உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, August 13, 2011




The Holy Crown of Hungary 

பார்முலாவின் 11 சுற்று போட்டி ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடந்தது .விறுவிறுப்பான இந்தபோட்டியின் முடிவுகள் F1 ரசிகர்களை உற்சாகபடுத்தி இருக்கிறது . ஆம்.
 ஒரே திசையில் பயணித்த வெற்றி சரித்திரம் சற்றே விலகல் கோணத்தை நோக்கி புறப்பட்டு இருப்பது போட்டியின் மேல் உள்ள ஈர்ப்பை அதிகபடுத்தி இருக்கிறது .
Danube River


ஹங்கேரி மத்திய ஐரோப்பாவின் ஏழு நாடுகளின் எல்லைகளை( ஆஸ்திரிய ,உக்ரைன், சுலவாக்கியா ருமேனியா,செர்பியா,க்ரோவாட்ஷ்கா சுலவேனியா ) தொட்டு உறவாடும் நிலம் 
சூழ்ந்த நாடு .ஏனைய நாடுகளின் நாகரீகங்களை ஏற்று வளைந்து கொடுக்கும் .



இங்குள்ள அழகிய தனுபே(Danube River) ஆற்றின் அழகு 
மாலை நேரத்து மயக்கத்தை அதிகபடுத்தும் சக்திகொண்டது .


Magyar Suzuki, the Hungari
ஜப்பானின் மகயர்  சுசுகி நிறுவனம் இங்குள்ள ஈஸ்ழ்டேர்கோம் (Esztergom) நகரில் வியாபித்துள்ளது .சுமார் 6300 தொழிளார்களுக்கு வேலை வாய்ப்பை தந்துள்ளது .சுசுகி நிறுவனத்தின் ஒன்பதுக்கும் மேற்பட்ட வகையான கார்கள் இங்கு உற்பத்தி செய்து அனுப்பபடுகிறது .



ஜெர்மனின் ஆடி (Audi)கார் தயாரிப்பு நிறுவனத்தின் மிக நவீனமாக்கப்பட்ட தயாரிப்பு தொழில் கூடம்  கியோர்(Gyo"r) நகரில் உள்ளது மேலும் சிறப்பு .




Eni Magyar Nagydíj (Hungary Track) 

ங்குள்ள ஹங்கேரோரிங் (Hungaroring) களம் எழுபது சுற்றுக்களை கொண்ட 306.630 கி.மீ நீளமும் 70 சுற்றுக்களையும் கொண்டது இங்கு கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஒன்பது போட்டிகள் நடந்து முடிந்துள்ளது .(களம் எழுபது சுற்றுக்கு மாற்றியமைத்த பின் .)






இந்த களத்தின் வேக நாயகன் நமது பார்முலாவின்- பார்முலா மனிதர் ,மைகேல் ஷூமேக்கர் .கடந்த 2004 ஆம் ஆண்டு பெர்ராரி அணியிளிருந்தபோது 1:19.071 நிமிடத்தில் கடந்ததே இன்று வரை தொடமுடியாத சாதனை .

ஜெர்மனில் நடந்த கடந்த போட்டியின் வெற்றிக்கு பிறகு மெக்லரண் மேர்சீடிஸ் அணியின் லிவிஸ் ஹேமில்டன் உற்சாகமாக இருந்தார் .ஹங்கேரியன் களம், மேக்ளரனின் ராசியான களம் .கடந்த 2005,2007 -2009 வரை நான்கு போட்டிகளில் முதலிடமும் ,2003,2006 ஆண்டுகளில்இரண்டு முறை  இரண்டாம் இடமும் தொட்ட அணி .எனவே இந்த களத்தின் நடந்த எட்டு போட்டிகளில் (2010 வரை ) ஆறு போட்டிகள் மெக்லரண் வசம் என்பது கூடுதல் பலம்.

கடந்த இரண்டு போட்டிகளில் முதலிடத்தை தவறவிட்ட செபாஸ்டியன் வெட்டல் ஒரு நெருக்கடியின் விளிம்பில் இருந்தார்.
ஆனால் தகுதி சுற்றில் முதலிடம் வந்து அசத்தினார் .இரண்டாம் இடத்தில் லிவிஸ் ஹேமில்டன் ,மூன்றாம் இடத்தில் ஜென்சன் பட்டன் போட்டியை துவக்கினார்கள் .


ஹங்கேரியின் உள்ளூர் நேரப்படி பிற்பகல் இரண்டு மணிக்கு போட்டி தொடங்கியது .இந்திய நேரப்படி மாலை 5.30 க்கு தொடங்கியது .


 முதல் சுற்றின் துவக்கத்திலிருந்தே லிவிஸ் ஹேமில்டன் முதலிடத்தில் இருந்த செபாஸ்டியன் வெட்டலுக்கு நெருக்கடி கொடுத்தார் என்பதைவிட அவரை தவறு செய்ய தூண்டினார் ...
பலன் கிடைத்தது .ஐந்தாவது சுற்றில் ஒரு திருப்பத்தில் வெட்டல் பின்தங்க ,பாய்ந்து பிடித்தது போல முதலிடத்தை (Race Leader) நிலையை அடைந்தார் .வெட்டளின் மனநிலையில் கடந்த இரு போட்டிகளில் அந்த முதலிடத்திர்க்கான போர்குணம் இருந்தாலும் தான் இடத்தை தக்க வைத்துகொள்ளும் ஒரு அவசரம் தெரிகிறது .

எட்டாவது சுற்றில் நான்காவது இடத்தில் இருந்த பிலிப் மாசா கார் ஒரு சுற்று (Spin) ஆனதால் எட்டாம் இடத்திற்கு தள்ளபட்டார் .காரின் பின்பகுதி சேதமானது .

பதிமூன்றாவது சுற்றில் ஹேமில்டன் டயர் மாற்ற வரவே அவரை பின்தொடந்து வெட்டலும் வந்தார் .இது தொடர்ந்து நான்கு முறையும் நடந்தது .


பதினான்காவது சுற்றில் வெட்டலை ஜென்சன் பட்டேன் பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை அடைந்தார் .

இருபதாவது சுற்றில் லோட்டஸ் ரெனால்டின் ஜர்னோ ட்ரூல்லி நீர் கசிவு (Water Leaks ) காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினார் .அதே அணியின் மற்றும் ஒரு வீரர் ஹெயக்கி கொவளினேன் அதே காரணத்தால் ஐம்பத்தி ஐந்தாம் சுற்றில் வெளியேறினார் என்பதுவும் சோகமான விஷயம் . 


 
இருபத்தி மூன்றாம் சுற்றில் ரெனால்ட் அணியின் நிக் ஹெஇட்பெல்ட (Nick Heidfeld) பிட் லேன்ட் வந்து கிளம்பும்போது அதிகபடியான புகை தள்ள ,கார் போட்டி களத்தை தொடுவதற்கு சில வினாடிகளுக்கு முன்னரே தீப்பற்றி கொண்டது .மிக வேகமாக காரிலிருந்து தப்பித்தார் .

இருபத்தி ஆறாவது சுற்றின் முடிவில் ,மைக்கல் ஷூமேக்கர் பெர்ரரியின் பிலிப் மாசாவுடன் மோதலுக்கு பிறகு கியர் பாக்ஸ் பிரச்சனையால் வெளியேறினார் .இந்த ஆண்டின் மூன்றாவது வெளியேற்றம் .(Retirement).

34 ஆவது சுற்றில் நிகோ ரோச்பெர்கை பிலிப் மாசா பின்னுக்கு தள்ளினார் .

41 ஆவது சுற்றில் ஹேமில்டன் டயர்( Soft - yellow ) மாற்ற வந்தார் .
அவரை தொடர்ந்து வேட்டல் ... 

களத்தின் பரப்பில் மழை விட்டு ,விட்டு வந்து போனதால் கார்களின் டயர் மாற்றம் மிக பல குழப்பம் தந்தது .பிரெல்லி  (Pirelli) கம்பெனியின் இண்டர்மீடியட் டயர்( Intermediate - light blue) மற்றும்  வெட்( Wet - orange ) டயர்களும் மாற்றி மாற்றி ஓய்ந்து போக வேண்டியாதாகிவிட்டது 
.
46 ஆவது சுற்றில் அலோன்சாவை வெட்டல் பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தில் தொடந்தார் .கடைசிவரை .
48 ஆவது சுற்றில் முதலிடத்தில் இருந்த ஹேமில்டன் சட்டென ஒரு சுற்று சுற்றி இரண்டாம் இடம் வந்தார் .மழையின் தாக்கம் அதிகம் இல்லை என்றாலும் களத்தின் ஈரம் சோதித்தது .அந்த வழியாக வந்த பெல் டி ரேச்டாவை பயமுறுத்தினார் .அவர் களத்தை விட்டு புல் வெளிக்கு தள்ள பட்டதால்  drive-through penalty முறையில்  ஹேமில்டன் தண்டிக்க பட்டார் .இந்த விஷயம் மிக திருப்புமுனையாக அமைந்தது .இரண்டாவது இடத்தில் இருந்த அவர் அணியின் ஜென்சன் பட்டன் இந்த வாய்ப்பை, மிக அருமையாக, கெட்டியாக பிடித்துகொண்டார் .கடைசிவரை .

52 ஆவது சுற்றில் வெட்டலும், ஹேமில்டன் போல ஒரு சுற்று .

64 ஆவது சுற்றில் அதுவரை ஐந்தாவது உடத்தில் இருந்த மார்க் வெப்பரை பின்னுக்கு தள்ளி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹேமில்டன் நான்காவது இடத்தில்- போட்டியின் முடிவில் வந்தார்.

இந்திய நேரப்படி மாலை 7.20 க்கு போட்டி முடிந்தது .

போட்டிமுடிவுகள் ....

முதல் இடத்தை பிடித்தவர் ஜென்சன் பட்டன் 

இரண்டாம் இடம் ஜெர்மனின் இளம் புயல் செபாஸ்டியன் வெட்டல்


மூன்றாம் இடத்தில் பெர்னாண்டோ அலோன்சா .

அடுத்த போட்டி வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி பெல்ஜியம் நாட்டில் நடக்க இருக்கிறது .

Jenson Button’s girlfriend Jessica Michibata 

இன்றைய போட்டியின் கதாநாயகன் செய்திகளிலும் கேமராவின் பார்வையிலும் மிகவும் பிரசித்தம் 

No comments: