உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Thursday, June 6, 2013

நிக்கோ ரோஸ்பெர்க்- மோண்டோ கார்லோ நாயகன்


                 உலகின் ஆபத்தான அதே சமயம் மிக பெரிய வேக அனுபவத்தை தரும் ஃபார்முலா 1 களங்களில் இப்போதைக்கு முதன்மையானது இந்த ”மொனாக்கோ க்ராண்ட் ப்ரிக்ஸ்” போட்டிதான் ( Le Grand Prix de Monaco ). ஐரோப்பாவில் ஃபிரான்ஸ் நாட்டுக்கு தென்கிழக்கு பகுதியில் உள்ள உலகின் இரண்டாவது சிறிய  நகரம்தான் இந்த மொனாக்கோ .வெறும் இரண்டு கிலோமீட்டருக்கு கொஞ்சம் அதிகமான  பரப்பளவையே  கொண்ட  இந்த நகரம் அபாயமான , உயிருக்கு மிக குறைவான உத்ரவாதமுள்ள ஃபார்முலா 1 களத்தை கொண்டு இருந்தாலும் இந்த நகர வாசிகளின்  மொத்த  ஆயுட்காலம் அதிகம் என்பதாக  பேசப்படுகிறது ( 81.89 - உலகில் 12ஆவது  இடம் ) மேலும் இந்த நகரத்தின் அல்லது குட்டி நாட்டின் ருசிகர சம்பவங்கள் - http://f1inindia.blogspot.in/2011/06/blog-post_08.html எனது மற்றொரு  பதிவில் இருக்கிறது.முடிந்தால்  படியுங்கள்..                            இங்கு போட்டி நடந்தது கடந்த மே மதம் 26 ல்.உலகின் மற்ற நாடுகளில் ஃபார்முலா 1 போட்டிகளில் முதல் இரண்டு பயிற்சி போட்டிகள் வெள்ளி கிழமை காலை 10 மணி முதல் 11.30 மற்றும் பிற்பகல் 2 முதல் 3.30 வரையும்  சனிக்கிழமை மூன்றாவது பயிற்சி போட்டி முற்பகல் 11 - 12. வரையும் அதை தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு மூன்று அங்கமாக Q1,Q2 ,Q3 தகுதி சுற்றும் ,ஞாயிறு போட்டியும் நடப்பது வழக்கம் .ஆனால் மொனாக்கொ போட்டிக்களத்தின் பல பகுதிகள் நகரின் !  முக்கிய பகுதி சாலையையும் , கடற் பாலங்களையும்  குறுக்கிட்டு நடத்தபடுவதால்  தொடர்ந்து மூன்று  அந்த  நகர பகுதிகளின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வியாழன் ,சனி ,ஞாயிறு மேற்குறிப்பிட்ட நேரத்தில் நடக்கிறது .
                                  எனக்கு ,இந்த பயிற்சி  போட்டிகளில் P1,P2,P3 மற்றும் தகுதி போட்டிகளில் Q2 ,Q3  ஆகிய அனைத்திலும் தொடர்ந்து முதல் இடத்தை பிடித்து மெர்சடீஸ் அணியின் நிக்கோ ரோஸ்பெர்க் தனி தனியே பதியும் வேலையை குறைத்து விட்டார் .இரண்டாவது இடத்தை அதே அணியின் லீவிஸ் ஹேமில்ட்டனும் ,மூன்றாவது இடத்தை ரெட்புல் ரெனால்ட்டின் செபாஸ்டியன் வெட்டலும் பகிர்ந்து கொண்டார்கள் . இனி போட்டி...                    மூன்றாவது பயிற்சி போட்டியே இந்த களத்தின் அபாயத்தை சொல்லுவது மாதிரி முதல் வளைவில் (Turn 1 ) ஃபெராரியின் - ஃபிலிப் மாசாவும் ,லோட்டஸ் ரெனால்ட்டின் -ரொமைன் க்ரோஜியனும் மற்றும் சஹாரா ஃபோர்ஸ் இந்திய அணியின் ஆண்ட்ரியன் சட்டிலும்  களத்தின் பக்க சுவற்றில் மோதி கொண்டதால் காருக்கு சேதம் ஏற்பட்டது .


