உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Thursday, March 21, 2013

Australian GP - Kimi Raikkonen Win .

எனது புதிய அவதாரம் !!!

       கடந்த இரு ஆண்டாக ரேஸ் போட்டிகளை அதன் நடக்கும் நாடு பற்றியும் ,களம் பற்றியும் ,முக்கியமான சுற்றுக்களையும் , வேறு சில உபரி விசயங்களையும் கற்றுகொண்டுடே  எழுதி வந்தேன் .காலம் மாறிவருகிறது.விரல் நுனியில் ’டச்’ மாயஜாலத்தால் கற்று கொள்ள ஆயிரமாயிரம் விசயங்கள் எளிதாகவிட்டது .போட்டிகளை  Live Streaming ஆக பார்க்கலாம் ஆனால் அதர்க்கு பின்னே பல விசயங்கள் இருப்பதால் அது பற்றி பேசலாமே ! 


           எனவே ,இப்போது கொஞ்சம் ட்ராக் மாறி ஒவ்வொரு போட்டியின் வெற்றி பற்றியும் , தொழில்நுட்ப ஆதிக்கத்தின் விளைவால் கை மாறும்  வெற்றியின் போக்கையும், ஆர்வமுள்ள நமது எதிர்கால சந்ததிகள் எப்படி ஃபார்முலா போட்டிக்குள் நுழையலாம்  அதர்க்கு கார்டிங்  ( Karting ) போட்டிகளில் இருந்து உயிரை பணயம் வைத்து பணம் சம்பாதிக்க படிப்படியாய் இன்று புகழ் பெற்றவர்கள் எப்படி வளர்ந்தார்கள்  அவர்களின் பொது வாழ்கை காதல் ,திருமணம் ,பொழுதுபோக்கு  என்பது போல  ஜாலியாக பேசலாம் என தோன்றுகிறது. அதன் துவக்கம் ..இனி ...இங்கே....


நிகழ்காலம்..

         2013 ஆம் ஆண்டின் முதல் வெற்றியுடன் லோட்டஸ் ரெனால்ட்டின் அணியும் அதன் முதலிடத்தை பெற்று இது தான் நான் என்பது போல இங்கு வெற்றி தட்டுடன் நிற்க்கும் கிமி ரெய்கொணன் சொல்வது போல இருக்கிறது .

கடந்த காலம்..

34 வயதை தொடும் நிலையிலிருக்கும் கிமி தனது ஃபார்முலா 1 போட்டிக்கான முதல் அடியை இதே ஆஸ்த்ரேலியாவில் கடந்த 2001 மார்ச் மாதம் 4 ஆம் தேதி நடந்த போட்டியில் 6 ஆம் இடத்தை பிடித்து ஒரு புள்ளி பெற்று சாஃபர் பெட்ரோனஷ் (Sauber Petronas அணிக்காக  தொடங்கினார் என்பதே இந்த களத்தில் இவரின் ராசி. எளிதில் களத்தில் உணர்ச்சி வசப்படும் இடத்தில் கூட அமைதியை கடைபிடிப்பவர் .ஆனால் போட்டியில் சற்றும் வெற்றியை விட்டுகொடுக்காத போராளி ! இந்த போட்டியில் எழாம் இடத்தில் தொடங்கி முதலிடத்தை பெற்று இருப்பதே அவரின் போராட்ட குணத்திர்க்கு சான்று .

2007 ல் உலக சாம்பியன் பட்டம்.

            2002 - 2006 வரை McLaren-Mercedes பிறகு 2007 - 2009 வரை  Ferrari இப்போதுதான் 2007 ல் உலக சாம்பியன் பட்டம் .  2010 - 2011.  எந்த அணியிலும் இல்லை 2012 மீண்டும் Lotus-Renault இப்போதுவரை .இந்த ஆண்டு மிக சிறப்பாக ஆரம்பித்து இருக்கிறார் கிமி.

2 ம் , 3 ம்...
       அவரை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் ferrari- ஃபெர்னாடோ அலோன்சா .கடந்த ஆண்டில் 3 புள்ளிகளில் தவறவிட்டவர் ,5 ஆம் இடத்தில் தொடங்கி 2 ஆம் இடம் .இந்த ஆண்டு மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் 32 வயது ஸ்பானிஷ் துள்ளும் குதிரை  .

      மூன்றாமவர் கடந்த மூன்றும் தொடர் சாம்பியன்  Red pull -செபாஸ்டியன் வெட்டல் 26 வயதே தொட்டு கொண்டு இருக்கும் இளம் முரட்டு காளை .


நமது அடுத்த போட்டி இங்கே நமக்கு மலேசிய நாட்டின் Sepang International Circuit ல் வரும் ஹாயிறு - 24 மார்ச்சில் நடக்கிறது .  அடுத்த வேக யுத்தத்தை ரசிக்க போகலாமே ...

No comments: