உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, September 17, 2011

ஃபெர்ராரியின் கோட்டையில் ரெட்புல் கொடி
.தெற்கு ஐரோப்பாவிலுள்ள இத்தாலியில் மோன்சா நகரின் அருகே-Autodromo Nazionale Monza       களத்தில் நமது பார்முலா 1 ன் பதிமூன்றாவது போட்டி (11.09.2011) நடந்தது .

Michelangelo creation

உலகையே திரும்பிப்பார்க்க வாய்த்த பல அபூர்வத்தின் பிறப்பிடம் இத்தாலி உலகுக்கு இத்தாலியின் ஓவிய ,கட்டிட ,சிற்ப,கவிதை மேலும் பல் கலைகளின் முன்னோடிகளான லியோனார்டோ டா வின்சி (கடைசி விருந்து ,மோனலிசா வரைந்தவர் ),மைக்கலாஞ்சலோ(கடைசி தீர்ப்பு ,ஆதாம் ஓவியங்கள் ) மிக சிறப்பு
.இன்றும் உலகின் ஆடை வடிவமைப்பின் நுட்பங்களில் ஆட்சி செய்துகொண்டு இருக்கும் நாடு இத்தாலி .
இன்னும் நிறைய ...

Gondola Boat

இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம் வெனிஸ் இந்த நீர் நகரம் 117 தீவுகள் மற்றும் 150 சிறு மற்றும் பெரிய வாய்கால்களை கொண்டதால் இங்கு கொண்டோலோ படகுகள் மூலம் பயணிப்பது மிக பிரசித்தம் .நகரமே நீரில் மிதக்கும் அழகு .

Enzo - Ferrari (Founder)

அடுத்து உலக வேகத்தின் ஊற்று எனப்படும் பெர்ராரி கம்பெனியின் ஆரம்பம் (1927) இங்குதான் . இத்தாலியின் ஏற்றுமதியில் கணிசமான பங்கு பெர்ராரிக்கு உண்டு . 

ஒரு நாட்டுக்குள் இரு தனி நாடு உள்ளது என்பது வித்தியாசமான விசயம் .ஆம் இங்குதான் கத்தோலிக்க கிறித்தவத்தின் தலைமையகமான வத்திகான் நகரம் அமைத்துள்ளது .

San Marino

அதே போல அப்பெனின் மலைகளில் அமைந்துள்ள சான் மேரினோ என்ற மிக பழமையான குடியரசு நாடும் இத்தாலிய பகுதிக்குள் அமைந்துள்ளது .

பார்முலா 1 ன் (1950 முதல் 2010 வரை) அறுபது போட்டிகள் நடந்த ஒரே களம் Autodromo Nazionale Monza 

Autodromo Nazionale Monza 

 மிக பல சீரைமைப்புக்கு உட்பட்ட நவீன இந்த களத்திற்கு இது பனிரெண்டாவது போட்டி .மொத்த களத்தின் தூரம் 306.720 கி மீ ஆகும் .மொத்தம் 53 சுற்றுக்கள் கொண்டது .ஒரு சுற்று 5.793 கி.மீ .

Rubens Barrichello

இந்த தூரத்தை கடந்த 2004 ஆம் ஆண்டில் பெர்ராரி அணிக்காக ரூபென் பேரிகொலோ 1:21.046 நிமிட நேரத்தில் கடந்தது சாதனையாக இருக்கிறது .இப்போது இவர் வில்லியம் காஷ்வோர்த் அணியில் இருக்கிறார் .


இத்தாலிக்கு சொந்தமான இரண்டு அணிகள் ஒன்று பெர்ராரி மற்றுமொரு அணி டோரோ ரோசோ .இத்தாலியின் வீரர்கள் ஒருவர் லோட்டஸ் அணியின் ஜர்னோ த்ரூல்லி ,அடுத்தவர் ஹிஸ்பானிய அணியின் விடன்ட்டனியோ லிச்சி(ஆனால் இருவரும் ஒரு புள்ளி கூட எடுக்கவில்லை )


ஆனால் இந்த நாட்டின் பெர்ராரி அணி இதுவரை (1950 க்கு பிறகுள்ள போட்டிகளில் ) பதினைந்து முறை சாம்பியன் .(அடுத்த இடத்தில் மெக்ளறேன் அணி பனிரெண்டு முறையும், வில்லியம்ஸ் ஏழு முறையும் பெற்றுள்ளது )

இத்தாலியின் டிரைவர்கள் 1950,1952-1953 மூன்றுமுறை மட்டுமே பெறமுடிந்தது .அதில் முதல் இடம் இங்கிலாந்து பதினாலு முறை .பிரேசில் மற்றும் ஜெர்மனி வீரர்கள் தலா எட்டு முறை .

இனி வரும் போட்டிகள் டிரைவர்களுக்கான இரண்டாம் இடத்தையும் ,அணிகளின் முதல் இடத்தையும் தீர்மானிக்க வாய்ப்புகள் இருப்பதால் போட்டிகளில் விறு விறுப்புக்கு குறைவு இருக்காது .

தகுதி சுற்றில் மிகவும் எதிர்பார்க்க பட்ட பெர்ராரி அணி நான்கு மற்றும் ஆறாம் இடத்தை அடைந்தது .ஆனால் மெக்ளரனின் -மெர்சீடிஸ் அணி இரண்டு மூன்றாம் இடம் வந்து முதல் இடத்தை தக்க வைத்த ரெட்புல் அணியின் செபாஸ்டியன் வெட்டலை நெருக்கடி கொடுக்க வந்தது .ஏனென்றால் இதுவரை செபஸ்டியன் முதலிடத்தை அதிகம் பறிகொடுத்தது இந்த அணியிடம் மட்டுமே அதிகம் .இங்கிலாந்தின் சாதுர்ய சக்தி வெட்டலை மூன்று முறை பதம் பார்த்தது (சீனா ,கனடா ,ஹங்கேரி )
போட்டி இந்தியா நேரப்படி பிற்பகல் 5.30 க்கு (இத்தாலியில் மதியம் இரண்டு மணி) போட்டி துவங்கியது .முதல் சுற்று ஆரம்பித்தவுடனே ...

ஹிஸ்பானிய அணியின் விடன்ட்டனியோ லிச்சி காரின் ( vitantonio luzzi)எதிர்பாராத மோதல் குழப்பத்தால்அவருடைய காரோடு மெர்சீடிசின் நிக்கோ ரோச்பெர்க் ,ரெனால்ட் அணியின் விட்டாலி பெட்ரோவே ஆகிய  மூன்று கார்கள் வெளியேறியது .களத்தில் புயல் கிளம்பியது போல ஒரு பதஷ்டம் எல்லோரின் முகத்திலும் தெரிந்தது .


அதற்குள் முன்பகுதியில் பெர்ரரியின் அலோன்சா வெட்டலை முந்தி பறக்க ,விடமாட்டேன் என்பதுபோல வெட்டல் ஐந்தாவது சுற்றில் தான் இடத்தை தக்க வைத்துகொண்டார் .

 முதல் சுற்றின் இறுதிக்குள் விர்ஜின் காஸ்வோர்தின் ஜெரோமே அம்ப்ரோசிய வெளியேறினார்
ஆறாவது சுற்றில் மைக்கேல் ஷூமேக்கர் ஆலோன்சாவுடன் மோதி தப்பித்தார் .அதோடு 2004 இருந்த ஷூமேக்கர் திரும்பிவந்தது போல வேகம், வேகம் என பறந்தது .


ஐந்தாவது சுற்ற்க்குள் மார்க் வெப்பரின் பிலிப் மாசவின் காரின் பின்பகுதியில் மோதி வெளியேறினார் இந்த ஆண்டில் ரேசிளிருந்து முதன் முறையாக வெப்பர் வெளியேறுகிறார் 
.
 ஒன்பதாவது சுற்றில் போர்ஸ் இந்தியாவின் ஆண்ட்ரியேன் சூட்டில் ஹைட்ராலிக் பிரச்சனையால் வெளியேறினார்.
 பத்தாவது சுற்றில் ஹெமில்டனும் ஷூமேக்கேரும் துரத்தல் யுத்தமே தொடர்ந்தது .பதினாறாவது சுற்றில் ஹேமில்டன் முந்தினார் .ஆனாலும் 22 ஆவது சுற்றில் தொடர்ந்து பயமுறுத்திய ஷூமேக்கரை தன அணியில் புகார் அளித்தார் .ஆனால் தொடர்ந்து மோதல் இருபத்தி எட்டாவது சுற்றில் நாலாம் இடம் பிடித்தார் .மொத்த கேமிராவின் பார்வை இவர்கள் மேல் இருந்தததால் முதல் வரிசையில் என்ன நடக்கிறது என தெரியவில்லை .இருபத்தி ஆறாவது சுற்றில் சப்பர் அணியின் கமுய் கொபயசி கியர் பாக்ஸ் பிரச்சனை வர வெளியேறினார் .அதே அணியின் செர்கியோ பெரெழ் அதே பிரச்சனையை சந்தித்து முப்பத்தி இரண்டாவது சுற்றில் வெளியேறினார்.
 முப்பத்தி ஒன்பதாவது சுற்றிற்கு மேல் தொடர முடியவில்லை .ஏற்கனவே அவர் அணியின் விடன்ட்டனியோ லிச்சி கார் முதல் சுற்றில் வெளியேறி இருந்தது .
இதுவரை மொத்த இருபத்தி நான்கு காரில் ஒன்பது கார் வெளியேறி விட்டது .அவ்வளவு கடினமான மொனோக்கோ போட்டியில்கூட இப்படி நடக்கவில்லை .
முப்பத்தி ஆறாவது சுற்றில் வெட்டல் பிட்லேன் வரும்போது மிக பரபரப்பு அந்த அணியின் தொழில் நுட்பவியலார்களிடம் தொலைந்து போயிருந்தது .அவ்வளவு முன்னணியில் வெட்டல்
 அதுவும் முப்பத்தி ஒன்பதாவது சுற்றில் வெட்டளுக்கும் ஜென்சன் பட்டனுக்கும் 15 .7 வினாடிகள் வித்தியாசம் 
நாற்பதாவது மூணாவது சுற்றில் டோரோ ரோசோ அணியின் ஜிமே அல்குசுரை (jaime Alguersuari).
அற்புதமான திறமையை வெளிபடுத்தினார் இந்த போட்டியில் அதிக பட்சமாக ஆறு புள்ளிகளை பெற்றார் .ஏழாம் இடம் .
 ஐம்பதாவது சுற்றில் ஆலோன்சாவின் இடத்தை 2.8 வினாடி இடைவெளியில் ஹேமில்டன் முயன்று தோற்றார் .முடியவில்லை .

53 மூன்றாவது சுற்று ...


மீண்டும் வெட்டல் முதல் இடம் .
பெர்ரரியின் கோட்டையில் (இத்தாலியில் ) ரெட்புல் கொடி .
இங்கு குறிப்பிடும் படியாக செபாஸ்டியன் வெட்டல் வெற்றி பற்றி சொல்ல வேண்டும் .
இத்தாலியில் வெட்டல் பெற்ற வெற்றி ரெட்புல் அணிக்கு கிடைத்த முதல் வெற்றி .
அடுத்து பதிமூன்று போட்டிகளில் எட்டு போட்டியில் முதல் இடம் பெறுவது சாதனை .
அதற்கடுத்து Race Leader என்ற அளவில் 500 சுற்றில் முன்னணியில் ஒருவர் இருப்பதுவும் அதுவும் ஒரே வருடத்தில் இருபது இதுவே முதல் முறையும் கூட 

இரண்டாவது இடத்தில் மேக்ளரனின் ஜென்சன் பட்டன்மூன்றாவது இடம் பெர்ரரியின் பெர்னான்டோ அலோன்சா .


அப்புறம் ஒரு சின்ன விஷயம் .இந்தமுறை முதல் ஐந்து இடம் வந்த அனைவருமே முன்னால் சாம்பியன்கள் 

செபாஸ்டியன் வெட்டல் -2010
பெர்னான்டோ அலோன்சா -2006
பெர்னான்டோ அலோன்சா-2009
லிவிஸ் ஹேமில்டன் -2008
 மைக்கேல் ஷூமேக்கர்-2004மேலும் ஒரு விஷயம் .மெர்சிடிசின்- மைகேல்ஷூமேகரின் கார் இந்திய போட்டியில் (அக்டோபர் 28-30)கலந்துகொள்ளும்போது ,நமது ஷாருக் கான் தன்னுடைய தீபாவளி வெளியீடான RA ONE திரைப் படத்தின் விளம்பரத்தை,  வெளியிட உள்ளார் .இதன் மூலம் வெகு எளிதில் உலகம் முழுதும் அந்த படத்தின் விளம்பரம் சென்று அடையும் என்பது அவரின கணக்கு ! 
(வாழ்த்துவோம் !)

இந்த பதிவை வெளியிடும்போது இங்கிலாந்தின் டாமன் ஹில் (Damon Graham Devereux Hill) தன்னுடைய 51 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் .வாழ்த்துவோம் 

Damon Hill 


அழகிய வெனிஸ் நகரத்தின் மயக்கும் மாலை வேலையில் ,சூரியனின் சுகமான உறக்கத்திற்கு செல்ல வழியனுப்பும் காட்சி ! இடற வைக்கும் இந்த அழகு நம்மை கடந்து போக விடமாட்டேன்கிறதே !

நமது அடுத்த வேகம் மிக வித்தியாசமான இரவு போட்டி .அழகிய சிங்கப்பூரில் 


போட்டி நேரம் இந்திய நேரப்படி இரவு 7.30. 
சந்திக்கலாம் ..


1 comment:

Sugumarje said...

தளத்தில் பதிவு இப்பொழுதுதான் கை வந்த கலையாகி இருக்கிறது... இன்னும் கொஞ்சம் தூரம் போனால் சரியாகிவிடும்... ஷூமேக்கர் போல லேட்டா ஆரம்பிச்சு கொஞ்சம் முன்னாடி போய்டலாம் இல்லையா?

இத்தாலி பற்றிய வர்ணனை அழகு, அந்த நகரைப்போலவே... பழமை போற்றுதலும், நவ நாகரீக்மும் இந்த நாட்டின் அற்புதம்...

போட்டியும் நன்றாக இருக்கிறது...
அடுத்தும் காத்திருக்கிறோம்...