        இதில் ஃபிலிப் மாசா கார் மிக சேதமானது அதனால் அந்த கார் குறிபிட்ட பயன்பாட்டுக்கு பிறகு மாற்ற வேண்டிய கியர் பாக்ஸ் முன்னரே மாற்றியதால் 20 ஆம்  இடத்துக்கு பின்னால் போட்டியை தொடங்க பணிக்கப்பட்டது .முதல் சுற்றில் ..

மிக மெதுவான துவக்கத்தை முதலிடத்து  நிக்கோ ரோஸ்பெர்க் கொடுத்தாலும் ,தொடர்ந்து வந்த லீவிஸ் ஹேமில்ட்டனை முன்னேற விடவில்லை .
பின் வரிசையில் அதர்குள் முன்று கார்கள் மோதி விளையாடி கொண்டது .கேட்டர் ஹாமின் - Giedo van der Garde கார் ,வில்லியம்ஸ் ரெனால்டின் - Pastor Maldonado அடுத்து  சஹாரா ஃபோர்ஸ் இந்திய அணியின் - Adrian Sutil மூன்று கார்களும் பிட் லேன் போனது .

இரண்டாவது சுற்றில் ..

ஃபெராரியின் ஃபெர்னாண்டோ அலோன்சா கார் தொடங்கிய ஆறாவது இடத்திலே போய்கொண்டு இருந்தது. முன்னே சென்று கொண்டு இருக்கும் கார்களில் ஏதேனும் மோதல் அல்லது பிரச்சனை ஏற்பட காத்து இருக்கலாம் .. 

ஏழாவது சுற்றில்.. 
கேட்டர்ஹாம் ரெனால்டின் - சார்லஸ் பிக் கார் கியர் பாக்ஸ் பிரச்சனையால் காரிலிருந்து புகை வெளியேற அந்த கார் போட்டிக்கு விடை பெற்று பிட் லேன் திரும்பியது .
முதல் காரின் வெளியேற்றம் ..

12 ஆவது சுற்றில்..

முதலிடத்தில் போய் கொண்டு இருக்கும்  ரோஷ்பெர்க்குக்கும் அவரின் அணியின் ஹேமில்டனுக்கும் இடிவெளி வெறும் 1.8 வினாடிகள்தான் .இன்று அணி மேலிடமே சொன்னாலும் ஹேமில்டனுக்கு விட்டு தர மாட்டார் ரொஷ்பெர்க் .காரணம் ஒவ்வொரு ஃபார்முலா 1 ட்ரைவரின் கனவும் இந்த ஆபத்தான மொனாக்கோ களத்தில் ஒருமுறையேனும் வெற்றியை ருசிக்க வேண்டும் என்பதே .ஆனால் ஹேமிடனுக்கு அடுத்து வரும் வெட்டல் இந்த களத்தை போல ஆபத்தானவர். எப்போது வேண்டுமானலும் தன் கைவரிசையை காட்டி பின்னுக்கு தள்ளுவார் என்பது ரோஷ்பெர்க்குக்கு தெரியும் .

21 ஆவது சுற்றில்..

11 வினாடி இடைவெளிக்குள் முதல் 7 கார்களும் “விசுக் , விசுக் “ என்று மொனாக்கோவின் கடல் காற்றின் ஈரத்தை சூடேற்றி கொண்டு இருந்தன .STR - ஃபெராரியின் பிட் லேன் தவிர எந்த பிட்லேனும் டயர் மாற்றும் நிலைக்கு தயாராகவில்லை  .இன்று போட்டியை தொடங்கிய 22 கார்களில் 4 கார்களை தவிர 18 கார்களும் Super SOft Compound டயரில் பறந்து கொண்டு இருந்தன .


