில் அலோன்சா .தொடரும் காருக்கு 11 வினாடிகள் வித்தியாசத்தில் பறந்து கொண்டு இருந்தது .
35ஆவது சுற்றில் பாதிப்பு அடைந்த STR ஃபெராரியின் ஜீன் எரிக் வெர்ஜின் கார் தொடர முடியாமல் போட்டியை விட்டு விலக வேண்டியாதாகி விட்டது .இவருடன் மோதலை ஏற்படுத்திய நிக்கோ ஹல்க்கேன் விசாரணைக்கு உட்படுவார் .ஸ்பெயின் தேசமும் + F1  கோப்பையும்... 
66 ஆவது வெற்றி சுற்று ..

                                  கடைசிவரை 11 வினாடிகள் தொடர்ந்து கொண்டு இருந்த அலோன்சா - கிமி இடைவெளி இரண்டாவது இடம் வெற்றியை தொடும்போது 9.3 வினாடிகள் வித்தியாசம் .ஆனால் மூன்றாவது வெற்றியை தொட்ட மாசாவுக்கும் அலோன்சாவுக்கும் இடைவெளி 26 வினாடிகள்


5 போட்டிகள் முடிந்த நிலையில் புள்ளி பட்டியலில் முன்னால் சாம்பியன்கள் மட்டுமே முன்னிலை வகிக்கிறார்கள் .

 1. As of: Spanish Grand Prix +/- Points Behind Wins
  1
  Sebastian Vettel - Red Bull
  89
  2
  2
  Kimi Raikkonen - Lotus
  85
  4
  1
  3
  Fernando Alonso - Ferrari
  +1
  72
  17
  2
  4
  Lewis Hamilton - Mercedes
  -1
  50
  39
  0
  5
  Felipe Massa - Ferrari
  +1
  45
  44
  0


            மீண்டும் நாம், வரும் வாரம் மே 26 ஆம் நாள் உலகின் மிக கடினமான போட்டி களங்களின் ஒன்றான Monaco Grand Prix களத்தில் சந்திப்போம் .மேலே   போட்டியை பார்க்க அழைக்க நிற்கும் யுவதிகள் நமது சஹார ஃபோர்ஸ் இந்திய அணிய சேர்ந்தவர்கள் .சரி இப்படி யுவதிகளை கண்டாள் எப்படித்தான் கார் ஓட்ட போகிறார்களோ அந்த அணி ட்ரைவர்கள்  ?அதையும் பார்ப்போம், வாருங்கள் .

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

முந்தைய பகிர்வில் சஸ்பென்ஸ் வைத்திருந்தீர்களா...? வாசிக்கவில்லை...

முடிவில் : அதானே...! எப்படி கார் ஓட்ட முடியும்...?

தொடர வாழ்த்துக்கள்...