25 ஆவது சுற்றில் ..

நாம் பேசியதை கேட்டது மாதிரி ,ரெட்புல்லின் மார்க் வெப்பர் டயர் மாற்றம் சென்று SOft Compound டயரை தேர்வு செய்தார் .அனைத்து அணிகளின் இன்றைய டயர் மாற்ற நிலைபாடு இரண்டு முறை மட்டுமே .காரணம் இந்த களத்தின் ஒரு சுற்றின் நீளம் 3.34 கி.மீட்டர்தான் .ஆனால் அதிகபட்ச வேகமாக இந்த களத்தில் ஃபார்முலா 1 காரின் வேகம் 283 கி.மீ .இதனால் மொத்த களத்தின் தூரம் 260.52 கி.மீட்டரி குறைந்தது 3 ல் 1 பகுதியான 87  கி.மீ  தூரத்தை அதாவது 26 சுற்றை கடந்த பிறகு  முதல் டயர் மாற்றம் செய்வதையே சரியானது .இந்த கணக்கை சரிவர துவங்கியது ரெட்புல் ரெனால்ட் அணிதான் .28 ஆவது சுற்றில் .. 

ஃபெராரியின் - ஃபிலிப் மாசா தனது பயிற்சி போட்டியின் போது ஏற்பட்ட விபத்து மாதிரியே இப்போதும் நடந்தது .ஆனால் சற்று குறைவாக ,சிறு காயங்களுடன் மாசா தப்பினார் ..ஆனாலும் கார் அகற்றும் வரை சேஃப்டி கார் போட்டியை வழி நடத்தியது .
               


     முதலாளித்துவம் ஃபார்முலா 1 போட்டியிலும் மேலோங்கி நிற்கிறது என்பதை இந்த களத்தின் ஆபத்து வெளிச்சமிடுகிறது .உலகத்தின் மிக அதிக Down Force அதிகம் உள்ள களம் இதில் நடத்தபடும் அனைத்து போட்டிகளுமே விபத்தை சந்தித்துதான் முடிந்து இருக்கிறது .அதிக வருவாய் மற்றும் ஆபத்தான பொழுது போக்காக ஃபார்முலா 1 ரேஸ் தனது அடையாளமாக காட்டும் வரை இந்த களத்தின் போட்டி ஓயாது .ஆனால் மிக பெரிய அச்சுறுத்தலான களம் இது .

31 ஆவது சுற்றில் ..

மூன்றாவதாக வந்து கொண்டு இருந்த முக்கிய போட்டியாளரான வெட்டல் டயர் மாற்றம் சென்ற சுற்றில் சென்றதாலும் , சேஃப்டி காரின் வழி நடத்தலும் மெர்சடீஸ் டயர் மாற்றத்திர்க்கு வர காரணமாயிற்று .இரண்டு காருமே SOft Compound டயரை பொருத்தி கொண்டது .


44 ஆவது சுற்றில் ..

மீண்டும் ஒரு விபத்து .ஆம் ஆனால் பெரிதாக .வில்லியஸ் ரெனால்ட்டின் பாஸ்டெர் மால்டொனாடொ காரும் மற்றும் மவுரிஸ்ய காஸ்வொர்த்தின் - மேக்ஸ் சில்ட்டன் காரும் விபத்தில் மாட்டி  கொண்டது .குறுகிய களத்தில் முந்தி செல்லும் வேகத்தில் இந்த விபத்து நிகழ்ந்து விட்டது .இதில்  மால்டொனாடொ கார் சுமார் மூன்றடிக்கு மேல் மேலே தூக்கப்பட்டு விழுந்தது .

போட்டி முற்றிலுமாக நிறுத்தபட்டது .
மீண்டும் சுமார் 20 நிமிடத்திர்க்கு பிறகு போட்டி தொடங்கியது ..
இப்போது வரிசையில் ரோஸ்பெர்க் ,வெட்டல்,வெப்பெர் ,ஹேமில்ட்டன் ,ரைகொணன்,பெர்ஸ்,அலோன்சா ,பட்டன் ...

58 ஆவது சுற்று ..

மவுரிஸ்ய காஸ்வொர்த்தின் - மேக்ஸ் சில்ட்டன் விபத்து பிரச்சனையில் விபத்து ஏற்பட காரணம் என்பதாக பெனால்ட்டி அனுபவிக்கு தருவாயில் அந்த அணியின் இன்னொரு  ட்ரைவர் ஜுலஸ் பியான்சி பிரேக் பிரச்சனையால் வெளியேறினார் .மொனாக்கொ போட்டியின் மிக அபாயமானது “நொவேலி திருப்பம் ”(Nouvelle Chicane )  அதில் STR ஃபெராரியின் டேனியல் ரிக்கைடோ கார் முன்னே சென்று கொண்டு இருந்த லோட்டஸ் ரெனால்ட்டின் - ரொமைன் க்ரோஜியன் காரை தாக்கியது இதில் லோட்டஸ் காரின் பெரும்பகுதி சேதம் அடைந்தது .இரண்டு கார்களும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டியை விட்டு வெளியேறியது இத்துடன் மொத்தம் ஆறு கார்கள் போட்டியை விட்டு விலகிவிட்டது .
63 முதல் 66 சுற்றில் ..
சேஃப்டி காரின் ஆதிக்கம் .

    மீண்டும் இப்போது வரிசையில் ரோஸ்பெர்க் ,வெட்டல்,வெப்பெர் ,ஹேமில்ட்டன் ,ரைகொணன்,பெர்ஸ்,சட்டில் ,அலோன்சா ,பட்டன் ,வெர்ஜின் ...

70 ஆவது சுற்று ,,
ரைகொணனுக்கும் பெர்ஸ் காருக்கும் போட்டொ போட்டி எற்பட்டு ரைகொணன் காரி டயர் பஞ்சர் ஆகி விட்டது .அலொன்சா இந்த மாதிரி ஒரு திருப்பத்துக்காக காத்து இருந்தார் .

72 ஆவது சுற்று 
ரைகொணனை பின்னுக்கு தள்ளிய மெக்லரன் மெர்சடீசின் - செர்ஜியோ பெர்ஸ் காரில் ப்ரேக் பிரச்சனை ஏற்பட மெல்ல களத்தை விட்டு ஒதுங்கியது .ஏழாவது காராக மெக்லரண் வெளியேற ,..போட்டியில் இப்போது 15 கார்கள் மட்டுமே .78 ஆவது வெற்றிச்சுற்று ..

மொனாக்கோ நகரின் - மோண்டோ கார்லோ போட்டியில் மிக அற்புதமான வெற்றியை ,பயிற்சி போட்டி முதல் கடைசி வரை எனக்கு மட்டுமே இந்த கோப்பை என, சாதனை வெற்றியை பதிவு செய்தார் மெர்சடீஸ் அணியின் நிக்கோ ரோஸ்பெர்க்.

இரண்டாவது இடம் ..ரெட்புல் ரெனால்ட்டின் -செபாஸ்டியன் வெட்டல் ,மூன்றாவது இடமும் அதே அணியின் மார்க் வெப்பர் .


      நிக்கோ ரோஸ்பெர்க்.அவரது  இந்த ஆண்டில் முதல் -முதலிடத்து வெற்றியை தனது ஜெர்மானிய காதலி  Vivian Sibold யுடன் பங்கிட்டு மகிழ்கிறார் ( தொப்பி இடிக்குது பாஸ் !)

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆயுட்காலம் 81.89 ஆக இருப்பது ஆச்சரியம் தான்... (வாழ்வில்) வேகம் கூடாது என்று முடிவு செய்து விட்டார்கள் போல... சுற்று பயணயித்தாயிற்று...

மூக்கை காணோம்...!

BITS and HITS said...

my fav. team mercedes.. keep gong..